Thursday, March 29, 2007

ஆபிஸருக்கு இன்னிக்கு அப்ரேசல் - 3

ஒரு வாறாக பொழப்பைக் கத்துக்கிட்டு எதோ தக்கா புக்கான்னு வேலையைப் பாத்துகிட்டு இருந்த நேரம் நம்ம டேமேஜர் கொடுத்த இமசை இருக்கே அதைச் சொல்லி மாளாதுங்க...ஒரு தனி பொஸ்தகமே போடலாம்..

போன்ங்கற ஒரு பொருளை கிரகாம் பெல் கண்டுபிடிச்சதே இந்த கிரகம் பிடிச்ச டேமேஜர் என்னைய திட்டி திண்டாட வைக்கிறதுக்குத் தானோ நான் நினைச்ச நாட்கள் ஏராளம். இத்தனைக்கு அந்த ஆள் சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருபது அடி தூரம் தான் இருக்கும்...

எந்த அள்வுக்கு வெறுப்பு ஏத்துவார்ன்னா... நான் பக்கத்துல்ல நின்னுகிட்டு இருந்தாக் கூட என் டெஸ்க்குப் போய் போனை எடுக்கச் சொல்லிட்டுப் போனைப் போடுவார்...மனுசனுக்கு நானும் மரியாதைக் கொடுத்துப் போனை எடுத்தா.. ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...ஒரு மனுசன் எம்புட்டுத் தான் தாங்குவான்.. என்னத் தான் நான் கைப்புள்ளயின் தீவிர ரசிகனா இருந்தாலும்.. அப்பப்போ அந்த ஆளு மேல விருமாண்டி காளை மாதிரி மோதி முட்டி வச்சிரலாம்ன்னு தோணும் ஆனா முடியாது...

ஒருக்கா பின்னாடி ஓட்டல்ல எதோ புதுசா திங்குற ஐட்டம் ஒண்ணு போட்டுருக்காங்கன்னு எல்லாரும் எடுத்துச் சொல்லி ஆசைக் காட்ட அது எதோ ஒரு வியர்டு ஐட்டம் போலிருக்கும்.. பாதி தூக்கத்திலிருந்தக் கோழியைத் தட்டி எழுப்பி கழுத்தைத் திருகி கொழம்புல்லப் போட்டாய்ங்கப் போல.. அது விட்ட சாபமோ என்னவோ... தின்ன எனக்கு வயிறு விசில் அடிச்சு வில்லங்கமாகி வில்லுப்பாட்டாடிருச்சு..

மனுசன் அவஸ்தையிலே அவ்சரமாப் போய் உக்காந்து இருந்தா அங்கிட்டும் அந்த ஆள் போன்.. மொபைல் போன் வேற கூன்னு கூவுது.... முழு ரிங் விட்டுட்டு சும்மா இருந்தேன்.. மறுபடியும் அடிக்கிறார் அந்த ஆளு.. என்னை விட என் வயிறு பட்ட பிலீங் இருக்கே அதெல்லாம் பதிவுல்ல விவரிக்க முடியாத வேதனை...

சரின்னு பல்லைக் கடிச்சுகிட்டு... பாஸ் ஐ யாம் இன் டீப் டிஸ்டெரஸ்... அப்படின்னு ஆரம்பிச்சு நடந்த சம்பவம் துவங்கி நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு வரைக்கும் பயங்கர எமோஷனலாச் சொல்லி முடிக்கிறேம்... ஓகே ப்னிஷ் இட் பாஸ்ட் அன்ட் கம் வீ ஹேவ் எ மீட்டிங் இன் நெக்ஸ்ட் 5 மினிட்ஸ்ன்னு சொல்லுறார்...

யோவ் நான் என்ன அஞ்சப்பர்ல்ல உக்காந்து நெஞ்செலும்பு சூப் வாங்கி சப் கொட்டி குடிச்சிகிட்டு இருக்கேன்னா சொன்னேன்.... என்ன நிலைமையிலே இருக்கேன் வெக்கம் எல்லாம் விறகாக் கட்டி வித்துட்டு உங்கிட்டச் சொன்னா.. ப்னீஷ் இட் பாஸ்ட்ன்னு சொல்லுறீயேன்னு.... அதுக்கு அப்புறம் விவரம் கேக்காதீங்க...

ஒண்ணே ஒண்ணு இப்படி ஒரு நிலைமையிலே தான் என் மொபைல்ல அந்த ஆள் பேரை 'ஹிட்லர்'அப்படின்னு மாத்தி வச்சேன்....

அதுக்கு அப்புறம் அந்த ஆள் கால் எப்போ வந்தாலும் .. என் மொபைல்ல ஹிட்லர் காலிங் அப்படின்னு தெரியும் பாருங்க அதைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்...
இந்த ஹிட்லர் விவகாரம் ஒரு நாள் டீக் கடையிலே நம்ம சகாக்களுக்கும் தெரிய வந்துச்சி.. நமக்கு ஒரு தனி மரியாதைக் கிடைக்க ஆரம்பிச்சது...

அதாவது டீக் கடையிலே நிக்கும் போது அந்த ஆள் கால் வந்துச்சு...

"மாப்பூ யாருடா ஹிட்லர் காலிங்..." பசங்க கேக்க..

"எல்லாம் டேமேஜர் தான் " அப்படின்னு ஆரம்பிச்சு அதன் பின் கதைச் சுருக்கத்தை ஒரு வழியா ஒரு மசாலா டீ.. ரெண்டு கீரை வடைக்கு ஊடே சொல்லி முடித்தேன்...சகாக்களும் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி என்னை உசுப்பு உசுப்புன்னு ஏத்தினதிலே... வெறும் ஹிட்லரா இருந்தவரை..
"தி லிவிங் ஹிட்லரா" மாத்தி மெருகு ஏத்திட்டேன்...

ஹிட்லரின் அராஜகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக் கூடிக்கிட்டேத் தான் போச்சே தவிர குறையவே இல்லை..

ஆப்ரேசல் ஆப்ரேசலுன்னு ஒரு விஷப் பரீட்சை ஒரு நன்னாளில் நிச்சயிக்கப் பட்டது.. நமக்கு அது தான் முதல் அனுபவம்... தனியா ரூம் போட்டு நம்மை நாறடிக்கப் போறாங்கன்னு தெரியாத அப்பாவி பருவம் அது... நல்லா சீவி சிங்காரிச்சு... சென்ட் எல்லாம் அடிச்சு.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தேயச்ச சட்டை எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிப் போனோம்ல்ல ஆபிஸ்க்கு....

உள்ளே போறவன் எல்லாம் பிரியாணி சாப்பிட பெல்ட்டை லூஸ் பண்ணி விட்டுகிட்டு போற மாதிரி போயிட்டு வரும் போது தீ மிதிச்ச கவுண்டமணி மாதிரி முகத்தை வச்சிகிட்டு வந்தாயங்க...

சாயங்காலம் ஆச்சு.. கடைசியா நான்....

நானும் டேமேஜரும் மட்டும் பாக்கி...

டேமேஜர் ஆப் வச்சு ஆப் வச்சு டயர்ட்டா ஆயிட்டார்.. மனுஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடுப்போட இருக்கார்...

"வெல் தேவ்... வீ வில் கோ த்ரு யுவர் அப்ரேசல் வித் அ காபி"

காபி வித் அனு.. வந்தக் காலத்துக்கெல்லாம் முன்னாடி ந்டந்தது இது.... சொல்லிட்டு மௌசன் யாருக்கோ போன் பண்ண ட்ரைப் பண்ணிகிட்டே இருந்தார்.. போன் போகவே இல்லை...

"SEEMS LIKE SOME PROBLEM WITH MY MOBILE..CAN I USE UR MOBILE"

அப்படின்னு கேட்டார்...

நானும் ரொம்ப பவ்யமா "சொரிங்க ஆபிசர்" ன்னு முட்டியை மடக்கி போனை அவர் கையிலே கொடுத்தேன்.

அங்கிட்டு தான் விதி வில்லனா மாறி என்னை வம்புல்ல கோர்த்து விட்டு கிளாப் அடிச்சது..

"WAIT A MINUTE>> I WILL TRY CALLING U AND CHK IF MY MOBILE IS OK BEFORE I TRY ON UR PHONE"

இடது கையிலே என் போன்.. வலது கையிலே அவர் போனில் நம்பரைத் தட்டுறார்....நானும் படு ஸ்டைலா பவ்யமாப் போஸ் கொடுத்தப் படி மூஞ்சைச் சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு நிக்குறேன்...

அவர் கடைசி நம்பரை அழுத்தும் போது தான் என் மூளைக்குள்ளே மின்னல் வெட்டுது.... வெட்டி என்னப் பயன்.. என் போனிலே இடி விழ்ந்துருச்சு...

"தி லிவிங் ஹிட்லர் காலிங்ன்னு " மினுக்மினுக்குன்னு மொபைல் ஸ்கிரீன் டாலடிக்க... அந்தாளு முகத்துல்ல சுனாமி சுரண்டிட்டுப் போன எபெக்ட்

அந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருது...அதே சமயம் அப்ரேசல் நினைப்புக்கு வர... சொ.செ.சூ அப்படின்னா என்னன்னு விளக்கம் புரியுது... இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா?

டீச்சருக்கே பரீட்சை...இந்தாங்க கேள்வித் தாள்!!!

ஏலேய் தேவ்.. நீயும் தான் ஒரு 60 - 70 பதிவுப் போட்டுருப்ப... மொத்தமா எத்தனைப் பின்னூட்டம் வாங்கியிருப்ப... என்னையப் பார்த்தல்ல.. 500 தாண்டிப் போயிட்டுருக்கோம்... கொஞ்சம் தள்ளி நில்லு.. ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு தனக்குத் தானே அறிவித்துக் கொண்ட மனச்சாட்சி எகத்தாளத்தில் குதித்தது...
அடேய் ஸ்டார் எல்லாம் உனக்குப் பேட்டிக் கொடுத்தப் புண்ணியாவான்கள் தான் நீ வெறும் ரிப்போர்ட்டர்.. ஆனா நீ என்னமோ ஓவர் பில்டப்புல்ல திரியற.. 500 வந்தாலும் நீ கேட்டக் கேள்வி நல்லாயிருக்குன்னு ஒரு 4 பேர் சொல்லியிருப்பாங்களா.. ம்ஹும் இப்படி எல்லாம் கேக்க நினைச்சேன்.. உச்சியிலே உக்காந்து உடுக்கு அடிக்கிற.. வுழுந்தா தெரியும்டீ சேதின்னு சும்மா இருந்தேன்..

அப்புறம் என்ன எதோ தீவிரமாச் சிந்திச்சான்.. பையக் கையிலே எதோ கொஸ்டீன் பேப்பர் மாதிரி தெரிஞ்சது.. நியுசிலாந்துக்கு எந்தப் பஸ் போகும்ன்னு கேட்டான்?

என்ன லந்தான்னு கேட்டதுக்கு..உனக்குத் தெரியல்லன்னா விடு... நான் கால் டாக்ஸி புடிச்சு போயிக்குறேன்னு போயிகிட்டே இருந்தான்..

அனேகமா அந்த கொஸ்டீன் பேப்பர் துளசி டீச்சருக்குத் தான்னு நினைக்கிறேன்..

சுமார் 500 பதிவுகளைத் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் தன் பதிவுலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய நம்ம துளசி டீச்சரை பேட்டி எடுக்க முடிவு பண்ணி நம்ம நட்சத்திர ரிப்போர்ட்டர் களத்தில் இறங்கியிருக்கான்

இனி ஓவர் டூ துளசி டீச்சர் அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்


பதிவுலகப் பதிவர்கள் சார்பா உங்களுக்குப் பட்டம் கொடுத்தா என்னப்
பட்டம் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறீங்க?


அப்படிக்கேளு என் ராசா! என்னோட வியர்டூலே சொன்னது யாருக்காவது(??)ஞாபகம்
இருக்கா? டாக்குட்டர் பட்டம் கொடுத்துருங்கையா. என்கிட்டே ஸ்டெத்கூட இருக்கு!!!!

பதிவுப் போடுவதற்கு அவசியம் நீங்க நினைக்கிறது என்ன?

இந்தக் கேள்வி எனக்குதானே?
அவசியமுன்னு பார்த்தா என்னுடைய கோடானுகோடி(!!!) வாசகப்பெருமக்கள்
ஏமாந்துருவாங்கன்ற நினைப்பைத் தாங்கிக்க முடியாமத்தான் எழுதறேன்னு
சொல்லலாமா? ( அடச்சீ, ச்சும்மாக்கிட. அது ஒண்ணுமில்லைப்பா.இந்த மனசாட்சிவந்து
பிறாண்டிக்கிட்டு நிக்குது)
தேவ்........... அது ஒண்ணுமில்லை. ச்சும்மா இருக்கமுடியாம எதை எழுதுனாலும் தொடர்ன்னு
ஆரம்பிச்சுக்கறதாலே தொடர்ந்து எழுதத்தானே வேணும்? இப்படித் 'தொடரும் தொடரும்'ன்னு
போட்டே ஒரு அவசியத்தை உண்டாக்கிக்கிறதுதான் உண்மை!

பதிவுலகம் பக்கம் வந்திருக்கும் மூத்த பதிவர்களுக்கும் இளம் பதிவர்களூக்கும்
உறவு நிலை எப்படி இருக்கிரதுன்னு நீங்க நினைக்கிறீங்க? எப்படி இருந்தா
நல்லா இருக்கும்ங்கறது உங்க கருத்து?


உறவு நிலை நல்லாத்தான் இருக்கு. இதுலே எதுக்கு மூத்த, இளைய ன்னு வயசை நுழைக்கணும்?
எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


உண்மை பெயர் குறிப்பிட்டு எழுதும் சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்... சொந்தப் பெயரில்
பதிவு எழுதுவது வசதியா? இல்லை அதனால் தொல்லையா?


சொந்தப்பெயரில் எழுதுறது ஒரு விதத்தில் வசதிதான். உண்மைக்கு மாறான விஷயத்தை எழுதவோ,
அடுத்தவுங்களைப் பத்திக் கன்னாபின்னான்னு எழுதவோ மனசு வராது. இதுவே ஒரு நல்ல செய்கை. இல்லையா?

தமிழ் பதிவுகள் உங்கப் பார்வையில் ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்திருக்கா இல்லை
பதிவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருக்கா? IS IT JUST QUANTIFIED GROWTH
OR QUALIFIED GROWTH?


எழுதணுமுன்ற ஆர்வம் மேலிட்டு, சிலர் நிறையப் பதிவுகளை வச்சுருக்காங்க. நம்ம யாருக்குமே எழுத்துன்றது
தொழில் கிடையாது பாருங்க. புவ்வாவுக்காக வேற வேலை செஞ்சுக்கிட்டு அங்கே இங்கேன்னு நேரம் திருடிக்கிட்டு
எழுதறோம். சில பதிவுகளைப் பார்த்தாத் தொடக்கத்துலே இருந்த ஜோர் இருக்காது. அதுனாலே பதிவுகளுக்கும்
நாமே ஒரு கட்டுப்பாடு வச்சுக்கிட்டா......... அது நிறையப்பேரால் படிக்கப்படும் வாய்ப்பு இருக்குமுன்னு நான்
நினைக்கறேன். இப்பக் கணக்குக்கு 1800 போல வருது. படிக்க நேரம்?

பெண் பதிவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா?

நான் இருக்கட்டும், உண்மைக்குமே நீங்க இதை ஒத்துக்கறீங்களா? இந்த மாதிரி புரளியை
யார் கிளப்பி விடுறாங்க?

