Thursday, January 04, 2007

வெட்டிபயலும் ஒளவையாரும்....

வணக்கம் மக்கா,

வலையுலகில் பல வகையானப் பதிவுகள் வந்துப் பட்டயக் கிளப்பிகிட்டு இருக்கப்போ கதைகளுக்கானப் பதிவுகள் மிகவும் குறைவு...பெரும்பான்மையானப் பதிவர்களும் அவங்க அவ்ங்க பதிவுல்ல சிறுகதை முயற்சிகள் நிச்சயமாப் பண்ணியிருக்காங்க...ஆனா அதன் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளதுன்னு சொல்லலாம்...

கதைகள் படிக்க ஒரு சூழல் வேணும்.. முக்கால்வாசி பதிவுலக வாசகர்கள் பதிவுகளை அலுவலங்களிலும் அலுவலக நேரத்திலும் படிக்கிற காரணத்தால.. கதைகளுக்கான வாசகர்கள் மிகவும் குறைவோன்னு தோணுது...அலுவலக மனநிலைக்கு நகைச்சுவை மற்றும் செய்தி பதிவுகளே முக்கிய தீனிப் போடுபவைகளாய் அமைகின்றன...இப்படி இருக்க சூழல்ல ஒரு கதையைத் தொடராப் போட்டு அதையும் ரசிக்கும் படி செய்யணும்ன்னா.. கொஞ்சம் கஷ்ட்டம் தான்...

இப்படிப் பட்ட கதைகள் தொடர்களா எனக்குத் தெரிஞ்சு நான் ரசிச்சுப் படிச்ச முதல் தொடர் தளபதி சிபி எழுதிய 'அமானுஷ்ய ஆவி' தொடர் தான்... தலைப்புச் சொல்வது போல் கொஞ்சம் அமானுஷ்யமான தொடர் தான்.. அது ஆச்சு ஒரு வருஷத்துக்கு மேலே...
அதுக்கு அப்புறம் நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ எழுதி பதிவர்களிடம் பலத்த ஆதரவு பெற்ற காதல் பயணம் தொடர்.. மிகவும் அட்டகாசம்...

இந்த டைம்ல்ல கச்சிதமா வந்து தொடர்களுக்கான வாசகர் வட்டத்தை வசிகரிச்சவர் நம்ம வெட்டி பயல்...இவரது ஆரம்பக் கால பதிவுகளை நான் அவ்வளவா வாசிச்சது இல்ல.. பிரபல பத்திரிக்கையில் இவர் பதிவு வந்து இவர் கவனிக்கப்பட்ட நேரம் கூட இவர் பதிவுப் பக்கம் அதிகம் போனதில்லை... எதோ டெக் மண்டையன் என்னமோ எழுதுறான்னு இருந்துட்டேன்... இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது இவரது 'கொல்ட்டி' கதை தான்...

கதை எழுதணும்ங்கற ஆசையோட ஒரு பயலா... டெக் மண்டைன்னு நினைச்சா... கதைச் சொல்லி கலாயக்கற பார்ட்டியான்னு இவரது பதிவுகளை ஒரளவு ரசிக்க ஆரம்பித்தேன்...

வெட்டியோட 'கோழியின் அட்டகாசங்கள்' படிச்சிருக்கீங்களா....?? யம்மாடி நம்ம ஒவ்வொருத்தர் கல்வி வாழ்க்கையிலும் கண்டிப்பா ஒரு கோழியையோ.. வாத்தையோ... கட்டாயம் பாத்துருப்போம்.. ஏன் இன்னும் சொல்லப் போனா நாமேக் கூட அந்த கோழியா இருந்து இருப்போம்... நினைச்சு நினைச்சுச் சிரிக்க ஒரு பதிவு தொடர்...

'லிப்ட் ப்ளீஸ்' ன்னு ஒரு தொடர் அதுல்ல கதைச் சொல்லும் பாங்குல்ல ஒரு புதிய முறையைக் கடைப் பிடிச்சிருந்தார்.. அது அவ்வளவா வாசகர்களைச் சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்..

