Wednesday, January 31, 2007

போக்கிரி பொங்கல்


வணக்கம் மக்கா,

பொங்கல் வச்சு மூணு வாரம் போயிருச்சு.. நம்ம மணிரத்னம் படம் பார்த்துபுட்டு நம்ம உள்ளூர் அசல் தமிழ் படங்களைப் பார்த்து ஒரு நாலு வார்த்தைச் சொல்லாம இருக்க முடியுமா?

ஆழ்வார், போக்கிரி, தாமிரபரணி மூணும் பொங்கலுக்குப் பொங்கிய படங்கள்.. பொங்கல் ஓட்டத்துல்ல தலயின் ஆழ்வார் மூணாவது வாரமே மூச்சு திணறி உள்ளூர்ல்ல முக்காடுப் போட்டுருச்சு. தளபதியின் போக்கிரியும் , விஷாலின் ( அவருக்கும் எதாவது பட்டப்பெயர் சிக்கிரம் கொடுங்கப்பா) தாமிரபரணியும் போட்டக் காசுக்கு பங்கம் வராம வசூல் கொடுத்துகிட்டு இருக்குதாம்

முதல்ல போக்கிரி... தளபதி ஏன் இந்த கொலை வெறி? அப்படின்னு அலறலாம் போல இருக்கு.. திருப்பாச்சியிலே தூக்குன ஆயதத்தை இன்னும் கீழே வைக்கமா படத்துக்குப் படம் போட்டுத் தள்ளிகிட்டு இருக்கார்..
இயக்கம் பிரபு தேவா... மாஸ்ட்டர் காரம் அதிகம்.. ஆனா காரம் பிடிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கே,, அவ்ங்களுக்கு கொடுத்தக் காசுக்கும் அதிகமான மெனு.. போட்டுத் தாக்கிட்டார்.

இசை மணி ஷர்மா.. மசாலா படத்துக்கு ஏத்தாப்புல்ல வாசிச்சு இருக்கார். வசந்த முல்லை பாடல் கொஞ்சம் வித்தியாசம்.. பிரபு தேவா - விஜய் நடனத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஓப்பனிங் பாட்டுல்ல தேவாவும் விஜயும் கொஞ்சமே ஆடுகின்றனர்.. சும்மா விசிலுக்காக..
அசின்.. ம்ம்ம் பெரிய ஹிரோ படத்துல்ல வேற என்ன ரோல் கிடைக்கும்.. காதலிக்கலாம்.. ஆடலாம்..பாடலாம்.. அழலாம்... முடிந்த வரை ஈடுபாட்டுட்டுன் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

காமெடி,வடிவேலு வழக்கம் போல் வலிக்க வலிக்க அடி வாங்கி சிரிக்க வைக்கிறார். சுட்டும் விழி சுடரே பாடலில் அசினோடு போடும் ஆட்டம் செம லொள்ளு சபா... பிரகாஷ் ராஜ் அலிபாயாகக் கொஞசமே வந்து அழிச்சாட்டியம் பண்ணுகிறார். குறிப்பாக காவல் துறை விசாரணைக் காட்சியில் கலக்குகிறார். நெப்போலியன் போலீஸ் கமிஷனராக் கச்சிதம். பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சியில் நன்றாகவே செய்திருக்கிறார்.
படத்தில் இது தவிர விஜயின் அப்பாவாக நாசர், நண்பர்களாக சிரிமன், வையாபுரி, மற்றும் இதர வேடங்களில் ஆனந்தராஜ், பான் பராக் ரவி என ஏகப் பட்டப் பேர்கள் வந்து போகிறார்கள். அசினை அடாவடியாய் காதலிக்கும் போலீஸ்கார வில்லன் கேரக்டர், மற்று அசினின் தம்பியாக வரும் சிறுவன் என படத்தை நக்ர்த்த உதவும் பாத்திரங்களும் உள்ளன.

தெலுங்குல்ல போக்கிரி பார்த்தவங்க கேக்குற கேள்வி..
தமிழ்ல்ல இந்தப் படம் ரீமேக் எதுக்கு? டப்பிங்கே போதுமேன்னு
அந்த அளவுக்கு ஈ அடிச்சான் காபி அடிச்சு இருக்காங்க படத்தை.. அதிலும் மகேஷ் பாபு ( தெலுங்கு போக்கிரி ஹிரோ) நடை, உடை, செருமுறது, மூக்கு உரியறது, முக்குறது,முனகுனறதுன்னு ஒண்ணு விடாம சூப்பராக் காப்பி அடிச்சு இருக்கார் இளைய தளபதி விஜய்..

கடைசி காட்சிகளில் போலீஸ் அதிகாரியாக விஜய் வரும் போது.. எதுக்குடா தளபதி தீடிரென்னு என்.சி.சியிலே சேந்துட்டார்ன்னு பயங்கர டவுட் வந்துருச்சு.. அப்புறமாத் தான் புரியுது போலீஸ் உடுப்பு நம்ம தளப்திக்கு அந்த லுக் கொடுக்குதுன்னு... விஜய்.. போலீஸ்க்குன்னு ஒரு மிடுக்கு இருக்கு அதைக் கொஞ்சமாவ்து செஞ்சு இருக்கலாம்... சரி அடுத்த முறை சரியாப் பண்ணிருங்க..

அப்புறம்.. அந்த முதல் பைட்ல்ல...ஒரு பைட்டரை தமிழ் நாட்டுல்ல என்னை யார்ன்னு தெரியாத முதல் ஆள் நீ தான்னு சொல்லி சொல்லி அடிப்பார்...நல்ல வேளை எஙக் பாட்டி எல்லாம் உங்க கண்ணுல்ல படல்ல அவங்களுக்கும் நீங்க யார்ன்னு தெரியாது..

"பொங்கலுக்குச் செம கலெக்ஷன்... ''
"நான் முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானேக் கேக்க மாட்டேன்" போன்ற வசனங்கள் விசில்களுக்கு குறி வைத்து எழுதப்பட்டுள்ளன.. விசில்களையும் அள்ளுகின்றன்...

"தளபதி தளபதி.. இவனை எதிர்த்தா அதோ கதி.. " பாட்டும் அந்த வகையே...

விஜய்க்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கு அந்த வட்டத்துக்குள்ள அடங்கணும்ன்னு விஜய் முடிவு பண்ணிட்டார்ன்னு அவரது சமீபக் காலப் படங்கள் சொல்லுது.. இன்னும் ரசிகர்கள் வட்டம் பெரிசாகணும்ன்னா.. கொஞ்சம் கதை இருக்கப் படத்துல்லயும் நடிக்கணும்ங்க...

மொத்ததுல்ல அடுத்த ரஜினி என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் இளைய தளபதி ஜஸ்ட் மிஸ்ஸாகி அடுத்த விஜயகாந்த் ஆகி விடுவோரோன்னு சந்தேகிக்கத் தோன்றுகிறது..

போக்கிரி ரசிகர்களின் வசூல் மழையில்.. மழை அடுத்து வரும் வாரங்களிலும் தொடருமான்னுப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Tuesday, January 30, 2007

கமல்ஹாசனின் கோலங்கள்

வணக்கம் மக்கா,

கல்லிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு ஒரு பழையப் பாட்டு இருக்கு கேட்டுருக்கீங்களா..

இவரைப் பாருங்க...தன்னிலே கலை வண்ணம் கண்டான் அப்படின்னு பாடலாம் போல கீதுப்பா...
நடிப்புக்காக தன்னை ஓயாது செதுக்கிக் கொள்ளும் கலைஞானி கமல்ஹாசனுக்கு கச்சேரியின் ஸ்பெஷல் சல்யூட்...தசாவதாரப் படங்கள் உங்கள் பார்வைக்கு

Monday, January 29, 2007

ஷில்பா அக்கா கெலிச்சுட்டாங்க


மக்கா ஷில்பா அக்காவை அந்த வெள்ளைக்கார பொண்ணு?? ( பொம்பளையா) கண்ட மேனிக்குக் கலாய்ச்சு அக்கா கண்ணைக் கசக்கி கண்டப்படி பீல் ஆனதுல்ல டோனியில்ல ( அதான் இங்கிலாந்து பி.எம்..) இருந்து நம்ம தாஸ் ( அதாங்க நம்ம மத்திய அமைச்சர் ப்ரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி) வரைக்கும் சோக்கா ஸ்டேண்ட்மென்ட் கொடுத்து சூடுக் கிளப்புனாய்ங்க..

இப்போ ஆட்டம் முடிஞ்சுப் போச்சு.. நேத்து ராத்திரி அக்காவுக்கு அடிச்சுது ஜாக் பாட்.. பெரிய அண்ணம் ஷோவில்ல அக்கா கெலிச்சுட்டாங்க.. நம்ம மைக்கேல் ஜாக்சன் உடன் பிறப்பு தோத்துட்டாராம்..

அக்கா சொம்ம ஓலக் அழகியான புள்ளங்க எல்லாம் ஒரு மாதிரி பிலீங்கா சவுண்ட் உடுவாங்களே அந்த மாதிரி சவுண்ட் எல்லாம் விட்டு இங்கிலாந்து டி.வி யிலே கடும் அலப்பரை கொடுத்துப் பின்னிட்டாங்க இல்ல..

இருக்காதா பின்னே.. அக்காவுக்கு பரிசு பணம் நூறு ஆயிரம் பவுண்ட் இல்ல கிடைச்சிருக்கு..

அது மட்டுமா..ஹாலி வுட்ல்ல நரி பிக்சர்ஸ்(FOX PICTURES) படம் ஒண்ணு..

சன் அப்படிங்கற பத்திரிக்கைக்குப் பேட்டி.. அதுக்கு சன்மானம் ஒரு 100 மில்லியன் பவுண்டாம்..

நிறைய விளம்பர வாய்ப்பு..

டாகுமெண்டரி படம்...

அக்காவைப் பத்தி பொஸ்தகம் போடப் போறாய்ங்களாம்..

மொத்தத்துல்ல அக்கா தக தக தங்க வேட்டையாடிட்டாங்கன்னு வைங்க..

சரி தமிழ்ல்ல நம்ம வைகைப் புயலோட அக்கா ஒரு படம் பண்றதா ஒரு வதந்தி வந்துச்சே அது உண்மையாகுமா..? அப்படி ஒரு படம் வந்தா தியேட்டர்ல்ல கட் அவுட் பீர் அபிஷேகம்ன்னு பொளந்துக் கட்டலாம்.. தமிழனுக்குக் கொடுத்து வச்சிருக்காப் பார்ப்போம்

அக்கா வெள்ளைக் காரங்களும் பரவாயில்ல... நம்மூர் மாதிரி ஓங்க கண்ணீருக்கு கரெக்ட் ஆகி ஓங்களுக்கு நல்ல கலெக்ஷ்ன் கொடுத்துட்டாங்க...

ஆல் ரைட் மக்கா.. அக்கா ஷில்பா ஷெட்டிக்கு கச்சேரி சார்பாப் பெரிய அண்ணன் ஷோவில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறோம்..

Saturday, January 20, 2007

குரு பார்த்தாச்சு.

ஜனவரி 12... தூத்துக்குடி நியூ கிளியோபேட்ரா தியேட்டர்.. மதியம் 2 மணி காட்சி (காலைக் காட்சிக்குப் பொட்டி வர்றலங்க). ஒண்ணு இரண்டு பேர் வாசலில் டிக்கெட்டுக்கு நிக்க நானும் போய் நின்னேன். இந்தியிலே பாக்கணும்ன்னு முடிவு பண்ண படம்... தமிழ்ல்ல பார்க்கும் படி ஆயிருச்சு. கொஞ்ச நேரத்துல்ல ஓரளவு கூட்டம் கூடி அரங்கம் நிரம்புற அளவுக்கு கூட்டம் சேந்துருச்சு. குரு கதை இந்நேரத்துக்குள்ள எல்லாருக்கும் மனப்பாடமே ஆகுற அளவுக்கு வலைகள்ல்ல நம்ம பதிவர்கள் பந்தி பரிமாறிட்டாங்க..

படத்தோட விளம்பரங்கள்ல்ல போட்டுருக்க மாதிரி...
VILLAGER...VISINORY..WINNER ஒத்த வரி தான் கதை...
அப்துல் கலாமின் கனவு காணுங்கள் தத்துவத்தைக் கையில் எடுத்துக் கொண்டு..அதில் அம்பானியின் கதையை கலந்து...ஓரளவு மணி பிராண்ட் ( மணி பிராண்ட் மசாலா விளக்கம் வேண்டுமா இங்கேச் சுட்டுங்கள்) மசாலாச் சேர்த்து கமகமவென சமைக்கப்பட்டிருக்கும் முழு விருந்து தான் குரு.
மணிரத்னம் படங்களைத் தவறவிடாமல் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு நாயகன், இருவர், ரோஜா, மெளனராகம் உள்ளிட்ட அவரது பழைய படங்கள் பிளாஷ் பேக்காய் தங்கள் முன் ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. பல காட்சிகளின் அமைப்பு மணியின் ரிமிக்ஸ் திறமையைக் காட்டுகினறன.
அபிஷேக் பச்சன் அசத்தல்... சூர்யா இன்னும் அசத்தல்... சூர்யா திரையில் வரல்லன்னாலும் திரைக்குப் பின்னால் இருந்து ஒளிர்கிறார். ஜூனியர் பச்சன் குரு பாயாக பாந்தமாய் பொருந்துகிறார். நிறைவானப் பங்களிப்பு.
ஐஸ்வர்யா ஆரம்பத்தில் வெறும் அழகு.. ஆழ வெட்டிய ரவிக்கையில் கவர்ச்சி உலா வருகிறார். மழையில் நனைகிறார். ஆடுகிறார். பாடுகிறார். அபிஷேக்கோடு காதல் காட்சிகளில் பின்னி பிணைகிறார். காதல் காட்சிகள் மணியின் இருவர் படக் காட்சிகளை நினைவுப் படுத்துகின்றன.
மிதுன் சக்கரவர்த்தி நானாஜி வேடத்தில் கலக்கியிருக்கிறார். டிஸ்கோ டான்சர் என ஆட்டம் போட்ட மிதுனா இது என புருவம் உயர்த்த வைக்கிறார். அவருக்கு நாசர் குரல் கொடுத்திருப்பது கச்சிதம்.
மாதவனுக்கு ஒரு சின்ன வேடம். ஆள் ரொம்ப இளைத்திருக்கிறார். மணி அவரை ஒரு நடிகராக நன்றாகவே இழைத்திருக்கிறார். பத்திரிக்கை நிருபராய் சாகசங்கள் செய்கிறார். குருவை எதிர்க்கிறார். வித்யா பாலன் மீது காதல் கொள்கிறார். அபிஷேக் ஐஸ்வர்யா காதல் கொஞ்சம் பெரிய கவிதை என்றால்.. மாதவன் வித்யா பாலன் காதல் ஒரு சின்ன ஹக்கூ ( ஹைக்கூவே சிறுசுத் தான்ன்னு சொல்லுறீங்களா?)