கிசுகிசு பதிவுகள் அவ்சியமா? அதுல்ல உங்களைப் பற்றி செய்தி வந்தா ரசிப்பீங்களா?

வெகுஜனப் பத்திரிக்கைகள் காசு பண்ணறதுக்காக இப்படிக் கிசுகிசுக்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கு. இந்தக்
கேவலம் எல்லாம் நமக்கு வேணுமா? மாற்று ஊடகம் வேணுமுன்னுதானே பதிவு எழுதவோ, பதிவுகளைப் படிக்கவோ வர்றோம்?
என்னப் பத்தின கிசுகிசு வந்தா( வந்தா என்ன.வந்தா? அதான் நாலைஞ்சுமுறை வந்துட்டதே) அடப் போங்கடான்னுட்டு
போய்க்கிட்டே இருக்கறதுதான். எனக்கு இதைப் பத்திக் கவலைப்பட நேரம் இல்லை. பதிவு எழுதணும் எனக்கு........ ஆமா.

எனக்குத் தெரிஞ்ச வரை உங்கள் பதிவுகளில் ஆணாதிக்க எதிர்ப்பு பார்க்க கிடைக்காது...
( தவறாக இருப்பின் திருத்துங்கள்) உங்கள் ஆண் சமுதாயத்தின் மீது எந்த விதமான
வருத்தமும் கிடையாதா?


எதுக்குப்பா ஆணாதிக்கம், பெண்ணாதிக்கமுன்னு சர்ச்சையை வளர்த்துக்கிட்டு நேரம் போக்கணும்? அந்த
நேரத்தை நம்மோட அறிவை வளர்க்கரதுக்கும்( பதிவுகள் படிச்சான்னு கேக்காதீங்க) ஆக்க பூர்வமா செய்ய
வேண்டியதைச் செஞ்சுக்கிட்டும் இருந்தா எந்த ஆதிக்கமும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
வளர்ந்துறமாட்டோமா?

ஆண் சமுதாயத்துமேலே எனக்கிருக்கற ஒரே ஒரு வருத்தம் என்னன்னா............ஒரு சிலர்( கவனிங்க ஒரு சிலர்) பெண்ணைத் திட்டணுமுன்னா அவள் என்ன செஞ்சாளோ அந்த செய்கையை விட்டுட்டு, அவளுடைய ஒழுக்கத்தை கேவலமாப்பேசி சேறு எறியறது. இது தனக்கே அசிங்கமுன்னு எப்பத்தான் உணருவாங்களோ?

பதிவுகள் பொருத்த வரை நீங்க ஒரு VORACIOUS READER எந்த விதமானப் பதிவுகள்
தேவை இல்லாதது அப்படின்னு நினைக்கிறீங்க? எந்த விதமானப் பதிவுகள் அதிகம்
வரணும்ன்னு நினைக்கிறீங்க?


என்னைப் பொறுத்தவரை ஜாதி, மதப் பதிவுகள் தேவையே இல்லை. பதிவு எழுதி ஜாதியை ஒழிக்கவும் முடியாது. ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக எதாவது செய்ய முடியுமுன்னா அதைத் தன்னோட வாழ்க்கையில் கடைப்பிடிச்சாப் போதும். சிலர் குதிரைக்கு கண்பட்டை போட்டுருக்கறமாதிரி விடாம எழுதிக்கிட்டே இருக்காங்க. இதையெல்லாம் யாராவது படிக்கிறாங்களான்னு அவுங்களுக்கே தெரியணும்.

மத்தபடி பதிவுகள் எதைப் பத்திவேணுமுன்னாலும் இருக்கட்டுமே. அவுங்கவுங்களுக்குப் பிடிச்சதைப் படிச்சுக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

பதிவுகள் போடுறது கிட்டத் தட்ட ஒரு ADDICTION மாதிரி ஆகிட்டு வருது... இது நல்ல விஷ்யமா?

இல்லவே இல்லை. கடைசியில் இதுக்கு ஒரு 'ரீஹேப் செண்ட்டர்' திறக்கும்படியா ஆகப்போகுது:-))))

பின்னூட்ட நாயகின்னு பெயர் வாங்குனவங்க நீங்க.. சொல்லுங்க இந்த பின்னூட்ட விளையாட்டுக்களை
நிறைய பேர் எதிர்க்கிறாங்களே.. அதனால் அப்படி என்ன ஆக்கபூர்வமான விழைவு
இருக்குன்னுச் சொல்லுங்க?


பின்னூட்டங்களை வச்சு ஒரு பதிவு நல்லதா, சிறந்ததான்னு சொல்ல முடியாதுன்னு ஆரம்பத்துலே இருந்தே
நான் சொல்லிக்கிட்டு வர்றேன். 'நாளைக்கு திங்கக்கிழமை'ன்னு ஒரு வரியிலே பதிவு போட்டுப்பாருங்க. அதுக்கு ஒரு அம்பது பின்னூட்டம் வரும். பின்னூட்டங்கறது நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க மாதிரி. வர்றவங்களை வாங்கன்னு சொல்றது ஒரு மரியாதைக்காக. வீட்டுவாசலிலே ஒவ்வொருத்தரா வந்து பத்துப்பேர் சேர்ந்தப்புறம்தான் வாங்கன்னு எல்லாரையும் கூப்புடுவோமா? இதுலே விளையாட்டு எங்கெ வந்துச்சு? எதிர்க்கறது அவுங்கவுங்க விருப்பம்.
வள்ளுவரே விருந்து, அனிச்சம்பூன்னு எழுதி வச்சுட்டார் இல்லையா?

ஆங்கிலப் பதிவுகளும் படிக்கும் பழக்கமுடையவ்ர் நீங்கள்.. தமிழ் பதிவுகளுக்கும்
நம்ம இந்திய மக்கள் இடும் ஆங்கிலப் பதிவுகளுக்கும் என்ன வேற்றுமை காணுகிறீர்கள்?


ஆங்கிலப்பதிவுகள் படிக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சுங்க. எல்லாம் கனி இருக்கக் காயாப் போச்சு.அதனாலே
படிக்காம அதைப் பத்திச் சொல்றது நியாயம் இல்லை பாருங்க.

மூத்தப் பதிவரான நீங்க நம் தமிழ் பதிவர்களின் தனிமனிதத் தாக்குதல்கள்
தவிர்க்க ஒரு யோசனைச் சொல்லுங்களேன்?


தாக்கணுமுன்னு வந்தவுங்க அடுத்தவுங்க யோசனையைக் கேட்டுக்கிட்டு இருப்பாங்களா?
திருடனாப் பார்த்துத் திருந்தணும்.

கடைசியா.. ஒரு கவிதைச் சொல்லுங்களேன்... சும்மா நம்ம கச்சேரிக்காக முயலுங்களேன்

இப்படி மாட்டிவிடப் பாக்கறிங்களே! கவிதைக்கும் எனக்கும் காத தூரம். அனாவசியமா என்னைத்
'திருட' வச்சீங்கன்னா அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது:-)))))

சற்று முன்:பதினாறு வயசு அயிடுச்சா உங்களுக்கு?

துபாய்க்கு வெகு அருகில் இருந்த பாலைவனத்தில் இருந்து நம் அருமை நண்பர் தம்பி தந்த தகவலாவது...

"இங்கே பாலைவனம் முழுக்க பெரிய அளவில் கூடாரங்கள் போடப் பட்டிருக்கு... பெர்சியா தரைவிரிப்புக்கள் விரிக்கப் பட்டிருக்கு...செயற்கை முறையில் பேரீச்ச மரங்கள் அளவுக்கதிகமா நடப்பட்டிருக்கு...

பிரமாண்டமான ஓட்டக் ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பத் தயாராகிட்டு இருக்கு...

பிரபல் அரேபியக் குத்துப் பாட்டு கலைஞர் சோனா சொக்கனாதை ஷேக் தலைமையில் கானாக் கச்சேரிக்கு மைக் டெஸ்டிங் நடந்துகிட்டு இருக்கு...

எண்ணெய் டின்களோடு அரேபிய ஷேக்கள் அங்கும் இங்கும் அலையறாங்க...

வண்ணப் பலூன்கள்...ராட்சச அளவில் வானில் தெரிகின்றன....

முக்குன.. மன்னிக்கவும் முக்கிய விருந்தினர்களுக்கானப் பாதையில் காவல் பலமா இருக்கு..அந்தப் பக்கம் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை..

இந்தியா பெங்களூர் பேக்கரியில் இருந்து செய்யப்பட்ட் 16 கிலோ கேக்கும்.. தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்ட மக்ரூனும் வந்து இறங்கியிருக்கு...

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அந்த ஒட்டகங்களுக்குப் பின்னால் ஒளிந்துச் செலவதாய் விழாவுக்கு வந்தவர்கள் பரபரப்பாய் பேசிக்கொண்டார்கள்

இதோ.. நம்ம ஆசிப் மீரான் அண்ணாசி இப்போத் தான் வந்து இருக்கார்.. அவருக்குப் பின்னாலே நிலவு நண்பன்... அபி அப்பா.. பாஸ்ட பவுலர்.... இன்னும் பல பதிவர்கள் வந்து கிட்டு இருக்காங்க...

துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு அப்புறம் துபாய் களைக் கட்டுவது இந்த் ஒரு விஷ்யத்துக்கு மட்டும் தான்

என்னனு கேக்குறீங்களா.. வருசா வருசம் கொண்டாடப்படும் பெனாத்தல் திருவிழா தான்...

விழாவுக்குப் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் வந்திறங்கிய நம்ம பெனத்தலாரிடம் மைக் நீட்டி வாங்கியச் சில பதில்கள் உங்கள் பார்வைக்கு..


கே: போன வருசம் 25.... இந்த வ்ருசம் 16.... எத்தனாவது வருஷமா 16ஐக் கொண்டாடறீங்க?

பதில்: இது ஒரு விஷமத்தனமான கேள்வி. எண்ணத்தில் குறைகாணமுடியாமல் எண்ணிக்கையில் குறைகாணும் உங்களின் இந்தக் கேள்வியை நான் முற்றாகப் புறந்தள்ளுகிறேன்.

கே: அதுக்காக இதைக்கூடச் சொல்லக்கூடாதா?
பதில்: இப்பதான் முதல் முறையா 16 ஆவது பர்த்டே கொண்டாடறேன்


கே: அப்ப?
பதில்: போன வருஷம் 25ஆவது பர்த்டே, அதுக்குமுன் வருஷம் 18ஆவது பர்த்டே கொண்டாடினேன். அதனால, இதான் முதல் முறை 16ஆவது பர்த்டே.


கே: இந்தக் கொண்டாட்டங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

Suresh: பதில்: வழக்கமா சிட்னி ஹார்பர் பிரிட்ஜ்லே வாணவேடிக்கையோட என் தொண்டர்கள் கொண்டாடுவாங்க. இந்த முறை கிரிக்கெட்டால அதிர்ச்சி அடைஞ்சிருக்க்றதால சிம்பிளா கொண்டாடுறோம்.


கே: மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்ப்றீங்க?

பதி: இதுவரைக்கும் சொன்னதெல்லாம் நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்குவீங்களா? எல்லாமே மக்களுக்கு சொன்னதுதான்யா!



பெனத்தாலருக்கு நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாமும் தெரிவித்துக் கொண்டோம்

நீங்களும் சொல்லுங்க... ஹேப்பி பர்த்டே பாஸ்.......

சென்னைக் கச்சேரி செய்திகளுக்காக துபாயிலிருந்து தம்பி..

Wednesday, March 28, 2007

அம்மா... உங்க பையன் இப்போ ஆபிஸர் - 2

டெஸ்ட்க்கு தேதி குறிச்சுட்டு டீச்சர் அக்காப் போயிட்டாங்க... பரீட்சைக்கு பாடம் படிக்கல்லன்னா பராவாயில்ல,,, பாடமே தெரியல்லன்னா.. அடக் கொக்கமக்கா.. என்னய்யா பண்றது...?

இருந்த ஒரு ராத்திரியும் யோசனையிலே கழிஞ்சுப் போச்சு... பேசாம நாமளே பேப்பரைப் போட்ட்டுருவோமா

அவங்களா நீ பெயில்ன்னு சொல்லி துரத்தி விட்டா அசிங்கம்... ஆனா அதுக்கு முந்தி நாமளாக் கிளம்புனா... ஆ சிங்கம் ஒன்ணு பொறப்பட்டதேன்னு பில் டப்பு எல்லாம் கொடுக்கலாம்ன்னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தேன்..

பொழுதும் விடிஞ்சிருச்சு... சுரத்தையே இல்லாமா வீட்டுல்ல நாலு இடலியை முழுங்கிட்டு பைக்கைப் பத்திகிட்டுடை எல்லாம் இறுக்கி கட்டிகிட்டுப் போய் இறங்குனேன்...நம்ம பங்காளிகளும் நம்மக் கூட தூங்கி வழிஞ்ச மீதி சிங்கங்கள் தான்.. நம்மளை மாதிரியே பீதியிலே பல வித பீலிங்க்ல்ல நின்னாய்ங்க... பெண் சிங்கங்களாவது பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா அவிங்க கிட்டத்தட்ட கண்ணீரும் கம்பலையுமா நிக்குறாங்க...

ஏன் தேவ் நமக்கெல்லாம் வேலைப் போயிருமோ ஒரு சகோதரி சந்தேகம் கேட்ட நேரம் என் அடி வயித்துல்ல எலி ஓடுன மாதிரி இருந்துச்சு..

இருந்தாலும் பொண்ணுக்கு தைரியம் சொல்லுறது ஒரு ஆண்மகனுக்கு அழகல்லவான்னு சும்மா கிலோ கணக்குல்ல தைரியத்தை அள்ளி விட்டேன்.. இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...

கழுதைப் பிட் அடிச்சாவது பாஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒருத்தர் கையிலும் பாடம் பத்திய சின்ன க்ளு கூட இல்ல.. நம்ம நாயகம்ன்னா நம்மக் கூட சேந்தாங்க எல்லாம் நடு நாயகமா இருக்காங்களே ஒரு சின்ன சந்தோசம்...அந்தப் பரீட்சை ஒரு அக்னி பரீட்சையா அமைஞ்சது,, கேள்விகள் மட்டும் தெரிந்த எனக்கு விடைகள் எந்தத் திசையில் இருக்குன்னுத் தெரியாமல் என் மூளையைக் கசக்கி பிழிந்துப் பதில்கள் எழுதுனேன்..

மிஸ்டர்.பீன் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பீன் பரீட்சை எழுதும் பகுதி பார்த்தீருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கிட்டத் தட்ட எங்க பேட்ச்ல்ல் 23 பேரும் பீன் மாதிரியேத் தான் பரீட்சை எழுதுனோம்..

அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...

பரீட்சை முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு... எதோ சேமினார் பிரசண்டேஷன்ன்னு மைக் முன்னால வலுக்கட்டாயமா ஏத்தி நிக்க விடடாயங்க... வாய்ல்ல வடை சுட்டு ஊருக்குக் கொடுக்கறது நமக்கு கை வந்தக் கலைங்கறதால.. கண்டமேனிக்கு வடையை வறுத்து பொரிச்சு அவிச்சு வந்திருந்தவங்களுக்குக் கொடுத்திட்டோம் இல்ல,,, வந்தவ்ங்களுக்கு நம்ம பேச்சு பிடிச்ச மாதிரி தான் இருந்தது...

