Thursday, February 22, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - ஆரம்பக் காட்சிகள்
உலகக் கோப்பைக்குப் போறோம் என்று உற்சாகமாய அறிவித்ததைத் தொடர்ந்து பதிவுலகின் பல முனைகளில் இருந்தும் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது... அதுப் பற்றிய முதல் செய்தித் தொகுப்பு..

நேற்று சிறப்பு விமானம் மூலம் அணிக்கான ஸ்பெஷல் பயிற்சியாளர் பினாட்டல் சுரேஷ் துபாயியிலிருந்து ஆந்திராப் பார்டர் வந்து இறங்கினார்.

அணியின் மொத்த வீரர்கள் கேப்டன் கொத்தனார் மற்றும் அணியின் பயிற்சி புயல் கிரேக் கைப்புள்ள தலைமையில் தெலுங்கு தேச லேட்டஸ்ட் ஆன்மீக சித்தி ( சித்தின்னா.. சித்தருக்கு அப்போஸிட்) வெட்டி மாதாஜியைச் சந்திச்சு அருளாசி வாங்க்ப் போய் முடியாம வெக்கத்தோடயும் வேதனையோடும் திரும்ப நேரிட்டுச்சு

ஜொள்ளு பாண்டி சித்தியோட சிஷ்யைகளிடம் சித்து வேலைகளால் ஈடுபட்டதாய் ஆந்திர பத்திரிக்கைகளில் கிசுகிசு செய்தி வந்தது. அந்தச் செய்தியை அணியின் மேனேஜர் டி.பி.ஆர் மறுத்து பதில் அறிக்கையை தமிழில் கொடுக்க... வெட்டி அதை தெலுங்கில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கடைசித் தகவல்.


சிறப்புப் பயிற்சியாளர் வந்து நடத்திய முதல் கட்டச் சோதனையில் அணியின் பயிற்சி புயலுக்குப் பேட் பிடிப்பது எப்படி என்ற கிரிக்கெட் அடிப்படை அறிவு கூட இல்லாதது வெளி வந்துள்ளது.

அடுத்ததாக அணியின் 93% சதவிகித வீரர்கள் வெறும் பீல்டர்களா மட்டுமே களத்தில் நுழைந்திருக்கும் திடுக்கிடும் தகவ்லும் சிறப்பு பயிற்சியாளரைப் பதற அடித்துள்ளது.

தன்னை ஒரு சிறப்பானப் பீல்டர் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திய ஜி சொல்லியதாவது.. பந்து கொஞ்சம் சிறிசா இருக்கதால்ல பிடிக்கறது கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு.. பந்தை புட் பால், வாலி பால் மாதிரி பெரிசா ஆக்கிட்டா.. பீல்டிங் இன்னும் எளிமையாக இருக்கும் எனக் கருத்துத் தெரிவித்தார்.

ஆட்டத்தின் இடைவேளைகளில் தள்ளப்படும் குளிர்பான வண்டியை மீண்டும் மீண்டும் தள்ளிப் பார்த்துப் பயிற்சிச் செய்துக் கொண்டிருந்த ராயல் ராம்...சரக்கு வச்சிருக்கேன் அதை இறக்கி வச்சிருக்கேன் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.

நாட்டாமை ஸ்யாம் சுற்றி அம்ர்ந்திருந்த கப்பிப் பைய, தம்பி, நாகை சிவா போன்ற வீரர்கள் எதோ தீவிர ஆலோசனையில் இருந்தனர். விசாரித்தப் போது..

"ஏன் தம்பி.. தீர்ப்புச் சொல்லுறவனுக்கு ஒரு கவுரவம் வேணாமா.. வேகாத வெயிலே நின்னு தீர்ப்புச் சொல்லுற நீயு எப்படி இருக்க்கோணும்.. மார்ல்ல குளு குளுன்னு சந்தனம்.. ஒரு மரத்தடி.. கையிலே சொம்பு.. வாயிலே வெத்தலன்னு வீராப்பா இருக்க வேணாமா.. அதை விட்டுபுட்டு கோமாளி மாதிரி தொப்பி.. கோர்ட்ன்னு வெயில்ல நல்லாவா இருக்கு.. கிரிக்கெட்ல்ல தீர்ப்புச் சொல்லுற நாட்டாமைக் கெட்டப்பை மாத்தோணும் தம்பி.. அதான் இந்த நாட்டாமைத் தீர்ப்பு.."
உடனிருந்தவர்களும் பலமாக ஆமோதிக்க அவர் அம்பையரைத் தான் சொல்லுறார்ன்னு நமக்குப் புரிய ரொம்ப நேரம் ஆச்சு..

அணித் தலைவர் கொத்தனார் புதிய வீரர்களான பாஸ்ட் பௌலர், மணிகண்டன் ஆகியோரிடம் கிரிகெட் விளையாடுவது எப்படி என்று விசாரித்தறிந்துக் கொண்டிருந்தார்.


