Saturday, March 31, 2007

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கச்சேரி.

ஸ்டார்ன்னு ஒரு வாரம் கொடுத்துருக்காங்க,,, நாம விசில் அடிக்கிற ஸ்டார் பத்திச் சொல்லல்லன்னா எப்படி... லேட்டாப் போட்டாலும் தலைவருக்கு லேட்டஸ்ட்டா போட்டுருக்கோம் பாருங்க கச்சேரியை...

எளிமை

நடிகனின் இலக்கணத்தைத் திரையில் மட்டுமன்றி திரைக்கு வெளியிலும் முறியடித்தவர். வழுக்கைத் தலை... வெள்ளைத் தாடி... இயல்பான் உடைகள்... அட இவரு நம்மாளு என்று சொல்ல வைத்த விஷயங்கள்

இறை நம்பிக்கை

தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...

விடாமுயற்சி

அம்பதைஞ்சு வயசு ஆட்டம் கிளோஸ்... பாபாவின் டிராமா பணால்... முடிஞ்சுப் போச்சுன்னு முழுசா மூச்சடைக்க எழுதி ரஜினிங்கற பெயரெ இனி அச்சில் ஏறாதுன்னு சபதமேடுக்காத தமிழ் ஊடகங்கள் ஊதி முடித்த நேரம் மூன்று முகம் சந்திரமுகமாய் அரிதாரம் பூசி தன் தொழிலில் தான் இன்னும் சோர்ந்துப் போகவில்லை என நிருபித்தது...


போராட்டக் குணம்

வானம் உயர்ந்து இருக்கும் வரைத் தான் மதிப்பு...கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவு தான்.. ஆள் ஆளுக்கு இழுத்து விளையாடுவாங்க.. இன்னும் கொஞ்சம் போனா காலுக்கு கீழேப் போட்டு மிதிச்சு விளையாடுவாங்க.. அப்படித்தான் 'ஓடிப் போடா உன் ஊரு'க்குன்னு சொல்லாமல் சொன்னாங்க...காவிரி பிரச்சனையிலே கழுத்தை நெறிக்கப் பார்த்தாங்க. இந்தாளு கொஞ்சமும் அசராமல் தனி மனிதனா மேடை ஏறுன அந்த தில்... அந்தப் போராட்டக்குணம் அது தான் அவரை இது வரைக் கூட்டிட்டு வந்து இருக்கோ? இருக்கலாம்!

கடின உழைப்பு

உழைப்பு இதில்லாம விசில் அடிச்சுகிட்டு இருந்த மனுஷன் அதாங்க கண்டக்டர் இத்தனை விசில்களுக்கு உரிமைக் கொண்டாட முடியுமா?

புடிக்காதவங்கப் படிச்சிட்டுத் திட்டி எழுதத் தான் போறீங்க.. அது முக்கியம் இல்லீங்க... பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.

பொன்ஸ் அக்கா எங்கிட்டச் சொன்னது...

ஸ்ப்பா.. ஒரு மூணு இன்டர்வியூ தான் எடுத்திருப்பேன் அதுக்குள்ளே நம்ம புகழ் அக்கரைச் சீமைக்கெல்லாம் அலாக்காப் பரவிருச்சு.. CNN...BBC..இப்படி இன்டர்நேஷனல் டிவிகாரயங்க அப்புறம் பேர் சொல்ல வேண்டாம்ன்னு கேட்டுகிட்ட வெளிநாட்டு உள்நாட்டு சேனல்... பேப்பர் எல்லாம் எங்களுக்கு நீங்க ஒரு இன்டர்வியூ பண்ணிக் கொடுக்கணும்.. டாலர் தர்றோம்.. பவுண்ட் தர்றோம்.. நவுண்டு வாங்கன்னு நச்சரிப்புத் தாங்கல்ல... நான் தமிழ்ல்ல தானே இன்டர்வியூ பண்ணுறேன்னுச் சொன்னா பரவாயில்ல நாங்க உங்களுக்காக தமிழ் செக்ஷ்ன ஓப்பன் பண்றோம்ன்னு பாசமழையாப் பொழிஞ்சுத் தள்ளுறாங்க..

அதான் நேத்து மார்னிங் மெரிடியன்ல்ல ரூம் போட்டு யோசிச்சேன்.. ஈவினிங் ஈபிள் டவர் அடியிலே நின்னு அண்ணாந்துப் பாத்து யோசித்தேன்.. சரி என்ன இருந்தாலும் இந்த் தேவ் பைய நம்மளை நம்பி தான் வலையுலக பெருமக்களுக்கு எல்லாம் கச்சேரிக்கு வாங்கன்னு கூப்பிட்டிருக்கான்.. இப்படி அவனை அத்து விட்டா அப்செட் ஆயிருவான்ன்னு பீல் ப்ண்ணேன்.. அவனை விட ஆடியன் ஸ் உங்க கண்ணு கலங்கிரும்ன்னு தான் ஒரு நாள் லீவோடு திரும்பி வந்துட்டேன்...

இன்றையக் கச்சேரியில் மனம் திறக்கிறார் பொன்ஸ்... இவங்களைப் பத்தி அதிகம் அறிமுகம் தேவையில்லை... எல்லாருக்கும் தெரிஞ்ச முகம்... அப்புறம் இவங்க புதுசா என்னச் சொல்லப் போறாங்கன்னுப் பாக்குறீங்களா...இந்தா ஓவர் டூ பொன்ஸ் அக்கா

பதிவுலகின் புரட்சித் தலைவின்னு உங்களுக்குப் பட்டம் கொடுத்தா ஒத்துக்குவீங்களா?

இல்லை.. ஆனையக்கா டக்கராக் கீதுபா... ;)

பதிவுலகில் நீங்கள் அடைந்திருக்கும் இந்த அபார வளர்ச்சி அதிர்ஷ்ட்டமா இல்லை உங்கள்
திட்டமிடுதலின் பயனா?


அபார வளர்ச்சி? அது என்னங்க வளர்ச்சி? பொன்ஸ் பக்கங்களோட உள்ள நுழைந்தேன். இப்ப ப்ரோபைல் பார்த்தால், அஞ்சு பதிவுகள் இருக்கு. நல்ல வளர்ச்சி தான் :). இதில் அதிர்ஷ்டமும் இல்லை,திட்டமிடுதலும் இல்லை.
முதல்ல இதுல என்ன வளர்ச்சி இருக்குன்னே புரியலை எனக்கு.
புதுமையாவோ, இதனால் என் தினப்படி வாழ்க்கையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருக்குன்னோ, எனக்கு
அப்படி ஏதும் வளர்ச்சி தெரியலையே..

பொதுவாவே எந்த இடத்திலும் தனியா எதையுமே சாதிக்க முடியாது.. கூட்டணி அவசியம். பதிவுலகில் கூட்டணிகளை எந்த அளவுக்கு நீங்கப் பயன் படுத்தியிருக்கீங்க.. அதனால் உங்களுக்கு
லாபம் அதிகமா? இழப்பு அதிகமா?


நாம ஒரு சமூகத்தில் வாழுகிறோம். சமூகத்தில் நம்மையும் வெளிப்படுத்திக்கிறோம், அடுத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் போது செய்யுறோம். இதில் லாபம், இழப்பு என்று பேச என்ன இருக்குன்னு எனக்குப் புரியலை. சொல்லப் போனால், வலையுலகத்தைக் கண்டுபிடித்ததின் லாபம் அழுது வடியும் சீரியல்களிலிருந்து தப்பித்தது, ஒத்த கருத்துடைய நல்ல நட்புக்கள், நல்ல கருத்துப் பரிமாறல். இது கூட்டணி பதிவுகளிலும் எனக்குக் கிடைத்தது.

வ.வா.ச மூலம் நிறைய அறிமுகங்கள், சென்னப்பட்டினம் மூலம் சில வலைபதிவர் சந்திப்புகள் ஏற்பாடு செய்ய முடிந்தது, உதவிப் பக்கம் மூலம் நிறைய புது பதிவர்களை மற்றவர்களுக்கு முன்னமே அறிந்து கொள்ள
முடிந்தது, நிறைய லாபம் தான். இழப்புன்னா, இங்கே தொடர்ந்து இயங்கும் எல்லாருக்கும் உள்ளது போல், எனக்கும் நேரக் குறைபாடு நிறைய தெரியுது. ஆனால், அதையும் இப்போ பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டது போல் தோணுது. பார்க்கலாம்

பெண் பதிவர்களை ஒரு சில பெண் பதிவர்கள் ஒன்றிணைக்கும் நோக்கம் என்ன? சுயலாபமா? பொதுச் சேவையா? சொல்லுங்க..நீங்களும் அந்த ஒரு சிலப் பெண் பதிவர்களில் சேர்த்தி தானே?

வலையுலகில் யார் எதற்காக பதிவர்களை ஒன்றிணைத்தாலும், தத்தம் நோக்கத்தைச் சொல்லித் தான் செய்வதாக நினைக்கிறேன் - பெண் பதிவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாவித ஒருங்கிணைப்புக்கும் பொருந்துது.
வ.வா.ச தொடங்கிய புதிதில், நீங்களும் நானும் சிபி, இளா, பாண்டி, கைப்புள்ள
எல்லாரையும் ஒருங்கிணைத்த பொழுது, ஒரு காமெடி பதிவு தொடங்கப் போகிறோம் என்று சொல்லிச் செய்தோம். அப்போதைய நோக்கம் பதிவர்களுக்குச் சிரிக்க ஒரு இடம்.

அதே போல், சென்னப் பட்டினம்தொடங்கி ஒருங்கிணைத்த பொழுது, சென்னையைப் பற்றி எழுதுவது என்பது நோக்கம். வலைபதிவர் சந்திப்புகள் ஒருங்கிணைக்கும் பொழுது அனைவரையும் சந்திக்க ஒரு களம் உருவாக்கி கொடுப்பது நோக்கம்.

இதை எல்லாம் போல, சக்தி தொடங்கினவங்களுக்கு அப்போது வலையுலகில் எழுந்த பெண்கள் பற்றிய பொதுபுத்தியிலான தவறான கருத்தாக்கங்களுக்குப் பதில் சொல்வது நோக்கம். மகளிர் சக்தி
க்காக ஒருங்கிணைத்தது மகளிர் பதிவுகளை ஓரிடத்தில் சேர்த்து, தவறவிடாமல் படிக்க விரும்புபவர்கள் பயன்பெற.

சுயலாபமா? பொதுச் சேவையா? - என்னைப் பொறுத்தவரை இது ஒரு சுயலாபம் தான். எல்லா மகளிர் பதிவுகளையும் தவற விடாமல் படிக்கணும் என்பது என்னுடைய ஆசை. அதனால் அதைச் செய்தோம். இதைத் தொடங்கி வைத்து உதவிய மதிக்கும் இதே விருப்பம் தான் என்றே நினைக்கிறேன். மற்ற ஒத்த கருத்துடையவர்களுக்கு உதவும், அதனால் வெளியிட்டோம்.

பொதுவாகவே நீங்க ஒரு விளம்பர பிரியைன்னு நான் சொன்னா நீங்க அதை மறுப்பீங்களா? உங்க யானை
பிராண்டிங்கை நான் அதுக்கு எடுத்துக்காட்டாச் சொல்லுவேன்.


"பதிவுகள் வராவிட்டாலும் நம்மைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்க, பதிவு என்று எழுத ஒன்றும் இல்லாவிட்டாலும், சும்மாவேனும் ஏதாவது controversyஆன தலைப்பில் சொல்வதற்கு ஒன்றும் இல்லாத பொழுதும் எழுதி, அடுத்தவர்களைப் படிக்க வைக்க வேண்டும்" என்பதைத் தான் விளம்பரம் தேடும் விதமாக நான் நினைக்கிறேன்.

இந்தக் காரணத்திற்காக முன்பு நண்பர் ஒருவரை நான் விளம்பரம் தேடுபவர் என்று சொல்லி இருந்தேன். இந்த விளக்கத்தை வைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். ஆனால், "நீங்க ஒரு விளம்பர ப்ரியை" என்று நீங்க சொல்வதால், அதை நீங்க டிபைன் செய்தால் அதன்பின் நான் பதில் சொல்லலாம்.

யானை ப்ராண்டிங்: யானை பிராண்டிங்கில் என்ன விதத்தில் விளம்பரம் வருதுன்னு எனக்கு இன்னும் புரியலை. பிராண்டிங் என்பதன் டிக்சனரி
விளக்கம்,

"ஒரு பொருளைத் தன்னுடையது என்று உடமைப் பொருளாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்வது. மிருகங்களின் முதுகில் பச்சை குத்துவது போல..." என்று சொல்கிறது.

யானையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றோ, யானையின் படங்களை வேறு இடுகைகளில் வரக்கூடாதென்றோ, யானையைப் பற்றிய செய்திகள் வேறெங்கும் வரக்கூடாதென்றோ... எந்த விதத்திலும் ப்ராண்டிங் செய்து கொண்டதாகத் தெரியவில்லை. யானைப் பற்றிய செய்திகள் உள்ள எல்லா பதிவிலும் என்னுடைய பின்னூட்டம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், அதற்கும் என்னால் exceptionsஐக் காட்ட முடியும். எனக்கு யானை பிடிக்கும். உங்கள் ப்ரோபைலில் உள்ள குழந்தை போல, எஸ்கேவின் முருகன் போல, நாகை சிவாவின் புலி போல.. இதில் ப்ராண்டிங் எங்கிருந்து வருது என்று விளக்கினால், பதில் சொல்ல முடியுமா என்று பார்க்கலாம் ;)


ஆரம்பக் காலங்களில் உங்களுக்கு உங்க பதிவுகளில் எழுத வேண்டும் என்று இருந்த ஆர்வம் இப்போ பதிவர்களோடும்... பதிவுலகை ஒழுங்குப்படுத்துவதிலும் திரும்பியதற்கானக் காரணம் என்ன?

பதிவுலகை ஒழுங்குப்படுத்துவது - இதையும் கொஞ்சம் டிபைன் செய்தால் நல்லா இருக்கும் - அதாவது எந்த விதத்தில் இதை நான்(நான் மட்டும் ? ;) ) செய்வதாக உணர்கிறீர்கள்? இப்பவும் பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகத் தான் நினைக்கிறேன். ஒரு வருடத்தில் என்னுடைய தனிப்பதிவுகளில்(குழு அல்லாமல்) எழுதியவற்றைக் கூட்டினாலே நூற்றி எழுபதுக்கும் மேலான இடுகைகள் இருப்பதாகத் தெரிகிறது. எழுதும் ஆர்வம் குறைந்து போய் நீங்கள் குறிப்பிடுவது போன்ற நாட்டாமை வேலை செய்யத் தொடங்கி இருந்தால், இது கஷ்டம் என்றே நினைக்கிறேன்.

பின்னூட்டங்களில் நீங்கள் வீசும் வாட்களின் வேகம் உங்கள் பதிவுகளில் குறைவு என நினைக்கிறேன்... இதை ஒப்புக்கொள்வீர்களா? அதாவது இப்படிச் சொல்லலாமா அடுத்தவர் பதிவுகளில் பிரச்சனை என்றால் நாட்டாமையை நிற்கும் நீங்கள் உங்கள் பதிவுகளில் அதிகம் பிரச்சனை இல்லாத எழுத்துக்களைத் தான் போடுகிறீர்கள்.. சரியா?

உண்மை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரச்சனையைப் பற்றிய என் பார்வையை வைக்க முடியும். ஆனால், புதிதாக ஒரு செய்தியை வைத்து, அது குறித்து எழுத வேண்டும் என்றால், எனக்கு அதில் விருப்பமும் ஆர்வமும் இல்லை. செய்திகளை அத்தனை தூரம் தொடர்ந்து வாசிப்பதும் இல்லை.
"சற்றுமுன்" தான் இப்போதைய தினசரி எனக்கு :). ஆனால், பிரச்சனையான இடுகைகள் - அல்லது உங்கள் கேள்வியில் ஒலிப்பது போன்ற சீரியஸான பிரச்சனைக்குரிய இடுகைகளையும் எழுதி இருக்கிறேன் - எண்ணிக்கையில் அதிகமில்லை.

நம்ம பதிவுலகம் இன்னிக்குக் கிட்டத்தட்ட தமிழ் சினிமா மாதிரி தான்.. பதிவர்களுக்காக மட்டுமே
படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது.. இது ஆரோக்கியமான விஷ்யமா?


இது உண்மையா? எல்லாருமே பதிவர்களுக்காகத் தான் படிக்கிறார்களா? அப்படியானால், கண்மணி, அபி அப்பா, கௌசி, செல்லி, போன்ற புதுப் பதிவர்கள் எப்படி பெரும்பான்மையால் வாசிக்கப்படுகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை, புதுப் பதிவர்களின் எழுத்துக்களையும் நான் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். பதிவிட்டவரைப் பார்க்காமல் இடுகையைப் படிப்பது, இன்றைக்குத் தமிழ்மணம் இல்லாமல்[அலுவலகத்தில் என் லொள்ளு தாங்காமல் கட் பண்ணிவிட்டார்கள் :(],கூகிள் வாசிப்பகத்தில் மட்டுமே படிக்கும் எனக்கே சாத்தியமாக இருக்கிறது. இது போல் பதிவர் பெயருக்காக படிக்காமல், எழுத்துத் தரம், நடை, பேசுபொருள் இவற்றிற்காக நிறைய பேர்
இருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.

மக்களுக்காக என் பதிவா? எனக்காக என் பதிவா? நீங்கச் சொன்னத் தீர்ப்பைத் திருத்தி எழுதும் படி
உங்க மெஜாரிட்டி வாசகர்கள் சொன்னா.. ஏத்துக்குவீங்களா?"


