Thursday, August 23, 2007

நானும் என் ரேடியோ பொட்டியும்

இன்றைய நகர வாழ்க்கையில் பலரது வாழ்க்கையிலும் பின்னி பிணைஞ்சுப் போன ஒரு மேட்டர்ன்னா அது ரேடியோங்க..

ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது அப்பா ரிச்சி தெருவுக்குக் கூட்டிட்டு போய் ஒரு பாக்கெட் ரேடியோ வாங்கி தந்தது இன்னும் நினைவு இருக்கு... அதோட அன்றைய விலை 100 ரூபாய்.. சிவப்பு கலர் ரேடியோ அது.. அப்போல்லாம் எப்.எம் கிடையாது.. ஆனா கேக்குறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கும்...

காலை நேரங்களில் ரேடியோ அதிகம் கேட்க முடிந்ததில்லை.. ஆனா அந்த மாலை நேரங்களில் மயிலாப்பூர் பகுதியில் நாங்க குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் அமர்ந்து ரேடியோ கேக்குறது இருக்கே... அதெல்லாம் ஒரு சுகம்ங்க..

அந்த சுகம் அதிகமா வார இறுதிகளில் தான் கிடைக்கும்.. லீவுன்னு சொல்லி ரேடியோவும் காதுமா அலையலாம்.. முன்னிரவு நேரங்களில் சிபாக்கா டாப் டென் பாடல்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி வரும்... நமக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி அது.. பாடல்களை வரிசைப் படுத்துற நிகழ்ச்சி அது... கேக்க அருமையா இருக்கும்.. அப்படியே சேனலை ட்யூன் பண்ணா இந்தியிலே அமின் சயானி ( பேர் கிட்டத் தட்டச் சரின்னு நினைக்கிறேன்) அப்படின்னு ஒரு தொகுப்பாளர் அசத்துவார் பாருங்க... அதைப் புரிஞ்சிக்கவே இந்திக் கத்துக்கலாம் போலிருக்கும்....

சில சமயம் மொழி புரியாத பாடல்களைக் கூட கேட்டு கிடப்பது உண்டு...

அப்புறம் ஒரு நாள் நான் ஆசையா வச்சிருந்த அந்த சிகப்பு ரேடியோ உயிரை விட்டுச்சு.. என்னவெல்லாமோச் செஞ்சுப் பாத்தோம்.. செலவழிச்சும் பார்த்தோம்... ம்ஹூம் அதைக் காப்பாத்த முடியல்ல

அந்த பாக்கெட் ரேடியோ போன பிறகு பலக் காலம் ரேடியோ ஆசையே போயிருச்சு...

பின்னாடி விவேகானந்தா காலேஜ்ல்ல படிக்கும் போது முக்காவாசி மதிய நேரம் ப்ரீயா அமைவது உண்டு... அப்போ எங்க வீட்டுல்ல பிலிப்ஸ் மியூசிக் சிஸ்டம் இருந்துச்சு... புதுசா வந்த நேரம்..

பண்பலை ஒளிபரப்பு துவங்கியிருந்த நேரம்... ப்ரியமான நேரம், வி.ஆர்.ஜி நேரம்ன்னு பல தனியார் நிறுவனங்கள் ஆளுக்கு ஒரு மணி நேரம்ன்னு ரேடியோ நேயர்களுக்கு புது அனுபவம் கொடுத்தக் காலமது... இன்றைய எப்.எம் சேனல்களின் முன்னோடிகள் அவைன்னு சொல்லலாம்...

மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம்
பொழுது பக்காவாப் போகும்...

அதற்கு பின்னால் கல்லூரி முடித்து வேலை. அப்படின்னு வாழ்க்கையின் கால்களில் சக்கரம் கட்ட தொடங்கிய காலத்தில் ரேடியோவுடனான என் நட்பு பாதிக்கப்பட்டது..

அப்படிப் பாதிக்கப்பட்ட நட்பு பின்னால் வந்த செல்போன் புரட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டதுன்னு சொல்லணும்...காலையில் கடுப்பேற்றும் டிராபிக்கை சிரித்தவாறு சமாளிக்க எப்.எம் தான் உதவுதுன்னா கண்டிப்பா அது மிகையாகாது...

கடுமையான வேலை இருக்கும் சில நாட்களில் இரவு நேரம் கடந்து வீடு திரும்பும் பொழுதுகளில் காதுகளில் சன்னமா இசை வழிய பயணம் போகும் அந்தத் தருணங்கள் மதிப்புமிக்கவை...அதிலும் லேசா சாரல் அடிச்சா இன்னும் அருமையான அனுபவம்...

சமீபத்திலே நம்ம குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேச்சை இஅப்ப்டி ரேடியோவுல்ல கேட்டுகிட்டே வண்டி ஓட்டிக்கிட்டு போனது ஒரு வித்தியாசமான அனுபவம்...

ரேடியோ என் வாழ்க்கையில் எனக்கு அமைந்த ஒரு வித்தியாசமான இனிமையான நட்புன்னு சொல்லலாம்..

இந்தா இப்போக் கூட பிக் எப்.எம்ல்ல தீனான்னு நம்ம பையன் ஒருத்தன் 92.7 மணி நேரம் விடாம நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சாதனைப் படைக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கார்... நாளைக்கு காலையிலே அந்த சாதனை முடியும்... அப்பப்போ கிடைக்கிற பிரேக்ல்ல தீனா இன்னும் பேசிக்கிட்டு தான் இருக்காரான்னு செக் பண்ணுறது ஒரு த்ரில்...

