வணக்கம் மக்கா,
தீவாளிக்கு வந்தப் படத்துல்ல கிட்டத்தட்ட எல்லாப் படத்தையும் துட்டு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல்ல பார்த்து முடிச்சாச்சுன்னு இருந்தப்போ தான் யாரோக் கேட்டாங்க.. 'ஈ' படம் பார்த்தாச்சான்னு..
பள்ளிக்கொடத்துல்ல சில பாடங்கள் நமக்கு பிடிக்கிறதுக்கும் பிடிக்காமல் போறதுக்கும் காரணம் அந்தப் பாடங்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் முறை.. சில சமயம் மிகவும் கடினமான பாடங்கள் கூட எளிமையா சொல்லிகொடுக்கப்படுவதால் நமக்கு டக்குன்னு புரிஞ்சிடும்.. அதே டைப்ல்ல படிச்சவங்க, பாமரங்க, சின்னப் பசங்க இப்படிப் பலத் தரப் பட்ட சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ரொம்ப எளிமையா "பயோ வார்" (BIO WAR) அப்படிங்கற விஷயத்தை படமா எடுத்துப் புரிய வச்சுருக்கார்.
அறிவியலும்,அரசியலும்,பொருளாதாரமும் கலந்து கும்மியடிக்கும் பயோ வார் விஷயத்தை படம் பார்க்கும் ரசிகர்களை அதிகம் குழப்பாமல் ஒரு சில கதாபாத்திரங்களின் வழியாகவும் அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாகவும் ஒரு யதார்ததமான கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
காசுக்காக் எதையும் செய்யும் 'ஈ' கதாபாத்திரம் (கிட்டத் தட்ட நம்ம புதிய பாதை பார்த்தீபன் மாதிரி தான்) தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லத் தான்னாலும் ஜீவா அந்தப் பாத்திரத்தை செய்திருக்கும் விதம் ஈ மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திடுது கருணாஸ்க்கு மீண்டும் ஒரு லொடுக்கு பாண்டி பாத்திரம் கிடைச்சுருக்கு...இதுல்ல அவருக்கு பேர் டோனி. நயந்தாரா படத்தின் கதாநாயகி.. நாயகனைத் தமிழ் படங்களின் விதிப் பிசகாமக் காதலிக்கிறாங்க. படத்துல்ல அவங்க பேர் ஜோதி... ஒரு பார் டான்சரா வர்றாங்க.
ஆஷிஷ் வித்யார்த்தி டாக்டரா வர்றாரு..( இது என்னவோ தெரியல்ல டாக்டர்கள் ஸ்கீரினில் வில்லன்களாக் காட்டப் படும் சீசன் போல) ஏழைக் காவலனாய் இலவ்ச மருத்துவம் பார்க்கும் நல்லவனாய் வலம் வரும் ஆஷிஷின் மறுபக்கம் தான் படத்தின் கரு. வெளிநாட்டுகாரர்களின் பயோ வார் திட்டங்களுக்கு நம் இந்தியாவையும் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் சேரி வாழ் மக்களையும் ஆய்வுக் கூடமாகவும் ஆய்வுப் பொருட்களாகவும் மாற்றி அதன் மூலம் கோடிகளைக் குவிக்கும் ஆராய்ச்சியாளர் என கோரமான அவரது மறுபக்கம்.
பழைய இந்தி படங்களின் சாயலில், வில்லன் டாக்டர் ஆஷிஷ் வித்யார்த்தி கூடவே கிளுகிளுப்பா ஒரு நர்ஸை உலாவ விட்டிருக்காங்க.. அது கொஞ்சம் பொருந்தாத மாதிரி இருக்கு... இருந்தாலும் முன் பெஞ்ச் மக்கள் அந்த நர்ஸ் திரையில் வரும் போதேல்லாம் உற்சாகக் குரல் கொடுப்பது இயக்குனரின் வியாபாரப் பார்வையையும் காட்டுகிறது. டாக்டரின் கொடுஞ்செயல்களுக்கு அந்த நர்ஸ் எடுப்பு வேலைப் பார்க்கிறார்.
பசுபதி, இவருக்கு சேகுவேரா மாதிரி ஒரு வேடம். கொஞ்சமே வருகிறார். ஆனால் மனுசன் அழுத்தமாய் பதிகிறார். (பசுபதிண்ணா வெயில்ல உங்களை இன்னும் அதிகமா எதிர்பார்க்க வச்சீட்டீங்க). இவருக்கும் ஜீவாவுக்கும் கிளைமெக்ஸ் நெருக்கத்தில் நடக்கும் உச்சக் கட்ட உரையாடல்களில் சமுதாயச் சிந்தனைகளை அதிகப் பிரச்சார வாசம் இன்றி ஒலிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.
இது தவிர படத்தில் அஜய் ரத்னம், ராஜேஷ், பான்பராக் ரவி ஆகியோரும் வந்துப்போகிறார்கள். படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் ஜீவாவின் ஆயாவாக வரும் அந்த பாட்டி மனத்தில் நிற்கிறார்.
