Thursday, November 29, 2007

பாலாகன்

சமீபத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ரீமேக் மயமாக உள்ளது.. நம்ம கச்சேரி பிலிம்ஸ் "விவாஜி" "காஞ்சித் தமிழ் மகன்" போன்ற 100 சதவீத அசல் படங்களைக் கொடுத்தாலும்... ரசிகர்களின் ரீ மேக் ரசனைக்கும் தீனி போடும் விதமாக படங்கள் கொடுக்கத் தீர்மானித்து களத்தில் இறங்கி விட்டோம்...

கச்சேரி பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் அடுத்த படைப்பு

உலகப் பதிவர் பாஸ்டன் பாலா (பாபா) கலக்கப் போகும் பாலாகன்

பாபா சிறுவன்..வாலிபன்..நடுத்தர வயது நாயகன், வயதான மனிதராக பலக் கெட்டப்புக்களில் கலக்க இருக்கிறார்.

இளையராஜாவின் இசையை ரீ மிக்ஸ் செய்து பாடல்கள் கலக்கப் போகிறதாம்.

பாபாவுடன் விஎஸ்கே, கொத்தனார், பெனத்தலார், மருத்துவர் ராமநாதன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க இருக்கிறார்கள்.

வலையுலகத் திரை வரலாற்றில் முதல் முறையாக லக்கி லுக் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்பார் எனத் தெரிகிறது..அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டு வருகின்றன.


பாலாகன் ட்ரெயிலர் உங்களுக்காக.........

1987.....மைலாப்பூர்...பள்ளிக்கூடம்

சிறுவன் பாலா...: பிட் எடுத்துட்டுப் போறது தப்பில்லையா

பெரியவர்: தப்பு இல்லைப்பா..எடுத்துட்டுப் போற பிட் இன்னும் நாலு பேர் காப்பி அடிக்க யூஸ் ஆகும்ன்னா எதுவுமே தப்புல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்....

சிறுவன் பாலா...: தப்புன்னு சொல்லுறாங்களே...

பெரியவர்: ஆமா..தப்புத் தான்..உன் பரீட்சைப் பேப்பர்ல்ல நீ பதில் எழுதாம.. இந்தக் கேள்விக்குப் பதிலை அவன் பேப்பர்ல்ல பார்.. அந்தக் கேளவிக்குப் பதிலை இவன் பேப்பர்ல்ல பாருன்னு சுட்டிக் கொடுத்தாத் தப்புன்னு தான் சொல்லுவாங்க... டொன்டொன்டொன்டொய்ங்....

பேக் கிரவுண்டில்...இளையராஜா வாய்ஸ் ஒலிக்கிறது...ஆஆஆஆ......

டென்த் ஸ்டாண்டட் பரீட்சையிலே...
சுட்டிக் கொடுத்து எழுதியவனை...
யார் அடிச்சாரோ..யார் அடிச்சாரோ....
வளரும் பிளாகா நீ சாயாதே...
சுட்டிக் கொடுக்க நீயும் தயங்காதே...


அடுத்தக் காட்சி....

பாலாகர் அய்யா....போயிருங்க....போயிருங்க.... ஒரு வயதான அம்மா குரல் கொடுக்கிறார்..

ஈ தமிழ் இணையத்தில் இருந்து பாலா எட்டிப் பார்க்கிறார்....

பாலாகர் அய்யா... போயிடுங்க... உங்களை எப்படியும் தமிழ்மண நட்சத்திரம் ஆக்கி ஒரு வாரம் நோகடிக்கணுங்கற முடிவோட வர்றாங்க... நாங்க எல்லாம் இருக்க வரைக்கும் உங்களை அந்த நிலைம்மைக்கு விட மாட்டோம்....

பாலாகர் அய்யா ஆண்டவா...அப்படின்னு வானம் பார்க்கிறார்....ஓஓஓஓஓஓ பேக் கிரவுண்ட் மீசிக் வருகிறது.

