Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Tuesday, April 01, 2008

கச்சேரி வித் ஜி.ரா மற்றும் கே.ஆர்.எஸ்

வணக்கம் மக்கா,

பொதுவாக் கச்சேரி வச்சுக் கொஞ்ச் கேப் விழுந்துப் போச்சு அதுன்னால்லா யாருக்கும் எந்த டேமேஜுமில்லன்னு வைங்க... இப்போ கச்சேரி வைக்க வேண்டிய அளவுக்கு ஒரு சரித்திர புகழ் வாயந்த சம்பவம் திங்கள் மாலை அடையார் காபி டேவில் நடந்த படியால இந்த்க் கச்சேரி..

கண்டேன் ஜி.ரா வை.... இப்படித் தான் இந்தப் பதிவுக்கு தலைப்பு வச்சிருப்பேன் அவர் கூட இன்னொரு வி.ஐ.பி வராமல் இருந்திருந்தால்...முதல்ல ஜி.ரா பத்திச் சொல்லணும் நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் நான் படித்து ரசிதத பதிவ்ர்களில் ஒருவர்...கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு நானும் பதிவெல்லாம் எழுத வந்து....அவரது எழுத்துக்களில் எப்போதும் நிறைந்திருக்கும் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்தமான மட்டுமின்றி நான் வியக்கும் விஷயமும் கூட...முடிந்த வரை அதை என் பதிவுகளிலும் பின்பற்ற நான் முயலுகிறேன்...

ஜிராவின் கதைகளுக்கு மட்டுமன்றி அவருடைய பயணக்கட்டுரைகளுக்கும் நான் விசிறி.. என்னக் காரணமோ இப்போதெல்லாம் அவர் அதிகமாய் பயணக் கட்டுரைகள் எழுதுவது இல்லை.. அவர் எழுத வேண்டும் என்பது என் அவா..நல்லதொரு சினிமா ரசிகர்...அவரோடு ஒரிருமுறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன்... ஆனா நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை...மஞ்சச் சொக்காப் போட்டுகிட்டு படு ஸ்மார்ட்டா வந்திருந்தார் ஜிரா..

ஒலக லெவல்ல அவர் கூட என்னத்தைப் பேசறது அப்படின்னு நாலு நாள் வளத்த தாடியை பிச்சிகிட்டு இருக்கும் போது போன் பண்ணார் ஜி.ரா... நான் தனியா வர்றல்ல...அப்படின்னு அவர் விட்டச் சின்னக் கேப்ல்ல மோனிகா சால்சா பாலையும் கூட கூட்டிட்டு வரப் போறாரோன்னு நினைச்சேன்... ஆனா அவரே கேப்பை பில் பண்ணார்..அவர் கூட வர்றதா சொன்ன அந்த வி.ஐ.பி... ஆன்மீகச் சுனாமி... சங்கம் வந்து நகைச்சுவை விருந்து பரிமாறிய சிரிப்புச் சித்தர் அன்பர் கே.ஆர்.எஸ்..

ஆகா ஓலகம் சுற்றும் வாலிபர் ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கம் பக்தி இலக்கிய வித்தகர் வேறவா... வாய்ல்ல கம் தடவாமலே கம்ன்னு இருந்தா தான் நம்ம பொழப்பு ஓடும்ன்னு முடிவு பண்ணிகிட்டேன்...

முதல்ல நாங்க சந்திக்க நினைச்ச இடம் அடையார் ஷேக்ஸ் அன்ட் க்ரீம்ஸ் ஆனாப் பாருங்க... இப்படி ஒரு ஆன்மீகச் சுனாமி வந்தா இடம் தாங்காதுன்னு மராமத்து பணி நடப்பதாய் சொல்லிக் கடையைச் சாத்திட்டாங்க...

அப்புறம் அப்படியே இந்திரா நகர்ல்ல தேடி அலைஞ்சு திரிஞ்சதுல்ல அமைஞ்ச இடம் தான் காபி டே...வரும் போதே முகமெல்லாம் பூரிக்க புன்னகை ஏந்தி இளமைத் துள்ளலோடு வந்தார் நம்ம சிரிப்பு சித்தர்... அதிக அறிமுகம் இல்லன்னாலும் முதல் சந்திப்புல்ல அப்படி ஒரு நட்பு பூத்திருச்சுன்னாப் பாருங்களேன்...

காபி கடையிலே காபிக்குச் சொல்லிட்டு.. கூட பிரட் பன் எல்லாம் சொன்னோம்... அதுக்குக் காத்திருந்த நேரத்திலே கும்மியை ஆரம்பிச்சோம்... ஜி.ராவுக்கு இன்னொரு பிரபல பதிவர் கொடுக்கச் சொன்னப் பரிசைக் கொடுத்துட்டு ஒரு சின்ன விளையாட்டு நடத்தினோம்...

பரிசு கொடுத்தப் பதிவர் யார்ன்னு ஜிராவைக் கண்டுபிடிக்கச் சொன்னோம்... ஜி.ராவும் கரெக்ட்டா தப்பா சில பெயர்களைச் சொன்னார்... பரிசுப் பொருளைப் பார்த்து ரொம்ப நேரம் யோசிச்சார்.. யோசிச்சுகிட்டே இருந்தார்... அதுக்குள்ளே காபியைக் கலக்கிக் கொண்டு வந்துட்டாங்க...

நம்ம கே.ஆர்.எஸ்குள்ளே இருந்த அம்புட்டு புகைப்படம் ஆர்வமும் பீறிட அந்தக் காபியை கன்னாபின்னான்னு போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டார்.. ஒரு கட்டத்துல்ல காபியே போதும்ய்யா... என்னைக் குடிக்கப் போறீயா...இல்ல அப்படியே கவுந்துரவான்னு கேக்க ஆரம்பிச்சுருச்சுன்னாப் பாருங்க...

கே.ஆர்.எஸ் கலையார்வம் காபியைத் தாண்டி காபி டே சுவத்துல்ல இருந்த ஒரு புலி மேலே பாஞ்சுது... ஆனாப் பாருங்க.. நம்ம ஜி.ரா இன்னும் யோசிச்சு முடிக்கவே இல்ல... நிலவரம் கலவரமாப் போயிட்டு இருந்துச்சு.. நான் காபியை கடக்குன்னு குடிச்சுட்டு நிமிந்தா... என்னை புலி பக்கமாப் போய் நிக்கச் சொல்லி போட்டோவா எடுத்து தள்ளுனார்...

இன்னும் ஜிரா யோசிச்சுகிட்டே இருக்க.. அப்படியே அசால்ட்டா களத்தில் குதிச்ச கே.ஆர்.எஸ் சரியாப் பதிவர் யாருன்னு சொல்லி அசத்துனார் பாக்கணும்... அதான் கே.ஆர்.எஸ்ன்னு சொல்லத் தோணுச்சு,,

ஒரு வழியா யோசனை எல்லாம் முடிஞ்சு வெளியே வந்த ஜிரா நம்ம கும்மியிலே என்டிரி ஆனாரு...மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை என்னையும் கவனிக்க வச்ச ஜிரா... இந்த ஆன்மீகச் சிங்கம் தமிழ் கலையுலகுக்கு கிடைக்கவேண்டிய ஒரு தவப்புதல்வன் அப்படின்னு டாபிக் மாத்துனார்....

ஆகா.... விவாஜிக்கு அப்புறம் நாமும் சரியானக் கதைச் சிக்காம சைலண்ட்டாவே இருக்கோமேன்னு பீலீங்ல்ல இருந்த என்னையும் உசுப்பி விட்டார்...கே.ஆர்.எஸ்க்கு ஏத்த கதையாக இருந்தால் தானே தயாரிப்பதாகவும் அயல்னாடுகளில் சூட்டீங் நடத்த ஆவனச் செயவதாகவும் வாக்கு கொடுத்தார்...

அப்புறம் என்ன சூடான காபியும் சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய் மூளையை முட்டி எழுப்ப... அழகான கதை ஒண்ணு ரெடி ஆச்சு... படத்துக்குப் பேரும் வச்சோம்....

இந்த லோகத்தில் நானும் அழகப்பன்

கே.ஆர்.எஸ் மூன்று வேடங்களில் நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்... நாலாவதாக நாயகி வேடத்திலும் அவரே நடிக்க ஜி.ரா ஆலோசனை வழங்கினார்.. அதையும் புன்முறுவலோடு கே.ஆர்.எஸ் ஏற்றுகொண்டார்...படத்தில் பல கோலிவுட், பாலிவுட், டொலிவுட் மற்றும் ஹாலிவுட் முக்கிய பிரபலங்களோடு நம் பதிவுலகின் அதி முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது தயாரிப்பாளர் அளித்த உறுதி...

அப்புறம்... கே.ஆர்.எஸ் பகிர்ந்த முக்கிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில்....

சும்மா ஒரு சின்ன ட்ரெயிலர்.... மேயர் வீட்டில் இளாவும் ஆப்பிள் மரமும்.... பாபாவுக்கு பிடித்த பாபி....விரைவில் எதிர்பாருங்கள்....

இப்போதைக்கு இம்புட்டு தான்.. வர்றட்டா

Thursday, November 15, 2007

பெனாத்தாலாருக்கு எச்சரிக்கை

கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கச்சேரி வைத்து வரும் நான் எந்த நிலையிலும் யாரையும் கண்டித்தோ.. எதிர்த்தோ..எந்த விதப் பதிவும் போட்டதில்லை.. அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்தப் போதும் கோபம் அடக்கி என் நிலைக் காத்தேன்.. ஒரு தவம் போல் அதைச் செய்து வந்தேன்... இன்று அந்த தவம் கலைக்க வேண்டிய கஷ்ட்டத்துக்கு என் இஷ்ட்டம் இன்றி தள்ளப்பட்டுள்ளேன்...அதற்கு காரணம் நான் வலையுலகில் மிகவும் மதிக்கும், ரசிக்கும் பதிவர் அண்ணன் பெனத்தாலார் அவர்கள்...

பெனத்தாலரே... பாசமிகு நண்பரே..அமீரகத்து ஆக்ஸிஜனே.. இப்படி எத்தனையோ பட்டங்கள் உங்களுக்காக என்னால் சூட்டப்படக் காத்திருக்க.. தடம் மாறி நீர் போனது ஏனோ?

நினைவிருக்கிறதா.. முன்னொருமுறை வலையுலகின் ஆளும் கட்சியாம் ப.ம.கவிற்கும் வலையுலகின் புதிய எழுச்சியாம் வ.வா.சங்கமும் அரசியல் போர்முனையில் முட்டி மோதக் காத்திருந்த தருணத்தில் உம் பேனா முனையால் அந்தப் போரைத் தடுத்தீரே.. அப்படி பேனாவை பேணி வளர்த்த நீங்களா.. இன்று கீ போர்ட்டால் கீறுகிறீர்... நம்ப முடியவில்லை... ஆனால் உண்மை என்னும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை..

அவன் விகடன்.. கொடுத்த விசை பலகையா விசம் கக்குகிறது..

தமிழ் மணத்தின் எதிர்காலம் கனவாய் கண்ட நீரா காளையரின் காலை வாரி விடுவது...

கணப் பொழுதில் கவிதைப் பொழியும் கவி மடத்துச் சீடரா..கணவன்மார்களின் கவலைக்குக் காரணமாவது...


சூழ்நிலையின் அவசியம் கருதி நட்பை நடு நெஞ்சில் அடைத்து விட்டு கடும் கவலையோடு இந்த எச்ச்ரிக்கைப் பதிவின் எஞ்சிய வரிகளை எழுதுகிறேன்..

தாங்கள் சமீபக் காலமா பதிவிட்டு வரும் WIFEOLOGY தொடரைப் படித்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.. நீங்களா இப்படி என்று குழம்பிப் போனேன்....

என்னக் கொடுமை சார் இது என்று கணிணி முன் கலங்கிப் போனேன்... பெரும் யோசனைக்குப் பின் இனியும் இது பற்றி அமைதி காப்பது முறையல்ல என்று பொங்குகிறேன்..

கல்யாணம் என்ற கலவரத்தில் சிக்கிய் ஒரு அப்பாவி ஆண்மகன் தன்னைக் காத்துக் காப்பாற்றி கரையேர வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இப்படி எழுத்துக்களால் படம் பிடித்து பொதுவில் வைப்பது என்ன நியாயம் அய்யா?

ஆண்டு ஆண்டு காலமாய் ரங்கமணிகள் காத்து கடைப்பிடித்து வரும் ரகசியங்களை இப்படியா கடை விரிப்பது என்னக் கொடுமை சார் இது?

பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?

உமது இந்தத் தொடர் ஒட்டு மொத்த ரங்கமணிகள் சமுதாயத்தின் மீது வரையற்ற வன்முறையைக் கட்டுவிழ்த்து விடச் செய்யும் ஒரு முயற்சியாகவே நான் இதைப் பார்க்கிறேன்...

வன்முறைகளும் போர்களும் தாக்குதல்களும் நம்மைப் போன்ற வீரர்களுக்கு வேண்டுமானால் ஜகஜமாய் இருக்கலாம் ஆனாலும் நாட்டில் உள்ள மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்... பல இடங்களில் பஞ்சாயத்துக்கு உம் தொடர் காரணம் ஆகலாமா......

ரங்கமணிகளை ரன்வேயில் நிறுத்தி தங்கமணிகளின் தாக்குதலுக்கு டார்கெட்டாக செட் அப் செய்யும் இந்தத் தொடரை நான் கண்டபடி கண்டிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டீரே...

LAST BUT NOT LEAST....நீரும் ரங்கமணி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டாம் என உம்மை எச்சரிக்கிறேன்....

தக்க விளக்கம் கொடுக்காவிட்டால் கடும் எதிர்ப்புப் போராட்டங்களை நீர் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் .

Monday, October 29, 2007

தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?