சிபி,இளா, தேவ்.. மூவரும் பேட் கட்டுவது எப்படி என்று ஒருவரை ஒருவர் விசாரித்த வண்ணம் இருந்தனர்..

அடுத்த சிறப்புப் பதிவில் அணியின் சிறப்பு பயிற்சியாளர் பெனட்டலாரின் சிறப்பு பேட்டி மற்றும் அணித் தலைவர் கொத்தனாரின் நேர்காணலும் வெளிவரும்..

20 comments:

மனதின் ஓசை said...

//சிபி,இளா, தேவ்.. மூவரும் பேட் கட்டுவது எப்படி என்று ஒருவரை ஒருவர் விசாரித்த வண்ணம் இருந்தனர்..//

பெட் கட்டுவது எப்படின்னு தெரியுமா தேவ்?

தேவ் | Dev said...

//பெட் கட்டுவது எப்படின்னு தெரியுமா தேவ்? //


அதெல்லாம் நம்ம கேப்டன் டிபார்ட்மெண்ட்.. கொத்ஸ் இந்த்க் கேள்விக்குப் பதில் சொல்லுங்க ப்ளீஸ்

Syam said...

ஏனுங்க தேவு...நா மட்டும் எப்ப தனியா எங்கயும் போய் இருக்கேன்...எங்க போறதா இருந்தாலும் என்ற அம்மினியயும் கூட்டிகிட்டு தான போவேன்...:-)

Syam said...

எந்த அம்மினினு கேட்டுபுடாதீங்க...என்ற அம்மினிய (நயன் or இலியானா) வர வெக்க வேண்டியது நம்ம கெரேக் கைப்ஸ் ஓட பொருப்பு.. சொல்லிப்புட்டேன்...

டேய் சன்முகா எட்றா வண்டிய...ஓட்டுறா வெஸ்ட் இண்டீஸ்க்கு :-)

Syam said...

//ஏன் தம்பி.. தீர்ப்புச் சொல்லுறவனுக்கு ஒரு கவுரவம் வேணாமா.. வேகாத வெயிலே நின்னு தீர்ப்புச் சொல்லுற நீயு எப்படி இருக்க்கோணும்.. மார்ல்ல குளு குளுன்னு சந்தனம்.. ஒரு மரத்தடி.. கையிலே சொம்பு.. வாயிலே வெத்தலன்னு வீராப்பா இருக்க வேணாமா.. அதை விட்டுபுட்டு கோமாளி மாதிரி தொப்பி.. கோர்ட்ன்னு வெயில்ல நல்லாவா இருக்கு.. கிரிக்கெட்ல்ல தீர்ப்புச் சொல்லுற நாட்டாமைக் கெட்டப்பை மாத்தோணும் தம்பி.. அதான் இந்த நாட்டாமைத் தீர்ப்பு//

ROTFL...கலக்கிப்புட்டீங்க....என்றா பசுபதி...நம்ம தேவு அண்ணனுக்கு ஒரு எளனி வெட்டி அதுல லேசா பக்கார்டி ஊத்தி குடு... :-)

இலவசக்கொத்தனார் said...

//பெட் கட்டுவது எப்படின்னு தெரியுமா//

ஓ! தெரியுமே! எங்க தாத்தா பெரிய கிரிக்கெட் ப்ளேயர். அவருக்கு அடிக்கடி டூர் எல்லாம் போவாரு. அப்போ அவர் கிளம்பும் போது ஒரே ஆர்பாட்டமா இருக்கும். ஆளுங்க வரதும் போறதுமா ஒரே களேபரமா இருக்கும். அப்போ அவரைப் பாத்துதான் நான் பெட் கட்டறதை கத்துக்கிட்டேன்.

அதுவும் மூணாம் மனுசருக்குத் தெரியாம அவரு பெட் கட்டுவாரு பாருங்க எனக்கே பிரமிப்பா இருக்கும். அவரு பெட் கட்டற நேர்த்தியைப் பார்த்து அவரோட விளையாடறவங்க எல்லாம் அவரைத்தான் அவங்களுக்கும் சேர்த்து பெட் கட்டச் சொல்லுவாங்கன்னா பாருங்களேன்.

அதுவும் இன்னைக்கு மாதிரி ஒரு ப்ளைட்டைப் பிடிச்சோமா போனோமா, கையில் செல்போன் இருக்கா அதை வெச்சுக்கிட்டு வேணுங்கற ஆளைக் கூப்பிட்டோமா அப்படின்னு இல்லாத நேரம். ரயிலிலோ கப்பலிலோ பல நாட்கள் பிரயாணம் செய்யணும். அதுனால புறப்படும் முன்னமே இப்படி தயார் நிலையில் இருக்கணும். இது நான் அவர் கிட்ட கத்துக்கிட்ட ஒரு பாடம். சரி எங்கேயோ போறேனே.