அடுத்த கட்...வெனீஸ் நகரத்து போட் காட்டுகிறோம்..அந்தப் போட்டில் நம்ம வெட்டிப் பயலும் பாலாவும் இருக்காங்க....பாபாவின் விருப்பபடி சானியா மிர்சா அந்த போட்டில் டென்னிஸ் பற்றி பதிவெழுதக் குறிப்புக் கொடுக்க வருகிறார்....

ஒய்யா ஓ...அது என்ன வோ....
கோலா அது அட்ல்ல பாரு....
பாலா என் கூட போட்ல்ல ஏறு...
ஒய்யா ஓ அது என்ன ஓ...

பொழுதானாப் போச்சு..
பதிவெல்லாம் படிச்சி
பொழப்பே கெட்டுப் போச்சு...

கொடுக்குற சுட்டியிலே
ஒரு சுட்டி நம்ம சுட்டித் தான்
அதைப் படிக்கிற குட்டியிலே
ஒரு குட்டி சிக்குற குட்டித் தான்..

அட பதிவுல்ல
தினம் தினம்
அடிதடி தான்
அது படிக்கிற
கூட்டம்
அடிக்குது
கும்மி கும்மி தான்
அடி ஆத்தாடி
பிளாக் வெறும் கூத்தாடி
பிளாக் உலகில் நான் தாத்தாடி...


அடுத்து கட்..

பாலாகர் அய்யா, கொத்தனார், பெனத்தலார் எல்லாரும் நிற்க...

பாலாகர் அய்யா... இப்படி ஒரு பிளாக் முழுக்க சுட்டியாக் கொடுக்கறது தப்பு இல்லையா

கரகரப்பானக் குரலில் பாலாகர் அய்யா சொல்லுகிறார்...

நாலு பேர் படிக்கறதுக்காக நாப்பது பக்கத்துக்குச் சுட்டிக் கொடுத்து ஒரு பிளாக் போட்டாத் தப்பே இல்ல....

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி...

சிறுவன்: பாலாகர் அய்யா சொல்லுங்க... நீங்க பிளாகரா..பிளாக் வாசிப்பவரா...

பாலாகர்: தெரியல்லயேப்பா...தெரியல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி

"யோவ் கொத்தனாரே... ஏன் அவங்க எல்லாம் நம்ம தமிழ் பிளாக்க்கு பின்னூட்டம் போட மாட்டாங்களாமா....நாம நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்... அதுல்ல நம்ம தமிழ் பிளாக்குக்கு மட்டும் தான் பின்னூட்டம் போடுறோம்...வெள்ளைக்காரன் பிளாக்கெல்லாம் போட மாட்டோம்...

ஒரு ஐடி ஓப்பன் பண்ண என்னச் செலவு ஆகும்ன்னு சொல்லு...

"பாலகர் அய்யா..ஒரு ஐடிக்கு.....ம்ம்மது..."

"ஆவட்டும்ய்யா..எவ்வளவு வேணும்ன்னாலும் ஆவட்டும்..ஓப்பன் பண்றோம்.. நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்..."

டொன்டொன்டொன்டொய்ங்

COMING SOON

THE BIGGEST ATTRACTION OF EARLY 2008

CUTCHERY FILMS

'ULAGA BLOGGER' BOSTON BALA in and as

BALAGAN

DUNT MISS IT IN A BLOG NEAR YOU !!!!

Wednesday, November 28, 2007

கச்சேரி பிலிம்ஸ்

விவாஜியின் சரித்திர வெற்றிக்குப் பின் கச்சேரி பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் துவக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது....

அது குறித்து பல மட்டங்களிலும் ஆலோசனை நடத்தி சார்பான கருத்துக்களைப் பெற்ற நிலையில் அந்த முயற்சியின் அடுத்தக் கட்டமாக கச்சேரி பிலிம்ஸ் துவக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கச்சேரி பிலிம்ஸின் முதல் படைப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்திய போது.. மிக்க மகிழ்ச்சியுடன் தன் இடையறதா பணிகளுக்கு இடையேயும் நம்ம கச்சேரி பிலிம்ஸ்க்காக தன் கால்ஷீட்டை ஒதுக்கி தந்திருக்கிறார் பாசத்துக்குரிய சகோதரர் கப்பி பயல் அவர்கள்

தம்பி கப்பி கொடுத்துள்ள கால்ஷீட்டைச் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி படத்தை இயக்க நம்ம பாசத்துக்குரிய புலி சிவா ஒப்புக் கொண்டுள்ளார்...