இன்னும் நீ விவாஜியை விடல்லயான்னு நீங்கக் கேக்கக் கூடாது...

இந்த நகைச்சுவை நக்கல் நையாண்டி தொடருக்குக் கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அப்படிங்கறதைச் சொல்லிக்குறேன்... முதலில் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நான் சங்கம் பக்கத்தில் தான் எழுதினேன்...பின்னர் சங்கம் மொத்த விடுமுறைக்காக மூடப்பட்டது, நான் அலுவலகம் மாறியது எனப் பலக் காரணங்களால் அதைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது...

அந்த நிலையிலும் நம்ம சங்கத்து சொந்தங்கள் விடாமல் எப்போய்யா விவாஜியை முடிக்கப் போறன்னு கொடுத்த நச்சரிப்பு (உண்மையில் அது தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது) முக்கியமா இளா, பாலாஜி,ராஜ் ( ராஜ்ங்கற பெயர் யாருக்குச் சொந்தம்ன்னு கண்டுபிடிக்குறவங்கக் கண்டுபிடியுங்க), அப்புறம் ராம் தம்பி ஆகியோர் உசுப்புன உசுப்புல்லத் தான் இந்தத் தொடர் சாத்தியாமாச்சு.

பொதுவா நம்மை யாராவது நக்கல் அடிச்சா நம்ம எல்லாருக்கும் டென்சன் ஆவுறது வழக்கம்..தொடர்ந்து 10 வாரம் நக்கல் நையாண்டி பண்ண விட்டது பெரிய விசயம்ன்னாலும் அதிலும் பெரிய விசயம் .. யோவ் இந்த சிவாஜி ஸ்டில்ல விவாஜி ஸ்டில்லா மாத்திக் கொடுய்யான்னு நான் கேக்க இருக்க வேலைக்கு நடுவுல்ல அதையும் மாத்திக் கொடுத்தது.. விவாஜியின் முதல் ஸ்டில் வடிவமைத்தப் பெருமை நம்ம விவாஜியையேச் சேரும்... தாங்க்ஸ் இளா..

அடுத்து வந்த கிராபிக்ஸ் எல்லாம்...அந்த மொட்டை பாஸ் படங்களை எல்லாம் வடிவமைத்துக் கொடுத்தது... என்னுடைய கல்லூரி நண்பன் மூசா...அவன் இப்போ துபாயிலேத் தான் இருக்கான்..மச்சான் தேங்க்ஸ்டா...

அதுக்கு அப்புறம் இந்தத் தொடரில் நம்ம பதிவுலக மக்கள் பலரது பெயர்களை பயன்படுத்தி இருந்தேன்... சில மக்கள் நன்கு அறிமுகம் ஆனவர்கள் சிலர் அறிமுக இல்லாத நண்பர்கள்..அவங்கள்ல்ல எல்லாரும் இந்தப் பதிவுகளைப் படிச்சாங்களான்னு எனக்குத் தெரியாது ஆனா படிச்சவங்க யாரும் எதுவும் சொல்லல்ல... மாறாக வாழ்த்துன்னாங்க...

நான் குறிப்பிட்டதில் வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசித்த அன்பர்களுக்கும் என் நன்றிகள்...இந்த இடத்தில் கிடேசன் பார்க் மக்களுக்கு என் நன்றிகள்..அதிலும் குறிப்பாய் நண்பன் குசும்பனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.... அவ்வபோது தன் விமர்சனங்களை மறைக்காமல் வைத்து தொடரைச் சிறக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு..

காமெடி நாயகனாக தொடர் முழுக்க வலம் வந்த இனிய நண்பர் பதிவுலகத் தளபதி சிபி தன்னை வைத்து நான் பண்ணிய காமெடியை ரசித்து வாழ்த்தியது...எதிர்மறை நாயகனாக தொடரில் ரணகளம் புரிந்த தம்பி பாலாஜியும் தொடரைப் பாராட்டியது விவாஜி தொடர்ல்ல சின்ன ரோல்ன்னாலும் அதை பின்னூட்டங்களிலே தன்னுடைய வழக்கமானப் பாணியில் டெவலப் செய்து அட்டகாசம் புரிந்த தம்பி சிவாவின் பங்களிப்பு என் மனம் தொட்ட விசயங்களாய் சொல்லுவேன்..

விவாஜியில்ல நாலு பாட்டுப் போட்டா நல்லாயிருக்கும்ன்னு நான் சொன்னதும் சேட்ல்ல உடனெ.. இந்தாய்யா பிடி பாட்டை...இந்தப் பாட்டுப் போதுமா...வேற வரி வேணுமாச் சொல்லுய்யா,,,அப்படின்னு பல்லேலக்கா பாட்டுக்கு வரி போட்டுக் கொடுத்த கவிமடத்தின் பிரதம சிஷ்யனும் அருமை நணபருமானப் பெனத்தலாரின் உதவியும் விவாஜியின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆச்சே.. அவரிடம் கேட்டு வாங்கிய சாகானா மெட்டு வரிகளை இந்தப் பதிவின் கடைசியில் பாருங்கள்....

என்னத் தான் நாம மாங்கு மாங்குன்னு எழுதுன்னாலும் அதை யாராவது படிச்சாத் தானே அதுக்கும் மதிப்பு...அந்த வகையிலே தொடரைத் தொடர்ந்து படிச்சி... சேட்ல்ல அதைப் பற்றிய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தொடர்ந்து முன வைத்த நண்பர்கள் சிவிஆர், மங்களூர் சிவா, ஆகியோர் கொடுத்த உற்சாகமும் விவாஜியைத் தொடர்ந்து எழுத வைத்தன...

பின்னூட்டங்களில் கலகலப்பு மூட்டிய சகோதிரிகள் ஃமை பிரண்ட், துர்கா, அனுசுயா, இம்சை அரசி இவங்களுக்கு நன்றி வைக்கல்லன்னா அந்தக் கொலவெறி படை என்னைச் சும்மா விடாது என்ற காரண்த்தினால் அவங்களுக்கும் நன்றி...

இந்தக் கதை விவாதத்தில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒன்றிணைந்த சங்கத்து மக்களுக்கும் பதிவுலக மக்களுக்கும் இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்....

இந்த ரீ மேக் காமெடிக் கலாச்சாரத்தைத் தொடர வேண்டும் என்பது என் ஆசை....அடுத்து ரீமேக் ஆகவிருப்பது ... தசாவதாரம்... யாரை வச்சு தசாவதாரம் ரீ மேக் பண்ணலாம் ஐடியாக் கொடுங்களேன்...

பினாத்தலாரின் கவி வரிகள்
"குஜாலா ஹிட்டு ஏறுதோ - உஜாலா நிறம் மாறுதோ
ஒரு விட்ஜட்டு டூப்ளிகேட் ஆகுதோ
அது ஹிட்ரேட்டை கூட்டி போகுதோ அடடா
மொக்கையோ கும்மியோ சூடான இடுகைகளோ
ஓராயிரம் பின்னூட்டம் பார்த்திடும் பூவல்லவா
நூறாயிரம் ஹிட்டையும் தாண்டிடும் பூவல்லவா.."

Friday, July 27, 2007

பொடியன் பதிவு விற்பனை மண்டி

நாட்டுல்ல எவ்வளவோ தொழில் இருக்குங்க. எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு பக்தி வேணும், நேர்மை வேணும், ஒரு நம்பிக்கை வேணும் அப்படின்னு எங்க முத்லாளி சொல்லுவார். நான் பிளாக் எழுதலாம்ன்னு தான் இங்கே வந்தேன், ஆனா வந்த நேரம் எல்லாமே மாறிடும் போலிருக்கு. நம்ம மொபைல் விடாம சிணுங்குது (ஊர்ல்ல இருக்க நம்ம அத்தைப் பொண்ணுகிட்ட ஆசையாப் பேச வாங்குனது. நோக்கியா என் சிரிஸ் மொபைல். விலை அதிகம் தான் ஆனா ஆசையின்னு வந்தா விலை எல்லாம் கண்ணுக்குத் தெரியுதா என்ன?) கிட்டத்தட்ட எல்லா பதிவரும் போனைப் போட்டு பொடியா எங்க பிளாக்கையும் ஒரு நல்ல விலைக்கு வித்துக் கொடுக்க முடியுமா? உனக்கு 10% கமிஷ்ன் தர்றேன்னு எல்லாம் ஆசைக் காட்டுறாங்க. இந்த வியாபாரமும் நல்லா இருக்கும் போலிருக்கே

எல்லாரும் பிளாக் விவரங்களைக் கொடுத்துட்டாங்க. சிலர் விலையை டாலர்ல்ல கேக்குறாங்க. இன்னும் சிலர் யூரோவில்ல கேக்குறாங்க.

எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிகிட்டு நம்ம வியாவாரத்தை ஆரம்பிக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கணும் வியாவாரம் நல்லா போகணும் லாபம் சம்பாதிக்கணும்.

முதல் போணியா இந்தப் பதிவு விலைக்கு வருது. விலைக் கேக்குறவங்கக் கேக்கலாம்.
விலையை யூரோவில்ல கேளுங்க

பூக்களப் பத்தி பல அரும் பெரும் தகவல்கள் நிறைந்த இந்தத் தளம் விற்பனைக்கு வருது

வியாபாரம் குறித்த எல்லா விவரங்களயும் பின்னூட்டங்களின் வழியாவே மெயின்டெயின் பண்ணுமாறு பாசத்தோடுக் கேட்டுக்குறேன்.

சரிங்க, முதல் வியாபாரத்தை நல்லா லாபமா ஆக்கித் தாங்க ப்ளிஸ்

Thursday, July 26, 2007

கச்சேரி TAKE OVER

உலக பதிவு வரலாற்றிலே இது தான் முதல் டேக் ஓவர்ன்னு நினைக்கிறேன்.

எம் பேர் சின்னப் பொடியன் நான் ஒரு மளிகை கடையிலே சம்பளத்துக்கு வேலைப் பாத்தேன். எங்க மொதலாளி கடையிலே பில் போட வச்சிருந்த கம்ப்யூட்டருக்கு கள்ளத்தனமா இன்டர் நெட் கனெக்ஷன் கொடுத்து பிளாக் எல்லாம் படிச்சு பித்தாகி பிளாக் எழுத ஆர்வம் அதிகமாயிருச்சுங்க.

பல நாளா யோசிச்சு சொந்தமா ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணேங்க. அப்போத் தான் எங்க மொதலாளி சொன்னார்.

லேய் சின்னப் பொடியா, புதுசா ஆரம்பிச்சா இன்னிக்கு ஓலகத்துல்ல பொழைக்கது கஷ்ட்டம், ஏற்கனவே பிளாக் ஆரம்பிச்சு நடத்த முடியாமத் திணறிகிட்டு இருக்க பிளாக்காப் பார்த்து வாங்கிப் போட்டின்னு வை., சோலி சுளுவா முடியும்ன்னு. என் மொதலாளி வியாபார காந்தம் ஆச்சே. அவர் சொல் படி நானும் முயற்சி பண்ணேன்.

பல் பேத்துக்கிட்டேப் பேசிப் பாத்தேன். பிளாக்கை நல்ல விலைக்கு விக்க நிறைய பேர் தயாரா இருந்தாலும் நமக்கு விலைக் கட்டுப்படி ஆகல்ல. ( நெசமாத் தான் சொல்லுறேன் பிளாக் கூட விலைக்கு தர்றாங்கய்யா.. வாங்க தான் கூட்டம் கம்மியா இருக்கு). பொறவு அப்படி இப்படி விசாரிச்சு நம்ம சங்கம் போர்வாளா இருக்க தேவ் அண்ணன் கிட்டப் பேசி ஒரு வழியா அவர் நடத்திகிட்டு இருந்தக் கச்சேரியை நாங்க வாங்கிட்டோம்ப்பா.

எவ்வளவு பணம் கைமாறிச்சு? யார் எல்லாம் இதுக்கு உதவுனாங்க அப்படிங்கறதை எல்லாம் விவரமா எக்னாமிக் டைம்ஸ்ல்ல இல்ல சி.என்.என் ஐபின்ல்ல் பார்த்துப் படிச்சி அறிந்துக் கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்குறேன்..

தேவ் அண்ணன் கேட்டுகிட்டப் படி இப்போதைக்கு பிளாக் பேரை மட்டும் மாத்தாம சென்னைக் கச்சேரின்னு வச்சே நம்ம பதிவுலக பிரவேசத்தை ஆரம்பிக்கிறேன்.

பெரியவங்க எல்லாம் ஆசிர்வதிக்கணும், என்னையும் உங்கள்ல்ல ஒருத்தனா ஏத்துக்கணும்

இப்படிக்கு,

சின்னப் பொடியன்

Monday, April 30, 2007

தேங்க் யூ சங்கம் and சிங்கம்ஸ்

ஒரு வழியா எனக்கு லீவ் ஓ.கே ஆயிருச்சு மக்கா...

இது வரைக்கு 4356 லீவ் லெட்டர் கொடுத்து..

356 லெட்டர் தொலைக்கப்பட்டு...
900 லெட்டர் கிழிக்கப்பட்டு...
600 லெட்டர் காரணம் சரியில்ல என்று ரிஜெக்ட் செய்யப்பட்டு...
700 லெட்டர் ஏன் எதுக்கு இப்படி கேள்வியாக் கேட்டு...
800 லெட்டர் சும்மாவே நிராகரிக்கப்பட்டு...

கடைசியா ஒரு 999 லெட்டர் ஸ்பெலிங் மிஸ்டேக்ன்னு அநியாயமாக் காரணம் சொல்லி ரிஜெக்ட் ஆச்சு

இப்போக் கடைசியா நேரடியா ஹாட் லைன் போட்டு தலக்கு தொடர்பு கொண்டு கெஞ்சி கதறி.. லீவ் வேணும்ன்னு நான் கேட்டப்போ...

