அரைச்ச மாவையே திரும்ப அரைச்சு அதையும் நாடே ரசிக்கல்ல...அட சிங்கம் எடுத்து அதையே திருப்பி போட்டு சிங்கம் 2 எடுத்தா ஓடுச்சுல்ல அதை மாதிரி தான் கேப் விட்டு சங்கம் போட்ட மாதிரி சங்கம் 2 போடலாம்ன்னு சங்கத்து நலன் விரும்பிகள் சமீபத்தில் ஆப்பிரிக்காவில்ல நடந்த சங்கத்தின் 5345வது உருப்படாத மாநாட்டில் கலந்து கொண்ட ஒர்ர்ரே தல முடிவு பண்ணி எங்களுக்கு மெசெஜ் அனுப்பி வச்சிருக்கார்...
தற்சமயம் தலைவா என்ற சிந்தனைக்கே செம பெண்டு காத்திருப்பதாக உளவு துறையின் உளறலான உண்மை உள்விவரங்களை அறிந்த தல அப்படியே அயல்நாட்டில் இருந்து தொடர்ந்து சங்கப் ஆற்றுவதாக ராஜதந்திர அறிக்கை விட்டுள்ளார்...
2014 இந்திய நாட்டுக்கு திரும்ப திட்டம் வைத்துள்ள தல..அது வரை பல அயல் தேசங்களுக்கும்...ஏன் அயல் கிரகங்களுக்கும் கூட சென்று நம் தாயகமாம் பாரத மணி திருநாடு முன்னேற பல வியக்கத் தகு செயல்பாடுகளில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்...
தற்சமயம் இந்த செய்தியை சங்கப் பலகையில் போடுமாறு ஒரு தாறுமாறான உத்தரவை தல பிறப்பித்துள்ளார்
இது முதற்கொண்டு சங்கம் பேஸ்புக்...ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இயங்கும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment