Sunday, June 15, 2008

கலக்கல் கமல் - சொதப்பல் தசாவதாரம்

நடிப்புன்னா என்ன? மேக்கப் போடுறதா? விதம் விதமா மேக்கப் போட்டுகிட்டு சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறதா நடிப்பு.... தசாவதாரம் படம் முடிஞ்சு வெளியே வரும் போது எனக்குள் எழுந்த கேள்வி இது...

சரி மூணு நேரம் உள்ளே உக்காந்து படம் பார்த்தோமே படத்துக் கதை என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன்... அதான் படத்துல்ல மிஸ்ஸிங்... 10 கமல் இது தான் படத்துக்கு ஒன் லைனர்... ஒரு கமல் துரத்த.. இன்னொரு கமல் ஓட... வழியில் பல கமல்.. இது தான் படம்.

பல வருடங்களுக்கு முன் வந்த ஜிம் காரியின் மாஸ்க் படத்தை கமலின் மேக்கப் ஞாபகப்படுத்தியது... சின்ன வயசில் பொம்மைகளுக்கு மைதா மாவு பிசைந்து மாஸ் செய்து மாடி விட்ட ஞாபகமும் வந்துப் போனது... இந்தியனில் கமலுக்கு ஏற்பட்ட மைதா மாவு மோகம்.. சாரி மேக்கப் மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை... மைதா மாவு அரைப்பது தவிர்த்து பூசும் காட்சிகளைத் தொகுத்து இறுதியில் உலக நாயகனே பாடலில் தந்து இருக்கிறார்கள்..விருப்பமுள்ளவர்கள் பார்த்து பூசி பழகி உலக நாயகர்கள் ஆகும் முயற்சியில் ஈடுபடலாம்.

வழக்கமாய் ரஜினி படங்களில் ஒலிக்கும் நீ என்ன பெரிய இவனா பாணி காட்சி அமைப்பு அதற்கு கமல் தரும் பன்ச் டயலாக் பதில் ... யூ டூ கமல் என கேட்க வைக்கிறது...

பி.வாசு.. நீ என்ன உலக நாயகனா எனக் கேட்பது அதற்கு கமல் கேமராப் பார்த்து கமல் சொல்லும் பதிலும்... கமல் வெல்கம் டூ கோலிவுட் லோக்கல் சினிமா என சொல்ல வைக்கிறது...

புல்லட்டால் கேன்சர் சிகிச்சை செய்வது.... ஒடும் ரயிலில் தாவி ஏறுவது...மீண்டும் குதிப்பது, பைக் வைத்து லாரிக்கு அடியில் போவது, வேளாங்கண்ணி வரை எம்.ஆர்.டி.எஸ் ட்ரெயினில் போய் சேர்வது என கேப்டன் , இளையதளபதி, படங்களின் பாதிப்பு கமல் படத்திலும் தெரிவது கொடுமை..

மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், பாணி நகைச்சுவை தோரணங்கள் இதிலும் உண்டு கொஞ்சம் சலிப்பு, கொஞ்சம் சிரிப்பு

எல்லாருக்கும் "நானும்" பொது ஆள் தாம்ப்பா எனக் காட்டிக் கொள்ள அம்மாவும் ஹெலிகாப்டரில் வர்றாங்க.. அய்யாவும் கடைசியா சார்ஜ் புஷ் கூட மேடையேறி வர்றார் படத்துல்ல...

கமலின் அரசியல் முகவரி சொல்லும் வசனங்களும் படத்தில் உண்டு... ( கமல் தி.க. உறுப்பினர் தானே) . ரயிலில் அவர் பேசும் வசனங்கள் அதற்கு உதாரணம். மடம் குறித்து கமல் பேசும் சில வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பலாம் என்பது என் கணிப்பு. ஒரு நல்ல கலைஞன் மதம் தீண்டாமல் மக்கள் ரசனையை மெருகேற்றும் விதம் படம் எடுக்கலாமே...

ஒரு சாரசரி தமிழ் மசாலா படம் கமல் போடும் 10 வேடங்களால் அளவுக்கு மீறிய ஆவலைத் தூண்டி விட்டுள்ளது என்பது படம் பார்த்து வந்தப் பின் எனக்கு உதித்த கருத்து...

படத்தில் நான் ரசித்த விசயங்கள்... பல்ராம் நாயுடு கமலின் காமெடி... ஜப்பானிய கமலின் மேக்கப்... பிளட்சரின் அனாசயமான ஆங்கில உச்சரிப்பு....பூவராகவன் கமல் அருமையான பாத்திரப்படைப்பு..ஒரு தனிப் படமே எடுக்கலாம்... அசத்தியிருக்கிறார் கமல்.. அந்த மைதா மாவு மேக்கப் பெரிதாக உறுத்தாத ஒரு கமல் இவர்... குமரி மொழியை சரளமாய் பேசுகிறார் கமல்...சூப்பர். மத்தப் படி மற்ற கமல்கள் மேக்கப் என்னும் முகமுடிக்குள் சிக்கிய அனானிகளாகவே எனக்கு தென்பட்டனர்...

படம் ஆரம்பிக்கும் போது 12ஆம் நூற்றாண்டில் ஒரு கமல் வருவதாய் காட்டுகிறார்கள்.. அது கமலின் அடுத்தப் பட ட்ரெயிலரா.. இல்லை அந்த கமலுக்கும் இந்த தசாவதாரத்துக்கும் எந்த சம்பந்தமாவது இருக்குதா.. இருந்த மாதிரி எனக்கு தெரியல்ல... அந்த காட்சி அமைப்புகள் ப்ளஸ் கமல் நடிப்பு கலக்கல் ரகம்.

நாகேஷ், கூட கே.ஆர்.விஜயா, ஜெயப்ரதா,சந்தானபாரதி, பி.வாசு, ரேகா,வையாபுரி, சிட்டி பாபு, ரமேஷ் கண்ணா... இவங்களும் படத்துல்ல வர்றாங்க... பேசாம இவங்க ரோலையும் கமலே பண்ணியிருக்கலாம்...

எம்.எஸ்.பாஸ்கர் ஜொலிக்கிறார்.. குறிப்பாக... அந்த காற்றில் விரலால் S போட்டுக் காட்டும் காட்சி கலக்கல் காமெடி.

மல்லிகா ஷெராவத் அறிமுக காட்சி வசனம் அபத்தமாய் துவங்கினாலும் போக போக நன்றாகவே செய்துள்ளார்..அவரை இன்னும் கொஞ்சம் நேரம் வாழ விட்டிருக்கலாம்.

மொத்ததில் சொல்லணும்ன்னா கமல் ரசிகர்களுக்கு ஆஹா.. நல்ல சினிமா ரசிகர்களுக்கு அய்யோ...நம்மளை மாதிரி சாதாரண ரசிகனுக்கு ம்ம்ம்

பொதுவா கமல் என்ற கலைஞனுக்காக ஓ.கே.

தம்பியின் விமர்சனம் பாருங்க...
பா.ராகவன் விமர்சனம் படிங்க

15 comments:

G.Ragavan said...

படம் பாத்துட்டீங்களா... அதான் விமர்சனத்துல தெரியுதே. உங்க கருத்துகளை நான் ஒத்துக்கிறேன். படத்தைக் கண்டிப்பாப் பாக்கலாம். ஆனால் கமலின் உழைப்பிற்காகவே.

கோபிநாத் said...

சில விஷயங்கள் சொதப்பல் தான்...ஆனால் கலைஞானியின் உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் பார்க்கும் போது மீதி எல்லாம் தூசுண்ணே ;))

Sanjai Gandhi said...

கமலின் உழைப்புக்கும் புதுமையான முயற்சிக்கும் இந்த படத்தை பார்க்கலாம்ணா.

தறுதலை said...

நாகேஷ், கூட கே.ஆர்.விஜயா, ஜெயப்ரதா,சந்தானபாரதி, பி.வாசு, ரேகா,வையாபுரி, சிட்டி பாபு, ரமேஷ் கண்ணா... இவங்களும் படத்துல்ல வர்றாங்க... பேசாம இவங்க ரோலையும் கமலே பண்ணியிருக்கலாம்...

இலவசக்கொத்தனார் said...

ஜிலேபி சுத்தச் சொன்னா அதைச் செய்யலை. இதுல விமர்சனம் வேற....

நல்லதே கண்ணில் படலையா?

உண்மையிலேயே இதில் கதை இல்லையா?

கேயாஸ் தியரி.

இப்போ ஸ்ரீதர் வெங்கட் வந்து விளக்கம் தருவாரு.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//நல்ல சினிமா ரசிகர்களுக்கு அய்யோ...நம்மளை மாதிரி சாதாரண ரசிகனுக்கு ம்ம்ம்//
நல்ல பன்ச் !!!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Sridhar V said...