தல நான் பாராட்டுற மகராசன்... எம்புட்டு நாள் ராசான்னு தாய்ள்ளத்தோடு கேட்க...

தல பார்த்து நீயே சொல்லுத் தல ஒரு வருஷமா இங்கிட்டு இருந்திருக்கேன்... நீ லீவு கொடுத்தா... நானும் நானா இருப்பேன் தல...

ம் அப்படின்னு போன்ல்ல அவர் தெய்வீக குரல்ல முனங்கன்ன தல...

ஆமா நீ சங்கத்துல்ல இருந்தே ஓய்வு எடுக்கக் கூடாதா.... வெளியே போய் தான் ஓய்வெடுக்கணுமா? அப்படின்னு வரலாற்று சிறப்பு வாய்ந்த டவுட்டைத் தல எடுத்து விட...

தல ஸ்கூல் எல்லாம் லீவ் விட்டா ஸ்கூலுக்கு வான்னு சொல்லமாட்டாங்கத் தல...
ஆபிஸ்ல்ல கூட அப்படித் தான் தல.. நம்ம சங்கத்துல்லயும் லீவுக் கொடுத்தா அப்படியே கொடு தல அப்படின்னு பூகோள பதிலை நான் சொல்ல...

ம்ம்ம் நீ கூட விளங்கற மாதிரியே பேசுற.. ஆனாலும் வில்லங்கமாத் தான் இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட்... ஆமா சங்கத்துக்கு லீவ் விட்டுட்டு வெளியே போய் என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ண மாட்டியே....அப்படி ஏதாச்சும் நடந்துச்சு.... இந்த பிளாக் பூமி கலவரப் பூமியா மாறிரும்... ரத்தம் பீறிட்டு ஓடும்.. ஏன்னா நான் பெரிய ரவுடின்னு நானே சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்ல...

அப்படின்னு எனக்கு லீவ் ஓ.கே.வா தல...

ஓ.கே மாதிரி தான்..

அப்படின்னா நான் சங்கத்தை விட்டு வெளியே போகலாமாத் தல...

போலாம் ஆனா லீவு முடிஞ்சு வரணும்.. வரும் போது தலக்கு தலப்பாக் கட்டு பிரியாணியும் மத்தச் சிங்கத்துக்கு எல்லாம் குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டுத் தான் புரியுதா?

கண்டிப்பாத் தல...

தல தல தான்...

கண்ணீர் மல்க தலக்கு போன்ல்ல உம்மா கொடுத்துட்டு சங்கம் விட்டு கிளம்பும் போது சங்கத்துக் கட்டடத்தில் யாரும் இல்லாத காரணத்தினால்

சங்கப் பலகையில் பெரிசா எழுதி வைத்து விட்டு புறப்பட்டுட்டான்

மீண்டும் சந்திக்கும் வரை .... தேங்க்யூ சங்கம் and சிங்கம்ஸ்

Wednesday, April 25, 2007

கலாட்டாக் கச்சேரிங்கோ - ஜாலி கைஸ் அன்ட் கேர்ள்ஸ்



ஓஹோ கச்சேரி பிலிம்ஸ் கம்பெனிக்கு டைடல் பார்க்ல்ல இடம் வேணும் கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லி நம்ம சராவை அனுப்பி மாசக் கணக்காச்சு பயலைக் காணும்....அவனும் விடாம பெரிய பெரியத் தலகளைச் சந்திச்சு நம்ம விசயம் பேசிகிட்டுத் திரியறதாக் கேள்வி..

சரி டைடல் பார்க் இல்லாட்டியும் பரவாயில்ல.. வேற பார்க் எதுல்லாவது ஆபிஸ் தொறக்கலாம்ன்னு நான் யோசிக்கும் போது நம்ம துபாய் பய கோபி பொங்கி அண்ணே நம்ம கிடேசன் பார்க் மரத்தை எல்லாம் வெட்டு வெட்டுன்னு வெட்டி சும்மா சூப்பரா ஆபிஸ் போட்டுருவோம்ண்ணேன்னுப் பாச மழைப் பொழிஞ்சுட்டான்.

படத்துச் சூட்டிங் கூட அங்கனத் தெரிஞ்ச ஷேக் வீட்டு கொல்லையிலே வச்சுக்கலாம்.. பூஜைக்கு நம்ம அபிஅப்பாவைக் கூப்பிட்டுறலாம் ( துபாய் கிடேசன் பார்க் ஓனர் நம்ம அபி அப்பாவுக்கு பிரண்ட்டாம் இல்ல) அப்புறம் பைனான் ஸ்க்கு அண்ணாச்சி... பினாத்தலார்ன்னு ஆட்டயப் போட்டுரலாம்.. அண்ணாச்சிக்கும் பினாத்தலாருக்கும் சும்மா ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்தா துபாய் கலெக்ஷ்ன் கேரண்டிண்ணே.. அம்புட்டு பேன் ஸ்ண்ணே...அப்படின்னு கிட்டத் தட்ட என்ன துபாய்க்கு கடத்த திட்டம் போட்டப்போத் தான் டவுசர் பாண்டி பாஞ்சி வந்தான்... மூச்சு வாங்க வாங்க... என்னியப் பார்த்தான்.

அண்ணே... இந்த பாப் வூல்மரைப் போட்டாய்ங்களே அவ்ங்களைப் பிடிச்சுக் கொடுத்தா எதாவது இனாம் கொடுப்பாயங்களாண்ணே... அப்பாவியாய் கேட்டான்
அடப் பாவி.. டேய் வேர்க்குது வெளியே போயிட்டு வரேன்னு போனே வெஸ்ட் இன்டீஸ்க்கேப் போயிட்டுக் கொலைக்காரங்கக் கூட கோக் குடிச்சுட்டு வந்தமாதிரி இல்ல பேசுற.. வெகுளியாப் பேசுறீயா இல்ல வில்லங்கமாப் பேசுறீயான்னு தெரியல்லயே.. மனசுக்குள் மவுத் விட்டு பேசிட்டு மவுனமாய் அவனைப் பார்த்தேன்..

ஏன் கேக்குற?

இல்லண்ணே.. எனக்கென்னமோ அது நம்ம ஜீயும் .. இம்சையக்காவுமா தான் இருக்குமோன்னு கன்பர்ம் டவுட்டாக் கீதுண்ணே

அவங்க என்னடா பண்ணாங்க பச்சப் புள்ளங்க ஆச்சேடா...

அய்யோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிராதீங்க.. பாப் ஆல்பம் போடப் போறோம்ன்னு அவிங்க கம்ப்யூட்டர்ல்ல எழுதி வச்சிருக்கதை நான் எழுத்துக் கூட்டிப் படிச்சுட்டேண்ணே.. எத்தனைத் தமிழ் படம் பாக்குறோம் இப்போ எல்லாம் வில்லன்வ.. இப்படி கம்ப்யூட்டர் பொட்டியில்லேத் தாண்ணே கொலை மேட்டர் எல்லாம் குறிச்சு வைப்பாய்ங்க.. நம்ம விசய், அசித், எல்லாம் அதை வச்சு கண்டுபிடிப்பாய்ங்க.. ஏன் நம்ம அந்நியன் விக்ரன் கூட அப்படி கொலைக்கு கம்ப்யூட்டர்ல்ல தாண்ணே அப்ளிகேஷ்ன் போடுவார்..என்னிய ஏமாத்த முடியுமா?

அடப் பாவி வேலைத் தேட அப்ளிகேஷ்ன் போடணுமா கம்ப்யூட்டரத் திறடா ஒரு படத்துல்லாவது சொல்லிக்கொடுங்கய்யா.. பாருங்க கொலைக்கு ரெஸ்யூம் அனுப்ப இன்ட்ர்னேட் இங்கிதம் இல்லாம இங்கே ஒரு ஜீவன் சொல்லுது.. ம்ம்ம் நீ மேல சொல்லுடா ராசா..

லாஜிக் இல்லாத தமிழ் படங்களைப் பார்த்து ஒரு பிரிட்டானிக்காவா மாறி இருந்த டவுசர் பாண்டி பரபரப்பாச் சொன்னான்...

அண்ணே அந்த பாகிஸ்தான் கோச் பேர் பாப் வூல்மர்.. இப்போ இவங்க போடப் போற ஆளு பேர் பாப் ஆல்பம்.. நல்லா யோசிங்க.. ரெண்டு பேர்ல்லயும் பாப் இருக்கு அதுன்னால... அவன் சிரியசாப் பேச பேச எனக்கு சிறுமூளையிலே சின்னதா டென்ட் விழுந்த பிலீங்க் வந்துருச்சு...

டேய் பாண்டி எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... ஸ்டெப் கட்டிங்..பங்க் கட்டிங்.. இப்படி வகையா முடியெல்லாம் வெட்டுறீங்க.. ஆனா உங்களுக்கு பாப் ஆல்பம்ன்னா அது இசை சம்பந்தமான மேட்டர்ன்னு தெரியாதா... அடக்கொக்காமக்கா பாப் ஆல்பம்ன்னா பாப் வூல்மர் தம்பின்னு சொல்லுறீயடா...உன்னிய... அப்படின்னு நான் கையை ஓங்க...

வாசல்ல முகம் தெரியாத அளவுக்கு மூஞ்சி முழுக்க பொதர் வளத்துகிட்டு..,கர் புர்ன்னு கண்டபடி சவுண்ட் விட்டுகிட்டு ஏரியாவே அலறுர மாதிரி சொய்ங்ங்னு ஒரு சவுண்ட் வேற சேத்துக் கொடுத்துகிட்டு ஒரு பார்ட்டி நம்ம வீட்டு வாசல்ல நின்னுச்சு...

அய்யோ கரடிங்கண்ணா.. அப்படின்னு சின்னப் பய டவுசர் கதறிகிட்டு கொல்லைக் கதவைத் திறந்துட்டு ஓட ...

அய்யோ அரட்டை அரங்கம் நடத்த நம்ம வீட்டுக்கு வீராச்சாமியார் வீறு கொண்டு வந்துட்டார்ன்னு நான் வீல்ன்னு அழுக.... அய்யோ அந்த ஆறு நிமிசம் கொடுமையோ கொடுமை..

அண்ணே அழாதீங்க... நான் தாண்ணே உங்க பாசக்கார ஜீ... அப்படின்னு பய டோப்பாவைக் கழ்ட்ட எனக்கு உசுரு திரும்பி வந்துச்சு

டேய் என்னடா இது கோலம்.... புதரகம் போய் தலையிலே பொதரைச் செட் பண்ணியிருக்க...அந்தப் பொதரை மொத்தமாச் சாயச் சட்டிக்குள்ளே விட்டு எடுத்துருக்க... ஜன்னல் எல்லாம் மூடுன இந்த வீட்டுல்ல கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு நான் நிக்குற திசைய ஒரு குத்து மதிப்பாப் பாத்துப் பேசுற...கழுத்துல்ல என்னடா இது யாரோ எப்பவோ சேவிங் முடிச்சு தூக்கியெறிஞ்ச முக்காப் பிளேட்.. அட பாவி கையிலே காப்பு அதுவும் எதோ மெஷினுக்குள்ளே கையோடு விட்டு வளைச்சு நெளிச்சு இருக்கு.. டேய் அந்த ஊரு பிச்சக்காரன் அசந்த நேரம் அவன் துணியை அடிச்சிட்டியாடா.. அங்க அங்க திறந்த மேனியா இருக்கு... டேய் திருடுனா ஷூவை ஒரே ஆளுகிட்டத் திருடக் கூடாதா.. இப்படி காலுக்கு ஒரு கலர் ஷூவா எடுத்துருக்கீயேடா...

அண்ணே உங்களுக்கு ஓலகம் தெரியாதுண்ணே.. உள்ளூர்ல்ல உக்காந்துகிட்டு கச்சேரி பண்றவர் கிட்டே ஓலக மீசிக் பத்தி எப்படி பேசற்து... ஆல் மை டைம்... ஆனா ஒண்ணுண்ணே இப்படி கெட் அப்பா இருந்தா தான் வெரி குட் சொல்லி வெள்ளைக்காரன் வேர்ல்ட் டூர் அரேஞ்ச் பண்ணுறான்... இப்போ நான் இங்கே வந்தது.. நம்மூர் மக்களுக்கு பாப் சாங் அறிமுகப் படுத்த...



இங்கே பார்டா.. இதுக்குள்ளே நம்ம டவுசர் பாண்டியும், கோபியும் வந்து நம்மக் கூட உக்காந்துகிட்டாங்க...

ஐயாம் கோபி ப்ரம் கிடேசன் பார்க் துபாய் நைஸ் மீட்டிங்க் யூ அப்படின்னு கேப்ல்ல கைக் கொடுக்க

ஓ கிடேசன் பார்க் நைஸ் ப்ளேஸ்.. ஐ ஹேவ் பிக் பேன் தேர்.. திஸ் கை அபி டேட், பாஸ்ட் பவுலர், பிரதர், மூன்பிரெண்ட், டெவில்பாண்டிங், பிளாபரார், டூ மெனி பேன் ஸ் ...

"தம்பி நீ சொன்ன பேர்ல்ல ஒரளவுக்கு விளங்குது... அது யார் டெவில் பாண்டிங்.. ரிக்கி பாண்டிங் ரிலேட்டிவ்வா?"

"அண்ணே.. திங் அவுட் ஆப் த பாக்ஸ் அப்போத் தான் விளங்கும்.. நல்லா யோசிங்க இல்ல இங்க கச்சேரி மக்கள் கிட்டே உதவி கேளுங்க.. அங் ஓ.கே கோபிஸ்.. சம்மர் முடிச்சுட்டு ஐ வில் சீ யூ இன் துபாய்..இங்கே கன்டிரி சாங்க்ஸ் விஷ்யமா ஆராச்சி பண்ண என் ட்ரூப் கூட்டிட்டு வந்துருக்கேன்.. அந்த கன்டிரி சாங்க்ஸ் அப்படியே பிக் அப் பண்ணி என் வேர்ல்ட் டூர்ல்ல யூஸ் பண்ணப் போறேன்.. சோனி ஸ்பான்ஸர் பண்ணுறேன்ன்னு சொல்லியிருக்காங்க...

