Monday, June 22, 2009

விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல

நேத்து வரைக்கும் டிசம்பர் 12....இப்போல்ல இருந்து ஜூன் 22....

உங்களை எல்லாம் பாத்தா எங்களுக்குப் பாவமா இருக்கு....எதோ ஒரு பழைய துணியை வச்சு ஆட்டோவைத் தொடைச்சிட்டிருந்த ஆட்டோக்கார அண்ணாச்சி புதுசா ஆட்டோ வாங்குன மதுரைக் கார பயலைப் பாத்து சிரிச்சுட்டேச் சொன்னார்...

ஏனுங்கண்ணா....நானும் ஆட்டோ நீங்களும் ஆட்டோ... அப்புறம் என்னங்கண்ணா என்ன பாவம்ங்கறீங்க....மதுரைக்கார தம்பி பேட் பிடிக்கிற சச்சின் மாதிரி சிடுவெனக் கேட்டான்...

புது கொடி....ஆட்டோல்ல பொறந்த நாள் போஸ்ட் ஸ்டிக்கர்...மாலை...பாட்டு..சத்தியமா உங்களை எல்லாம் பாத்தாப் பாவமாத் தான் இருக்கு...

அருணாச்சலம் அண்ணே... இன்னிக்கு பொறந்த நாள் விழா இருக்கு... செம சுதியில்ல இருக்கோம்....வேணும்ன்னா பாருங்க.....இந்த ஆட்டோ எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.....அப்புறம்...கால்டாக்சி....அப்படி இப்படின்னு கலெக்ஷன் அள்ளிருவோம்ல்ல....அடுத்த ஜூன் 22ல்ல கட்சி...அதுக்கு அடுத்த ஜூன் 22ல்ல ஆட்சி...

சேம் டயலாக்.... ஆனா தேதி தான் வேற அந்த தேதி டிசம்பர் 12....இந்த தேதி ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....

அடப் போங்க அண்ணே...உங்க கிட்டப் பேசி நேரம் தான் வீணாவுது....மதுரை தம்பி ஆட்டோவில்ல கொடி பறக்க ( உன்னால் முடியும் அப்படின்னு கொடியில்ல எழுதியிருக்கு..) கில்லியா கிளம்பி....வில்லு கணக்கா சீறி போறான்...

நம்ம அருணாச்சலம் அண்ணன்...வண்டியைத் துடைச்சு துணியை புழிஞ்சு...வண்டி மேலே துணியைக் காயப் போடுறார்.... அந்த துணி பாத்த எதோ கொடி மாதிரி இருக்கு.....நீலம்...சிவப்பு... நடுவுல்ல ஸ்டார்.....நம்ம திருமா கொடியா....திருமா கொடியிலே ஸ்டார்குள்ளே உருவம் இருக்காதே...ஆனா இதுல்ல இருக்கே...உருவம் சிதைஞ்சுப் போய் சரியாத் தெரியல்ல...

அருணாச்சலம் அண்ணன்...ரேடியோவை போடுகிறார்.... எனக்கு ஒரு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்.,.அட டாங்கு டக்கர டக்கர டக்கர டாங்... அப்படின்னு சூப்பர் ஸ்டார் பாட்டு ஓடுது.....அண்ணன் பெருமூச்சு விட்டுகிட்டே...மதுரை தம்பி போன ரூட்டை வெறிக்கிறார்..

அவார்ட் அவதாரம்....

