Tuesday, February 20, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம்
என்னத் தலைப்பைப் பார்த்தாப் பிரம்பிப்பா இருக்கா?

யாரும் பயப்ப்ட வேண்டாம்...

சென்னையிலே நடந்தக் கிரிக்கெட் மேட்ச் பாக்கப் போயிருந்த நம்ம பதிவுலகத் தங்கங்களைப் பார்த்து நம் இந்திய அணியை வென்ற மேற்கிந்திய அணியினர் லுடுவாயி.. லுடுவாயி.. என ஒழுங்கு காட்டிக் கண்டப்படி கலாய்த்துள்ளனர்...

அதிலும் நம்ம சின்னத் தங்கம் ராயலைப் பார்த்து லாராவே
லுடுவாயி.. லுடுவாயி.. எனக் குதித்து ஒழுங்குக் காட்டி உள்ளார்.. அதுல்ல வேற அவரைப் பார்த்து இங்கிலிஷ் பட வில்லன் பாணியில் சிரிக்க வேறு செய்துள்ளார்.. இது நம்ம சிங்கக்குட்டியைச் சிலிர்த்து எழும்ப வச்சிருச்சு...

ஓரமா உக்காந்து மேட்ச் முடிஞ்சது கூடத் தெரியாம குறட்ட விட்டுத் தூங்கிட்டு இருந்த நம்ம தானைத் தலக் கிட்ட ஒரு வார்த்தைக் கூடக் கேக்காம....

"ஏலே.. லாரா... மருதக்காரச் சிங்கத்தைப் பாத்தாலே சிரிச்சா..தைரியம் இருந்தா எங்கக் கூட மேட்ச்க்கு வர்றீயான்னு சவுண்ட்டாக் கேட்க...."

அதன் பின் நடந்தது எல்லாம் விரிவாய் நாளைய வரலாறு பேசும்..

இது அம்புட்டும் நடந்து முடிஞ்சப் பின்னாடி சாவகாசமா எழுந்த தல இதை எல்லாம் கேட்டு கண்ணுல்ல கண்ணீர் அதிகமாகி சேப்பாக்கம் கிரவுண்ட்டே நிறைஞ்சுப் போச்சுன்னாப் பாருங்களேன்..

"என்னத் தல பயமா?" அப்படின்னு நான், இளா, பாண்டி, வெட்டி, சிவா, தளபதி எல்லாம் கோரசாக் கேட்க....

"பயமா.. பிஸ்கோத்து ஆனந்தக் கண்ணீர் மக்கா.. இந்தச் சின்ன சிங்கத்துக்கு இருக்க வீரம் என் கண்ணுல்ல ஈரம் டா.. இவன் அப்படியே என்னிய மாதிரியே சுத்த வீரனா இருக்கான்டா"

ராம் ராயலாச் சிரிக்க... நாங்களூம் வேறு வழியில்லாமச் சிரிச்சோம்..

நம்ம டீம் லிஸ்ட் கீழே இருக்குப் பாருங்க...
(நம்ம டீம் லோகோ)


இலவசக் கொத்தனார். ( கேப்டன்)
வெட்டி பயல் (து.கேப்டன்)
ராயல் ராம்

இளா
தளபதி சிபி
தேவ்
ஜொள்ளு பாண்டி
நாகை சிவா
கப்பி பய
தம்பி
ஸ்யாம்
ஜி
உங்கள் நண்பன் சரவணன்
கில்லி பையன்
மனதின் ஓசை ஹமீது

எங்கடா தல் பேரைக் காணும்ன்னு பாக்குற்றீங்களா?
தலக் க்ரேக் கைப்புள்ள தான் நம்ம டீம் கோச்.. அதாங்க பயிற்சியாளர்

நம்ம டீம் மேனேஜர் வந்து நம்ம டி.பி.ஆர். ஜோசப்.

ஸ்பெஷல் கவுன்சிலிங் கோச் நம்ம ஜி.ராகவன்

இந்த லிஸ்ட்ல்ல ஓங்க பேரும் வரணுமா... பின்னூட்டத்துல்ல பேர் கொடுங்க..

முதல் பிராக்டீஸ் மேட்ச் நம்ம டூமிங் குப்பம் ஸ்டேடியுத்துல்ல இந்த வாரம் நடக்கும்.. எல்லாரும் வாங்க வாங்க.. வந்துருங்க....

சும்மா இங்கிட்டு லோக்கலாவே சவுண்ட் விட்டாப் போதுமா? கரீபியத் தேசத்துக்குப் போறோம் கப் அடிக்கிறோம்...


பதிவுலக ஆன்றோரே சான்றோரே.. வாங்க வந்து பயல்களை ஆசிர்வதியுங்க... ஜெயிச்சுட்டு வாங்கன்னு வீரத் திலகம் வைங்க....

ஊல்ல்ல்லாஆஆஆஆ..உல்லேவோ...ஊல்ல்லாஆஆஆ ஊஊஊ...

THIS SUMMER WATCH THE BOYS IN ACTION IN CARRIBEAN ISLANDS DANCING TO THE SPIN AND PACE NEVER SEEN BEFORE....

தொடரும்...

35 comments:

தேவ் | Dev said...

TEST COMMENT

.:: மை ஃபிரண்ட் ::. said...

இது கோவை பிரதர்ஸ் கிரிக்கேட் கூட்டணி இல்லல்ல???

கைப்புள்ள மண்ணை தோண்Dஇ தண்ணீர் கண்டுபிடிப்பாரே... அப்படி ஏதாவது சாதனை செய்தாரா? இல்லை அப்படியே தூங்கிட்டாரா??

ROTL :-))

Fast Bowler said...

ஆமா! நான் இல்லாத இது என்ன டீமு? கல்கத்தாவுல மாதிரி துபையில புரட்சி நடக்கும் ஆம சொல்லிபுட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

தம்பி தேவு,

அவசரப்பட்டுட்டயே. நம்ம பக்கத்துல ரெண்டு பசங்க கிட்ட டீமில் சேர்க்கறேன்னு சொல்லி கணிசமா ஒரு அமௌண்ட் வாங்கி இருந்தேன். இப்போ அவங்க கண்ணுல இந்த இடுகை படாம பாத்துக்கணமா?

சரி, மத்தபடி கலெக்ஷன் தொகை எல்லாம் பத்தி இங்க பேச வேண்டாம். வந்த தொகையோட தோப்புப் பக்கம் வந்துரு. என்ன.

பினாத்தல் சுரேஷ் said...

இந்த கங்குலியை விட்டதை வன்மையாக கண்ணடிக்கிறேன்.

தேவ் | Dev said...

//கைப்புள்ள மண்ணை தோண்Dஇ தண்ணீர் கண்டுபிடிப்பாரே... அப்படி ஏதாவது சாதனை செய்தாரா? இல்லை அப்படியே தூங்கிட்டாரா?? //

வெயிட் இப்போத் தானே டீம் அனவுன் ஸ் பண்ணியிருக்கோம்... இனி தான் ஆட்டம் ஆரம்பிக்கும் அப்புறம் பாருங்க தமாஸை

தேவ் | Dev said...

//ஆமா! நான் இல்லாத இது என்ன டீமு? கல்கத்தாவுல மாதிரி துபையில புரட்சி நடக்கும் ஆம சொல்லிபுட்டேன்.//

கவலைப் படாதீங்க பாஸ்ட் பௌலர்... ஒரு ஸ்பின் பௌலருக்கு டீம்ல்ல சின்னதாக் கேப் இருக்கு அதுல்ல உங்களைச் சேத்துருவோம்.. என்னா உஙக்ளைப் பாஸ்ட் ஸ்பின் பௌலர்ன்னு புருடா விட வேண்டியிருக்கும்.. பாஸ்போர்ட் தயாரா வைங்க.... வெஸ்ட் இன்டீஸ் போலாம் வாங்க

தேவ் | Dev said...

