Wednesday, August 30, 2006

தஞ்சைத் தாராள சாமி.

நம்ம நட்பு கல்யாணத்துக்குப் போயிட்டு அந்தக் கதையைச் சொல்லாம கண்ட கதையைச் சொல்லிட்டு திரியறன்னு மெயில் வழியா வந்த முந்நூத்துச் சொச்சம் வாசகர்கள் கிட்டயும் மாப்பு கேட்டுகிட்டு கல்யாணக் கதைக்கு வர்றேன்...

கல்யாண வீடுன்னா நாலு பேர் வருவாங்க போவாங்க தானே.. அப்படித்தான் அவரும் சிங்கப்பூர்ல்ல இருந்து காரைக்குடி கல்யாணத்துக்கு வந்து இருந்தார். மாப்பிள்ளை நமக்கு டவுசர் காலத்து நட்புன்னா... சிங்கப்பூர் காரருக்கு ஜீன்ஸ் பேண்ட்டைத் தோய்க்காம போட பழகுனக் காலத்து நட்பாம்...

சொந்த ஊர் மன்னார்குடின்னு அறிமுகமாகிட்டார். கொஞ்ச நேரத்துல்ல தோள்ல்ல கையைப் போடற அளவுக்கு பழகி அதுக்கும் கொஞ்ச நேரத்துல்ல
நாலு வீட்டு கல்யாணத்துல்ல வந்து புள்ளகளைச் சைட் அடிக்கிற நாய்க்கு லொள்ளைப் பாரு. லோலாயத்தைப் பாரு...எகத்தாளத்தைப் பாருன்னு வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா இப்படி எல்லாத்தையும் விட்டு விலகி ஒரு பெரும் நட்பு வட்டமாயிட்டோம்ன்னாப் பாருங்களேன்..

மனுசனுக்கு சிரிக்க விட்டு பேசி சில்லறையை சிதற விடுறதுன்னா அப்படி ஒரு ஆர்வம்... சிங்கப்பூர் வாழ்க்கை.. முடிஞ்சுப் போன கல்லூரி வாழ்க்கை அப்படி இப்படின்னு பேச்சுப் பட்டம் எட்டுத் திக்கிலும் சுழன்று பறந்தது.. அப்படியே வலைப் பக்கம் பேச்சு சட்டுன்னு திரும்பிச்சு...

டுபுக்கு... ஏஜெண்ட்.. குழலி..அப்படின்னு போனப் பேச்சு கைப்புள்ளன்னு திரும்பிச்சு.. இந்தா வந்துருச்சுப் பாரு அப்படின்னு நினைக்கையிலே டக்குன்னு சாரி சொல்லி நம்ம பீலிங்ஸ்க்கு பீலிங்கஸ் கொடுத்துப்புட்டார். சாரிங்க.. நான் இந்தச் சென்னைக் கச்சேரி எல்லாம் படிச்சதே இல்லிங்க அப்படின்னார்....பட் இந்த வ.வா.சஙக்ம் எல்லாம் நான் படிக்கிறது உண்டுங்க... வெத்தா எழுதுனாலும் வெயிட்டாச் சிரிக்க வச்சுடுறீஙன்னு சொன்னார்.. ( அதைப் பாராட்டுன்னு எடுத்துப் பத்திரமாப் பாக்கெட்டுக்குள்ளே வச்சுகிட்டேன்) ஆமா உங்கக் குரூப்ல்ல பொன்ஸ் அக்கா ன்னு ஒருத்தர் எழுதுனாங்களே அவங்க எங்கக் காணும்ன்னு கேட்டார்... அந்தக் கேள்விப் பரவாயில்லை அடுத்தாப்பல்ல பொன்ஸ் அக்காவுக்கு ஒரு நாப்பது நாப்பதைஞ்சு வயசு இருக்குமான்னுக் கேட்டு கதிகலங்க வச்சுட்டார்...

சரி அப்புறம் அவர் பதிவுகளைப் பத்தியும் நம்மைப் பத்தியும் விசாரிச்சு விவரமெல்லாம் குறிச்சுகிட்டார்.

அப்போ அவர் பாக்கெட்டுல்ல இருந்த செல்போன்ல்ல சந்திரபாபு ட்யூன்ல்ல ஒரு பாட்டுக் கேட்டுச்சு..எழுந்துத் தனியாப் போனவர்., லைட்டானச் சிந்தனை சீட்டியடிக்க முகத்தைத் தடவிக்கிட்டே வந்து உக்காந்தார்.

"ஏனுங்க எதாவது பிரச்சனையா?" நமக்கு அம்புட்டு நேரம் சிரிக்க சிரிக்கப் பேசுன மனுஷன் கரண்ட் கம்பியிலே கால் வச்சப் பூனைக் குட்டி மாதிரி ஆனதுப் பார்த்து சங்கடமாப் போச்சு.

"சென்னையிலே இருந்து என் பிரண்ட் பேசுனான்.. அவனுக்கு ஒரு பிரச்சனை.." கோணல் பக்கஙக்ள் சாரு மாதிரி பேச ஆரம்பித்தார். நான் கதைக் கேக்குற ஆசையிலே கன்னத்துல்ல கையை வச்சுகிட்டு பக்கத்துல்ல அழுத்தமா உக்காந்துகிட்டேன்.

"நீங்க நக்கீரன் படிப்பீங்களா? "
" எப்பவாச்சும்... "
" ஒரு ரெண்டு வாரம் முன்னால நக்கீரன்ல்ல கூட வந்து இருந்துச்சு... அவனுக்கு ஒரு தங்கச்சி.. நல்லாப் படிக்கும்.. பிள்ஸ் டூவில்ல கூட நல்ல மார்க்.. 85% வாங்கியிருந்துச்சு"

"அந்தப் பொண்ணுக்கு என்ன?"

அந்தப் பொண்ணின் தோற்றத்தை கொஞ்ச நேரம் சிலாகித்து வ்ருணித்து விட்டு மேலேத் தொடர்ந்தார். (நண்பன் தங்கச்சியாம்...)

"காலேஜ்க்கு படிக்க மெட்ராஸ் வந்துச்சு... மவுண்ட் ரோட் பக்கம் எதோ ஒரு காலேஜ் சொன்னான் பேர் ஞாபகம் இல்லை.."
"எத்திராஜா.."
"அது இல்ல"
"அப்படின்னா.. ஸ்டெல்லா மாரிஸ்"
" சரியாத் தெரியல்ல... அங்கிட்டுப் படிக்கச் சேந்துச்சு... அவங்க அப்பாவுக்கு அதுல்ல இஷ்ட்டமே இல்லையாமா... பொண்ணு இப்படி ஊர் விட்டு ஊர் போறது எல்லாம்"

"சரி என்னாச்சு?"
" பொண்ணு ஹாஸ்ட்டல்லத் தங்கிப் படிச்சிருக்கு..அப்படியே சாயங்காலமா எதோ ஒரு சென்டர்ல்ல கம்யூட்டர் கோர்ஸ்ல்ல சேந்துருக்கு"
"கம்ப்யூட்டர் கோர்ஸ் நல்லது தானே"
" அட இருப்பா.. அந்த சென்டர்க்கு ஆம்பிளைப் பசஙக்ளும் வருவாங்க இல்ல.. அதுல்லயும் உங்கச் சென்னையிலே இருக்க பணக்காரப் பசங்களைக் கேட்கவே வேணாம்... நேரத்துக்கு ஒரு செல்... புதுசாக் கார்... கையிலே டிஜி... எதையாவது படம் புடிக்கிறேன்னு என்ன என்னமோப் படம் புடிக்கிறது.. இப்படி ஒரு கூட்டம் சீரழிஞ்சு திரியுது இல்ல"

"யோவ் அப்படி கூட்டம் எல்லா ஊர்ல்லயும் தான் இருக்கு.. சென்னை மட்டும் என்னய்யா?"