நடிகர் சங்கம் போய் ரிஜிஸ்டர் பண்ணி சரியா மூணு மாசம் சந்தா கட்டுனா...கலைமாமணி அவார்ட் வீட்டுக்கே வந்துருமாமே அப்படியா..... எனக்குத் தெரிஞ்ச ஒரு நடிகர் சங்க புள்ளி கிட்ட கேட்டு அசிங்கமாத் திட்டு வாங்குனேன் ஒரு வாட்டி..அப்புறம் இந்த அவார்ட் பத்தி எல்லாம் அதிகம் டவுட்டு கேக்கறது இல்ல...ஆனாப் பாருங்க...இந்த வாரம் விஜய் அவார்ட் எல்லாம் பாத்து ஒரே டவுட் தான் போங்க...கிட்டத்தட்ட எல்லா விருதையும் கமலுக்கே கொடுத்தாங்க....அது சரி...அவர் ஒரு நல்ல நடிகர்.... நல்ல கலைஞர்... சகல கலா வல்லவர்....ஒத்துக்குறோம்....நல்லாத் தான் செஞ்சுக்காங்க அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைன்னு நினைக்கும் போது தான் டவுட் வந்துச்சு... விருதைக் கமலுக்கு கொடுத்தது நம்ம இளைய தளபதி ....ஒரு வேளை விஜய் டிவி கமலை வச்சு காமெடி கீமெடி பண்ணிட்டாங்களோ....

கமல் மட்டும் காமெடியில்ல கம்மியா என்ன.... எனக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புடிக்கும்ன்னா என் கம்பெனியில்ல நடிக்க வைக்கற அளவுக்கு பிடிக்கும்ன்னு காமெடியில்ல பின்னிட்டார்...ஆமா ராஜ் கமல் பிலிம்ஸ்ல்ல தளபதி நடிச்சா ஹீரோ வேசம் தானே கொடுப்பாங்க... இல்ல அதுல்லயும் எதாவது கோக்கு மாக்கு இருக்குமா... ஒரே டவுட்டாப் போச்சு..

ராஜபக்சே டீமை சர்தாரி டீம் ஜெயிச்சுருச்சு..மன்மோகன் டீம் அடியோடு திரும்புச்சு...

இந்த வாட்டி உலக கோப்பையை பாத்த பாவத்துக்கு இந்தக் கோப்பையை நிரப்ப வேண்டியதாப் போச்சுன்னு ரெசசன்ல்லயும் கடன் வாங்கி கவலையைத் தொலைத்த நண்பனின் புலம்பல் இது...

வழக்கமா நம்ம ஆளுங்க வெளியூர் போய் விளையாடி கேவலப்பட்டு அடிவாங்கிட்டு ஊருக்கு வருவாங்க... இந்த வாட்டி போகும் போதே அவன் அவனுக்கு செம அடியாம்ல்ல..சேவாக் பட்ட அடியை தன்னோடு வச்சிக்கலாம்ன்னு நினைச்சிருக்கார்... படுபாவி கேரி கேர்ஸ்டன் கண்டுபிடிச்சு நாட்டுக்கே சொல்லிட்டார்... ஜாகிர்..தோணி....இன்னும் இரண்டு பேர்... போர்ட் கிட்டச் சொல்லியும்..போர்ட் போய் அடிவாங்கிட்டு வந்தா என்ன... அடிவாங்கிட்டே போனா என்ன...அதாவது நம்ம வினுசக்கரவர்த்தி சொல்லுறாப்புல்ல போத்திகிட்டு படுத்தா என்ன...படுத்துகிட்டுப் போத்துன்னா என்னன்னு நினைச்சு அனுப்பிட்டாங்க போல....

ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக.... சர்தாரி டீம் சக்கப் போடு போட்டு சவுண்டா கப் அடிச்சுட்டுப் போயிட்டாங்க...

யப்பா சர்தாரி மக்கா... கப் குண்டு அடி படாம பாத்துக்கங்கப்பு...அடுத்த வருசமும் அதே கப் தான் வச்சு விளையாடணும்

படிச்சதுல்ல பிடிச்சது
கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கட்டுமே...

என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது

தபூசங்கர்...

Thursday, June 18, 2009

டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1

மதர்ஸ் டே கொண்டாட்டம் கொஞ்ச வருசத்துக்கு முந்தி தான் ஆரம்பிச்சதா நினைப்பிலிருக்கு...ஆனா மேலை நாடுகளில் எல்லாம் அதெல்லாம் பல காலமாய் இருக்கும் சமாச்சாரமாம்..இப்போ தந்தைகுலங்களுக்கும் ஒரு நாள் இருக்குன்னு தெரிய வ்ந்துருக்கு... இந்த வருசம் வட இந்திய இணையங்கள் எல்லாவற்றிலும் வாரணம் ஆயிரம் பீலிங்க்ஸா நிறைஞ்சு கிடக்கு....

எங்கு பார்த்தாலும் டேடி டேடி தான்.....

தமிழ் திரையுலகமும் தவமாய் தவமிருந்து... அபியும் நானும்..அப்படின்னு சமீபக் காலமாய் தந்தையர்களுக்கு தன்னாலே ஆன மரியாதையைக் கொடுத்து விட்டது...

தமிழ் பதிவுலகம் மட்டும் சும்மா இருந்தா எப்படி.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த டேடிகளைப் போற்றி நாமளும் டேடிஸ் டே கொண்டாடலாம் வாங்க...
2016ல்ல நான் தான் டேடி நம்பர்.. அது வரைக்கும் தாடி நம்பர் 1...
இவர் டேடி நம்பர் 1 ஆகணும்ன்னு நம்மளை தெரு கோடியிலே நம்பர் 1 போக வெச்சுருவாரு போல இருக்கே...


இந்த டேடியை அடிச்சுக்க யாரும் இல்லங்கோவ்.... இவர் தான் உலகத் தமிழ் டேடிகளில்.....
.
.
.
.
டேடி நம்பர் 1 ......
.
.
.
.
.
.
.


ஓ.கே.. இப்போ தமிழ் கூறும் நல் பதிவுலகத்து பதிவர்களே வாசகர்களே... எல்லாரும் அவங்க அவங்க டேடிகளை வணங்கி வாழ்த்தி இனிதே டேடிஸ் டே கொண்டாடுங்க....
HAPPY DADDY's DAY!!!!!!

Sunday, June 14, 2009

வீக் என்ட் டைம் பாஸ்

வருங்கால முதல்வர்(கள்) சினிமா

தோரணை தமிழ் சினிமா ரசிகனோட சொரணைக்கு இன்னொரு சவாலாம்... படம் பாத்தவங்க எல்லாம் பேசிக்குறாங்க..மாஸ் ஹீரோக்கள்..மன்னிக்கணும் வருங்கால ஜார்ஜ் கோட்டை கோமகன்கள் ( இதுக்கு தானே ஆசைப்படுறீங்க அழகேசர்களா) நடிச்ச படங்கள் எல்லாம் மொத்தமா மாவு கட்டு போட்டுகிட்டு படுத்த நிலையிலே...( அயன் விதி விலக்கு சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்ட்ல்ல இல்லங்கறது என் கருத்து) யதார்த்த படங்கள் பட்டயைக் கிளப்புது பாக்ஸ் ஆபிஸ்ல்ல...இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க ...இது எல்லாம் கோட்டைக்கு ரூட் போடாத படங்கள்...நல்லாவே இருந்துச்சு.... இந்த வருசம் தேர்தல்ன்னு மெகா படம் சம்மர் முழுக்க மெகா ரிலீஸ் ஆனதல்ல மக்கள் நம்ம கோடம்பாக்கத்து தளபதிகளைக் கவுத்துட்டாங்களோ என்னவோ....எப்படியும் நம்ம தளபதிகள் மனம் தளராமல் திரும்பி வருவாங்கங்கறது என் நம்பிக்கை.... நம்மளும் அவங்களை எல்லாம் கை விட்டுருவோமா என்ன....சோ ஆல் தளபதிஸ் கீப் கன்டினியூங்...

மோசர் பேர் டிவிடி

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விசயம்... எக்கச்சக்கப் படங்கள் சல்லிசான விலையில்ல..தரமான பிரிண்ட் வேற...பழைய கருப்பு வெள்ளை காலத்துல்ல இருந்து தற்கால சுப்ரமண்யபுரம் வரைக்கும் அப்டேட் ஆகியிருக்கு இவங்க மூவி டேட்டா பேஸ்...தமிழனுக்கு.. சினிமாவும் கிரிக்கெட்டும் இரு பெரும் மதங்கள்..ஒரு சிலருக்கு ரஜினி டெண்டுல்கர் குலசாமின்னா... இன்னும் சிலருக்கு தோணி...அஜித் குலசாமி... இப்படி குல சாமிகள் பல... மோசர் பேருக்கு இந்த வெவரம் நல்லாத் தெரிஞ்சு இருப்பதால் தான்.. நம்ம தெரு முனை அண்ணாச்சி கடையிலே கூட டிவிடி வியாபாரம் ஆரம்பிச்சு இருக்காங்க....ஓடுதாண்ணு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.. ஆனா இது ஒரு நல்ல முயற்சி... இந்த வாரம் பொட்டிக் கடையிலே நமக்கு சிக்குன இரண்டு படம் கலைஞரின் பராசக்தி...இன்னொன்ணு பாலசந்தரின் பாமா விஜயம்...

