Thursday, August 10, 2006

தேன் கூடுப் போட்டிக்கு: தீவுகள்

















கூட்டமாகத் தான்
துவங்கினோம்...
போகிற போக்கில்.
போட்டி போட்டு..
நான் முந்தி...
நீ முந்தி என...
தற்சமயம்...
ஆங்காங்கே...
தனித் தனி தீவுகளாய்
நாம் கரையேறி நிற்க...
வாழ்க்கைக் கடலில்..
எங்கெங்கோ
மூச்சைத் தொலைத்து
மூழ்கும் நிலையில்
நம் உறவுகள்...

இக்கவிதையைத் தங்கள் வலைத்தளங்களில் விமர்சித்த நண்பர்கள் பாஸ்டன் பாலா மற்றும் எனது எண்ணம்
ஆகியோர்க்கு என் நன்றிகள்

37 comments:

வெற்றி said...

தேவ்,
நல்ல அருமையான கவிதை. போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

நல்லா இருக்கு தேவ்

முழ்கும் நிலையில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுப்போம்.

சந்திப்பு said...

மூழ்கும் நிலையில் நம் உறவுகள்...

கவிதையும், படங்களும் அற்புதம்.

வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

அனைவருக்கும் புரியக்கூடிய எளிய நடையில்,
ஆழ்ந்த கருத்துக்களுடன் உள்ளது உனது கவிதை

போட்டியில் பங்கு பெற்றமைக்கும், பரிசு பெறுவதற்க்கும் வாழ்த்துக்கள் நண்பா...


அன்புடன்...
சரவணன்.

மனதின் ஓசை said...

தேவ்..
யதார்த்தததை பிரதிபலிக்கும் அருமையான எளிய சிறிய கவிதை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Anu said...

romba romba nalla irukku dev
all the best

ILA (a) இளா said...

//மூழ்கும் நிலையில்
நம் உறவுகள்... //

கவிதை நல்லா இருக்கு நண்பா.
மூழ்காதே ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் அப்படின்கிறாங்களே? அது உண்மையா?

வல்லிசிம்ஹன் said...

தேவ், அருமையான விக்டோரியா ரீஜியா இலைகளா நாம்.
அதில் கூடத் தண்ணிர் ஒட்டுமே.

உறவுகள் தள்ளி(போய்) வந்துவிட்டால் புது உறவுகள் வருமென்று கரையேறும்பொது தெரியும்.
நல்ல படம் அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

பொன்ஸ்~~Poorna said...

Super...

Anonymous said...

கவிதைக்கு ஏற்ற மாதிரி அழகான படம்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கவிதைக்கு ஏற்ற மாதிரி அழகான படம்

Unknown said...

தேவு!! தீவு நல்லா இருக்குங்க!!!

வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்!!!

உங்கள் நண்பன்(சரா) said...

வெறும் வாழ்த்துக்கள் மட்டும் போதாதுங்க அப்படியே அண்ணனுக்கு ஓட்டும் போட்டுறுங்க....
(கள்ள ஓட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்)



அன்புடன்...
சரவணன்.

sri said...

என் ஓட்டு உன்களுக்கே!

ALIF AHAMED said...

அண்ணனுக்கு ஓட்டும் போட்டுறுங்க....
/./

போட்டுடுவோம்

/./
(கள்ள ஓட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்)
/./

என்னயிது சின்னபுள்ளதனமா...வெளியில சொல்லிக்கிட்டு::)??

Unknown said...

நல்ல அருமையான கவிதை. போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் --> நன்றி வெற்றி

நல்லா இருக்கு தேவ் --> நன்றி சிவா

Unknown said...

கவிதையும், படங்களும் அற்புதம்.
வாழ்த்துக்கள். ---> நீண்ட இடைவெளிக்குப் பின் கச்சேரிக்கு வந்திருக்கீங்க சந்திப்பு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

அனைவருக்கும் புரியக்கூடிய எளிய நடையில்,
ஆழ்ந்த கருத்துக்களுடன் உள்ளது உனது கவிதை---> சரா நம்பிக்கைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

தேவ்..யதார்த்தததை பிரதிபலிக்கும் அருமையான எளிய சிறிய கவிதை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ---> கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மனதின் ஓசையாரே

romba romba nalla irukku dev
all the best --> Thanks Anitha

Unknown said...

கவிதை நல்லா இருக்கு நண்பா. --> இளா நன்றி

Unknown said...