அதுக்கு அப்புறம் இப்போ சமீபத்துல்ல வெளிவந்த அவரது வெற்றி தொடர் நெல்லிக் காய்...
வெட்டியின் நெல்லிக்காய் ஒரு 30 வயதுக்கு உட்பட்ட வாசகர்களைக் கவரும் கதைன்னு சொல்லலாம்.... இன்னும் சொன்னால் நெல்லிக்காயின் தாக்கம் இருபதுகளின் ஆரம்பம் மத்தியில் இருக்கும் மக்களை வெகுவாக ஈர்த்தது எனச் சொல்லலாம்.

கதையின் மொத்தத்தை ஒரு வரியில் விவரிக்க வேண்டுமானால்... இரண்டு காதல்களின் ஆரம்பமும் முடிவும்... ஒரு காதல் ஆரம்பம் இனிமை... முடிவு கசக்கிறது.. இன்னொரு காதல் நெல்லிக்காய் காதல்... காதல் கதை வாசகர்களை இழுக்கும் அதில் சந்தேகமில்லை.. கதையைப் படிக்க வரும் வாசகனை வசிகரிக்க வேண்டும்...வெட்டி இதில் கெட்டி..

கதையை எழுதப் போகும் போது இதை எல்லாரும் படிக்கணும்ன்னு படைப்பாளி நினைப்பது இயல்பு தான்.. நம்ம வெட்டியும் நினைச்சு இருப்பார்.. ஆனா கதை ஆரம்பித்த ஒரிரு பாகங்களில் தன்னுடைய வாசகர் வட்டம் இன்னார் என்பதை உணர்ந்த வெட்டி கதையின் போக்கை வாசகர்களின் விருப்பத் திசைகளில் செலுத்தத் துவங்கினார்....

அருண், தீபா, கார்த்தி, ராஜி.. .. நினைவில் எளிதில் நிற்கும் பழக்கப் பெயர்கள்...இந்த நால்வரை மட்டுமே மையப்படுத்தி கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று விட்டார் வெட்டி...

மோதலில் துவங்கும் அருண்-தீபா காதலுக்கு கிடைத்த வரவேற்பை ஏனோ வெட்டி இயல்பாய் மலர்ந்ததாய் சொல்லப்பட்ட ராஜி-கார்த்தி காதலுக்குப் பெற்று தரவில்லை...அதனால் அந்தக் காதல் தோற்கும் போது படித்தவர் மனத்தை அது பாதிக்கவில்லை...அருண்-தீபா காதலைப் பற்றி சொல்லும் போது உருகும் வெட்டி... கார்த்தி-ராஜி காதலைச் சொல்லும் போது அவ்வளவாக ஒட்டாமலே நிற்கிறார். அருண்-தீபா காதல் வெட்டியின் உள்ளக் காதலா அருகினிலிருந்து உணர்ந்த காதலா என்ற சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது...இந்தக் காதல்கள் அரங்கேறி நடக்கும் களம் பல வாசகர்களுக்கும் பழக்கமான ஐ.டி.பணியிடம் என்பதால் அலுவலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் புதியவர்களை நெல்லிக் காய் நிரம்ப கவர்ந்து விட்டது. கதையின் போக்கினுடே சொல்லப் படும் சங்கதிகளில் ஒரு ஐ.டி. இளைஞனின் மேலோட்டமான பார்வையாய் வெட்டியின் வார்த்தைகள் வருகின்றன....

மிடில் ஏஜ் மக்கள் இந்தத் தொடரை எவ்வளவாய் ரசித்திருப்பார்கள் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை...ஆனால் வாழ்க்கையின் இந்த SWEET NOTHING DAYSஐ முடிந்த வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றார் வெட்டி என்றே சொல்லலாம்.

முடிவினில் எல்லாவற்றுக்கும் முடிச்சுப் போடும் தமிழ் சினிமா பார்மூலா படி திருமணம்... குடும்ப விருந்து... கதைப் பெயர் விளக்கம் என முடித்திருப்பது மசாலா டச்....

"குறைகள் இன்றி எந்தப் படைப்பும் வருவதில்லை... நிறைவான படைப்பு தந்து விட்டேன் என்று எந்த படைப்பாளியும் திருப்தி அடைந்ததில்லை...."

நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணிக் குடிச்சாச்சு.... இனிக்குது... இனிப்பு ஆறுசுவைகளில் ஒண்ணு மட்டுமே.. மத்தச் சுவைகளையும் பரிமாறுங்க...