வேலை போகாதுடோய்ன்னு மைல்டா மைண்ட் ரிலாக்ஸ் ஆனது அப்போத் தான்.. அதுக்கு அப்புறம் அந்த நிறுவனத்தில்ல நான் ஒன்றரை வருசம் வேலைப் பார்க்கும் வரை என் தேர்வு முடிவுகள் வரவே காணும்... நாங்களும் எதுக்கு ரிஸ்க்ன்னு டீச்சர் பக்கம் மறந்தும் கூட அந்தக் கேள்வியைக் கேக்குறது இல்ல..

இதுக்கெல்லாம் பொறவு எங்களை நாங்க வேலைச் செய்யற இடத்தைப் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க..அங்கிட்டு அவன் அவன் கொடுத்த லுக்ல்ல மறுபடியும் எனக்கு கிலி எடுக்க ஆரம்பிச்சது..

மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டேன்றானுவ... எதோ ரஷ்யா ராணுவத்துக்கு ஆள் எடுத்த மாதிரி முன்னால இருந்த கம்ப்யூட்டர் பாத்து மொறச்சி மொறச்சி பாக்குறான்வா... அதை தட்டுறானவ...

நான் சிரிச்சா.. நம்மளை எளப்பமா ஒரு லுக் வேற விடுறான்வ... கடுப்புக்களைக் கண்டப் படி கிளப்பிகிட்டு இருந்தான்வ.. இவன்வ கூட வேலைப் பாக்குறதுக்கு அந்தப் பரீட்சை ரிசல்டடைக் கேட்டு வாங்கிட்டு கேட்டுக்கு வெளியேப் போய் நாலு பேப்பர் பொறுக்கிப் பொழைக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வச்சிட்டான்வ..

ONJOB TRAINING ஆரம்பிச்சது.. அப்போத் தான் எனக்கு முற்பகல் நடந்த விசயங்களுக்குக் காரணம் எல்லாம் விளங்கிச்சு... ஒரு பெரிய கோணியை என் கையிலேக் கொடுத்து.. தம்பி தேவ் .. போய் தெவை இல்லாத எல்லா ஆணியையும் டக்குன்னு புடுங்கிட்டு வா பாப்போம்ன்னு ஒருத்தன் சொன்னான் ( பின்னாளில் அலுவலத்தில் வன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆந்து வேறு கதை)

ஆமாங்க தேவையில்லாத ஆணின்னு எப்படிங்க் அடையாளம் கண்டுபிடிக்கிறது?

தம்பி நாங்களும் ப்ர்ண்டஸ் படம் பாத்து இருக்கோம்ல்ல எங்க கிட்டவே நக்கலா.. போ போ.. போய் ஆணி புடுங்கு.. நீ புடுங்குறாது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்.. கோணியும் கையுமா அலைய விட்டான்வ...

டேய் இதுக்குத் தானாடா மூணு வேளை சோறு தூக்கம்ன்னு ஒரு மாசம் வாழ விட்டீங்களாடா.. ஆடு வெட்டுரதுக்கு முன்னாடி மஞ்சத் தண்ணி எல்லாம் ஊத்தி உசுப்பேத்தி தலையிலே ஒரே போடா போடுவாங்களே அது மாதிரியாடா அதுக்குப் பேர் தான் இன்டக்ஷ்னாடா.. விவேக் மாதிரி பொலம்பல்ஸாப் போச்சு..

காலையிலே இருந்து சாயங்காலம் போய் ராத்திரி வரைக்கும் சின்சியரா நானும் ஆணி எல்லாம் புடுங்கி கோணிக்குள்ளேப் போட்டுப் போய் கொடுத்தா.. அந்த மேனேஜர் என்னப்பா பூராவுமே தேவையான ஆணியாப் புடுங்கிட்டு வந்துருக்கே.. சரியில்லையே... ம்ம் ஒண்ணு பண்ணு இந்தா இதை எல்லாம் எங்கே புடுங்குனியோ அங்கேயேப் போய் அடிச்சுட்டு தேவை இல்லாத ஆணியை மட்டும் புடுங்கிட்டு வான்னு அசால்ட்டா சொல்லுவார்..

அது மட்டுமில்லை நமக்கு ட்ரெயினிங் கொடுக்குற பங்குக்கு கிட்ட பையனுக்குச் சரியாச் சொல்லிக் கொடுப்பான்னு வேற அட்வைஸ்.. அப்புறம் என்ன கோணி, ஆணி.. புதுசாக் கையிலேச் சுத்தின்னு மறுநாள் பொழப்பு ஆரம்பம் ஆயிரும் அந்த மேனஜர் டார்ச்சர் தாங்க முடியாமப் போயிட்டு இருந்துச்சு

அதுக்கு நான் என்னப் பண்ணேன் தெரியுமா?

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..

மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

Tuesday, March 27, 2007

நாங்க ஆபிஸர் ஆன கதை - 1

வேலைக் கிடைச்சுடுச்சு... படம் பேர் இல்லங்க... முதன் முதலா ஒரு கம்பெனியிலே இருந்து வேலைக்கான ஓலை வந்ததும் நான் தெரு தெருவாப் போய கூவாத குறையா சொன்ன டயலாக் இது...

உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... அப்புறம் நமக்குத் தெரிஞ்ச சொந்தம், பந்தம், பாசம், நேசம், படை பரிவாரம் எல்லாத்துகிட்டயும் சொல்லிட்டு வேலைக்குச் சேந்து ஆபிஸ்ங்கற ஆலயத்துக்குள்ளே நுழைஞ்சது ஒரு சுபயோக தினத்திலே...

நான் ஆபிசரா ஆபிஸ்க்குள்ளே நுழைஞ்ச அதே சமயம் நம்மளை மாதிரியே கோட்டும் சூட்டும் பூட்டும் மாட்டிகிட்டு ஒரு கும்பலே வந்து ஆபிஸை வெறிச்சி வெறிச்சிப் பார்த்துகிட்டு நின்னாய்ங்க...கலர் கலரா நாலைஞ்சுப் பிகர் வேற... ம்ம்ஹும்.. ஹாய் ஹ்லோ.. எல்லாம் சொல்லிக் கொஞ்ச நேரத்துல்ல அம்புட்டு பேத்துக்கு பிரண்ட் ஆயிட்டோம்..

நிதம் காலையிலே கலகலப்பாக் கிளம்பி ஆபிஸ்க்குப் போயிருவோம்..

ஏன்னு கேளுங்க...

அந்த முதல் கொஞ்ச நாள் இருக்கே ஆணி..கோணி..இதுக்கெல்லாம் மீனிங்க்கே தெரியாத பொற்காலம்.. அவங்க செலவுல்ல காலை மதியம் மாலைன்னு வகை வகையா அன்னம் தண்ணி கொடுத்து அவங்கக் காட்டுன அன்பு என்ன? அந்தப் பாசம் என்ன? ஹெச்.ஆர்ல்ல இருந்து ஒரு அக்கா வரும் பாருங்க அப்படி அன்பாப் பேசும்... நமக்கெல்லாம் உருகிரும்...

அப்புறம் ஒரு டீச்சர் அக்கா வருவாங்க... நாங்க வேலைக்குச் சேந்த அந்த நிறுவனத்தைப் பத்தி அருமையாப் படம் எல்லாம் போட்டு பாடம் எல்லாம் நடத்துனாங்க... நான் பாடம் நடக்கும் போது தூங்குனாக் கூடக் கண்டுக்க மாட்டாங்க.. இபப்டி ஒரு டீச்சர் நமக்கு பள்ளிக் கொடத்துல்ல கிடைக்காமப் போயிட்டாங்களேன்னு நான் பீலிங் ஆயிட்டேனாப் பாருங்களேன்... சோறு.. ஏ.சி ரூம் தூக்கம்ன்னு பழைய ராஜாக் காலத்து சுகபோக வாழ்க்கை...

ஒரு நாள் எங்க எல்லாரையும் ஒரு பஸ் வச்சு நம்ம மகாபலிபுரம் பக்கம் கூட்டிட்டுப் போய் ஸ்கூல் பிக்னிக் எல்லாம் ஞாபகப்படுத்திட்டாங்க..ஒரு நா முழுக்க ஒரே விளையாட்டு... கூத்து.. கும்மாளம்ன்னு பின்னி பெடல் எடுத்துட்டோம்... இது வாழ்க்கைடான்னு பேசி பேசிப் பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டோம்...

எல்லாம் நல்லாத் தான் போயிகிட்டு இருந்தது... தீடிரென்னு டீச்சர் அக்கா ஒரு நாள் வந்து அந்த விசயத்தைச் சொல்லுற வரைக்கும்...

கீழே தான் எங்க ஆபிஸ் இருக்காம்.. நாங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குன இடம் வந்து சும்மா ட்ரெயினிங் நடக்குற இடமாம்.. எங்களூக்கு நடந்தது இன்டக்ஷனாம்.. ( இஞ்ஜக்சன்ன்னு எங்காதுல்ல விழுந்தது.. இதுல்ல ஊசி வேறப் போடுவாங்களாமேன்னு பயந்துட்டேன்).. இவ்வளவு நாள் அவங்க நடத்துனப் பாடத்துல்ல இருந்து மறுநாள் டெஸ்ட் வைக்கப் போறேன்னு பெரிய குண்டு ஒண்ணைப் போட்டாங்க

என்னது டெஸ்ட்டா... இதை எல்லாம் நான் தூங்கும் போது தட்டி எழுப்பிச் சொல்லியிருக்கக் கூடாதா? ஒரு மாசமாத் தூங்குன கண்ணு கவலையிலேக் கலங்கிப் போயிருச்சு...

அடுத்ததா அவங்கச் சொன்னது கேட்டு மொத்தமும் நடுங்கியேப் போச்சு.. எதோ பாஸ் மார்க்காம் அதை எடுக்கல்லன்னா வேலையை விட்டுத் தூக்கி வீதியிலே விட்டுருவாங்களாம்...

இதைச் சொல்லும் போது அந்த டீச்சர் அக்கா எங்களைப் பார்த்து.. குறிப்பா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சாங்க...

அடபாவிகளா... வேலைக்குப் போறேன்னு... எப்பவோ விட்டுப் போன உறவுக்கெல்லாம் வம்படியாப் போனைப் போட்டுச் சொல்லியிருக்கேனே.. இப்போ வேலைப் போச்சுன்னா.. அய்யகோ...

தூங்காதே தம்பி தூங்காதேன்னு பழைய எம்.ஜி.ஆர் பாட்டு எல்லாம் லேட்டா என் புத்தியிலே அலறுது.. பட் டூ லேட்..

ஒரு ஆபிஸரின் எதிர்காலமே ஆட்டம் காண ஆரம்பித்தது..

இன்னும் சொல்லுறேன்..

நானெல்லாம் பெரிய ரிப்போர்ட்டர்ங்க

நம்ம மனச்சாட்சிக்கு ரொம்பவும் கைவந்த கலை நம்மளைக் கண்டமேனிக்குக் கேள்வி கேட்டு வைக்கிறது தான்... நான் பதில் சொல்லாமத் தலையைக் கவுத்துப் போட்டு நின்னாலும் அது கேள்வி கேக்குறதை மட்டும் நிறுத்துறதா இல்ல... அது மட்டுமில்லா முதல் பதிவுல்ல நம்மப் பாசக்காரப் பய மனச்சாட்சியும் நம்மக் கூட ப்திவுல்ல வருவான்ன்னு வேறச் சொல்லி அவனை ஏகத்தும் ஏத்தி விட்டாச்சு... என்னப் பண்ணலாம்.. நம்ம மனச்சாட்சிக்கு கைவந்தக் கலையையேச் செய்யச் சொல்லிட்டோம்ல்ல...

இந்தா ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு கெட்டப் போட்டு விட்டாச்சு.. அது பாட்டுக்குக் கேள்விக் கேக்க கிளம்பிருச்சு.. மொதல்ல அந்த வெட்டிப்பயலைக் கேக்குறேன் பாரு கேள்வின்னு என் மெயில் ஐடியில்ல் இருந்து அவருக்கு மெயில் தட்டி அவரும் அதுக்கும் பதில் அனுப்ப... இந்தா இதைப் போடுன்னு என் சட்டையைப் பிடிச்சு கச்சேரியில்ல இடமும் வாங்கிட்டான்.



உண்மையைச் சொல்லுங்க மத்தவங்க பதிவுகளை நீங்கப் படிக்கறது உண்டா? பதிவுகளை எந்த அடிப்படையிலே தேர்ந்தெடுத்து வாசிக்கிறீங்க... இல்ல சும்மா எல்லாப் பதிவுகளையும் படிப்பீங்களா?

வெட்டி: மத்தவங்க பதிவை படிக்காம எப்படிங்க நம்ம ஃபீல்ட்ல இருக்க முடியும்? கண்டிப்பா நிறைய படிப்பேன். இப்ப தான் நேரம் குறைவா கிடைக்குது.

முதல்ல பார்க்கறது தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பகுதிகள் தான். அப்பறம் தமிழ்மணம் வந்திடுவேன். தலைப்பு சுவாரசியமா இருந்தா படிப்பேன். இல்லைனா ஏதாவது ஒரு பதிவுல சுவாரசியமா பின்னூட்டம் போடறவங்க பதிவ படிப்பேன். அப்படியே எனக்கு போடறவங்க, பதிவரா இருந்தா அவுங்க பதிவையும் போய் ஒரு எட்டு பார்த்துட்டு பதிவு பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்திடுவேன். எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...


உங்கப் பதிவுகள் உங்களுக்காகவா இல்ல மக்களுக்காகவா? இல்ல கம்ப்யூட்டரும் கனெக்ஷ்னும் இருக்குங்கறதுக்காக கண்டப்படி கடமையாற்றிகிட்டு இருக்கீங்களா?

வெட்டி: வெறும் மேடை இருக்குனு ஒருத்தவன் எத்தனை நாள் பேசுவான்? சுத்தி நிக்க ஆள் இருந்தா தான் பேசுவான். மக்களுக்கு பிடித்ததை என்னால் எழுத முடிந்த அளவு எழுதுகிறேன். எனக்கும் ஈடுபாடு இருக்கற டாபிக்கா தான் பொதுவா எழுதுவேன். இது கோழி முட்டை கதை தான்.

பின்னூட்டங்கள் தான் ஒரு பதிவின் தர நிர்ணயக் கோல்ன்னு நினைக்கிறீங்களா? அந்தப் பின்னூட்டங்களை தக்க வச்சுக்கறதுக்காக என்ன வேணுமோ அதை எல்லாம் செய்யலாமா?

வெட்டி: அப்படியெல்லாம் இல்லைங்க... பின்னூட்டங்கள் நிச்சயமா தரத்தை நிர்ணயப்பதில்லை. ஆனா என்னை தொடர்ந்து எழுத வைத்தது/வைப்பது பின்னூட்டம் தான். அது ஒரு டானிக் மாதிரி. அதனால தான் தமிழ்மணத்துல உயிரெல்லைல எனக்கு விருப்பமில்லை. ஏதோ நல்லா ஓடறவன் காலை இழுத்து கட்டி வைக்கிற மாதிரி இருக்கு. போற போக்க பார்த்தா இது தான் நல்ல பதிவு. இதை தான் நீங்க படிக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்களோனு தோனுது.


உங்கப் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் உங்கப் பதிவுகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்களா.. இல்லை உங்கள் நட்புக்கு உங்கள் நண்பர்கள் தரும் மரியாதையா?
வெட்டி: நான் நினைப்பது என் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள்னு தான்.என் பதிவுல பின்னூட்டம் போட்டு நண்பர்கள் ஆனவர்கள் தான் அதிக பேர்... நண்பர்களாகி பின்னூட்டம் போடறவங்க ரொம்ப குறைவு. ஏன்னா அவர்கள் சேட்லயும், தொலை பேசி உரையாடல்லயும் சொல்லிடறாங்க.