ஜீவாவின் நடிப்பைப் பத்தி சொல்லுணம்ன்னா.. மாப்பூ.. கமல்..விக்ரம்.. சூர்யா.. போய்ட்டுருக்க ரூட்ல்ல வண்டியை விட்டிருக்கார். நிறைய மெனக்கெட்டிருக்கார். அவர் மெனக்கெட்டதன் பலனை திரையரங்களில் ரசிகர்களின் கரகோஷ்மாய் நல்லாவே அறுவடைப் பண்ணிகிட்டு இருக்கார்.
நயந்தாரா ஜீவாவோடு போராடும் ஒரு காதலியாய் நல்லாவே செஞ்சு இருக்கார். சில காட்சிகளில் நடிப்புத் திறனைக் காட்டக் கிடைச்சக் காட்சிகளையும் நல்லாவே பயன்படுத்திகிட்டு இருக்கார்.
பாடல்கள் ஓ,கேன்னு சொல்லலாம். ஒரே முறை ..ஒர்ரே முறை... பாடல் தாளம் போட வைக்கிறது... சில காட்சிகளில் பின்னணி இசை இன்னும் பலம் சேர்த்திருக்கலாம்.. குறிப்பா பசுபதியின் உயிர் பிரியும் காட்சி..SOMETIMES SILENCE CAN BE THE BEST FORM OF MUSIC.. சிரிகாந்த் தேவா அதை ட்ரை பண்ணியிருக்கலாமேன்னு தோணுச்சு...
படத்தின் இன்னொரு பாராட்டத் தக்க விஷயம் கலை இயக்குனரின் உழைப்பு என்னமாச் செட் போட்டுருக்கார்ப்பா. ( ஏற்கனவே இவர் இயற்கையிலே போட்ட கலங்கரை விளக்கம் செட் அற்புதமான் ஒன்று) சாரி அவர் பெயரை நான் கவனிக்க மறந்துட்டேன்.
மொத்ததுல்ல சொல்லணும்ன்னா ஒரு முக்கியமான வெகுஜன விழிப்புணர்வு மேட்டரை தேவையான அளவு உப்பு உரைப்பு எல்லாம் சேத்து பக்குவாமாச் சமைச்சு பரிமாறி இருக்காங்க...போதுமான அளவுக்கு ருசியாவே இருக்கு..
இந்த ஈ தீவாளி ரேஸ்ல்ல மெதுவா ரெக்க விரிச்சாலும் கொஞ்சம் உசரமாவே பறக்கும்ங்கோ..
அப்புறம் என்ன டைம் கிடைச்சா ஈ படம் பாருங்க..
12 comments:
நல்லா இருந்தது தேவ் உங்க விமர்சனம். பார்க்க வேடும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கு! இந்த வாரத்துல ஒரு நாள் "ஈ" தான்.
//தீவாளிக்கு வந்தப் படத்துல்ல கிட்டத்தட்ட எல்லாப் படத்தையும் துட்டு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல்ல பார்த்து முடிச்சாச்சுன்னு இருந்தப்போ //
!? வல்லவன் - யூ டூ தேவ்?
:(
நம்ம விமர்சனத்தைப் படிச்சுப் பாராட்டுனதுக்கு நன்றி தளபதி..
வல்லவன் எல்லாம் நாங்க மொத நாளே பாத்து வெந்து விமர்சனமும் போட்டு அந்த வெந்த கதையை ஊருக்கேச் சொல்லிட்டோம்ல்ல நீங்க லேட்டு...
சிபி உங்களுக்காக இதோ வல்லவன் விமர்சனச் சுட்டி
http://chennaicutchery.blogspot.com/2006/10/blog-post_23.html
//இந்த ஈ தீவாளி ரேஸ்ல்ல மெதுவா ரெக்க விரிச்சாலும் கொஞ்சம் உசரமாவே பறக்கும்ங்கோ//
நல்ல விமர்சனம்.
வல்லவன் படித்து ஒரு வலைப்பதிவர் ஒரே லன்ல விமர்சனம் எழுதி இருக்கார் :))
//"'ஈ' படம் பார்த்தீங்களா?" //
பார்க்கலே
//நல்ல விமர்சனம்.//
நன்றி அனுசுயா
//வல்லவன் படித்து ஒரு வலைப்பதிவர் ஒரே லன்ல விமர்சனம் எழுதி இருக்கார் :)) //
ரவி,அது என்னங்க விமர்சனம்?
//பார்க்கலே///ன்னு வருத்தமாப்
பதில் சொன்ன இளாவுக்கு 'ஈ' படம் பரிசாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. படம் வந்ததும் பார்த்து மகிழவும்
போர்வாள்,
விமர்சனம் நல்லா இருக்கு!
உங்கள் விமர்சனம் 'ஈ' திரை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது தேவ்
ராம் பாராட்டுக்கு மிக்க நன்றி
திவ்யா - படத்தைத் தாராளமாப் பார்க்கலாம். நிச்சயம் போரடிக்காது. நன்றி
Post a Comment