"சரி சரி.. கேளுய்யா.. அப்படி ஒரு விளங்காதப் பயல்வளோட இந்தப் பொண்ணுக்கும் அது பிரண்டுக்கும் சகவாசம் ஆகிப் போச்சாம். அப்புறம் கார்ல்ல கும்பலாக் கிளம்பி ஒரே கூத்தாம். இந்தப் புள்ளகளைத் தண்ணியடிக்க பழக்கி.. ராத்திரி டிஸ்கோ.. அது இதுன்னு ச்சே என்னச் சொல்லுறது"

"ஆமாய்யா இப்போ இப்படி நிறைய நடக்குது.. மனசுக்கே கஷ்ட்டமாயிருக்கு சாமி"

"ஒரு நாள் இந்தப் புள்ளக ஹாஸ்ட்டல் வார்டன் கிட்ட வசமாச் சிக்கிறுச்சுகளாம். பசங்களும் கூட மாட்டிக்க.. ஒரே ரசாபாசமாப் போயிருச்சாம். வார்டன் ஊருக்கு போனைப் போட நம்ம பிரணட்....அவன் அப்பா எல்லாரும் ராத்திரியே ரயிலேறி சென்னைக்குப் போயிட்டாஙக"

" நான் கூட இதைப் படிச்ச மாதிரி இருக்கு,, அப்புறம் என்ன ஆச்சு?"

" விடியல்குள்ளே புள்ளக ரெண்டும் ஹாஸ்ட்டல் கேட்டைத் தாண்டி தப்பிச்சு ஓடிருச்சுங்களம்"

"பாருடா பொம்பளைப் புள்ளகளுக்கு இருக்க தைரியத்தை..!!!"

"பிரண்டும் அவங்க அப்பாவும்.. பொண்ணைத் தேடாத இடமில்லை... கிட்டத் தட்ட கிறுக்கேப் பிடிச்சுப் போச்சுங்க."

" சே பாவம்ங்க உங்க பிரண்ட்"

" ஆமாங்க. அப்புறம் அப்படி இப்படி போலீஸ் உதவியோட பொண்ணுங்க இருக்க இடத்தைக் கண்டுபிடிச்சுட்டாங்க"

" எங்கே இருந்தாங்க?"

" பெரம்பூர்ல்ல ஒரு பழைய வீட்டுல்ல இருந்துச்சுங்க"
"பிறகு என்னாச்சு?"

"அங்கேப் போய் பொண்ணுங்களைப் பார்த்தா பிரண்டுக்கும் அவங்க அப்பாவுக்கும் பயங்கர அதிர்ச்சி...ரெண்டும் வெள்ளைப் புடவைக் கட்டிகிட்டு நிக்குதுங்க"

" அய்யய்யோ என்னங்க ஆச்சு அந்தப் பசங்க எங்கே?"

"இதையேத் தான் பிரண்டும் அவங்க அப்பாவும் அந்தப் பொண்ணுங்க கிட்டக் கேட்டுருக்காங்க"

"அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும்.... "

"சொல்லுங்க. சார்... "

"அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும்....நாங்க ரெண்டு பேரும் உஜாலாவுக்கு மாறிட்டோம். இனிமே இப்படித் தான் பளிச்சுன்னு வெள்ளைப் புடவைக் கட்டுவோம்ன்னு சொன்னாங்களாம்.."

கதையை அந்த இடத்தில் நிறுத்தியதும்....

இதே தாங்க... இவ்வளவு நேரம் இந்தக் கதையைப் படிச்சிட்டு இப்போ உங்க முகத்துல்ல இருக்கே அதே கோபம் தான்ங்க எனக்கும் வந்துச்சு...

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோமா...

Monday, August 28, 2006

காக்க காக்க ரிப்பிட்டு

இந்த வாரம் நம்மக் கூட ஒண்ணாப் பள்ளிகூடத்துல்லப் படிச்ச பய ஒருத்தனுக்குக் கால்கட்டு போட்டாய்ங்க.. அதைப் பாக்க வரச்சொல்லி நமக்கும் ஒரு அழைப்பு வரவே.. பஸ்..லாரின்னு பலதையும் புடிச்சுப் பலகாரம் திங்கறதுக்கு காரைக்குடிக்குக் கிளம்பிட்டேன்...கல்யாண மேட்டர் தான் பதிவாப் போடலாம்ன்னு நினச்சேன்.. ஆனா அதையும் விட இன்னொரு மேட்டர் ரவுசாக் கிடைக்கவே அதை இங்கே எழுதிருவோம்ன்னு களத்துல்ல குதிச்சுட்டேன்.

காரைக்குடி பக்கம் சுவத்துல்ல எல்லாம் சொம்மா சோக்கா கலைஞானி கையிலே டுப்பாக்கி, கண்ணுல்ல ''கூலர்ஸ் போட்டுகிட்டு ''வாக்'' உடற ஸ்டில்ஸ் எல்லாம் பாத்துட்டு... கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க தியேட்டர் பெயரை விவரமா மனசுல்ல குறிச்சுகிட்டேன்.. நம்ம கூட வந்த நட்பு பக்கா கமல் வெறியர்... தலீவரு படம் பார்த்தே ஆகணும்ன்னு உசுப்பேத்தி விட்டுட்டார்... அப்புறம் என்ன சனிக்கிழமை சாயங்காலம் காரைக்குடி பாண்டியன் தியேட்டர்ல்ல நிரம்பி வழிஞ்ச கூட்டத்துல்ல நாங்களும் போய் ஐக்கியமாயிட்டோம்.

தியேட்டர் ஒரு 25% சதவீதம் புல்லாகி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. (மனசுக்குள்ளே சென்னை சத்யம் தியேட்டர்ல்ல டிக்கெட் கிடைக்காமப் போன மக்கள் மேல ஒரு சின்ன அனுதாபம் வந்துச்சு) மக்கா காரைக்குடி B,C,D,E சென்டர்ல்ல என்ன வகையறான்னு தெரிஞ்சவங்கச் சொல்லுங்க.

தியேட்டர் வளாகத்துல்ல வழக்கமான கமலை ஆராதிக்கும் கட் அவுட்கள்.. கொடித் தோரணங்கள்.. .அப்புறம் "சேலஞ்ச் லைன்ஸால்" நிறைக்கப்பட்ட ரசிகர் மன்ற போஸ்ட்டர்ஸ் எல்லாம் காரைக்குடியும் கமல் பட வெளியீட்டைத் திருவிழா ரேஞ்ச்ல்ல தான் பாக்குதுங்கறதைத் தெளிவாப் புரிஞ்சிக்க வச்சுது. ஆனா சனிக்கிழமை மாலைக் காட்சியின் கூட்ட அளவு.. சமீபக்கால உலக நாயகனின் படங்கள் அவ்வளவாய் வியாபார வெற்றி பெறதாதை எடுத்துச் சொல்லுவதைப் போல இருந்தது. தியேட்டரில் புதிதாகச் செய்யப்பட்டிருந்த டி.டி.எஸ் வசதி ஒலியின் தரத்தை மேலும் கூட்டியது.
பெயர் போட்டதிலிருந்து ஒரு தீக்குச்சி கிழிச்சப் போட்டக் கணக்கா நமக்குள்ளே எதிர்பார்ப்பு பத்திக்கிச்சு..

ஒரு ரவுடிக்கிட்ட சவால் உட்டு அவன் வூடு தேடி வந்து கமல் ஊடு கட்ட.. அவரை ரவுண்ட் கட்டும் ரவுடிகளை இவர் ரவுண்ட் கட்ட .. தோடா இது நம்ம ஆரிச்சாமி போலீஸ்டான்னு நினைப்பு பில்டப் ஆயிடுச்சு...

அதுக்குள்ளே... டைட்டில் சாங் ஓட ஆரம்பிக்க.... ஆலிவுட் போலீஸ் கணங்கா கமல் அங்கிட்டும் இங்கிட்டும் டுப்பாக்கி சகிதம் நடக்கறது ஓடுறதுன்னு ஒரு பாட்டுக்குள்ளே அவர் கிரைம் பிராஞ்ச் வாழ்க்கையை அடக்கி நமக்குச் சொல்லி படம் பாக்க நம்மளைத் தயார் படுத்துறாங்க...

இது ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் பிலிம் அப்படின்னு அடுத்த நினைப்பு நமக்குள்ளே மைல்டா ஒட ஆரம்பிக்க.. நம்மையும் மீறி கவுதமின் முந்தைய பட வாசனை நமக்கு லேசாக அடிக்கிறது...இட்ஸ் ஓ.கேம்மா அப்படின்னு தயார்படுத்திகிட்டு உக்கார்ந்தா திரைக்கதை சும்மா அப்துல் கலாம் செஞ்சு விட்ட ராக்கெட் கணக்கா டாப் ஸ்பீட்ல்ல பறக்க ஆரம்பிக்குது...