//அருமையான விக்டோரியா ரீஜியா இலைகளா நாம்.
அதில் கூடத் தண்ணிர் ஒட்டுமே.//

வள்ளி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

//உறவுகள் தள்ளி(போய்) வந்துவிட்டால் புது உறவுகள் வருமென்று கரையேறும்பொது தெரியும்.//

பழைய உறவுகளின் ஞாபகம் ஈரமாய் கரையேறியப் பின்னும் இதயம் நனைக்கிறதே என்ன செய்ய?

//நல்ல படம் அருமையான கவிதை.
வாழ்த்துகள். //
வாழ்த்துக்களுக்கு நன்றி

Unknown said...

Super... --> நன்றி பொன்ஸ்

Nice one --> நன்றி எண்ணம் எனது. தங்கள் வலைப்பூவினில் வெளியிட்டுள்ள இக்கவிதைக் குறித்தான விமர்சனத்திற்கும் நன்றி.

Unknown said...

கவிதைக்கு ஏற்ற மாதிரி அழகான படம் ---> அனானி , குமரன் எண்ணம் இருவருக்கும் என் நன்றி.

Unknown said...

தேவு!! தீவு நல்லா இருக்குங்க!!!

வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்!!!
--> அருட்பெருங்கோ - வாழ்த்துக்களுக்கு நன்றி

Unknown said...

வெறும் வாழ்த்துக்கள் மட்டும் போதாதுங்க அப்படியே அண்ணனுக்கு ஓட்டும் போட்டுறுங்க.... --> சரா ஊரெல்லாம் வாக்குக் கேட்டுட்டு உன் வாக்கை போட மறந்துப் போயிடாதே நண்பா

Unknown said...

என் ஓட்டு உன்களுக்கே! ---> srivats, ஆதரவை வாக்காகத் தருவதாக வாக்குக் கொடுத்ததற்கு என் நன்றி

அண்ணனுக்கு ஓட்டும் போட்டுறுங்க.... --->மின்னல் உன் ஆதரவுக்கும் பாசத்திற்கும் நன்றி

Unknown said...

Thanks your

மதுமிதா said...

கவிதையோடு சேர்ந்து தனித்தீவான உறவுகள் தாமரை இலைத் தண்ணீராக
இருப்பதை படமாகவும் காட்டியுள்ளது நன்று

நன்மனம் said...

எளிமையான அழுத்தம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

தேவ்...!
இந்த கவிதை ஒரு சங்க'கால கவிதை போல் பொருள் பொதிந்து உள்ளது !

வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

ஆங் நான் இந்த கவி'தை'க்கு ஓட்டு போட்டுவிட்டேன்
:))

உங்கள் நண்பன்(சரா) said...

//சரா ஊரெல்லாம் வாக்குக் கேட்டுட்டு உன் வாக்கை போட மறந்துப் போயிடாதே நண்பா
//

ஓட்டுப் போட்டாச்சு நண்பா! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

வாங்க மதுமிதா அக்கா,

//கவிதையோடு சேர்ந்து தனித்தீவான உறவுகள் தாமரை இலைத் தண்ணீராக
இருப்பதை படமாகவும் காட்டியுள்ளது நன்று //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கைப்புள்ள said...

கவிதை நல்லாருக்கு தேவ். போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்

Unknown said...

//எளிமையான அழுத்தம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்//

வாங்க நன்மனம், எங்கே உங்களைக் வெகு நாட்களாக ஆளையேக் காணும். எங்கேப் போயிட்டீங்க.

வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

//தேவ்...!
இந்த கவிதை ஒரு சங்க'கால கவிதை போல் பொருள் பொதிந்து உள்ளது !//
கண்ணன் உங்க பாராட்டுக்கு என் நன்றி

//வெற்றி பெற வாழ்த்துக்கள்...!
//
கண்ணன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

//ஆங் நான் இந்த கவி'தை'க்கு ஓட்டு போட்டுவிட்டேன்//
பொன்னியின் செல்லம்மாப் படைத்தவரின் பெரிய மனசு என்னை நெகிழ வைக்கிறது.

Unknown said...

//ஓட்டுப் போட்டாச்சு நண்பா! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!//
நன்றி நண்பா

Unknown said...

//கவிதை நல்லாருக்கு தேவ். போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள் //

கைப்பு வாழ்த்துக்களுக்கு நன்றி

Unknown said...

வாசித்து வாழ்த்தி வாக்களித்த அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

tamil10