சோனியா அம்மா இதெல்லாம் பண்ணுறாங்களான்னு டவுசர் பாண்டி அப்பாவியாய் என் காதைக் கடிக்க.. அவனுக்கு நான் விளக்கம் சொல்லி வில்லங்கத்தை விலக்க வேண்டியதாப் போச்சு

சரிண்ணே.. கச்சேரின்னு பேர் வச்சுருக்கீங்களே.. உங்களுக்குப் பாட வருமா?

இல்ல

"சரி எதாவது வாசிக்க வருமா?"

இல்ல



இந்த மைக் செட் , ஆர்க்கெஸ்ட்ரா.. இப்படி எதாவது டெக்னிக்கலா தெரியுமா?

இல்ல

சரி.. பாடத் தெரியாது, வாசிக்கத் தெரியாது, ம்ம் டெக்னிக்கலா எதுவும் தெரியாது ஆனா கச்சேரின்னு பேர் மட்டும் வ்ச்சுக்குவீங்க... கலாய்ப்பீங்க... ஐ வில் ஸ்டாப் ஆல் திஸ் அப்படின்னு முதுகுல்ல இருந்து ஒரு லாங் சைஸ் வீச்சரிவா எடுத்து ஜி தம்பி கீழே வச்சது...


ஜி தம்பி கதை ஒண்ணு எழுதி இன்டர்வெல் விட்ட மாதிரியே நானும் இங்கேயே இன்ட்ர்வெல் விடுறேன்..

அன்ணே உச்சா வருதுண்ணே.. இருடா நானும் வர்றேன் அப்படின்னு அந்த அருவாளைப் பாத்துகிட்டே எந்தரிச்சேன்...ஏனுங்க இன்டர்வெல் விட்டா போயிட்டு வ்ர்றது மரபு தானுங்களே...

இன்னும் வரும்....

Wednesday, April 18, 2007

ஒரு வாலிபக் குழந்தைக்கு வய்சு ஏறுது

வணக்கம் மக்கா.. இதுவும் ஒரு பிறந்த நாள் கச்சேரி தான்... ஆனா யாருக்கு?

பெங்களூர்க்கு தென்கிழக்கே ஒரு 50 மைல் தள்ளி நாளைக்கு இந்த விழா ஏற்பாடு ஆகியிருக்கு..
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க கப்பி மற்றும் தம்பி தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டு அமர்க்களமாக விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...

வழக்கம் போல் நம்ம கச்சேரி நிருபர் விழா அமைப்பாளர்களிடம் சேகரித்தத் தகவல்கள் உங்களுக்காக்..

துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த தம்பி கூறியதாவது...

"இன்னிக்கு எங்க பாசக்கார அன்பின் இமயம் ETC ETC ETC....பட்டமாச் சொல்லிகிட்டேப் போனாரு.. நிறைய காதுல்ல விழுந்து காத்துல்ல கரைஞ்சுப் போச்சு.. (கடைசி வரைக்கும் பெயரைச் சொல்லவே இல்லையே மருவாதையாம்ல்ல) பிறந்த நாளுக்கு அமீரகத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம்.. அங்கே நம்ம சிங்கத்துக்குக் கிட்டத் தட்ட நாலு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க ( யப்பா துபாய் மொத்த மக்கள் தொகை என்னய்யா?) அவங்க எல்லோரும் சிங்கம் பொறந்த நாளுக்கு இந்தியா வரணும்ன்னு துடியா துடிச்சாங்க... ஆனாப் பாருங்க பிளைட்டிலே இடம் இல்ல...( இவர் வந்ததே அரபிக் கடலோரம் மீன் பிடிச்சவங்க வந்த கட்டுமரத்துல்லன்னு பேச்சு) நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..

சிங்கத்ததுக்கு பரிசா... இந்தா ஒரு பெரிய கீப் போர்ட் கொடுக்குறோம்..

அந்தக் கீபோர்ட்ல்ல ASL மூணு எழுத்து மட்டும் தான் இருந்துச்சு..

அது என்னங்கன்னு நாங்க கேக்க...

சங்கத்தின் சிங்கம் மட்டுமா எங்க அண்ணனின் வேகம் அடக்கி வைக்கப் பட்டிருந்தாலும் எங்க அண்ணன் அதையும் தாண்டி செய்த சாகசங்கள் சாதனைகளை எல்லாம் சங்கம் இருட்டடிப்புச் செய்து வந்திருக்கு.. எங்க அண்ணனின் பிற வீர வரலாறு வெளியே வராமல் தடுத்தப் படுபயங்கரமானச் சதியைச் செய்வது அந்தப் பெங்களூர் பிளப் மாஸ்டரும் சென்னை போர் வாலும் தான்...

இதுவரைக்கும் எங்க சிங்கம் சாட் பண்ண கம்ப்யூட்டர் எண்ணிக்கை.. 435
அதுல்ல ASL தேய்ஞ்ச கீ போர்ட் எண்ணிக்கை மட்டும் 567..
சிங்கத்துக்கு இருக்க யாகூ ஐடி மொத்தம் 234
சிங்கம் அதுல்ல பாஸ்வேர்ட் மறந்த ஐடி 123
இன்னும் அதுல்ல ரெகுலராப் பயன்படுத்துற ஐடி 45
இப்படியே ஜி மெயில் ஐடி 78
எம்.எஸ்.என் ஐடி 96
ஆர்குட்ல்ல அண்ணன் நட்பு வட்டம் 420
பிளாக்ல்ல அண்ணனுக்கு தனி வட்டம் 840
எங்க பருத்தி வீரன் பாசமா எல்லாச் சேட்ல்லயும் ஹாய் சொன்ன ஐடி 4 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 465 ( இதை நீங்க படிக்கும் இந்த நிமிஷத்துல்ல அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நூறுகள் கூடியிருக்கும்.. ஏன் ஆயிரங்களைக் கூடத் தாண்டி இருக்கும்.. அண்ணனோட திறமை அப்படி)
அந்த ஐடியிலே பசங்க வெறும் ஆயிரம்
பொண்ணுங்கக் கூட்டிக் கழிச்சா ஒரு தொள்ளாயிரம்
மீதி இருக்க 4 கோடியே சொச்சமும் அண்ணன் பொண்ணுன்னு நினைச்சுப் பேசுனப் பசங்க ஐடி ( சிரிக்கப் பிடாது அவங்கப் ப்சங்கன்னு கண்டுபிடிச்சதும் அண்ணன் தானே)
அண்ணன் சேட்ல்ல ஒரு கிஙு...
அண்ணன் சேட்டையிலே ஒரு பிக் திங்கு...

இப்படி சிங்கத்தோடப் பயங்கர திறமைகள் திட்டமிட்டுத் திரையிடப்பட்டு விட்டது..

இதுக்கு மேல் பேசிய கப்பி கிட்டத்தட்ட கொந்தளித்துக் கொதி நிலையை அடைந்து விட்டார்..

"எங்க சிங்கத்துக்கு முன்னாலே அந்த ஜொள்ளு பாண்டி எல்லாம் சும்மா ஜூஜூபி... ஆனா அவரை நாடேக் கொண்டாடுது.. எங்க சிங்கம் சும்மா விடிய விடிய பண்ணுற கடலைச் சாகுபடியிலே நூத்துல்ல ஒரு பங்கு அந்த ஜொள்ளுபாண்டி பண்ண முடியுமா??? சிங்கம் சார்பா நான் சவால் விடுறேன்

ஆனா அவருக்குத் தான் ஜொள்ளுபேட்டைன்னு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்க... எங்க சிங்கம் சிந்துற ஜொள்ளுல்ல அந்த பாண்டி ப்ரிஸ் ஆயிருவார்...தெரியும்ல்ல...

பெரிய அவமானம் என்னன்னா ஜொள்ளுக் கோச்சிங் சென்டர்ல்ல சிங்கத்தைச் சில்ரன்ஸ் செக்ஷ்னல்ல் தான் சேக்க முடியும் நக்கலாச் சொன்னாரு பாருங்க சிபி.. அதை எல்லாம் கேட்டு எங்க பிளட் பாயில் ஆகுது.. ஆனா எங்க சிங்கம் எங்களைத் தன் அன்பால் பண்பால் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கு...

கப்பி கால் கிலோ கடலை மிட்டாயைப் பாக்கெட் ஒன்றை காஞ்சிப் பட்டுத்துணியில் சுற்றி எடுத்து வந்திருந்தார் சிங்கத்திற்கு பரிசு அளிக்க...

தமிழகம், கேரளம் , ஆந்திரா, கர்நாடகம் போன்ற பல ஊர்களில் இருந்து கடலை வியாபாரிகள் வண்டிக் கட்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்... அவர்கள் சிங்கத்தின் பிறந்த நாள் முன்னிட்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்..

சங்கத்தின் தலக் கைப்புள்ள சிங்கத்தின் பிறந்த நாளைக் கடும் விமர்சையாகக் கொண்டாடும் படி அகில உலக வரு.வா.சங்கத்தின் மொத்த தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து துருக்கி தொலைக்காட்சிக்குப் பேட்டிக் கொடுத்திருப்பதாய் யூ.டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது...

சங்கத்தின் மற்ற தோழர்களும் சிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெங்களூரில் மையம் கொள்வார்கள் எனத் தெரிகிறது..

ட்ரிங்...ட்ரிங்... சற்றுமுன் தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிங்கம்..

"அண்ணே ஏண்ணே உங்களுக்கு எம் மேல இந்தக் கொலவெறி.. நான் பச்சப் புள்ளண்ணே.. பாலகன்.. என்னியப் போய் இப்படி ஓட்டுறீங்க.. நீங்க ஒரு வீரனை ஓட்டியிருந்தா வெரி குட்ன்னு வீடு தேடி வந்துச் சொல்லியிருப்பேன்.. ஒரு குழந்தையை கூடத்துல்ல உக்கார வச்சு சூடம் கொளுத்திச் சுத்தி சுத்தி வந்து கும்மி அடிக்கிறீயளே நல்லாவா இருக்கு... வேணாம்ண்ணே...போங்கண்ணே போய் ஆணியப் புடுங்கங்கண்ணே.. அந்த் ஆளை வெவ்சாயம் பாக்கச் சொல்லுங்கண்ணே..."

"தம்பி...கோவப்படாதே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிகிடவா"

"என்னண்ணேச் சொல்லப் போறிய "

"ஏலேய் நீ எங்க தம்பிலேய்.. உன்னிய நாங்க ஓட்டாம ஜார்ஜ் புஷ் பிளைட் வச்சு வ்ந்து ஓட்டுவாரே..சரிடா தம்பி... நல்ல படியா பொறந்த நாள் கொண்டாடு.. இந்த வருசம் உனக்கு ஒரு நல்ல வருசமா அமைஞ்சு.. அடுத்த வருசம் பொண்டாட்டி புள்ளகளோடப் பொறுப்பா பொறந்த நாள் கொண்டாட அண்ணனோட வாழ்த்து.. உனக்கு.."

Tuesday, March 13, 2007

ஜொள்ளு ஜெயந்தி!!!!

காதலுக்குத் திருவிழாக் கொண்டாடி உலகமே ஓய்ந்திருந்த வேளையில் நம்ம பேட்டைப் பக்கம்.. பீர் பேரல்களும்... உரித்தக் கோழிகளும்..( அட மெய்யான கோழிங்கப்பா).. அவித்த முட்டைகளும் அளவுக்கதிகமாகக் கொண்டுப் போகப்படும் தகவல் நம்ம காதுக்கு வர விசாரிக்கக் களத்தில் இறங்கைனோம்..

தமிழுக்குச் சங்கம் வளர்த்த பாண்டிய மண்ணில் இருந்து புறப்படுகிறான் ஒரு லட்சிய இளைஞன்...தலைநகரம் சென்னை அன்னையென அவனை வாரி எடுத்து தாலாட்ட..

அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..

பாண்டிய தேசத்தின் புழுதிக் காட்டில் அவன் கண் வழியேக் கொஞ்சிக் காவியம் பாடச் சொன்னக் கருவாச்சிகளும்...

திருவிழாக்களின் தீபம் சுமந்துச் சிரிச்சி சுளிச்சு அவன் சிறு இதயத்தில் சூடு வைத்த சிறுக்கிகளும்...

தாவணிப் போட்ட லேப் டாப்புகளும்.. எகிற அடித்த அவன் இதய லப் டப்புகளும்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு அவன் மெரீனாவின் ஈரக் கரையோரங்களில் கீதம் பாடிக் களைத்துச் சாய்ந்தான்...களைத்தவன் எழுந்து சிந்தித்தான்..

சைதாப்பேட்டை.. குரோம்பேட்டை.. வண்ணாரப்பேட்டை.. ராயப்பேட்டை. .ஏன் செத்தவனை செட்டில் செய்ய கண்ணம்மாபேட்டை.. கிருஷ்ணாம் பேட்டைன்னு என சென்னையில் தினுசா தினுசா ஆயிரம் பேட்டைகள் இருக்க...

சேட்டைகளின் கோட்டையாக ஒரு பேட்டை வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு சிலிர்த்து எழுந்தான்...

பறவைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று உரக்கப் பாடினான்..

சிந்தினான்...

இரவு பகல் பாராது சிந்தினான்...

ஓயவு ஒளிச்சல் இன்றி சிந்தினான்..