உங்க பதிவு எதுக்கு என்று என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேன் தேவ்? ;) என் பதிவு எனக்காக. பொன்ஸ் பக்கங்கள் எனக்காக. சமீபத்தில் விவாதத்தில் இனியன் சொன்னது போல் "எந்த தனிமனிதருக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியுடனான" எல்லா விவரங்களும், எனக்குப் பிடித்த வகையில், என் பதிவில் வரும். ஒரு மழை நாளின் மாலையில், இஞ்சி போட்ட சுவையான சூடான தேநீரை ரசிப்பது போல், என் பழைய இடுகைகளைப் படியெடுத்துப் படித்து ரசிப்பது என்னுடைய பிடித்தமான பொழுதுபோக்கு. அதிகம் பேர் படிக்காத, விரும்பாத பதிவுகளைக் கூட இப்படி உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்ததுண்டு :)

ஆகையால், மெஜாரிட்டி வாசகர்கள், "மக்களுக்காக என் பதிவு" என்று சொன்னால் இருக்கட்டுமே! அவர்கள் பதிவு அவர்கள் மக்களுக்காக :-D பொன்ஸ் பக்கங்கள் பொன்ஸுக்காக ;)

தமிழ் பதிவுலகம் மேம்பட ஒரு மூணு திட்டம் போடுற அதிகாரம் உங்க கிட்ட இருந்தா என்னத்
திட்டங்கள் போடுவீங்க?


தமிழ்ப் பதிவுலகம் என்பது தனிமனிதர்களால் ஆன உலகம். இதில் யாரும் எந்த அதிகாரமும் யாருக்கும் தர முடியாது. ஒருவருக்குப் பிடிக்காத உலகமாக தோன்றினால், புதுப் புது உலகங்களை உருவாக்கிக் கொள்வார்கள். ஒரு மாற்று போல, ஒரு மகளிர் சக்தி போல, அவரவர்க்கான உரல் திரட்டிகள் தனியாக உருவாகும். உருவாக்கிக்
கொள்ளும் தொழிற்நுட்பத்தை மட்டும் பரவலாக ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே நெல்லை சிவா, ரவிசங்கர் போன்றவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசியா.. பதிவுகள் எல்லாம் NOTHING BUT REPRESENTATION OF UR OWN EGOnnu சொன்னா
ஒத்துக்குவீங்களா?


அதான் முதல்லயே சொல்லியாச்சே.. பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு :) வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... :-D


நன்றி பொன்ஸ் கச்சேரிக்காக நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை வழங்கியதற்கு..

மக்கா.. இன்னும் நீங்க எதாவது கேக்கணும்ன்னா கேக்கலாம்... HOPE U ENJOYED THE CUTCHERY

Friday, March 30, 2007

அட அநியாய ஆபிஸரே - 4

அப்ரேசல் முடிஞ்சு அவன் அவனுக்கு அல்வாவும் லட்டும் மிக்ஸரும் காரசேவும் இனிப்பு சேவும் ஏன் மக்ரூன் கூடக் கொடுத்தாய்ஙக... நமக்கும் கிடைச்சது எம்.ஜி.ஆருக்கு ஒரு புரட்சித் தலைவர் , கருணாநிதிக்கு ஒரு கலைஞர் ,ரஜினிக்கு ஒரு சூப்பர் ஸ்டார், கமலுக்கு ஒரு ஓலக நாயகன்...அந்த வரிசையிலே எனக்கும் கிடைச்சது ஒரு மெகாப் பட்டம்...என்னப் பட்டம்ன்னு கேக்குறீங்களா...

அதையும் சொல்லுறேன்.. ஜெர்மன் சோல்ஞ்சர்.. ஜெர்மன் ஷெப்பர்ட் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஜெர்மன் சோல்ஜ்ர் புதுசா இருக்கும்.. போனப் பதிவைப் படிச்சீங்கன்னா பட்டக்காரணம் உங்களுக்கே விளங்கும்...

நாளொரு நக்கலும் பொழுதொரு அவமானமும் என ஹிட்லருக்கும் எனக்குமான உறவு நிலை உலகத்தின் விளிம்ம்புக்குச் சென்று சீர்கெட்டுச் சின்னாப்பின்னமாகச் சிக்கு விழுந்துப் போய் கொண்டு இருந்தது..

இதனால் செமக் கடுப்புக்குள்ளான நான் அந்த முடிவை எடுத்து.. அதை என் நண்பர்களிடமும் சொன்னனேன்.. மச்சான் ஸ் பேசாம ராஜினாமாக் கடித்ததுல்லக் கையெழுத்துப் போட்டுரலாம்ன்னு பாக்குறேன்டா இன்னொரு பொன்மாலைப் பொழுதில் நாயர் கடை டீ ஸ்டாலில் நான் என் உணர்ச்சிகளைக் கொந்தளிச்சு கொப்பளிச்சேன்.

எனக்கு ஒத்தடம் கொடுக்கற மாதிரி ஒரு ஆறுதலான அயோடக்ஸ் தடவுன வார்த்தைகள் பதிலா வரும்ன்னு நான் காத்திருந்தா.. சண்டாளர்கள் டைமிங்காக் கவுத்து கரையான் புத்துக்குள்ளேக் கையை விட்ட எபெக்ட்ல்ல எனக்கு பதில் சொன்னாங்க..

மாப்ளே நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாமாடா.. நீ யாருடா வீரன்... ஒரு வீரன் இப்படி முடிவுப் பண்னக் கூடாதுடா.. போராடணும்.. அதுவும் நீ ஜெர்மன் சோல்ஜ்ர் ஆச்சு... குடிச்ச டீ தொண்டையிலே நின்னு குலுங்கி குலுங்கிச் சிரிச்சிட்டு வயித்துக்குள்ளேப் போச்சு... அந்த அளவுக்கு நக்கலுக்கு நையாண்டித்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டேன்.. யாரால்.. எல்லாம் அந்த ஹிட்லரின் மறு அவதாரத்தில்.. என்னைக் காப்பாற்ற ஒரு சர்ச்சில் வரமாட்டரான்ன்னு நான் தவிக்க ஆரம்பிச்சேன்...

சிரிங்கடா நல்லாச் சிரிங்க எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்குடான்னு தமிழ் படம் பாத்து கெட்டுப்போன டயலாக் ஒண்ணை எடுத்துச் சொல்லிட்டு ஹிட்லர் போன் வர பாதி டீயை மடக்கென்று ஊற்றி கொண்டு கிளம்பினேன்.....


அதுக்கு அப்புறம் ஒரு நாள் டீம் மீட்டிங் வைச்சாங்க...

அன்னிக்கு பாய் கடை பிரியாணியும் அவிச்ச முட்டையும் தின்ன அசதி ஆளை அசத்த கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. படு பாவி பயர்...(என்ன இருந்தாலும் நமக்கு மேலதிகாரி மரியாதைக் குறைவாப் பேசப்பிடாது எனக்கு நானே வச்சுருக்க கொள்கை இது.. நானெல்லாம் ஒரு கொள்கை வீரன்ங்க...அதைப் பத்தி தனியா வேற பதிவு போடுறேன்)) அசிங்கப்படுத்திட்டார் என்னிய.... கிட்ட வந்து தட்டியிருந்தாக் கூட எழும்பி இருப்பேன்... விளங்காத பயர் போனைப் பண்ணி எழுப்புறார்... என் கிரகம் புடிச்ச நேரம் அன்னிக்குப் பார்த்து அவருக்குன்னு செட் பண்ணியிருந்த ரிங் டோன் WHO LET THE DOGS OUT???

சைலண்ட் மோட்ல்ல இருந்து செல்லமா பேச வேண்டிய போன் சங்கநாதமா ஒலிச்சு என்னைச் சங்காரம் பண்ணக் கிளம்பிருச்சு...

WHATS WRONG WITH U MAN? நீ ஒரு ஆபிசர் மாதிரியே பிஹெவ் பண்ண மாட்டேங்குற? ஒரு காலேஜ் பையன் மாதிரி கோமாளித் தனம் பண்ணிகிட்டு திரியுரன்னு வாய்ல்ல கஞ்சி காயச்சு நான் போதும் போதும்ன்னு கதறும் அளவுக்கு ஊத்து ஊத்துன்னு ஊத்திட்டார்... சுத்தி இருந்தப் பிகருங்க எல்லாம் கெக்கப் பிக்கன்னு சிரிச்சு நொந்தவனை நூடுல்ஸ் ஆக்கி தொங்கவிட்டிருச்சுங்க...

அத்தோட விட்டிருக்கலாம்...

இந்த வாரம் பார்ட்டி போலாம்ன்னு மேப் போட்டார் ஹிட்லர்... மேப்ல்ல எனக்குத் தான் ஆப் சொருகியிருக்குன்னு தெரியாம வலியப் போய் மேப்பை வாங்கி மூக்கு கிட்ட வச்சு உத்துப் பாத்தேன்.. WE WILL HAVE A DRINKS PARTY?

ஹேய் சோல்ஜர் வாட்ஸ் யுவர் பேவரிட் டிரிங்க் மேன்? என்னைச் சீண்டுறதே அந்தாளுக்குப் பொழப்பாப் போச்சு.. பசங்களும் பாசத்தைப் பொங்க விட்டு அன்பை வழியவிட்டாயங்க... எனக்குத் தெரிஞ்ச சோம பானம், சுராபானம் பிராண்ட்டை எல்லாம் நினைவில் கொண்டு வர கடும் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கும் போதே பயபுள்ள ஒருத்தன் போட்டு உடைச்சான்.... மால்ட்டோவா மம்மின்னு....

'HES A teetotaler BOSS '

அப்படின்னு நம்ம நல்லப் புள்ளத் தனத்தை எடுத்துச் சொன்னாயங்க...

வாட்... சரியானப் பச்சப் புள்ள மேன் நீ...GROW UP DUDE அப்படின்னு என் நல்லப் புள்ளத்தனத்தைச் சின்னப்புள்ளத்தனமா ஆக்கி அலங்கோலப்படுத்திட்டார் நம்ம ஹிட்லர் அண்ணன்.

மீட்டிங் முடிஞ்சுப் போச்சு..என் மானம் கப்பலேறிப் பல மைல் தூரம் போயிருச்சு....காரணம் ரைட்டோத் தப்போ மேல இருக்க அதிகாரி நம்மளைச் சின்னப்புள்ளன்னுச் சொன்னா அசிங்கம் இல்லயா.. அவமானம் இல்லையா...ஒரே பிலீங்க்ஸ் ஆப் இன்டியாவல நொந்துப் போயிட்டேன்.. இதுக்காகவது ஒரு முழு பாட்டில் பீர் விட்டுட்டு போய் அந்த ஆள் முன்னாடி நின்னு மைக் போட்டு ஏஏ.. ஹிட்லர் வெளியே வாய்யான்னு கூப்பிடலாம்ன்னு தோணுச்சு.. பட் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நானெல்லாம் ஒரு பெரிய கொள்கை வீரன்...அதனால அமைதியாப் போயிட்டேன்... அடங்கிப் போயிட்டதா ஹிட்லர் மாதிரி நீங்களூம் தப்பு தப்பா நினைச்சுக்கக் கூடாது சொல்லிட்டேன்...

அதுக்கு அப்புறம், ஹிட்லர் ஆட்சி நமக்கும் பழகி கிட்டத்தட்ட ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய ஒரு தளபதியாவே காலம் என்னைக் கட்டாய மாற்றம் செய்தது எனக்கே ஆச்சரியமான விஷயம்..

இப்போ எல்லாம் அந்த ஆள் என்னிய என்னச் சொன்னாலும்...ஹே..ஹே.. குட் ஜோக் பாஸ்ன்னு வெக்கமே இல்லாம சிரிக்கிற அளவுக்கு சிரியசாக் கேரியர்ல்ல கவனமாயிட்டோம் இல்ல... ஆனாலும் அந்தச் சின்னப்புள்ள மேட்டர் மட்டும் மனசுல்ல ம்ஞ்சத்தூள் தூவி விட்டக் கணக்கா எரிஞ்சிகிட்டே இருந்தது...

அந்த மஞ்சத்துளை எடுத்து மசாலாவுல்ல போடுறதுக்குத் தோதா ஆபிசருக்கும் ஒரு கோல்டன் வாய்ப்பு வந்துச்சு... ஆமா அந்த ஹிட்லரை அடக்க ஒரு சர்சில் வந்தான்.. இந்த ஹிட்லரைக் கலாயக்க எனக்குக் கிறிஸ்துமஸ் ஒரு வாய்ப்பா வந்துச்சு.. வாய்ப்புன்னா வாய்ய்பு.. அம்புட்டு அருமையான வாய்ப்பு..

அது என்னன்னு கேக்குறீங்களா.. சொல்லுறேன்.. அதுக்கு நீங்களும் தயார் ஆக வேணாமா

இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைங்கறது பரிசுகள் கொடுத்து ஒருத்தரை ஒருத்தர் மகிழ்ச்சி அடைய வைக்கிற பண்டிகை.. கொடுப்பது இதன் சிறப்பு... இந்தப் பண்டிகைக் காலத்தில் வெளிநாட்டினர் ஒரு விளையாட்டு விளையாடுவாங்க அந்த விளையாட்டுக்கு பேர் கிறீஸ் மாம் .. கிறிஸ் சைல்ட்

இதைப் பத்தி கூகிளாண்டவரைக் கேட்டாக் கண்டிப்பா பக்கம் பக்கமா விளக்கம் கொடுப்பார்... எங்க ஆபிசும் மேற்கத்திய மக்களை வச்சு பொழைக்கிற ஆபிஸ் தானே... நாங்களூம் அந்த விளையாட்டை விளையாடணும்ன்னு எங்க ஹெ.எச் ஆர் அக்கா ( அக்காவை அதுக்குள்ளே மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்) வந்து ரூல்ஸ் எல்லாம் சொல்லி உசுப்பேத்தி விட்டாயங்க...

அதாவது சீட்டு எழுதி ஒரு பொட்டியிலே போடுவாங்க.. நம்ம பேர் எல்லாம் சீட்ல்ல இருக்குமாம்.. நம்ம எடுக்குற சீட்ல்ல யார் பேர் வருதோ நமக்குக் குழந்தை அந்தக் குழந்தைக்கு நாம் தான் அம்மா.. அம்மா பரிசு கொடுக்கணும் குழந்தையை ஊக்குவிக்கணும் ஒரு வாரம் இந்த விளையாட்டு நட்க்கும்

சரியா கிறிஸ்துமஸ்கு மொத நாள் யார் யாருக்குப் புள்ளன்னு தெரிஞ்சிரும்.. ஒரு வாரமும் யார் கிட்ட இருந்துப் பரிசு வருதுன்னு தெரியாம மெயின்டெயின் பண்ணனும் அந்த த்ரில் தான் விளையாட்டின் சிறப்பு...

இதைச் சொன்னது தான் தாமதம் அவன் அவன் தான் டாவடிக்கிற பொண்ணு தனக்கு குழந்தையா வர்ணும் கவர் பண்ணனும்ன்னு படா திட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டானுங்க... நாத்திகன் கூட சாமி கும்பிட்டு பயபக்தியாச் சீட்டு எடுத்தான்...

நானும் சீட்டு எடுத்தேன் நல்ல வேளை ஹிட்லர் பேர் இல்ல.... நமக்கு இந்த விளையாட்டு எல்லாம் அவ்வளவு சுவரஸ்யமா இல்ல..,. எதோ வந்த பேருக்கு எதாவது செய்வோம்ன்னு சீட்டை மடிச்சு வைச்சுட்டு பொட்டியைத் தட்ட ஆரம்பிச்சேன்...

நம்ம பைய ஒருத்தன் அவன் ரூட் விடுற பொண்ணு பேர் தான் சீட்ல்ல வரணும்ன்னு சிட்டியில்ல இருக்க எல்லா மதத்துக் கோவிலுக்கும் வேண்டிகிட்டு சீட் எடுத்தும் சிலிப் ஆயிருச்சு...ஒரு ரிட்டையர் ஆக வேண்டிய மாமா பேர் அவனுக்கு வந்துருச்சு...ஆனாலும் அவன் பீல் ஆகல்ல..

அவனை நான் காரணம் கேட்டேன்.. மாப்பூ இருந்தாலும் என்னடா.. நான் அவளுக்கு கிப்ட் கொடுப்பேன்.. அவளுக்கு அவ கிறிஸ்மாம் யார்ன்னு தெரியாதுல்ல... நான் கிப்ட் மூலமா என் காதலைச் சொல்லிருவேன்டா எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னான்...

அந்த ஆசிர்வதிக்க நிமிடம் என் மூளையிலே மின்னல் வெட்டிச்சு... அட அட ராசா என்ன ஒரு ஐடியாடா... என் நெஞ்சுல்ல மால்ட்டோவா வார்த்தடான்னு அவனை உச்சி மோந்தேன்..

என்னடான்னு அவன் கேட்டான்.. நீங்களும் கேப்பீங்க தெரியுது...

பதினாறு வயதினிலே பரட்டை மாதிரி உக்காந்துகிட்டு சொன்னேன்...

மாப்பூ ஹிட்லருக்கு நான் கிப்ட் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்டா.... இந்த ஒரு வாரமும் நான் கொடுக்கிற கிப்ட்ல்ல மவனே ஹிட்லரை அப்படி கலாய்க்கிறேன் பாருன்னு.. வீரப்பா ரேஞ்சுல்ல சிரிச்சேன்... அப்புறம் வெயிட்டீஸ் ...டூமாரோ முடிச்சுக்குவோமா.... ஏன்னா நட்சத்திர சீசன் க்ளோஸ் ஆகப் போகுதுல்ல

சென்னைக் கச்சேரி... அப்படின்னா?

இந்தப் பதிவெல்லாம் போட வந்து ஆச்சுங்க ஒரு ஒன்றரை வருசம்..இப்படி கூப்பிட்டு நடுவுல்ல நிக்க வைக்கும் போது தான் நம்ம நிலைமை நமக்கேப் புரியுது... அட நான் கூட பதிவெல்லாம் எழுதியிருக்கேன்ய்யா வாங்க வந்துப் படிங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா அந்த நல்ல பதிவுகளின் விலாசத்துக்கு நானே அலைய வேண்டியிருக்கு.. அப்படின்னா நான் நல்ல பதிவேப் போடல்லியான்னு ஒரு கேள்வி என் முன்னாடி தொக்கி நிக்குது...அதுக்கு விடைத் தேடி கிளம்பப் போறது கிடையாது நானு.. அதுன்னால கவலைப் படாதீங்க..

