Wednesday, January 26, 2011

கச்சேரி டெக்னாலஜிஸ் - கேப்டன் விருதகிரி


கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே சுத்திப் போட வேனும்ய்யா சின்னக் கவுண்டரே பாட்டு போட்டு ஒரு குரூப்பே திரண்டு நிக்க அவங்களே எல்லாம் வெளியே நிறுத்திட்டு உள்ளே வருகிறார் கேப்டன்

வருவேன் வந்துகிட்டே இருக்கேன் ஆன் த வேயில்ல இருக்கேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன் வந்து சேந்துட்டேன் இன்டர்வியூக்கு...

புயல் அடிச்சி இவஙக போட்ட ரோடு டேமேஜ் ஆகும்
ஆனா கேப்டன் சொல்லி அடிச்ச கோடு ஒரு நாளும் டிபெக்ட் லீக்கேஜ் ஆகாது


ஏய் மூக்குக்கு கீழே முக்கா இஞ்ச்க்கு புதர வைச்சிருக்கியே தலையிலே வெளுத்து பல வருசமான தொப்பியை தொங்கப் போட்டிருக்கியே நீ தான் இந்த கம்பெனிக்கு ஓனரா...நான் தான் உங்க கிட்ட போன்ல்ல பேசுன கேப்டன்..உங்க பேர் என்ன?

ஏம்ப்பா மூச்சை பிடிச்சு தமிலை இப்படி வலைச்சு வலைச்சு பேசுறீயே என் பேர் என்னாண்டு முன்னாடி போர்ட் எல்லாம் போட்டு வச்சிருக்கேனே பாத்து படிக்கக் கூடாதா வண்டு முருகன் பதில் கேள்வி கேக்க

இது தமில் நாடு இங்கே செம்மொழி மாநாட்டுக்கு ஊருக்கு ஊர் கட் அவுட்ல்ல வெளம்பரம் வைப்பாயங்க வெளம்பரத்துல்ல வெள்ளைக்கார தொரைக் கணக்கா பாட்டெல்லாம் போடுவாயங்க..ஆனா ஒரு முணு அங்குல போர்ட்ல்ல உம் பேரை தமில்ல எழுதணும்ன்னு உனக்கு சொல்ல அரசாங்கத்துக்கு அருகதை இல்லை...இது என்ன மொலி..

போர்ட்டை கையிலே எடுத்து கேப்டன் கொந்தளிக்க

அப்பு இது ஆங்கிலம் அப்பு....வெள்ளக்கார கிளையண்ட் எல்லாம் வந்தா அவனும் படிக்கணும் இல்ல அதான் அப்பு அப்படி

தமில்ல எனக்கு புடிக்காத ரெண்டாவது வார்த்தை ஆங்கிலம்.... கண்களை பெரிதாக்கி பல்லை நறநறவென கடித்த கேப்டன் கோலம் கண்டு கதறும் வண்டு கோஸ்ட்டி எல்லா போர்ட்களையும் எடுத்து ஒளித்து வைக்கின்றனர்

ஏய் ஆட்டுத் தாடி வச்சுருக்கியே...போன்ல்ல என்னக் கப்பலுக்கு கேப்டனா இல்ல எந்த ஐபிஎல் டீமுக்கு கேப்டன்னு கேட்டவன் நீ தானடா...கேப்டன் விரல் சொடுக்கி கேட்க

அய்யோயோ கேப்டன் உங்களை யாரோ கலாய்க்கறாங்களாம அதுவும் என் வாய்சை மிமிக்கிரி பண்ணி...நான் எல்லாம் புள்ள பூச்சி...வாங்குற அமவுண்ட்க்கு மேல வாய்ஸை வேஸ்ட் பண்ணுரதில்ல

இங்கே பாரு நான் மதுரக்காரன்டா மேக்கப் போடமா நான் மேடை ஏறுனா கருப்பு எம்.ஜி.ஆர்...