வித்யா பாலன் குருவின் மனிதநேயத்தைக் காட்டுவதற்காகவே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை கதாபாத்திரமாய் வருகிறார். குரு மீது பாசமும் மாதவன் மீது காதலும் கொள்கிறார். மாதவனோடு கல்யாணம் செய்து கொண்டு கொஞ்ச நாளில் செத்துப் போகிறார். குருவின் நல்ல பக்கத்தை வெளிபடுத்த வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட ஒரு பாத்திரமாகவே வித்யா பாலன் வந்துப் போகிறார்.

இசை ஏ.ஆர்.ரஹமான்... பின்னணி ஹம்மிங் அள்ளுகிறார் கைத்தட்டலை. ஆனால் தமிழில் பாடல்களும் வரிகளும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
உயிரேவில் கலக்கிய இதே வைரமுத்து-ரஹமான் - மணிரத்னம் கூட்டணியை குருவில் தேட வேண்டி உள்ளது... உயிரேவில்பாடல்களின் வரிகளும் இசையும் ஏற்படுத்திய தாக்கம் குரு வில் ஏனோ சுத்தமாக இல்லை. கிட்டத் தட்ட எல்லாப் பாடல்களும் காதுகளில் சொய்ங் என்ற இரைச்சலாவே விழுந்தன.மையா..மையா.. மட்டும் அதிலும் மையா..மையா .. வார்த்தைகள் மட்டும் தான் காதில் சரியாய் விழுந்தது.
கேமரா ராஜிவ் மேனன்.. காட்சிகளுக்கு கூடுதல் மெருகு ஏற்றியிருக்கிறார். படம் கண்களுக்கு நிச்சயம் குளிர்ச்சி. செட் போட்டவரும் கலக்கியிருக்கிறார். மணி படங்களில் வரும் ATTENTION TO DETAILS இதிலும் மிஸ்ஸாகவில்லை
எல்லாம் ரைட் மணி...
உயிரே ஏற்கனவே நீங்க ஒரு கல் வச்சு அடிச்சு இரண்டு மாங்காப் பறிக்க செஞ்ச முதல் முயற்சி... அதாங்க இந்தியிலே எடுத்துட்டு அதுக்கு பின்னாடி தமிழ் சாயம் பூசி ஷாருக்கான் மனிஷாவை எல்லாம் நம்ம தமிழ் மக்களோட மக்களாக் காட்ட முயற்சி பண்ணியிருந்தீங்க.
அதுக் கூட பரவாயில்ல....

ஆனா குருவுல்ல கதைப் படி குருநாத் தேசிகன் இலஞ்சி என்ற நெல்லைக் கிராமத்தைச் சேர்ந்தவர்... அப்படின்னு சொல்லிட்டு தின்னவேலி மக்களுக்கு குஜராத் உடைகள் போட்டு விட்டு கோமாளிக் கூத்துக் கட்டியிருக்கீங்களே இது நியாமா?

வட இந்திய உடைகள்..வட இந்திய கலாச்சார பாடல்கள் இப்படி இலஞ்சி கிராமத்தையும் தின்னவேலியையும் அப்படியே அலாக்காத் தூக்கி குஜராத்க்குக் கொண்டு போய் குத்த வச்சுட்டீங்களே இது உங்க படைப்பை நீங்களே லொள்ளு சபா பண்ண மாதிரி இல்ல இருக்கு
குரு நிச்சயம் ஒரு நல்ல படம் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனா இந்த தமிழ் டப்பிங் அதற்கு அவசியமா?
வியாபாரம் தான் முக்கியம் இல்லங்கலே ஆனா இந்த டப்பிங் ரொம்பவே நெருடுது...நேரடியா தமிழ் படம் கொடுக்கல்லன்னாலும் பரவாயில்ல உங்க ரசிகர்கள் தாங்கிப்பாங்க.. இப்படி யதார்த்தங்களைக் கொன்று விடும் டப்பிங் படங்களைத் தவிர்த்து விடுங்கள். இன்னைக்கு நிலையிலே கடல் தாண்டிய நிலையில் இருக்கும் நம்ம அடுத்த தலைமுறைக்குச் சினிமாவுல்ல தான் கிராமத்தை எல்லாம் காட்ட வேண்டி இருக்கு அதுவும் உங்களுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு... நீங்க எடுக்குற படத்துல்ல இது தான் தின்னவேலின்னு நீங்கச் சொன்னா எங்க அடுத்த தலைமுறை தமிழன் அதை அப்படியே நம்பிருவான் மணி...சோ ப்ளீஸ் திங்க்...
மொத்ததில் குரு ஒரு நம்பிக்கையின் கதை... நிச்சயம் பார்க்கலாம்.. முடிந்தால் இந்தியிலேப் பாருங்கள் தமிழ் சப் டைட்டில்களோடு.

Thursday, January 18, 2007

ஷில்பா அக்கா அரசியலுக்கு வாங்க...ஏ இங்கிலாந்தே!!!

அக்கா ஷில்பாவிடம் மன்னிப்புக் கேள்...

அக்காவின் புகழ் ஓங்குக...

அக்கா ஷில்பா ஷெட்டி போர்படை
இளிச்சவாயன் பட்டி
தமிழ் நாடு

சாரி மக்கா..

'பிக் பிரதர்' டிவி ஷோ நியூஸ் கேள்விப்பட்டதும் கொஞ்சம் பொங்கிட்டேன்..

அது மட்டுமில்லாம.. இப்போ பொங்கல் சீசன்ல்ல நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் விஜய், அஜீத், ஏன் விஷாலைக் கூட வாங்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சும்மா ஒரு தடவை சி.எம் ஆவலாம்ன்னு.. அரசியலுக்கு வாங்க.. அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிட்டு எல்லாச் சுவத்துல்லயும் போஸ்ட்டர் அடிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்காயங்க.. அந்த எபெக்ட் வேற.. அதான் நானும் கொஞ்சம் ஓவராப் பீல் ஆயிட்டேன்

எது எப்படியோ அக்கா போட்டோ நல்லாயிருக்கா?

விடு ஜூட்

Wednesday, January 17, 2007

விவசாயியுடன் பொங்கலோ பொங்கல்

வணக்கம் மக்கா,

அட நாட்டுல்ல இப்போ என்ன விசேஷம்ன்னாலும் டி.வி.காரயங்க கையிலே கேமராவைத் தூக்கிட்டு ஒரு மைக்கையும் கொண்டாந்து நீட்டி கதைக் கேக்குறது வழக்கமாப் போயிருச்சு...
நம்ம கச்சேரியில்லும் அதையே அப்படியே கொஞ்சம் டிக்காஷனை லைட்டாப் போட்டு காப்பி ஆத்திருவோம்ன்னு முடிவு பண்ணி உக்காந்து கண்டப் படி யோசிச்சதுல்ல வந்தது தான் டைட்டில் கார்ட்.. விவசாயியுடன் பொங்கல்...

ஊருக்கெல்லாம் சோறு போடுற மவராசன்... அந்த மண்ணின் மைந்தனோட பொங்கல் நாளை செலவிட்டுற வேண்டியது தான்னு கிளம்பி போனோம்ங்க...
விவசாயப் பூமியை பாக்கணும்ன்னா.. (அங்கே தானேங்க விவசாயி இருக்கார்)... வரப்பு ஓரமா நடக்கச் சொன்னாயங்க... நாமளும் நடந்தோம்ங்க..

விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்கிட்டு வரப்பு பக்கமா ஓமப் பொடி பொட்டலம் கொடுத்துட்டு நமக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்ன புண்ணியவான் ஒருத்தர் சொன்னாருங்க..

ஆஹா விவசாயி மக்கள் எல்லாம் நெல்லும் கையுமா அலைஞ்சக் காலம் போய் இப்போ செல்லும் கையுமா அலையுறாங்களே நல்ல முன்னேத்தம் தான்னு கூட வந்த வெட்டி பய ஒருத்தன் புளங்காகிதப் பட்டுச் சொன்னான்.

சரின்னு ஓமப்பொடியைக் கொறிச்சுகிட்டு போன் நம்பரை அழுத்துனா... டொய்ங்.. டொய்ங்ன்னு ஒரே பிஸி... யப்பா ராசா... சந்தோஷம்ய்யா ஊர் பசியை ஆத்துற நம்ம விவசாயியை மக்கள் மறக்காம பொங்கல் அன்னிக்கு போன் போட்டு போன்ல்லயே பொங்கி வாழ்த்துச் சொல்லி ஆனந்தப் படுத்துறாங்கடான்னு எங்களுக்கு இன்னும் குஷியாயிடுச்சு.

ஒரு பத்து நிமிசம் கழிச்சு போன் லைன் கிடைச்சுது...

"ஹாய்...ஹலோ... ஹவ் ஆர் யூ.. ஹோ ஐ யாம் வெரி ஹேப்பிய்யா.. டூ டே ஹேப்பி பொங்கல்யா..."

நாம் நம்மை அறிமுகப்படுத்தி அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தைக்கு நகரும் முன்னே மறுமுனையில் இருந்து எடுப்பா வெள்ளைக்காரனை வெள்ளாவியிலே வச்சு வெளுத்து விட்டாப்பல்ல தெறிச்சு விழுந்தது இங்கிலீஸ்.

விவசாயிக் கூட பொங்கல் வைக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்து வில்லங்கமா எங்கிட்டோ மாட்டி விடப் பாக்குறானோன்னு கூட வந்த கில்லி பையனை நான் சந்தேகமாப் பாக்க...

"அண்ணே இது டூ தவுசண்ட் நாட் நாட் செவன்... இந்தியா வளருதுண்ணே... ஒரு இங்கிலாந்து விவசாயி இங்கீலிஸ் பேசுனா நீங்க இப்படி சந்தேகப் படுவீயளாண்ணே... ஏன் ஒரு அமெரிக்கா விவசாயி இங்கீலிஸ் பேசுனா இப்படி எதுல்லயோ மிதிச்ச மாதிரி ஓங்க முகம் மாறுமா... சொல்லுங்கண்ணே..."

இல்லன்னு நான் முகத்தை மூணு தடவை ஆட்டி தொங்க விட்ட பொறவு கில்லி பையன் மதன் கிட்ட முக்கா ரூவா போஸ்ட் கார்ட்ல்ல கேக்க வேண்டிய கேள்வியை எங்கிட்டக் கேட்டான்.

"ஒரு இந்திய அதுவும் திராவிட அதுவும் நம்ம தமிழ் விவசாயி இங்கீலிஸ் பேசுனாத் தப்பா? பதில் சொல்லுங்கண்ணே" ன்னு கவுண்டரிடம் செந்தில் அடம் பிடித்ததுப் போல் நம்ம கில்லி பையன் அடம் பிடித்தான்.

எனக்குப் பதில் தெரியல்ல.. அதுன்னாலே தலையை மேலும் கீழும் நடுவில்ல அப்படியே இடமும் வலமும் ஆட்டிட்டு அப்பாடான்னு கவுத்து வச்சேன். அப்படியே வரப்பு முடிஞ்ச இடத்துல்ல குருப்பா இளந்தாரிக நின்னு ஒரு மஞ்ச கலர்ல்ல ஓடாம ஓரமா நின்னுகிட்டு இருந்த டிராக்டர் முன்னால கரும்பு இரண்டைக் கட்டி விட்டு பின்னாலே பொங்கப் பானையை எல்லாம் பெயிண்ட அடிச்சு தொங்க விட்டுகிட்டு இருந்தாயங்க...

அங்கிட்டு டிராக்டர் பின்னாலே ஒருத்தன் லேசா மவுத் ஓரம் லீக்காக கையிலே இருந்தக் கரும்பை வளைச்சு வில் மாதிரி வச்சுகிட்டுப் போஸ் கொடுத்துகிட்டு நின்னான்.. அவன் இடுப்புல்ல ஒரு அரை கிலோ இஞ்சியை கட்டி வச்சிருந்தான் ஏன்னு யோசிச்சும் எனக்கு விளங்கல்ல...கூட வந்த கில்லி பையன் அவனைப் பார்த்து வில்லங்கமாச் சிரிச்சான்...

எது எப்படியோ வரப்போரம் வந்துட்டோம்..
இந்தா டிராக்டர் நிக்குது..
சுத்தி இளந்தரிங்க எல்லாம் வருத்தம் தொலைச்சு வாலிப முறுக்கோடு நிக்காயங்க...

நிச்சயமா இந்த வருசப் பொங்கல் விவசாயப் பொங்கல் தான்னு கண்ணு குளுந்துப் போச்சு

எதிரே அவ்வை சம்முகி படத்துல்ல கமலஹாசன் பாடுற வேலை.. வேலை.. காலையிலும் வேலை.. மாலையிலும் வேலை பாட்டைப் பாடிகிட்டே வந்து நம்ம மேலே இடிச்சவர்... தழலாக் கொதிச்சுட்டார்...

பாட்டு நல்ல பாட்டு.. அதுவும் நாட்டு மக்கள் சந்தோசப் படுற மாதிரி நல்லாவேக் கருத்தாப் பாடுறீயளேன்னு நான் பாராட்ட....

சீக்கிரம் ஓம்மக் கூட ஒரு கச்சேரி வச்சிருவோம்ய்யா தனிக்கச்சேரி செல்லாது கூட கச்சேரி பண்ண இந்த ரெஸ்யூம்ஸ்ல்ல இருந்து செலக்ட் பண்ணிட்டு கால் பண்னுங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் அதே வேலைப் பாட்டு பாடிகிட்டு நடந்தார்.

இது என்னக் கூத்து... ரெஸ்யூம் வாங்கறவருக்கும் விவசாயிக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு நான் மண்டைக் காஞ்சி நிக்குறேன்...

அப்பூ அது ரெஸ்யூம் அல்ல அதற்கான அழகானத் தமிழ் சொல் என்னன்னு சொல் பார்ப்போம்... அழகான பிள்ளை முகம்...

சாமின்னு நம்ம கில்லி பையன் பயந்து பம்ம..

சிறுவனே.. தமிழில் பேசினால் சாமியா.. இல்லையப்பா நானும் உன்னைப் போல் இறையாசி வேண்டி குன்றம் நோக்கி கைக்கூப்பும் ஆசாமி தானடா.. கேட்டாயா என் சொல் ஒரு சொல் என நம் பக்கம் பார்க்க.. என் கண்ல்ல கிட்டத் தட்ட கண்ணீர் பொங்கல்.

அவரும் அவர் பாட்டுக்கு புன்னகைச் சிந்திப் போக...

" நம்பர் 12 அப்படின்னு போட்ட டீ- ஷ்ர்ட் கீழே ஜீன் ஸ் பேண்ட் போட்டுகிட்டு படு ஸ்டைலா ஒருத்தர் மாடியிலே இருந்து இறங்கி ஓடி வந்தார்....

தாரை தப்பட்டை எல்லாம் முழங்க....
ஊர் நாட்டு மக்கள் எல்லாம் பொங்கி ஆர்பரிக்க....

"விவசாயி ... விவசாயி... கடவுள் என்னும் மொதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி.. விவசாயி..."ஸ்பீக்கர் அலற....

டேய் என்னடா நடக்குது இங்கே.. விவசாயிக் கூட பொங்கல்ன்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தே வந்துப் பார்த்தா விதம் விதமா மக்கள் என்ன என்னமோப் பேசிக்கிறாங்க... ஒண்ணும் புரியமாட்டேங்குது...சொல்லுடா...

"அண்ணே இவர் தாண்ணே விவசாயி... இவர் தமிழ் உலகின் பிரபல பதிவர்... அவருக்கு இன்னிக்குப் பொறந்த நாளும் கூட அதான் அவரோட சேர்ந்து நாமளும் பொங்கல் கொண்டாடலாம்ன்னு .. என் இழுத்தான்.

"அட பாவி...சரி சரி... இதுவும் நல்ல விஷயம் தான் வந்தது வந்தோம்.. விவசாயிக்கு உரக்கப் பொறந்த நாள் வாழ்த்தும் சொல்லிருவோமா...."

விசில் அடித்து உற்சாகமா பொங்கலோ பொங்கல்... மாட்டுக்கு பொங்கல்.. நம்ம விவசாயிக்கும் பர்த் டே பொங்கல்... அப்படின்னு நம்ம கில்லி பையன் பீட் கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

Wednesday, January 10, 2007

கொத்தனார் கொண்டாட்டம்

வணக்கம் மக்கா,

முக்கியச் செய்திகள் வாசிப்பது கச்சேரிகாரன்.

இன்று அதிகாலை நியூயார்க், வாஷிங்க்டன் உட்பட்ட முக்கிய அமெரிக்க நகரங்களிலும், லண்டன், பெர்லின், ஜுரிக், ரோம், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் முக்கிய வீதிகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும், தமிழ் நாட்டின் பெருநகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரையில் தமிழ் மணக்கும் பல இடங்களில் இந்த போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது....
போஸ்ட்டர் குறித்தச் செய்திகளை எமது சிறப்பு நிருபர் கில்லி பையன் அவ்வப்போது ஓசி செலபேசிகள் மூலம் நமக்கு அளித்தப் படி உள்ளார்.

வலையுலகில் மட்டுமின்றி இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடித்ததாய் சொல்லப்ப்டும் அனைத்து கிரகங்களிலும் இந்த போஸ்ட்ர்கள் தென்படுவதாய் அப்போலோ விண்கலப் பயணிகளும் தெரிவித்து உள்ளனர். நாசா விஞ்ஞானிகளும் சேட்டிலைட் புகைப்படங்களில் இந்த போஸ்ட்டர்கள் தென்படுவதாகக் கூறியுள்ளனர்.

போஸ்ட்டர்களின் பின்னணியில் பின்னூட்டப் புயல் என்றும் பின்னூட்ட நாயகன் என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் இலவ்சக்கொத்தனாரின் அண்டம் தழுவிய ரசிகர்கள் இருப்பதாய் தெரிய வந்துள்ளது என உலக உளவுப் படை தலைவர் போலீஸ்காரர் சிக் ஷாம்பு தெரிவித்தார்.

இந்தப் போஸ்ட்டர் தாங்கியச் செயதியை இன்னும் பல இடங்களில் வேறு உருவங்களிலும் காணலாம் என உளவுப் பிரிவு மூன்றாவது கண் பிரிவுத் தலைவர் நைட் ஈகிள் கூறியுள்ளார்.

சற்று முன் கிடைத்தச் செய்தி..
இன்றோடு வலைப் பதிய துவங்கி ஓராண்டு முடித்த நிலையில் கொத்தனாரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பெரும் திரளாய் அவர் வலையகம் சென்று முண்டியடித்த நிலையில் உள்ளனர். ஆனால் வழ்க்கமாய் வூடு கட்டுவது போல் இன்று வூடு கட்டாமல் அவர் அதிசயமாய் தன் அலுவலக வேலைப் பார்ப்பதாய் கிடைத்தச் செய்தியால் அவர் ரசிகர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இது பற்றிய சிறப்பு செய்திகளை அறிந்துக் கொள்ள தவறாது பின்னூட்ட பகுதியைக் க்ளிக்கிக் கொண்டிருங்கள்...
ஹேப்பி பிளாகிங் கொத்ஸ் :)))

Friday, January 05, 2007

பெண் போராளி மல்லிகா ஷெராவத் வாழ்க

கொக்கா மக்கா இங்கே என்ன நடக்குது சாமி......எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் கேட்கும் கேள்வி இது?
எதுக்கு டென்சன்.? ஒண்ணுமில்லயா..அந்த புள்ள பாவம் அரையும் கொறையுமா இருக்கு இந்த பயலைப் பாருங்க எம்புட்டு நக்கலா புல் சூட்டு எல்லாம் போட்டுகிட்டு கெத்தா நிக்கான்...
பயலுக்கு ஒரு நீதி? புள்ளக்கு ஒரு நீதியா? ம்ம்ம் பொறுத்தது போது பொங்கியெழு மல்லிகா.....இதை எல்லாம் தப்புன்னு எவனாச்சும் கேட்டீங்க அம்புட்டுத் தான்...சொல்லிபுட்டேன்...போய்யா உன் வேட்டியை இறுக்கிப் புடிச்சுக்க... இது எங்க ராஜ்ஜியம் நாங்க வச்சது தான் சட்டம்... இப்போ என்னன்றீங்க? தோடா......ஆம்பளை ஆம்பளையா இருக்கணும்...ஆமா

கொடுத்தக் காசுக்கு எல்லாம் ஜோராக் கைத் தட்டிட்டு கிளம்புங்க.... கச்சேரி முடிஞ்சுப் போச்சு... ஆங் சொல்ல மறந்துட்டேன் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Thursday, January 04, 2007

வெட்டிபயலும் ஒளவையாரும்....

வணக்கம் மக்கா,

வலையுலகில் பல வகையானப் பதிவுகள் வந்துப் பட்டயக் கிளப்பிகிட்டு இருக்கப்போ கதைகளுக்கானப் பதிவுகள் மிகவும் குறைவு...பெரும்பான்மையானப் பதிவர்களும் அவங்க அவ்ங்க பதிவுல்ல சிறுகதை முயற்சிகள் நிச்சயமாப் பண்ணியிருக்காங்க...ஆனா அதன் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளதுன்னு சொல்லலாம்...