இந்த வார டிவிடி வாட்ச்

கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம்...நம்ம கமல் பார்த்த முதல் நாளாய்ன்னு வே.விளையாடுல்ல உருகுவாரே அதே பொண்ணு தான்...இதுல்ல நாயகி...கதைன்னு சொல்லணும்ன்னா...வெள்ளைக்காரன் எடுத்த டைட்டானிக்கை கொஞ்சம் நம்ம ஊர் மசாலாப் போட்டு பக்குவமா பரிமாறுன்னா என்னக் கிடைக்குமோ அதான் கதை...கோதாவரி நதியிலே ஒரு படகு பயணத்துல்ல நடக்குற சுவாரஸ்யமான சம்பவங்களை மெல்லிய காதல் சேர்த்து ரசிக்கும் படி சொல்லியிருக்கார் இயக்குனர் சேகர் கம்முலா...இந்த இயக்குனர் ஒரு முன்னாள் சாப்ட்வேர் பார்ட்டி... இப்போ படம் எடுக்கப் போயிட்டதால ரெசசன்ல்ல இருந்து எஸ்கேப் ஆயிட்டார்...வீக் என்ட் மதியத்தை மனசுக்குப் புடிச்சவங்களைப் பக்கத்துல்ல வச்சுகிட்டே பார்த்தா...மாலை பொழுதில் ரொமான் ஸ்க்கு வாய்ப்பு உண்டு என ஜோசியம் தெரியாத மணவாடு நண்பன் ஒருத்தன் சொன்னான்..சேகர் கமுலாவின் ஆனந்த....ஹேப்பி டேஸ் ..போன்ற படங்களும் காதல் மனம் கொண்டவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்பதைக் கொசுறாச் சொல்லிக்கிறேன்..

மில்லியன் டாலர் கேள்வி...

பெரிய பிரதருக்கு தென் தமிழ்நாடு...அப்புறம் தில்லின்னு ஷேர் கொடுத்தாச்சு... அடுத்த பிரதருக்கு தமிழ்நாட்டையே கொடுத்தாச்சு...சிஸ்டருக்கு கூட தில்லியிலே ஒரு ஷேரா ராஜ்யசபையிலே இடம் கொடுத்தாச்சு... பேரனுக்கு கூட அமைச்சர்ன்னு அந்தஸ்து கொடுத்தாச்சு...

இதெல்லா இருக்க..இவங்க வீட்டுல்ல இன்னொரு லிட்டில் பிரதர் இருக்காராமே..பல பேருக்கு அவரை அதிகமாத் தெரியாது...ஆனாலும் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்வே நல்லவரு போல இருக்கு...

டாடி டாடி அவனுக்கு அது கொடுத்த...இவனுக்கு இது கொடுத்த...அவளுக்கு அது கொடுத்த...எனக்கு என்னக் கொடுப்பன்னு கேக்கவே இல்லையா....இல்ல கேட்டது நமக்கு தெரியல்லயா... இதுவே மில்லியன் டாலர் கேள்வி..

படிச்சதுல்ல பிடிச்சது..

நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்
வெற்றி என்பது யாதெனின்.. ஒரு கையெழுத்து ஆட்டோகிராபாக மாறுவதே...

Sunday, June 07, 2009

ARCHIE+VERONICA-BETTY


ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...

அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...

ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்

கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...


இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...

முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...

ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..

அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...

எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..

சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...

இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...

ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..

ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...

ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...

சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல


HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA... BETTY MAY U GET THE RIGHT GUY...

வீக் என்ட் கச்சேரி

போடா போடீ

முன்னாடி திருடா திருடின்னு ஒரு படம் வந்துச்சு... மன்மத ராசான்னு தனுசூம் சாயா சிங்கும் மதயானை ஆட்டம் போட்டு தமிழ்நாடே அதிரி புதிரி ஆச்சு...அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்....இப்போ அதே மாதிரி ஒரு பாட்டு எப்.எம்ல்ல எல்லாம் அதிருது....எக்ஸ்.க்யூஸ்.மீ மிஸ்டர்.கந்தசாமி....பாட்டு...சுசி கணேசன்...டி.எஸ்.பி (தேவி சிரி பிரசாத்)...சீயான் விக்ரம்..கூட்டணியில் கந்தசாமி பாட்டு எல்லாம் ஹாட் யூத் பீட்... அதுல்லயும் சுச்சி வாய்ஸ் செம குறும்ம்ம்ம்ம்புங்கோ... கொஞ்சம் நாளுக்கு செல்லுக்கு எல்லாம் புது ரிங்டோன்...போடா போடீ தான்


அடுத்த தளபதி

ஒருத்தர் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் குறி வச்சிட்டு இருந்தார்...சூப்பர் அடுத்த புரட்சித் தலைவர்ன்னு அவர் மன்ற கண்மணிகள் கணக்கு பண்ணிட்டு இருந்தாங்க...அந்தக் கணக்கு ஆகாயம் பார்த்து விரல் போடும் கணக்காப் போனதுல்ல..கோடம்பாக்கத்து தளபதி சூ.ஸ்.பதவியை பை பாஸ் பண்ணிட்டு நேரா புன்னா தான்னா பதவிக்கு சமீபக் காலப் படங்களில் ரூட் போட்டது நாட்டுக்கே நல்லாத் தெரியும்..இந்தக் கேப்புல்ல புதுசா கிளம்புன மணவாடு தளபதி..பழைய ( ஆனா இளசு தான்) தளபதி சீட்டைத் துண்டு போட்டு பிடிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சாட்டார் எல்லா விஷயத்துல்லயும் (!!!!????) எதுல்ல எட்டிப் பிடிச்சாரோ இல்லையோ அவரை மாதிரி தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்

டிவிடி ரெய்டு...

இந்த வாரம் டென்சல் வாஷிங்டன் நடிச்ச மேன் ஆன் பயர் படம் பாத்தேன்...ஒரு பழைய கொலைகாரன்.. தற்காலக் குடிகாரன்..ஒரு சிறுமியைக் காக்கும் மெய்காப்பாளனாய் வேலைக்குச் சேர்கிறான்..எதிலும் ஒட்டு இன்றி உறவுமின்றி இருக்கும் அவன் அந்த சிறுமியின் அன்பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வதற்கான ஒரு காரணம் கண்டுகொள்கிறான்..அந்த நிலையில் சிறுமி கடத்தப் படுகிறாள்...கொல்லப்பட்டதாய் தகவல் வருகிறது...அதற்கு பின் பழிவாங்கும் படலத்தில் டென்சல் ருத்ர தாண்டவம் ஆடுவது தான் மிச்சக் கதை.... சும்மா சொல்லக் கூடாது மனுசன் பிச்சி உதறி இருககார்..அந்த சிறுமியின் நடிப்பும் அசத்தல்...

ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லுறவங்க இதே படத்தோட அசத்தல் !!!??? இந்தி மற்றும் தமிழ் ரீமேக்களைப் பார்த்து நொந்துக் கொள்ளலாம்....(இந்தியில் அமிதாப் நடித்த அஜ்னபி.....தமிழில் அர்ஜூன் நடித்த ஆணை...)

படிச்சது....

பொறுமையா பைபிளைப் புரட்டுனப்போ கண்ணுல்ல பட்ட கருத்து...
நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள்

Thursday, June 04, 2009

கலைஞர் - யார்?