பதிவுகங்கறது என்ன.. ? அது மூலமா என்னச் சாதிக்கலாம்ன்னு எப்போவோ என் நண்பன் ஒருத்தன் கேட்டான்.. அவன் ஒரு வியாபாரி.. ஒத்த ரூவாப் போட்டாலும் ஒண்ணே முக்கா ரூவா வருமான்னு கணக்குப் பாக்குறவன்..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா வியாபாரம் தான்.. லாப நஷ்ட்டங்கள் இல்லாம யாரும் வாழ்ந்து முடிக்கறது இல்ல.. பதிவுகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆரம்பத்தில் எழுதுவதற்காக மட்டும் என்று நான் எழுதிய காலம் உண்டு.. அப்புறம் ஒரு நாலு பேர் நம்மப் பதிவைப் படிச்சு அவங்கக் கொடுத்த உற்சாகப் போதையிலே மயங்கி கொஞ்ச காலம் அவங்களுக்காக மட்டுமே பதிவுகளை உற்பத்தி செய்ததும் ஒரு காலம்..அதாவது நமக்குன்னு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொண்ட நேரம் அது.. அந்தச் சந்தையின் ஸ்திரத் தன்மை பற்றிய கவலை இன்றி அந்தச் சந்தைக்காக மட்டுமே பதிவுகளை பதித்துத் தள்ளியதும் உண்டு..CREATION IS DIFFERENT FROM MANUFACTURING...உருவாக்கத்திற்கும் உற்பத்திக்கும் மாறுபாடு தெரியாத நிலையில் தவழ்ந்தது ஒரு காலம்.

இப்படி பதிவுகளை பின்னூட்டங்களுக்கு விற்று பொழப்பு நடத்திக் கொண்டிருந்ததும் ஒரு காலம்..தன் சந்தை தன் வியாபாரம் எனப் போய்கொண்டிருந்த நேரத்தில் வெளியில் பலப் புதிய சந்தைகள் முளைத்தன..புதிய வியாபாரிகள் தோன்றினார்கள்.. புதுச் சரக்குகள் குவிந்தன..வழிந்தன..மலிந்தன.. சந்தையைக் கவர்ந்த வியாபாரிகளின் சரக்கு வெற்றி கொடிக் கட்டியது..

மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்று நம்பிய பழைய வியாபாரிகள் தங்களைக் காத்துக் கொண்டனர்.. தங்கள் சரக்கையும் தொடர்ந்து விற்று தீர்த்தனர்...இன்னும் சில வியாபாரிகளுக்கு கூட்டணி தேவைப்பட்டது.. கூட்டணிகளில் சில வியாபாரிகள் சுய முகம் தொலைத்தனர்.. சுயம் வேண்டியவர்கள் புறம் சென்றனர்..

புறம் சென்றவர்கள் புதுக் கூட்டணி கண்டனர்.. கூட்டணிகளில் மாற்றம்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சந்தை மாறியது.. காலப் போக்கில் மாற்றபட்டது... வியாபாரம் செயது அலுத்த்வர்கள் அரசியல் செய்யத் துவங்கினர்.. அதிகாரம் தேடினர்.. ஆட்சிக் கேட்டனர்...


அறிக்கைகளில் மோதினார்கள்.. புள்ளிவிவரங்களில் பொங்கினார்கள்.. வரலாற்று குறிப்புகளைச் சொல்லி குமுறினார்கள்.. நீயா.. நானா.. நீட்டினார்கள் முழக்கினார்கள்..

குழப்பம் தொடர்கிறது...

மக்கா மன்னிச்சுருங்க... என்னடாச் சென்னைக் கச்சேரி அப்படின்னா? இப்படின்னு ஒரு தலைப்பைப் போட்டுட்டு என்னமோ உளறியிருக்கேன்னு கேக்குறீங்களா?

இன்னிக்கு நம்மப் பதிவுலகத்துல்ல இப்படி எல்லாம் தான் நடக்குதுன்னு சொல்ல வந்தேன்.. ஆனாப் பாருங்க சொல்ல வந்த வழியிலே நானும் குழம்பிட்டேன்..

ஒவ்வொரு தடவையும் இப்படி குழம்பும் போது..இந்தக் குழப்பத்துக்கெல்லாம் விடைத் தேடலாம் வாங்கன்னு நம்ம பதிவர்களுக்கு எல்லாம் ஒரு அழைப்பு விடுக்கலாமன்னு போஸ்ட்டர் டிசைன் ரெடி பண்ணும் போது நம்ம மேனேஜர்.. தம்பி இங்கே கொஞ்சம் வந்துப் பார்.. இந்த ஆணியை நீ இன்னும் கொஞ்சம் பெட்டராப் புடுஙகணும்ன்னு வாயால பந்தல் போட்டு உக்கார வச்சு நமக்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுறார்..அப்புறம் நம்ம கச்சேரியின் ராகமே மாறிடுது...

சொல்ல வந்தது இது தான்ங்க.. நம்மச் சுத்தி நிறைய திறமை இருக்கப் பதிவர்கள் இருக்காங்க.. அவங்க எழுத்துக்கள் அட்டகாசமா இருக்கும்.. படிக்கப் படிக்க இனிமைன்னு ரசிக்கும் படியா இருக்கும்..

ஆனா எதோ ஒரு காலகட்டத்துல்ல அந்தப் பதிவர்களும் ஒரு வியாபாரியாவோ... இல்ல தேவை இல்லாதா அரசியல்களில் சிக்கிச் சுழன்று தன்னிலைத் தாழ்ந்துக் காணாமல் போகும் போது அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது என் நிலையை என்னவென்று சொல்லுவது

கச்சேரிக்காரனின் நெஞ்சுப் பொறுக்குதில்லையே....

Thursday, March 29, 2007

ஆபிஸருக்கு இன்னிக்கு அப்ரேசல் - 3

ஒரு வாறாக பொழப்பைக் கத்துக்கிட்டு எதோ தக்கா புக்கான்னு வேலையைப் பாத்துகிட்டு இருந்த நேரம் நம்ம டேமேஜர் கொடுத்த இமசை இருக்கே அதைச் சொல்லி மாளாதுங்க...ஒரு தனி பொஸ்தகமே போடலாம்..

போன்ங்கற ஒரு பொருளை கிரகாம் பெல் கண்டுபிடிச்சதே இந்த கிரகம் பிடிச்ச டேமேஜர் என்னைய திட்டி திண்டாட வைக்கிறதுக்குத் தானோ நான் நினைச்ச நாட்கள் ஏராளம். இத்தனைக்கு அந்த ஆள் சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருபது அடி தூரம் தான் இருக்கும்...

எந்த அள்வுக்கு வெறுப்பு ஏத்துவார்ன்னா... நான் பக்கத்துல்ல நின்னுகிட்டு இருந்தாக் கூட என் டெஸ்க்குப் போய் போனை எடுக்கச் சொல்லிட்டுப் போனைப் போடுவார்...மனுசனுக்கு நானும் மரியாதைக் கொடுத்துப் போனை எடுத்தா.. ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...ஒரு மனுசன் எம்புட்டுத் தான் தாங்குவான்.. என்னத் தான் நான் கைப்புள்ளயின் தீவிர ரசிகனா இருந்தாலும்.. அப்பப்போ அந்த ஆளு மேல விருமாண்டி காளை மாதிரி மோதி முட்டி வச்சிரலாம்ன்னு தோணும் ஆனா முடியாது...

ஒருக்கா பின்னாடி ஓட்டல்ல எதோ புதுசா திங்குற ஐட்டம் ஒண்ணு போட்டுருக்காங்கன்னு எல்லாரும் எடுத்துச் சொல்லி ஆசைக் காட்ட அது எதோ ஒரு வியர்டு ஐட்டம் போலிருக்கும்.. பாதி தூக்கத்திலிருந்தக் கோழியைத் தட்டி எழுப்பி கழுத்தைத் திருகி கொழம்புல்லப் போட்டாய்ங்கப் போல.. அது விட்ட சாபமோ என்னவோ... தின்ன எனக்கு வயிறு விசில் அடிச்சு வில்லங்கமாகி வில்லுப்பாட்டாடிருச்சு..

மனுசன் அவஸ்தையிலே அவ்சரமாப் போய் உக்காந்து இருந்தா அங்கிட்டும் அந்த ஆள் போன்.. மொபைல் போன் வேற கூன்னு கூவுது.... முழு ரிங் விட்டுட்டு சும்மா இருந்தேன்.. மறுபடியும் அடிக்கிறார் அந்த ஆளு.. என்னை விட என் வயிறு பட்ட பிலீங் இருக்கே அதெல்லாம் பதிவுல்ல விவரிக்க முடியாத வேதனை...

சரின்னு பல்லைக் கடிச்சுகிட்டு... பாஸ் ஐ யாம் இன் டீப் டிஸ்டெரஸ்... அப்படின்னு ஆரம்பிச்சு நடந்த சம்பவம் துவங்கி நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு வரைக்கும் பயங்கர எமோஷனலாச் சொல்லி முடிக்கிறேம்... ஓகே ப்னிஷ் இட் பாஸ்ட் அன்ட் கம் வீ ஹேவ் எ மீட்டிங் இன் நெக்ஸ்ட் 5 மினிட்ஸ்ன்னு சொல்லுறார்...

யோவ் நான் என்ன அஞ்சப்பர்ல்ல உக்காந்து நெஞ்செலும்பு சூப் வாங்கி சப் கொட்டி குடிச்சிகிட்டு இருக்கேன்னா சொன்னேன்.... என்ன நிலைமையிலே இருக்கேன் வெக்கம் எல்லாம் விறகாக் கட்டி வித்துட்டு உங்கிட்டச் சொன்னா.. ப்னீஷ் இட் பாஸ்ட்ன்னு சொல்லுறீயேன்னு.... அதுக்கு அப்புறம் விவரம் கேக்காதீங்க...

ஒண்ணே ஒண்ணு இப்படி ஒரு நிலைமையிலே தான் என் மொபைல்ல அந்த ஆள் பேரை 'ஹிட்லர்'அப்படின்னு மாத்தி வச்சேன்....

அதுக்கு அப்புறம் அந்த ஆள் கால் எப்போ வந்தாலும் .. என் மொபைல்ல ஹிட்லர் காலிங் அப்படின்னு தெரியும் பாருங்க அதைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்...
இந்த ஹிட்லர் விவகாரம் ஒரு நாள் டீக் கடையிலே நம்ம சகாக்களுக்கும் தெரிய வந்துச்சி.. நமக்கு ஒரு தனி மரியாதைக் கிடைக்க ஆரம்பிச்சது...

அதாவது டீக் கடையிலே நிக்கும் போது அந்த ஆள் கால் வந்துச்சு...

"மாப்பூ யாருடா ஹிட்லர் காலிங்..." பசங்க கேக்க..

"எல்லாம் டேமேஜர் தான் " அப்படின்னு ஆரம்பிச்சு அதன் பின் கதைச் சுருக்கத்தை ஒரு வழியா ஒரு மசாலா டீ.. ரெண்டு கீரை வடைக்கு ஊடே சொல்லி முடித்தேன்...சகாக்களும் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி என்னை உசுப்பு உசுப்புன்னு ஏத்தினதிலே... வெறும் ஹிட்லரா இருந்தவரை..
"தி லிவிங் ஹிட்லரா" மாத்தி மெருகு ஏத்திட்டேன்...

ஹிட்லரின் அராஜகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக் கூடிக்கிட்டேத் தான் போச்சே தவிர குறையவே இல்லை..

ஆப்ரேசல் ஆப்ரேசலுன்னு ஒரு விஷப் பரீட்சை ஒரு நன்னாளில் நிச்சயிக்கப் பட்டது.. நமக்கு அது தான் முதல் அனுபவம்... தனியா ரூம் போட்டு நம்மை நாறடிக்கப் போறாங்கன்னு தெரியாத அப்பாவி பருவம் அது... நல்லா சீவி சிங்காரிச்சு... சென்ட் எல்லாம் அடிச்சு.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தேயச்ச சட்டை எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிப் போனோம்ல்ல ஆபிஸ்க்கு....

உள்ளே போறவன் எல்லாம் பிரியாணி சாப்பிட பெல்ட்டை லூஸ் பண்ணி விட்டுகிட்டு போற மாதிரி போயிட்டு வரும் போது தீ மிதிச்ச கவுண்டமணி மாதிரி முகத்தை வச்சிகிட்டு வந்தாயங்க...

சாயங்காலம் ஆச்சு.. கடைசியா நான்....

நானும் டேமேஜரும் மட்டும் பாக்கி...

டேமேஜர் ஆப் வச்சு ஆப் வச்சு டயர்ட்டா ஆயிட்டார்.. மனுஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடுப்போட இருக்கார்...

"வெல் தேவ்... வீ வில் கோ த்ரு யுவர் அப்ரேசல் வித் அ காபி"

காபி வித் அனு.. வந்தக் காலத்துக்கெல்லாம் முன்னாடி ந்டந்தது இது.... சொல்லிட்டு மௌசன் யாருக்கோ போன் பண்ண ட்ரைப் பண்ணிகிட்டே இருந்தார்.. போன் போகவே இல்லை...

"SEEMS LIKE SOME PROBLEM WITH MY MOBILE..CAN I USE UR MOBILE"

அப்படின்னு கேட்டார்...

நானும் ரொம்ப பவ்யமா "சொரிங்க ஆபிசர்" ன்னு முட்டியை மடக்கி போனை அவர் கையிலே கொடுத்தேன்.

அங்கிட்டு தான் விதி வில்லனா மாறி என்னை வம்புல்ல கோர்த்து விட்டு கிளாப் அடிச்சது..

"WAIT A MINUTE>> I WILL TRY CALLING U AND CHK IF MY MOBILE IS OK BEFORE I TRY ON UR PHONE"

இடது கையிலே என் போன்.. வலது கையிலே அவர் போனில் நம்பரைத் தட்டுறார்....நானும் படு ஸ்டைலா பவ்யமாப் போஸ் கொடுத்தப் படி மூஞ்சைச் சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு நிக்குறேன்...

அவர் கடைசி நம்பரை அழுத்தும் போது தான் என் மூளைக்குள்ளே மின்னல் வெட்டுது.... வெட்டி என்னப் பயன்.. என் போனிலே இடி விழ்ந்துருச்சு...

"தி லிவிங் ஹிட்லர் காலிங்ன்னு " மினுக்மினுக்குன்னு மொபைல் ஸ்கிரீன் டாலடிக்க... அந்தாளு முகத்துல்ல சுனாமி சுரண்டிட்டுப் போன எபெக்ட்

அந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருது...அதே சமயம் அப்ரேசல் நினைப்புக்கு வர... சொ.செ.சூ அப்படின்னா என்னன்னு விளக்கம் புரியுது... இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா?

டீச்சருக்கே பரீட்சை...இந்தாங்க கேள்வித் தாள்!!!

ஏலேய் தேவ்.. நீயும் தான் ஒரு 60 - 70 பதிவுப் போட்டுருப்ப... மொத்தமா எத்தனைப் பின்னூட்டம் வாங்கியிருப்ப... என்னையப் பார்த்தல்ல.. 500 தாண்டிப் போயிட்டுருக்கோம்... கொஞ்சம் தள்ளி நில்லு.. ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு தனக்குத் தானே அறிவித்துக் கொண்ட மனச்சாட்சி எகத்தாளத்தில் குதித்தது...
அடேய் ஸ்டார் எல்லாம் உனக்குப் பேட்டிக் கொடுத்தப் புண்ணியாவான்கள் தான் நீ வெறும் ரிப்போர்ட்டர்.. ஆனா நீ என்னமோ ஓவர் பில்டப்புல்ல திரியற.. 500 வந்தாலும் நீ கேட்டக் கேள்வி நல்லாயிருக்குன்னு ஒரு 4 பேர் சொல்லியிருப்பாங்களா.. ம்ஹும் இப்படி எல்லாம் கேக்க நினைச்சேன்.. உச்சியிலே உக்காந்து உடுக்கு அடிக்கிற.. வுழுந்தா தெரியும்டீ சேதின்னு சும்மா இருந்தேன்..

அப்புறம் என்ன எதோ தீவிரமாச் சிந்திச்சான்.. பையக் கையிலே எதோ கொஸ்டீன் பேப்பர் மாதிரி தெரிஞ்சது.. நியுசிலாந்துக்கு எந்தப் பஸ் போகும்ன்னு கேட்டான்?

என்ன லந்தான்னு கேட்டதுக்கு..உனக்குத் தெரியல்லன்னா விடு... நான் கால் டாக்ஸி புடிச்சு போயிக்குறேன்னு போயிகிட்டே இருந்தான்..

அனேகமா அந்த கொஸ்டீன் பேப்பர் துளசி டீச்சருக்குத் தான்னு நினைக்கிறேன்..

சுமார் 500 பதிவுகளைத் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் தன் பதிவுலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய நம்ம துளசி டீச்சரை பேட்டி எடுக்க முடிவு பண்ணி நம்ம நட்சத்திர ரிப்போர்ட்டர் களத்தில் இறங்கியிருக்கான்

இனி ஓவர் டூ துளசி டீச்சர் அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்


பதிவுலகப் பதிவர்கள் சார்பா உங்களுக்குப் பட்டம் கொடுத்தா என்னப்
பட்டம் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறீங்க?


அப்படிக்கேளு என் ராசா! என்னோட வியர்டூலே சொன்னது யாருக்காவது(??)ஞாபகம்
இருக்கா? டாக்குட்டர் பட்டம் கொடுத்துருங்கையா. என்கிட்டே ஸ்டெத்கூட இருக்கு!!!!

பதிவுப் போடுவதற்கு அவசியம் நீங்க நினைக்கிறது என்ன?