கதைகள் படிக்க ஒரு சூழல் வேணும்.. முக்கால்வாசி பதிவுலக வாசகர்கள் பதிவுகளை அலுவலங்களிலும் அலுவலக நேரத்திலும் படிக்கிற காரணத்தால.. கதைகளுக்கான வாசகர்கள் மிகவும் குறைவோன்னு தோணுது...அலுவலக மனநிலைக்கு நகைச்சுவை மற்றும் செய்தி பதிவுகளே முக்கிய தீனிப் போடுபவைகளாய் அமைகின்றன...இப்படி இருக்க சூழல்ல ஒரு கதையைத் தொடராப் போட்டு அதையும் ரசிக்கும் படி செய்யணும்ன்னா.. கொஞ்சம் கஷ்ட்டம் தான்...

இப்படிப் பட்ட கதைகள் தொடர்களா எனக்குத் தெரிஞ்சு நான் ரசிச்சுப் படிச்ச முதல் தொடர் தளபதி சிபி எழுதிய 'அமானுஷ்ய ஆவி' தொடர் தான்... தலைப்புச் சொல்வது போல் கொஞ்சம் அமானுஷ்யமான தொடர் தான்.. அது ஆச்சு ஒரு வருஷத்துக்கு மேலே...
அதுக்கு அப்புறம் நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ எழுதி பதிவர்களிடம் பலத்த ஆதரவு பெற்ற காதல் பயணம் தொடர்.. மிகவும் அட்டகாசம்...

இந்த டைம்ல்ல கச்சிதமா வந்து தொடர்களுக்கான வாசகர் வட்டத்தை வசிகரிச்சவர் நம்ம வெட்டி பயல்...இவரது ஆரம்பக் கால பதிவுகளை நான் அவ்வளவா வாசிச்சது இல்ல.. பிரபல பத்திரிக்கையில் இவர் பதிவு வந்து இவர் கவனிக்கப்பட்ட நேரம் கூட இவர் பதிவுப் பக்கம் அதிகம் போனதில்லை... எதோ டெக் மண்டையன் என்னமோ எழுதுறான்னு இருந்துட்டேன்... இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது இவரது 'கொல்ட்டி' கதை தான்...

கதை எழுதணும்ங்கற ஆசையோட ஒரு பயலா... டெக் மண்டைன்னு நினைச்சா... கதைச் சொல்லி கலாயக்கற பார்ட்டியான்னு இவரது பதிவுகளை ஒரளவு ரசிக்க ஆரம்பித்தேன்...

வெட்டியோட 'கோழியின் அட்டகாசங்கள்' படிச்சிருக்கீங்களா....?? யம்மாடி நம்ம ஒவ்வொருத்தர் கல்வி வாழ்க்கையிலும் கண்டிப்பா ஒரு கோழியையோ.. வாத்தையோ... கட்டாயம் பாத்துருப்போம்.. ஏன் இன்னும் சொல்லப் போனா நாமேக் கூட அந்த கோழியா இருந்து இருப்போம்... நினைச்சு நினைச்சுச் சிரிக்க ஒரு பதிவு தொடர்...

'லிப்ட் ப்ளீஸ்' ன்னு ஒரு தொடர் அதுல்ல கதைச் சொல்லும் பாங்குல்ல ஒரு புதிய முறையைக் கடைப் பிடிச்சிருந்தார்.. அது அவ்வளவா வாசகர்களைச் சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்..

அதுக்கு அப்புறம் இப்போ சமீபத்துல்ல வெளிவந்த அவரது வெற்றி தொடர் நெல்லிக் காய்...
வெட்டியின் நெல்லிக்காய் ஒரு 30 வயதுக்கு உட்பட்ட வாசகர்களைக் கவரும் கதைன்னு சொல்லலாம்.... இன்னும் சொன்னால் நெல்லிக்காயின் தாக்கம் இருபதுகளின் ஆரம்பம் மத்தியில் இருக்கும் மக்களை வெகுவாக ஈர்த்தது எனச் சொல்லலாம்.

கதையின் மொத்தத்தை ஒரு வரியில் விவரிக்க வேண்டுமானால்... இரண்டு காதல்களின் ஆரம்பமும் முடிவும்... ஒரு காதல் ஆரம்பம் இனிமை... முடிவு கசக்கிறது.. இன்னொரு காதல் நெல்லிக்காய் காதல்... காதல் கதை வாசகர்களை இழுக்கும் அதில் சந்தேகமில்லை.. கதையைப் படிக்க வரும் வாசகனை வசிகரிக்க வேண்டும்...வெட்டி இதில் கெட்டி..

கதையை எழுதப் போகும் போது இதை எல்லாரும் படிக்கணும்ன்னு படைப்பாளி நினைப்பது இயல்பு தான்.. நம்ம வெட்டியும் நினைச்சு இருப்பார்.. ஆனா கதை ஆரம்பித்த ஒரிரு பாகங்களில் தன்னுடைய வாசகர் வட்டம் இன்னார் என்பதை உணர்ந்த வெட்டி கதையின் போக்கை வாசகர்களின் விருப்பத் திசைகளில் செலுத்தத் துவங்கினார்....

அருண், தீபா, கார்த்தி, ராஜி.. .. நினைவில் எளிதில் நிற்கும் பழக்கப் பெயர்கள்...இந்த நால்வரை மட்டுமே மையப்படுத்தி கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று விட்டார் வெட்டி...

மோதலில் துவங்கும் அருண்-தீபா காதலுக்கு கிடைத்த வரவேற்பை ஏனோ வெட்டி இயல்பாய் மலர்ந்ததாய் சொல்லப்பட்ட ராஜி-கார்த்தி காதலுக்குப் பெற்று தரவில்லை...அதனால் அந்தக் காதல் தோற்கும் போது படித்தவர் மனத்தை அது பாதிக்கவில்லை...அருண்-தீபா காதலைப் பற்றி சொல்லும் போது உருகும் வெட்டி... கார்த்தி-ராஜி காதலைச் சொல்லும் போது அவ்வளவாக ஒட்டாமலே நிற்கிறார். அருண்-தீபா காதல் வெட்டியின் உள்ளக் காதலா அருகினிலிருந்து உணர்ந்த காதலா என்ற சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது...இந்தக் காதல்கள் அரங்கேறி நடக்கும் களம் பல வாசகர்களுக்கும் பழக்கமான ஐ.டி.பணியிடம் என்பதால் அலுவலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் புதியவர்களை நெல்லிக் காய் நிரம்ப கவர்ந்து விட்டது. கதையின் போக்கினுடே சொல்லப் படும் சங்கதிகளில் ஒரு ஐ.டி. இளைஞனின் மேலோட்டமான பார்வையாய் வெட்டியின் வார்த்தைகள் வருகின்றன....

மிடில் ஏஜ் மக்கள் இந்தத் தொடரை எவ்வளவாய் ரசித்திருப்பார்கள் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை...ஆனால் வாழ்க்கையின் இந்த SWEET NOTHING DAYSஐ முடிந்த வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றார் வெட்டி என்றே சொல்லலாம்.

முடிவினில் எல்லாவற்றுக்கும் முடிச்சுப் போடும் தமிழ் சினிமா பார்மூலா படி திருமணம்... குடும்ப விருந்து... கதைப் பெயர் விளக்கம் என முடித்திருப்பது மசாலா டச்....

"குறைகள் இன்றி எந்தப் படைப்பும் வருவதில்லை... நிறைவான படைப்பு தந்து விட்டேன் என்று எந்த படைப்பாளியும் திருப்தி அடைந்ததில்லை...."

நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணிக் குடிச்சாச்சு.... இனிக்குது... இனிப்பு ஆறுசுவைகளில் ஒண்ணு மட்டுமே.. மத்தச் சுவைகளையும் பரிமாறுங்க...

ஆங்..தலைப்புல்ல டவுட்டா... விளக்கம் வேணுமா...... ஆகா..... நீங்களே புரிஞ்சுத் தெரிஞ்சு பிரகாசமாகுங்க மக்களே....

Tuesday, January 02, 2007

மீண்டும் ஒரு சாரல் பொழுது

(புத்தாண்டில் ஒரு பழையக் கச்சேரி உங்கள் பார்வைக்கு...)

சென்னையில் இப்போ ஒரே மழை...
ஆபிஸ்ல்ல அவன் தான் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.
கையிலே சிகரெட் புகைய வானம் பார்த்தவன் மழையை ரசிக்க ஆரம்பிச்சான்.சின்ன பையன் மாதிரி மழையைக் கையிலே பிடிச்சு என் முகத்தில் அடிச்சான்.
ச்சே என்னடா ஆச்சு உனக்கு இப்படி பிஹேவ் பண்ணுறே.., டோன்ட் யூ கேர் அபௌட் வாட் அதர்ஸ் வில் திங்க் அபௌட் யூ. ஸ்டாப் ஆக்டிங் கிட்டிஷ் டியுட்...
என் கார்பரேட் உணர்வு ஆங்கிலத்தில் கொப்பளித்தது..
அவன் சிரித்தான்... மச்சி..படம் போலாமா என்றான்.
மாமூ இன்னிக்கு வீக் டே..வேலைக்கு ஆகாது என்று தப்பிக்க நினைத்தேன்.
ஈவீனிங் ஷோ சத்யம் காம்ப்ளக்ஸ் போலாம் வா...படம் நல்லா இல்லாட்டியும் படம் பாக்க வர்ற கூட்டம் நல்லா இருக்கும்..இன்னிக்கு மழை வேற பெய்யுது என்று கண்ணடித்தான். எனக்கும் ஆசை மெல்ல துளிர் விட்டது. கஜினி போலாமா...அசின் பின்னி பெடல் எடுத்து இருக்காளாம்...என் பங்குக்க்ய் நானும் உற்சாகம் அடைந்தேன்.

இருவரும் பல்ஸரில் சீறி புறபட்டோம். மழை மெல்ல மெல்லிசை பொழிந்தது. அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணுன்னு தியேட்டரில் கூட்டம் கொஞ்சம் கம்மி. எங்கள் பிகர் பார்க்கும் கனவு பஞ்சர் ஆனது. போஸ்ட்டரில் அசினும் நயந்தாராவும் பல லட்சம் வாங்கிக் கொண்டு பூவாய் சிரித்தனர்.

அப்படியும் கஜினி படம் ஹவுஸ்புல்!!! அடாது மழை பெய்தாலும் தமிழன் விடாது படம் பார்ப்பான். ஷோவுக்கு இன்னும் 20 நிமிஷம் இருந்துச்சு. பக்கத்துல்ல இன்னொரு படம்... பேரு மழை...அட சீசனுக்கு ஏத்த படம் போல...அவன் கேட்டான் ..யாருடா அதுல்லே? ஷ்ரேயான்னு புதுப் பொண்ணு..
சிவாஜில்ல உங்க தலைவருக்கு ஜோடின்னு பேசிக்கிறாங்க... நனைய நனைய நடிச்சுருக்காளாம் போலாமா?...என் மனசு கும்மி அடித்தது...சரி மாப்பி ...ஆனா டிக்கெட் செலவு உன்னோடது ஒகேவா?
அவன் அதற்கும் சிரித்தான். படம் பார்த்தோம் ... வெளியே வந்தோம்...

பணத்தை தண்ணியா செலவழிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்..இன்னைக்கு தான் பார்த்தேன்..படமாம் இல்லை படம்...கிறுக்குத்தனமா இல்ல இருக்கு.. இப்படி ஒருத்தி மழையிலே பப்ளிக்கா நனைவாளா...? கேட்கிறவன் கெனையா இருந்தா காபித் தூளைக் கூட கோல்ட் பிஸ்கட் விலைச் சொல்லுவாங்கப் போல இருக்குப்பா...
அவன் சிரித்தான்.
மாமூ என்ன சிரிப்பு... இந்த படத்தைப் பார்த்ததுக்கு ஒரு நைன்டி போட்டுட்டு ரூம்ல்ல மல்லாக்கப் படுத்து கிடந்தா கனவுல்லேக் காசு வாங்காமலே இந்த குட்டி ஒரு டாண்ஸ் போட்டுருப்பா...ஒரு 120 ரூபா தண்டமாப் போச்சு...

மச்சான் சாப்பிட்டுப் போயிருவோம்...என்றான் அவன்.... மழை வலுத்தது. கொட்டு கொட்டு என்று கொட்டியது. கூட ஆட யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் இட்லியை கிறக்கமாய் உள்ளே தள்ளினேன். ஆமா யாரது நயனிகா.... நம்ம ஆபிஸ்ல்ல அந்த பெயர்ல்ல யாருமில்லையே நான் கேட்க சிரிப்பை குறைத்து அவன் என்னைப் பார்த்தான்.

நயனிகா பெயரு உனக்கு எப்படி தெரியும் என்றான்.

மாப்பு உன் மொபைல்ல பார்த்தேன். பேர் புதுசா இருந்துச்சு அதான் கேட்டேன்.

நயனிகா, ஷி வாஸ் இன் காலேஜ் வித் மி...இப்போ கல்யாணம் ஆகி ஹைதராபாத்ல்லே இருக்கா இன்னும் 2 வீக்ஸ்லே யு.எஸ் போறா.. ஹஸ்பெண்ட் ஒரக்கிள்ல்ல பெரிய போஸிஷனாம், இங்கே டெலிவரிக்கு வந்து இருக்கா..

அட அட ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில்? பழைய பனையோலையில் ஆட்டோகிராபா!!! நம்ம பிராண்ட் நக்கல் தொடர்ந்தது. எனக்கு தெரியல்ல பிரண்ட் ஒருத்தன் அதான் நம்ம சுப்பு ஹதராபாத்ல்ல அவளை பார்த்துப் பேசியிருக்கான். அவன் தான் அவ நம்பர் வாங்கி கொடுத்தான்...அவ இப்போ சந்தோஷமா இருக்காளாம் ஹப்பி, வீடு, குழந்தைன்னு...

தம்பி இட்லிக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துப்பா...மாப்பு.. நீ சொல்லுடா.. போன் பண்ணி ஒரு ஹாய் சொல்லு...அப்படியே அவ ஹப்பி மெயில் ஐடி கேளு... நம்ம ரெஸ்யூம் அனுப்பி வைப்போம். அப்படியே பிளைட் ஏறுவோம்டா.
அவன் சிரித்தான்.

ரூம்க்கு போய் கைலி மாற்றி கொண்டோம். அவன் மழை பார்ப்பதை நிறுத்தவில்லை. மாமூ என்னடா மழையை சைட் அடிக்கிறே? ஷ்ரேயா ஞாபகமா? அவன் சிரித்தான்.

இல்லைடா நயனிகா ஞாபகம்..அவளுக்கும் மழை பிடிக்கும். மழையிலே நனைய ரொம்ப பிடிக்கும். shes truly madly deeply crazy about rain...மழை பெய்ஞ்சா அட்லீஸ்ட் 30 செகண்ட்ஸாவது அதுல்ல நனையுணும்னு சொல்லுவா...
எனக்கு தூக்கம் போயேப் போச்சு.
என் கூட பி.ஈ படிச்சா... கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் தான் அவ வீடு.. அவ குஜராத்தி ஆனா நல்லா தமிழ் பேசுவா...இளையராஜான்னா உயிர்.. வைரமுத்து கவிதை எல்லாம் எனனைக் கேட்டு கேட்டுப் படிப்பா... நல்லா கோலம் போடுவா... எனக்கு ஹோலின்னு ஒரு பெஸ்டிவல் இருக்குரதே அவ சொல்லித் தான் தெரியும்...அவளூக்கு அப்போவே டிரைவிங் தெரியும்....பெரிய இடம்.. அளவா சாப்பிடுவா... ஜுஸ் ...பிரஷ் ஜுஸ்ன்னா உயிரை விடுவா....
அவ மத்தியான டிப்பன் பாக்ஸ்ல்ல எனக்கு எப்பவும் ரெண்டு சப்பாத்தி இருக்கும்.. புரியாமலே அவளுக்காக் அவ கூட குச் குச் ஹோத்தா ஹேய் அஞ்சு வாட்டி பார்த்து இருக்கேன்...ஒவ்வொரு வாட்டியும் அவ தான் கதைச் சொல்லுவா...சொன்னதையேத் திரும்பச் சொன்னாலும் அவ குரல்ல அதைக் கேட்கணும்..அப்படி ஒரு ஆனந்தம்.
முக்கியமா மழை பெய்ஞ்சா என் கையிலே குடை இருந்தா கூட அதை மடக்கி வைச்சுடுவா. "கமெஷ்.. நமக்குன்னு கடவுள் கொடுக்கிற ஆசி மழை..அதுக்கு ஒளியலாமா? அப்படின்னு கேட்பா..கை விரிச்சி முகம் மேல மழை துளி பட்டு தெறிக்க சின்ன பொண்ணு மாதிரி சிரிப்பா..அந்த சிரிப்பைப் பார்த்துகிட்டேச் செத்துப் போயிடாலாம்ன்னு தோணும்டா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் கொடுத்த ரியக்ஷன்.

பைனல் இயர் ஊட்டி டிரிப் போனோம். அங்கெ சிக்ஸ்த் மைல்லே இறங்கி நிக்குறோம். சுத்தி புல்வெளி. அதுல்ல வெள்ளை சுடியிலே ஒரு வெண்புறா மாதிரி பறக்கிறா துள்ளித் துள்ளி ஓடுறா...
காமேஷ் இந்த மாதிரி இடம் பார்க்கும் போது தான் கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி ஆகுது.Theres God.... Thank u god nnu சத்தமாக் கத்தற எக்கோ கேட்குது.. என்னையும் பார்த்து நீயும் தாங்க் யூ சொல்லுங்கறா... நான் சொல்ல நினைச்ச 'யூ' வேற... இருந்தாலும் அவ சொல்லச் சொன்னான்னு தாங்க் யூ சொன்னேன்..

திடிரென்னு பேய் மழை பிடிச்சுகிச்சு...அவ நனைய ஆரம்பிச்சுட்டா...she was enjoying rain as usual எல்லோரும் பஸ் பார்த்து ஒட ஆரம்பிச்சோம்... நானும் தான் .. அவ கேஸுவலா நடந்து வந்தா...தலைமுடி அந்த ஈரமான காற்றிலே லேசா ஆட..மார்புகள் மறைய கைக் கட்டிகிட்டு...அதையும் மீறி மார்புகள் திமிற...அழகா அடியெடுத்து வச்சு...she was walking...வெள்ளை டிரஸ்ல்லே ஒரு ஏஞ்சல் நடந்து வந்ததை அன்னிக்குத் தான் லைப்ல்ல பார்த்தேன்...may be that was the first and last time...அசந்துப் போயிட்டேன் அவ அழகைப் பார்த்து...டக்குன்னு பார்த்தா ஒட்டு மொத்த பசங்களும் அவளையேப் பார்த்துட்டு இருக்காங்க...மழை... வெள்ளை உடை...அதிலும் அப்படி ஒரு தேவதை மாதிரி பொண்ணு.... குறுகுறுன்னு பசங்க பேசிகிட்டாங்க....சில வார்த்தைகளை இங்கே சொல்ல முடியாது... எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு..
பஸ்ல்ல எனக்கு பக்கத்து சீட்டில்ல தான் உட்கார்ந்தா...அவளோட வாசம் வேற என்னை அப்படியே உலுக்கி போட்டுருச்சு... நான் மௌனமா இருந்தேன்... உள்ளுக்குளே புகைந்தேன்...
காமேஷ் மழை எவ்வளவு அழகு..அதுல்ல நனையாம இப்படி பஸ்க்குள்ளே இருக்கீயே...உனக்கு ரசனையே இல்லப்பா என்றாள்.
ஆமா ஆமா இப்படி நீ நனைஞ்சா ஊரே வாய் பொளந்து வேடிக்கை பார்க்கும்... நான் நனைஞ்சா யார் பார்ப்பா?.. வெடுக்குன்னு வார்த்தை தெறித்து போக என் உதட்டைக் கடித்தேன். அவ முகம் பட்டுன்னு சுருங்கிப் போச்சு...
காமேஷ் என்ன சொன்னே? ஊரு பார்க்கட்டும்... நீயுமா பார்த்த?
எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல்ல. என்னையே முறைச்சுப் பார்த்துகிட்டு இருந்தா...நான் எதுவுமே பேசாமலே இருந்தேன்...'ப்ச்'ன்னு உதட்டைப் பிதுக்கினவ அப்படியே முகத்தை வேற பக்கமாத் திருப்பிக்கிட்டா... எனக்கு தூக்கி வாரிப் போட்டது.. என் மண்டையிலே 1000 இடி விழுந்த மாதிரி இருந்துச்சு...

college exams முடிஞ்சது...farewell ஆச்சு...எனக்கு அவ கிட்டே ...அவ முகம் பார்க்கவே தைரியம் வரலே..இதோ ஆச்சு அஞ்சு வருஷம்...எனக்குன்னு ஒரு வேலை...லைப் போகுது...
மழை வரும் போது எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரும். கூடவே கோபம் வரும்... என்னப் பெருசாத் தப்பு பண்ணிட்டேன்...ஒரு ஆண்பிள்ளைன்னு இருந்தா ஒரு பெண்ணைப் பார்த்து ரசிக்கிறது தப்பா...அதுக்குன்னு அப்படியா வெட்டிகிட்டுப் போறதுன்னு... கோபம் பொங்கி பொங்கி வரும் அப்புறம் அப்படியே மறந்துப் போயிடுவேன்...
டேய் மாப்பு.. மூணு வருஷமா நான் உன் ரூம் மேட்...ஒரு 300 தடவை ஒண்ணா மழையைப் பார்த்து இருப்போம்...அப்போ எல்லாம் சொல்லாத கதையை இப்போ ஏன்டா சொன்னே?...

சுப்பு சொன்னான்.. கிளம்பும் போது அவ பையன் பேர் என்னன்னுக் கேட்டானாம்...காமேஷ்ன்னு சொன்னாளாம்...சொல்லும் போது அவ கண்ணு லேசா கலங்கிப் போச்சாம்...

இப்போது அவன் சிரிக்கவில்லை..அவன் அந்த பக்கம் திரும்பி நின்றான்...அவன் முகம் பார்க்க என்னால் முடியவில்லை...

tamil10