ஒரு கொலை.. அதுக்கு கொஞ்சம் சென்டிமென்ட் டச் கொடுக்க.... கொலையானது தனக்கு ரொம்ப வேண்டிய நணபரின் மகள்ன்னு ஒரு சின்ன பில்டப்பு... ( தில் படத்துல்ல வர்ற நாசர் கேரக்டர் மாதிரி லேசான சாயலுடன் இதில் நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ்)

மனுசன் ஒரு சீன்ல்ல வந்து அழுதாலும் பொளந்துக் கட்டுறார்... நடிகன்யா.

அப்புறம் கொலைக்கான தேடல் தொடங்குகிறது...

அமெரிக்கா யார் பாக்கணும்ன்னு ஆசைப் பட்டாங்களோ தெரியல்ல.. அடுத்த கொலைகள் அமெரிக்காவில்... பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவியும் அந்தப் பட்டியலில் அடக்கம்.

இங்கிட்டு மீண்டும் கொஞ்சம் சென்டி தூவல்.. ஆமாங்க கமலுக்கு ஒரு மனைவி இருந்திருக்காங்க.. பாவம் அவங்க கமல் போலீஸா வர்ற விக்ரம், வெற்றி விழா படங்கள்ல்ல வர்ற மனைவி கேரக்டர்ஸ் மாதிரி ரொம்ப வித்தியாசமாச் செத்துப் போறாங்க...

மருத்துவமனை.. நாயகன்... நாயகி.. நாயகன் மருத்துவமனையில் ... கவுதம் முந்தையப் படத்தின் தாக்கம் முடியல்லயோ...

இந்தச் சின்ன விஷ்யங்கள் எதிலும் நம் கவனம் அதிகம் பதிய விடாமல் திரைக்கதைப் படுவேகமாய் போகிறது...

கமல் ஒன் மேன் ஆர்மியாய்.. கூட ஒரு வெள்ளைக்கார எடுப்பு போலீஸின் உதவியோடு பகலில் கண்டப்படி துப்பு துலக்கி அந்த விவரங்களை பப்ளிக் பூத் இல் இருந்து இந்திய மேலதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கிறார். மாலைகளில் ஜோவைச் சந்திக்கிறார்..

ஜோவின் முன்னாள் கணவனிடம்... " I HATE VIOLENCE AGAINST WOMEN IN ANY FORM" என்று பஞ்ச் வசனங்கள் பேசி.. ஜோவின் மனம் கவர்கிறார்??... ஸ்ப்பாபாபா.. இவ்வளவு நேரம் நான் பார்த்தது தமிழ் படம் தான்ன்னு அப்ப அப்ப கன்பரம் பண்ணிக்கிறதுக்கு ஜோ-கமல் சம்பந்தமான அமெரிக்க தமிழ் உரையாடல் காட்சிகள்.

இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடி வரை.. ஆமா படம் இனி எப்படிப் போகும்?? யார் கொலைப் பண்ணியிருப்பா??.. ஏன் பண்ணுறான்?? அப்படின்னு ஒரே யோசனையிலே இருந்த நம்ம யோசனையக் கலைக்கறாப்பல்ல கொலைகாரர்களின் அடையாளங்கள் டக்கென வெளுக்க நமக்கு ஒரு சின்ன ஏமாற்றம்.

WE ARE DOCTORS CUM KILLERS WHAT A GOOD COMBINATION... யம்மாடியோவ் இது டாக்டர்கள் கைத்தட்டி வரவேற்க போற பஞ்ச் டயலாக். நமக்கு அடிவயிறு லைட்டாக் கலங்கியிருச்சு.. நம்ம பயத்துக்குக் காரணம். நமக்குப் பக்கத்து சீட்டுல்ல கூட உக்காந்துப் படம் பாத்ததும் ஒரு டாக்டர்.

இடைவேளைக்கு அப்புறம் பாதியிலே திரி அணைஞ்ச ராக்கெட் ரிட்டன் ஆன மாதிரி கொஞசம் படத்துல்ல வேகம் குறைஞ்சுப் போச்சுன்னு எனக்கு ஒரு பீலிங்... சரி விடு எதாவ்து பண்ணுவாங்கப்பூன்னு பார்த்துகிட்டு இருந்தேன்...

"ஏய்.. இளா...
அவனைப் போடணும்...
உன்னைப் போடணும்... "

தனுஷ் பட டயலாக் மாதிரி இருக்கா.. அப்படி இல்ல இது.. இது... வில்லன் ஆவேசமாப் பேசுற டயலாக்.

கமல் + எடுப்பு வெள்ளைக்கார போலீஸ் சொம்மா வில்லன் குரூப் இருக்க இடத்தைச் செக் பண்ணப் போக... டாக்டர் கில்லர்ஸ் டென்சன் ஆகி எடுப்புப் போலீஸைப் போட்டுத் தள்ளுறாங்க... நம்ம போலீஸ் கத்தி குத்து வாங்கிட்டு காபி வித் அனு டாக் ஷோ மாதிரி வில்லன் கிட்ட சுவத்துல்ல சாஞ்சு உக்காந்துகிட்டு கதைக் கேக்குறார்.

கதையைப் படா இன்ட்ர்ஸ்ட்டா சொல்லுற வில்லன் அப்பப்போ டென்சன் ஆகி

"இளா..எந்திரி.. அவனைப் போடணும்ன்னு" சொல்லிகிட்டே கதையையும் பிலீங்கா சொல்லுறான்.. கமல் அப்பப்போ அவனுங்களை உசுப்பேத்துற மாதிரி அவுட் ஆப சிலபஸ் கேள்வி கேட்டா மட்டும்.. வில்லன் கையிலே கிடைக்குற பாட்டிலை எல்லாம் சரக்கோடு கமல் மேல வீசி எறியறான்... கமல் அதுக்கு அப்படி இப்படி நகந்து தப்பிக்கிறார். ( ஏனோத் தெரியல்ல புலிக்கேசியிலே வடிவேலு கரடி மேல அம்பு விடுற சீன் எல்லாம் ஞாபகம் வந்துருச்சு)

கமலைப் போட்டுத் தள்ள போறதா ஒரு முப்பது தடவைக் கூவிட்டு.. உடைச்ச சரக்குப் பாட்டில் மேட்டர் எல்லாத்தையும் வீணாக்கமல் தீ வச்சுக் கொளுத்திட்டு அவங்க எஸ் ஆயிடுறாங்க.. நம்ம கமல் ஜன்னல் வழியா V சம்மர் சால்ட் அடிச்சு கார்பேஜ் டின்ல்ல விழுந்து ''அசால்ட்'' ஆகாமத் தப்பிக்கிறார்

நம்ம வில்லன் கோஷ்ட்டி அடி உதைப் பட்டு ரத்தக் களறியா வெளியேறி.. அப்படியே ஒரு பிளைட் புடிச்சு இந்தியாவுக்கு வந்துடுறாங்க.. ( விசா எல்லாம் ஒரு மேட்டரே இல்லையோ.. மல்டிப்பில் என்டிரி விசாவா.. எப்படி மக்கா டக்கென்னு டிக்கெட் எல்லாம் உசார் பண்ரீஙக..அவன் அவன் அங்கிட்டு இருந்து இங்கே கிளம்பனும்ன்னா ஆறு மாசம் எல்லாம் பிளான் போடுறான் பயபுள்ளக நினைச்சாக் கொலைப் பண்ணிட்டு பிளைட் ஏறிடுறாயங்களே எப்படி சாமி எப்படி? ம்ம்ம் மறுநாள் திருச்சியில்ல இருந்து சென்னை டிக்கெட்டுக்கு அல்லாடிகிட்டு இருந்தோம் 'நாங்க' அந்த வயித்தெரிச்சல்)

இருக்கட்டும்.. அப்புறமென்ன.. இந்தியாவுக்கு கமல் வர்றாரு.. தொரத்துறார்.. நடுவில்ல அவங்க இவர் கூட இருக்க போலீஸ் காரரைப் போடறாங்க.. போட்டுட்டு நம்ம ஆழ்வார் பேட்டை பிரிட்ஜ்ல்ல அசால்ட்டா RMKV REVERSIBLE சில்க்க்கு ஹோர்டிங் வைக்கிற மாதிரி கட்டி தொங்க விடுறாங்க... அதுல்ல கமலுக்கு மிரட்டல் மெசெஜ் வேற..

கமல் தொடர்ந்து தொரத்துறார்.. ஆமா ஜோ எதுக்குன்னுப் பாக்குறீங்களா.. கரெக்ட் உங்க கெஸ்.. அதுக்குத் தான்.. கடைசியிலே வில்லன் தூக்கிட்டுப் போய்... அஜால் குஜால் பண்ண முயல்.. கமல் வந்து வேட்டையாடி வில்லன்களின் விளையாட்டை முடித்து வைக்கிறார்.

கடசி அரை மணி நேர நிகழ்வுகள் அனைத்தும் கா.கா ரீப்பிட்டே.. கிளைமேக்ஸ்ல் ஒரு சின்னத் திருத்தம் ஜோ இதில் எஸ்கேப்....

படம் முடிஞ்சு வெளியே வரும் போது... ஒரு ரசிகர் சொன்னது..

பாட்டு சூப்பர்..பைட்டு ஓ.கே... ஆனா இந்த் லவ் சீன்ல்ல மட்டும் ஜோதிகா- சூர்யா கெமிஸ்டிரி மிஸ்ஸிங்.. வில்லன் கூட பரவாயில்லப்பா... ஆக இது காக்க காக்க.. ரீப்பீட்டே.

கல்லா நிறைவதிலும் காக்க காக்கப் போல் வசூல் சாதனை படைக்க நம்ம வாழ்த்துக்கள்

Thursday, August 24, 2006

தேன்கூடுப் போட்டி முடிவுகள்

வணக்கம்ங்கோ.. கோயம்புத்தூர் டு சென்னை மேட்டரே இன்னும் பின்னூட்டப் புல்லா ஓடிகிட்டு இருக்குங்க... அது நமக்கு சந்தோசம்ங்க... நம்ம நட்பு இளா சுஜாதாப் பெயரச் சொல்லி ஒரு புயலைக் கிளப்பிகிட்டு இருக்கார் பாருங்க... அதுல்ல நம்ம கருத்து என்ன அப்படின்னா... பதிவுன்னு ஒண்ணு போட்டா அதுக்குப் பின்னூட்டம்ன்னு ஒண்ணை நாமளாவது போடணும்.. இது என் தலைவர் பின்னூட்டப் புயலார் எனக்குச் சொல்லிக் கொடுத்தப் பாடம்..

ஏன்னா சீரியலும் எடுத்தாச்சு.. படமும் காட்டியாச்சு அடுத்து என்ன அப்படின்னு யோசிக்கையிலே படக்குன்னு தோணுச்சுப் பாருங்க ஒரு ஐடியா..

சிறு வயசுல்ல இருந்தே நமக்கு இந்த தேர்தல்ன்னா பிரியம் ஜாஸ்தி.. ஒண்ணாம் கிளாஸ் ஆரம்பிச்சு பன்னிரெண்டாம் கிளாஸ் வரைக்கும் பள்ளிக்கொடத்துல்ல எந்தப் பதவிக்குத் தேர்தல் வச்சாலும் நமக்குக் கொண்டாட்டம் தான் போங்க...

தேர்தல் அறிவிச்ச ஓடனே.. நம்ம மூளையிலே புதுசாச் செயதி சேனல் ஒண்ணு ஓபன் ஆகும் பாருங்க.. நம்மகிட்ட ஒரு நாலு பேர் சமபளம் வாங்கமா வேலைப் பாக்க வருவான். அது போதும் என்னியே நானே ஒரு பிரணாய் ராயா நினைச்சு அலம்பல் பண்றதுக்கு...

ஆரம்பிச்சுடானுங்கடா.. இவனுங்க கச்சேரியைன்னு அன்னிக்கே நமக்கு அவார்ட் கொடுத்தவங்க ஏராளம்ன்னாப் பார்த்துக்கங்கோ..

அதாவது யார் ஜெயிப்பான்னு பல வகையிலே அடிச்சுத் துவைச்சி அலசி ஆராஞ்சு அவிஞ்சுக் கணிப்புச் சொல்லுவோம் பாருங்க.. அதுவும் கொத்து மாங்காய்ல்ல கல் விட்டு ஒரு மாங்காக் கீழே விழுந்து தொலைச்சக் கதையா ஓர்க் அவுட் ஆகும் பாருங்க...

அப்புறம் என்ன.. காலரைத் தூக்கி தோள்ல்ல போட்டுகிட்டு வருங்கால முதல்வர் பாடுவாரே ஒரு பாட்டு ... அதாம்ய்யா..

வச்சக் குறி தப்பாது...
இந்தப் புலி தோக்காதுன்னு...

அந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு திரிவோம் ஒரு குருப்பா...

யாருக்கு எவ்வளவு ஓட்டு விழும்? ஏன் விழும்? எப்படி விழும்?
எல்லாம் விசயத்தையும் அக்கு வேறு ஆணி வேறு... ஐப்பசி வேறுன்னு தோண்டி துருவி விவரமா மணல்ல வட்டம் போட்டு அதையே "பை சார்ட்டா" ஆறாங்கிளாஸ் கால் பரீட்சைக்கு முன்னாடியே பிரசன்டேஷன் பண்ணவங்க நாங்க.

அப்படி எல்லாம் ஒரு சிறந்த கருத்துக் கணிப்பு மேதாவியா நாங்களும் ஒரு காலத்துல்ல வாழ்ந்துகிட்டு இருந்தோம்.. அதையெல்லாம் நினைச்சுப் பாக்குறப்போ இப்போ வெறும் பெருமூச்சு தான் மிஞ்சுது..

இந்த NDTV, CNN IBN சேனல்ல எல்லாம் ஒரு முன்னோட்டமாக் காட்டுவாங்களே
அதிலும் குறிப்பா பர்க்கா தத் வர்ற ஒரு முன்னோட்டம் நமக்கு ரொம்ப பிடிக்கும்.. அதாவது அந்தம்மா செய்தி சேகரிப்புக்காக ஒவ்வொரு வாட்டியும் எவ்வளவு மெனக்கெட்டு இருக்காங்கங்கறதை அந்த தொகுப்புல்ல காட்டுவாங்க...சுனாமி, ஆப்கானிஸ்தான் போர், கார்கில் போர்முனை, மும்பை குண்டு வெடிப்பு இப்படி பல விஷ்யங்களைப் பத்தி அந்த அம்மாவோட வீடியோ கிளிப்பீங்ஸ் காட்டுவாங்க.. ரொம்ப நல்லாயிருக்கும் இதை ஒவ்வோரு வாட்டிப் பாக்கும் போது எனக்குள்ளே ஒரு ராஜ்தீப் சர் தேசாய் இருக்கானோன்னு எனக்கே எம் மேல ஒரு டவுட் வரும்ன்னா பாருங்க....

''மச்சி பிரபுக்கும் குஸ்புக்கும் கல்யாணமாம் தெரியுமா? அவங்க அப்பா சிவாஜிக்கு செமக் கோபமாம்.. ''

''கொய்யாலே நம்ம சாந்தி டீச்சர் லவ் மேரேஜ் பண்ணப் போறாங்களாம்ப்பூ... "

"மேட்டர் தெரியுமா.. நம்ம காலனி பொண்ணு அம்சவேணி பக்கத்துக் காலனி பையனோட ஓடிப் போயிருச்சாம்... "

இப்படி நான் ஒளிப்பரப்பிய .. சே நான்ன்னு தனியாச் சொல்லக் கூடாது.. (IT WAS A TEAM AND IT WAS TEAM WORK) மயிர் கூச்செறிய வைக்கும் பிளாஷ் நியூஸ் ஏராளம்

தேர்தல் செய்திகள்ன்னு பார்த்தீங்கன்னா...

எங்க பள்ளிக்கொடத்துல்ல நடந்த அம்புட்டு தேர்தல்லயும் நான் ஓட்டுப் போட்டேனோ இல்லயோ இந்தச் செய்தி சேகரிப்பு வேலையைத் தவறாமப் பண்ணிடுவோம்ல்ல..

மக்கா இன்றையத் த்லைப்புச் செய்தி..

''நம்ம கிளாஸ் தேர்தலில் தலைவர் போட்டிக்கு நிக்கும் சுரேஷ் வர்ற சனிக்கிழமை அவங்க வீட்டுல்ல நமக்கெல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேல நல்ல படம் காட்டப் போறான் மறக்காம வந்துறுங்க....''

"மக்கா.. அவன் படம் தானே காட்டுறான் நான் போஸ்ட்டரே தாரேன்..." எதிரணி ஆவேசம்

வெல்லப் போவது யாரு? இப்படி ஆரம்பிச்சு..

சனிக்கிழம இரவு வீடியோ காட்சி கரண்ட் கட்டினால் பாதிக்கப்பட்டது முதல்... போஸ்ட்டர் வினியோகத்திற்கு முன் போஸ்ட்டர்கள் களவாடப் பட்டது வரை விவரமாக் ஸ்கூப் நியூஸ் எல்லாம் ஒளிபரப்பிய பெருமை நமக்கு எட்டாம் கிளாஸ்ல்லயே கிடைச்சாச்சு.

இவ்வளவு நாள் நமக்குள்ளே தூங்கிட்டு இருந்த அந்த INVVESTIGATIVE JOURNALIST இப்போ எழும்பி உக்காந்துட்டு எதாவது வேலைக் கொடுன்னு நம்மை கெஞ்சலாப் பாக்குறான்.. அதான் முடிவு பண்ணிட்டேன் அடுத்த தேன்கூடு தேர்தல் போட்டி முடிவுகளைப் பத்தி விரிவா அலசி ஒரு தொடர் செய்தி சேவை செய்யலாம்ன்னு

செய்தி சேகரிக்க அனுபவமுள்ள அனுபவ்மில்லாதவர்கள் இந்தப் பணியில் உதவ் விருப்பமுள்ளவர்கள் என்னையோ அல்லது என் நண்பன் சராவையோ அணுகலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு கட்டாயம் உண்டு.

விரைவில் சந்திப்போம்

Monday, August 21, 2006

கோவை டூ சென்னை

வாரக் கடைசியிலே 'சொந்த' அலுவலாகக் கோயம்புத்தூர் போயிருந்தேன்.. நாமளும் கோயம்புத்தூர் மாப்பியாகி ஒண்ணரை வருஷம் ஆச்சுங்கோ... அந்தூரு தண்ணி, சோறு, வாழ்க்கை, வசதி, வயல், வரப்பு, பேச்சு, மூச்சு இப்படியான எல்லாம் இப்போ நமக்கும் ஒரள்வுக்கு அத்துப்படி ஆயிருச்சு.. பரீட்சையின்னு வச்சாப் பிட் கிட் அடிக்காம ஆத்தா நான் பாசாயியிட்டேன்னு சொல்லுற அளவுக்கு இருப்பேன்னு ஒரு நம்பிக்கை..

கோயம்புத்தூர் பத்தி இம்புட்டு தெரிஞ்ச நமக்கு வெகு நாளா ஒரு ஆசைங்கோ..அதாவதுங்க இந்த்க் கோயம்புத்தூர் குசும்பு.. கோயம்புத்தூர் குசும்பு ..அப்படின்னு ஒரு மேட்டர் சொல்லுறாங்களே.. அதைப் பத்தி விவரமா விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்ன்னுங்கறது தான் அது.

நம்ம 'ஆப்'இஸ்ல்ல எல்லாம் அப்டேட் யுவர்செல்ப் அப்படின்னு 'ஆப்'ரேசல் பண்ணும் போது மேனசர்மார்கள் அடிக்கடி சொல்லுவாங்கல்லோ அந்த எபெக்ட்.. நம்ம கோயம்புத்தூர் குசும்பு சம்பந்தமான அறிவுப் பசி புல் மீல்ஸ்க்கு ஆர்டர் கொடுத்துட்டு உக்காந்துட்டு இருந்த நேரம்.

ஒரு மாசத்துக்கு மிந்தி எடுத்த மதிய ரயிலுக்கான (கோவை எக்ஸ்பிரஸ்) டிக்கெட் ரெண்டு காலையும் பிளாட்பாரத்திலே இருந்து வாரி நம்மளை கோயம்புத்தூர் ஜங்க்ஷ்னுக்கு வெளியே விட..ரெண்டு கண்ணு முழியும் பிதுங்க அடுத்து என்னன்னு யோசிச்சுகிட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் சிந்தனைவாதியா நேத்து மதியம் திரிஞ்சுக்கிட்டு இருந்தேன்... ( கோயம்புத்தூர் குசும்பு மேட்டருக்கு லைட்டா ரெஸ்ட் கொடுத்து படுக்க வச்சிட்டு தான்)..

கே.பி.என்.. கான்டி... பர்வீன்... சிட்டி...யுனிவர்சல்...நேஷனல்.. இப்படி அம்புட்டு டிராவல்ஸ்காரனும் சென்னைக்கு டிக்கெட் இல்லைங்க.. அப்படின்னு ஜெராக்ஸ் போட்டாப்பல்ல பதில் சொல்ல.. ஆகா இந்த நாள். நொந்த நாள் தான் போலிருக்கேன்னு.. லேசா நமக்குள்ளே புலம்பல் சவுண்ட் கேக்க ஆரம்பிச்சது...

நம்ம மாம்ஸ்... அதாங்க நமக்குப் பொண்ணுக் கொடுத்தவர் அங்கிட்டு இங்கிட்டுத் திரிஞ்சு யார் புண்ணியத்துல்லியோ எஸ்.ஆர்.எம் டிராவல்ஸ்ல்ல சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்துட்டார்.. ( ஊரை விட்டு அனுப்புனாப் போதும்ன்னு நினைச்சுருப்பார் அப்படின்னு இந்த இடத்துல்ல நீங்கத் தப்பா நினைக்கக் கூடாது சொல்லிட்டேன்.. இது எல்லாம் வேற வகையான பாசம்ங்கோ)

ராத்திரிக்குத் தான் பஸ் சோ கிடைச்சக் கேப்ல்ல கொங்கு தேசத்திலே சிங் மக்களோட உக்காந்து நம்ம பச்சன் புள்ளயும் , ஷாருக்கானும் நடிச்ச கபி அல்விதா நா கஹெனா படம் பார்த்து கொட்டாவி விட்டு எழும்பினேன்

ராத்திரி ஜி.பி தியேட்டருக்கு எதிரே இருக்க ஆம்னி பஸ் ஸ்டாண்ட்க்கு ஒரு ஒன்பது மணிக்குப் பக்கமா வந்துச் சேர்ந்தேன்.
கலர் கலரா ஆம்னி பஸ் நிக்குறதேப் பாக்குறதே தனி அழகு. சரி மெயின் மேட்டருக்கு வருவோம்.

நான் பயணம் பண்ண வேண்டிய பஸ் கிளம்புமா அப்படின்னு விசாரணைச் செய்ய வேண்டிய ரேஞ்ச்சுக்கு நம்ம பஸ் சிந்துவார் இல்லாமப் பம்மி பவயமா நின்னுகிட்டு இருந்துச்சு.

ஒரு பதினைஞ்சு நிமிஷம் காத்து இருந்து ஈ விரட்டி.. டீ குடிச்சு... அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துப் பொழுது போக்கி.. குனிஞ்சு நிமிந்து எந்தரிச்சதுல்ல.. பஸ் பக்கம் ஒரு சின்ன்க் கூட்டம் சேந்துருச்சு.
(அட நம்மளைப் பாக்க இல்ல.. எல்லாரும் சகப் பயணிகள் தான்)

வெள்ளையும் சொள்ளையுமாப் பஸ் ஓட்டப் போறவங்களும்.. பஸ் கிளீனரும் வண்டி பக்கமா வந்து பத்த வச்சு புகையை பஸ்க்கு முன்னாடி சென்னைக்கு அனுப்பிரணும்ங்கற வீரமான வீறாப்புல்ல விறுவிறுன்னு ஊதிக்கிட்டு இருந்தாங்க...

நம்மளை மாதிரி வெளிச்சப் பொட்டியை வெறிச்சுப் பார்த்து வேலை செய்யற ஆளு ஒருத்தர்.. ஒரு காலத்துல்ல கவுண்டர் கிட்ட கன்னாபின்னான்னு திட்டு வாங்குறவருப் போட்ட டவுசர் எல்லாம் போட்டுகிட்டு தம் ஊதி முடிச்ச களைப்பில் இருந்த ஓட்டுனர் பக்கமாப் போய் நின்னுகிட்டார்.

சும்மா ஒரு சிரிப்பை அள்ளித் தெளிச்சார், அப்படியே நம்ம மனசுல்ல சுத்திகிட்டு இருந்த கேள்வியைக் கொக்கி கணங்கா டிரைவர் காதுல்ல போட்டார் பாருங்க..

"ஏன் சார் சென்னை வண்டி எப்போ எடுப்பீங்க...?" இது டிரவுசர் பார்ட்டி
"இந்தா எடுக்க வேண்டியது தான்" இது ஓட்டுனர்.
"எப்போ சென்னைப் போகும்?"
"ரன்னிங் டைம் 10 ஹவர்ஸ் சாமி"
"அது சரிங்க.. எப்போப் போகும்?"
"சொல்லுறேனேங்க.. ரன்னிங்க் டைம் 10 ஹவர்ஸாகும்ன்னு"
டிரவுசர் விட வில்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிரிப்பைச் சிதற விட்டபடி கேட்டார்.
சும்மாச் சொல்லுங்க சார்... தோராயாமா எப்போப் போகும்?

ஓட்டுனர் டிரவுசரை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு தம் மைப் பற்ற வைத்தார். கிட்டத்தட்ட சத்யராஜ் ஸ்டைலில்.

ஆகா நம்ம அறிவுப் பசிக்கு ஆப் பாயில் கிடைக்கப் போகுதுண்ணோன்னு உள்ளுக்குள்ளே ஒரு பட்சி கூவுற சத்தம் கேட்கவும், நான் நகந்து அவங்கப் பக்கமாப் போய் நின்னுக்கிட்டேன்.

"ஆமாங்க நீங்க ட்ரெயின்ல்ல போயிருக்கீங்களா?"
"ஓ எஸ் .. நிறைய தடவை.."

"அப்புறம் இந்த பறக்குற பிளைட்டல்ல?"
"ஓ.எஸ் லாஸ்ட் மந்த் கூட சிங்கப்பூர் டிரிப் போயிருந்தேன்.."

"அப்படிங்களா..சந்தோசம்ங்க...ஆமா இந்த ட்ரெயின்ல்ல ஏறுதக்கு முன்னாடி போய் அந்த இஞ்சின் டிரைவர் கிட்ட இதே மாதிரி எத்தனை மணிக்குப் போகும்ண்ணு எத்தன வாட்டிக் கேட்டிருப்பீங்க... "

"அது.. "ட்ரவுசர் கொஞசமாய் சிரிப்பை சிந்தியது.

சரி.. பிளைட் ஏறும் போது பைலட் கிட்ட போய் இதேக் கேள்வியைக் கேட்டு இருக்கீங்களா?

"இல்ல அது..." டிரவுசர் அசடு வழிய நின்றார்.

ஓட்டுனர் தம் புகையை மேலே ஊதிட்டு டிரவுசரை ஆழமா ஒரு எகத்தாளப் பார்வைப் பார்த்தார்.
அப்புறம் அவர் இப்படி சொல்ல நினைத்து இருக்கலாம்...

" ட்ரெயின் டிரைவர், பிளைட் பைலட் இவங்க கிட்ட எல்லாம் கேட்காம.. என்கிட்டே மட்டும் __________(FILL UP THE BLANKS READERS)

டிரவுசர் பேசாமல் வண்டியில் ஏறினார்.

நான் மெதுவா டிரைவர் பக்கம் மெதுவாய் போய்...
"அண்ணா உங்களுக்கு எந்தூருண்ணா?" அப்படின்னு கேட்டேன்.
"நமக்கு சூலூர்ங்க"

விளங்கிருச்சு சாமி விளங்கிருச்சு...கோயம்புத்தூர் குசும்பு என்னன்னு விளங்கிருச்சுங்கோ...உங்களுக்கும் விளங்கிருச்சாங்க?

Friday, August 18, 2006

சும்மா ஒரு தசவாதாரப் பதிவு

வணக்கம்ங்க...

போன தடவை உங்களை எல்லாம் சீரியல் எடுக்குறேன்னு சொல்லி கதைச் சொல்லிட்டுப் போனதுக்கு அப்புறம் இந்தா இப்போத் தான் மறுபடியும் கச்சேரிப் பக்கம் வர்றேனுங்க.

கச்சேரியில்ல என்னப் பண்ணாக் கலகலக்கும்ன்னு பிலீங்கா திங்க் பண்ண ஆரம்பிச்சக் கேப்ல்ல நம்ம சரா ஊருக்கு வாங்கன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டிட்டு எஸ் ஆயிட்டாரு. வயக்காட்டுப் பக்கம் போலாம்ன்னு பார்த்தா விவசாயி கவிதையை விதைச்சுட்டு இலக்கியம் இலந்தைப் பழம்ன்னு நம்மை மிரட்டல் பாரவைப் பாக்க..

நான் பம்மி மெதுவா லாரி ஏறி ஹவேஸ் பக்கம் வந்தா அங்கே நம்ம மக்கள் கையிலே கேமராவும் கையுமா அலையுறாங்க.. ஒருத்தர் போற வர்ற காரையெல்லாம் படம் புடிச்சுகிட்டு இருக்காங்க.. இன்னொருத்தர் ரோட்டோரமா அப்பிராணியாத் திரியற ஆடு மாடு ஓணான் பல்லி எல்லாத்துக்கும் கிட்டப் போய் நின்னுக்கிட்டு ... பிதாமகன் சூர்யா ஸ்டைல்ல சிரி சிரி சிரின்னு டயலாக் எல்லாம் பேசி பயமுறுத்திகிட்டு இருந்தார்.

ம்ம்ஹும் இதெல்லாம் நமக்கு சரிபடாதுன்னு முடிவு பண்ணிட்டு லாரி நின்ன இடத்தைப் பாக்குறேன்...

ஆகா.. நல்ல ஐடியா.. அது ஒரு சினிமா தியேட்டர்... சரிடா இந்தப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதி ஒரு மதன் ரேஞ்சுக்குப் போயிட வேண்டியது தான்ன்னு பீல் பண்ணிட்டு முளைக்காத தாடியை எல்லாம் ஸ்டெடி பண்ணிகிட்டு.. தியேட்டர்குள்ளேப் போனா... ஆகா திமிராமா படம்.. படக்கென்னு நம்ம கொங்கு ராசாவும் வாத்தியார் இளவஞ்சியும் போட்டப் பதிவு எச்சரிக்கை நினைப்புக்கு வர டிக்கெட் எடுக்காமலே திரும்பிட்டேன்...

அட என்னத் தான் சாமி பண்றது.. பதிவுக்கு இவ்வளவு பில்டப் எல்லாம் கொடுத்தாச்சு...

அதே தியேட்டர்ல்ல விரைவில் வருகிறதுன்னு மூங்கில் தட்டியிலே ஒரு போஸ்ட்டர்...கொஞ்சம் உத்துப் பாக்குறேன்... நம்ம கலைஞானி படம்ங்க..இந்தா இம்புட்டு நேரம் என் பதிவை நேரம் காலம் போனது தெரியாமப் படிச்சுட்டுப் போக்கத்த பய பொழுது போகமல் எழுதி நம்ம உசுரை எடுத்துட்டான்னு நீங்க யாரும் சொல்லிடக் கூடாது இல்ல.. அந்த தட்டியில்ல இருந்த படம் உங்க பாரவைக்கு











என்னமா வேசம் கட்டுறாருப்பா இந்தாளு...

நான் முடிவு பண்ணிட்டேன் விமர்சனம்ன்னு ஒண்ணு பண்ணா அது இந்தப் படத்தைத் தான் பண்ணனும்ன்னு அது வரைக்கு விமர்சன ஆசைக்கெல்லாம் வெயிட்டிஸ் விட்டுட்டு இருக்க வேலையைப் பாக்கப் போறேனுங்க...

Thursday, August 10, 2006

தேன் கூடுப் போட்டிக்கு: தீவுகள்

















கூட்டமாகத் தான்
துவங்கினோம்...
போகிற போக்கில்.
போட்டி போட்டு..
நான் முந்தி...
நீ முந்தி என...
தற்சமயம்...
ஆங்காங்கே...
தனித் தனி தீவுகளாய்
நாம் கரையேறி நிற்க...
வாழ்க்கைக் கடலில்..
எங்கெங்கோ
மூச்சைத் தொலைத்து
மூழ்கும் நிலையில்
நம் உறவுகள்...

இக்கவிதையைத் தங்கள் வலைத்தளங்களில் விமர்சித்த நண்பர்கள் பாஸ்டன் பாலா மற்றும் எனது எண்ணம்
ஆகியோர்க்கு என் நன்றிகள்

Friday, August 04, 2006

உறவுகள் - தேன்கூடு போட்டிக்கு அல்ல

வணக்க்கம்ங்க.. போனத் தடவை நான் பின்னூட்டப் புயலாருக்குச் சொன்னக் கதையைக் கேட்டு மக்கள் கண்கலங்கி கண்டபடி பீலிங் ஆகி ராதிதிரி ரெண்டு மணிக்கெல்லாம் எஙக பக்கத்தூட்டு லேண்ட லைன் நம்பர் கண்டுபிடிச்சு போனைப் போட்டு என்னிய வர வைச்சு வாழ்த்து மழை பொழியற அளவுக்கு போயிடுச்சு.

தலைவர் ஆல்ப்ஸ் மலையிலே இன்னும் முழு ஓயவு முடியாத நிலையிலும்.... சங்கத்து மக்களின் அன்பு பிடியிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தவிக்கும் நிலையில் ஷூட்டீங் போவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது..

அந்தக் கேப்பில் அடுத்து என்ன செய்யலாம் எனத் தளபதியாரின் பதிவைப் படித்து விட்டு அட்டையாம் பட்டி பனமரத்தடியில் பதநீரில் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிய வண்ணம் நானும் நம்ம பாசக் கார அசோசிய்ட் சரவணனும் திங்க் பண்ணிகிட்டு இருக்கும் போது...

தட் டக் டக்ட்டகட் அப்படின்னு அந்த ஹய்டெக் ஹவேஸ்ல்ல சவுண்ட்...

"அண்ணே.. என்ன இங்கிட்டு? " அப்படின்னு சவுண்ட்.

கேட்ட கொரலா இருக்கேன்னு பத்நீரைப் படக்குன்னு குடிச்சுட்டு எழும்பிப் பார்த்தா அட நம்ம பாண்டி... பாண்டிக்கு பக்காத்துல்ல படா ஸ்டைலா கையிலே லாப் டாப் எல்லாம் வச்சுகிட்டு படு கிளாமரா ஒருத்தர் உக்காந்துகிட்டு இருக்கார்.

ஆரா இருக்கும் அந்த மச்சகார மன்னாருன்னு நம்ம மனசுக்குள்ளே திங்க் பண்ணும் போதே நம்ம மனச்சாட்சி டக்குன்னு பேசிருச்சு..
அட நம்ம சரவணன் தான்.. டபக்க்ன்னு..

"ஏனுங்கண்ணா.. அந்தப் பொட்டிக்குள்ளே இருந்து தலையை வெளியே எடுக்கவே மாட்டீங்களா.. ஆருண்ணா நீங்கன்னு" அலறலாய் கேட்டான்.

'தேவண்ணா உமக்கும் உம்ம கூட புதுசா இருக்க அஸ்க்கும் ( அதான் அசோசியேட்டாம்) ரொம்ப நக்கலாப் போச்சு... இது யார் தெரியுமா.... " ன்னு பாண்டி ஆரம்பிக்கவும் முன்னாடி அந்த ஸ்டைல் பார்ட்டி கையிலிருந்த லாப் டாப் மெகா சவுண்ட்ல்ல பாட ஆரம்பிச்சது..

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி.. விவசாயி.. விவசாயி...

டிராக்டரில் இருந்து டிராக் சூட் போட்டு குதித்த விவசாயி...
"ஹாய் கைஸ்... ஐயாம் விவசாயி..விவ்ன்னு கூப்பிடலாம்.. இல்ல வேளாண் தோழான்னு நீட்டி வாய் வலிக்க கூப்பிடலாம்.. இட்ஸ் யுவர் விஷ்" எனறார்..

"ஆகா விவசாயிங்கீரீங்கங்க.. ஆனா இப்படி மெகா ஸ்டைலா இருக்கீங்களே எப்படிண்ணா? " நம்ம சரா ஸ்லோவாக் கேட்டாப்பல்ல.

"ஹே விவசாயின்ன ஓடனே.. நீ என்னைத் தப்பா நினைச்சுட்டியா மேன்.. நான் பண்றது கார்ப்ரேட் விவசாயம்.."
"அப்படின்னா?"
" அது எல்லாம் உனக்கு இப்போச் சொல்ல முடியாதுப்பா..உன் பிரச்சனைக்கு வருவோம் இப்போ.."

" நம்ம விவ் அண்ணனுக்கு ஊரெல்லாம் கடலைக் காடு இருக்கு.. இப்போ உங்கக் கூட பேசணும்ன்னு சொன்னார்.. அதான் கூட்டிட்டு வந்தேன்.. நீங்க்ப் பேசற வரைக்கும் அண்ணன் அவிங்கக் கடலைக் காட்டைப் பூராவும் பாத்துக்கச் சொல்லி எனக்கு வேலைக் கொடுத்துருக்கார்"

அப்படின்னு சொல்லிட்டு பாண்டி கூலிங்கிளாஸ் எடுத்து மாட்டிகிட்டு டிராக்டரை ஓட்டிக்கிட்டு பறந்துட்டான்.

" அண்ணே.. அண்ணே.. கடலைக் காடு நான் கூட நல்லா பாத்துப்பேன்ண்ணே" எனப் பல்லைக் காட்டிய நம்ம பாசக்கார சராவைக் கெஞ்சிக் கதறி அடக்கிவிட்டு விவசாயியாரைப் பார்த்தேன்.

"ஆமா எங்களுக்கு என்னப் பிரச்சனை..?"

விவசாயி சிரித்தார். "தம்பிகளா... நீங்க பின்னூட்ட சூப்பர் ஸ்டாரை வச்சு படமெடுக்கக் கதைச் சொன்னவங்க தானே.."

"ஆமா.. ஆமா.." கோரஸாச் சொன்னோம்

"இப்போ அவர் படம் நடிக்கிற நிலைமையில்ல இல்லை.."

"ஆமா ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்"

'சீ..பேச்சைக் குறை... நான் சொல்லறதைக் கேளு.. படம் மட்டும் தான் எடுப்பீயா.. இல்ல சிரியல்ண்ணாலும் ஓ.கேவா?"

ஆகா எதோ ஒளி தெரியுதேன்னு நானும் தம்பி சராவும் கொத்ஸ் பதில் சொல்லற வரைக்கும் கிடைச்ச கேப்ல்ல இந்த விவசாயி ட்ராக்டர்ல்ல ஏறிட வேண்டியது தான்னு முடிவு பண்ணிகிட்டோம்.

"தம்பி பின்னூட்ட புயல் எல்லாம் வருசத்துக்கு ஒரு பதிவுப் போட்டாலும் நீ இரண்டு வருசத்துக்கு இருநூறு பதிவுப் போட்டுப் பாக்குற பின்னூட்டத்தை எல்லாம் அந்த ஒரு பதிவுல்லப் பாத்துருவார்.. சோ.. நீ நான் எடுக்கப் போற சீரியலுக்கு ஒரு நல்ல கதை இருந்தாச் சொல்லு கேட்போம். ஒரு இரண்டு எக்கரா நிலததை வித்தாவ்து உன்னிய மாதிரி திறமைக் காரனை முன்னுக்குக் கொண்டு வர்றதுன்னு இந்த விவசாயி முடிவு பண்ணிட்டானாப்பா"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" விவசாயியாரின் பாசததைக் கண்டு என் கண்ணுல்ல ஜலம் பொங்கி வழியுது. சரா ஒரு தம்பளர்ல்ல அந்தத் தண்ணியைப் பிடிச்சு வச்சுகிட்டான்னாப் பாருங்களேன்.

"அட என்ன கன்னு நீ.. சிரீய்ல்ல மத்தவங்க தான் அழுவோணும்.. நீ எல்லாம் அழுவக் கூடாது... உனக்கு பத்து நிமிசம் டைம் அதுக்குள்ளே நல்ல கதையாச் சொல்லுக் கேட்போம்"

"ஏங்கண்ணா.. என்ன மாதிரி கதை வேணும் உங்களுக்குன்னுச் சொன்னீங்கண்ணா சொல்லுவெனுங்க.."

" அடக் கன்னு தலைப்பைக் கேக்குறீயாக்கும்,.. ம்ம் அந்தா அந்த தேன்கூடு இருக்க மரம் தெரியுதா..?"

"நல்லாத் தெரியுதுங்கண்ணா"

"அந்த மரத்துக்கு கீழே எதோ போஸ்ட்டர் இருக்கு அது கண்ணுக்குத் தெரியுதா?"

"ஓ! என்னங்கண்ணா. நல்லாத் தானுங்கண்ணா தெரியுது"

"அதுல்ல என்ன எழுதியிருக்கு?"

உற்று பார்த்துவிட்டு "உறவுகள் அப்படின்னு எழுதியிருக்குண்ணா"

"நான் கன்னு சிறு வ்யசுல்லயே லண்டன் செர்மனி சப்பான்னு ஒலக விவ்சாயம் பாக்க போனதில்ல தமிழ் படிக்க நேரமில்லாமப் போச்சு கன்னு.. இப்போ எல்லாம் ஸ்பானீஷ்ல்ல எழுதி வச்சுத் தான் கன்னு தமிழ் படிக்கிறது..சரி கன்னு நீ அந்தத் தலைப்புல்லயே ஒரு கதை சொல்லு... இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம்.. ஆமா சொல்லிட்டேன்..."


"ஒரு அருமையானக் கதை இருக்குங்கண்ணா...வேளாண் தோழர் விவசாயி அளிக்கும் உறவுகள்..பேக்கிரவுண்டல்ல உறவுகள் உறவுகள் ஜில் ஜில்ன்னு உங்களுக்குப் பிடிச்சக் கன்னத்தில் முத்தமிட்டால் டியூன்ல்ல ஒரு பாட்டு போடுறோம்.. அஞ்சு நிமிசம் ஓடிப் போகுது..

விவசாயி லாப் டாப் திறந்து சாலிடேர் விளையாட ஆரம்பிக்கிறார்.

"தோட்டம் மாதிரி ஒரு வீடு.... அங்கேத் தான் கதை நடக்குது... ஆரம்பத்துல்ல அந்த் வீட்டுல்ல எல்லா ரூம்ல்லயும் எல்லாரும் சிரிக்கிறாங்க.. சிரிப்புச் சத்தமாக் கேக்குது.. மாறி மாறி சிரிக்கிறாஙக.. இப்படி ஒவ்வொரு ரூமா ஒரு 10 வாரம் காட்டுறோம்.. அப்புறம் சிரிக்கிறவங்களை தனி தனியா இன்னொரு பது வாரம் காட்டுறோம்... "

விவசாயியார் லாப் டாப்ல் இன்னும் மும்முரமாய் மூழ்குகிறார். சரா நோட் பேட் திறந்து அதில் நோட் பண்ணி கொள்கிறான்.

"இங்கே கதையிலே பெரும் டர்னிங் பாயிண்ட்... சிரிச்சவங்க சைலண்ட் ஆகி அப்படியே திரும்பி நிக்குறாங்க... ஒவ்வொருத்தராத் திரும்பறதை ஒரு 20 எபிசோட் காட்டுறோம்.. "
"தேவு ஸ்லோ மோஷ்ன் வைப்பா.." சரா எடுத்துக் கொடுக்க நாம் சராவின் மீது பாசம் கொண்டு கண் கலங்க...

"தேவு நோ சில்லி பிலீங்க்ஸ் கதைச் சொல்ல இன்னும் மூணு நிமிஷம் தான் பாக்கி கன்டினியூ" எனச் சரா கடமை உணர்வின் எல்லைக்கேப் போய் நிற்க நான் கொஞ்சம் பதறி விடுகிறேன்.

"ஆங் டர்னிங் பாயிண்ட் முடிஞ்ச ஓடனே... எல்லாரும் ஒரே குரல்ல ஓ அப்படின்னு அழுவுறாங்க..."

இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர்ல்ல தலையை விட்ட விவ் டக்கென்று தலையைத் தூக்கி ஆர்வமாய் நம்மைப் பார்க்கிறார். நமக்கும் சந்தோசம்.

"அவங்க ஏன் அழுவுறாங்க ஆடியன்ஸ் மத்தியிலே ஒரு பயங்கரக் கேள்வி இருக்கும்.. அது தான் கதை... அதுக்குப் பதில் தேடி அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு வீதியா அலைவாங்க... ஆமா அப்பா ஏன் அழுவுறாருன்னு அம்மாவும்.. அண்ணன் ஏன் அழுவுறார்ன்னு அண்ணியும்.. தங்கச்சி ஏன் அழுவுதுன்னு தம்பியும் ..லண்டன் , செர்மனி, சப்பான்னு நீங்க சிறு வயசுல்ல விவசாயம் பார்த்த எல்லா ஊர் வீதியிலும் அலையறாங்க... அழுவுறாங்க...."

சரா மெதுவா நம்ம கிட்ட "ஏய் தேவு.. ஆமா அடுத்த ரூம்ல்ல இருக்கவன் அழுவுறதைக் கேட்க கடல் தாண்டி அலையறதுக்கு என்னய்யா சம்பந்தம் இருக்கு.."

"அந்த ஊரு எல்லாம் நான் மேப்ல்ல கூடச் சரியாப் பாத்தது இல்லப்பா.. இப்படி கதைச் சொல்லி கிளம்புனாத் தான் உண்டு.. உன்னியும் கூட்டிட்டுத் தான் போவேன்.. அதுனால கம்முன்னு கதை கேளு"

விவசாயி மிகவும் ரசித்துக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.

"இப்படி ஒரு அழுகையால பிரிஞ்ச உறவுகள் ஒரு கட்டத்துல்ல அமெரிக்காவில்ல சந்திக்கறாங்க.. அதுக்கு முன்னாடி அவங்க எப்படி அமெரிக்காவுக்கு வந்துச் சேர ஓலகமெல்லாம் இருக்க நாடுகளை எப்படி எல்லாம் சுத்தி சுத்திக் கஷ்ட்டப்படுறாங்க அப்படிங்கறதை தமிழ் மக்கள் கண்ணீர் வெள்ளத்துல்ல நீந்துற மாதிரி சொல்லப் போறோம்ங்கண்ணா"

"உறவுகளின் மகத்துவம் யாரும் இப்படி சொல்லியிருக்கவே முடியாதுண்ணா"
கதைச் சொல்லும் நேரம் முடிய ஆவலாய் விவசாயியை நாம் பார்க்க... அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து வரப்பினில் ஓடத்துவங்கியது... ஆகா கதைச் சொல்லி விவ்சாயம் பண்ணிப்புட்டோம்யான்னு நானும் சராவும் ஆனந்தத்தில் ஆடிப் போய் நின்றோம்ய்யா.

"கதையைப் பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லீங்களேன்னு நாம் இழுக்க...
"என்ன கன்னு என் கண் கலங்கிப் போயிருச்சு.. இன்னும் நான் என்னத்தச் சொல்ல..."

"அப்போ கதைக்குத் தேவையானப் புள்ளங்க செலக்ஷன் ஆரம்பிச்சுரலாமா?" அப்படின்னு கேட்டக் கொரலு வந்தத் திசையைப் பார்த்தால்... அட நீங்க நினைச்ச அவரேத் தான்.

"ஆங் அதெல்லாம் நம்ம ஊரு புள்ளங்களையே சொல்லிரலாம்... நான் பாத்துக்குறேன்..."
"அட்வான் ஸ் கொடுத்தா.. நல்லாயிருக்கும்.." நாம் மண்டையைச் சொறிய...
"அட கன்னு நான் என்னச் சொன்னேன்?"ரெண்டு எக்காரக் கதையை மறந்துட்டியா...?"

"அட ஆமாங்க..."
"எப்படி மறக்கலாம்.. அதைய வச்சுத் தானே உம் பொழப்பே நடக்கணும்"

"ஆமாங்க.. அந்த ரெண்டு எக்காரா நிலம் எங்கிங்க இருக்கு?"

"அட அது யாருக்குப்பாத் தெரியும் அவருக்கு மட்டும் தானே தெரியும்?"
"என்னது அவரா என்னங்கச் சொல்லுறீங?"

" ஆமா தம்பி அரசாங்கம் ஆளுக்கு ரெண்டு எக்கார நிலம் தர்றேஏனு சொல்லியிருக்கு.. கொடுத்த ஓடனே அதை வித்து எப்படியும் நாம் சீரியல் எடுக்கிறோம்.. எடுத்து சன் டி.வியிலே விடுறோம்"

"ஸ்ப்ப்ப்பாஆஆஆஆஆ" நானும் நம்ம அஸோசி சராவும் மயக்கமாகுறதுக்கு முன்னாடி கொடுத்த மெல்லிசைத் தான் இது.

டிஸ்கி: இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.. இவர் வேற எனபதைத் திட்டமும் தெளிவுமாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதிவும் கற்பனையே.. கற்பனை மட்டுமே....மீண்டும் சந்திப்போம் அது வரை ஹேப்பி வீக் என்ட் மக்கா..

tamil10