இந்தக் கேள்வி எனக்குதானே?
அவசியமுன்னு பார்த்தா என்னுடைய கோடானுகோடி(!!!) வாசகப்பெருமக்கள்
ஏமாந்துருவாங்கன்ற நினைப்பைத் தாங்கிக்க முடியாமத்தான் எழுதறேன்னு
சொல்லலாமா? ( அடச்சீ, ச்சும்மாக்கிட. அது ஒண்ணுமில்லைப்பா.இந்த மனசாட்சிவந்து
பிறாண்டிக்கிட்டு நிக்குது)
தேவ்........... அது ஒண்ணுமில்லை. ச்சும்மா இருக்கமுடியாம எதை எழுதுனாலும் தொடர்ன்னு
ஆரம்பிச்சுக்கறதாலே தொடர்ந்து எழுதத்தானே வேணும்? இப்படித் 'தொடரும் தொடரும்'ன்னு
போட்டே ஒரு அவசியத்தை உண்டாக்கிக்கிறதுதான் உண்மை!

பதிவுலகம் பக்கம் வந்திருக்கும் மூத்த பதிவர்களுக்கும் இளம் பதிவர்களூக்கும்
உறவு நிலை எப்படி இருக்கிரதுன்னு நீங்க நினைக்கிறீங்க? எப்படி இருந்தா
நல்லா இருக்கும்ங்கறது உங்க கருத்து?


உறவு நிலை நல்லாத்தான் இருக்கு. இதுலே எதுக்கு மூத்த, இளைய ன்னு வயசை நுழைக்கணும்?
எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


உண்மை பெயர் குறிப்பிட்டு எழுதும் சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்... சொந்தப் பெயரில்
பதிவு எழுதுவது வசதியா? இல்லை அதனால் தொல்லையா?


சொந்தப்பெயரில் எழுதுறது ஒரு விதத்தில் வசதிதான். உண்மைக்கு மாறான விஷயத்தை எழுதவோ,
அடுத்தவுங்களைப் பத்திக் கன்னாபின்னான்னு எழுதவோ மனசு வராது. இதுவே ஒரு நல்ல செய்கை. இல்லையா?

தமிழ் பதிவுகள் உங்கப் பார்வையில் ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்திருக்கா இல்லை
பதிவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருக்கா? IS IT JUST QUANTIFIED GROWTH
OR QUALIFIED GROWTH?


எழுதணுமுன்ற ஆர்வம் மேலிட்டு, சிலர் நிறையப் பதிவுகளை வச்சுருக்காங்க. நம்ம யாருக்குமே எழுத்துன்றது
தொழில் கிடையாது பாருங்க. புவ்வாவுக்காக வேற வேலை செஞ்சுக்கிட்டு அங்கே இங்கேன்னு நேரம் திருடிக்கிட்டு
எழுதறோம். சில பதிவுகளைப் பார்த்தாத் தொடக்கத்துலே இருந்த ஜோர் இருக்காது. அதுனாலே பதிவுகளுக்கும்
நாமே ஒரு கட்டுப்பாடு வச்சுக்கிட்டா......... அது நிறையப்பேரால் படிக்கப்படும் வாய்ப்பு இருக்குமுன்னு நான்
நினைக்கறேன். இப்பக் கணக்குக்கு 1800 போல வருது. படிக்க நேரம்?

பெண் பதிவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா?

நான் இருக்கட்டும், உண்மைக்குமே நீங்க இதை ஒத்துக்கறீங்களா? இந்த மாதிரி புரளியை
யார் கிளப்பி விடுறாங்க?

கிசுகிசு பதிவுகள் அவ்சியமா? அதுல்ல உங்களைப் பற்றி செய்தி வந்தா ரசிப்பீங்களா?

வெகுஜனப் பத்திரிக்கைகள் காசு பண்ணறதுக்காக இப்படிக் கிசுகிசுக்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கு. இந்தக்
கேவலம் எல்லாம் நமக்கு வேணுமா? மாற்று ஊடகம் வேணுமுன்னுதானே பதிவு எழுதவோ, பதிவுகளைப் படிக்கவோ வர்றோம்?
என்னப் பத்தின கிசுகிசு வந்தா( வந்தா என்ன.வந்தா? அதான் நாலைஞ்சுமுறை வந்துட்டதே) அடப் போங்கடான்னுட்டு
போய்க்கிட்டே இருக்கறதுதான். எனக்கு இதைப் பத்திக் கவலைப்பட நேரம் இல்லை. பதிவு எழுதணும் எனக்கு........ ஆமா.

எனக்குத் தெரிஞ்ச வரை உங்கள் பதிவுகளில் ஆணாதிக்க எதிர்ப்பு பார்க்க கிடைக்காது...
( தவறாக இருப்பின் திருத்துங்கள்) உங்கள் ஆண் சமுதாயத்தின் மீது எந்த விதமான
வருத்தமும் கிடையாதா?


எதுக்குப்பா ஆணாதிக்கம், பெண்ணாதிக்கமுன்னு சர்ச்சையை வளர்த்துக்கிட்டு நேரம் போக்கணும்? அந்த
நேரத்தை நம்மோட அறிவை வளர்க்கரதுக்கும்( பதிவுகள் படிச்சான்னு கேக்காதீங்க) ஆக்க பூர்வமா செய்ய
வேண்டியதைச் செஞ்சுக்கிட்டும் இருந்தா எந்த ஆதிக்கமும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
வளர்ந்துறமாட்டோமா?

ஆண் சமுதாயத்துமேலே எனக்கிருக்கற ஒரே ஒரு வருத்தம் என்னன்னா............ஒரு சிலர்( கவனிங்க ஒரு சிலர்) பெண்ணைத் திட்டணுமுன்னா அவள் என்ன செஞ்சாளோ அந்த செய்கையை விட்டுட்டு, அவளுடைய ஒழுக்கத்தை கேவலமாப்பேசி சேறு எறியறது. இது தனக்கே அசிங்கமுன்னு எப்பத்தான் உணருவாங்களோ?

பதிவுகள் பொருத்த வரை நீங்க ஒரு VORACIOUS READER எந்த விதமானப் பதிவுகள்
தேவை இல்லாதது அப்படின்னு நினைக்கிறீங்க? எந்த விதமானப் பதிவுகள் அதிகம்
வரணும்ன்னு நினைக்கிறீங்க?


என்னைப் பொறுத்தவரை ஜாதி, மதப் பதிவுகள் தேவையே இல்லை. பதிவு எழுதி ஜாதியை ஒழிக்கவும் முடியாது. ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக எதாவது செய்ய முடியுமுன்னா அதைத் தன்னோட வாழ்க்கையில் கடைப்பிடிச்சாப் போதும். சிலர் குதிரைக்கு கண்பட்டை போட்டுருக்கறமாதிரி விடாம எழுதிக்கிட்டே இருக்காங்க. இதையெல்லாம் யாராவது படிக்கிறாங்களான்னு அவுங்களுக்கே தெரியணும்.

மத்தபடி பதிவுகள் எதைப் பத்திவேணுமுன்னாலும் இருக்கட்டுமே. அவுங்கவுங்களுக்குப் பிடிச்சதைப் படிச்சுக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

பதிவுகள் போடுறது கிட்டத் தட்ட ஒரு ADDICTION மாதிரி ஆகிட்டு வருது... இது நல்ல விஷ்யமா?

இல்லவே இல்லை. கடைசியில் இதுக்கு ஒரு 'ரீஹேப் செண்ட்டர்' திறக்கும்படியா ஆகப்போகுது:-))))

பின்னூட்ட நாயகின்னு பெயர் வாங்குனவங்க நீங்க.. சொல்லுங்க இந்த பின்னூட்ட விளையாட்டுக்களை
நிறைய பேர் எதிர்க்கிறாங்களே.. அதனால் அப்படி என்ன ஆக்கபூர்வமான விழைவு
இருக்குன்னுச் சொல்லுங்க?


பின்னூட்டங்களை வச்சு ஒரு பதிவு நல்லதா, சிறந்ததான்னு சொல்ல முடியாதுன்னு ஆரம்பத்துலே இருந்தே
நான் சொல்லிக்கிட்டு வர்றேன். 'நாளைக்கு திங்கக்கிழமை'ன்னு ஒரு வரியிலே பதிவு போட்டுப்பாருங்க. அதுக்கு ஒரு அம்பது பின்னூட்டம் வரும். பின்னூட்டங்கறது நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க மாதிரி. வர்றவங்களை வாங்கன்னு சொல்றது ஒரு மரியாதைக்காக. வீட்டுவாசலிலே ஒவ்வொருத்தரா வந்து பத்துப்பேர் சேர்ந்தப்புறம்தான் வாங்கன்னு எல்லாரையும் கூப்புடுவோமா? இதுலே விளையாட்டு எங்கெ வந்துச்சு? எதிர்க்கறது அவுங்கவுங்க விருப்பம்.
வள்ளுவரே விருந்து, அனிச்சம்பூன்னு எழுதி வச்சுட்டார் இல்லையா?

ஆங்கிலப் பதிவுகளும் படிக்கும் பழக்கமுடையவ்ர் நீங்கள்.. தமிழ் பதிவுகளுக்கும்
நம்ம இந்திய மக்கள் இடும் ஆங்கிலப் பதிவுகளுக்கும் என்ன வேற்றுமை காணுகிறீர்கள்?


ஆங்கிலப்பதிவுகள் படிக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சுங்க. எல்லாம் கனி இருக்கக் காயாப் போச்சு.அதனாலே
படிக்காம அதைப் பத்திச் சொல்றது நியாயம் இல்லை பாருங்க.

மூத்தப் பதிவரான நீங்க நம் தமிழ் பதிவர்களின் தனிமனிதத் தாக்குதல்கள்
தவிர்க்க ஒரு யோசனைச் சொல்லுங்களேன்?


தாக்கணுமுன்னு வந்தவுங்க அடுத்தவுங்க யோசனையைக் கேட்டுக்கிட்டு இருப்பாங்களா?
திருடனாப் பார்த்துத் திருந்தணும்.

கடைசியா.. ஒரு கவிதைச் சொல்லுங்களேன்... சும்மா நம்ம கச்சேரிக்காக முயலுங்களேன்

இப்படி மாட்டிவிடப் பாக்கறிங்களே! கவிதைக்கும் எனக்கும் காத தூரம். அனாவசியமா என்னைத்
'திருட' வச்சீங்கன்னா அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது:-)))))

சற்று முன்:பதினாறு வயசு அயிடுச்சா உங்களுக்கு?

துபாய்க்கு வெகு அருகில் இருந்த பாலைவனத்தில் இருந்து நம் அருமை நண்பர் தம்பி தந்த தகவலாவது...

"இங்கே பாலைவனம் முழுக்க பெரிய அளவில் கூடாரங்கள் போடப் பட்டிருக்கு... பெர்சியா தரைவிரிப்புக்கள் விரிக்கப் பட்டிருக்கு...செயற்கை முறையில் பேரீச்ச மரங்கள் அளவுக்கதிகமா நடப்பட்டிருக்கு...

பிரமாண்டமான ஓட்டக் ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பத் தயாராகிட்டு இருக்கு...

பிரபல் அரேபியக் குத்துப் பாட்டு கலைஞர் சோனா சொக்கனாதை ஷேக் தலைமையில் கானாக் கச்சேரிக்கு மைக் டெஸ்டிங் நடந்துகிட்டு இருக்கு...

எண்ணெய் டின்களோடு அரேபிய ஷேக்கள் அங்கும் இங்கும் அலையறாங்க...

வண்ணப் பலூன்கள்...ராட்சச அளவில் வானில் தெரிகின்றன....

முக்குன.. மன்னிக்கவும் முக்கிய விருந்தினர்களுக்கானப் பாதையில் காவல் பலமா இருக்கு..அந்தப் பக்கம் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை..

இந்தியா பெங்களூர் பேக்கரியில் இருந்து செய்யப்பட்ட் 16 கிலோ கேக்கும்.. தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்ட மக்ரூனும் வந்து இறங்கியிருக்கு...

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அந்த ஒட்டகங்களுக்குப் பின்னால் ஒளிந்துச் செலவதாய் விழாவுக்கு வந்தவர்கள் பரபரப்பாய் பேசிக்கொண்டார்கள்

இதோ.. நம்ம ஆசிப் மீரான் அண்ணாசி இப்போத் தான் வந்து இருக்கார்.. அவருக்குப் பின்னாலே நிலவு நண்பன்... அபி அப்பா.. பாஸ்ட பவுலர்.... இன்னும் பல பதிவர்கள் வந்து கிட்டு இருக்காங்க...

துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு அப்புறம் துபாய் களைக் கட்டுவது இந்த் ஒரு விஷ்யத்துக்கு மட்டும் தான்

என்னனு கேக்குறீங்களா.. வருசா வருசம் கொண்டாடப்படும் பெனாத்தல் திருவிழா தான்...

விழாவுக்குப் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் வந்திறங்கிய நம்ம பெனத்தலாரிடம் மைக் நீட்டி வாங்கியச் சில பதில்கள் உங்கள் பார்வைக்கு..


கே: போன வருசம் 25.... இந்த வ்ருசம் 16.... எத்தனாவது வருஷமா 16ஐக் கொண்டாடறீங்க?

பதில்: இது ஒரு விஷமத்தனமான கேள்வி. எண்ணத்தில் குறைகாணமுடியாமல் எண்ணிக்கையில் குறைகாணும் உங்களின் இந்தக் கேள்வியை நான் முற்றாகப் புறந்தள்ளுகிறேன்.

கே: அதுக்காக இதைக்கூடச் சொல்லக்கூடாதா?
பதில்: இப்பதான் முதல் முறையா 16 ஆவது பர்த்டே கொண்டாடறேன்


கே: அப்ப?
பதில்: போன வருஷம் 25ஆவது பர்த்டே, அதுக்குமுன் வருஷம் 18ஆவது பர்த்டே கொண்டாடினேன். அதனால, இதான் முதல் முறை 16ஆவது பர்த்டே.


கே: இந்தக் கொண்டாட்டங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

Suresh: பதில்: வழக்கமா சிட்னி ஹார்பர் பிரிட்ஜ்லே வாணவேடிக்கையோட என் தொண்டர்கள் கொண்டாடுவாங்க. இந்த முறை கிரிக்கெட்டால அதிர்ச்சி அடைஞ்சிருக்க்றதால சிம்பிளா கொண்டாடுறோம்.


கே: மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்ப்றீங்க?

பதி: இதுவரைக்கும் சொன்னதெல்லாம் நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்குவீங்களா? எல்லாமே மக்களுக்கு சொன்னதுதான்யா!



பெனத்தாலருக்கு நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாமும் தெரிவித்துக் கொண்டோம்

நீங்களும் சொல்லுங்க... ஹேப்பி பர்த்டே பாஸ்.......

சென்னைக் கச்சேரி செய்திகளுக்காக துபாயிலிருந்து தம்பி..

Wednesday, March 28, 2007

அம்மா... உங்க பையன் இப்போ ஆபிஸர் - 2

டெஸ்ட்க்கு தேதி குறிச்சுட்டு டீச்சர் அக்காப் போயிட்டாங்க... பரீட்சைக்கு பாடம் படிக்கல்லன்னா பராவாயில்ல,,, பாடமே தெரியல்லன்னா.. அடக் கொக்கமக்கா.. என்னய்யா பண்றது...?

இருந்த ஒரு ராத்திரியும் யோசனையிலே கழிஞ்சுப் போச்சு... பேசாம நாமளே பேப்பரைப் போட்ட்டுருவோமா

அவங்களா நீ பெயில்ன்னு சொல்லி துரத்தி விட்டா அசிங்கம்... ஆனா அதுக்கு முந்தி நாமளாக் கிளம்புனா... ஆ சிங்கம் ஒன்ணு பொறப்பட்டதேன்னு பில் டப்பு எல்லாம் கொடுக்கலாம்ன்னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தேன்..

பொழுதும் விடிஞ்சிருச்சு... சுரத்தையே இல்லாமா வீட்டுல்ல நாலு இடலியை முழுங்கிட்டு பைக்கைப் பத்திகிட்டுடை எல்லாம் இறுக்கி கட்டிகிட்டுப் போய் இறங்குனேன்...நம்ம பங்காளிகளும் நம்மக் கூட தூங்கி வழிஞ்ச மீதி சிங்கங்கள் தான்.. நம்மளை மாதிரியே பீதியிலே பல வித பீலிங்க்ல்ல நின்னாய்ங்க... பெண் சிங்கங்களாவது பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா அவிங்க கிட்டத்தட்ட கண்ணீரும் கம்பலையுமா நிக்குறாங்க...

ஏன் தேவ் நமக்கெல்லாம் வேலைப் போயிருமோ ஒரு சகோதரி சந்தேகம் கேட்ட நேரம் என் அடி வயித்துல்ல எலி ஓடுன மாதிரி இருந்துச்சு..

இருந்தாலும் பொண்ணுக்கு தைரியம் சொல்லுறது ஒரு ஆண்மகனுக்கு அழகல்லவான்னு சும்மா கிலோ கணக்குல்ல தைரியத்தை அள்ளி விட்டேன்.. இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...

கழுதைப் பிட் அடிச்சாவது பாஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒருத்தர் கையிலும் பாடம் பத்திய சின்ன க்ளு கூட இல்ல.. நம்ம நாயகம்ன்னா நம்மக் கூட சேந்தாங்க எல்லாம் நடு நாயகமா இருக்காங்களே ஒரு சின்ன சந்தோசம்...அந்தப் பரீட்சை ஒரு அக்னி பரீட்சையா அமைஞ்சது,, கேள்விகள் மட்டும் தெரிந்த எனக்கு விடைகள் எந்தத் திசையில் இருக்குன்னுத் தெரியாமல் என் மூளையைக் கசக்கி பிழிந்துப் பதில்கள் எழுதுனேன்..

மிஸ்டர்.பீன் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பீன் பரீட்சை எழுதும் பகுதி பார்த்தீருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கிட்டத் தட்ட எங்க பேட்ச்ல்ல் 23 பேரும் பீன் மாதிரியேத் தான் பரீட்சை எழுதுனோம்..

அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...

பரீட்சை முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு... எதோ சேமினார் பிரசண்டேஷன்ன்னு மைக் முன்னால வலுக்கட்டாயமா ஏத்தி நிக்க விடடாயங்க... வாய்ல்ல வடை சுட்டு ஊருக்குக் கொடுக்கறது நமக்கு கை வந்தக் கலைங்கறதால.. கண்டமேனிக்கு வடையை வறுத்து பொரிச்சு அவிச்சு வந்திருந்தவங்களுக்குக் கொடுத்திட்டோம் இல்ல,,, வந்தவ்ங்களுக்கு நம்ம பேச்சு பிடிச்ச மாதிரி தான் இருந்தது...