ஆங்..தலைப்புல்ல டவுட்டா... விளக்கம் வேணுமா...... ஆகா..... நீங்களே புரிஞ்சுத் தெரிஞ்சு பிரகாசமாகுங்க மக்களே....

16 comments:

Unknown said...

/அதுக்கு அப்புறம் நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ எழுதி பதிவர்களிடம் பலத்த ஆதரவு பெற்ற காதல் பயணம் தொடர்.. மிகவும் அட்டகாசம்.../

ஹ..ஹி..ஹி.. எனக்கு ஒரே சிப்பு சிப்பா வருது தலைவா...

சரி சரி உங்களுக்காகவே அடுத்து ஒரு மினி காதல் தொடர்கதை எழுதிடுவோம்!!

கதிர் said...

நல்ல அலசல்!

//மோதலில் துவங்கும் அருண்-தீபா காதலுக்கு கிடைத்த வரவேற்பை ஏனோ வெட்டி இயல்பாய் மலர்ந்ததாய் சொல்லப்பட்ட ராஜி-கார்த்தி காதலுக்குப் பெற்று தரவில்லை...//

கதையின் நாயகர்கள் அவர்கள், சைடு நாயகர்களுக்கு அவ்வளவுதான் குடுக்க முடியும் போலருக்குன்னு நான் நினைச்சேன்.

அதே மாதிரி நீங்களும் சொல்லிடிங்க!

"சிட்டிசன்கள்" எழுத வருவதே ஆச்சரியம் இதுல தொடர்கதை எழுதி பாராட்டு பெறுவதுதான் வெட்டியின் திறமை.

பல வாசகர்களை பெற்றுத்தந்த நெல்லிக்காய் ஒரு சிறப்பான முன்னுரையும் பெற்றுத்தந்துள்ளது.

நானும் இணைகிறேன்.

வாழ்த்துக்கள்.

ஜி said...

அருமையான விமர்சனம்...

சும்மா 'நச்'சுன்னு இருக்கு...

வெட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

நாமக்கல் சிபி said...

தேவ்,
அட்டகாசமான விமர்சனத்திற்கு நன்றி!!!

//'லிப்ட் ப்ளீஸ்' ன்னு ஒரு தொடர் அதுல்ல கதைச் சொல்லும் பாங்குல்ல ஒரு புதிய முறையைக் கடைப் பிடிச்சிருந்தார்.. அது அவ்வளவா வாசகர்களைச் சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்..//
இந்த கதைக்கு தான் நான் அதிகமா ஹோம் வொர்க் செய்தேன்.. நிறைய தகவல்கள் தேவைப்பட்டன. ஒரு வேளை காதல் கதை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டார்கள் போலும்...

நாமக்கல் சிபி said...

//மோதலில் துவங்கும் அருண்-தீபா காதலுக்கு கிடைத்த வரவேற்பை ஏனோ வெட்டி இயல்பாய் மலர்ந்ததாய் சொல்லப்பட்ட ராஜி-கார்த்தி காதலுக்குப் பெற்று தரவில்லை...//
இருக்கலாம்... ஏனென்றால் இந்த காதல் எப்படி மலர்கிறதுனு சொல்ல நான் ஆசைப்படவில்லை... ஆனால் ஏன் பிரிகிறது என்பது மட்டுமே முக்கியமாகப்பட்டது...

அதுவுமில்லாமல் நான் புரிந்து கொண்ட மற்றொரு விஷயம் கதை மொத்தமும் எழுதி முடித்தவிட்டே பதிவிட ஆரம்பிக்க வேண்டும்... இல்லையென்றால் ஒரு சில அவசர வேலைகளால் கதையை அறைகுறையாக முடிக்க வேண்டி வரலாம்...

நாமக்கல் சிபி said...

//அருண்-தீபா காதலைப் பற்றி சொல்லும் போது உருகும் வெட்டி... கார்த்தி-ராஜி காதலைச் சொல்லும் போது அவ்வளவாக ஒட்டாமலே நிற்கிறார். அருண்-தீபா காதல் வெட்டியின் உள்ளக் காதலா அருகினிலிருந்து உணர்ந்த காதலா என்ற சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது...//
ஆரம்பிச்சாச்சா???
இப்படியே ஒவ்வொரு காதல் கதைக்கும் சொன்னா நான் எங்க போவேன் :-)

எல்லாமே கற்பனைதான்...