தமிழ்மணத்தில் கிசு கிசு பதிவுகள் அவசியமா? நம்ம சாம்பு, இரவு கழுகார் போன்றவற்றை சொல்லுகிறேன்.. அதைப் பத்தி உங்க கருத்து என்ன?

வெட்டி: அவசியம் தாங்க. படிக்க சுவாரசியமா இருக்குது இல்லை. ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்றாங்க. அது அவுங்க ஏரியா ஆஃப் இண்ட்ரஸ்ட். பண்ணிட்டு போகட்டுமே. இன்னும் அதிகமா பண்ணா நல்லா இருக்கும். ஆனா யார் மனதையும் புண்படுத்த கூடாது.

வெட்டி பயலில் முக்கால் வாசி வெட்டிப் பேச்சு கால்வாசி எதோ பரவாயில்லைன்னு சொன்னா ஒத்துப்பீங்களா?

வெட்டி: மீதி கால்வாசி எப்படி எனக்கு தெரியாம போச்சு :-)
என் பதிவு பெரும்பாலும் ஆபிஸ்ல வேலை செஞ்சிக்கிட்டே இருக்கும் போது கிடைக்கும் ஒரு ஐந்து நிமிட ஓய்வு நேரத்தில் படித்து சிரிக்க தான். என்னுடைய பதிவு ஒருவரையாவது அவர் கவலையை ஒரு நிமிடமாவது மறக்க வைத்தால் போதும். யாரையும் திருத்த நான் பிறக்கவில்லை. நானே பல குறைகளை கொண்டவன்.

காதல் காதல்ன்னு உருகி கதை எழுதுறீங்களே.. காதல் கதைகளுக்கு அதிகம் வரவேற்பு இருப்பதாலா இல்லை உண்மையிலே நீங்கள் காதல் கட்சியா?

வெட்டி: சுத்தி நிறைய காதலர்களை பார்த்ததால வந்த வினையா இருக்கலாம். பாதி பேர் வீட்ல ஒரே பிரச்சனை வேற கேஸ்ட்ல பண்ணி வெச்சா சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்கனுதான். பசங்க காதலிக்கறனு சொல்றவங்ககிட்ட பேசி பார்த்துட்டு கேரக்டர் ஒத்து வராதுனு கொஞ்சம் ஃபீல் பண்ணா பரவாயில்லை. எதையுமே விசாரிக்காம எதிர்க்கும் போது அந்த பசங்க படற கஷ்டத்த கூட இருந்து பார்த்ததால அந்த மாதிரி கதைகள் வருது. ஆனா நான் எழுதுன கதைகள்ல 50% கதைகள்ல கூட காதல் இருக்காது. ஒரு சில கதைகள்ல ஆண்-பெண் நட்போட முடிஞ்சிடும்.

ஆங்கிலப் பதிவுகள் படிப்பது உண்டா? அதற்கும் தமிழ் பதிவுகளுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

வெட்டி: நம்ம தமிழ் பசங்க எழுதற ஆங்கில பதிவுகளும் தங்கிலிஷ் பதிவுகளும் படிப்பதுண்டு. அவுங்க எதை பத்தியும் கவலைப்படாம ரொம்ப ஜாலியா எழுதறாங்க. அவுங்க வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன இண்ட்ரஸ்டிங் விஷயத்தையும் சொல்றாங்க. ஏதோ டயரி படிக்கிற மாதிரி நல்லா இருக்கு. அங்க படிக்கிறப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்.

பதிவுகளில் பொறுப்பான சமுதாயக் கருத்துக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒரு நிலை வந்தால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?

வெட்டி: எனக்கு பொதுவா கட்டுப்பாடு பிடிக்காது. இந்த மாதிரி சட்டம் வந்தா நான் எழுதறத நிறுத்துறதுக்கு முன்னாடி படிக்கிறத நிறுத்திடுவேன். வாழ்க்கையில நகைச்சுவை முக்கியம். சும்மா சமுதாய கருத்து கருத்துனு மொக்கைய போட்டா சத்தியமா என்னால அரை மணி நேரம் கூட உக்கார முடியாது. ஊர் விட்டு ஊர் வந்திருக்கோம். பேசறதுக்கு கூட ஆள் இல்லைனு தான் வலைப்பதியறோம். கொஞ்சம் இளைப்பாற ஒரு இடம்னு தான் எனக்கு இது இருக்கு.
அப்ப உனக்கு இந்த சமுதாயத்து மேல அக்கறையில்லையானு கேட்டா, வெறும் வாய் சொல் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை. நம்ம எ.அ.பாலா மாதிரியோ செந்தழல் ரவி மாதிரியோ ஃபீல்ட்ல இருங்கி செஞ்சா உண்மையா பாராட்டலாம். நாமும் நம்மால் இயன்றதை பண்ணலாம்.

பதிவுலகில் அரசியல் இருக்கா இல்லையா நேர்மையான பதில் சொல்லு?

வெட்டி: மனுஷனுங்க ரெண்டு பேர் சேர்ந்தாலே அரசியல் தானா உருவாகிடும். பதிவுலகில் அது எப்படி இல்லாம போயிடும்? கண்டிப்பா இருக்கு.

பெண்கள் ஆண்கள் பதிவுகள் என பதிவுலகில் தனித்தனிப் பார்வை தேவையா?
வெட்டி: எந்த மாதிரி கேக்கறீங்கனு புரியல. இப்ப அனுபவத்தை சொல்றாங்கனு பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு. ஆனா சமுதாய கருத்துக்களை பேசும் போது தேவையில்லைனு நினைக்கிறேன்.

ஒரு நாலு முக்கிய பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்விக் கேக்கச் சொன்னா யார் யார் கிட்ட என்னக் கேள்வி கேப்பீங்க... ஒரு கேள்வி நான்கு பேர் சொல்லுங்க?

வெட்டி:

பாபா : ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீங்க?

இ.கொ : பின்னூட்டத்துக்க்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இல்லையா? அந்த நேரத்துல இன்னொரு பதிவு போட்டுடலாம்னு என்னைக்காவது தோன்றியிருக்கா?

கைப்புள்ள : உங்ககிட்ட பேசனதுல இருந்து நீங்க பெரிய புத்திசாலினு தெரியுது (நக்கல் இல்லைங்க. அண்ணன் நிஜமாலுமே ஜீனியஸ் தான்). உங்களை கிண்டல் பண்ணும் போது உங்களுக்கு கொஞ்சமாவது கஷ்டமா இருக்காதா???

நாமக்கல் சிபி : அது ஏன் எந்த பதிவர் புதுசா ஆரம்பிச்சாலும் உங்களையே பிடிக்கறாங்க???




இனி ஓவர் டு வெட்டி அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்...( மனச்சாட்சிப் பயலை அப்படித்தான் கூப்பிடணுமாம் கன்டிசனாச் சொல்லிட்டான்)

சற்றுமுன்: இந்திய வீரர்களும் ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸும்

சற்றுமுன் பதிவு பதிவாளர்கள் கவனிக்கத் தவறிய செய்தி... அவங்க கோல் விட்டதால நம்ம கச்சேரியில்ல போட வேண்டியதாப் போச்சு...

சிறில் அலெக்சைக் கால் பண்ணா ஸ்லீப்பிங் நோ டிஸ்ட்ரபன்ஸ்ன்னு வருது...
இந்திய டீம் சம்பந்தமான நியூஸ்ங்கோன்னு சொன்னாலே மணிகண்டன்.. பேட் வெர்ட்ஸ்ல்ல திட்டுறார்..

சரி சரி... நானேச் சொல்லிடுறேன்

ஜமைக்கா இருக்க ரிச்சர்ட்ஸ் நகர் டைம்ஸ் சிறப்பு செய்தியாளர் மொக்கப் போண்டா டுமேட்டோங்கறவர் நம்ம இந்தியால்ல கைக்குக் கிடைச்ச நம்பருக்குச் சுத்திச் சொன்னத் தகவ்ல்...

" பாப் யூல்மர் கொலை வழக்கில் இது வரைச் சொல்லிக் கொள்ளும் படி பெரிதானக் கைதுகள் எதுவும் ந்டைப்பெறாத நிலையில்... வருத்தம் தோய டீக் குடித்துக் கொண்டிருந்த ஸ்காட்லாண்ட் யார்ட் மற்றும் ஜமைக்காப் போலீஸ் மார்க் ஷீல்ட்ஸ் தீடிரென ஒரு முடிவு எடுத்துள்ளாராம்

அதாவது இந்தக் கேசில் சந்தேகத்தின் பேரில் இந்திய அணியினர் அனைவரையும் கைதுச் செய்து ஜமைக்காவின் சிறை ஒன்றில் கடுமையானப் பாதுகாப்போடு அடைக்க முடிவுச் செய்துள்ளாராம்.. இது குறித்து மொக்காபோண்டோவிடம் ஆப் த ரிக்கார்ட்டாக ஜமைக்காப் போலீஸ் கான்ஸ்டபிள் ஓருவர் கூறியதாவது...(மைக்கேல் ஹோல்டிங் ACCENTல் படிக்கவும்)

"THE INDIAN PLAYERS ARE TERRIFIED TO GO BACK HOME SEEMINGLY HORRIFIED AT THE WAY THE INDIAN FANS HAVE UNLEASHED THE WRATH ON THEIR FAILURE IN THIS WORLDCUP..THEY ARE IN NO MOOD TO RETURN HOME..THEIR SPONSORS ARE EXERTING SEVERE PRESSURE ON THEM TO STAY IN WINDIES TILL THE WORLD CUP IS OVER... SO AFTER DEEP DISCUSSIONS WITHIN THE TEAM MANAGEMENT THEY HAVE ARRIVED AT THIS DECISION OF PLACING THEMSELVES UNDER ARREST.... "

இதை விரைவில் ஜமைக்காப் போலீஸ் உலகச் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும் என மொக்கப் போண்டா நம்மிடம் தெரிவித்தார்..

இந்தியாவுக்கு இவிங்க வந்தா இங்கிட்டு பெரியக் கொலைக் கேசாயிரும்ன்னு பயந்து அங்கிட்டு செட்டில் ஆக இப்படி முடிவுப் பண்ணிட்டாங்களோ....

செய்தி உண்மையா இல்லயான்னு தெரியல்ல சாமி... ஆனா உங்க கிட்டச் சொல்லிட்டேன்..

சாயங்காலம் வெட்டி பேட்டியோட மீட் பண்ணுவோம்

Monday, March 26, 2007

உனக்கு இது தேவையா?

உனக்கு இது தேவையா?

மூக்குக்கு முன்னாடி விரலை நீட்டிக் கேட்டக் கேள்விங்க இது? அட நம்ம மனச்சாட்சிதானுங்க...இப்படி கேள்வியைக் கேட்டு நம்மைக் கலாய்ச்சு விட்டுருச்சு..

ம:மேடைப் போட்டு மைக்கைக் கையிலேக் கொடுத்துட்டா தொண்டையைக் கனைச்சுட்டுப் பாடக் கிளம்புருவீயா நீயு...

நா: அட அது இல்லீங்க...பெரியவங்க கூப்பிட்டாங்க...அதுவும் மடல் எல்லாம் போட்டுக் கூப்பிட்டாங்க.. அதான்...

ம: தம்பி... சென்னைக் கச்சேரின்னு பேர் வச்சுட்டு ஒரு ஓரமாக் கச்சேரி பண்ணிட்டிருந்த ரைட்.. அங்கே யாருக்கும் எந்த தொந்தரவும் இல்ல.. நானும் நீ செஞ்சுகிட்டு இருந்த எந்த விசயத்தையும் ஏன்னு கேக்கல்ல.. ஆனா மாப்ளே உனக்கேத் தெரியும் இது டூ மச்ச்ச்.... அவிங்க ஒரு பாசத்துல்ல பய புள்ள எழுதட்டும்ன்னு கூப்பிட்டாலும் நீ என்னச் சொல்லியிருக்கணும்....

நா:என்னங்கச் சொல்லியிருக்கணும்

ம: நானெல்லாம் அதுக்கு லாயக்கு இல்ல்ங்க...வேற ஆளு கையிலே மைக்கைக் கொடுங்க.. அது நாட்டுக்கும் நல்லது.. நமக்கும் நல்லதுன்னு சொல்லியிருக்கணும் இல்ல..

நா: நீங்க என்னை ஓவரா ஓட்டுறீங்கண்ணே.. நானும் கூட எழுதுவேண்ணே...

ம: ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்திடா.. என் கிட்டயே உன் பிலிமை ஓட்டுறியே... நாலு படத்தைப் பாத்துட்டு அதுல்ல இது நொட்டை அது சொட்டை அப்படின்னு வாய்க்கு வந்தப் படி விளாசுறதா எழுத்தா.. ஒரு பதிவுல்ல பத்து படத்தை அதுவும் நெட்ல்ல சுட்டுப் போட்டு அதுக்குப் பக்கதுல்ல ஒத்த வரி எழுதுறதா எழுத்து...காமெடி பண்றேன்ன்னு வடிவேலையும் கவுண்டரையும் கூட்டி வச்சு அவங்க நடிச்சப் படத்தைப் பிடி அடிக்கிறது தான் எழுத்தாலே..

நா: மக்கள் ரசிக்கிறாங்களேண்ணே..

ம: இங்கேப் பாருடா.. மக்கள் எல்லாம் இவருக்கு மீட்டீங் போட்டு சொன்னாங்களாம் இவர் எழுத்றதை ரசிக்கிறோம்ன்னு.. டேய் அப்பா.. இதுக்கு மேல உங்கூடப் பேசி பிர்யோஜனமில்லடா...

நா: ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்க... பதிவுங்கறதுக்கு ஒரு வகுக்கப்பட்ட வடிவம் இல்லண்ண.. எல்லோரும் எழுதலாம்.. எல்லோரும் படிக்கலாம்..

நம்ம பதிவு பக்கம்ங்கறது ஒரு வீடு மாதிரிண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு இருக்குண்ணே...இந்த வீடெல்லாம் இருக்கற காலனி தாண்ணே நம்ம தமிழ்மணம்...இங்கிட்டு ஒவ்வொரு வீடும் ஒரு ஒரு மாதிரி ஆனா அம்புட்டு பேரும் நம்ம மக்கள்ண்ணே..சின்னச் சின்னச் சச்சரவு இருக்கத் தான் செய்யும் ஆனா..ஒரு வீட்டு விசேசம்ன்னா அம்புட்டு பேத்துக்கும் சந்தோசம் தானுங்க.. அதே மாதிரி வருத்தம்ன்னாலும் வருத்தம் தான்ணே...

ம: யப்பா நீ பெரிய டகால்டிடா.. நக்கல் நையாண்டின்னு நாதஸ்வரம் வாசிச்சுட்டு பேசுற பேச்சைப் பார்டா, பர்மா பார்டர்ல்ல பத்தமடை பாய் விரிச்சு தவம் பண்ண முனிவர் மாத்திரி பிளாசபி பேசறதை... இதுக்கு மேலயும் உம் பேச்சை கேக்க எனக்குச் சக்தி இல்லப்பா... மக்கா.. இனி இவன் செய்யப் போற அநியாயத்துக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லப்பா..

கிளம்பறதுக்கு முன்னாடி இந்தா தேவ் உனக்கு ஒண்ணு சொல்லிடுறேன்...