வேலை போகாதுடோய்ன்னு மைல்டா மைண்ட் ரிலாக்ஸ் ஆனது அப்போத் தான்.. அதுக்கு அப்புறம் அந்த நிறுவனத்தில்ல நான் ஒன்றரை வருசம் வேலைப் பார்க்கும் வரை என் தேர்வு முடிவுகள் வரவே காணும்... நாங்களும் எதுக்கு ரிஸ்க்ன்னு டீச்சர் பக்கம் மறந்தும் கூட அந்தக் கேள்வியைக் கேக்குறது இல்ல..

இதுக்கெல்லாம் பொறவு எங்களை நாங்க வேலைச் செய்யற இடத்தைப் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க..அங்கிட்டு அவன் அவன் கொடுத்த லுக்ல்ல மறுபடியும் எனக்கு கிலி எடுக்க ஆரம்பிச்சது..

மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டேன்றானுவ... எதோ ரஷ்யா ராணுவத்துக்கு ஆள் எடுத்த மாதிரி முன்னால இருந்த கம்ப்யூட்டர் பாத்து மொறச்சி மொறச்சி பாக்குறான்வா... அதை தட்டுறானவ...

நான் சிரிச்சா.. நம்மளை எளப்பமா ஒரு லுக் வேற விடுறான்வ... கடுப்புக்களைக் கண்டப் படி கிளப்பிகிட்டு இருந்தான்வ.. இவன்வ கூட வேலைப் பாக்குறதுக்கு அந்தப் பரீட்சை ரிசல்டடைக் கேட்டு வாங்கிட்டு கேட்டுக்கு வெளியேப் போய் நாலு பேப்பர் பொறுக்கிப் பொழைக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வச்சிட்டான்வ..

ONJOB TRAINING ஆரம்பிச்சது.. அப்போத் தான் எனக்கு முற்பகல் நடந்த விசயங்களுக்குக் காரணம் எல்லாம் விளங்கிச்சு... ஒரு பெரிய கோணியை என் கையிலேக் கொடுத்து.. தம்பி தேவ் .. போய் தெவை இல்லாத எல்லா ஆணியையும் டக்குன்னு புடுங்கிட்டு வா பாப்போம்ன்னு ஒருத்தன் சொன்னான் ( பின்னாளில் அலுவலத்தில் வன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆந்து வேறு கதை)

ஆமாங்க தேவையில்லாத ஆணின்னு எப்படிங்க் அடையாளம் கண்டுபிடிக்கிறது?

தம்பி நாங்களும் ப்ர்ண்டஸ் படம் பாத்து இருக்கோம்ல்ல எங்க கிட்டவே நக்கலா.. போ போ.. போய் ஆணி புடுங்கு.. நீ புடுங்குறாது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்.. கோணியும் கையுமா அலைய விட்டான்வ...

டேய் இதுக்குத் தானாடா மூணு வேளை சோறு தூக்கம்ன்னு ஒரு மாசம் வாழ விட்டீங்களாடா.. ஆடு வெட்டுரதுக்கு முன்னாடி மஞ்சத் தண்ணி எல்லாம் ஊத்தி உசுப்பேத்தி தலையிலே ஒரே போடா போடுவாங்களே அது மாதிரியாடா அதுக்குப் பேர் தான் இன்டக்ஷ்னாடா.. விவேக் மாதிரி பொலம்பல்ஸாப் போச்சு..

காலையிலே இருந்து சாயங்காலம் போய் ராத்திரி வரைக்கும் சின்சியரா நானும் ஆணி எல்லாம் புடுங்கி கோணிக்குள்ளேப் போட்டுப் போய் கொடுத்தா.. அந்த மேனேஜர் என்னப்பா பூராவுமே தேவையான ஆணியாப் புடுங்கிட்டு வந்துருக்கே.. சரியில்லையே... ம்ம் ஒண்ணு பண்ணு இந்தா இதை எல்லாம் எங்கே புடுங்குனியோ அங்கேயேப் போய் அடிச்சுட்டு தேவை இல்லாத ஆணியை மட்டும் புடுங்கிட்டு வான்னு அசால்ட்டா சொல்லுவார்..

அது மட்டுமில்லை நமக்கு ட்ரெயினிங் கொடுக்குற பங்குக்கு கிட்ட பையனுக்குச் சரியாச் சொல்லிக் கொடுப்பான்னு வேற அட்வைஸ்.. அப்புறம் என்ன கோணி, ஆணி.. புதுசாக் கையிலேச் சுத்தின்னு மறுநாள் பொழப்பு ஆரம்பம் ஆயிரும் அந்த மேனஜர் டார்ச்சர் தாங்க முடியாமப் போயிட்டு இருந்துச்சு

அதுக்கு நான் என்னப் பண்ணேன் தெரியுமா?

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..

மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

Tuesday, March 27, 2007

நாங்க ஆபிஸர் ஆன கதை - 1

வேலைக் கிடைச்சுடுச்சு... படம் பேர் இல்லங்க... முதன் முதலா ஒரு கம்பெனியிலே இருந்து வேலைக்கான ஓலை வந்ததும் நான் தெரு தெருவாப் போய கூவாத குறையா சொன்ன டயலாக் இது...

உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... அப்புறம் நமக்குத் தெரிஞ்ச சொந்தம், பந்தம், பாசம், நேசம், படை பரிவாரம் எல்லாத்துகிட்டயும் சொல்லிட்டு வேலைக்குச் சேந்து ஆபிஸ்ங்கற ஆலயத்துக்குள்ளே நுழைஞ்சது ஒரு சுபயோக தினத்திலே...

நான் ஆபிசரா ஆபிஸ்க்குள்ளே நுழைஞ்ச அதே சமயம் நம்மளை மாதிரியே கோட்டும் சூட்டும் பூட்டும் மாட்டிகிட்டு ஒரு கும்பலே வந்து ஆபிஸை வெறிச்சி வெறிச்சிப் பார்த்துகிட்டு நின்னாய்ங்க...கலர் கலரா நாலைஞ்சுப் பிகர் வேற... ம்ம்ஹும்.. ஹாய் ஹ்லோ.. எல்லாம் சொல்லிக் கொஞ்ச நேரத்துல்ல அம்புட்டு பேத்துக்கு பிரண்ட் ஆயிட்டோம்..

நிதம் காலையிலே கலகலப்பாக் கிளம்பி ஆபிஸ்க்குப் போயிருவோம்..

ஏன்னு கேளுங்க...

அந்த முதல் கொஞ்ச நாள் இருக்கே ஆணி..கோணி..இதுக்கெல்லாம் மீனிங்க்கே தெரியாத பொற்காலம்.. அவங்க செலவுல்ல காலை மதியம் மாலைன்னு வகை வகையா அன்னம் தண்ணி கொடுத்து அவங்கக் காட்டுன அன்பு என்ன? அந்தப் பாசம் என்ன? ஹெச்.ஆர்ல்ல இருந்து ஒரு அக்கா வரும் பாருங்க அப்படி அன்பாப் பேசும்... நமக்கெல்லாம் உருகிரும்...

அப்புறம் ஒரு டீச்சர் அக்கா வருவாங்க... நாங்க வேலைக்குச் சேந்த அந்த நிறுவனத்தைப் பத்தி அருமையாப் படம் எல்லாம் போட்டு பாடம் எல்லாம் நடத்துனாங்க... நான் பாடம் நடக்கும் போது தூங்குனாக் கூடக் கண்டுக்க மாட்டாங்க.. இபப்டி ஒரு டீச்சர் நமக்கு பள்ளிக் கொடத்துல்ல கிடைக்காமப் போயிட்டாங்களேன்னு நான் பீலிங் ஆயிட்டேனாப் பாருங்களேன்... சோறு.. ஏ.சி ரூம் தூக்கம்ன்னு பழைய ராஜாக் காலத்து சுகபோக வாழ்க்கை...

ஒரு நாள் எங்க எல்லாரையும் ஒரு பஸ் வச்சு நம்ம மகாபலிபுரம் பக்கம் கூட்டிட்டுப் போய் ஸ்கூல் பிக்னிக் எல்லாம் ஞாபகப்படுத்திட்டாங்க..ஒரு நா முழுக்க ஒரே விளையாட்டு... கூத்து.. கும்மாளம்ன்னு பின்னி பெடல் எடுத்துட்டோம்... இது வாழ்க்கைடான்னு பேசி பேசிப் பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டோம்...

எல்லாம் நல்லாத் தான் போயிகிட்டு இருந்தது... தீடிரென்னு டீச்சர் அக்கா ஒரு நாள் வந்து அந்த விசயத்தைச் சொல்லுற வரைக்கும்...

கீழே தான் எங்க ஆபிஸ் இருக்காம்.. நாங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குன இடம் வந்து சும்மா ட்ரெயினிங் நடக்குற இடமாம்.. எங்களூக்கு நடந்தது இன்டக்ஷனாம்.. ( இஞ்ஜக்சன்ன்னு எங்காதுல்ல விழுந்தது.. இதுல்ல ஊசி வேறப் போடுவாங்களாமேன்னு பயந்துட்டேன்).. இவ்வளவு நாள் அவங்க நடத்துனப் பாடத்துல்ல இருந்து மறுநாள் டெஸ்ட் வைக்கப் போறேன்னு பெரிய குண்டு ஒண்ணைப் போட்டாங்க

என்னது டெஸ்ட்டா... இதை எல்லாம் நான் தூங்கும் போது தட்டி எழுப்பிச் சொல்லியிருக்கக் கூடாதா? ஒரு மாசமாத் தூங்குன கண்ணு கவலையிலேக் கலங்கிப் போயிருச்சு...

அடுத்ததா அவங்கச் சொன்னது கேட்டு மொத்தமும் நடுங்கியேப் போச்சு.. எதோ பாஸ் மார்க்காம் அதை எடுக்கல்லன்னா வேலையை விட்டுத் தூக்கி வீதியிலே விட்டுருவாங்களாம்...

இதைச் சொல்லும் போது அந்த டீச்சர் அக்கா எங்களைப் பார்த்து.. குறிப்பா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சாங்க...

அடபாவிகளா... வேலைக்குப் போறேன்னு... எப்பவோ விட்டுப் போன உறவுக்கெல்லாம் வம்படியாப் போனைப் போட்டுச் சொல்லியிருக்கேனே.. இப்போ வேலைப் போச்சுன்னா.. அய்யகோ...

தூங்காதே தம்பி தூங்காதேன்னு பழைய எம்.ஜி.ஆர் பாட்டு எல்லாம் லேட்டா என் புத்தியிலே அலறுது.. பட் டூ லேட்..

ஒரு ஆபிஸரின் எதிர்காலமே ஆட்டம் காண ஆரம்பித்தது..

இன்னும் சொல்லுறேன்..

நானெல்லாம் பெரிய ரிப்போர்ட்டர்ங்க

நம்ம மனச்சாட்சிக்கு ரொம்பவும் கைவந்த கலை நம்மளைக் கண்டமேனிக்குக் கேள்வி கேட்டு வைக்கிறது தான்... நான் பதில் சொல்லாமத் தலையைக் கவுத்துப் போட்டு நின்னாலும் அது கேள்வி கேக்குறதை மட்டும் நிறுத்துறதா இல்ல... அது மட்டுமில்லா முதல் பதிவுல்ல நம்மப் பாசக்காரப் பய மனச்சாட்சியும் நம்மக் கூட ப்திவுல்ல வருவான்ன்னு வேறச் சொல்லி அவனை ஏகத்தும் ஏத்தி விட்டாச்சு... என்னப் பண்ணலாம்.. நம்ம மனச்சாட்சிக்கு கைவந்தக் கலையையேச் செய்யச் சொல்லிட்டோம்ல்ல...

இந்தா ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு கெட்டப் போட்டு விட்டாச்சு.. அது பாட்டுக்குக் கேள்விக் கேக்க கிளம்பிருச்சு.. மொதல்ல அந்த வெட்டிப்பயலைக் கேக்குறேன் பாரு கேள்வின்னு என் மெயில் ஐடியில்ல் இருந்து அவருக்கு மெயில் தட்டி அவரும் அதுக்கும் பதில் அனுப்ப... இந்தா இதைப் போடுன்னு என் சட்டையைப் பிடிச்சு கச்சேரியில்ல இடமும் வாங்கிட்டான்.



உண்மையைச் சொல்லுங்க மத்தவங்க பதிவுகளை நீங்கப் படிக்கறது உண்டா? பதிவுகளை எந்த அடிப்படையிலே தேர்ந்தெடுத்து வாசிக்கிறீங்க... இல்ல சும்மா எல்லாப் பதிவுகளையும் படிப்பீங்களா?

வெட்டி: மத்தவங்க பதிவை படிக்காம எப்படிங்க நம்ம ஃபீல்ட்ல இருக்க முடியும்? கண்டிப்பா நிறைய படிப்பேன். இப்ப தான் நேரம் குறைவா கிடைக்குது.

முதல்ல பார்க்கறது தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பகுதிகள் தான். அப்பறம் தமிழ்மணம் வந்திடுவேன். தலைப்பு சுவாரசியமா இருந்தா படிப்பேன். இல்லைனா ஏதாவது ஒரு பதிவுல சுவாரசியமா பின்னூட்டம் போடறவங்க பதிவ படிப்பேன். அப்படியே எனக்கு போடறவங்க, பதிவரா இருந்தா அவுங்க பதிவையும் போய் ஒரு எட்டு பார்த்துட்டு பதிவு பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்திடுவேன். எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...


உங்கப் பதிவுகள் உங்களுக்காகவா இல்ல மக்களுக்காகவா? இல்ல கம்ப்யூட்டரும் கனெக்ஷ்னும் இருக்குங்கறதுக்காக கண்டப்படி கடமையாற்றிகிட்டு இருக்கீங்களா?

வெட்டி: வெறும் மேடை இருக்குனு ஒருத்தவன் எத்தனை நாள் பேசுவான்? சுத்தி நிக்க ஆள் இருந்தா தான் பேசுவான். மக்களுக்கு பிடித்ததை என்னால் எழுத முடிந்த அளவு எழுதுகிறேன். எனக்கும் ஈடுபாடு இருக்கற டாபிக்கா தான் பொதுவா எழுதுவேன். இது கோழி முட்டை கதை தான்.

பின்னூட்டங்கள் தான் ஒரு பதிவின் தர நிர்ணயக் கோல்ன்னு நினைக்கிறீங்களா? அந்தப் பின்னூட்டங்களை தக்க வச்சுக்கறதுக்காக என்ன வேணுமோ அதை எல்லாம் செய்யலாமா?

வெட்டி: அப்படியெல்லாம் இல்லைங்க... பின்னூட்டங்கள் நிச்சயமா தரத்தை நிர்ணயப்பதில்லை. ஆனா என்னை தொடர்ந்து எழுத வைத்தது/வைப்பது பின்னூட்டம் தான். அது ஒரு டானிக் மாதிரி. அதனால தான் தமிழ்மணத்துல உயிரெல்லைல எனக்கு விருப்பமில்லை. ஏதோ நல்லா ஓடறவன் காலை இழுத்து கட்டி வைக்கிற மாதிரி இருக்கு. போற போக்க பார்த்தா இது தான் நல்ல பதிவு. இதை தான் நீங்க படிக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்களோனு தோனுது.


உங்கப் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் உங்கப் பதிவுகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்களா.. இல்லை உங்கள் நட்புக்கு உங்கள் நண்பர்கள் தரும் மரியாதையா?
வெட்டி: நான் நினைப்பது என் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள்னு தான்.என் பதிவுல பின்னூட்டம் போட்டு நண்பர்கள் ஆனவர்கள் தான் அதிக பேர்... நண்பர்களாகி பின்னூட்டம் போடறவங்க ரொம்ப குறைவு. ஏன்னா அவர்கள் சேட்லயும், தொலை பேசி உரையாடல்லயும் சொல்லிடறாங்க.

தமிழ்மணத்தில் கிசு கிசு பதிவுகள் அவசியமா? நம்ம சாம்பு, இரவு கழுகார் போன்றவற்றை சொல்லுகிறேன்.. அதைப் பத்தி உங்க கருத்து என்ன?

வெட்டி: அவசியம் தாங்க. படிக்க சுவாரசியமா இருக்குது இல்லை. ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்றாங்க. அது அவுங்க ஏரியா ஆஃப் இண்ட்ரஸ்ட். பண்ணிட்டு போகட்டுமே. இன்னும் அதிகமா பண்ணா நல்லா இருக்கும். ஆனா யார் மனதையும் புண்படுத்த கூடாது.

வெட்டி பயலில் முக்கால் வாசி வெட்டிப் பேச்சு கால்வாசி எதோ பரவாயில்லைன்னு சொன்னா ஒத்துப்பீங்களா?

வெட்டி: மீதி கால்வாசி எப்படி எனக்கு தெரியாம போச்சு :-)
என் பதிவு பெரும்பாலும் ஆபிஸ்ல வேலை செஞ்சிக்கிட்டே இருக்கும் போது கிடைக்கும் ஒரு ஐந்து நிமிட ஓய்வு நேரத்தில் படித்து சிரிக்க தான். என்னுடைய பதிவு ஒருவரையாவது அவர் கவலையை ஒரு நிமிடமாவது மறக்க வைத்தால் போதும். யாரையும் திருத்த நான் பிறக்கவில்லை. நானே பல குறைகளை கொண்டவன்.

காதல் காதல்ன்னு உருகி கதை எழுதுறீங்களே.. காதல் கதைகளுக்கு அதிகம் வரவேற்பு இருப்பதாலா இல்லை உண்மையிலே நீங்கள் காதல் கட்சியா?