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில்.. படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகள் உலகெங்கும் நிறைந்திருக்கும் கப்பி நிலவரின் ரசிகர்களுக்காக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காஞ்சி தமிழ் மகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது.

இந்தப் படத்தில் கப்பி பயல மற்றும் கப்பி கை என்ற இரு மாறு பட்ட வேடங்களில் அசத்தப் போகிறார் கப்பி. இதில் ஒரு வேடத்தில் ஜாவா பாவலராகவே இவர் வருவது கூடுதல் தகவல்.

கப்பிக்கு ஜோடியாக தீபிகா பதுக்கோன் மற்றும் நமீதா நடிக்கிறார்கள்

காஞ்சி தமிழ் மகன் படத்தில் முக்கிய வேடத்தில் துபாய் கோபி, குசும்பன், அய்யனார், மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்களாம்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்போடு தயாரிக்கும் பொறுப்பையும் கச்சேரி பிலிம்ஸ் ஏற்று கொள்கிறது.

கதையின் நாயகன் அறிமுக காட்சியும் அதை ஒட்டிய பாடலும் தற்சமயம் மிகவும் பிரமாண்டமாய் எடுக்கப் பட்டு வருகிறது...அந்தக் காட்சியில் நடிப்பதற்கு கப்பி அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

கச்சேரி பிலிம்ஸின் துவக்க விழாவை முன்னிட்டு அந்தக் காட்சியும் பாடலின் ஒரு சில வரிகளையும் இங்கு தெரிவிக்கிறோம்.

காட்சி 1:

அமெரிக்கா டல்லாஸ் நகரத்தின் மிக பெரிய அலுவலக வளாகம்..அங்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

அனைத்துக் கம்ப்யூட்டர்களில் கலர் கலராக பக் தெரிகிறது..எல்லாக் கம்ப்யூட்டர்களும் பக் அட்டாக்கில் ஆடி தவிக்கின்றன... பக் ரிப்போர்ட் மெயில் பாக்ஸ் தாண்டி வ்ழிந்து வெளியே விழுகிறது... பக் ரிப்போர்ட் எடுத்துப் படிக்கும் அலுவலக பாஸ் டென்சன் ஆகிறார்...

"பத்தாயிரம் பக்ஸா...என்னப் பண்ணுறது?" பாஸின் கேள்வி ஆபிசையே கட்டிப் போடுகிறது...

"என்ன பண்றது?.."என்ன பண்றது?.." எல்லாரும் தவித்து நிற்க...

அலுவலகக் கண்ணாடி எல்லாம் அப்படியே வெடித்துச் சிதறுகிறது.. காற்று பேயாட்டம் அடிக்க....திரைச் சீலைகள் எல்லாம் கண்டப் படி பறக்க... மானிட்டர்கள் எல்லாம் கண்ட படி ரீபுட் ஆகி.. ஸ்கிரீனில்... தளபதி...ஜாவா தளபதி அப்படின்னு தெரிய.....
ஆபிஸ் சுவர்கள் கிராபிக்ஸில் தளபதி ..தளபதி ஜாவா தளபதி என மாற...

ஒரு நிமிட நிசப்தத்தில் குரல் ஒலிக்கிறது....

"எவ்வளவோ பிக்ஸ் பண்ணிட்டோம்... இதை பண்ண மாட்டோமா...."

அந்த குரல் கேட்டதும் எல்லோர் முகத்திலும் புன்னகை வருகிறது...

அங்கேப் பாட்டு ஸ்டார்ட் ஆகிறது...


"எல்லா பக்கும் ஒருவன் ஒருவனுக்கே....
நீ பிக்ஸ் போட ஓடிக் கொண்டே இரு...

எந்தப் பக்குக்கும் பிக்ஸ் உண்டு
பிக்ஸ்க்கும் ஒர்க் உண்டு...
நீ டைம் ஷீட்டைப் பில் அப் பண்ணு...