டேய் தம்பி.. நட்சத்திரமாக் கூப்பிட்டாய்ங்கன்னு கீ போர்டை எல்லாம் பூவும் பொட்டும் வச்சு சிங்காரிக்கறது இருக்கட்டும்.. மத்தவங்களைக் கூப்பிட்டக் காரணம் எனக்கு விளங்கிச்சோ இல்லயோ.. உன்னக் கூப்பிட்டத்துக்கு காரணம் விளங்கிருச்சு ராசா...கிளாஸ்ல்ல ஒரமா உக்காந்து லந்து பண்றவனை வாத்தியார் கூப்பிட்டு தண்டனையா எல்லாரும் பாக்கும் படி பெஞ்ச் மேல நிக்கச் சொல்லுவார்.. அப்படியாவது அவன் திருந்துறானான்னு பாக்க..உன்னியும் அப்படித் தான் இப்போ நடுவில்ல நிக்க வச்சு ரவுண்ட் கட்டியிருக்காங்க... பாத்து பதவிசா நடந்துக்க.. அது தான் ஒனக்கு நல்லது.. இனியாவது உருப்படியா எதையாவது எழுது...

மனச்சாட்சி டாட்டாக் காட்டிட்டு எஸ் ஆயிருச்சு...

"அட விடுங்க மக்கா...நீங்க யாரும் டென்சன் ஆவாதீங்க.. சின்னப் புள்ளல்ல இருந்த நம்ம மனச்சாட்சிக்கு நம்மளை நிக்க வச்சு வாத்தியார் வேலைப் பாக்குறதே பொழப்பாப் போச்சு... இருந்தாலும் மனச்சாட்சி இருக்கானே ரொம்பவும் பாசக்காரப் பய தான்.. கொஞ்சம் எடுத்தெறிஞ்சாப்பல்ல பேசுனாலும் உண்மையப் பேசிபுடுவான் பயபுள்ள.. அதனால் தான் அடிக்கடி அவனை நம்ம பினாத்தலார் பாணியிலே அடங்குடா மவனேன்னு நான் கொஞ்சம் அடக்கி வச்சுருவேன்...


சரி மக்கா மேட்டருக்கு வருவோம்..

இந்தா இந்த வாரம் பூராவும் நானும்..நம்ம பாசக்கார பய மனச்சாட்சியும் உங்க கூடப் பேசப் போறோம்.. கேளுங்க.. கேளுங்க... எங்க புராணத்தை எல்லாம் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க..

வாய்ப்பு அமைத்துக் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றிகளோட தொடங்கிருவோமா ஆட்டத்தை...

Wednesday, March 21, 2007

5 ஸ்டார்

என்னன்னு சொல்லுறது... இப்போ நம்ம வலையுலகத்துல்ல புதுசா ஒரு விளையாட்டு கொடிக் கட்டி பறக்குது..

அதாவது "நான் ஒரு மாதிரி" அப்படின்னு அவங்களைப் பத்தி அவங்களே பட்டியல் போட்டு ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி... இந்த விளையாட்டை ஆரம்பிச்ச புண்ணியவான் வாழ்க... பாருங்க நம்ம மக்களும் அசராம பதிவுல்லப் பட்டியலைப் போட்டு ப்ட்டயக் கிளப்பிகிட்டு இருக்காங்காயங்க...

பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..

நம்மளை எல்லாம் யாரும் கூப்பிடல்ல.. அப்படின்னா தேவ் நீ எல்லாம் தெளிவாத் திரியறன்னு அர்த்தம்.. இப்படி என்னிய நானே வேற பாராட்டிக்கிட்டேன்.

அப்போத் தான் ஹலோ.. அஞ்சு மட்டும் சொல்ல சொன்னதாலத் தான் உங்களைக் கூப்பிட யோசனை மத்தப் படி உங்களைத் தான் முதல்ல கூப்பிடணும்ன்னு மை பிரெண்ட் கொரலு கொடுக்க...

அதை எல்லாம் பொது வாழ்க்கையிலே பெருசா எடுத்துக்காமப் போயிகிட்டு இருந்தா.. நம்ம ஜி.ரா.. பின்மண்டையிலே சின்னதா ஒரு கொட்டு வைக்கற மாதிரி மெயில் அனுப்பி, அய்யா.. என்ன நீங்க ஒரு மாதிரி தானே.. ஒத்துகிட்டு எழுதுங்குறார்..

இது பரவாயில்ல.. அப்படின்னு ஜகஜமாப் போயிட்டு இருந்தா கொத்ஸ் அங்கிருந்து நம்ம மேலே கல்லை விட்டு எறிஞ்சுட்டு... எலேய்.. என்ன லுக்? வாய்யா வந்து உன் கிறுக்குத் தனத்தை ஊருக்குச் சொல்லிட்டுப் போயிரு.. அதிகம் இல்ல ஒரு அஞ்சு போதும்ங்க்றார்..

ஆகா என்னிய மாதிரியேத் தானே நீங்களூம்.. எங்கே உங்க கிறுக்குத் தனத்தை கெத்தா ஊருக்கு சொல்லுங்கண்ணா.. இதுக்கெல்லாம் பயப்படலாமான்னு நம்ம பாசமலர் தங்கச்சி இம்சை அரசியும் ஒரு போடு போட்டுருச்சு...

இனியும் தாமதிச்சா.. அவ்வளவு தான் எல்லாரும் கூப்பிட்டுருவாய்ங்க... அப்புறம் மொத்தப் பதிவுலகமும் பாராட்டும் ஒத்தைக் கிறுக்கனா மவுண்ட் ரோட்ல்ல பேனர்ல்ல நின்னு போஸ் கொடுக்க வேண்டியதாக் கூடப் போயிரும்ய்யா.. அதான் வந்துட்டேன்..

நக்கல்/நையாண்டி: எதுல்லயும் ஒரு நக்கல் நையாண்டித் தனம் நம்மக் கூட ஒட்டிகிட்டே திரியும்.. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொடுத்துறது நம்ம பழக்கம். இந்தப் பழக்கத்தாலே நமக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சது உண்மைன்னா.. இதே பழ்க்கத்தால என்னையும் அறியாமல் நண்பர்கள் மனத்தைக் காயப்ப்டுத்திடுறது கொடுமை... என்னப் பண்றது பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்ன்னு நம்ம நண்பர்கள் நம்ம மன்னிச்சு விட்டுட்டுப் போயிடுறாங்க அதுன்னாலே நானும் நக்கல் நையாண்டின்னு நல்லப் படியா ஓட்டிகிட்டு இருக்கேன்.

கூட்டம் கண்டா ஒதுங்குறது: தனியாப் பொறந்து வளர்ந்தாலோ என்னவோ.. கூட்டம்ன்னாலே நம்ம தெனாலி சொல்லவாரே அது மாதிரி மெத்தப் பயம் எமக்கு... தி.நகர் கடைவீதி கண்டால் பயம் எமக்கு.. பல்லவன் பஸ் கண்டால் பயம் எமக்கு.. பதிவர் கூட்டம் என்றால் அதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..

சினிமாப் பாக்குறது: இப்படி ஒரு பொழப்பு எனக்கு... லைன் கட்டி படம் வந்தா க்யூ கட்டிப் பாத்து கோடம்பாக்கத்தை வாழ வைக்குறதா ஒரு எண்ணம்.. அது மட்டும் இல்லங்க எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டர்ல்ல படம் பாத்துருவேன்,.. இப்படி உணர்ச்சி வசப்பட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படமெல்லாம் பாத்துருக்கேன்னாப் பாருங்க.. சினிமா மேல பற்றா? இல்ல தியேட்டர் மேலயான்னு தெரியல்ல.. ஒரு தபா பெங்களூர்ல்ல நைட் ஷோ தனியாப் போயிட்டு தங்கியிருந்த நண்பன் வீட்டுக்கு வழியை மறந்துட்டு விடிய விடிய கோரமங்கலாவை பைக்ல்ல வளைய வந்து நாய் துரத்தி.. அதெல்லாம் ஒரு தனிக் கதைங்க..

ஊர் சுத்துறது: வெட்டியா இருந்தாலும் விறகோடு இருந்தாலும் ஊர் சுத்தறது நமக்குப் புடிச்சப் பொழப்பு... ஆக்சுவலா நம்ம கலர் காம்ப்ளெக்ஷன் கொறஞ்சுதுக்கௌ காரணமே அது தான்னு சின்னப் புள்ளயிலே எங்க அம்மா வருத்தப் படுவாங்க.. சரி இப்போ அதுக்குப் பிராயச்சித்தமா மலை மலையா நல்ல ஜில்லுன்னு இருக்க இடமாச் சுத்தி காம்ப்ளெக்ஷனை மாத்தலாம்ன்னு பார்த்தா.. ம்ஹும் ஆவறதில்ல.. சரி எது எப்படியோ.. ஊர் சுத்தற ஆசை மட்டும் நமக்குக் கொறையல்ல..

புது மொழிகள் கத்துக்கறது: ஓலகத்துல்ல உள்ள எல்லா மொழியையும் கத்துக்கணும்ன்னு பேராசை எல்லாம் இல்லாட்டியும்... வேத்து மொழித் தெரிஞ்சவப்ங்களைப் பார்த்தாப் போதும் பீலிங் ஆயிருவேன்... ப்ளீஸ் டீச் மீ யுவர் லாங்குவேஜ்ன்னு நச்சரிப்பேன்... ஓரளவு கத்துகிட்டு சீன் போடுறது நம்ம பழக்கம்... இதுல்ல நம்ம சீன் அடிக்கடி கிழியறது நாம சேத்து தைக்கறதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கைங்க...

ஸ்ப்பாடா அஞ்சு ஆச்சா.. இதெல்லாம் ஒரு ஸ்டார் வேல்யூ உள்ள குணங்கள்ன்னு உங்களுக்கு விளங்கியிருக்குமே.. இப்போ நம்ம பங்குக்கு ஒரு அஞ்சு பேரை இழுத்து விடுவோமா ஆட்டத்துக்கு..

1.இந்த வார ஸ்டார் நம்ம பெருசு
2.கவிதைக் காதலன் நந்தா
3.வலையுலக கலக்கல் சிந்தாநதி
4.குழப்பல் கலக்கல்ஸ் மதுரா
5.பாசக்கார மனதின் ஓசை.

இனி இவங்க ஆட்டத்தைப் பார்ப்போமா..

ஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கே உங்களுக்காம்

அன்புடன் குழுமம் கவிதை எழுதுன்னாப் பரிசு தர்றாங்களாம்ய்யா...

ஊரெல்லாம் ஒரே வெளம்பரமா இருக்கு... கவிஞர் எல்லாம் கலவரமாத் திரியறாங்க...
கண்டபடி யோசிச்சு கன்னாப்பின்னா கவிதையா எழுதி தள்ளிகிட்டு இருக்காயங்கன்னு எங்கும் பேச்சு...

அப்புறம் என்ன நீங்க மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க.... கவிதையைப் படைங்க.. பட்டயக் கிளப்புங்க..

மேலும் விவரங்களுக்கு... நம்ம ப்ரியன் என்னச் சொல்லுறாங்கன்னு கேளுங்க..

அன்புடன் குழுமம் விருப்பபடி நம்ம கச்சேரியிலும் விளம்ப்ர போர்ட் வச்சாச்சுங்கோ

Tuesday, March 20, 2007

பெர்மூடா துவைச்சுக் காயப்போட்டாச்சுப்பா!!!

இந்த வாரம் அப்படி ஒரு துவையல் துவைச்சுட்டோம் இல்ல.... சும்மா அடி அடின்னு அடிச்சு ... விடல்லயே காயப்போட்டுட்டு தானே ஓஞ்சோம்... ஸ்ப்ப்பா.. இப்போ நினைச்சாலும் அந்த சாதனைச் சிலிர்க்க வைக்குதுடா சாமி..

நீங்களும் பாருங்க...
..................

...............

..............

..........

.......

.....

....

...

..



ஹி...ஹி..ஒரு வழியா ரொம்ப நாளா செய்யாம இருந்த வேலை இந்த வாரக் கடைசியிலே மூணு நாள் சேத்து லீவு விட்டதால்ல செஞ்சுட்டோம் இல்ல....

ஆமாங்க நம்ம பெர்மூடாவை எல்லாம் சுத்தப்பத்தமாத் துவைச்சுக் காயவும் போட்டுட்டோம்...

சென்னையிலே வெயில் வேற ஜாஸ்தி ஆயிருச்சு... வர்ற வெள்ளிக்கிழமை நம்ம இந்தியா இலங்கையோட கிரிக்கெட் விளையாடும் போகும் போது இந்தக் காயப்போட்ட பெர்மூடாவில்ல ஓன்ணைப் போட்டுக்கிட்டு தான் மேட்ச் பார்க்கணும்.. அப்போத் தான் மேற்கிந்திய தீவுல்ல இருக்கற மாதிரி ஒரு பிலீங் வரும்...

மீட் யூ நெக்ஸ்ட்.. என் ஜாய் கிரிக்கெட்..

க்ரேக் சேப்பல் காப்பாற்றபட்டார்

மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்ற பின் இன்சமாம் நம்ம டிராவிட்க்குப் போன் போடுகிறார்..

இ: சரி பங்கு நாங்க கிளம்புறோம்.. எல்லாம் முடிஞ்சுப் போச்சு..

டி: இருங்க பங்கௌ இன்னும் ஒரு நாள் தான் நாங்களும் கிளம்பி வந்துறோம்.. ஒண்ணாப் போயிரலாம்

இ: ஓ.கே பங்கு அப்படின்னா ஒரே பிளைட்ல்ல போயிறலாம்.. டிக்கெட் சொல்லிடுறேன்...

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்சமாம் மீண்டும் போனில் டிராவிட்டை அழைக்கிறார்..

இ: என்னப் பங்கு வர்றேன்னு சொல்லிட்டு பெர்மூடாவை இந்த துவை துவைச்சீட்டீங்க...

டி: பங்கு.. என்னப் பண்றது..நம்மளை நம்பி வந்த மனுசனைக் காப்பாத்துனும் இல்ல..

இ: என்னப் பங்கு சொல்லுற...

டி: நமக்கு மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூலாயுதம் எல்லாம் இல்லன்னாலும்.. இந்த வெளிநாட்டுக் கோச்சுக்கெல்லாம் அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..
அதான் ஒண்ணுக் கூடி க்ரேக் சேப்பலைக் காப்பாத்துறதுன்னு முடிவு பண்ணி விளையாட வேண்டியதாப் போச்சு..

இன்சமாம் தாடியை தடவியப் படி ஏர்போர்ட் செல்கிறார்.

Friday, March 16, 2007

ஆல் இன் ஆல் அழகுராஜா கோச்சிங் சென்டர்...

குட் மார்னிங் பாய்ஸ்

ஆ வாங்க வாங்க.. அழகுராஜ் வணக்கம் வைப்பதற்குள் செல்போனைக் காதில் வைக்கிறார்..

"ஹலோ.. யா..யா.. அழகுராஜ் ஸ்பீக்கீங்..

நவ் ஐயாம் கோச்சிங் பிளாக் கைஸ்...

டூமாரோ.. பெர்மூடால்ல பிச் ரிப்போர்ட் கொடுக்கணும்..

20த் ஜமைக்கல்ல இருக்கேன்..

21ச்ட் ஆன்டிகோவால்ல.. அத்லெடிக்ஸ் ட்ரெனியிங்...

ஹே ஆன்ட்டி கூட கோவா போல்ல மேன் .. வெஸ்ட் இன்டீஸ் ஆன்டிகோவா... கிரிக்கெட் கிரவுண்ட் மேன்......

