Showing posts with label போட்டோ. Show all posts
Showing posts with label போட்டோ. Show all posts

Saturday, December 15, 2007

PIT போட்டி டிசம்பர் மாதம்

போட்டிக்கு இன்னிக்கு தானே லாஸ்ட் அலுவலக ஆப்புகளையும் மீறி களத்தில் குதிச்சு ஒரு உள்ளேன் அய்யா வைக்க வந்துட்டோம்ல்லா...

திண்டிவனம் ஓட்டிய பகுதியில் சாலைப் பயணத்தின் போது எடுத்தப் படம்.

ஆகாயச் சூரியனின் அப்சரஸ் காதலி இந்த மலர் தானோ...



ஒரு காதலி காத்திருக்காப் பாருங்க மேலே... இங்கே மொத்தக் காதலிகளும் பூத்திருக்க... சூரியனுக்கே வியர்த்திருக்கும் நிச்சயம் அப்படி எல்லாம் பீல் பண்ணி எடுத்தப் படம் இது..







தென்னம்பிள்ளைப் பூத்திருக்கு... நம்ம கேமராவுக்கு அதுவும் புடிச்சிருக்கு



தரையில் தவழும் ரோசாப்பூக்கள்


Monday, November 05, 2007

PIT நவம்பர் மாதப் புகைப் படப் போட்டி

மக்களே இது நம்ம முதல் முயற்சி இந்த போட்டா புடிக்கிற போட்டியிலே.. இன்னும் எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம்ன்னு தெரியல்ல.. உங்க ஆலோசனையைக் கொடுங்க...

எந்தப் படமும் தேறாதுன்னா அதையும் சொல்லுங்க.... ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு இந்தப் படங்களையும் உங்களைப் பாக்கும் படி கேட்டுக்குறேன்... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பார்த்துக் கருத்துச் சொல்லுங்க... ஒரு எதிர்கால கேமராக் கலைஞன் உருவாகறது உங்க கையிலேத் தான் இருக்கு :-)



போட்டிக்கானப் புகைப்படம் - 1


கர்நாடக மாநிலம் ஹசன் தாண்டி சிக்மகளூர் செல்லும் நெடுஞ்சாலையில் எடுத்தப் படம்.



போட்டிக்கானப் புகைப் படம் - 2




திருநெல்வேலி மாவட்டடம் களக்காட்டில் எடுத்தப் புகைப்படம்

சாலை ஒன்று...தேசம் இரண்டு...



2006 ஆம் ஆண்டு வட இந்தியப் பயணத்தின் போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் எடுத்தப் புகைப்ப்டம்



வானமும் வீதியும் இணையுது பாருங்க


தில்லி நகரத்து ராஜவீதியில் எடுத்தப் புகைப்படம்


தலைநகரத்து வீதியினிலே




வீதியில் விளையாட வரும் சூரியன்


குடியரசுத் தலைவர் மாளிகை அருகே எடுக்கப்பட்ட படம்



மேலே இருந்துப் பார்த்தாச் சும்மா அதிருதுல்ல


தென்மலை.. நம்ம குற்றாலத்துல்ல இருந்து செங்கோட்டைத் தாண்டிப் போனா இந்த இடம் வரும்.செல்போனில் க்ளிக்கிய படம்

tamil10