நாமக்கல் சிபி said...

//முடிவினில் எல்லாவற்றுக்கும் முடிச்சுப் போடும் தமிழ் சினிமா பார்மூலா படி திருமணம்... குடும்ப விருந்து... கதைப் பெயர் விளக்கம் என முடித்திருப்பது மசாலா டச்....//

எனக்கே அசிங்கமாத்தான் இருந்துச்சு... ஆனா மக்கள் விரும்பறாங்களே! தனி மடல் மற்றும் ஆன் லைன் எங்க பார்த்தாலும் ஏன் இப்படினு கேட்டு கொல்றாங்க. சரினு முற்றும்னு போட்ட 11 வது பகுதிய தொடரும்னு மாத்திட்டேன் :-(

என்ன இருந்தாலும் அவர்களின் சந்தோஷம் தானே முக்கியம் :-)

நாமக்கல் சிபி said...

//"குறைகள் இன்றி எந்தப் படைப்பும் வருவதில்லை... நிறைவான படைப்பு தந்து விட்டேன் என்று எந்த படைப்பாளியும் திருப்தி அடைந்ததில்லை...."//

சத்தியமான வார்த்தைகள்...
அடுத்த கதை சீக்கிரமே வரும்...

Unknown said...

//சரி சரி உங்களுக்காகவே அடுத்து ஒரு மினி காதல் தொடர்கதை எழுதிடுவோம்!! //


அருட்பெருங்கோ... நிச்சயமாப் போடுங்க... படிக்க ஆவலாக் காத்திருக்கேன் நன்றி!!!

Unknown said...

//பல வாசகர்களை பெற்றுத்தந்த நெல்லிக்காய் ஒரு சிறப்பான முன்னுரையும் பெற்றுத்தந்துள்ளது.

நானும் இணைகிறேன்.

வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்களில் நீங்களும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.. வெட்டியின் அடுத்தப் படைப்பை எதிர்பார்ப்போம்.

Unknown said...

//அருமையான விமர்சனம்...

சும்மா 'நச்'சுன்னு இருக்கு...

வெட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... //

நன்றி ஜி

Unknown said...

வெட்டி உங்க விளக்கங்களைச் சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்க... படிக்க உங்களுக்குன்னு ஒரு வாசகர் வட்டமிருக்கு நன்றி.

ஜொள்ளுப்பாண்டி said...

கலக்கலான உங்க சினிமா விமர்சனம் இப்போ ப்ளாக்குக்குமா ?? பின்னுரீயளே தேவு !! :)))

MyFriend said...

இவ்வளவு நாளாய் உங்களோட பக்கம் 78-இல் மட்டும்தான் சுற்றிக்கொண்டு இருந்தேந். சென்னையிலேயும் கச்சேரி நடத்துறீங்கன்னு தெரியாது.

உங்க பெயரை தமிழ்மணத்துல புதிய இடுகையிட்டிருப்பதை பார்த்தவுடன் உடனே அந்த லிங்கை க்ளிக் செய்தேன். தலைப்பை கூட படிக்கவில்லை. அவ்வளவு ஆர்வம். புதியதாய் கதை எழுதிவிருப்பீங்க.. படிக்கலாம்ன்னுதான்.

வந்தவுடன் ஒரு ஷாக். என்னடா.. என்னுடைய ப்ளாக்குக்கு வந்துட்டோமோன்னு.. ஒரே தெம்ப்ளேட். ஒரே கலர். ஹீ ஹீ..

வெட்டிப்பயல் கதையை பற்றி சொன்னீங்க.. நீங்க எப்போ புது கதை எழுத போறீங்க. ஆர்வமாய் காத்திருக்கேன். :-)

Unknown said...

வாங்க மை பிரெண்ட் கச்சேரிக்கும் அடிக்கடி வாங்க... வந்து கலாட்டாப் பண்ணுங்க...

கதை வெகு விரைவினில் வெளிவரும்.. பொறுத்திருங்க...

Unknown said...

பாண்டி ஓம் பதிவுக்கும் ஒரு விமர்சனம் போட்டுருவோமா.. ஒன் ரசிகைகளும் ரசிகர்களும் நம்ம பதிவு பக்கம் வருவாயங்க இல்ல:)

tamil10