ஆன் சைட் மக்கா
புராஜக்ட் நமக்கே

ஜவஜவ ஜாவா தளபதி தளபதி
காஞ்சி புரத்துத் தமிழ் மகன் நீ தானே...

கப்பி நிலவன் மனது வைத்தாஆஆஆஆல்.....

இந்தப் பாட்டை ரஹமான் குரலில் கற்பனைப் பண்ணிப் பாருங்க....

இந்தத் தகவல்களே கப்பி நிலவரின் ரசிகர்களின் மத்தியில் ஒரு மாபெரும் கிறக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிச்சயம்...

காஞ்சி தமிழ் மகன்.... கே.டி.எம் என்று சுருக்கமாக அவரது ரசிகர்கள் வட்டத்தில் இப்போதே பரபரப்பாகப் பேசப்படுகிறது எனவும் சொல்லத் தான் வேண்டுமா...

KTMல் பங்களிக்க விரும்புவோர் கச்சேரி பிலிம்ஸ் நிறுவனத்தை உடனே அணுகலாம்.

காஞ்சி தமிழ் மகன் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனவும்.. சங்கம் பிலிம்ஸ் மூலம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் திரையிடப்படும் எனவும் தெரிகிறது..

MOST AWAITED MOVIE OF THIS SEASON

கப்பி பயல் VS KAPPI GUY காஞ்சி தமிழ் மகன் (KTM)

DUNT MISS IT IN A BLOG NEAR YOU

Thursday, November 15, 2007

பெனாத்தாலாருக்கு எச்சரிக்கை

கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கச்சேரி வைத்து வரும் நான் எந்த நிலையிலும் யாரையும் கண்டித்தோ.. எதிர்த்தோ..எந்த விதப் பதிவும் போட்டதில்லை.. அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்தப் போதும் கோபம் அடக்கி என் நிலைக் காத்தேன்.. ஒரு தவம் போல் அதைச் செய்து வந்தேன்... இன்று அந்த தவம் கலைக்க வேண்டிய கஷ்ட்டத்துக்கு என் இஷ்ட்டம் இன்றி தள்ளப்பட்டுள்ளேன்...அதற்கு காரணம் நான் வலையுலகில் மிகவும் மதிக்கும், ரசிக்கும் பதிவர் அண்ணன் பெனத்தாலார் அவர்கள்...

பெனத்தாலரே... பாசமிகு நண்பரே..அமீரகத்து ஆக்ஸிஜனே.. இப்படி எத்தனையோ பட்டங்கள் உங்களுக்காக என்னால் சூட்டப்படக் காத்திருக்க.. தடம் மாறி நீர் போனது ஏனோ?

நினைவிருக்கிறதா.. முன்னொருமுறை வலையுலகின் ஆளும் கட்சியாம் ப.ம.கவிற்கும் வலையுலகின் புதிய எழுச்சியாம் வ.வா.சங்கமும் அரசியல் போர்முனையில் முட்டி மோதக் காத்திருந்த தருணத்தில் உம் பேனா முனையால் அந்தப் போரைத் தடுத்தீரே.. அப்படி பேனாவை பேணி வளர்த்த நீங்களா.. இன்று கீ போர்ட்டால் கீறுகிறீர்... நம்ப முடியவில்லை... ஆனால் உண்மை என்னும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை..

அவன் விகடன்.. கொடுத்த விசை பலகையா விசம் கக்குகிறது..

தமிழ் மணத்தின் எதிர்காலம் கனவாய் கண்ட நீரா காளையரின் காலை வாரி விடுவது...

கணப் பொழுதில் கவிதைப் பொழியும் கவி மடத்துச் சீடரா..கணவன்மார்களின் கவலைக்குக் காரணமாவது...


சூழ்நிலையின் அவசியம் கருதி நட்பை நடு நெஞ்சில் அடைத்து விட்டு கடும் கவலையோடு இந்த எச்ச்ரிக்கைப் பதிவின் எஞ்சிய வரிகளை எழுதுகிறேன்..

தாங்கள் சமீபக் காலமா பதிவிட்டு வரும் WIFEOLOGY தொடரைப் படித்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.. நீங்களா இப்படி என்று குழம்பிப் போனேன்....