யாரிடமோ பயங்கரமானப் பில்டபில் பேசிக் கொண்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகு ராஜ்..பின் போனைக் காதை விட்டு எடுத்தவர்.

அய்யோ அய்யோ.. இந்த டிரா தொல்லைத் தாங்கல்லப்பா

"நான் வேணும்ன்னா கார்பெண்டர் கூப்பிட்டு டிராவை சரி பண்ணித் தரச் சொல்லவாண்ணேன்னு பவ்யமா நம்ம மணிகண்டன் கேக்க.."

"ஹேய் யார் மேன் நீ.. ஸ்டூபீட் பெல்லோ... டிரான்னா.. ராகுல் டிராவிட்.. இந்தியாக் கேப்டன்.. கோச்சிங் கொடுக்க வாங்க.. கோச்சிங் கொடுக்க வாங்க்ன்னு ஒரே நச்சரிப்பு.. நான் பேட் வாங்கி கொடுத்து பேட் கட்டி கிரவுண்டுக்கு அனுப்புன பையன்.. அந்த ஸ்கொயர் கட சரியா வர மாட்டேங்குதுன்னு பீல் பண்ணுறான்.. என்னப் பண்ரது இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழ்குராஜ் வேணும்ங்கறது..

அண்ணே..அண்ணே.. இது உங்க போனுக்குள்ளே இருந்துச்சு.. என்னன்னு கழட்டிப் பாத்தேண்ணே ஒண்ணும் விளங்கல்லண்ணே.. விளக்கம் சொல்லுங்கண்ணே டவ்சர் பாண்டி செல்போன் பேட்டரியைக் கையில் பிடித்தப் படி அழகு ராஜ் முன்னால் வந்து நின்றான்..

செல்போன் ரிங்டோன் வராமலே போன் எடுக்கும் போதே நினைச்சேன்னு பாஸ்ட் பௌலர் கிசுகிசுக்க அழகுராஜ் அவர் பாணியில் ஹே..ஹே..ஹேய்.. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பான்னு சொல்லிச் சிரித்தார்.

ஏன் கேப்டன்.. இவர் தான் நம்மளைக் கோச் பண்ணனுமா.. நம்ம நண்பன் சரா பரிதாபமாகக் கொத்ஸைப் பார்க்க.. கொத்ஸ் பதில் எதுவும் சொல்லாமல் நின்றார்.

ஏ யூ.. இங்கே வா மேன்...காட்ச் என்று வேகமாப் பந்தை நம்ம புலிக்குட்டியிடம் பந்தைப் போட்டார். புலிக்குட்டி டக்கென கேட்ச் பிடித்து விட லைட்டா ஜெர்க்கான அழகுராஜ்... (அய்யோ இவன் பந்தைக் கரெக்ட்டா கவ்வுறானே.. விவரமா இருப்பானோ)

அய்ய்யோ இவர் காட்ச் பிடிக்கிறதப் பார்த்தா மான்டி கிராஸ் காட்ச் புடிக்கிற மாதிரியே இருக்கு.. சூப்பர்.. சூப்பர்... டவுசர் பாண்டி தட்டி மகிழ.. அழகுராஜ் டவுசரைக் கடுமையான லுக் விடுகிறார்.

"டேய் என்னப் பேர் சொன்ன?"

"மான்டி கிராஸ்"

உடனே புலி குறுக்கிட்டு அது ஜான்டி ரோட்ஸ்..

"இல்லையே நீங்க மான்டி கிரால்ன்னு தானே சொல்லிக்கொடுத்தீங்க.. கேட்ச் பிடிக்கும் போது கரெக்ட்டாச் சொல்ல சொன்னீங்களே.. நான் கரெக்ட்டாத் தான் சொன்னேன்" என்று டவுசர் பாண்டி கிடமாய் படு சீரியசான முகத்தோடு சொல்ல.. அழகு ராஜ் புலிக்குட்டியை மேலிருந்து கீழ் வரைப் பார்க்கிறார்.

போன அஞ்சு மேட்சுல்ல நீ அடிச்ச ரன் எவ்வளவுடா?

2, 5,0,0,1 ராயல் ராம் சந்தோசமாப் போட்டுக் கொடுக்க..

"ஏன்டா.. ஏன் இப்படி?"

"எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.. ஊர்ல்ல நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல.."

"ஏன்டா இன்டர்நேசனல் லெவல்ல விளையாடுர பரோட்ட மண்டையனுங்க தான் கெத்து பொத்துன்னு பிலிம் காட்டுறாங்கன்னா.. உள்ளூர்ல்ல ஒரு ரன் அடிக்கிறது உக்காந்து உக்காந்து தடவுர உனக்கெல்லாம் வெளம்பரம் தேவையாடா.. அப்படி ஓரமா நில்லு.. உன்னிய லாஸ்ட் மீட் பண்றேன்..

ஓட்டைச் செல்போன் வச்சிகிட்டு பீலா விடுற இந்தாளுக்கு லொள்ளைப் பாரு லோலாயத்தைப் பாரு.. வெட்டி வீராப்பாப் பேசுனது அழகுராஜ் காதில் விழ...

"ஏய்.. யூ மேன்.. கம் பிரண்ட்"

வெட்டி வந்து நிக்க...

"ஹேய்.. பந்து வீசுவீயா...?"

"ப்ரட் லீ மாதிரி போடுவேன்"

"லீ புட்பால் இல்ல ஆடுவான்...என்னய நக்கல் பண்ணுறீயா?"

"ப்ரட் லீ ஆஸ்திரேலியா ப்ளேயர்.."

அந்த நேரம் கிரவுண்ட்க்குள் .. நம்ம நாட்டாமை தீர்ப்புச் சொன்னா பாட்டு ஒலிக்க... நாட்டாமை.. தம்பி.. கப்பி எல்லாம் குருப்பா வர்றாங்க..."

"ஏய் ஸ்டாப் த மீயூசிக்.. WHO IS THE DISTURBANCE..யார் மேன் நீ எதாவது சந்தனம் கரைச்ச ஆண்டாவில்ல சிலிப் ஆகி விழுந்துட்டியா.. ஓடம்பு முழுக்க இப்படி பூசிட்டு வந்து இருக்க... ஆ.. அது என்னடா சொம்பு.. முன்ன ஒரு முறை புல் குத்த அவுட்சைட் போற சொக்மே சொகம்ன்னு நான் சொன்னதைக் கேட்டுட்டு கிரவுண்ட்ல்ல புல்லை எல்லாம் நாசமாக்க குரூப்பா வந்துட்டீய்யா.."

"அட தம்பிகளா.. நம்ம 16 பட்டி கிராமத்துல்லயும் பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்தியாருக்கு மருவாத கொடுக்கறது எங்க பழக்கம்ங்க.. பண்பாடுங்க...பராம்பரியம்ங்கோ.. நீங்க எங்களுக்கு கில்லிச் சொல்லிக் கொடுக்க வந்த வாத்தியார் ஆச்சே.. அதாங்க.. உங்களுக்கு ஊர் மரியாதைக் கொடுத்து ஆரம்பிக்கணும்ன்னு பாட்டெல்லாம் போட்டு வந்தோம்.."

"ஓ நாட்.. ஐ லவ் யூ.. பட் இப்போ நான் டூட்டில்ல இருக்கேன்.. அதுன்னால உங்க மரியாதை எல்லாம் ஏத்துக்க முடியாது.. பட் நீங்க வருத்தப் பட வேண்டாம்.. உன் கூட வந்த அந்தக் காந்த கண் அழ்கியை வரச் சொல்லு.. காந்தக் கண் அழகி.. இவன் ஓவராப் பூசி இருக்க சந்தனத்தை எடுத்து இந்தா ரைட்ல்ல பூஸ்.. ஆங் இந்தா அப்படியே லெப்ட்ல்ல பூஸ்.. ஓ... பேக்ல்ல பூஸ்..."

அழகு ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் போது... ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன் பாட்டு ஒலிக்க நம்ம ஜொ.பாண்டி... கட் பனியன்.. டிராக் சூட்.. கூலர்ஸ் என அட்டகாசமாய் வந்து இறங்கி காந்த கண்ணழகியைக் கவர் பண்ணி நிக்க...அழகுராஜ் அக்னி நட்சத்திரமாய் ஜொ.பாவைப் பார்க்கிறார்...

டேய் கூடை கவுத்த மண்டையா.. இங்கே என்னடாப் பண்ணுற..

"கிரிக்கெட் ஆட வந்தேன்ண்ணே.. சோனி டிவி யிலே ஒரு அக்கா வருவாங்க இல்ல அவங்க என்னியப் பாக்க வர்றேன்ன்னு சொல்லியிருக்காங்க.. அதான் கொஞ்சம் நல்லா ஆடணும்ன்னு உங்க கிட்ட ட்ரெயினிங் எடுக்க வந்தேன்.."

"டேய் மண்டையா உன் மண்டையிலே ஒரு கூடையை ஏன் கவுத்துகிட்டு திரியுறன்னு இப்போ விளங்குதுடா"

"எதுக்குன்ணே நம்ம சரா கேக்க?"

" ஊர்ல்ல எந்தப் பிகரை எப்போ கவுத்தலாம்ன்னு கூடையோடவே திரியற நீ... மந்திரா பேடி எல்லாம் கூடைக்கு கவுறர லேடியாடா... அப்புறம் உனக்கு எல்லாம் கோச்சிங சொல்லித் தர முடியாது?'

" ஏன் அண்ணே" ஜொ.பா பரிதாபமாகக் கேட்க..

"கூடை வச்சிருக்கவனுக்கெல்லாம் நான் கோச்சிங்க் கொடுக்குரது இல்ல" அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் வெட்டியைப் பார்க்கிறார்.

"நீ இன்னும் பந்து வீசப் போகல்லய்யா.. அய்யோ ஆண்டவா.. இந்த லாயக்கில்லாத பசங்களுக்கு எல்லாம் ஏன்டா என்னைக் கூட்டுச் சேர வைக்குற?"

வெட்டி பயங்கர கோவமாப் பந்தை பேண்டில் தேய்த்தப் படி பவுண்டரி வரை செல்ல..

அப்போது பார்த்து நம்ம டவுசர் பாண்டிக்கு பயங்கரமான டவுட் வருகிறது.. அவசரமாக மட்டை, பேட் எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிய அழ்குராஜை நிறுத்தினான்..

"அண்ணே.. அண்ணே.. அன்னிக்கே கேக்கணும்ன்னு நினைச்சேன்ண்ணே.. இந்தா இவனை மாதிரியே ஒருத்தன் அன்னிக்கு ஒரு நாள் ரொம்ப தூரத்துல்ல இருந்து ஓடி வந்து காட்டுத் தனமா உங்களைப் பார்த்து வீசுனானே.. அந்தப் பந்தைக் கூட அடிக்க முடியாம அது உங்களுக்கு 'அந்த' இடத்துல்ல பட்டுச்சே.. நான் கூட நீங்க புட்டுக்குவீங்கன்னு தான் நினைச்சேன்.. ஆனா உங்களுக்கு ஒண்ணுமே ஆகல்லியே அண்ணே எப்படிண்ணே?"


"டேய் டவுசர் மண்டையா.. நல்ல கேள்விடா.. இதுக்குத் தான் ஊருக்குள்ளே ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜ் வேணும்ங்கறது.. சொல்லுறேன் கேளு.. இந்த பந்து இருக்கே கிரிக்கெட் பால் நல்ல திடமானது படாத இடத்தில்ல பட்டா பலி தான்.. ஆனா அதுக்குத் தான் இது இருக்கு என கையில் கார்ட் எடுத்து வைத்தார்.

"இது என்னண்ணே...?"

"டேய் நோபால் மண்டையா.. இதுக்குப் பேர் அப்டாமினல் கார்ட்.. இது தான்டா.. நமக்கு அடிபடாமக் காப்பாத்துது.." என பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்கும் போதே டவுசர் பாண்டி அவர் கையிலிருந்தக் கார்டைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு

"சும்மா விளையாடதீங்க இது எப்படிண்ணே அவ்வளவு வேகம் தாங்க முடியும்.. உண்மையைச் சொல்லுங்கண்ணே" என்று அழகுராஜைப் பார்க்க
அந்தக் கேப்பில் அந்தப் பக்கம் வந்த நாய் ஒன்று அப்டாமினல் கார்டை கவ்விக் கொண்டு போக..

"என்ன அண்ணே.. நாய் கவ்விகிட்டுப் போகுது பாத்துட்டு இருக்கீங்க..."

அழகுராஜ் இருந்த ஒரு கார்டும் நாய் கவ்விப் போவதைப் பார்க்கிறார்.. அதே சமயம் வெட்டி கொலை வெறியோடு அழகுராஜ்க்கு பந்து வீச பவுண்டரியில் ரன் எடுக்க தயார் ஆகுகிறான்.....

இனிமே என்ன நடந்து இருக்கும் நீங்களே ஊகிச்சுக்கங்க மக்கா.. ஹேப்பி வீக் என்ட்...

Tuesday, March 13, 2007

ஜொள்ளு ஜெயந்தி!!!!

காதலுக்குத் திருவிழாக் கொண்டாடி உலகமே ஓய்ந்திருந்த வேளையில் நம்ம பேட்டைப் பக்கம்.. பீர் பேரல்களும்... உரித்தக் கோழிகளும்..( அட மெய்யான கோழிங்கப்பா).. அவித்த முட்டைகளும் அளவுக்கதிகமாகக் கொண்டுப் போகப்படும் தகவல் நம்ம காதுக்கு வர விசாரிக்கக் களத்தில் இறங்கைனோம்..

தமிழுக்குச் சங்கம் வளர்த்த பாண்டிய மண்ணில் இருந்து புறப்படுகிறான் ஒரு லட்சிய இளைஞன்...தலைநகரம் சென்னை அன்னையென அவனை வாரி எடுத்து தாலாட்ட..

அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..

பாண்டிய தேசத்தின் புழுதிக் காட்டில் அவன் கண் வழியேக் கொஞ்சிக் காவியம் பாடச் சொன்னக் கருவாச்சிகளும்...

திருவிழாக்களின் தீபம் சுமந்துச் சிரிச்சி சுளிச்சு அவன் சிறு இதயத்தில் சூடு வைத்த சிறுக்கிகளும்...

தாவணிப் போட்ட லேப் டாப்புகளும்.. எகிற அடித்த அவன் இதய லப் டப்புகளும்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு அவன் மெரீனாவின் ஈரக் கரையோரங்களில் கீதம் பாடிக் களைத்துச் சாய்ந்தான்...களைத்தவன் எழுந்து சிந்தித்தான்..

சைதாப்பேட்டை.. குரோம்பேட்டை.. வண்ணாரப்பேட்டை.. ராயப்பேட்டை. .ஏன் செத்தவனை செட்டில் செய்ய கண்ணம்மாபேட்டை.. கிருஷ்ணாம் பேட்டைன்னு என சென்னையில் தினுசா தினுசா ஆயிரம் பேட்டைகள் இருக்க...

சேட்டைகளின் கோட்டையாக ஒரு பேட்டை வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு சிலிர்த்து எழுந்தான்...

பறவைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று உரக்கப் பாடினான்..

சிந்தினான்...

இரவு பகல் பாராது சிந்தினான்...

ஓயவு ஒளிச்சல் இன்றி சிந்தினான்..