//இப்போ ஸ்ரீதர் வெங்கட் வந்து விளக்கம் தருவாரு.//

வந்துட்டோம்ல :-))

நாம சொல்ற வேலையை எளிமையாக்கிட்டார் நன்பர் இன்பா. http://iniya-inbaa.blogspot.com/2008/06/blog-post.html

Anonymous said...

100% real and original review.

Udhayakumar said...

//படத்துக் கதை என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன்//

கேயாஸ் தியரி.

//வழக்கமாய் ரஜினி படங்களில் ஒலிக்கும் நீ என்ன பெரிய இவனா பாணி காட்சி அமைப்பு அதற்கு கமல் தரும் பன்ச் டயலாக் பதில் ... யூ டூ கமல் என கேட்க வைக்கிறது...//

ரஜினி மட்டுந்தான் சொல்ல வேண்டுமா என்ன?

//படம் ஆரம்பிக்கும் போது 12ஆம் நூற்றாண்டில் ஒரு கமல் வருவதாய் காட்டுகிறார்கள்.. அது கமலின் அடுத்தப் பட ட்ரெயிலரா.. இல்லை அந்த கமலுக்கும் இந்த தசாவதாரத்துக்கும் எந்த சம்பந்தமாவது இருக்குதா.. இருந்த மாதிரி எனக்கு தெரியல்ல... //

கேயாஸ் தியரி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தேவ் அண்ணா
ஒத்துக்கறேன்! மைதா மாவு, கமலின் நடிப்பை மறைக்குது!
ஆக கமல்-னு வந்துட்டா நமக்கு மேக்கப்பை விட நடிப்பு வேனும்!

சரி, இம்புட்டு சொன்னீங்க!
படத்துல மைதா மாவு இல்லாத கமல்களும் உண்டே!
அவிங்கள பத்தி, அவங்க நடிப்பு பத்தி ஒன்னும் சொல்லலையே!
நீங்களுமா மைதா மாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தீங்க? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இல்லை அந்த கமலுக்கும் இந்த தசாவதாரத்துக்கும் எந்த சம்பந்தமாவது இருக்குதா.. இருந்த மாதிரி எனக்கு தெரியல்ல...//

எனக்குச் சுத்தமாத் தெரியலை!
இதைப் படம் வருவதற்கு முன்பும் சொன்னேன்! இங்கிட்டு!

ஆனா, படம் வர வரைக்கும் பொறுமை காக்க கூட மாட்டியா-ன்னு allthingskamal.info ல ரசிகர்கள் ஒரு ரசிகனைப் பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க!:-)
ஆனாப் படம் வந்த பிறகும் பாத்திரம் என்னவோ ஒட்டாத மாதிரி தான் இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விரலால் S போட்டுக் காட்டும் காட்சி கலக்கல் காமெடி.
//

நானும் இதையே ரசித்தேன்! :-)
அதே போல பாட்டி-பல்ராம் நாயுடு டயலாக்கும்!

ரமேஷ் கண்ணா கூட கலக்கல் தான்!

கமல், நான் ஒரு அப்பாவி-ன்னு சொல்ல,ரமேஷ் கண்ணா=Glad to meet u-ன்னு சொல்லுவாரு!
அந்த இன்ஸ்பெக்டர் எனக்கு ஒரு செல்போன் கொடுங்களே-ன்னு கேக்கும் போது, மொதல்ல உனக்கு அனிஸ்தீசியா கொடுக்கறென்-ன்னு டைமிங்க்கா அடிப்பாரு! :-)

Anonymous said...

hi, friends..

http:/www.jebamail.blogspot.com

this is my blog...

pls visit..

and keep touch with me.....

Boston Bala said...

நச் விமர்சனம்.

ரசிகன் said...

//நடிப்புன்னா என்ன? மேக்கப் போடுறதா? விதம் விதமா மேக்கப் போட்டுகிட்டு சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறதா நடிப்பு.... தசாவதாரம் படம் முடிஞ்சு வெளியே வரும் போது எனக்குள் எழுந்த கேள்வி இது...//

படம் பார்க்கும்போதே,பக்கத்திலிருந்த தம்பியிடம் கேட்டே விட்டேன். ஞாயமாய் பார்த்தால் மேக்கப் மேனுக்கு பட்டம் குடுத்திருக்கனும். (மேக்கப் அம்புட்டு இயல்பா கூட இல்லை:( )

என்னை உலக நாயகனா மாத்த எம்புட்டு செலவாகும்ன்னு மேக்கப் மேனிடம் கேக்கலாம்ன்னு இருக்கேன்:P

tamil10