//தம்பி தேவு,

அவசரப்பட்டுட்டயே. நம்ம பக்கத்துல ரெண்டு பசங்க கிட்ட டீமில் சேர்க்கறேன்னு சொல்லி கணிசமா ஒரு அமௌண்ட் வாங்கி இருந்தேன். இப்போ அவங்க கண்ணுல இந்த இடுகை படாம பாத்துக்கணமா?

சரி, மத்தபடி கலெக்ஷன் தொகை எல்லாம் பத்தி இங்க பேச வேண்டாம். வந்த தொகையோட தோப்புப் பக்கம் வந்துரு. என்ன. //

தம்பி தேவு,

அவசரப்பட்டுட்டயே. நம்ம பக்கத்துல ரெண்டு பசங்க கிட்ட டீமில் சேர்க்கறேன்னு சொல்லி கணிசமா ஒரு அமௌண்ட் வாங்கி இருந்தேன். இப்போ அவங்க கண்ணுல இந்த இடுகை படாம பாத்துக்கணமா?

சரி, மத்தபடி கலெக்ஷன் தொகை எல்லாம் பத்தி இங்க பேச வேண்டாம். வந்த தொகையோட தோப்புப் பக்கம் வந்துரு. என்ன.

அண்ணே நம்மளை நம்பி பெட் கட்ட நமீபியால்ல இருந்து ஒரு குருப்பும் துபாயல்ல இருந்து நாலு ஷேக்கும் ஏர்போர்ட் வந்துட்டாங்களாம் அவங்களையும் கூட்டிட்டு வரவா தோப்புக்கு?

தேவ் | Dev said...

//இந்த கங்குலியை விட்டதை வன்மையாக கண்ணடிக்கிறேன்.//

நானும் கண்ணடிக்கிறேன்.. தேவைப் பட்டா தண்ணியும் அடிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. எங்கள் துபாய் கங்குலி வேண்டும் வேண்டும்...

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும் நம்ம காலுக்கு வந்துச்சுன்னா கண்டிப்பா 'கோல்' தான். இப்பவே நான் forward டா இல்லை middle orderaa இல்ல defence ஆ சொல்லிடுங்க. ஆமா கோல் அடிச்சா என்ன கெடைக்கும் எனக்கு ??ஹிஹிஹிஹிஹி :)))))

தேவ் | Dev said...

//அண்ணே தேவு நானும் டீமிலேஇருக்கனா ?? பந்து மட்டும் நம்ம காலுக்கு வந்துச்சுன்னா கண்டிப்பா 'கோல்' தான். இப்பவே நான் forward டா இல்லை middle orderaa இல்ல defence ஆ சொல்லிடுங்க. ஆமா கோல் அடிச்சா என்ன கெடைக்கும் எனக்கு ??ஹிஹிஹிஹிஹி :)))))//

பாண்டி உன் போர் குணத்தை நினைச்சு அப்படியே கண்ணுக் கட்டுதுப்பா.. இது கபடி இல்லப்பா கோல் எல்லாம் போடுறதுக்கு.. கிரிக்கெட் கிரிக்கெட்.. ம்ஹூம் உனக்கு ஸ்பெஷல் கோச்சிங்க்கு ஏற்பாடு பண்ணுறேன்..

வெட்டிப்பயல் said...

தல கோச்சிங்ல எப்படியும் உலக கோப்பை நமக்கு தான்...

இல்லைனா நம்ம கைப்பு, கட்டதுரை வீட்ல ராத்திரி போய் சட்ட துணிய எடுத்துட்டு வந்த மாதிரி உலக கோப்பைய எடுத்துட்டு வந்துடுவாரு...

மணிகண்டன் said...

விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு இருக்கேங்க..உங்க அணியில எனக்கும் ஒரு இடம் குடுங்க :))

தேவ் | Dev said...

வெட்டி நீ தான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்.. உன்னிய நம்பித் தான் டீம் இருக்கு...

