Wednesday, November 15, 2006

CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

வணக்கம் மக்கா,

ஒரு பத்து பதினைஞ்சு நாளா ஒரே வேலை... இன்னும் ஓயல்ல.. வீட்டிலும் சரி ஆபிஸ்ல்லயும் சரி குனிய வச்சு குட்டுறாய்ங்க... சரி நம்ம கதை தான் வீடு தோறும் நடக்கும் கதையாச்சே.. அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்.

பேப்பர் படிக்க முடியல்ல ...ஒழுங்கா நாலு நியூஸ் சானல் மாத்திப் பாத்து ஜி.கே டெவலப் பண்ண முடியல்ல... மழை வேற பெஞ்சு ஓஞ்சா மாதிரி போக்குக் காட்டிட்டு நான் ரெயின் கோட் கொண்டு போக மறக்கற நாளாப் பாத்துப் பேக்ல்ல தாக்குது.. ஒரு மனுஷன் என்னத் தான் செய்வான் சொல்லுங்க?

நாட்டு நடப்பெல்லாம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு இருந்த ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு விதத்துல்ல ஊட்டி ரோடு மண்சரிவுல்ல பிளாக் ஆன மாதிரி மூடி கிடக்க... நம்ம அறிவு பசி மட்டும் அடங்க மறுத்து அடம் பிடிக்க ஆரம்பிச்சது.

தமிழ் மணம் தேன்கூடுன்னு காலை முதல் மாலை வரை வேலையாக இருந்த எனக்கு அப்ரைசல் கண்டம் வெகு அருகினில் வரும் காரணத்தில் கூடுமானவரை அந்தப் பக்கங்களுக்கு அடிக்கடி போகக் கூடாது என்று ஒரு உறுதிமொழி வேறு... ( தமிழ்மணம் , தேன்கூடு படிக்கறதையே தொழிலாகக் கொண்டு ஒரிஜினல் தொழில் என்ன எனபதையே மறந்து அப்ரைசல் நேரத்தில் அது தங்களுக்கு நினைவூட்டப் பட்டதாய் பரிதாப கதை சொன்ன வலையுலக மேன்மக்களுக்கு என் உறுதி மொழியின் நோக்கம் புரியும்)

ஆக... இப்படி அகில உலகத்தில் நடக்கும் வம்பு தும்புகள் காதில் விழாமல் என்னடா வாழ்க்கை என்று அலுத்தப் படி டீ குடிக்க கடைக்குப் போயிருந்தேன்...

ம்ம் பிரெட் பஜ்ஜி ஒரு பிளேட் அப்புறம் ஒரு ஸ்பெஷல் டீ சொல்லிட்டு காத்திருந்த கேப்பில் காதில் விழுந்தது தான் இந்தப் பதிவின் தலைப்பு..


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்

அடங்கொக்க மக்கா.. உள்ளாட்சி உடனே தமிழக ஆட்சி ஆகப் போகுதான்னு காதைத் தீட்டிகிட்டேன்.

"ஸ்டாலின் முந்துறதாவது.. எங்கேய்யா பார்த்த?" ஒருத்தன் கேட்டான்.

"மச்சி எல்லாப் பேப்பர்ல்லயும் போட்டிருந்தானே நீ பார்க்கலியா.. நெட்ல்ல எல்லாம் கூட போட்டிருக்கான்ப்பா" அங்கிருந்தக் கும்பல்ல ஒருத்தன் பதில் சொன்னான்..

"ஸ்டாலின் ஓ,கே தான்ம்மா அதுக்காக CM அளவுக்கெல்லாம் பேசக் கூடாது"

"எத்தனை நாளைக்கு தான் இன்னும் CM புராணம் பாடுவீங்க ஸ்டாலின் அடிச்சுக் கிளப்புறாரு பாருங்கப்பா"

"யோவ் அதுக்குள்ளே சொன்னா எப்படி இப்போத் தானேப்பா ஸ்டாலின் வந்துருக்கார்..CM ரிக்கார்ட் தெரியும் இல்ல"

"CM ரிக்கார்ட் எல்லாம் உடைக்கப் போறார் பாருய்யா ஸ்டாலின்"

"யோவ் ஆயிரம் இருந்தாலும் CM ரேஞ்சு வேறய்யா..ஸ்டாலின் எல்லாம் CM ரேஞ்ச்க்கு எப்படிய்யா ஒத்துக்க முடியும்?"

"பந்தயம்ய்யா ஸ்டாலின் CMஐ அடிச்சுக் காட்டுவாரு பாப்போமா"

இப்படியே பேச்சுப் போச்சு.. நான் ஆர்டர் பண்ண பஜ்ஜியும் டீயும் வர அந்தக் கும்பல கிளம்பி போகவும் சரியா இருந்துச்சு..

ஆக கூடி ஸ்டாலின் கலக்க ரெடி ஆயிட்டார்ன்னு எதோ புரிஞ்சிகிட்டு எழுந்து ஆபிஸ் போனேன்.

போனதும் அவசரமா நம்ம இட்லி வடையார் பக்கம் போனேன்.. இப்படி நியூஸ் எல்லாம் அவரை விட்டா யார் முதல்ல சொல்லுவா? ம்ஹும் அவர் பக்கத்துல்லயும் இந்த மேட்டர் எதுவும் இல்லை...