அவரு பெட் கட்டற நேர்த்தியை சொல்லறேன் பாருங்க. அதாவது எந்த விதமான Loose Ends இல்லாம பாத்துக்கணும். அது ரொம்ப முக்கியம். அப்படி இருந்தாதான் நமக்கு நஷ்டம் வராது.

முதலில் ஒரு பெட் ரோல் எடுப்பாரு. (பெட்ரோல் இல்லைங்க, சரியா படியுங்க!)அதுல ஒரு தலையணையை ஒரு போர்வைக்குள் சுத்தி அதுக்குள்ள வைப்பாரு. பிறகு அதை நல்ல இறுக்கமா சுத்தி அந்த ரோலில் இருக்கும் ஸ்ட்ராப்களைக் கொண்டோ அல்லது ஒரு பிளாஸ்டிக் கயிறு கொண்டோ நல்ல இறுக்கமா கட்டுவாரு. அப்படிச் செஞ்சா பிரயாணத்தின் போது அதிக இடத்தை அடைக்காது. அந்த கயிறையே வைத்து தூக்கிக் கொண்டு போகவும் முடியும். இப்படித்தான் பெட் கட்டணும்.

ஆனா இன்னைக்கு யாருங்க பெட் எல்லாம் கட்டி எடுத்துக்கிட்டு போறாங்க. இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு.

தேவ் | Dev said...

//ஏனுங்க தேவு...நா மட்டும் எப்ப தனியா எங்கயும் போய் இருக்கேன்...எங்க போறதா இருந்தாலும் என்ற அம்மினியயும் கூட்டிகிட்டு தான போவேன்...:-) //

குடும்பமாம குதுகாலமா இருக்கத் தான் கேக்குறீர்ன்னு நினைச்சா அடுத்தப் பின்னூட்டம் வில்லங்கமா இல்லப் போட்டிருக்கீர்... இருங்க வாரேன்..

தேவ் | Dev said...

//எந்த அம்மினினு கேட்டுபுடாதீங்க...என்ற அம்மினிய (நயன் or இலியானா) வர வெக்க வேண்டியது நம்ம கெரேக் கைப்ஸ் ஓட பொருப்பு.. சொல்லிப்புட்டேன்...//

க்ரெக் கைப்புஸ் பொழப்பு இப்படி சிரிப்பாச் சிரிக்கணுமா? நான் என்னத்தச் சொல்ல?

ஆமா இன்னும் இவிகத் தானா.. இலியானா, நயந்தாரான்னு.. வெட்டி புதுசா பக்தி ரசம் சொட்டச் சொட்ட ஒரு அம்மினி பத்திப் போட்டப் பதிவு பாக்கலியாக்கும்.. என்னங்க நாட்டாமை.. நாட்டு நடப்பு நச்சுன்னு தெரிய வேணாமா உமக்கு?

//டேய் சன்முகா எட்றா வண்டிய...ஓட்டுறா வெஸ்ட் இண்டீஸ்க்கு :-) //


க்ரேக் கைப்புஸ் வண்டி ப்ரீயாத் தான் இருக்குதுங்க நாட்டாமை.. சம்முகமும் நீங்களும் அண்ணன் கூடவே வந்துருலாம்ங்க தனி வண்டி என்னத்துக்குங்க?

தேவ் | Dev said...

//ROTFL...கலக்கிப்புட்டீங்க....என்றா பசுபதி...நம்ம தேவு அண்ணனுக்கு ஒரு எளனி வெட்டி அதுல லேசா பக்கார்டி ஊத்தி குடு... :-) //

மொதல்ல பசுபதிய மீன் கொத்தி கொண்டாறச் சொல்லுங்க ஊளையிட்டுகிட்டேக் குடிப்போம்... சே ஊல்லாலால்லான்னு பாடிகிட்டே குடிப்போம்..

தம்பி said...

கலக்கல் தேவ்!

நெனச்சி நெனச்சி சிரிச்சேன்.


வழக்கம்போல நம்மாளுங்க விளாடும்போது யாராவுது அவுட்டு கேட்டாங்கன்னா

என்றா வேணும்...

அவுட்டு வேணுங்னா...

செல்லாது.. செல்லாதுன்னு... சொல்லிடுவேன்.

ஜி said...

கலக்கிப் போட்டீங்க தேவ்...

எல்லாருக்கும் பயங்கர ஆணி இருக்கும்போல.. பின்னூட்டத்துல கிரிக்கெட் வெளயாட ஆட்களையே காணோம் :((((

ஜி said...

உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள் என்ற என்னுடைய குறிப்பை நீர் பார்க்க வில்லை போலும்...