மீதியை நான் சொல்லுறேன் கேப்டன்...அப்படியே லைட் மேக்கப் போட்டு சவுண்ட் விட்டீங்கன்னா பிரவுன் எம்.ஜி.ஆர், இன்னும் கொஞ்சம் ஹெவி மேக்கப் போட்டு கிளம்புனீங்கன்னா சிவப்பு எம்.ஜீ.ஆர், பம்பு செட்ல்ல போய் பச்சத் தண்ணியிலே குளிச்சி எழும்பினீங்கன்னா பச்சை எம்.ஜீ.ஆர், லைட்டா கோகுலம் பூசு மஞ்சத் தூள் போட்டா நீங்க மஞ்ச எம்.ஜீ.ஆர், வெள்ளாவியிலே வச்சு உங்க எதிரிகளை வெளுத்து அனுப்பும் போது நீங்க ஓயிட் எம்.ஜி.ஆர். அப்புறம் சவுக்கார் பேட்டையிலே சேட் வீட்டுல்ல ஹோலி கொண்டாடும் போது அந்தப் பக்கம் போனீங்கண்ணா ஆல் கலர் எம்.ஜி.ஆர் நீங்க தான். கரெக்ட்டா கேப்டன்

தம்பி ஓவராப் பேசுற....இன்டர்வியூ முடியட்டும் அப்புறம் உன்னப் பாத்துக்குறேன் ஆங்.. ஹலோ நீங்க எங்க ஊர்ல்ல பெட்ரோ மாக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருந்தவர் தானே...

ஆமாண்ணே ... செந்தில் தானாக வந்து ஆஜராக

ஹலோ சேப்டி பின்

அண்ணே ..சேப்டிபின் இல்ல கேப்டன்...

ஆங் கேப்டன்..யூ பார் மிஸ்டேக்...அது நான் இல்ல ஊருக்குள்ளே பல பேர் இப்படி தான் ஏமாந்துப் போயிடறாங்க அவன் வேற நான் வேற..அவன் அவன் தான் நான் நான் தான் நீங்க நீங்க தான்...அவன் நானாக முடியாது நான் அவன் ஆக முடியாது நீங்க வேறு யாராவுமே ஆக முடியாது ஓகேவா டோக்கன்

அண்ணே டோக்கன் இல்லண்ணே கேப்டன் கேப்டன்

ஆங் சாரி கேப்டன் கேப்டன்

ம்ம்ம் இங்கே எதுவுமே சரி இல்ல எல்லாத்தையும் மாத்தணும் மாத்துவேன் முதல் மாத்தம் இப்போவே இன்டர்வியூ நீங்க எடுக்கக் கூடாது நான் தான் எடுப்பேன்...உங்க கையிலே கம்பெனி இருக்குதுங்கறதுக்காக யாரை வேணும்னாலும் இன்டர்வியூ பண்ணுவீங்களா...அதெல்லாம் என் கிட்ட நடக்காது சொல்லிட்டேன்..

அலோ பேட்மின்டன்

அண்ணே கேப்டன் கேப்டன்

ஆங் ஓகே கேப்டன் காலம் காலமா அப்படித் தானே நடக்குது கம்பெனி வச்சுருக்கவங்க தானே இன்டர்வியூ எடுப்பாங்க வர்றவங்க தான் பதில் சொல்லணும் நீங்க சொல்லுரது விவரம் புரியாதவன் பேசுற டூபாக்கூர் டயலாக் மாதிரி இல்ல இருக்கு

யாருக்கு விவரமில்ல உங்க கம்பெனி பேரி க்ச்சேரி டெக்னாலஜிஸ் அதுல்ல இருக்கது 10 எழுத்து..அதுல்ல டாப்ல்ல இருக்க பேர் மொத்தம் மூணு இந்த கம்பெனி பில்டிங்க்ல்ல மொட்டை மாடியோட சேத்து மொத்தம் 8 மாடி.. அதுல்ல இருக்க மொத்த படிக்கட்டு மாடிக்கு 16ன்னு மொத்தம் 128... இங்கே இருக்க கக்கூஸ் மொத்தம் மாடிக்கு மூணுன்னு 24 அதுல்ல ஆண்கள் 12 பெண்கள் 12 உங்க ஆபிஸ்ல்ல இருக்க மொத்த காபி மெசின் 20 அதுல்ல 19 வேலை செய்யாது வேலை செய்யுற ஒண்ணும் உங்க ரூம்புல்ல இருக்கு வேலைக்குன்னு வர்றவன் மொத்தம் 400 பேர் அதுல்ல வேலை செய்யுறவன் உங்களையும் சேத்து யாருமில்ல மொத்த வேலை நாள் வருசத்துக்கு 200 அதுல்ல லீவுன்னு போறது இன்னொரு 100 சம்பளம்ன்னு நீங்க சொன்னது மாசத்துக்கு 42 கோடி இது வரைக்கும் வச்சிருக்க சம்பள பாக்கி 87 கோடி....