ஜொள்ளு என்னும் புனித திரவம் சிந்தி எழுப்பினான் பேட்டையை அது தான் இன்று உலக இணையத் தமிழர்களின் உதட்டோரம் குடியிருக்கும் குடியிருக்கும் நம் நிரந்தரப் புன்னகையாம்...

ஜொள்ளுப் பேட்டை...

ஜொள்ளுப் பேட்டை நிறுவிய நம் பாசத்துக்குரிய பாண்டி.. ஜொள்ளு பாண்டி மண்ணில் அவதரித்த இந்த திரு நாளாம் மார்ச் 14ஐ உலக ஜொள்ளு தினமாக அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் துவங்கி நம்ம உள்ளூர் பஞ்சாயத்து வரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்... ......

நான் விசாரிக்கப் போன நேரம் ஜொள்ளுபேட்டையிலே மேடையிலே நின்னு நம்ம டவுசர் பாண்டி தான் இப்படி கண்டப் படி பீலிங் ஆகி மைக் பிடிச்சிப் பேசிகிட்டு இருந்தான்..

இதுன்னால்லே உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குரது என்னன்னா..

நம்ம பாசத்துக்குரிய பாண்டிக்கு ஜொள்ளு பாண்டிக்கு டூமாரோ ஹேப்பி பர்த்டே....


HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!

Tuesday, March 06, 2007

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

காட்டுக்குள்ளே திருவிழாவாம் டும் டும் டும்...

அனிமல் கிங் டம்மே அல்லலோ கில்லோல படுது டும் டும் டும்...

பறவைக் கூட்டம் எல்லாம் பாட்டு படிக்க டும் டும் டும்...


கரையோரம் டால்பின் கும்பல் டான்ஸ் ஆட டும் டும் டும்...

செடியும் கொடியும் காத்துல்ல கரகம் ஆட டும் டும் டும்...

மரமெல்லாம் பூச்சொறிய டும் டும் டும்..

பாயும் நதியும் பணிந்து வந்து வாழ்த்துச் சொல்ல டும் டும் டும்...

வானம் வில்லாய் வளைஞ்சு ரங்கோலி போட டும் டும் டும்...

கானகமே கதிகலங்க டும் டும் டும்...


பூமியே ஒரு குலுங்கு குலுங்க டும் டும் டும்....


சிங்கக் கூட்டம் சேர்ந்து சொல்லிச்சாம்

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

இன்னிக்கு உனக்கு ஹேப்பி பர்த் டே டா... டும் டும் டும்...

சூடான் காடுகளில் இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் பாசக்கார தம்பி புலிக்குட்டி சிவாவுக்கு சென்னைக் கான்கீரிட் காடுகளில் இருந்து கச்சேரிக்காரனின் அன்பு வாழ்த்துக்கள்...

Tuesday, February 27, 2007

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா?

மன்றத்துக் கண்மணிகளே...

கழகத்து ஆற்றலரசுகளே...

சங்கத்துச் சிங்கங்களே..

ஓ தமிழ் பதிவுலகமே...


தமிழுக்குச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் பாண்டிய மன்னன்.. பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் அளித்து தமிழ் வளர்த்தான் இணையத்தில் இலவசமாய் நம் அண்ணன்..

வேடிக்கைப் பார்க்க வந்தவரை எல்லாம் வாடிக்கையாளராக்கி பின்னூட்ட எண்ணிக்கையில் சாதனைகளைக் குவித்து அந்தச் சாதனைகளைத் தமிழ்த் தாயின் பாதங்களுக்குக் காணிக்கையாக்கியவன் நம் தலைவன்..

ஒன்றா.. ரெண்டா...சாதனைகளைப் பட்டியலிட பதிவுலக வரலாற்றுப் பக்கங்களில் காட்டாறாய் ஓடியவன்... கயித்தாறு மாவட்டத்தின் தமிழ் மைந்தன் நம் பின்னூட்ட நாயகன்..

சாதனை.. சாதனை..சாதனை.. என்று ஒன்றே லட்சியமாய் வாழ்ந்து வரும் நம் பாசப் புயலுக்கு இன்று சோதனை..

ஆம் தமிழ் குலக் கொழுந்துகளே... அலுவலக வாழ்க்கை என்ற நெருப்பாற்றில் நீந்தி.. வேலை என்ற பளுமிக்க பாறையைச் சுமந்து... உறக்கம் என்னும் அரக்கனை வென்று... இணையத்தில் பின்னூட்டம் என்ற பூந்தோட்டத்தை நேரம் பாராது.. காலம் பாராது.. கண் எனவும்... உயிர் எனவும்.. உடைமை எனவும்.. பாராட்டி சீராட்டி வளர்த்த எம் பின்னூட்டப் பேரரசுக்கு இன்று பேராபத்து...

பதிவுகள் போட்டு தேயந்த விரல்களுக்குச் சொந்தமான என் இனிய இணைய தமிழ் மக்களே..

பதிவுப் போட்டு பல மணி நேரமாகியும் பின்னூட்டப் பசியில் நீங்கள் தவித்த அந்த நேரங்களை நினைத்துப் பாருங்கள்.. பிளாகர் வந்தானா அன்று உங்களை வாழ வைக்க.. அவன் பதிவு போட இடம் மட்டுமே கொடுத்தான்.. உங்கள் பதிவுகளின் வறுமை நீக்கி அவை வாழ உதவியது என்ன???

பின்னூட்டங்களே..அந்த பின்னூட்டஙகளின் மறு அவதாரமாய் நம்மிடையே வாழ்ந்து வரும பின்னூட்டச் செம்மல் இன்று வேதனையில் வாட நாம் அமைதி காப்பது நியாமா?

அலுவலத்தில் தன் மேலதிகாரி கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல நம் அண்ணன் தாமித்தத் தருணங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்காலாம்.. ஆனால் ஓ தமிழ் பதிவுலகினமே நீ உள்குத்து.. வெளிகுத்து.. வெவகாரக் குத்து என்று விதவிதமாய் வில்லங்கமாய் கேட்டு வைத்த எந்தக் கேள்விக்குமே அண்ணன் டெட் லைன் தாண்டி பதில் அளித்தது உண்டா? சிந்தித்துப் பார்...

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் ரன்களை விட எங்கள் அண்ணன் ஒவ்வொரு பதிவிலும் அடித்து ஆடி குவித்ததிருக்குக் கிடைத்தப் பரிசா இது.... இது தகுமா? பொறுக்கலாமா இந்த சோதனையை...

பின்னூட்டச் சாதனைகளைப் பதிவுலக காவல்துறை பின்னூட்டக் கயமை என்ற புதியப் பெயரிட்டு அதைக் கடும் குற்றமென அறிவித்து ஓடுக்க நினைத்த அந்தக் காலக்கட்டத்தைச் சற்றே திரும்பிப் பார் தமிழனிமே.. அண்ணனைக் காவல் துறை அடக்க முடிந்ததா.. ஒடுக்க முடிந்ததா..

ஓ தமிழினமே..

ஒன்று படு..

பின்னூட்டத் தமிழ் காப்போம்...

வாழ்க பின்னூட்டம்..
வளர்க பின்னூட்டம்...

வாழ்க பின்னூட்டப் பேரரசு தலைவர் இலவசக் கொத்தனார்

இவண்
அகில இந்திய பின்னூட்டச் சூப்பர் ஸ்டார் இலவசக் கொத்தனார் ரசிகர்கள் நற்பணி மன்றம்
தலைமை நிலையம்
கொட்டிவாக்கம்
சென்னை.


பிகு.எதுக்கு இவ்வள்வு சவுண்ட்ன்னுப் பாக்குறீங்களா...

பின்னே நம்ம தமிழ்மணத்துல்ல இனி 30க்கு மேலே பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவுகளுக்கு வாலியண்டிரி ரிடையர்மண்ட்டாம் ( கட்டாய ஓய்வுத் திட்டமாம்) அதாவது 30க்கு மேல பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவு தமிழ்மணத்துல்ல தெரியாதாம்..

நம் பின்னூட்டத் தமிழனின் பல இமாலயச் சாதனைகளுக்கு உதவ வேண்டியவரே அண்ணனின் சாதனைகளுக்கு அணைப் போடுவது போல் ஆகாதா.. என்ன சோதனை இது.. தாங்க முடியா வேதனை இது.... கண்ணீர் கொட்டுதடா... இதயம் வலிக்குதுடா தோழா....

இதுப் பற்றி தலைவர் என்னச் சொல்லுறார்ன்னா..

Thursday, February 08, 2007

மாப்பிள்ளை ரஜினி ராம்கிக்கு வாழ்த்துக்கள்

என்னைத் தமிழ் வலையுலகுக்கு அழைத்து.. தமிழில் தட்டச்சப் பொறுமையாக வழி காட்டிய தமிழ் பதிவுலகின் முன்னோடியும், ரஜினி சப்தமா, சகாப்தமா, மு.க. போன்ற நூல்களை எழுதி எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டிருப்பவருமான அன்பு நண்பர்.. ரஜினி ராம்கி நாளை மணநாள் காண்கிறார்..

இந்த சந்தோஷமானத் தருணத்தில் மாப்பிள்ளை ராம்கியையும் மணமகளையும் மனமார வாழ்த்துகிறேன்..

இல்லறத்தில் இனிமைக் கண்டு எல்லா வளமும் பெற்று ஆல் போல் தழைத்துச் சீரோடும் சிறப்போடும் வாழ மணமக்களை வாழ்த்துக்கிறேன் ...

தலைவர் டச் இல்லாம வாழ்த்து நிறையுமா



இருக்கே....

"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்
பேரு விளங்க் இங்கே வாழனும்
சோலை வனத்து ஒரு சோடிக்குயில் போலத் தான்
காலம் முழுக்க சிந்துப் பாடணும்'


தலைவரின் முழு வாழ்த்தையும் கேட்க இங்கேச் சுட்டுங்க..

HAPPY MARRIED LIFE RAMKI !!!!

Wednesday, January 17, 2007

விவசாயியுடன் பொங்கலோ பொங்கல்

வணக்கம் மக்கா,

அட நாட்டுல்ல இப்போ என்ன விசேஷம்ன்னாலும் டி.வி.காரயங்க கையிலே கேமராவைத் தூக்கிட்டு ஒரு மைக்கையும் கொண்டாந்து நீட்டி கதைக் கேக்குறது வழக்கமாப் போயிருச்சு...
நம்ம கச்சேரியில்லும் அதையே அப்படியே கொஞ்சம் டிக்காஷனை லைட்டாப் போட்டு காப்பி ஆத்திருவோம்ன்னு முடிவு பண்ணி உக்காந்து கண்டப் படி யோசிச்சதுல்ல வந்தது தான் டைட்டில் கார்ட்.. விவசாயியுடன் பொங்கல்...

ஊருக்கெல்லாம் சோறு போடுற மவராசன்... அந்த மண்ணின் மைந்தனோட பொங்கல் நாளை செலவிட்டுற வேண்டியது தான்னு கிளம்பி போனோம்ங்க...
விவசாயப் பூமியை பாக்கணும்ன்னா.. (அங்கே தானேங்க விவசாயி இருக்கார்)... வரப்பு ஓரமா நடக்கச் சொன்னாயங்க... நாமளும் நடந்தோம்ங்க..

விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்கிட்டு வரப்பு பக்கமா ஓமப் பொடி பொட்டலம் கொடுத்துட்டு நமக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்ன புண்ணியவான் ஒருத்தர் சொன்னாருங்க..

ஆஹா விவசாயி மக்கள் எல்லாம் நெல்லும் கையுமா அலைஞ்சக் காலம் போய் இப்போ செல்லும் கையுமா அலையுறாங்களே நல்ல முன்னேத்தம் தான்னு கூட வந்த வெட்டி பய ஒருத்தன் புளங்காகிதப் பட்டுச் சொன்னான்.

சரின்னு ஓமப்பொடியைக் கொறிச்சுகிட்டு போன் நம்பரை அழுத்துனா... டொய்ங்.. டொய்ங்ன்னு ஒரே பிஸி... யப்பா ராசா... சந்தோஷம்ய்யா ஊர் பசியை ஆத்துற நம்ம விவசாயியை மக்கள் மறக்காம பொங்கல் அன்னிக்கு போன் போட்டு போன்ல்லயே பொங்கி வாழ்த்துச் சொல்லி ஆனந்தப் படுத்துறாங்கடான்னு எங்களுக்கு இன்னும் குஷியாயிடுச்சு.

ஒரு பத்து நிமிசம் கழிச்சு போன் லைன் கிடைச்சுது...

"ஹாய்...ஹலோ... ஹவ் ஆர் யூ.. ஹோ ஐ யாம் வெரி ஹேப்பிய்யா.. டூ டே ஹேப்பி பொங்கல்யா..."

நாம் நம்மை அறிமுகப்படுத்தி அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தைக்கு நகரும் முன்னே மறுமுனையில் இருந்து எடுப்பா வெள்ளைக்காரனை வெள்ளாவியிலே வச்சு வெளுத்து விட்டாப்பல்ல தெறிச்சு விழுந்தது இங்கிலீஸ்.

விவசாயிக் கூட பொங்கல் வைக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்து வில்லங்கமா எங்கிட்டோ மாட்டி விடப் பாக்குறானோன்னு கூட வந்த கில்லி பையனை நான் சந்தேகமாப் பாக்க...

"அண்ணே இது டூ தவுசண்ட் நாட் நாட் செவன்... இந்தியா வளருதுண்ணே... ஒரு இங்கிலாந்து விவசாயி இங்கீலிஸ் பேசுனா நீங்க இப்படி சந்தேகப் படுவீயளாண்ணே... ஏன் ஒரு அமெரிக்கா விவசாயி இங்கீலிஸ் பேசுனா இப்படி எதுல்லயோ மிதிச்ச மாதிரி ஓங்க முகம் மாறுமா... சொல்லுங்கண்ணே..."

இல்லன்னு நான் முகத்தை மூணு தடவை ஆட்டி தொங்க விட்ட பொறவு கில்லி பையன் மதன் கிட்ட முக்கா ரூவா போஸ்ட் கார்ட்ல்ல கேக்க வேண்டிய கேள்வியை எங்கிட்டக் கேட்டான்.

"ஒரு இந்திய அதுவும் திராவிட அதுவும் நம்ம தமிழ் விவசாயி இங்கீலிஸ் பேசுனாத் தப்பா? பதில் சொல்லுங்கண்ணே" ன்னு கவுண்டரிடம் செந்தில் அடம் பிடித்ததுப் போல் நம்ம கில்லி பையன் அடம் பிடித்தான்.

எனக்குப் பதில் தெரியல்ல.. அதுன்னாலே தலையை மேலும் கீழும் நடுவில்ல அப்படியே இடமும் வலமும் ஆட்டிட்டு அப்பாடான்னு கவுத்து வச்சேன். அப்படியே வரப்பு முடிஞ்ச இடத்துல்ல குருப்பா இளந்தாரிக நின்னு ஒரு மஞ்ச கலர்ல்ல ஓடாம ஓரமா நின்னுகிட்டு இருந்த டிராக்டர் முன்னால கரும்பு இரண்டைக் கட்டி விட்டு பின்னாலே பொங்கப் பானையை எல்லாம் பெயிண்ட அடிச்சு தொங்க விட்டுகிட்டு இருந்தாயங்க...

அங்கிட்டு டிராக்டர் பின்னாலே ஒருத்தன் லேசா மவுத் ஓரம் லீக்காக கையிலே இருந்தக் கரும்பை வளைச்சு வில் மாதிரி வச்சுகிட்டுப் போஸ் கொடுத்துகிட்டு நின்னான்.. அவன் இடுப்புல்ல ஒரு அரை கிலோ இஞ்சியை கட்டி வச்சிருந்தான் ஏன்னு யோசிச்சும் எனக்கு விளங்கல்ல...கூட வந்த கில்லி பையன் அவனைப் பார்த்து வில்லங்கமாச் சிரிச்சான்...

எது எப்படியோ வரப்போரம் வந்துட்டோம்..
இந்தா டிராக்டர் நிக்குது..
சுத்தி இளந்தரிங்க எல்லாம் வருத்தம் தொலைச்சு வாலிப முறுக்கோடு நிக்காயங்க...

நிச்சயமா இந்த வருசப் பொங்கல் விவசாயப் பொங்கல் தான்னு கண்ணு குளுந்துப் போச்சு

எதிரே அவ்வை சம்முகி படத்துல்ல கமலஹாசன் பாடுற வேலை.. வேலை.. காலையிலும் வேலை.. மாலையிலும் வேலை பாட்டைப் பாடிகிட்டே வந்து நம்ம மேலே இடிச்சவர்... தழலாக் கொதிச்சுட்டார்...

பாட்டு நல்ல பாட்டு.. அதுவும் நாட்டு மக்கள் சந்தோசப் படுற மாதிரி நல்லாவேக் கருத்தாப் பாடுறீயளேன்னு நான் பாராட்ட....

சீக்கிரம் ஓம்மக் கூட ஒரு கச்சேரி வச்சிருவோம்ய்யா தனிக்கச்சேரி செல்லாது கூட கச்சேரி பண்ண இந்த ரெஸ்யூம்ஸ்ல்ல இருந்து செலக்ட் பண்ணிட்டு கால் பண்னுங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் அதே வேலைப் பாட்டு பாடிகிட்டு நடந்தார்.

இது என்னக் கூத்து... ரெஸ்யூம் வாங்கறவருக்கும் விவசாயிக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு நான் மண்டைக் காஞ்சி நிக்குறேன்...

அப்பூ அது ரெஸ்யூம் அல்ல அதற்கான அழகானத் தமிழ் சொல் என்னன்னு சொல் பார்ப்போம்... அழகான பிள்ளை முகம்...

சாமின்னு நம்ம கில்லி பையன் பயந்து பம்ம..

சிறுவனே.. தமிழில் பேசினால் சாமியா.. இல்லையப்பா நானும் உன்னைப் போல் இறையாசி வேண்டி குன்றம் நோக்கி கைக்கூப்பும் ஆசாமி தானடா.. கேட்டாயா என் சொல் ஒரு சொல் என நம் பக்கம் பார்க்க.. என் கண்ல்ல கிட்டத் தட்ட கண்ணீர் பொங்கல்.

அவரும் அவர் பாட்டுக்கு புன்னகைச் சிந்திப் போக...

" நம்பர் 12 அப்படின்னு போட்ட டீ- ஷ்ர்ட் கீழே ஜீன் ஸ் பேண்ட் போட்டுகிட்டு படு ஸ்டைலா ஒருத்தர் மாடியிலே இருந்து இறங்கி ஓடி வந்தார்....

தாரை தப்பட்டை எல்லாம் முழங்க....
ஊர் நாட்டு மக்கள் எல்லாம் பொங்கி ஆர்பரிக்க....

"விவசாயி ... விவசாயி... கடவுள் என்னும் மொதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி.. விவசாயி..."ஸ்பீக்கர் அலற....

டேய் என்னடா நடக்குது இங்கே.. விவசாயிக் கூட பொங்கல்ன்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தே வந்துப் பார்த்தா விதம் விதமா மக்கள் என்ன என்னமோப் பேசிக்கிறாங்க... ஒண்ணும் புரியமாட்டேங்குது...சொல்லுடா...

"அண்ணே இவர் தாண்ணே விவசாயி... இவர் தமிழ் உலகின் பிரபல பதிவர்... அவருக்கு இன்னிக்குப் பொறந்த நாளும் கூட அதான் அவரோட சேர்ந்து நாமளும் பொங்கல் கொண்டாடலாம்ன்னு .. என் இழுத்தான்.

"அட பாவி...சரி சரி... இதுவும் நல்ல விஷயம் தான் வந்தது வந்தோம்.. விவசாயிக்கு உரக்கப் பொறந்த நாள் வாழ்த்தும் சொல்லிருவோமா...."

விசில் அடித்து உற்சாகமா பொங்கலோ பொங்கல்... மாட்டுக்கு பொங்கல்.. நம்ம விவசாயிக்கும் பர்த் டே பொங்கல்... அப்படின்னு நம்ம கில்லி பையன் பீட் கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

Wednesday, January 10, 2007

கொத்தனார் கொண்டாட்டம்

வணக்கம் மக்கா,

முக்கியச் செய்திகள் வாசிப்பது கச்சேரிகாரன்.

இன்று அதிகாலை நியூயார்க், வாஷிங்க்டன் உட்பட்ட முக்கிய அமெரிக்க நகரங்களிலும், லண்டன், பெர்லின், ஜுரிக், ரோம், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் முக்கிய வீதிகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும், தமிழ் நாட்டின் பெருநகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரையில் தமிழ் மணக்கும் பல இடங்களில் இந்த போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது....




போஸ்ட்டர் குறித்தச் செய்திகளை எமது சிறப்பு நிருபர் கில்லி பையன் அவ்வப்போது ஓசி செலபேசிகள் மூலம் நமக்கு அளித்தப் படி உள்ளார்.

வலையுலகில் மட்டுமின்றி இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடித்ததாய் சொல்லப்ப்டும் அனைத்து கிரகங்களிலும் இந்த போஸ்ட்ர்கள் தென்படுவதாய் அப்போலோ விண்கலப் பயணிகளும் தெரிவித்து உள்ளனர். நாசா விஞ்ஞானிகளும் சேட்டிலைட் புகைப்படங்களில் இந்த போஸ்ட்டர்கள் தென்படுவதாகக் கூறியுள்ளனர்.

போஸ்ட்டர்களின் பின்னணியில் பின்னூட்டப் புயல் என்றும் பின்னூட்ட நாயகன் என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் இலவ்சக்கொத்தனாரின் அண்டம் தழுவிய ரசிகர்கள் இருப்பதாய் தெரிய வந்துள்ளது என உலக உளவுப் படை தலைவர் போலீஸ்காரர் சிக் ஷாம்பு தெரிவித்தார்.

இந்தப் போஸ்ட்டர் தாங்கியச் செயதியை இன்னும் பல இடங்களில் வேறு உருவங்களிலும் காணலாம் என உளவுப் பிரிவு மூன்றாவது கண் பிரிவுத் தலைவர் நைட் ஈகிள் கூறியுள்ளார்.

சற்று முன் கிடைத்தச் செய்தி..
இன்றோடு வலைப் பதிய துவங்கி ஓராண்டு முடித்த நிலையில் கொத்தனாரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பெரும் திரளாய் அவர் வலையகம் சென்று முண்டியடித்த நிலையில் உள்ளனர். ஆனால் வழ்க்கமாய் வூடு கட்டுவது போல் இன்று வூடு கட்டாமல் அவர் அதிசயமாய் தன் அலுவலக வேலைப் பார்ப்பதாய் கிடைத்தச் செய்தியால் அவர் ரசிகர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இது பற்றிய சிறப்பு செய்திகளை அறிந்துக் கொள்ள தவறாது பின்னூட்ட பகுதியைக் க்ளிக்கிக் கொண்டிருங்கள்...
ஹேப்பி பிளாகிங் கொத்ஸ் :)))

Thursday, January 04, 2007

வெட்டிபயலும் ஒளவையாரும்....

வணக்கம் மக்கா,

வலையுலகில் பல வகையானப் பதிவுகள் வந்துப் பட்டயக் கிளப்பிகிட்டு இருக்கப்போ கதைகளுக்கானப் பதிவுகள் மிகவும் குறைவு...பெரும்பான்மையானப் பதிவர்களும் அவங்க அவ்ங்க பதிவுல்ல சிறுகதை முயற்சிகள் நிச்சயமாப் பண்ணியிருக்காங்க...ஆனா அதன் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளதுன்னு சொல்லலாம்...

கதைகள் படிக்க ஒரு சூழல் வேணும்.. முக்கால்வாசி பதிவுலக வாசகர்கள் பதிவுகளை அலுவலங்களிலும் அலுவலக நேரத்திலும் படிக்கிற காரணத்தால.. கதைகளுக்கான வாசகர்கள் மிகவும் குறைவோன்னு தோணுது...அலுவலக மனநிலைக்கு நகைச்சுவை மற்றும் செய்தி பதிவுகளே முக்கிய தீனிப் போடுபவைகளாய் அமைகின்றன...இப்படி இருக்க சூழல்ல ஒரு கதையைத் தொடராப் போட்டு அதையும் ரசிக்கும் படி செய்யணும்ன்னா.. கொஞ்சம் கஷ்ட்டம் தான்...

இப்படிப் பட்ட கதைகள் தொடர்களா எனக்குத் தெரிஞ்சு நான் ரசிச்சுப் படிச்ச முதல் தொடர் தளபதி சிபி எழுதிய 'அமானுஷ்ய ஆவி' தொடர் தான்... தலைப்புச் சொல்வது போல் கொஞ்சம் அமானுஷ்யமான தொடர் தான்.. அது ஆச்சு ஒரு வருஷத்துக்கு மேலே...
அதுக்கு அப்புறம் நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ எழுதி பதிவர்களிடம் பலத்த ஆதரவு பெற்ற காதல் பயணம் தொடர்.. மிகவும் அட்டகாசம்...

இந்த டைம்ல்ல கச்சிதமா வந்து தொடர்களுக்கான வாசகர் வட்டத்தை வசிகரிச்சவர் நம்ம வெட்டி பயல்...இவரது ஆரம்பக் கால பதிவுகளை நான் அவ்வளவா வாசிச்சது இல்ல.. பிரபல பத்திரிக்கையில் இவர் பதிவு வந்து இவர் கவனிக்கப்பட்ட நேரம் கூட இவர் பதிவுப் பக்கம் அதிகம் போனதில்லை... எதோ டெக் மண்டையன் என்னமோ எழுதுறான்னு இருந்துட்டேன்... இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது இவரது 'கொல்ட்டி' கதை தான்...

கதை எழுதணும்ங்கற ஆசையோட ஒரு பயலா... டெக் மண்டைன்னு நினைச்சா... கதைச் சொல்லி கலாயக்கற பார்ட்டியான்னு இவரது பதிவுகளை ஒரளவு ரசிக்க ஆரம்பித்தேன்...

வெட்டியோட 'கோழியின் அட்டகாசங்கள்' படிச்சிருக்கீங்களா....?? யம்மாடி நம்ம ஒவ்வொருத்தர் கல்வி வாழ்க்கையிலும் கண்டிப்பா ஒரு கோழியையோ.. வாத்தையோ... கட்டாயம் பாத்துருப்போம்.. ஏன் இன்னும் சொல்லப் போனா நாமேக் கூட அந்த கோழியா இருந்து இருப்போம்... நினைச்சு நினைச்சுச் சிரிக்க ஒரு பதிவு தொடர்...

'லிப்ட் ப்ளீஸ்' ன்னு ஒரு தொடர் அதுல்ல கதைச் சொல்லும் பாங்குல்ல ஒரு புதிய முறையைக் கடைப் பிடிச்சிருந்தார்.. அது அவ்வளவா வாசகர்களைச் சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்..

அதுக்கு அப்புறம் இப்போ சமீபத்துல்ல வெளிவந்த அவரது வெற்றி தொடர் நெல்லிக் காய்...
வெட்டியின் நெல்லிக்காய் ஒரு 30 வயதுக்கு உட்பட்ட வாசகர்களைக் கவரும் கதைன்னு சொல்லலாம்.... இன்னும் சொன்னால் நெல்லிக்காயின் தாக்கம் இருபதுகளின் ஆரம்பம் மத்தியில் இருக்கும் மக்களை வெகுவாக ஈர்த்தது எனச் சொல்லலாம்.

கதையின் மொத்தத்தை ஒரு வரியில் விவரிக்க வேண்டுமானால்... இரண்டு காதல்களின் ஆரம்பமும் முடிவும்... ஒரு காதல் ஆரம்பம் இனிமை... முடிவு கசக்கிறது.. இன்னொரு காதல் நெல்லிக்காய் காதல்... காதல் கதை வாசகர்களை இழுக்கும் அதில் சந்தேகமில்லை.. கதையைப் படிக்க வரும் வாசகனை வசிகரிக்க வேண்டும்...வெட்டி இதில் கெட்டி..

கதையை எழுதப் போகும் போது இதை எல்லாரும் படிக்கணும்ன்னு படைப்பாளி நினைப்பது இயல்பு தான்.. நம்ம வெட்டியும் நினைச்சு இருப்பார்.. ஆனா கதை ஆரம்பித்த ஒரிரு பாகங்களில் தன்னுடைய வாசகர் வட்டம் இன்னார் என்பதை உணர்ந்த வெட்டி கதையின் போக்கை வாசகர்களின் விருப்பத் திசைகளில் செலுத்தத் துவங்கினார்....

அருண், தீபா, கார்த்தி, ராஜி.. .. நினைவில் எளிதில் நிற்கும் பழக்கப் பெயர்கள்...இந்த நால்வரை மட்டுமே மையப்படுத்தி கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று விட்டார் வெட்டி...

மோதலில் துவங்கும் அருண்-தீபா காதலுக்கு கிடைத்த வரவேற்பை ஏனோ வெட்டி இயல்பாய் மலர்ந்ததாய் சொல்லப்பட்ட ராஜி-கார்த்தி காதலுக்குப் பெற்று தரவில்லை...அதனால் அந்தக் காதல் தோற்கும் போது படித்தவர் மனத்தை அது பாதிக்கவில்லை...அருண்-தீபா காதலைப் பற்றி சொல்லும் போது உருகும் வெட்டி... கார்த்தி-ராஜி காதலைச் சொல்லும் போது அவ்வளவாக ஒட்டாமலே நிற்கிறார். அருண்-தீபா காதல் வெட்டியின் உள்ளக் காதலா அருகினிலிருந்து உணர்ந்த காதலா என்ற சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது...இந்தக் காதல்கள் அரங்கேறி நடக்கும் களம் பல வாசகர்களுக்கும் பழக்கமான ஐ.டி.பணியிடம் என்பதால் அலுவலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் புதியவர்களை நெல்லிக் காய் நிரம்ப கவர்ந்து விட்டது. கதையின் போக்கினுடே சொல்லப் படும் சங்கதிகளில் ஒரு ஐ.டி. இளைஞனின் மேலோட்டமான பார்வையாய் வெட்டியின் வார்த்தைகள் வருகின்றன....

மிடில் ஏஜ் மக்கள் இந்தத் தொடரை எவ்வளவாய் ரசித்திருப்பார்கள் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை...ஆனால் வாழ்க்கையின் இந்த SWEET NOTHING DAYSஐ முடிந்த வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றார் வெட்டி என்றே சொல்லலாம்.

முடிவினில் எல்லாவற்றுக்கும் முடிச்சுப் போடும் தமிழ் சினிமா பார்மூலா படி திருமணம்... குடும்ப விருந்து... கதைப் பெயர் விளக்கம் என முடித்திருப்பது மசாலா டச்....

"குறைகள் இன்றி எந்தப் படைப்பும் வருவதில்லை... நிறைவான படைப்பு தந்து விட்டேன் என்று எந்த படைப்பாளியும் திருப்தி அடைந்ததில்லை...."

நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணிக் குடிச்சாச்சு.... இனிக்குது... இனிப்பு ஆறுசுவைகளில் ஒண்ணு மட்டுமே.. மத்தச் சுவைகளையும் பரிமாறுங்க...

ஆங்..தலைப்புல்ல டவுட்டா... விளக்கம் வேணுமா...... ஆகா..... நீங்களே புரிஞ்சுத் தெரிஞ்சு பிரகாசமாகுங்க மக்களே....

Friday, December 22, 2006

வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்

வணக்கம் மக்கா,

பெருந்தலைவர் காமராசரை எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்... அவரோட கதைய அப்பாச் சொல்லக் கேட்டு எனக்கும் அவரைப் பிடிச்சிப் போச்சு...

முக்கியமா அவர் கல்விக்காக செய்த பணிகள் கேட்டு அசந்துப் போயிருக்கேன்...

அதுவும்..

"வாங்கய்யா நாமப் புள்ளகளைப் படிக்க வைப்போம்ன்னு" தலைவர் ஒரு திட்டம் போட்டப்போ...

"அய்யா.... இது எல்லாம் ஆவுறதில்லன்னு மண்டையைச் செரிஞ்கிட்டு நின்ன அதிகார வட்டத்தைத்

தலைவர் "ஏன்ய்யா..? ஏன் ஆவாதுன்னு?" காரணம் கேப்பார்...

"அவ்வளவு பணம் நிதியிலே இல்லங்கய்யான்னு" பதிலை பம்மி காரணமாச் சொல்லுவாயங்க

"நீங்க எவ்வள்வு பணம் ஆகும்ண்ணு மட்டும் சொல்லுங்க, அதுக்கு வேண்டியதை நான் போய் பிச்சை எடுத்துட்டு வந்தாவதுத் தர்றேன்ம்பாரு.." தலைவர்

கூடவே அழுத்தமாச் சொல்லுவார்... "வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்ய்யா.. அவன் படிச்சப் படிப்பை வச்சு நாளைக்கு நாட்டை அவன் பாத்துக்குவான்னு... "

இந்தாங்க இங்கிட்டு நம்ம நண்பர் ரவி கல்விக்குன்னு நம்ம கிட்ட கையேந்தி நிக்குறார் ..

அள்ளிக் கொடுக்க முடிஞ்சவங்க அள்ளிக் கொடுங்க.. கிள்ளிக் கொடுக்க நினைக்கறவங்க கிள்ளிக் கொடுங்க...

பாவம் புள்ள படிச்சுட்டுத் தான் போகட்டுமே....என்ன மக்கா நான் சொல்லுறது..

Wednesday, December 06, 2006

தமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட்

வணக்கம் மக்கா,

அட அப்படி இப்படி திரும்பி பார்க்கறதுக்குள்ளே 2006 டிசம்பர் வந்துருச்சு.. வருஷம் முடியப் போகுது.. இந்த வருஷம் எப்படிடா இருந்துச்சுன்னு நமக்கு நாமே திரும்பி பார்த்துக்கறது ஒரு விதத்துல்ல நல்லது.. ஒரு வருஷமா நானும் பதிவுப் போட்டிருக்கேன்.. ப்ல பதிவைப் படிச்சுருக்கேன்.. அதைப் பத்தி பதிவு செய்யவே இந்த பதிவு.. இது நிச்சயமாய் ஒரு விம்ர்சனப் பதிவு அல்ல..

இந்த வருசம் நமக்குத் தெரிஞ்சு ஒரளவுக்கு குழு பதிவுகள் வரத் துவங்கி வெற்றிகரமாச் செயல்படவும் ஆரம்பிச்சு இருக்கு

குழு பதிவுகளில் இந்த வருடம் நான் ஆர்வமாப் படிச்ச பதிவுன்னா அது தேர்தல் 2006... தேர்தல் டைம்ல்ல பல்வேறு கருத்துக்கள், அலசல்கள், செய்திகள்ன்னு பின்னிட்டாங்க... அவங்க உள்ளாட்சி தேர்தல் போது கொஞ்சம் அமைதி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு பிலீங்...

அப்புறம் பார்த்தீங்கண்ணா திராவிட தமிழ்ர்கள்ன்னு ஒரு குழு... அது மேல ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு.. இன்னும் இருக்கு.. அவங்க எல்லாம் இன்னும் எழுச்சியாச் செயல்பட்டா நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறது என் தனிப்பட்ட எதிர்பார்ப்பு.

அடுத்து நம்ம சென்னப் பட்டிணம்ங்க.. என்னமா கலக்குறாங்க... ஏற்றமிகு தலைமை.. துடிப்பான உறுப்பினர்கள்.. நான் வளர்ந்து வாழும் சென்னை நகரத்தை மையமாக் கொண்டு பதிவுகள் வரும் இந்த் குழுப் பதிவு நமக்கு ரொம்ப பேவரீட்ங்க.. பதிவுலகைத் தாண்டியும் பதிவாளர்களை இவங்க ஒருங்கிணைக்கச் செய்யும் முயற்சிகள் எனக்கு ஆச்சரியம் தரும் விஷ்யம்.. சென்னைப் பட்டினம் இன்னும் கலக்கணும்...கண்டிப்பாப் பாராட்டியே ஆகணும்.

அடுத்து இப்போத் தான் வளந்து வரும நம்ம விக்கிபிடியாப் பசங்க...நல்ல ஐடியா.. பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒண்ணுக் கூடி நம்ம கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பியிருக்காங்க.. நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லி ஒரு பதிவை டக்குன்னு போட்டு இவங்களும் நம்ம நம்ம பேவரிட் லிஸ்ட்ல்ல சேந்துட்டாங்க

தமிழை நம்ம மரமண்டைக்கும் புரியற மாதிரி சொல் ஒரு சொல்ன்னு சொல்லிக் கொடுக்குறதும் குழு பதிவுன்னு எடுத்துக்கலாம் ஜி.ராவும் குமரனும் செய்யும் இந்த பணியும் நமக்கு ரொம்பப் புடிச்சு இருக்குங்க..

இயன்ற வரை இனிய தமிழில் எனக்கு வெண்பா வடிக்க சொல்லித் தர்றேன்னு வாக்கு கொடுத்த வெண்பா குழுவும் நான் ரசிச்ச இன்னொரு குழு பதிவு.. வெண்பா வாத்தி இப்போ மிஸ்ஸிங்... யாராவது பார்த்தாச் சொல்லுங்கப்பா

அப்புறம் க.பி.கன்னு ஒரு குழு பதிவு தமாஸ்க்கு தோரணம் கட்டி ஆரம்பிச்சாங்க... என்னத் தான் அதுல்ல உறுப்பினர் ஆக நமக்கு தகுதி இல்லன்னாலும் இதன் ஆரம்பக் கால பதிவுகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தன. இந்த பதிவு அமைதியாக போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே...

சிரிப்புக்கு மரியாதைக் கொடுக்கும் நம்ம வ.வா.சங்கமும் அப்படிப்பட்ட குழு பதிவுகளில் ஒண்ணுங்கறது எனக்குத் தனிப்பட்ட முறையில்ல ரொம்ப மகிழ்ச்சியைத் தருது..

சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2006ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2006இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்

Friday, August 04, 2006

உறவுகள் - தேன்கூடு போட்டிக்கு அல்ல

வணக்க்கம்ங்க.. போனத் தடவை நான் பின்னூட்டப் புயலாருக்குச் சொன்னக் கதையைக் கேட்டு மக்கள் கண்கலங்கி கண்டபடி பீலிங் ஆகி ராதிதிரி ரெண்டு மணிக்கெல்லாம் எஙக பக்கத்தூட்டு லேண்ட லைன் நம்பர் கண்டுபிடிச்சு போனைப் போட்டு என்னிய வர வைச்சு வாழ்த்து மழை பொழியற அளவுக்கு போயிடுச்சு.

தலைவர் ஆல்ப்ஸ் மலையிலே இன்னும் முழு ஓயவு முடியாத நிலையிலும்.... சங்கத்து மக்களின் அன்பு பிடியிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தவிக்கும் நிலையில் ஷூட்டீங் போவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது..

அந்தக் கேப்பில் அடுத்து என்ன செய்யலாம் எனத் தளபதியாரின் பதிவைப் படித்து விட்டு அட்டையாம் பட்டி பனமரத்தடியில் பதநீரில் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிய வண்ணம் நானும் நம்ம பாசக் கார அசோசிய்ட் சரவணனும் திங்க் பண்ணிகிட்டு இருக்கும் போது...

தட் டக் டக்ட்டகட் அப்படின்னு அந்த ஹய்டெக் ஹவேஸ்ல்ல சவுண்ட்...

"அண்ணே.. என்ன இங்கிட்டு? " அப்படின்னு சவுண்ட்.

கேட்ட கொரலா இருக்கேன்னு பத்நீரைப் படக்குன்னு குடிச்சுட்டு எழும்பிப் பார்த்தா அட நம்ம பாண்டி... பாண்டிக்கு பக்காத்துல்ல படா ஸ்டைலா கையிலே லாப் டாப் எல்லாம் வச்சுகிட்டு படு கிளாமரா ஒருத்தர் உக்காந்துகிட்டு இருக்கார்.

ஆரா இருக்கும் அந்த மச்சகார மன்னாருன்னு நம்ம மனசுக்குள்ளே திங்க் பண்ணும் போதே நம்ம மனச்சாட்சி டக்குன்னு பேசிருச்சு..
அட நம்ம சரவணன் தான்.. டபக்க்ன்னு..

"ஏனுங்கண்ணா.. அந்தப் பொட்டிக்குள்ளே இருந்து தலையை வெளியே எடுக்கவே மாட்டீங்களா.. ஆருண்ணா நீங்கன்னு" அலறலாய் கேட்டான்.

'தேவண்ணா உமக்கும் உம்ம கூட புதுசா இருக்க அஸ்க்கும் ( அதான் அசோசியேட்டாம்) ரொம்ப நக்கலாப் போச்சு... இது யார் தெரியுமா.... " ன்னு பாண்டி ஆரம்பிக்கவும் முன்னாடி அந்த ஸ்டைல் பார்ட்டி கையிலிருந்த லாப் டாப் மெகா சவுண்ட்ல்ல பாட ஆரம்பிச்சது..

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி.. விவசாயி.. விவசாயி...