எனது வீரத்துக்கும், ஆற்றலுக்கும், கைக்கடங்கும் குட்டிப் பந்தையாத் திணிப்பார்கள். தலைக்கு நிகரானப் பந்தையல்லவா பவுண்டரியில் நிற்கும் என்னிடம் தர வேண்டும்...

ஒன்றும் அறியாத லகட பாண்டியர்கள்...

தேவ் | Dev said...

//கலக்கல் தேவ்!

நெனச்சி நெனச்சி சிரிச்சேன்.


வழக்கம்போல நம்மாளுங்க விளாடும்போது யாராவுது அவுட்டு கேட்டாங்கன்னா

என்றா வேணும்...

அவுட்டு வேணுங்னா...

செல்லாது.. செல்லாதுன்னு... சொல்லிடுவேன்.//

வாங்க தம்பி...

அவுட் மேட்டர் அட்டகாசம் போங்க.. நம்ம நாட்டாமைக் கிரிக்கெட்டுக்கு நல்லாத் தான் செட் ஆகுறார்ப்போ..

தேவ் | Dev said...

//எல்லாருக்கும் பயங்கர ஆணி இருக்கும்போல.. பின்னூட்டத்துல கிரிக்கெட் வெளயாட ஆட்களையே காணோம் :(((( //

அதே அதே.. ஆனாலும்
சொல்லுறேன் ஜீ கப் நமக்குத் தான்..

தேவ் | Dev said...

//உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள் என்ற என்னுடைய குறிப்பை நீர் பார்க்க வில்லை போலும்...

எனது வீரத்துக்கும், ஆற்றலுக்கும், கைக்கடங்கும் குட்டிப் பந்தையாத் திணிப்பார்கள். தலைக்கு நிகரானப் பந்தையல்லவா பவுண்டரியில் நிற்கும் என்னிடம் தர வேண்டும்...

ஒன்றும் அறியாத லகட பாண்டியர்கள்... //

இது சிக்ஸர்ங்க ஜி.. இது மாதிரி இன்னும் விளாசனும் ஆமா..

நிலா said...

//"ஏன் தம்பி.. தீர்ப்புச் சொல்லுறவனுக்கு ஒரு கவுரவம் வேணாமா.. வேகாத வெயிலே நின்னு தீர்ப்புச் சொல்லுற நீயு எப்படி இருக்க்கோணும்.. மார்ல்ல குளு குளுன்னு சந்தனம்.. ஒரு மரத்தடி.. கையிலே சொம்பு.. வாயிலே வெத்தலன்னு வீராப்பா இருக்க வேணாமா.. அதை விட்டுபுட்டு கோமாளி மாதிரி தொப்பி.. கோர்ட்ன்னு வெயில்ல நல்லாவா இருக்கு.. ."//

ஸ்மார்ட் அம்பயர் சைமன் இந்த கெட்டப்புல கலக்குவாரில்ல? :-)))))

நிலா said...

//முதலில் ஒரு பெட் ரோல் எடுப்பாரு. (பெட்ரோல் இல்லைங்க, சரியா படியுங்க!)//
கொத்ஸ்,
ஸோ டிபிகல் ஆஃப் யூ :-))

இந்த வரியைப் படிக்கற வரைக்கும் கொத்ஸுக்கு என்னாச்சுங்கற கேள்வி இருந்தது... இதைப் படிச்சதும் போயே போச் :-))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளு பாண்டி சித்தியோட சிஷ்யைகளிடம் சித்து வேலைகளால் ஈடுபட்டதாய் ஆந்திர பத்திரிக்கைகளில் கிசுகிசு செய்தி வந்தது. //

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !! ஜொள்ளுப்பண்டியின் பெருமைக்கும் மேலாண்மைக்கும் சிறுமை ஏற்படுத்தும் விதமாக சிஷ்யைகளிடம் 'sidhu' எப்படி விளையாடுவார் என விளக்கிக்கொண்டிருக்கும் காட்சி தவறாக பத்திரிக்கைகளிலே திரிக்கப்ப்ட்டிருக்கிறது !! ;)))))))))

//அந்தச் செய்தியை அணியின் மேனேஜர் டி.பி.ஆர் மறுத்து பதில் அறிக்கையை தமிழில் கொடுக்க..//

ஜோசப் அய்யா வாழ்க அவர் புகழ் ஓங்குக !! நம்மளை எப்பவுமே வுட்டுக்கொட்டுக்க மாட்டாருங்க அவரு !! :))))))))))))

இராம் said...

தேவ்ண்ணே,

எங்க ஆபிசிலே அநியாத்துக்கு ஆணி பிடுங்க விட்டதுனாலே இதெயல்லாம் அன்னிக்கே படிக்கமுடியாமே போச்சு....

கலக்கல் போஸ்ட் :)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10