Friday, September 02, 2011

மங்காத்தா வாரம்

வார இறுதியிலே வரும் விடுமுறை வார நடுவில்ல கேட்க வேணுமா கொண்டாட்டத்துக்கு...கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு பாடாத குறை தான்.. வெள்ளியும் முடிஞ்சது இன்னும் இரண்டு நாள் போனஸா லீவு கிடைச்சுருச்சு அமெரிக்காவுல்ல லாங்க் வீக் என்டாம்..

மொத்தத்துல்ல இந்த வாரம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தலயோட மங்காத்தா வாரம் ரொம்ப நாளுக்கு அப்புறம் தல படம் அதுவும் 50வது படம் எக்கச்சக்கத்துக்கு எதிர்பார்ப்பு தொடர்ந்து பெரிசா சொல்லிக்குற மாதிரி படங்கள் எதுவும் இல்ல...போன படம் அசல் கூட அம்பேல் தான்..கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரசிகர் மன்றமே வேணாம்ன்னு அறிவிப்பு

50வது படத்துல்ல ஆரவாரம் இல்லாம நரைச்ச தலை இயற்கையான தொப்பைன்னு அவதாரம் துணைக்கு எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இன்னொரு முக்கிய நட்சத்திரம் வேற... ஆபிஸ் ஸ்கூல் டிவி ரேடியோவீடு பிளாகர் பேஸ் புக டுவிட்டர்ன்னு எந்த பக்கம் பாத்தாலும் விளையாடு மங்கத்தா தான்..தல ஜெயிக்கணும்ன்னு தமிழ் நாடே விரும்புர மாதிரி ஒரு சூழ்நிலை தான் கிட்டத்தட்ட

சோறு தண்ணி கூட இல்லாத பூமியிலே தமிழன் வாழ்ந்தாலும் வாழ்ந்திருவான்..சினிமா தியேட்டர் இல்லாத ஊரோ திருட்டு டிவிடி கிடைக்காத இடத்துல்லயோ இருந்தா அவ்வோள தான் செத்தே போயிருவான்...அபிமான நடிகர்கள் நடிக்கும் படங்கள் வரும் போதெல்லாம் அவனுக்கு திருவிழா...சில திருவிழாக்கள் சிலருக்கு மட்டுமே ரஜினி போன்றவர்களின் படங்கள் விதிவிலக்கு அதெல்லாம் ஒட்டு மொத்த தமிழகத்துக்கே பெருவிழா

ரஜினிக்கு கிடைக்கக் கூடிய அந்த ஒரு வரவேற்பு இப்போ இந்த மங்காத்தாவுல்ல தலக்கு கிடைச்சிருக்குன்னு சொல்லலாம் ஏன் இப்படி...சூர்யா விஜய் ஜீவா சிம்பு தனுஷ் போன்ற மற்ற நடிகர்களை விட தற்கால நடிகர்களில் தல என பாசத்தோடு அஜீத் கொண்டாடப் பட காரணம் என்ன... கூப்பிடாவிட்டாலும் சொந்த செலவில் டிக்கெட் போட்டு நடிகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அடுத்து அரசியல் அவதாரம் எடுக்க அப்பன் தயவில் இன்றும் வாழும் தளபதிகள்...சின்ன சூப்பர் ஸ்டார்கள்...இவர்களின் போலித்தனம் என்றுமே மக்களை கவர்ந்ததில்லை..

இவர்களின் சித்து விளையாட்டுக்கள் மக்களை மயக்கியிருக்கலாம் ஆனால் மயக்கம்ங்கறது தெளியக் கூடியது தானே....

தானா நிற்பவனை என்றுமே உலகம் ரசிக்க தவறியதில்லை நேரம் கூடும் போது மாலையிட்டு மரியாதை செய்யாமல் விட்டதில்லை

அந்த வகையிலே அஜித் போன்றவர்கள் எல்லாம் ஒரு சுயம்பு மாதிரி

அதுன்னாலத் தான் அவர் போன்றவர்கள் ஜெயிக்கணும்ன்னு சாமான்யர்களின் உலகம் விரும்புகிறது

அவர்களின் வெற்றி மிகவும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுகிறது,...

தல மங்காத்தா வெற்றிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்கு தல

tamil10