சூப்பரப்பு டாப்டென் ஆல் இன் ஆல் விசிலடிக்க

அண்ணே கேப்டன் கேப்டன்

அட டீகெட்டில் வாயா அண்ணன் கண்டுக்க மாட்டார்டா அவர் நம்மாளு....எப்புடி அவுத்து விடுறார் பாரு கம்பெனி ரகசியத்தை....அட்ரா சக்க அட்ரா சக்க

பாஸ் நம்ம கம்பெனி ரகசியம் தெரிஞ்ச இவரை வெளியே விட்டா நமக்கு நல்லதுல்ல ஓடனே யு ஆர் அப்பாயிண்டெட் சொல்லி கட்டிப் புடிச்சு ஒப்ரு போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துருவோம் அது தான் நமக்கு சேப்டி

ஆங்...தலதளபதி நீ கருத்தாப் பேசுற புள்ள நீ சொன்னா ஒரு கருத்து இருக்கும்...ம் கரெக்ட் பண்ண்டுறேன்

கேப்டன் இவ்ளோ வெவரமானவரு நீங்கன்னு புரியாம போயிருச்சி வாங்க இனிமே நாம எல்லாம் கூட்டா வேலை செய்வோம் வாங்க வண்டு பாசம் காட்டி எழுந்து நிக்க

ம்ம்ம் நிறுத்துங்க....என் கூட்டணி ஆண்டவனோடயும் மக்களோடும் தான்.... உங்க கூட எல்லாம் கூட்டணி வைப்பேன்னு நினைச்சீங்களா.....

கேப்டன் சாப்ட்வேர் புராஜக்ட் எல்லாம் டீம் ஓர்க் இல்லாம பண்ண முடியாது கேப்டன்

ஆமா கேப்டன் தலதளபதி கருத்தாப் பேசுவாப்பல்ல சொன்னாக் கேளுங்க

நீங்க எல்லாம் தப்பானவங்க...மக்களுக்காக உழைக்க கிளம்புன என்ன அவமதிச்சு இருக்கீங்க...இடிப் பட்டு இருக்கேன்...அடிப் பட்டு இருக்கேன்...

கேப்டன் எதோ தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போன பிகர் மாதிரி இடி பட்டேன் அங்கே சரவணா ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பண்ணி அடிப்பட்டேன்ங்கற மாதிரி பேசுறார்

தலதளபதி வண்டு காதில் கிசுகிசுக்க கேப்டன் மிகவும் கொதிக்கிறார்


நீங்க என்னை இந்த இன்டர்வியூல்ல தேர்ந்து எடுக்கல்லன்னாலும் மக்கள் என்னத் தான் தேர்ந்து எடுப்பாங்க நான் அவங்க கிட்டெ பேசிக்கிறேன் அப்புறம் உங்க கிட்டப் பேசிக்கிறேன்....

அப்போ.... வீ வில் மீட்....

...வில் மீட்....

...மீட்....

எக்கோ எபெக்ட் அதிர கன்னச் சதைகள் காரண்மின்றி துடிக்க கேப்டன் கிளம்புகிறார்

பயபுள்ள கடைசி வரைக்கும் நம்மளை ஒத்தக் கேள்விக் கூட கேட்க விடல்லய....ஏன்டா இப்படி வண்டு முருகன் உருகி நிற்க

பாஸ் இதுக்கே இப்படி நின்னுட்டா எப்படி அடுத்து ஒரு சூப்பர் சுறா வருது பாத்துங்க சுறா சிங்கிளா வராது அவங்க் டேடி சுறாவையும் கூட்டிட்டு தான் வருவேன்ங்குது.... பாத்துங்கண்ணா தலதளபதி டெரர்படுத்த இந்த எபிசோட் முடிகிறது

Tuesday, January 25, 2011

கச்சேரி டெக்னாலஜிஸ் ஆரம்பம்

ஸ்ப்பப்ப்பா டேய் வக்கீல் வண்டு முருகனா வாய்தா வாங்கி வாழ்க்கை நடத்திகிட்டு இருந்த என்னை வட்டச்செயலாளர் வண்டு முருகனா மாத்தி வாழ்க்கையிலே உசுத்தோரும்ன்னு உசுப்பி உசுருக்கு உத்தரவாதம் இல்லாம ஆக்கி நடுத்தெருவுல்ல நிக்க வுட்டாங்க..ஆரு பெத்தப் புள்ளயோ நீ நண்பேன்டா கைக்கொடுத்து அன்டர்வேர் கிழிஞ்சாப் போவுது உங்களுக்கு ஆப்டா ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைங்கன்னு ஒரு ஐடியாவும் கொடுத்து எனக்கு ஒரு வழிகாட்டுனா நீ தான்டா உண்மையானத் தலதளபதி