ஜொள்ளு என்னும் புனித திரவம் சிந்தி எழுப்பினான் பேட்டையை அது தான் இன்று உலக இணையத் தமிழர்களின் உதட்டோரம் குடியிருக்கும் குடியிருக்கும் நம் நிரந்தரப் புன்னகையாம்...

ஜொள்ளுப் பேட்டை...

ஜொள்ளுப் பேட்டை நிறுவிய நம் பாசத்துக்குரிய பாண்டி.. ஜொள்ளு பாண்டி மண்ணில் அவதரித்த இந்த திரு நாளாம் மார்ச் 14ஐ உலக ஜொள்ளு தினமாக அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் துவங்கி நம்ம உள்ளூர் பஞ்சாயத்து வரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்... ......

நான் விசாரிக்கப் போன நேரம் ஜொள்ளுபேட்டையிலே மேடையிலே நின்னு நம்ம டவுசர் பாண்டி தான் இப்படி கண்டப் படி பீலிங் ஆகி மைக் பிடிச்சிப் பேசிகிட்டு இருந்தான்..

இதுன்னால்லே உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குரது என்னன்னா..

நம்ம பாசத்துக்குரிய பாண்டிக்கு ஜொள்ளு பாண்டிக்கு டூமாரோ ஹேப்பி பர்த்டே....


HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!

Thursday, March 08, 2007

சாப்ட்வேர் கம்பெனிகளில் நடப்பது என்ன?

வணக்கம் மக்கா,

சாப்ட்வேர்ல்ல இன்னிக்கு என்னய்யா நடக்குது?

ஆளுக்கு ஆள் என்ன என்னமோச் சொல்லுறாயங்க...

சரி நானும் நம்ம பங்குக்கு நமக்குத் தெரிஞ்ச அம்புட்டு சாப்ட்வேர் நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும், பந்தங்களுக்கும், பரிவாரங்களுக்கும் மெயில் தட்டியும், செல் பேசியும், குறுஞ்செயதி அனுப்பியும்.. இன்னப் பிற தகவல் பரிமாற்ற வசதிகளையும் பயன் படுத்தி விசாரிச்சதன் விளைவு தான் கீழே இருக்கப் படங்கள்..

இவர் ரொம்ப நாளா சாப்ட்வேர்ல்ல இருந்துருப்பார் போல ....



ஆகா வேலை செஞ்சு வேலை செஞ்சுப் படமாவே தொங்குறார்..



ஓயாம இப்படித் தான் செய்யணுமாம்



தேடிப் பிடிச்சு வேலைப் பாக்கணும்..



எட்டல்லன்னாலும் செஞ்சு முடிக்கணும்ய்யா



பய வேலைக்குப் புதுசானாலும் வேலையிலே கவனமா இருக்கான்ய்யா


நாள் எல்லாம் வேலை செஞ்சா கடைசியிலே இது தான் மிஞ்சுது...


ஆமாங்க யாரைக் கேட்டாலும்

ஆபிஸ்ல்ல ஆணி அடிக்கிறாங்கய்யா.. ஆணி புடுங்க வைக்கிறாங்கய்யான்னு ஒரே அழுவாச்சி.....


இந்தா எனக்கு என் பாஸ் கொடுத்த துண்டு சீட்டு கடைசியா ஓங்கப் பார்வைக்கு...




ம்ம்ம்ம் இந்தப் பத்திரிக்கைகாரங்க எழுதுற மாதிரி கூத்தடிக்கற ஆபிஸ்ல்ல நான் விசாரிச்ச வரைக்கும் எவனுமே வேலை பாக்கல்லய்ய்யா.. இல்ல நாம பொறாமைப் படுவோம்ன்னு சொல்ல மாட்டேங்குறாங்களா... அதையும் விசாரிச்சு எழுதுங்கய்யா..

ஆணி புடுங்க நேரமாச்சு..

சாயங்காலமா.. என் பாஸ் கிட்ட சொல்லி ஒரு பெக் வாங்கி ஊத்திகிட்டு போதையா வந்துப் படிக்கேன்...

யப்பா... சாப்ட்வேர் புரொபஷனல்களா நீங்களும் ஓங்க கம்பெனி வசதிக்குத் தக்க கஞ்சா, அபின், பட்டசரக்கு, சுண்டங்கஞ்சி... இதை எல்லாம் ஹெ.எச் ஆர்ல்ல கேட்டு வாங்கி அடிச்சுட்டு வந்து குஜாலா அந்தப் பத்திரிக்கையப் படிங்கப்பா...

பிகு:நம்ம ராம் தம்பி தான் இது.. எமபுட்டு அழகா ஆணி அடிச்சு விளையாடுது பாருங்க..























Wednesday, March 07, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - பயிற்சி களம்

வணக்கம் மக்கா,

அணியின் சிறப்பு பயிற்சியாளர் நம்ம அணியைத் தாக்கி எழுதிய கடிதம் பற்றி கடுகளவும் கவலைப் படாத நம் பதிவுலக கிரிக்கெட் புலிகள் இரவு பகல் பாராது கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பினாத்தாலாரின் கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்து நாள் ஒன்றுக்கு 40 (ஆமாங்க 40 தான் லிமிட்) கிலோவுக்கு குறையாமல் கண்டனக் கடிதங்கள் கிழக்காப்பிரிக்கா துவங்கி கீழ்பாக்கம் வரை அனைத்து இடங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளன.

அதை எல்லாம் உடனுக்குடன் பழைய பேப்பர் கடையில் போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று நம் வீரர்கள் தங்கள் உடம்பை இரும்பெனத் தயார் செய்த வண்ணம் உள்ளனர்.. 40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது...

பழையப் பேப்பருக்கு நெல்லிக்காய் கிடைக்குமா என கவலையோட விசாரித்தவர் நம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெட்டி பயல்..

பத்திரிக்கைக்கார்களும் புகைப்படக்காரர்களும் அணியினர் பயிற்சி செய்யும் மைதானத்தின் பக்கமே அனுமதிக்கப்படாத நிலையில் லண்டன் சன் பத்திரிக்கை ஆகாய மார்க்கமாய் தன் நிருபரை அனுப்பி நம் வீரர்கள் பயிற்சி செய்யுமிடத்தைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதோடு நம் பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள குறைந்தப் பட்ச ஆடைகளில் கடும் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருந்ததையும் படம் பிடித்து விட்டனர். அந்தக் கவ்ர்ச்சி படம் எந்த நேரமும் இணையத்தில் வலம் வரலாம் உஷார்
நம் நாட்டாமை தலைமையில் சில வீரர்கள் அணியின் வெற்றிக்காக கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகிதமாக் கடந்த வாரம் பாண்டிச்சேரி பார்டர் வரை அவரது சேரியட்ட்ல்லப் போய் வந்து இருக்கிறார்கள்..

"என்றா நாயம்.. சுத்துப் பட்டுல்ல பத்துப் பேத்தை நிக்க வச்சுபுட்டு... என்ற கையிலே ஒத்த மட்டைய மட்டும் கொடுத்துபுட்டு .. ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பாருன்னு வீசுறான்.. அந்தப் பயபுள்ளக்கு குறி வைக்க தெரியாம அங்கன இங்கன் பந்து போவுது.. மறுபடி மறுபடி பந்து வீசச் சொல்லி அவன் கிட்ட பந்தக் கொடுக்குறானுவ.. அட அவனால முடியல்லன்னு அடுத்தவன் கிட்டயும் கொடுக்குறான்வ.. ஆனாப் பாருங்க... ஒரே தடவ.. நான் பந்தை தடுக்காம விட்டேன்ய்யா.. பின்னால இருந்த குச்சி விழுந்துருச்சுன்னு.. என் கையிலே இருந்த மட்டையப் புடுங்கிட்டு... வெளியேப் போவச் சொல்லிட்டன்வ... என்றா நாயாம்.. ஏனுங்க தம்பி...எனக்கு எல்லாம் நீதிடா.. நேர்மாடா.. நாயாம்டா.. சொல்லோனும் தம்பி...."
பாண்டிச்சேரியில் பொங்கல் மீது பொங்கியப் படி நாட்டாமை பேசியது நம் வீரர்களையும் பொங்க வைத்து விட்டது..

நம் அணி வீரர்களின் ஆஸ்திரேலியா ரசிகர் மன்ற கிளையினர் பயிற்சி நேரத்தில் அணியினரைக் காண வந்திருந்தப் போது எடுத்தப் படம். நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை.. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாய் திறந்தன..



மக்களே உங்களுக்காக நம் வீரர்களின் பயிற்சி களத்தின் ஸ்பெஷல் படங்கள்..
இந்தப் படங்களில் உங்கள் பாசமிகு வீரர்கள் எல்லாருமே உள்ளார்கள்.. எங்கே கண்டுப் பிடிங்கப் பாப்போம்..

வீரர்களின் பயிற்சி நேரத்தில் சிறப்பு பிட்னஸ் டிப்ஸ் கொடுக்க அன்பிற்குரிய மருத்துவர்கள் எஸ்.கே அய்யாவும், ரஷ்யா ராமநாதனும் வந்திருந்தது சிறப்பானப் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.


உருகுவே மான்டி வீடியோவைச் சேர்ந்த ஒரு பிரபல உற்சாக பான நிறுவனம் நம் வீரர்களின் திறனைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்து உள்ளது.. (நம் கப்பி கொடுத்த தகவல் தான்)அதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கல்ந்துக் கொண்ட நம் வீரர்கள் சற்று அசந்த நேரத்தில் நம் அணிக்குச் சொந்தமான மட்டை. பந்து.. ஸ்டம்பு.. பேட்.. போன்ற உபகரணங்களை யாரோ சுட்டுச் சென்றதாய் தெரிய வந்தது..




அந்த விருந்தில் கலந்துக் கொண்டதால் நம் வீரர்களால் முழுதாய் மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லையாம்...
அந்த மூன்று நாட்களும் மைதானத்துக்கு வெளியே ஏக்கமாய் காத்துக் கிடந்த ரசிகர் பட்டாளத்தைத் தான் படத்துல்லப் பாக்குறீங்க..

இப்படியாக நம்ம அணி பயங்கர பில்டப்பா அடுத்து பிளைட் ஏறப் போகுது.. வாங்க வாழ்த்துங்க.. வழியனுப்புங்க.. ALL THE BEST சொல்லுங்க...

Tuesday, March 06, 2007

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

காட்டுக்குள்ளே திருவிழாவாம் டும் டும் டும்...

அனிமல் கிங் டம்மே அல்லலோ கில்லோல படுது டும் டும் டும்...

பறவைக் கூட்டம் எல்லாம் பாட்டு படிக்க டும் டும் டும்...


கரையோரம் டால்பின் கும்பல் டான்ஸ் ஆட டும் டும் டும்...

செடியும் கொடியும் காத்துல்ல கரகம் ஆட டும் டும் டும்...

மரமெல்லாம் பூச்சொறிய டும் டும் டும்..

பாயும் நதியும் பணிந்து வந்து வாழ்த்துச் சொல்ல டும் டும் டும்...

வானம் வில்லாய் வளைஞ்சு ரங்கோலி போட டும் டும் டும்...

கானகமே கதிகலங்க டும் டும் டும்...


பூமியே ஒரு குலுங்கு குலுங்க டும் டும் டும்....


சிங்கக் கூட்டம் சேர்ந்து சொல்லிச்சாம்

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

இன்னிக்கு உனக்கு ஹேப்பி பர்த் டே டா... டும் டும் டும்...

சூடான் காடுகளில் இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் பாசக்கார தம்பி புலிக்குட்டி சிவாவுக்கு சென்னைக் கான்கீரிட் காடுகளில் இருந்து கச்சேரிக்காரனின் அன்பு வாழ்த்துக்கள்...

Monday, March 05, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - பினாத்தலாரின் விவகாரக் கடிதம்


உலகக்கோப்பைக்கு நம் அணி படு பயங்கரமாய் தயாராகி வரும் நிலையில்.. அணியின் வெற்றிக்கு உறுதுணைப் புரிய வேண்டிய சிறப்பு பயிற்சியாளர் பெனத்தலார் அணியின் தேர்வு குறித்து கடுப்பாகி பதிவுலகக் கிரிக்கெட் வாரியத்துக்கு விவகாரம் கிளப்பும் வகையில் ஒரு கடிதம் எழுதியுள்ளதாக ஒரு செய்தி கிளம்பியதை அடுத்து நமது சிறப்பு விசாரணைப் பிரிவு களமிறங்கி அலசி ஆராயந்ததில் அந்தக் கடிதமே நம் கையில் சிக்கியது... இதோ பதிவுலகக் கிரிக்கெட் அணியின் கோடானு கோடி ரசிகப் பக்த பிரஜைகளே படித்துப் பொங்கி எழுங்கள்...


ஓவர் டூ பெனத்தலார் கடிதம்


உங்கள் கண்களுக்கு மட்டும் -- பரம ரகசியம்.


விடுநர்:
பெனாத்தல் சுரேஷ்,
பயிற்சியாளர்,
உலகக்கோப்பை கிரிக்கெட் அணி.

பெறுநர்:
கச்சேரியார்,
நாற்காலிமனிதன்,
வலைக்கிரிக்கெட் ஒருங்கிணைப்பு (BCCB)

ஐயா,

பொருள்: உலகக்கோப்பைக்கான குழு தெரிவு செய்தல்

உலகக்கோப்பைக்கு போறோம் என்று தங்களால் எழுதப்பட்ட பதிவு மிக நல்ல, பொருத்தமான பதிவு. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களும் பொருத்தமானவர்கள் என்று தாங்கள் எண்ணினீர்களே ஆயின், இக்கடிதத்தைப் படிப்பதை உடனடியாக நிறுத்தி விடவும்.

இன்னும் இக்கடிதத்தைப் படித்துக்கொண்டிருப்பதால் சில உண்மைகளை உங்களிடம் தைரியமாக எடுத்துரைக்கலாம் என்றே நம்புகிறேன்.

பெர்னார்டு ஷா சொன்னாராம் - கிரிக்கெட் 11 முட்டாள்கள் ஆடி 11000 முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்று. அந்த வகையில் நீர் செய்தது மெத்தச் சரி. முதலில் செய்ய வேண்டிய 11 முட்டாள்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து விட்டீர்கள். ஆம் நீர் தேர்ந்தெடுத்திருக்கும் அணியால் உப்புக்கருவாடு கூட வென்று வர முடியாது, உலகக்கோப்பை பற்றிய கனவுகளும் வீணே!

40க்கு மேல் ரன் எடுக்க முடியாமல், ரன் உச்சவரம்பினால் நிலை (பார்ம்) இழந்திருக்கும் இலவச கேப்டன்,

ட்ராக்டரை வைத்து களை பிடுங்க முடியாமல் எல்லாவற்றையும் குத்திக்கிழித்துக் கொண்டிருக்கும் விவசாயி,

பவுன்ஸர் வந்தால் "வேணாம், வலிக்குது, அழுதுடுவேன்" என்று சொல்வதை ஆட்டநுட்பமாக அனைவருக்கும் பயிற்றுவிக்கும் கைப்பு,

தெலுங்கு மண்ணில் மட்டும் விருப்பத்தோடும், வேறு மண்ணில் வேண்டா வெறுப்பாகவும் ஆடும் ஓப்பனர் வெட்டி,

பந்தைத் தான் தடுத்தால் யார் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தோடு கைகளைக் கட்டிக்கொண்டே இருக்கும் தம்பி,

இப்போதுதான் ஊருக்கு வந்த ஜெட்லாக்கில் இருந்தாலும் அட்லாஸாக இருப்பதால் கவனமிழந்திருக்கும் கப்பி பய,

ஆட்டத்தை விட்டு ஸ்டாண்டையே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் ஜொள்ளு,

பாட்டிங், பவுலிங், பீல்டிங் எதையும் பதிவு செய்யாமல், விக்கெட் விழுந்தால் கைதட்ட மட்டுமே செய்யும் பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் பைரன்னர்கள்,

ஸ்பின்னரா, பாஸ்ட் பவுலரா என்ற குழப்பத்தில், ஆஸ்திரேலியாவை மட்டுமே ஆதரிக்கும் பாஸ்ட் பவுலர்,

ஆடினாலும் ஆடாவிட்டாலும் நாற்காலிமனிதன் என்பதால் டீமில் இடம் உறுதி என்ற மமதையில் இருக்கும் தாங்கள் --

இவர்களெல்லாம் கொண்டதா ஒரு கிரிக்கெட் அணி? இது உருப்படுமா?