ச்சே என்னப்பா விவரம் தெரிஞ்சும் சரியா விளங்கல்லயே...பேப்பர்ல்ல எல்லாம் வந்து இருக்குங்கறாங்க... நெட்ல்ல போட்டு இருக்குன்னு சொல்லுறாங்க... ஆனா நமக்கு மட்டும் தெரியல்லயேன்னு மண்டைக் காய்ஞ்சுப் போய்.. நேரா சன் டிவிக்கு போன் போட்டுரலாமான்னு யோசிச்ச டைம்ல்ல நம்ம ஜி மெயிலுக்கு ஒரு மெயில் வந்துச்சுங்க...

அதோட டைட்டில்...

"STALIN OVERTAKES CM"

அவசரம் அவசரமா மெயிலைத் திறந்துப் படிக்கிறேன்...

"சுப்ரீம் ஸ்டார் சீரஞ்சிவி நடித்த ஸ்டாலின் படம் முந்தைய வருடம் நம்ம தலைவர் நடிச்சு வெளிவந்த சந்திரமுகி படத்து வசூலை ஆந்திராவில்ல முந்திருச்சாம்....

அட பாவிகளா இது தானா நான் கேட்ட டீக் கடை மேட்டர்.. ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாப் பேசுனவிங்க குரல்லயே லைட்டா ஜாங்கிரி எழுத்து வாடை அடிக்கும் போதே நான் டவுட் ஆகி இருக்கணும்... என்னப் பண்றது... சரி விடுங்க மக்களே மறுபடியும் டைட்டிலுக்கே வர்றேன்...


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

உங்க கருத்தை எனக்குப் பின்னூட்டமாச் சொல்லுங்க..

இப்போதைக்கு ஐயாம் தி எஸ்கேப்ங்கோ

PS: CM = ChandraMukhiயாம்

13 comments:

பிரதீப் said...

அடங்கொக்கமக்கா!!

இப்படி எல்லாமா அல்வா குடுக்குறது???

அனுசுயா said...

Ada kadavule naanum romba seriousa first irunthu vari vidama padichen kadaiseela kavuthuteengle dev. :)))

ILA(a)இளா said...

என்னக்க தேவு, ஸ்டாலின் நல்லா போகலைன்னு அடுத்தாப்ல உக்காந்து இருக்கிற மணவாடு சொல்றப்ப நீங்க இப்படி சொல்றீங்க?

Anonymous said...

என்ன தேவ்...

சுட சுட வாங்கின பஜ்ஜி வடை எல்லாம் சப்புன்னு போச்சு!!!

CM.... ஸ்டாலினா.... இனிமே சினிமாவுக்கு இப்படி எல்லாம் பேர் வெச்சா டபிள் டாக்ஸ்'ன்னு அய்யா அணௌன்ஸ் பண்ணினாலும் உண்டு... :P

நல்லா கிளப்புறாய்கைய்யா பீதிய.....

Anonymous said...

யோவ் தேவ்,

உமக்கு அப்ரைசலில் வைக்கச் சொல்றேன்யா ஆப்பு.

நாமக்கல் சிபி said...

தலைவா,
எனக்கு தலைப்பை படிச்சவுடனே புரிஞ்சிடுச்சு :-)

என்ன பண்ண ஸ்டாலின்னா எனக்கு சிரு படம்தான் ஞாபகம் வருது :-)

தேவ் | Dev said...

பிரதீப் --> என்னங்க பண்றது நான் டீ கடையிலே வாங்குனது.. நம்ம மக்களுக்கும் கொஞ்சம் சப்ளை பண்ணிட்டேன். அம்புட்டுத் தேன. :)

அனுசுயா --> நான் கூடத் தான் ஆர்டர் பண்ண டீயையும் பஜ்ஜியையும் மறந்துட்டு ரொம்ப சுவாரஸ்யமாக் கதைக் கேட்டுகிட்டு இருந்தேன்.. கடைசியிலே கவுத்திட்டாங்க. :)

தேவ் | Dev said...

இளா ---> அங்கிட்டு மணவாடு அப்புடு செப்தாவா. இப்புடு மணவாடு அப்படி செப்ப லேது.. ரிசல்ட் வேறுகா உன்னாரு.. நுவ்வு மஞ்சி மாட்லாடி நாக்கு நிஜம் செப்புறா..

கன்யா - கரெக்டா சொன்னீங்க. அப்படி ரூல்ஸ் போட்டாத் தான் உண்டு..:))

தேவ் | Dev said...

தங்கவேல் --> ஏற்கனவே ஹோப் குறைஞ்சுகிட்டு இருக்கு இதுல்ல நீர் வேற ஏன்ய்யா உமக்கு இந்த கொலை வெறி..

கைப்புள்ள said...

//CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

உங்க கருத்தை எனக்குப் பின்னூட்டமாச் சொல்லுங்க..

இப்போதைக்கு ஐயாம் தி எஸ்கேப்ங்கோ

PS: CM = ChandraMukhiயாம்//

நல்லாத் தான்யா கெளப்புறாய்ங்க பீதியை

G.Ragavan said...

CMஏ மலையாளத்தப் பாத்து காப்பி. ஸ்டாலினாவது கொஞ்சம் ஒரிஜினாலிட்டி. ஆனா ஸ்டாலின் நல்லாப் போகலைன்னு அந்தூர்க்காரங்க சொல்றாங்களேய்யா! எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னும் மார்ஜின் கொறைச்சல்னும் பேசிக்கிறாங்களே!

தேவ் | Dev said...

கைப்பு ---? U stole the word from my mouths :)))

தேவ் | Dev said...

ஜி.ரா ---> தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் நம்மூரில் இருக்கும் தெலுங்குதேச நண்பர்கள் வேற மாதிரி சொல்லுறாய்ங்க

tamil10