தலதளபதி புகைப்படம் முன் நின்னு பயபக்தியா மைன்ட் வாய்ஸில் பேசி முடித்து டக்குன்னு திரும்புனார் நம்ம வண்டு முருகன்
வண்டு முருகன் - நிறுவனர் கச்சேரி டெக்னாலஜிஸ்

பாஸு தீயா வேலைப் பாக்கணும் அப்புரேசல் டைம்.. அப்படின்னு பிளோர்ல்ல எதிர்பட்டவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் பண்ணிகிட்டே கேபினுக்குள் நுழைந்தார் நம்ம தலதளபதி

தலதளபதி - நிர்வாக இயக்குனர் - கச்சேரி டெக்னாலஜிஸ்

ஏய் மார்க் உன் பக்கெட்ல்ல பிக்ஸ் பண்ண எவ்வளவு டிபெக்ட் இருக்குன்னு பாருடான்னா அந்த புதுசா வந்த கேரளா ரெக்ரூட் ஜாக்கெட்ல்ல ஜன்னல் வச்ச எபெக்ட்டை பாத்துட்டு இருக்கே பிச்சுபுடுவேன் பிச்சி

டேய் லச்சு உன் ரெஸ்யும் வச்சு நீ டெவலப்பரா டெஸ்ட்ரா டிபிஏவான்னு எதுவும் கண்டுபிடிக்க முடியாமத் தான் உனக்கு வேலைக் கொடுத்தோம்..அட்லீஸ்ட் வேலைக்குச் சேந்தப் பின்னாடியாவது கண்டுபிடிக்கலாம்ன்னு ஒரு நப்பாசை ஆனா மூணு வருசமா இன்னும் கண்டுபிடிக்கமுடியல்லயேடா போய் வாங்குற சம்பளத்துக்கு அந்த கம்ப்யூட்டரையாவது துடைச்சு வை போ

டேய் காதர் பெஞ்ச் கண்டுபிடிக்குற காலத்துக்கு முன்னாடியா குத்த வைக்க கல் கண்டுபிடிச்சு அதுல்ல சீட் தேய்ச்ச பரம்பரையிலே வந்தவனே இந்த வ்ருசமாவது எதாவது புராஜ்க்ட்ல்ல எதாவது வேலை செய்டா

ஏய் ஆன்டிரியா ஆபிஸ் போனை ஆன் சைட் காலுக்கு யூஸ் பண்ண சொன்னா நீ சைட் அடிக்குற ஆணுக்கு எல்லாம் போட்டு பில்லை ஏத்துறதை நிறுத்திட்டு கோடு அடிம்மா

ஹல்லோ ஹாப் பாயில் அர்னால்ட் அந்த அவிஞ்ச மண்டைல்யிலே வச்சுருக்க விக்கை பிக்ஸ் பண்றதை கொஞ்சம் ஒதுக்கிட்டு குயு ஏ டீம் போட்ட பக்கை பிக்ஸ் பண்ணு இல்லன்னா இந்த மாசம் சம்பளம் கட் கறாராச் சொல்லிட்டேன்.

ஆகா இப்ப்டி ஒருத்தன் மட்டும் என் கம்பெனியில்ல இல்லன்னா என் கம்பெனி எப்படி வெளங்கும் ஆண்டவா நீ இருக்கப்பா நீ எங்கே எப்படி இருக்கியோ தெரியல்ல ஆனா எனக்கு நீ இந்த தலதளபதி ரூபத்துல்ல தான் அவதாரம் எடுத்துருக்கே அம்புட்டு தான் சொல்லிட்டேன் கண்ணீர் மல்க தலதளபதியை பாத்து வண்டு கையெடுத்து நிக்க

பாஸ் நோ சில்லி பிலீங்க்ஸ் நீங்க என் நண்பேன்டா பாஸ் பாத்த உடனே பிக்ஸ் ஆயிடுச்சு மனசுல்ல அதுனால உங்களுக்காக என்ன வேணும்ன்னா செய்வேன் பாஸ்