நான் பரிந்துரைக்கும் கிரிக்கெட் அணியைப் பாருங்கள்.

டீம் காப்டன்: கலைஞர் கருணாநிதி:

பந்துகள் காலடியில் குத்த நினைக்கும் பா ம க (பாகிஸ்தான் மக்கள் கட்சி) யின் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். அவர்களுடைய உணர்ச்சியில் பங்கேற்கிறேன் என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும். நம் அணியும் பா ம கவும் ஆசிய முன்னேற்றக்கூட்டணியின் அங்கங்கள். நாம் இப்போது போட்டி போடலாம், போரிடக்கூடாது. கொடுங்கோல் ஆட்சியான ஆ கி மு க (ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னேற்றக் கழகம்) கோப்பையை எடுத்துச் செல்லவிட்டுவிடக்கூடாது. அடித்துரைக்கும் பந்துகளைப் போடுங்கள், இடித்துரைக்கும் பந்துகளைப் போடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்

இப்படி பேசியே வெற்றிக்கனியைக் கொண்டுவந்துவிடுவார்.

உபகேப்டன்: தயாநிதி மாறன்

அனுபவம் குறைவென்று பார்க்காதீர்கள். இவர் அவுட் ஆகும் பந்துகளை தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்து, சிக்ஸர் அடித்ததை திரும்பத் திரும்பக் காட்டி எதிரணிக்கு கிலி ஏற்றிவிடுவார். அனைத்து எதிரணிவீரர்களையும் "ஒண்டிக்கு ஒண்டி வாறயா" என்று மெட்ராஸ் பாஷையில் கலாய்த்து பயமுறுத்துவார். கேப்டனை போட்டோ எடுக்கும் நேரங்களில் விட்டுப்பிரியாமல் அணுக்கமாக இருப்பார். உபயோகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பி ஆர் ஓ.

பீல்டிங் ஸ்பெஷலிஸ்ட் : வாட்டாள் நாகராஜ்

ஒரு ரன்கூட எதிரணிக்கு கொடுக்கமாட்டோம் என்று சூளுரைக்க வல்லவர். மற்ற பீல்டர்களுக்கும் அதே வெறியை ஏற்றிவிடுவார்.

கூக்ளி ஸ்பெஷலிஸ்ட்: ப சிதம்பரம்

வருமான வரி குறைப்பு என்று எதிரணி பேட்ஸ்மேன் நினைத்து அடித்து ஆடத் தயாராக இருக்கும் நிலையில் செஸ் என்று கூக்ளியாக மாற்றி விக்கெட் எடுக்க வல்லவர். எப்படியும் எதிரணிக்கு கடும் டார்ச்சராக இருப்பார். ரன் குறைவாக எடுத்தாலும் அதைவிடக்குறைவாக கொடுப்பார் - அல்லது அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்.

ஆல்ரவுண்டர்கள்: காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்டுகள்

எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் மக்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அதைக்கொடுத்து மக்கள் ஆதரவைச் சேர்த்துவிடும் நிபுணர்கள். டீம் வெற்றி அடைகிறதா தோல்வி அடைகிறதா என்பதைவிட, தான் அந்த ஊரில் வெற்றி அடைகிறோமா தோல்வி அடைகிறோமா என்று மட்டுமே பார்க்கும் திறன் உடைய ஆல்ரவுண்டர்கள்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: விஜய டி ராஜேந்தர்

டேய்.. போடாதடா பந்து,
இப்படி வந்து குந்து.
பாடுவடண்டா சிந்து
என்கிட்ட வேணாண்டா லந்து

என்று பாட்டுப்பாடியே எதிரணியை பயமுறுத்தி, அவர்கள் ஓவர் ரேட்டை கச்சாமுச்சா என்று குறைத்து, அவர்களுக்கு பெனால்டி வருமாறு செய்துவிடுவார். இவர் ரன் எடுக்காவிட்டாலும், எதிரணியை கதறக்கதற அழவைத்து அவர்களையும் ரன் எடுக்கவிடாமல் செய்துவிடுவார்.

ஸ்லிப் பீல்டர் : ரஜினிகாந்த்

ஸ்லிப்பிலே பீல்ட் செய்யும்போது இவர் கொடுக்கற ஹவ் ஈஸ் இட்..வாய்ஸ்- இன் பலத்திலேயே அம்பயரை மிரட்டி விக்கெட் விழ வைப்பார். பவுலிங் போட, பேட்டிங் வர பயமா, மரியாதையா என்று தெரியவில்லை, வந்தா சூப்பரா ஆடுவார் என்று நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் எப்ப வருவேன், எங்கே வருவேன்னு யாருக்கும் தெரியாது.. விக்கட் வுழுந்த வுடனே கரெக்டா வந்துடுவேன் - என்று பன்ச் டயலாக்குடன் உள்ளே வருவார், தான் ஒரு ரன் அடிச்சவுடனே செஞ்சுரிக்கு கைதட்டணும்னு எதிர்பார்ப்பார், என்பது போன்ற பயங்களும் உள்ளன.

விக்கெட் கீப்பர், பாஸ்ட் பவுலர்களைத் தேடி முடிவு செய்யும் உரிமையைத் தங்களுக்கே அளிக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை இது உங்கள் கண்களுக்கு மட்டும், தவறியும் பதிவுகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

நன்றி,

(ஒ-ம்)பினாத்தலார்

Sunday, March 04, 2007

லீ - பார்க்கலாம்ங்க


நம்ம சிவாஜி குடும்பம் கட்டியிருக்க புது தியேட்டர் சாய் சாந்தியிலே இப்போத் தான் ஒரு படம் பாக்க வாய்ப்புக் கிடைச்சுது. நம்ம பெரியார் பட நாயகர் சத்யராஜ் அவர் புள்ளக்காக எடுத்திருக்கப் படம் தான் லீ.

சிபி அதாங்க ஜூனியர் சத்யராஜ் நடிச்சப் படம் எதையுமே நான் இது வரைக்கும் தியேட்ட்ரிலோ இல்ல டிவியிலோக் கூடப் பார்த்தது இல்ல. தியேட்டருக்கு வந்த நிறையப் பேத்துக்கும் இதே நிலைமைத் தான். பக்கத்து அரங்குகளில் திரையிடப் பட்ட சரத் படம் அப்புறம் நம்ம பிரகாஷ்ராஜ் மொழி படங்களுக்கு டிக்கெட் கிடைக்காத மக்கள் தான் லீ பார்க்க வழியினி வந்தார்கள். நாங்களும் தான்...

பிரபு சாலமன் இயக்கம் (கொக்கி, கிங் படங்கள்ன் இயக்குனர்). இமான் இசை. சத்யராஜ் தயாரிப்பு.

கதை ஆரம்பம் டாகுமெண்டிரி பாணியில் கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு டேக் ஆப் ஆகிறது.. அதன் பின் நல்ல வேகம்.

எங்களையும் வாழ விடுங்கள் இது தான் படத்தின் ஒரு வரி கதை.. அதை ஒரு விளையாட்டுக் குழுவினை மையப் படுத்தி கதைப் பின்னியிருக்கிறார் இயக்குனர். சமுதாயத்தின் தாழ்ந்த நிலைகளில் இருந்து பிராகாஷ்ராஜ் பார்த்து பார்த்து எடுத்து பயிற்றுவித்த ஒரு கால் பந்து அணியின் மொத்தக் கனவுகளும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தினால் நசுக்கப்படுகிறது.. அதன் தொடர்ச்சியாக நிகழும் பழி வாங்கும் படலம் தான் படம்..

முதல் பாதியில் வசனங்கள் அதிகமின்றி காட்சி அமைப்புகளையே அதிகம் நம்பியிருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வழக்கமான தமிழ் சினிமாவின் மசாலா தலைத் தூக்கி நிற்கிறது. வழக்கமானப் பழிவாங்கும் கதை தான்.. அதைக் கொஞ்சம் சுவாரஸ்யாமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

கதைக்கு நன்றாகவே துணைப் புரிந்திருக்கிறார்கள் நடிகர்கள். குறிப்பாகச் சிபி.. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நிற்கிறார். சிபியிடம் சரக்கு இருப்பது தெரிகிறது. நல்ல இயக்குனர்கள் நல்ல கதையுள்ள படங்கள் இதை நம்பினால் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம். பையனுக்கு நடனம் தான் நாக்கு தள்ளூது. பாக்குற நமக்கு கண் முழி வெளியே தள்ளுது..அவர் நடனம் கத்துக்குறது நல்லது இல்லை ஆடாம இருக்கது அதைவிட நல்லது.

சிபியின் நண்பர்கள் படையாக வருபவர்களில் அந்த ஜொள்ளு குணா, பன்னீர் ,விக்கி, கதாபாத்திரங்கள் நினைவில் நிழ்லாய் தங்குகின்றன. மற்றவர்களுக்குப் போதிய வாய்ப்பு இல்லை.

யாருங்க அந்த வில்லன்... மிகவும் அமைதியா சின்ன சின்ன அசைவுகளிலும் அவ்வளவு வில்லத் தனம் காட்டுகிறார். மொத்தப் பெயர்களின் வயித்தெறிச்சலையும் கொட்டிக்கொள்கிறார். படத்துல்ல அவர் பெயர் ரங்கபாஷ்யம்.

அவர் மகனாக வரும் சசி.. வழக்கமான வில்லன் மகனாக வந்து அட்டுழியம் பண்ணுவதாய் அடி வாங்குகிறார். அப்புறம் அப்பீட்டு ஆகிறார்.

நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் புட் பால் கோச்சாக அசத்துகிறார். கொஞ்சமே வந்தாலும் கதைக்கு வலுச் சேர்க்கும் முக்கியப் பாத்திரமாய் நிறைகிறார்.

படத்துல்ல கதாநாயகியும் உண்டு.. நிலா.. டைட்டா உடையைப் போட்டுகிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் வந்துப் போகிறார். பாடுகிறார். ஆடுகிறார். கொஞ்சம் அவரை வைத்து காமெடியும் செய்யப் பார்த்துருக்காங்க... பலன் லேசான சிரிப்பலைகள் அவ்வள்வே...

படத்தின் வேகத் தடைகளாய் பாடல்களைச் சொல்லலாம். கதையோடு கைலாஷ் கெர் பாடி வரும் ஒரு பாடல் ஓ.கே... ராக் அன்ட் ரோல் பாடல் டி.க் ஹேய் மத்தப் படி பாடல்களைத் தாராளமாய் வெட்டியெறியலாம்.

சில ரசிக்கும் படியான துணைக் கதாபாத்திரங்களும் படத்தில் வருகிறது. எ.கா. லீ க்கு துப்பாக்கி வாங்கி தரும் அடியாள் பாத்திரம்.

சன் டி.வி நேருக்கு நேர் புகழ் வீர பாண்டியன் படத்தின் கிளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் வருகிறார். நேருக்கு நேர் காண்கிறார். அந்த நேருக்கு நேரில் சிந்திக்க வைக்கும் வினாக்கள் பல..

எக்வேடார் மாதிரி ஒரு பஞ்சம் சூழ்ந்த நாட்டில் 13 லட்சம் பேர் மட்டுமே மக்கள் தொகையாக் கொண்ட ஒரு நாடு உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்திற்கு தகுதி பெற்று கலக்கும் போது 106 கோடி பேர் இருக்க நம்ம இந்தியா இன்னும் கைத்தட்டிகிட்டே இருக்கே.. ஏன்? இது போன்ற சாட்டையடிகளோடு படம் முடிகிறது...

டைம் இருந்தா ஒரு தரம் லீ பாருங்க...

Friday, March 02, 2007

கச்சேரியில் கலக்கப் போவது யார்?

வணக்கம் மக்கா...

என்னடா இது டிவியிலே வந்த நிகழ்ச்சியோட டைட்டிலைக் காப்பி அடிச்சுப் பதிவுப் போட்டுருக்கேன்ன்னு பாக்குறீயளா...

நம்ம ஊர்ல்ல நடக்குற கச்சேரி ஒண்ணு கிட்டத் தட்ட கிளைமாக்ஸ் நெருங்கிருச்சு.. அதுப் பத்தி நம்ம கச்சேரியில்ல கொடிக் கட்டல்லன்னா மக்கா நீங்க கோவிச்சுக்க மாட்டீயளா..

அதான் கட்டிட்டோம்ல்ல.. பாருங்க... நீங்களும் ஓங்க கருத்தைச் சொல்லுங்க..




தென்னாட்டின் மூத்த அரசியல் சாணக்கியரும் தன் வாழ் நாளில் பல அரசியல் சிக்கல்களுக்கு விடைக் கண்டவ்ருமான நம்ம பெரியவர் மதிப்பிற்குரிய கலைஞர் அய்யாவுக்குத் தான் இந்த டவுட் இப்போ...

கலக்கப் போவது யார்?
அசத்தப் போவது யார்?



உடன்பிறப்பே...

கொடி அசைத்து விட்டாயடா.. சூரியக் கிரீடம் சூட்டிக் கொள்ள இதோ யுத்தம்....போர் முடிவுக்கு வரும் வேளை..

இந்நேரம் கண் துஞ்சிவிடாதே கண்மணியே..

வெற்றி யாருக்கு?

ஏ. ஒன் இன்டியா ஒன் பிளான் புகழ் தயாநிதி மாறன்.



பி. சென்னை சங்கமம் புகழ் கவிஞர் கனிமொழி





சி. அஞ்சா நெஞ்சன் மதுரை மன்னர் கின்னஸ் புகழ் அண்ணன் அழகிரி..




டி. இந்நாள் உள்ளாட்சி. எந்நாளும் இளைஞர் கழகத் தளபதி மு.க.ஸ்டாலின்.





கச்சேரிக்கு வந்திருக்கும் மக்களே நீங்களும் உஙக் மொபைல் போன் எடுத்து உங்களுக்குப் பிடிச்ச ஆப்ஷனை ஏ அல்லது பி அல்லது சி அல்லது டி அப்பட்டின்னு டைப் பண்ணி எங்கே வேணுமோ அனுப்பி வைங்க...

இப்போதைக்கு அப்பீட் அப்புறமா ரிப்பீட்..


Thursday, March 01, 2007

சிவாஜி - இது எந்த ஊர்ங்கோ?


வணக்கம் மக்கா,

இன்னும் ஒரு வாரத்துல்ல சிவாஜி படத்துப் பாட்டெல்லாம் வரப் போகுது ..

இந்தக் கேப்ல்ல நமக்குக் கிடைச்ச ஸ்பெஷல் சிவாஜி படங்கள் உங்கள் பார்வைக்கு..


இந்த சூட்டீங் ஸ்பாட் எந்த நாடு எந்த நகரம் அப்படின்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பூ..

tamil10