அப்புறம் நம்ம கோச்சிங் கேம்பை ஆந்திரா பார்டருக்கு மாத்துரோம்.. நம்ம மாதாஜி வந்து ரெண்டு நாள் தரிசனம் தந்த நம்ம டீம்க்கு ஒரு பெரிய இதுவா இருக்கும் பாண்டி எல்லாம் ஒரு அது வாகி அப்புறம் எது எதுவாவோ ஆகி...கப் நமக்குத் தான் கிடைக்கும்

தேவ் | Dev said...

//விழுந்து விழுந்து கிரிக்கெட் பதிவா போட்டுகிட்டு இருக்கேங்க..உங்க அணியில எனக்கும் ஒரு இடம் குடுங்க :)) //

வந்துருங்க மணி..கோச்சிங் கேம்ப் நாளைக்கு ஸ்டார்ட் ஆவுது.. சோ.. ப்ளீஸ் கம்.. ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா.. இது வரைக்கும் நம்ம டீம்ல்ல நிறைய பீல்டர் தான் இருக்கோம்..

உங்கள் நண்பன் said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

டீம்ல நானுமா இருக்கேன்!சந்தோசம் மக்கா...

//அதன் பின் நடந்தது எல்லாம் விரிவாய் நாளைய வரலாறு பேசும்..//

போசிடுவோம் தல!

தமிழ்மணத்தில் டிமிக்கு கொடுக்கிற மாதிரி இல்லாமல், கோச்சிங்கிற்க்கு அடிக்கடி வருவேன் ,
கோப்பிக்கும் து.கோப்பிக்கும் என் ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))


அன்புடன்...
சரவணன்.

மணிகண்டன் said...

//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//

(நாயகன் ஸ்டைலில்) எனக்கு தெரியலையேப்பா :))

மனதின் ஓசை said...

present sir..

மனதின் ஓசை said...

//நம்ம மாதாஜி வந்து ரெண்டு நாள் தரிசனம் தந்த நம்ம டீம்க்கு ஒரு பெரிய இதுவா இருக்கும் பாண்டி எல்லாம் ஒரு அது வாகி அப்புறம் எது எதுவாவோ ஆகி...கப் நமக்குத் தான் கிடைக்கும் //

எலேய்.. காலேஜ்ல வாங்கின கப்பயாலே சொல்ற?

கார்த்திக் பிரபு said...

dev im also coming pa

Fast Bowler said...

//கவலைப் படாதீங்க பாஸ்ட் பௌலர்... ஒரு ஸ்பின் பௌலருக்கு டீம்ல்ல சின்னதாக் கேப் இருக்கு அதுல்ல உங்களைச் சேத்துருவோம்.. என்னா உஙக்ளைப் பாஸ்ட் ஸ்பின் பௌலர்ன்னு புருடா விட வேண்டியிருக்கும்.. பாஸ்போர்ட் தயாரா வைங்க.... வெஸ்ட் இன்டீஸ் போலாம் வாங்க
//
நன்றி. நன்றி. நன்றி.

எல்லாம் ரெடி. நான் ஃபாஸ்ட் ஸ்பின்னும் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

கார்த்திக் பிரபு said...

ennaya sethuka mateengala? :(

தேவ் | Dev said...

போசிடுவோம் தல!

தமிழ்மணத்தில் டிமிக்கு கொடுக்கிற மாதிரி இல்லாமல், கோச்சிங்கிற்க்கு அடிக்கடி வருவேன் ,
கோப்பிக்கும் து.கோப்பிக்கும் என் ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!//

ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))சரவணன்,
இதையே அப்படியே கப் கைக்கு வர்ற வரைக்கும் பெயின்டெயின் பண்ணனும்...

தேவ் | Dev said...

//ஆமா நம்ம ஜொள்ளு வரும்போது அப்படியே ஃபிகர்களையும் மேட்ச் பாக்க கூட்டிகிட்டு வருவாரா?:))
//

ப்ராக்ட்டீஸ் மேட்ச்க்கே ஜொள்ளு ரசிகைகள் கூட்டம் தாங்கல்லப்பா.. ஆட்டோகிராப் போட்டு போட்டு ஜொள்ளுக்கு ஜொள்ளு வத்திப் போச்சுன்னாப் பாரேன்..