முதல்ல முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு 86ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இந்த மனிதரைப் போல் போராட்டங்களின் சாலைகளையோ...சோதனைகளின் வேதனைகளையோ..ஆட்சி அதிகார சாதனைகளையோ...ஒரு வாழ்க்கையில் கண்டவர்கள் மிகவும் சொற்பமானவரே...

பாராட்டு மழையில் எவ்வளவு நனைந்திருக்கிறாரோ அதே அளவு விமர்சன அம்புகளாலும் தாக்கப்பட்டிருக்கிறார்..

திருக்குவளை மைந்தனாக திராவிடம் பாசறை மாணாக்கனாக பெரியாரின் சீடனாக அறிஞர் அண்ணாவின் தம்பியாக பகுத்தறிவின் தீபமாக தன் வாழ்க்கையின் ஆரம்பத்தை நிறைத்தவர் கருணாநிதி...

தீந்தமிழை திரையில் எரிய விட்டு அந்த வெப்பத்தில் தமிழினத்தை உணர்வு கொள்ளச் செய்த திரைக்கதை ஆசான்..வசனச் சிற்பி மு.க.

இனப் போராளி..மொழி சூறாவளி....அடிமட்ட வர்க்கத்தின் கரகரப்பு குரலாக தமிழக அரசியல் அடி வானில் மெல்ல மெல்ல உதித்த உதய சூரியன்...தமிழ் தீவிரவாதி என தில்லியை கிலி கொள்ளச் செய்த தென்னாட்டு தமிழ் முரசு....

ஒரு தலைமுறை தமிழர்களின் இன முகவரிக்கு சொந்தக் காரர் கருணாநிதி என்றால் மிகையாகாது...

அண்ணனுக்குப் பின் ஆட்சி அதிகாரம் எனக் கைப்பற்ற தன் மதி செலுத்திய அரசியல் சாணக்கியர்..பகை பிளப்பதில் நுணக்கம் காட்டிய அரசியல் அறிஞன்...போராட்டப் பாதை விட்டு விலகி சமச் சீரோட்டப் பாதைக்குத் திரும்பிய புத்திசாலி...

முதலில் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்தார்..பின் திமுகவைத் தன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்பணித்தார்...

தலைமுறைகள் தாண்டியும் தேகம் தள்ளாடியும் சித்தம் தள்ளாடதவர்...கட்சி கொள்கை முழக்க ஒலிபெருக்கியாய் இருந்தது போய் கழகத் தலைவர் கொல்லைப் புறத்தை பெருக்கும் கருவியாய் மாற்றிய வித்தைக்காரர்...

முட்பாதைகளில் நடந்திருக்கிறார் ,,,உண்மை
நெருப்பாற்றில் நீந்தியிருக்கிறார்...உண்மை
கொடும் நாகங்களால் தீண்டப்பட்டிருக்கிறார்..உண்மை
கொடும் தடைகளைத் தாண்டியிருக்கிறார்..உண்மை

ஆனால் இந்த சுயமரியாதைக்காரர் இதை எல்லாம் செய்து எதை அடைந்திருக்கிறார்..எதை எல்லாம் இழந்திருக்கிறார்..எங்கு வந்து இருக்கிறார்...இதுவே மில்லியன் டாலர் கேள்வி...

இன்று கலைஞர் தலைவரா....அரசியல் வியாபாரியா....இல்லை தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை சரி வர நிறைவேற்றிய ஒரு அன்புள்ள அப்பாவா.....

என்னைக் கேட்டால் எல்லாமும் தான் என்று சொல்வேன்....எல்லாவற்றிலும் நிமிர்ந்து நின்றிருக்கிறார் கலைஞர்....ஆனால் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலும் ஒரு சேர நிமிர முடியாத போது மிகவும் தவித்தும் போயிருக்கிறார்...

தமிழகத்தின் இந்த மூத்தப் பெரியவர் தமிழனித்திற்காக சாதித்தும் இருக்கிறார்.. சோதித்தும் இருக்கிறார்.

சாதனைகள் முற்பகுதியிலும் சோதனைகள் பிற்பகுதியிலும் நிறைந்திருப்பதே உண்மையான தமிழ் ஆர்வலர்களின் வேதனை...

tamil10