வெட்டி: சுத்தி நிறைய காதலர்களை பார்த்ததால வந்த வினையா இருக்கலாம். பாதி பேர் வீட்ல ஒரே பிரச்சனை வேற கேஸ்ட்ல பண்ணி வெச்சா சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்கனுதான். பசங்க காதலிக்கறனு சொல்றவங்ககிட்ட பேசி பார்த்துட்டு கேரக்டர் ஒத்து வராதுனு கொஞ்சம் ஃபீல் பண்ணா பரவாயில்லை. எதையுமே விசாரிக்காம எதிர்க்கும் போது அந்த பசங்க படற கஷ்டத்த கூட இருந்து பார்த்ததால அந்த மாதிரி கதைகள் வருது. ஆனா நான் எழுதுன கதைகள்ல 50% கதைகள்ல கூட காதல் இருக்காது. ஒரு சில கதைகள்ல ஆண்-பெண் நட்போட முடிஞ்சிடும்.

ஆங்கிலப் பதிவுகள் படிப்பது உண்டா? அதற்கும் தமிழ் பதிவுகளுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

வெட்டி: நம்ம தமிழ் பசங்க எழுதற ஆங்கில பதிவுகளும் தங்கிலிஷ் பதிவுகளும் படிப்பதுண்டு. அவுங்க எதை பத்தியும் கவலைப்படாம ரொம்ப ஜாலியா எழுதறாங்க. அவுங்க வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன இண்ட்ரஸ்டிங் விஷயத்தையும் சொல்றாங்க. ஏதோ டயரி படிக்கிற மாதிரி நல்லா இருக்கு. அங்க படிக்கிறப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்.

பதிவுகளில் பொறுப்பான சமுதாயக் கருத்துக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒரு நிலை வந்தால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?

வெட்டி: எனக்கு பொதுவா கட்டுப்பாடு பிடிக்காது. இந்த மாதிரி சட்டம் வந்தா நான் எழுதறத நிறுத்துறதுக்கு முன்னாடி படிக்கிறத நிறுத்திடுவேன். வாழ்க்கையில நகைச்சுவை முக்கியம். சும்மா சமுதாய கருத்து கருத்துனு மொக்கைய போட்டா சத்தியமா என்னால அரை மணி நேரம் கூட உக்கார முடியாது. ஊர் விட்டு ஊர் வந்திருக்கோம். பேசறதுக்கு கூட ஆள் இல்லைனு தான் வலைப்பதியறோம். கொஞ்சம் இளைப்பாற ஒரு இடம்னு தான் எனக்கு இது இருக்கு.
அப்ப உனக்கு இந்த சமுதாயத்து மேல அக்கறையில்லையானு கேட்டா, வெறும் வாய் சொல் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை. நம்ம எ.அ.பாலா மாதிரியோ செந்தழல் ரவி மாதிரியோ ஃபீல்ட்ல இருங்கி செஞ்சா உண்மையா பாராட்டலாம். நாமும் நம்மால் இயன்றதை பண்ணலாம்.

பதிவுலகில் அரசியல் இருக்கா இல்லையா நேர்மையான பதில் சொல்லு?

வெட்டி: மனுஷனுங்க ரெண்டு பேர் சேர்ந்தாலே அரசியல் தானா உருவாகிடும். பதிவுலகில் அது எப்படி இல்லாம போயிடும்? கண்டிப்பா இருக்கு.

பெண்கள் ஆண்கள் பதிவுகள் என பதிவுலகில் தனித்தனிப் பார்வை தேவையா?
வெட்டி: எந்த மாதிரி கேக்கறீங்கனு புரியல. இப்ப அனுபவத்தை சொல்றாங்கனு பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு. ஆனா சமுதாய கருத்துக்களை பேசும் போது தேவையில்லைனு நினைக்கிறேன்.

ஒரு நாலு முக்கிய பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்விக் கேக்கச் சொன்னா யார் யார் கிட்ட என்னக் கேள்வி கேப்பீங்க... ஒரு கேள்வி நான்கு பேர் சொல்லுங்க?

வெட்டி:

பாபா : ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீங்க?

இ.கொ : பின்னூட்டத்துக்க்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இல்லையா? அந்த நேரத்துல இன்னொரு பதிவு போட்டுடலாம்னு என்னைக்காவது தோன்றியிருக்கா?

கைப்புள்ள : உங்ககிட்ட பேசனதுல இருந்து நீங்க பெரிய புத்திசாலினு தெரியுது (நக்கல் இல்லைங்க. அண்ணன் நிஜமாலுமே ஜீனியஸ் தான்). உங்களை கிண்டல் பண்ணும் போது உங்களுக்கு கொஞ்சமாவது கஷ்டமா இருக்காதா???

நாமக்கல் சிபி : அது ஏன் எந்த பதிவர் புதுசா ஆரம்பிச்சாலும் உங்களையே பிடிக்கறாங்க???




இனி ஓவர் டு வெட்டி அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்...( மனச்சாட்சிப் பயலை அப்படித்தான் கூப்பிடணுமாம் கன்டிசனாச் சொல்லிட்டான்)

சற்றுமுன்: இந்திய வீரர்களும் ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸும்

சற்றுமுன் பதிவு பதிவாளர்கள் கவனிக்கத் தவறிய செய்தி... அவங்க கோல் விட்டதால நம்ம கச்சேரியில்ல போட வேண்டியதாப் போச்சு...

சிறில் அலெக்சைக் கால் பண்ணா ஸ்லீப்பிங் நோ டிஸ்ட்ரபன்ஸ்ன்னு வருது...
இந்திய டீம் சம்பந்தமான நியூஸ்ங்கோன்னு சொன்னாலே மணிகண்டன்.. பேட் வெர்ட்ஸ்ல்ல திட்டுறார்..

சரி சரி... நானேச் சொல்லிடுறேன்

ஜமைக்கா இருக்க ரிச்சர்ட்ஸ் நகர் டைம்ஸ் சிறப்பு செய்தியாளர் மொக்கப் போண்டா டுமேட்டோங்கறவர் நம்ம இந்தியால்ல கைக்குக் கிடைச்ச நம்பருக்குச் சுத்திச் சொன்னத் தகவ்ல்...

" பாப் யூல்மர் கொலை வழக்கில் இது வரைச் சொல்லிக் கொள்ளும் படி பெரிதானக் கைதுகள் எதுவும் ந்டைப்பெறாத நிலையில்... வருத்தம் தோய டீக் குடித்துக் கொண்டிருந்த ஸ்காட்லாண்ட் யார்ட் மற்றும் ஜமைக்காப் போலீஸ் மார்க் ஷீல்ட்ஸ் தீடிரென ஒரு முடிவு எடுத்துள்ளாராம்

அதாவது இந்தக் கேசில் சந்தேகத்தின் பேரில் இந்திய அணியினர் அனைவரையும் கைதுச் செய்து ஜமைக்காவின் சிறை ஒன்றில் கடுமையானப் பாதுகாப்போடு அடைக்க முடிவுச் செய்துள்ளாராம்.. இது குறித்து மொக்காபோண்டோவிடம் ஆப் த ரிக்கார்ட்டாக ஜமைக்காப் போலீஸ் கான்ஸ்டபிள் ஓருவர் கூறியதாவது...(மைக்கேல் ஹோல்டிங் ACCENTல் படிக்கவும்)

"THE INDIAN PLAYERS ARE TERRIFIED TO GO BACK HOME SEEMINGLY HORRIFIED AT THE WAY THE INDIAN FANS HAVE UNLEASHED THE WRATH ON THEIR FAILURE IN THIS WORLDCUP..THEY ARE IN NO MOOD TO RETURN HOME..THEIR SPONSORS ARE EXERTING SEVERE PRESSURE ON THEM TO STAY IN WINDIES TILL THE WORLD CUP IS OVER... SO AFTER DEEP DISCUSSIONS WITHIN THE TEAM MANAGEMENT THEY HAVE ARRIVED AT THIS DECISION OF PLACING THEMSELVES UNDER ARREST.... "

இதை விரைவில் ஜமைக்காப் போலீஸ் உலகச் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும் என மொக்கப் போண்டா நம்மிடம் தெரிவித்தார்..

இந்தியாவுக்கு இவிங்க வந்தா இங்கிட்டு பெரியக் கொலைக் கேசாயிரும்ன்னு பயந்து அங்கிட்டு செட்டில் ஆக இப்படி முடிவுப் பண்ணிட்டாங்களோ....

செய்தி உண்மையா இல்லயான்னு தெரியல்ல சாமி... ஆனா உங்க கிட்டச் சொல்லிட்டேன்..

சாயங்காலம் வெட்டி பேட்டியோட மீட் பண்ணுவோம்

Monday, March 26, 2007

உனக்கு இது தேவையா?

உனக்கு இது தேவையா?

மூக்குக்கு முன்னாடி விரலை நீட்டிக் கேட்டக் கேள்விங்க இது? அட நம்ம மனச்சாட்சிதானுங்க...இப்படி கேள்வியைக் கேட்டு நம்மைக் கலாய்ச்சு விட்டுருச்சு..

ம:மேடைப் போட்டு மைக்கைக் கையிலேக் கொடுத்துட்டா தொண்டையைக் கனைச்சுட்டுப் பாடக் கிளம்புருவீயா நீயு...

நா: அட அது இல்லீங்க...பெரியவங்க கூப்பிட்டாங்க...அதுவும் மடல் எல்லாம் போட்டுக் கூப்பிட்டாங்க.. அதான்...

ம: தம்பி... சென்னைக் கச்சேரின்னு பேர் வச்சுட்டு ஒரு ஓரமாக் கச்சேரி பண்ணிட்டிருந்த ரைட்.. அங்கே யாருக்கும் எந்த தொந்தரவும் இல்ல.. நானும் நீ செஞ்சுகிட்டு இருந்த எந்த விசயத்தையும் ஏன்னு கேக்கல்ல.. ஆனா மாப்ளே உனக்கேத் தெரியும் இது டூ மச்ச்ச்.... அவிங்க ஒரு பாசத்துல்ல பய புள்ள எழுதட்டும்ன்னு கூப்பிட்டாலும் நீ என்னச் சொல்லியிருக்கணும்....

நா:என்னங்கச் சொல்லியிருக்கணும்

ம: நானெல்லாம் அதுக்கு லாயக்கு இல்ல்ங்க...வேற ஆளு கையிலே மைக்கைக் கொடுங்க.. அது நாட்டுக்கும் நல்லது.. நமக்கும் நல்லதுன்னு சொல்லியிருக்கணும் இல்ல..

நா: நீங்க என்னை ஓவரா ஓட்டுறீங்கண்ணே.. நானும் கூட எழுதுவேண்ணே...

ம: ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்திடா.. என் கிட்டயே உன் பிலிமை ஓட்டுறியே... நாலு படத்தைப் பாத்துட்டு அதுல்ல இது நொட்டை அது சொட்டை அப்படின்னு வாய்க்கு வந்தப் படி விளாசுறதா எழுத்தா.. ஒரு பதிவுல்ல பத்து படத்தை அதுவும் நெட்ல்ல சுட்டுப் போட்டு அதுக்குப் பக்கதுல்ல ஒத்த வரி எழுதுறதா எழுத்து...காமெடி பண்றேன்ன்னு வடிவேலையும் கவுண்டரையும் கூட்டி வச்சு அவங்க நடிச்சப் படத்தைப் பிடி அடிக்கிறது தான் எழுத்தாலே..

நா: மக்கள் ரசிக்கிறாங்களேண்ணே..

ம: இங்கேப் பாருடா.. மக்கள் எல்லாம் இவருக்கு மீட்டீங் போட்டு சொன்னாங்களாம் இவர் எழுத்றதை ரசிக்கிறோம்ன்னு.. டேய் அப்பா.. இதுக்கு மேல உங்கூடப் பேசி பிர்யோஜனமில்லடா...

நா: ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்க... பதிவுங்கறதுக்கு ஒரு வகுக்கப்பட்ட வடிவம் இல்லண்ண.. எல்லோரும் எழுதலாம்.. எல்லோரும் படிக்கலாம்..

நம்ம பதிவு பக்கம்ங்கறது ஒரு வீடு மாதிரிண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு இருக்குண்ணே...இந்த வீடெல்லாம் இருக்கற காலனி தாண்ணே நம்ம தமிழ்மணம்...இங்கிட்டு ஒவ்வொரு வீடும் ஒரு ஒரு மாதிரி ஆனா அம்புட்டு பேரும் நம்ம மக்கள்ண்ணே..சின்னச் சின்னச் சச்சரவு இருக்கத் தான் செய்யும் ஆனா..ஒரு வீட்டு விசேசம்ன்னா அம்புட்டு பேத்துக்கும் சந்தோசம் தானுங்க.. அதே மாதிரி வருத்தம்ன்னாலும் வருத்தம் தான்ணே...

ம: யப்பா நீ பெரிய டகால்டிடா.. நக்கல் நையாண்டின்னு நாதஸ்வரம் வாசிச்சுட்டு பேசுற பேச்சைப் பார்டா, பர்மா பார்டர்ல்ல பத்தமடை பாய் விரிச்சு தவம் பண்ண முனிவர் மாத்திரி பிளாசபி பேசறதை... இதுக்கு மேலயும் உம் பேச்சை கேக்க எனக்குச் சக்தி இல்லப்பா... மக்கா.. இனி இவன் செய்யப் போற அநியாயத்துக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லப்பா..

கிளம்பறதுக்கு முன்னாடி இந்தா தேவ் உனக்கு ஒண்ணு சொல்லிடுறேன்...

டேய் தம்பி.. நட்சத்திரமாக் கூப்பிட்டாய்ங்கன்னு கீ போர்டை எல்லாம் பூவும் பொட்டும் வச்சு சிங்காரிக்கறது இருக்கட்டும்.. மத்தவங்களைக் கூப்பிட்டக் காரணம் எனக்கு விளங்கிச்சோ இல்லயோ.. உன்னக் கூப்பிட்டத்துக்கு காரணம் விளங்கிருச்சு ராசா...கிளாஸ்ல்ல ஒரமா உக்காந்து லந்து பண்றவனை வாத்தியார் கூப்பிட்டு தண்டனையா எல்லாரும் பாக்கும் படி பெஞ்ச் மேல நிக்கச் சொல்லுவார்.. அப்படியாவது அவன் திருந்துறானான்னு பாக்க..உன்னியும் அப்படித் தான் இப்போ நடுவில்ல நிக்க வச்சு ரவுண்ட் கட்டியிருக்காங்க... பாத்து பதவிசா நடந்துக்க.. அது தான் ஒனக்கு நல்லது.. இனியாவது உருப்படியா எதையாவது எழுது...

மனச்சாட்சி டாட்டாக் காட்டிட்டு எஸ் ஆயிருச்சு...

"அட விடுங்க மக்கா...நீங்க யாரும் டென்சன் ஆவாதீங்க.. சின்னப் புள்ளல்ல இருந்த நம்ம மனச்சாட்சிக்கு நம்மளை நிக்க வச்சு வாத்தியார் வேலைப் பாக்குறதே பொழப்பாப் போச்சு... இருந்தாலும் மனச்சாட்சி இருக்கானே ரொம்பவும் பாசக்காரப் பய தான்.. கொஞ்சம் எடுத்தெறிஞ்சாப்பல்ல பேசுனாலும் உண்மையப் பேசிபுடுவான் பயபுள்ள.. அதனால் தான் அடிக்கடி அவனை நம்ம பினாத்தலார் பாணியிலே அடங்குடா மவனேன்னு நான் கொஞ்சம் அடக்கி வச்சுருவேன்...


சரி மக்கா மேட்டருக்கு வருவோம்..

இந்தா இந்த வாரம் பூராவும் நானும்..நம்ம பாசக்கார பய மனச்சாட்சியும் உங்க கூடப் பேசப் போறோம்.. கேளுங்க.. கேளுங்க... எங்க புராணத்தை எல்லாம் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க..

வாய்ப்பு அமைத்துக் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றிகளோட தொடங்கிருவோமா ஆட்டத்தை...

Wednesday, March 21, 2007

5 ஸ்டார்

என்னன்னு சொல்லுறது... இப்போ நம்ம வலையுலகத்துல்ல புதுசா ஒரு விளையாட்டு கொடிக் கட்டி பறக்குது..

அதாவது "நான் ஒரு மாதிரி" அப்படின்னு அவங்களைப் பத்தி அவங்களே பட்டியல் போட்டு ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி... இந்த விளையாட்டை ஆரம்பிச்ச புண்ணியவான் வாழ்க... பாருங்க நம்ம மக்களும் அசராம பதிவுல்லப் பட்டியலைப் போட்டு ப்ட்டயக் கிளப்பிகிட்டு இருக்காங்காயங்க...

பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..

நம்மளை எல்லாம் யாரும் கூப்பிடல்ல.. அப்படின்னா தேவ் நீ எல்லாம் தெளிவாத் திரியறன்னு அர்த்தம்.. இப்படி என்னிய நானே வேற பாராட்டிக்கிட்டேன்.

அப்போத் தான் ஹலோ.. அஞ்சு மட்டும் சொல்ல சொன்னதாலத் தான் உங்களைக் கூப்பிட யோசனை மத்தப் படி உங்களைத் தான் முதல்ல கூப்பிடணும்ன்னு மை பிரெண்ட் கொரலு கொடுக்க...

அதை எல்லாம் பொது வாழ்க்கையிலே பெருசா எடுத்துக்காமப் போயிகிட்டு இருந்தா.. நம்ம ஜி.ரா.. பின்மண்டையிலே சின்னதா ஒரு கொட்டு வைக்கற மாதிரி மெயில் அனுப்பி, அய்யா.. என்ன நீங்க ஒரு மாதிரி தானே.. ஒத்துகிட்டு எழுதுங்குறார்..

இது பரவாயில்ல.. அப்படின்னு ஜகஜமாப் போயிட்டு இருந்தா கொத்ஸ் அங்கிருந்து நம்ம மேலே கல்லை விட்டு எறிஞ்சுட்டு... எலேய்.. என்ன லுக்? வாய்யா வந்து உன் கிறுக்குத் தனத்தை ஊருக்குச் சொல்லிட்டுப் போயிரு.. அதிகம் இல்ல ஒரு அஞ்சு போதும்ங்க்றார்..

ஆகா என்னிய மாதிரியேத் தானே நீங்களூம்.. எங்கே உங்க கிறுக்குத் தனத்தை கெத்தா ஊருக்கு சொல்லுங்கண்ணா.. இதுக்கெல்லாம் பயப்படலாமான்னு நம்ம பாசமலர் தங்கச்சி இம்சை அரசியும் ஒரு போடு போட்டுருச்சு...

இனியும் தாமதிச்சா.. அவ்வளவு தான் எல்லாரும் கூப்பிட்டுருவாய்ங்க... அப்புறம் மொத்தப் பதிவுலகமும் பாராட்டும் ஒத்தைக் கிறுக்கனா மவுண்ட் ரோட்ல்ல பேனர்ல்ல நின்னு போஸ் கொடுக்க வேண்டியதாக் கூடப் போயிரும்ய்யா.. அதான் வந்துட்டேன்..

நக்கல்/நையாண்டி: எதுல்லயும் ஒரு நக்கல் நையாண்டித் தனம் நம்மக் கூட ஒட்டிகிட்டே திரியும்.. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொடுத்துறது நம்ம பழக்கம். இந்தப் பழக்கத்தாலே நமக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சது உண்மைன்னா.. இதே பழ்க்கத்தால என்னையும் அறியாமல் நண்பர்கள் மனத்தைக் காயப்ப்டுத்திடுறது கொடுமை... என்னப் பண்றது பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்ன்னு நம்ம நண்பர்கள் நம்ம மன்னிச்சு விட்டுட்டுப் போயிடுறாங்க அதுன்னாலே நானும் நக்கல் நையாண்டின்னு நல்லப் படியா ஓட்டிகிட்டு இருக்கேன்.

கூட்டம் கண்டா ஒதுங்குறது: தனியாப் பொறந்து வளர்ந்தாலோ என்னவோ.. கூட்டம்ன்னாலே நம்ம தெனாலி சொல்லவாரே அது மாதிரி மெத்தப் பயம் எமக்கு... தி.நகர் கடைவீதி கண்டால் பயம் எமக்கு.. பல்லவன் பஸ் கண்டால் பயம் எமக்கு.. பதிவர் கூட்டம் என்றால் அதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..

சினிமாப் பாக்குறது: இப்படி ஒரு பொழப்பு எனக்கு... லைன் கட்டி படம் வந்தா க்யூ கட்டிப் பாத்து கோடம்பாக்கத்தை வாழ வைக்குறதா ஒரு எண்ணம்.. அது மட்டும் இல்லங்க எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டர்ல்ல படம் பாத்துருவேன்,.. இப்படி உணர்ச்சி வசப்பட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படமெல்லாம் பாத்துருக்கேன்னாப் பாருங்க.. சினிமா மேல பற்றா? இல்ல தியேட்டர் மேலயான்னு தெரியல்ல.. ஒரு தபா பெங்களூர்ல்ல நைட் ஷோ தனியாப் போயிட்டு தங்கியிருந்த நண்பன் வீட்டுக்கு வழியை மறந்துட்டு விடிய விடிய கோரமங்கலாவை பைக்ல்ல வளைய வந்து நாய் துரத்தி.. அதெல்லாம் ஒரு தனிக் கதைங்க..

ஊர் சுத்துறது: வெட்டியா இருந்தாலும் விறகோடு இருந்தாலும் ஊர் சுத்தறது நமக்குப் புடிச்சப் பொழப்பு... ஆக்சுவலா நம்ம கலர் காம்ப்ளெக்ஷன் கொறஞ்சுதுக்கௌ காரணமே அது தான்னு சின்னப் புள்ளயிலே எங்க அம்மா வருத்தப் படுவாங்க.. சரி இப்போ அதுக்குப் பிராயச்சித்தமா மலை மலையா நல்ல ஜில்லுன்னு இருக்க இடமாச் சுத்தி காம்ப்ளெக்ஷனை மாத்தலாம்ன்னு பார்த்தா.. ம்ஹும் ஆவறதில்ல.. சரி எது எப்படியோ.. ஊர் சுத்தற ஆசை மட்டும் நமக்குக் கொறையல்ல..

புது மொழிகள் கத்துக்கறது: ஓலகத்துல்ல உள்ள எல்லா மொழியையும் கத்துக்கணும்ன்னு பேராசை எல்லாம் இல்லாட்டியும்... வேத்து மொழித் தெரிஞ்சவப்ங்களைப் பார்த்தாப் போதும் பீலிங் ஆயிருவேன்... ப்ளீஸ் டீச் மீ யுவர் லாங்குவேஜ்ன்னு நச்சரிப்பேன்... ஓரளவு கத்துகிட்டு சீன் போடுறது நம்ம பழக்கம்... இதுல்ல நம்ம சீன் அடிக்கடி கிழியறது நாம சேத்து தைக்கறதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கைங்க...

ஸ்ப்பாடா அஞ்சு ஆச்சா.. இதெல்லாம் ஒரு ஸ்டார் வேல்யூ உள்ள குணங்கள்ன்னு உங்களுக்கு விளங்கியிருக்குமே.. இப்போ நம்ம பங்குக்கு ஒரு அஞ்சு பேரை இழுத்து விடுவோமா ஆட்டத்துக்கு..

1.இந்த வார ஸ்டார் நம்ம பெருசு
2.கவிதைக் காதலன் நந்தா
3.வலையுலக கலக்கல் சிந்தாநதி
4.குழப்பல் கலக்கல்ஸ் மதுரா
5.பாசக்கார மனதின் ஓசை.

இனி இவங்க ஆட்டத்தைப் பார்ப்போமா..

ஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கே உங்களுக்காம்

அன்புடன் குழுமம் கவிதை எழுதுன்னாப் பரிசு தர்றாங்களாம்ய்யா...

ஊரெல்லாம் ஒரே வெளம்பரமா இருக்கு... கவிஞர் எல்லாம் கலவரமாத் திரியறாங்க...
கண்டபடி யோசிச்சு கன்னாப்பின்னா கவிதையா எழுதி தள்ளிகிட்டு இருக்காயங்கன்னு எங்கும் பேச்சு...

அப்புறம் என்ன நீங்க மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க.... கவிதையைப் படைங்க.. பட்டயக் கிளப்புங்க..

மேலும் விவரங்களுக்கு... நம்ம ப்ரியன் என்னச் சொல்லுறாங்கன்னு கேளுங்க..

அன்புடன் குழுமம் விருப்பபடி நம்ம கச்சேரியிலும் விளம்ப்ர போர்ட் வச்சாச்சுங்கோ

Tuesday, March 20, 2007

பெர்மூடா துவைச்சுக் காயப்போட்டாச்சுப்பா!!!

இந்த வாரம் அப்படி ஒரு துவையல் துவைச்சுட்டோம் இல்ல.... சும்மா அடி அடின்னு அடிச்சு ... விடல்லயே காயப்போட்டுட்டு தானே ஓஞ்சோம்... ஸ்ப்ப்பா.. இப்போ நினைச்சாலும் அந்த சாதனைச் சிலிர்க்க வைக்குதுடா சாமி..

நீங்களும் பாருங்க...
..................

...............

..............

..........

.......

.....

....

...

..



ஹி...ஹி..ஒரு வழியா ரொம்ப நாளா செய்யாம இருந்த வேலை இந்த வாரக் கடைசியிலே மூணு நாள் சேத்து லீவு விட்டதால்ல செஞ்சுட்டோம் இல்ல....

ஆமாங்க நம்ம பெர்மூடாவை எல்லாம் சுத்தப்பத்தமாத் துவைச்சுக் காயவும் போட்டுட்டோம்...

சென்னையிலே வெயில் வேற ஜாஸ்தி ஆயிருச்சு... வர்ற வெள்ளிக்கிழமை நம்ம இந்தியா இலங்கையோட கிரிக்கெட் விளையாடும் போகும் போது இந்தக் காயப்போட்ட பெர்மூடாவில்ல ஓன்ணைப் போட்டுக்கிட்டு தான் மேட்ச் பார்க்கணும்.. அப்போத் தான் மேற்கிந்திய தீவுல்ல இருக்கற மாதிரி ஒரு பிலீங் வரும்...

மீட் யூ நெக்ஸ்ட்.. என் ஜாய் கிரிக்கெட்..

க்ரேக் சேப்பல் காப்பாற்றபட்டார்

மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்ற பின் இன்சமாம் நம்ம டிராவிட்க்குப் போன் போடுகிறார்..

இ: சரி பங்கு நாங்க கிளம்புறோம்.. எல்லாம் முடிஞ்சுப் போச்சு..

டி: இருங்க பங்கௌ இன்னும் ஒரு நாள் தான் நாங்களும் கிளம்பி வந்துறோம்.. ஒண்ணாப் போயிரலாம்

இ: ஓ.கே பங்கு அப்படின்னா ஒரே பிளைட்ல்ல போயிறலாம்.. டிக்கெட் சொல்லிடுறேன்...

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்சமாம் மீண்டும் போனில் டிராவிட்டை அழைக்கிறார்..

இ: என்னப் பங்கு வர்றேன்னு சொல்லிட்டு பெர்மூடாவை இந்த துவை துவைச்சீட்டீங்க...

டி: பங்கு.. என்னப் பண்றது..நம்மளை நம்பி வந்த மனுசனைக் காப்பாத்துனும் இல்ல..

இ: என்னப் பங்கு சொல்லுற...

டி: நமக்கு மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூலாயுதம் எல்லாம் இல்லன்னாலும்.. இந்த வெளிநாட்டுக் கோச்சுக்கெல்லாம் அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..
அதான் ஒண்ணுக் கூடி க்ரேக் சேப்பலைக் காப்பாத்துறதுன்னு முடிவு பண்ணி விளையாட வேண்டியதாப் போச்சு..

இன்சமாம் தாடியை தடவியப் படி ஏர்போர்ட் செல்கிறார்.

Friday, March 16, 2007

ஆல் இன் ஆல் அழகுராஜா கோச்சிங் சென்டர்...

குட் மார்னிங் பாய்ஸ்

ஆ வாங்க வாங்க.. அழகுராஜ் வணக்கம் வைப்பதற்குள் செல்போனைக் காதில் வைக்கிறார்..

"ஹலோ.. யா..யா.. அழகுராஜ் ஸ்பீக்கீங்..

நவ் ஐயாம் கோச்சிங் பிளாக் கைஸ்...

டூமாரோ.. பெர்மூடால்ல பிச் ரிப்போர்ட் கொடுக்கணும்..

20த் ஜமைக்கல்ல இருக்கேன்..

21ச்ட் ஆன்டிகோவால்ல.. அத்லெடிக்ஸ் ட்ரெனியிங்...

ஹே ஆன்ட்டி கூட கோவா போல்ல மேன் .. வெஸ்ட் இன்டீஸ் ஆன்டிகோவா... கிரிக்கெட் கிரவுண்ட் மேன்......

யாரிடமோ பயங்கரமானப் பில்டபில் பேசிக் கொண்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகு ராஜ்..பின் போனைக் காதை விட்டு எடுத்தவர்.

அய்யோ அய்யோ.. இந்த டிரா தொல்லைத் தாங்கல்லப்பா

"நான் வேணும்ன்னா கார்பெண்டர் கூப்பிட்டு டிராவை சரி பண்ணித் தரச் சொல்லவாண்ணேன்னு பவ்யமா நம்ம மணிகண்டன் கேக்க.."

"ஹேய் யார் மேன் நீ.. ஸ்டூபீட் பெல்லோ... டிரான்னா.. ராகுல் டிராவிட்.. இந்தியாக் கேப்டன்.. கோச்சிங் கொடுக்க வாங்க.. கோச்சிங் கொடுக்க வாங்க்ன்னு ஒரே நச்சரிப்பு.. நான் பேட் வாங்கி கொடுத்து பேட் கட்டி கிரவுண்டுக்கு அனுப்புன பையன்.. அந்த ஸ்கொயர் கட சரியா வர மாட்டேங்குதுன்னு பீல் பண்ணுறான்.. என்னப் பண்ரது இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழ்குராஜ் வேணும்ங்கறது..

அண்ணே..அண்ணே.. இது உங்க போனுக்குள்ளே இருந்துச்சு.. என்னன்னு கழட்டிப் பாத்தேண்ணே ஒண்ணும் விளங்கல்லண்ணே.. விளக்கம் சொல்லுங்கண்ணே டவ்சர் பாண்டி செல்போன் பேட்டரியைக் கையில் பிடித்தப் படி அழகு ராஜ் முன்னால் வந்து நின்றான்..

செல்போன் ரிங்டோன் வராமலே போன் எடுக்கும் போதே நினைச்சேன்னு பாஸ்ட் பௌலர் கிசுகிசுக்க அழகுராஜ் அவர் பாணியில் ஹே..ஹே..ஹேய்.. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பான்னு சொல்லிச் சிரித்தார்.

ஏன் கேப்டன்.. இவர் தான் நம்மளைக் கோச் பண்ணனுமா.. நம்ம நண்பன் சரா பரிதாபமாகக் கொத்ஸைப் பார்க்க.. கொத்ஸ் பதில் எதுவும் சொல்லாமல் நின்றார்.

ஏ யூ.. இங்கே வா மேன்...காட்ச் என்று வேகமாப் பந்தை நம்ம புலிக்குட்டியிடம் பந்தைப் போட்டார். புலிக்குட்டி டக்கென கேட்ச் பிடித்து விட லைட்டா ஜெர்க்கான அழகுராஜ்... (அய்யோ இவன் பந்தைக் கரெக்ட்டா கவ்வுறானே.. விவரமா இருப்பானோ)

அய்ய்யோ இவர் காட்ச் பிடிக்கிறதப் பார்த்தா மான்டி கிராஸ் காட்ச் புடிக்கிற மாதிரியே இருக்கு.. சூப்பர்.. சூப்பர்... டவுசர் பாண்டி தட்டி மகிழ.. அழகுராஜ் டவுசரைக் கடுமையான லுக் விடுகிறார்.

"டேய் என்னப் பேர் சொன்ன?"

"மான்டி கிராஸ்"

உடனே புலி குறுக்கிட்டு அது ஜான்டி ரோட்ஸ்..

"இல்லையே நீங்க மான்டி கிரால்ன்னு தானே சொல்லிக்கொடுத்தீங்க.. கேட்ச் பிடிக்கும் போது கரெக்ட்டாச் சொல்ல சொன்னீங்களே.. நான் கரெக்ட்டாத் தான் சொன்னேன்" என்று டவுசர் பாண்டி கிடமாய் படு சீரியசான முகத்தோடு சொல்ல.. அழகு ராஜ் புலிக்குட்டியை மேலிருந்து கீழ் வரைப் பார்க்கிறார்.

போன அஞ்சு மேட்சுல்ல நீ அடிச்ச ரன் எவ்வளவுடா?

2, 5,0,0,1 ராயல் ராம் சந்தோசமாப் போட்டுக் கொடுக்க..

"ஏன்டா.. ஏன் இப்படி?"

"எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.. ஊர்ல்ல நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல.."

"ஏன்டா இன்டர்நேசனல் லெவல்ல விளையாடுர பரோட்ட மண்டையனுங்க தான் கெத்து பொத்துன்னு பிலிம் காட்டுறாங்கன்னா.. உள்ளூர்ல்ல ஒரு ரன் அடிக்கிறது உக்காந்து உக்காந்து தடவுர உனக்கெல்லாம் வெளம்பரம் தேவையாடா.. அப்படி ஓரமா நில்லு.. உன்னிய லாஸ்ட் மீட் பண்றேன்..

ஓட்டைச் செல்போன் வச்சிகிட்டு பீலா விடுற இந்தாளுக்கு லொள்ளைப் பாரு லோலாயத்தைப் பாரு.. வெட்டி வீராப்பாப் பேசுனது அழகுராஜ் காதில் விழ...

"ஏய்.. யூ மேன்.. கம் பிரண்ட்"

வெட்டி வந்து நிக்க...

"ஹேய்.. பந்து வீசுவீயா...?"

"ப்ரட் லீ மாதிரி போடுவேன்"

"லீ புட்பால் இல்ல ஆடுவான்...என்னய நக்கல் பண்ணுறீயா?"

"ப்ரட் லீ ஆஸ்திரேலியா ப்ளேயர்.."

அந்த நேரம் கிரவுண்ட்க்குள் .. நம்ம நாட்டாமை தீர்ப்புச் சொன்னா பாட்டு ஒலிக்க... நாட்டாமை.. தம்பி.. கப்பி எல்லாம் குருப்பா வர்றாங்க..."

"ஏய் ஸ்டாப் த மீயூசிக்.. WHO IS THE DISTURBANCE..யார் மேன் நீ எதாவது சந்தனம் கரைச்ச ஆண்டாவில்ல சிலிப் ஆகி விழுந்துட்டியா.. ஓடம்பு முழுக்க இப்படி பூசிட்டு வந்து இருக்க... ஆ.. அது என்னடா சொம்பு.. முன்ன ஒரு முறை புல் குத்த அவுட்சைட் போற சொக்மே சொகம்ன்னு நான் சொன்னதைக் கேட்டுட்டு கிரவுண்ட்ல்ல புல்லை எல்லாம் நாசமாக்க குரூப்பா வந்துட்டீய்யா.."

"அட தம்பிகளா.. நம்ம 16 பட்டி கிராமத்துல்லயும் பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்தியாருக்கு மருவாத கொடுக்கறது எங்க பழக்கம்ங்க.. பண்பாடுங்க...பராம்பரியம்ங்கோ.. நீங்க எங்களுக்கு கில்லிச் சொல்லிக் கொடுக்க வந்த வாத்தியார் ஆச்சே.. அதாங்க.. உங்களுக்கு ஊர் மரியாதைக் கொடுத்து ஆரம்பிக்கணும்ன்னு பாட்டெல்லாம் போட்டு வந்தோம்.."

"ஓ நாட்.. ஐ லவ் யூ.. பட் இப்போ நான் டூட்டில்ல இருக்கேன்.. அதுன்னால உங்க மரியாதை எல்லாம் ஏத்துக்க முடியாது.. பட் நீங்க வருத்தப் பட வேண்டாம்.. உன் கூட வந்த அந்தக் காந்த கண் அழ்கியை வரச் சொல்லு.. காந்தக் கண் அழகி.. இவன் ஓவராப் பூசி இருக்க சந்தனத்தை எடுத்து இந்தா ரைட்ல்ல பூஸ்.. ஆங் இந்தா அப்படியே லெப்ட்ல்ல பூஸ்.. ஓ... பேக்ல்ல பூஸ்..."

அழகு ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் போது... ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன் பாட்டு ஒலிக்க நம்ம ஜொ.பாண்டி... கட் பனியன்.. டிராக் சூட்.. கூலர்ஸ் என அட்டகாசமாய் வந்து இறங்கி காந்த கண்ணழகியைக் கவர் பண்ணி நிக்க...அழகுராஜ் அக்னி நட்சத்திரமாய் ஜொ.பாவைப் பார்க்கிறார்...

டேய் கூடை கவுத்த மண்டையா.. இங்கே என்னடாப் பண்ணுற..

"கிரிக்கெட் ஆட வந்தேன்ண்ணே.. சோனி டிவி யிலே ஒரு அக்கா வருவாங்க இல்ல அவங்க என்னியப் பாக்க வர்றேன்ன்னு சொல்லியிருக்காங்க.. அதான் கொஞ்சம் நல்லா ஆடணும்ன்னு உங்க கிட்ட ட்ரெயினிங் எடுக்க வந்தேன்.."

"டேய் மண்டையா உன் மண்டையிலே ஒரு கூடையை ஏன் கவுத்துகிட்டு திரியுறன்னு இப்போ விளங்குதுடா"

"எதுக்குன்ணே நம்ம சரா கேக்க?"

" ஊர்ல்ல எந்தப் பிகரை எப்போ கவுத்தலாம்ன்னு கூடையோடவே திரியற நீ... மந்திரா பேடி எல்லாம் கூடைக்கு கவுறர லேடியாடா... அப்புறம் உனக்கு எல்லாம் கோச்சிங சொல்லித் தர முடியாது?'

" ஏன் அண்ணே" ஜொ.பா பரிதாபமாகக் கேட்க..

"கூடை வச்சிருக்கவனுக்கெல்லாம் நான் கோச்சிங்க் கொடுக்குரது இல்ல" அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் வெட்டியைப் பார்க்கிறார்.

"நீ இன்னும் பந்து வீசப் போகல்லய்யா.. அய்யோ ஆண்டவா.. இந்த லாயக்கில்லாத பசங்களுக்கு எல்லாம் ஏன்டா என்னைக் கூட்டுச் சேர வைக்குற?"

வெட்டி பயங்கர கோவமாப் பந்தை பேண்டில் தேய்த்தப் படி பவுண்டரி வரை செல்ல..

அப்போது பார்த்து நம்ம டவுசர் பாண்டிக்கு பயங்கரமான டவுட் வருகிறது.. அவசரமாக மட்டை, பேட் எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிய அழ்குராஜை நிறுத்தினான்..

"அண்ணே.. அண்ணே.. அன்னிக்கே கேக்கணும்ன்னு நினைச்சேன்ண்ணே.. இந்தா இவனை மாதிரியே ஒருத்தன் அன்னிக்கு ஒரு நாள் ரொம்ப தூரத்துல்ல இருந்து ஓடி வந்து காட்டுத் தனமா உங்களைப் பார்த்து வீசுனானே.. அந்தப் பந்தைக் கூட அடிக்க முடியாம அது உங்களுக்கு 'அந்த' இடத்துல்ல பட்டுச்சே.. நான் கூட நீங்க புட்டுக்குவீங்கன்னு தான் நினைச்சேன்.. ஆனா உங்களுக்கு ஒண்ணுமே ஆகல்லியே அண்ணே எப்படிண்ணே?"


"டேய் டவுசர் மண்டையா.. நல்ல கேள்விடா.. இதுக்குத் தான் ஊருக்குள்ளே ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜ் வேணும்ங்கறது.. சொல்லுறேன் கேளு.. இந்த பந்து இருக்கே கிரிக்கெட் பால் நல்ல திடமானது படாத இடத்தில்ல பட்டா பலி தான்.. ஆனா அதுக்குத் தான் இது இருக்கு என கையில் கார்ட் எடுத்து வைத்தார்.

"இது என்னண்ணே...?"

"டேய் நோபால் மண்டையா.. இதுக்குப் பேர் அப்டாமினல் கார்ட்.. இது தான்டா.. நமக்கு அடிபடாமக் காப்பாத்துது.." என பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்கும் போதே டவுசர் பாண்டி அவர் கையிலிருந்தக் கார்டைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு

"சும்மா விளையாடதீங்க இது எப்படிண்ணே அவ்வளவு வேகம் தாங்க முடியும்.. உண்மையைச் சொல்லுங்கண்ணே" என்று அழகுராஜைப் பார்க்க
அந்தக் கேப்பில் அந்தப் பக்கம் வந்த நாய் ஒன்று அப்டாமினல் கார்டை கவ்விக் கொண்டு போக..

"என்ன அண்ணே.. நாய் கவ்விகிட்டுப் போகுது பாத்துட்டு இருக்கீங்க..."

அழகுராஜ் இருந்த ஒரு கார்டும் நாய் கவ்விப் போவதைப் பார்க்கிறார்.. அதே சமயம் வெட்டி கொலை வெறியோடு அழகுராஜ்க்கு பந்து வீச பவுண்டரியில் ரன் எடுக்க தயார் ஆகுகிறான்.....

இனிமே என்ன நடந்து இருக்கும் நீங்களே ஊகிச்சுக்கங்க மக்கா.. ஹேப்பி வீக் என்ட்...

Tuesday, March 13, 2007

ஜொள்ளு ஜெயந்தி!!!!

காதலுக்குத் திருவிழாக் கொண்டாடி உலகமே ஓய்ந்திருந்த வேளையில் நம்ம பேட்டைப் பக்கம்.. பீர் பேரல்களும்... உரித்தக் கோழிகளும்..( அட மெய்யான கோழிங்கப்பா).. அவித்த முட்டைகளும் அளவுக்கதிகமாகக் கொண்டுப் போகப்படும் தகவல் நம்ம காதுக்கு வர விசாரிக்கக் களத்தில் இறங்கைனோம்..

தமிழுக்குச் சங்கம் வளர்த்த பாண்டிய மண்ணில் இருந்து புறப்படுகிறான் ஒரு லட்சிய இளைஞன்...தலைநகரம் சென்னை அன்னையென அவனை வாரி எடுத்து தாலாட்ட..

அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..

பாண்டிய தேசத்தின் புழுதிக் காட்டில் அவன் கண் வழியேக் கொஞ்சிக் காவியம் பாடச் சொன்னக் கருவாச்சிகளும்...

திருவிழாக்களின் தீபம் சுமந்துச் சிரிச்சி சுளிச்சு அவன் சிறு இதயத்தில் சூடு வைத்த சிறுக்கிகளும்...

தாவணிப் போட்ட லேப் டாப்புகளும்.. எகிற அடித்த அவன் இதய லப் டப்புகளும்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு அவன் மெரீனாவின் ஈரக் கரையோரங்களில் கீதம் பாடிக் களைத்துச் சாய்ந்தான்...களைத்தவன் எழுந்து சிந்தித்தான்..

சைதாப்பேட்டை.. குரோம்பேட்டை.. வண்ணாரப்பேட்டை.. ராயப்பேட்டை. .ஏன் செத்தவனை செட்டில் செய்ய கண்ணம்மாபேட்டை.. கிருஷ்ணாம் பேட்டைன்னு என சென்னையில் தினுசா தினுசா ஆயிரம் பேட்டைகள் இருக்க...

சேட்டைகளின் கோட்டையாக ஒரு பேட்டை வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு சிலிர்த்து எழுந்தான்...

பறவைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று உரக்கப் பாடினான்..

சிந்தினான்...

இரவு பகல் பாராது சிந்தினான்...

ஓயவு ஒளிச்சல் இன்றி சிந்தினான்..

ஜொள்ளு என்னும் புனித திரவம் சிந்தி எழுப்பினான் பேட்டையை அது தான் இன்று உலக இணையத் தமிழர்களின் உதட்டோரம் குடியிருக்கும் குடியிருக்கும் நம் நிரந்தரப் புன்னகையாம்...

ஜொள்ளுப் பேட்டை...

ஜொள்ளுப் பேட்டை நிறுவிய நம் பாசத்துக்குரிய பாண்டி.. ஜொள்ளு பாண்டி மண்ணில் அவதரித்த இந்த திரு நாளாம் மார்ச் 14ஐ உலக ஜொள்ளு தினமாக அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் துவங்கி நம்ம உள்ளூர் பஞ்சாயத்து வரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்... ......

நான் விசாரிக்கப் போன நேரம் ஜொள்ளுபேட்டையிலே மேடையிலே நின்னு நம்ம டவுசர் பாண்டி தான் இப்படி கண்டப் படி பீலிங் ஆகி மைக் பிடிச்சிப் பேசிகிட்டு இருந்தான்..

இதுன்னால்லே உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குரது என்னன்னா..

நம்ம பாசத்துக்குரிய பாண்டிக்கு ஜொள்ளு பாண்டிக்கு டூமாரோ ஹேப்பி பர்த்டே....


HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!

Thursday, March 08, 2007

சாப்ட்வேர் கம்பெனிகளில் நடப்பது என்ன?

வணக்கம் மக்கா,

சாப்ட்வேர்ல்ல இன்னிக்கு என்னய்யா நடக்குது?

ஆளுக்கு ஆள் என்ன என்னமோச் சொல்லுறாயங்க...

சரி நானும் நம்ம பங்குக்கு நமக்குத் தெரிஞ்ச அம்புட்டு சாப்ட்வேர் நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும், பந்தங்களுக்கும், பரிவாரங்களுக்கும் மெயில் தட்டியும், செல் பேசியும், குறுஞ்செயதி அனுப்பியும்.. இன்னப் பிற தகவல் பரிமாற்ற வசதிகளையும் பயன் படுத்தி விசாரிச்சதன் விளைவு தான் கீழே இருக்கப் படங்கள்..

இவர் ரொம்ப நாளா சாப்ட்வேர்ல்ல இருந்துருப்பார் போல ....



ஆகா வேலை செஞ்சு வேலை செஞ்சுப் படமாவே தொங்குறார்..



ஓயாம இப்படித் தான் செய்யணுமாம்



தேடிப் பிடிச்சு வேலைப் பாக்கணும்..



எட்டல்லன்னாலும் செஞ்சு முடிக்கணும்ய்யா



பய வேலைக்குப் புதுசானாலும் வேலையிலே கவனமா இருக்கான்ய்யா


நாள் எல்லாம் வேலை செஞ்சா கடைசியிலே இது தான் மிஞ்சுது...


ஆமாங்க யாரைக் கேட்டாலும்

ஆபிஸ்ல்ல ஆணி அடிக்கிறாங்கய்யா.. ஆணி புடுங்க வைக்கிறாங்கய்யான்னு ஒரே அழுவாச்சி.....


இந்தா எனக்கு என் பாஸ் கொடுத்த துண்டு சீட்டு கடைசியா ஓங்கப் பார்வைக்கு...




ம்ம்ம்ம் இந்தப் பத்திரிக்கைகாரங்க எழுதுற மாதிரி கூத்தடிக்கற ஆபிஸ்ல்ல நான் விசாரிச்ச வரைக்கும் எவனுமே வேலை பாக்கல்லய்ய்யா.. இல்ல நாம பொறாமைப் படுவோம்ன்னு சொல்ல மாட்டேங்குறாங்களா... அதையும் விசாரிச்சு எழுதுங்கய்யா..

ஆணி புடுங்க நேரமாச்சு..

சாயங்காலமா.. என் பாஸ் கிட்ட சொல்லி ஒரு பெக் வாங்கி ஊத்திகிட்டு போதையா வந்துப் படிக்கேன்...

யப்பா... சாப்ட்வேர் புரொபஷனல்களா நீங்களும் ஓங்க கம்பெனி வசதிக்குத் தக்க கஞ்சா, அபின், பட்டசரக்கு, சுண்டங்கஞ்சி... இதை எல்லாம் ஹெ.எச் ஆர்ல்ல கேட்டு வாங்கி அடிச்சுட்டு வந்து குஜாலா அந்தப் பத்திரிக்கையப் படிங்கப்பா...

பிகு:நம்ம ராம் தம்பி தான் இது.. எமபுட்டு அழகா ஆணி அடிச்சு விளையாடுது பாருங்க..























Wednesday, March 07, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - பயிற்சி களம்

வணக்கம் மக்கா,

அணியின் சிறப்பு பயிற்சியாளர் நம்ம அணியைத் தாக்கி எழுதிய கடிதம் பற்றி கடுகளவும் கவலைப் படாத நம் பதிவுலக கிரிக்கெட் புலிகள் இரவு பகல் பாராது கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பினாத்தாலாரின் கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்து நாள் ஒன்றுக்கு 40 (ஆமாங்க 40 தான் லிமிட்) கிலோவுக்கு குறையாமல் கண்டனக் கடிதங்கள் கிழக்காப்பிரிக்கா துவங்கி கீழ்பாக்கம் வரை அனைத்து இடங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளன.

அதை எல்லாம் உடனுக்குடன் பழைய பேப்பர் கடையில் போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று நம் வீரர்கள் தங்கள் உடம்பை இரும்பெனத் தயார் செய்த வண்ணம் உள்ளனர்.. 40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது...

பழையப் பேப்பருக்கு நெல்லிக்காய் கிடைக்குமா என கவலையோட விசாரித்தவர் நம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெட்டி பயல்..

பத்திரிக்கைக்கார்களும் புகைப்படக்காரர்களும் அணியினர் பயிற்சி செய்யும் மைதானத்தின் பக்கமே அனுமதிக்கப்படாத நிலையில் லண்டன் சன் பத்திரிக்கை ஆகாய மார்க்கமாய் தன் நிருபரை அனுப்பி நம் வீரர்கள் பயிற்சி செய்யுமிடத்தைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதோடு நம் பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள குறைந்தப் பட்ச ஆடைகளில் கடும் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருந்ததையும் படம் பிடித்து விட்டனர். அந்தக் கவ்ர்ச்சி படம் எந்த நேரமும் இணையத்தில் வலம் வரலாம் உஷார்
நம் நாட்டாமை தலைமையில் சில வீரர்கள் அணியின் வெற்றிக்காக கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகிதமாக் கடந்த வாரம் பாண்டிச்சேரி பார்டர் வரை அவரது சேரியட்ட்ல்லப் போய் வந்து இருக்கிறார்கள்..

"என்றா நாயம்.. சுத்துப் பட்டுல்ல பத்துப் பேத்தை நிக்க வச்சுபுட்டு... என்ற கையிலே ஒத்த மட்டைய மட்டும் கொடுத்துபுட்டு .. ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பாருன்னு வீசுறான்.. அந்தப் பயபுள்ளக்கு குறி வைக்க தெரியாம அங்கன இங்கன் பந்து போவுது.. மறுபடி மறுபடி பந்து வீசச் சொல்லி அவன் கிட்ட பந்தக் கொடுக்குறானுவ.. அட அவனால முடியல்லன்னு அடுத்தவன் கிட்டயும் கொடுக்குறான்வ.. ஆனாப் பாருங்க... ஒரே தடவ.. நான் பந்தை தடுக்காம விட்டேன்ய்யா.. பின்னால இருந்த குச்சி விழுந்துருச்சுன்னு.. என் கையிலே இருந்த மட்டையப் புடுங்கிட்டு... வெளியேப் போவச் சொல்லிட்டன்வ... என்றா நாயாம்.. ஏனுங்க தம்பி...எனக்கு எல்லாம் நீதிடா.. நேர்மாடா.. நாயாம்டா.. சொல்லோனும் தம்பி...."
பாண்டிச்சேரியில் பொங்கல் மீது பொங்கியப் படி நாட்டாமை பேசியது நம் வீரர்களையும் பொங்க வைத்து விட்டது..

நம் அணி வீரர்களின் ஆஸ்திரேலியா ரசிகர் மன்ற கிளையினர் பயிற்சி நேரத்தில் அணியினரைக் காண வந்திருந்தப் போது எடுத்தப் படம். நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை.. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாய் திறந்தன..



மக்களே உங்களுக்காக நம் வீரர்களின் பயிற்சி களத்தின் ஸ்பெஷல் படங்கள்..
இந்தப் படங்களில் உங்கள் பாசமிகு வீரர்கள் எல்லாருமே உள்ளார்கள்.. எங்கே கண்டுப் பிடிங்கப் பாப்போம்..

வீரர்களின் பயிற்சி நேரத்தில் சிறப்பு பிட்னஸ் டிப்ஸ் கொடுக்க அன்பிற்குரிய மருத்துவர்கள் எஸ்.கே அய்யாவும், ரஷ்யா ராமநாதனும் வந்திருந்தது சிறப்பானப் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.


உருகுவே மான்டி வீடியோவைச் சேர்ந்த ஒரு பிரபல உற்சாக பான நிறுவனம் நம் வீரர்களின் திறனைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்து உள்ளது.. (நம் கப்பி கொடுத்த தகவல் தான்)அதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கல்ந்துக் கொண்ட நம் வீரர்கள் சற்று அசந்த நேரத்தில் நம் அணிக்குச் சொந்தமான மட்டை. பந்து.. ஸ்டம்பு.. பேட்.. போன்ற உபகரணங்களை யாரோ சுட்டுச் சென்றதாய் தெரிய வந்தது..




அந்த விருந்தில் கலந்துக் கொண்டதால் நம் வீரர்களால் முழுதாய் மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லையாம்...
அந்த மூன்று நாட்களும் மைதானத்துக்கு வெளியே ஏக்கமாய் காத்துக் கிடந்த ரசிகர் பட்டாளத்தைத் தான் படத்துல்லப் பாக்குறீங்க..

இப்படியாக நம்ம அணி பயங்கர பில்டப்பா அடுத்து பிளைட் ஏறப் போகுது.. வாங்க வாழ்த்துங்க.. வழியனுப்புங்க.. ALL THE BEST சொல்லுங்க...

tamil10