அவ்வ்வ்வ்வ்வ்வ் வண்டு நீட்ட

ஏய் பிளாக் பீ மவுத்தை க்ளோஸ் பண்ணு அது ஓப்பன் ஆனா லெவல் பாத்தா ரோட்ட்ல்ல போற எருமை எதாவது புதுசா வெட்டுன குட்டைன்னு குதிச்சுரப் போவுது

வாங்க ஆல் இன் ஆல் அழகு..என்ன லேட் தலதளபதி பக்குவமாய் வணக்கம் வைக்க

ஆல் இன் ஆல் அழகுராஜ் - HUMAN RESOURCES MANAGER

அது என்னடா பேர் தலதளபதின்னு....மங்கத்தா ச்பதம் எதாவது நிறைவேத்த போருக்கு போனீயா...

அது இல்லங்க ஆல் இன் ஆல் தல தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான உறுப்பு...

ஏய் நான்சென் ஸ் ஆப் இன்டியா... இந்த தோள் முக்கியமில்லையா...இந்த கை முக்கியம் இல்லையா...இந்த முதுகு முக்கியம் இல்லையா....கால் முக்கியம் இல்லையா..அதை விட இந்த...

நோஓஓஓஓஓஓ நீ அடுத்து சொல்லப் போறதை நான் அனுமதிக்க மாட்டேன்..இது கவுரமானவங்க வந்து போற இடம் நெவர் ...என்று எரிமலையாகி வண்டு கொந்தளிக்க

ஏன் நான் அடுத்து சொல்ல வர்ற விசயம் உங்க கிட்ட இல்லையா அது கொந்தங்களிக்குறீயா ட்ரங்கன் மாங்க

ஆஆஆஆ ஆல் இன் இல் லாஸ்ட் வார்னிங்க் ஸ்டாப் த் ட்ர்டி டாக்கிங் இன் மை ஆபிஸ் ஆப் த சாப்ட்வேர் அன்ட் ஹார்ட்வேர் அ த ஆங்கிரி இன் த இங்கில்லிஸ் டெல்லிங் யூ

அட என்னப்பா அவன் கிட்ட இல்லாத மூளையைப் பத்தி பேசுனா இவ்வளவு டென்சன் ஆவுறான்...

என்னது மூளையா....நான் கூட வேற எதோன்னு நினைச்சுட்டேன்..சரி சரி நாம யார் நம்ம லெவல் என்ன நம்ம ஹிஸ்டிரி ஜாக்கிரபி எல்லாம் இவங்களுக்கு தெரியும்...இப்போ வந்த வேலையைப் பாப்போமா

ஓகே...அயாம் ஆல் இன் ஆல் அழகுராஜ் இந்த இவ்வளவு பெரிய கம்பெனியிலே ஒரே எச்.ஆர் மேனேஜர் தலதளபதி நீ அந்த பார்க்கிங் டாக்குக்கு அப்போ அப்போ பிஸ்கட் போடுற அள்ளகை அந்த டாக் இந்த கம்பெனியோட ஓனர்... அவன் இந்த கம்பெனியை எப்படி வாங்குனான் எனக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும்

ஊருக்கே தெரியுமா அது பேக்கரி வாங்குன கதை தானே....இந்தக் கதையை நான் யாருக்குமே சொல்ல்ல்லயே இது எப்படி வெளியே வந்துச்சு... வண்டு மோவாக்கட்டையைத் தடவி யோசனையில் ஆழ்கிறார்

இங்கே பாருங்க ஆல் இன் ஆல் ஒரு பிசினெஸுன்னு இருந்தா நாலு டீலின் ந்டக்கும் அதுல்ல இந்த டீலிங் அவருக்கு பிடிச்சுருந்துச்சு கம்பெனியை அவர் வச்சுகிட்டார்...

போதும் நிப்பாட்டு வேலையைப் பாருங்க....மே மாசம் புராஜ்க்ட் வருது தமிழ் நாட்டுக்கே முக்கியமான புராஜ்க்ட்... கெஞ்சி கதறி கால்ல விழுந்து கான்டிராக்ட் வாங்கியிருக்கேன்.. ஒழுங்கா முடிச்சா கம்பெனி எங்கேயோ போயிரும்...