என்னக் கொடுமை சார் இது என்று கணிணி முன் கலங்கிப் போனேன்... பெரும் யோசனைக்குப் பின் இனியும் இது பற்றி அமைதி காப்பது முறையல்ல என்று பொங்குகிறேன்..

கல்யாணம் என்ற கலவரத்தில் சிக்கிய் ஒரு அப்பாவி ஆண்மகன் தன்னைக் காத்துக் காப்பாற்றி கரையேர வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இப்படி எழுத்துக்களால் படம் பிடித்து பொதுவில் வைப்பது என்ன நியாயம் அய்யா?

ஆண்டு ஆண்டு காலமாய் ரங்கமணிகள் காத்து கடைப்பிடித்து வரும் ரகசியங்களை இப்படியா கடை விரிப்பது என்னக் கொடுமை சார் இது?

பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?

உமது இந்தத் தொடர் ஒட்டு மொத்த ரங்கமணிகள் சமுதாயத்தின் மீது வரையற்ற வன்முறையைக் கட்டுவிழ்த்து விடச் செய்யும் ஒரு முயற்சியாகவே நான் இதைப் பார்க்கிறேன்...

வன்முறைகளும் போர்களும் தாக்குதல்களும் நம்மைப் போன்ற வீரர்களுக்கு வேண்டுமானால் ஜகஜமாய் இருக்கலாம் ஆனாலும் நாட்டில் உள்ள மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்... பல இடங்களில் பஞ்சாயத்துக்கு உம் தொடர் காரணம் ஆகலாமா......

ரங்கமணிகளை ரன்வேயில் நிறுத்தி தங்கமணிகளின் தாக்குதலுக்கு டார்கெட்டாக செட் அப் செய்யும் இந்தத் தொடரை நான் கண்டபடி கண்டிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டீரே...

LAST BUT NOT LEAST....நீரும் ரங்கமணி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டாம் என உம்மை எச்சரிக்கிறேன்....

தக்க விளக்கம் கொடுக்காவிட்டால் கடும் எதிர்ப்புப் போராட்டங்களை நீர் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் .

Monday, November 05, 2007

PIT நவம்பர் மாதப் புகைப் படப் போட்டி

மக்களே இது நம்ம முதல் முயற்சி இந்த போட்டா புடிக்கிற போட்டியிலே.. இன்னும் எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம்ன்னு தெரியல்ல.. உங்க ஆலோசனையைக் கொடுங்க...

எந்தப் படமும் தேறாதுன்னா அதையும் சொல்லுங்க.... ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு இந்தப் படங்களையும் உங்களைப் பாக்கும் படி கேட்டுக்குறேன்... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பார்த்துக் கருத்துச் சொல்லுங்க... ஒரு எதிர்கால கேமராக் கலைஞன் உருவாகறது உங்க கையிலேத் தான் இருக்கு :-)போட்டிக்கானப் புகைப்படம் - 1


கர்நாடக மாநிலம் ஹசன் தாண்டி சிக்மகளூர் செல்லும் நெடுஞ்சாலையில் எடுத்தப் படம்.போட்டிக்கானப் புகைப் படம் - 2
திருநெல்வேலி மாவட்டடம் களக்காட்டில் எடுத்தப் புகைப்படம்

சாலை ஒன்று...தேசம் இரண்டு...2006 ஆம் ஆண்டு வட இந்தியப் பயணத்தின் போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் எடுத்தப் புகைப்ப்டம்வானமும் வீதியும் இணையுது பாருங்க


தில்லி நகரத்து ராஜவீதியில் எடுத்தப் புகைப்படம்


தலைநகரத்து வீதியினிலே
வீதியில் விளையாட வரும் சூரியன்


குடியரசுத் தலைவர் மாளிகை அருகே எடுக்கப்பட்ட படம்மேலே இருந்துப் பார்த்தாச் சும்மா அதிருதுல்ல


தென்மலை.. நம்ம குற்றாலத்துல்ல இருந்து செங்கோட்டைத் தாண்டிப் போனா இந்த இடம் வரும்.செல்போனில் க்ளிக்கிய படம்

tamil10