டிராக்டரில் இருந்து டிராக் சூட் போட்டு குதித்த விவசாயி...
"ஹாய் கைஸ்... ஐயாம் விவசாயி..விவ்ன்னு கூப்பிடலாம்.. இல்ல வேளாண் தோழான்னு நீட்டி வாய் வலிக்க கூப்பிடலாம்.. இட்ஸ் யுவர் விஷ்" எனறார்..

"ஆகா விவசாயிங்கீரீங்கங்க.. ஆனா இப்படி மெகா ஸ்டைலா இருக்கீங்களே எப்படிண்ணா? " நம்ம சரா ஸ்லோவாக் கேட்டாப்பல்ல.

"ஹே விவசாயின்ன ஓடனே.. நீ என்னைத் தப்பா நினைச்சுட்டியா மேன்.. நான் பண்றது கார்ப்ரேட் விவசாயம்.."
"அப்படின்னா?"
" அது எல்லாம் உனக்கு இப்போச் சொல்ல முடியாதுப்பா..உன் பிரச்சனைக்கு வருவோம் இப்போ.."

" நம்ம விவ் அண்ணனுக்கு ஊரெல்லாம் கடலைக் காடு இருக்கு.. இப்போ உங்கக் கூட பேசணும்ன்னு சொன்னார்.. அதான் கூட்டிட்டு வந்தேன்.. நீங்க்ப் பேசற வரைக்கும் அண்ணன் அவிங்கக் கடலைக் காட்டைப் பூராவும் பாத்துக்கச் சொல்லி எனக்கு வேலைக் கொடுத்துருக்கார்"

அப்படின்னு சொல்லிட்டு பாண்டி கூலிங்கிளாஸ் எடுத்து மாட்டிகிட்டு டிராக்டரை ஓட்டிக்கிட்டு பறந்துட்டான்.

" அண்ணே.. அண்ணே.. கடலைக் காடு நான் கூட நல்லா பாத்துப்பேன்ண்ணே" எனப் பல்லைக் காட்டிய நம்ம பாசக்கார சராவைக் கெஞ்சிக் கதறி அடக்கிவிட்டு விவசாயியாரைப் பார்த்தேன்.

"ஆமா எங்களுக்கு என்னப் பிரச்சனை..?"

விவசாயி சிரித்தார். "தம்பிகளா... நீங்க பின்னூட்ட சூப்பர் ஸ்டாரை வச்சு படமெடுக்கக் கதைச் சொன்னவங்க தானே.."

"ஆமா.. ஆமா.." கோரஸாச் சொன்னோம்

"இப்போ அவர் படம் நடிக்கிற நிலைமையில்ல இல்லை.."

"ஆமா ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்"

'சீ..பேச்சைக் குறை... நான் சொல்லறதைக் கேளு.. படம் மட்டும் தான் எடுப்பீயா.. இல்ல சிரியல்ண்ணாலும் ஓ.கேவா?"

ஆகா எதோ ஒளி தெரியுதேன்னு நானும் தம்பி சராவும் கொத்ஸ் பதில் சொல்லற வரைக்கும் கிடைச்ச கேப்ல்ல இந்த விவசாயி ட்ராக்டர்ல்ல ஏறிட வேண்டியது தான்னு முடிவு பண்ணிகிட்டோம்.

"தம்பி பின்னூட்ட புயல் எல்லாம் வருசத்துக்கு ஒரு பதிவுப் போட்டாலும் நீ இரண்டு வருசத்துக்கு இருநூறு பதிவுப் போட்டுப் பாக்குற பின்னூட்டத்தை எல்லாம் அந்த ஒரு பதிவுல்லப் பாத்துருவார்.. சோ.. நீ நான் எடுக்கப் போற சீரியலுக்கு ஒரு நல்ல கதை இருந்தாச் சொல்லு கேட்போம். ஒரு இரண்டு எக்கரா நிலததை வித்தாவ்து உன்னிய மாதிரி திறமைக் காரனை முன்னுக்குக் கொண்டு வர்றதுன்னு இந்த விவசாயி முடிவு பண்ணிட்டானாப்பா"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" விவசாயியாரின் பாசததைக் கண்டு என் கண்ணுல்ல ஜலம் பொங்கி வழியுது. சரா ஒரு தம்பளர்ல்ல அந்தத் தண்ணியைப் பிடிச்சு வச்சுகிட்டான்னாப் பாருங்களேன்.

"அட என்ன கன்னு நீ.. சிரீய்ல்ல மத்தவங்க தான் அழுவோணும்.. நீ எல்லாம் அழுவக் கூடாது... உனக்கு பத்து நிமிசம் டைம் அதுக்குள்ளே நல்ல கதையாச் சொல்லுக் கேட்போம்"

"ஏங்கண்ணா.. என்ன மாதிரி கதை வேணும் உங்களுக்குன்னுச் சொன்னீங்கண்ணா சொல்லுவெனுங்க.."

" அடக் கன்னு தலைப்பைக் கேக்குறீயாக்கும்,.. ம்ம் அந்தா அந்த தேன்கூடு இருக்க மரம் தெரியுதா..?"

"நல்லாத் தெரியுதுங்கண்ணா"

"அந்த மரத்துக்கு கீழே எதோ போஸ்ட்டர் இருக்கு அது கண்ணுக்குத் தெரியுதா?"

"ஓ! என்னங்கண்ணா. நல்லாத் தானுங்கண்ணா தெரியுது"

"அதுல்ல என்ன எழுதியிருக்கு?"

உற்று பார்த்துவிட்டு "உறவுகள் அப்படின்னு எழுதியிருக்குண்ணா"

"நான் கன்னு சிறு வ்யசுல்லயே லண்டன் செர்மனி சப்பான்னு ஒலக விவ்சாயம் பாக்க போனதில்ல தமிழ் படிக்க நேரமில்லாமப் போச்சு கன்னு.. இப்போ எல்லாம் ஸ்பானீஷ்ல்ல எழுதி வச்சுத் தான் கன்னு தமிழ் படிக்கிறது..சரி கன்னு நீ அந்தத் தலைப்புல்லயே ஒரு கதை சொல்லு... இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம்.. ஆமா சொல்லிட்டேன்..."


"ஒரு அருமையானக் கதை இருக்குங்கண்ணா...வேளாண் தோழர் விவசாயி அளிக்கும் உறவுகள்..பேக்கிரவுண்டல்ல உறவுகள் உறவுகள் ஜில் ஜில்ன்னு உங்களுக்குப் பிடிச்சக் கன்னத்தில் முத்தமிட்டால் டியூன்ல்ல ஒரு பாட்டு போடுறோம்.. அஞ்சு நிமிசம் ஓடிப் போகுது..

விவசாயி லாப் டாப் திறந்து சாலிடேர் விளையாட ஆரம்பிக்கிறார்.

"தோட்டம் மாதிரி ஒரு வீடு.... அங்கேத் தான் கதை நடக்குது... ஆரம்பத்துல்ல அந்த் வீட்டுல்ல எல்லா ரூம்ல்லயும் எல்லாரும் சிரிக்கிறாங்க.. சிரிப்புச் சத்தமாக் கேக்குது.. மாறி மாறி சிரிக்கிறாஙக.. இப்படி ஒவ்வொரு ரூமா ஒரு 10 வாரம் காட்டுறோம்.. அப்புறம் சிரிக்கிறவங்களை தனி தனியா இன்னொரு பது வாரம் காட்டுறோம்... "

விவசாயியார் லாப் டாப்ல் இன்னும் மும்முரமாய் மூழ்குகிறார். சரா நோட் பேட் திறந்து அதில் நோட் பண்ணி கொள்கிறான்.

"இங்கே கதையிலே பெரும் டர்னிங் பாயிண்ட்... சிரிச்சவங்க சைலண்ட் ஆகி அப்படியே திரும்பி நிக்குறாங்க... ஒவ்வொருத்தராத் திரும்பறதை ஒரு 20 எபிசோட் காட்டுறோம்.. "
"தேவு ஸ்லோ மோஷ்ன் வைப்பா.." சரா எடுத்துக் கொடுக்க நாம் சராவின் மீது பாசம் கொண்டு கண் கலங்க...

"தேவு நோ சில்லி பிலீங்க்ஸ் கதைச் சொல்ல இன்னும் மூணு நிமிஷம் தான் பாக்கி கன்டினியூ" எனச் சரா கடமை உணர்வின் எல்லைக்கேப் போய் நிற்க நான் கொஞ்சம் பதறி விடுகிறேன்.

"ஆங் டர்னிங் பாயிண்ட் முடிஞ்ச ஓடனே... எல்லாரும் ஒரே குரல்ல ஓ அப்படின்னு அழுவுறாங்க..."

இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர்ல்ல தலையை விட்ட விவ் டக்கென்று தலையைத் தூக்கி ஆர்வமாய் நம்மைப் பார்க்கிறார். நமக்கும் சந்தோசம்.

"அவங்க ஏன் அழுவுறாங்க ஆடியன்ஸ் மத்தியிலே ஒரு பயங்கரக் கேள்வி இருக்கும்.. அது தான் கதை... அதுக்குப் பதில் தேடி அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு வீதியா அலைவாங்க... ஆமா அப்பா ஏன் அழுவுறாருன்னு அம்மாவும்.. அண்ணன் ஏன் அழுவுறார்ன்னு அண்ணியும்.. தங்கச்சி ஏன் அழுவுதுன்னு தம்பியும் ..லண்டன் , செர்மனி, சப்பான்னு நீங்க சிறு வயசுல்ல விவசாயம் பார்த்த எல்லா ஊர் வீதியிலும் அலையறாங்க... அழுவுறாங்க...."

சரா மெதுவா நம்ம கிட்ட "ஏய் தேவு.. ஆமா அடுத்த ரூம்ல்ல இருக்கவன் அழுவுறதைக் கேட்க கடல் தாண்டி அலையறதுக்கு என்னய்யா சம்பந்தம் இருக்கு.."

"அந்த ஊரு எல்லாம் நான் மேப்ல்ல கூடச் சரியாப் பாத்தது இல்லப்பா.. இப்படி கதைச் சொல்லி கிளம்புனாத் தான் உண்டு.. உன்னியும் கூட்டிட்டுத் தான் போவேன்.. அதுனால கம்முன்னு கதை கேளு"

விவசாயி மிகவும் ரசித்துக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.

"இப்படி ஒரு அழுகையால பிரிஞ்ச உறவுகள் ஒரு கட்டத்துல்ல அமெரிக்காவில்ல சந்திக்கறாங்க.. அதுக்கு முன்னாடி அவங்க எப்படி அமெரிக்காவுக்கு வந்துச் சேர ஓலகமெல்லாம் இருக்க நாடுகளை எப்படி எல்லாம் சுத்தி சுத்திக் கஷ்ட்டப்படுறாங்க அப்படிங்கறதை தமிழ் மக்கள் கண்ணீர் வெள்ளத்துல்ல நீந்துற மாதிரி சொல்லப் போறோம்ங்கண்ணா"

"உறவுகளின் மகத்துவம் யாரும் இப்படி சொல்லியிருக்கவே முடியாதுண்ணா"
கதைச் சொல்லும் நேரம் முடிய ஆவலாய் விவசாயியை நாம் பார்க்க... அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து வரப்பினில் ஓடத்துவங்கியது... ஆகா கதைச் சொல்லி விவ்சாயம் பண்ணிப்புட்டோம்யான்னு நானும் சராவும் ஆனந்தத்தில் ஆடிப் போய் நின்றோம்ய்யா.

"கதையைப் பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லீங்களேன்னு நாம் இழுக்க...
"என்ன கன்னு என் கண் கலங்கிப் போயிருச்சு.. இன்னும் நான் என்னத்தச் சொல்ல..."

"அப்போ கதைக்குத் தேவையானப் புள்ளங்க செலக்ஷன் ஆரம்பிச்சுரலாமா?" அப்படின்னு கேட்டக் கொரலு வந்தத் திசையைப் பார்த்தால்... அட நீங்க நினைச்ச அவரேத் தான்.

"ஆங் அதெல்லாம் நம்ம ஊரு புள்ளங்களையே சொல்லிரலாம்... நான் பாத்துக்குறேன்..."
"அட்வான் ஸ் கொடுத்தா.. நல்லாயிருக்கும்.." நாம் மண்டையைச் சொறிய...
"அட கன்னு நான் என்னச் சொன்னேன்?"ரெண்டு எக்காரக் கதையை மறந்துட்டியா...?"

"அட ஆமாங்க..."
"எப்படி மறக்கலாம்.. அதைய வச்சுத் தானே உம் பொழப்பே நடக்கணும்"

"ஆமாங்க.. அந்த ரெண்டு எக்காரா நிலம் எங்கிங்க இருக்கு?"

"அட அது யாருக்குப்பாத் தெரியும் அவருக்கு மட்டும் தானே தெரியும்?"
"என்னது அவரா என்னங்கச் சொல்லுறீங?"

" ஆமா தம்பி அரசாங்கம் ஆளுக்கு ரெண்டு எக்கார நிலம் தர்றேஏனு சொல்லியிருக்கு.. கொடுத்த ஓடனே அதை வித்து எப்படியும் நாம் சீரியல் எடுக்கிறோம்.. எடுத்து சன் டி.வியிலே விடுறோம்"

"ஸ்ப்ப்ப்பாஆஆஆஆஆ" நானும் நம்ம அஸோசி சராவும் மயக்கமாகுறதுக்கு முன்னாடி கொடுத்த மெல்லிசைத் தான் இது.

டிஸ்கி: இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.. இவர் வேற எனபதைத் திட்டமும் தெளிவுமாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதிவும் கற்பனையே.. கற்பனை மட்டுமே....மீண்டும் சந்திப்போம் அது வரை ஹேப்பி வீக் என்ட் மக்கா..

tamil10