அதுக்கு வழி பாப்பீங்களா அதை விட்டுட்டு கணபதி ஐயர் கிட்டே எங்க குடும்பம் பண்ண டீலிங் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க வெக்கம் கேட்ட வெளங்காத பயல்களா

என்னது கணபதி ஐயர் அக்கா டீலிங் மட்டும் தானே ஊருக்கு தெரியும் மொத்தக் குடும்பமே டீலிங்க்கா பாஸ் அதைச் சொல்லவே இல்லையே...தலதளபதி கேக்க

ஆகா அதிகம் பேசி அசிங்கப்படாதேடா வண்டுன்னு சொன்னா உள் நாக்கு கேக்குதா...தன்னைத் தானே நொந்துக் கொள்கிறார் வண்டு

சரி..இந்த புராஜக்ட்டுக்கு மேனேஜர் வேணும்ன்னு கேட்டு இருந்தீங்க இல்ல...ரெஸ்யூம் குவிஞ்சு கிடக்கு...ஒண்ணு ஒண்ணு கூப்பிட்டு இன்டர்வீயூ எடுப்போம்...
முதல்ல டாப்டென் வறுத்தகிரி...

ஆல் இன் இல் டாப்டென் அப்படினனா சன் டிவியிலே வருமா அதுவா...அதுல்ல சினிமா படமில்ல காட்டுவாங்க

அது சாரிப்பா ஒவ்வொருத்தன் பேர் பட்டப் பேரு மட்டும் ஒரு மூணு நாலு பக்கத்துக்கு போவுதா அதான் குழம்பிட்டேன்.... கேப்டன் விருதகிரி...

ஓ அவரா நல்லாத் தெரியுமே....நெக்ஸ்ட் யாரு

முதல்ல இவரைக் கவனிப்போம் அப்புறம் மத்தவங்களைக் கவனிப்போம்

ஓகே டேய் கோமுட்டித் தலையா போய் விருதகிரியைக் கூட்டிட்டு வாடா...

அண்ணே இன்னிக்கு ஓட்டல் லீவு ..லீவு நாள்ல்ல இன்ட்ர்வியூ வைக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா...எங்கே போய் நான் வறுத்தகறி வாங்குறதாம்...

அடேய் டகால்டி வாயா...என்ன நக்கல் பண்றீயா..விருதகிரின்னு நான் வெளக்கமாச் சொன்னது உன் காதுல்ல வ்றுத்த கறின்னு கேட்டுச்சு...தம்பி இருடீ நாளைக்கு இவரு நம்ம தமிழ் நாடு புராஜ்க்ட்க்கு மேனேஜர் மட்டும் ஆவட்டும் அப்புரம் பாருடீ தமாசை...

அண்ணே அப்போ நமக்கு எல்லாம் பொழப்பு போயிருமாண்ணே...எல்லாம் தமாசையும் இவரே பண்ணிட்டா நாம என்னண்ணே பண்றது...

டேய் ட்ரீடாப் மண்டையா நீ சிரியசா பேசுறீயா இல்ல சில்மிசமாப் பேசுறீயான்னு தெரியல்ல இப்போதைக்கு குசுமபை கம்மி பண்ணிட்டு போய் கேப்டனைக் கூப்பிடு

கேப்டன் வரவுக்காக அனைவரும் கதவைப் பாத்து காத்திருக்கிறார்கள்..அப்போது மேசை மீது இருக்கும் தண்ணீர் குவளைகள் அதிர்கின்றன...மேசையே நகர்கிறது...திரைச் சீலைகள் காற்றில் பலமாக அலைகின்றன..சீலிங்க்கில் விரிசல் சத்தம் கேட்கிறது

தரையில் கார்பட் கதறுகிறது...

அய்யோ எதோ பயங்கரமான அசம்பாவிதம் நடக்கப் போவுது போல ஒரு ஆபத்து நம்மை நோக்கி வந்துகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் எல்லாரும் தாழ்வான பகுதிகளை நோக்கிச் செல்லுங்க தலதளபதி எச்சரிக்கை விடுத்தப் படி ஓடுகிறார்

கதவுக்கு பின்னால் இருந்து முரசு சத்தம் கேட்க சில் அவுட்டில் ஒரு தீப்பந்தம் பிடித்த கை தெரிகிறது...

அய்யோ நெருப்பு டோய் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜ் சவுண்ட் விட

ஒரு சின்ன பிரேக் விடுறோம்!!!

கேப்டன் விருதகிரி - MANAGER CANDIDATE 1 PROJECT TAMILNADU

கச்சேரி தொடரும்...இந்த வாட்டிக் கண்டிப்பா தொடரும்ங்கம் சுவத்து சுண்ணாம்பு எல்லாம் விழுகிறது....

tamil10