தேவ் | Dev said...

//ஆமா நீங்க பௌலரா.. பேட்ஸ்மேனா..//

(நாயகன் ஸ்டைலில்) எனக்கு தெரியலையேப்பா :)) //

அய்யோ இப்படி ஆள் தான் எனக்கு வேணும்... எதிர் டீம் க்கும் நீங்க யார் என்னன்னு கடைசி வரைக்கும் தெரியவேக் கூடாது.. ஏன் கமெண்ட்ரி கொடுக்குறவங்கக் கூட கண்டு பிடிக்கக் கூடாது.

தேவ் | Dev said...

//மனதின் ஓசை said...
present sir.. //

Good boy !!!

தேவ் | Dev said...

//எலேய்.. காலேஜ்ல வாங்கின கப்பயாலே சொல்ற? //

அந்த கப் பத்தி பேசுற நேரமால்லே இது கப் சிப்

தேவ் | Dev said...

//dev im also coming pa //

வா கார்த்தி நீ இல்லாமலா.. ஆமா உனக்கு கிரிக்கெட்ல்ல எது நல்லா வரும் பேட்டிங் பௌலிங்.. விக்கெட் கீப்பீங்...

தேவ் | Dev said...

//நன்றி. நன்றி. நன்றி.

எல்லாம் ரெடி. நான் ஃபாஸ்ட் ஸ்பின்னும் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். //

ஓ.கே... ஓ.கே.. பிட்னஸ் கரெக்ட்டா வச்சிக்குங்க... நீங்க நம்ம டீம்க்கு பிக் அசெட்...

தேவ் | Dev said...

//ennaya sethuka mateengala? :( //

கார்த்தி உன்னை யார் சேத்துக்க மாட்டேன்னு சொன்னது.. உனக்கும் பிளைட டிக்கெட் போட்டாச்சிப்பா.. வந்துடுப்பா

கார்த்திக் பிரபு said...

தேவ் | Dev said...
//dev im also coming pa //

வா கார்த்தி நீ இல்லாமலா.. ஆமா உனக்கு கிரிக்கெட்ல்ல எது நல்லா வரும் பேட்டிங் பௌலிங்.. விக்கெட் கீப்பீங்...

//

nan batting nall pidipane ..oru padhivu kuda potrukane sandhegam irundha padinga :)


கார்த்தி உன்னை யார் சேத்துக்க மாட்டேன்னு சொன்னது.. உனக்கும் பிளைட டிக்கெட் போட்டாச்சிப்பா.. வந்துடுப்பா
//

haiyyya enakum potaachaa..kadaisila thanni bottle thooka vachiratheengapa ..

தேவ் | Dev said...

//nan batting nall pidipane ..oru padhivu kuda potrukane sandhegam irundha padinga :)//

குட் அது போதும்... நம்ம டீம் பேட் எல்லாத்தையும் நீயே பிடிச்சிக்கோ... ஆனா கரெக்ட்டாப் பிடிக்கணும்.

//haiyyya enakum potaachaa..kadaisila thanni bottle thooka vachiratheengapa .. //

தண்ணி பாட்டில் தூக்க ஆல் ரெடி லைன்ல்ல நிக்குறாங்க.. அந்த வேலை அவ்வளவு சுலபமா உனக்குக் கிடைக்காதும்மா

மணிகண்டன் said...

என்ன தல,

கொத்ஸோட பினாத்தலார் பதிவுல போடவேண்டிய பின்னூட்டத்தை என்னோட பரிசுப்போட்டி பதிவுல வந்து போட்டுட்டிங்க. உலகக்கோப்பைக்கு போற குஷில ஒன்னும் பிரியலயா:)))

தேவ் | Dev said...

மணி விடுங்கப்பூ.. விளையாட்டுன்னு ஒரு பால் அங்கிட்டு இங்கிட்டு மிஸ் ஆகறது சகஜம் தானே :-)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10