ரேடியோ பத்தி பேசச் சொன்னா பேசிகிட்டே போலாம்....இன்னொரு சமயம் இன்னும் பேசலாம்.. :)

19 comments:

இலவசக்கொத்தனார் said...

ரொம்பப் பேசறீங்களே!!! :)) ரேடியோன்னா கேட்கணும் பேசப்பிடாது. இந்த ஐபாட், ஐரிவர் எல்லாம் வந்த பின் ரேடியோ கேட்கறதே போயிடுச்சு.

kappi guy said...

முன்ன லீவ்ல மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ப்ரியமான நேரம்லாம் விடாம கேட்பேன்..மாமா வீட்டுக்கு வர்றது்னாலே 'ஹை எப்.எம் கேட்கலாம்'ன்னு தோணும் :D

ஆனா இப்பல்லாம் இந்த ஆர்ஜேங்க போடற மொக்கை அதிகமாயிடுச்சுண்ணே :(

ILA(a)இளா said...

தேவ்,
இப்போ வெல்லாம் ஆன்லைனில் FM கேக்குற நிலைமை வந்துருச்சு. அப்படின்னா என்னா அர்த்தம் ரேடியோ மேல நிறைய பேருக்கு ஆசை இருக்குன்னு அர்த்தம்.

தேவ் | Dev said...

வாங்க கொத்ஸ் இப்போ எஙக் ஊர்ல்ல பிக் எப் எம்ன்னு ஒரு ரேடியோ ஒரு ஆர்.ஜே இடைவிடாம 92.7 மணி நேரம் நிகழ்ச்சியை எல்லாம் தொகுத்து வழங்கி சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார்.. அந்த நிகழ்வை ஒட்டி நமக்கும் நம்ம ரேடியோ பிளாஷ் பேக் வந்துருச்சு...

ஆமா ஐ பாட் எல்லாம் வெறும் பாட்டுக்கு மட்டும் தானே.. நம்ம ரேடியோ பொட்டியிலே வர்ற வெளம்பரம் எல்லாம் அதுல்ல வராதுல்லா...

லக்கிலுக் said...

நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு பதிவை சில மாதங்கள் முன்பு இட்டிருந்தேன். அது இங்கே!

J K said...

ஆமாங்க தேவ் அண்ணா

ரேடியோ பொட்டி சூப்பர்ங்க....

92.7 ல இப்போ தான் தீனா பேசி முடிச்சு பட்டாசெல்லாம் வெடிச்சு கொண்டாடினாங்க. அவர் பேசினதுபோலவே ரொம்ப நேரம் பட்டாசு வெடிச்சுட்டே இருந்தது...

கப்பி பய said...

en comment enge?

தேவ் | Dev said...

//முன்ன லீவ்ல மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ப்ரியமான நேரம்லாம் விடாம கேட்பேன்..மாமா வீட்டுக்கு வர்றது்னாலே 'ஹை எப்.எம் கேட்கலாம்'ன்னு தோணும் :D//

ஆமா கப்பி இப்போ பதிவுலகக் காதல் மாதிரி ஒரு பொழுதினில் நம்மில் பலருக்கும் ரேடியோக் காதல் இருந்தது உண்மை... கிட்டத்தட்ட லீவ் விட்டா நானும் வெகு நேரம் ரேடியோவில்ல லயித்தக் காலங்கள் உண்டு..

//ஆனா இப்பல்லாம் இந்த ஆர்ஜேங்க போடற மொக்கை அதிகமாயிடுச்சுண்ணே :( //

இது முற்றிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.. முக்கியமா இந்தச் சுசித்ரா மாதிரி ஆளுங்க போடுற மொக்கை பொறுமையை படுபயங்கரமாச் சோதனை செய்யுது

தேவ் | Dev said...

//தேவ்,
இப்போ வெல்லாம் ஆன்லைனில் FM கேக்குற நிலைமை வந்துருச்சு. அப்படின்னா என்னா அர்த்தம் ரேடியோ மேல நிறைய பேருக்கு ஆசை இருக்குன்னு அர்த்தம்//

இளா என்னத் தான் ஆன் லைன் வந்தாலும் மொட்டை மாடியிலே ரேடியோ பொட்டியை வச்சுகிட்டு மாலை வாக்குல்ல சில்லுன்னு காத்து முகத்துல்ல பட அதை ரசிக்குற சுகம் இருக்குப் பாருங்க... அது தனி ரகம் தான்.. ரேடியோ ஆவல் இன்னும் நம்மில் பலரிடம் மிச்சமிருப்பது சந்தோஷமான விசயம் தான் இளா

தேவ் | Dev said...

//நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு பதிவை சில மாதங்கள் முன்பு இட்டிருந்தேன். அது இங்கே! //

லக்கி உங்கள் பதிவின் ஒவ்வொரு வரியோடும் நான் ஒத்துப் போகிறேன்.. எப்படியோ ஆரம்பத்தில் இந்தப் பதிவினை நான் கவனிக்க தவறிவிட்டேன்.. வானொலி ரசிகனின் எண்ண ஓட்டங்களை அற்புதமாப் படம் பிடிச்சு சொல்லியிருக்கீங்க... ஒவ்வொரு வரியையும் என் அனுபவமாகவே எண்ணி படித்தேன்..

அப்புறம் அந்த பிரிண்ட் மீடியா பத்திய உங்கக் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.. அந்தப் புது புத்தகத்தோடு வாசமிருக்கு பாருங்க அது மேல எனக்கெல்லாம் ஒரு கிறக்கமே உண்டுங்க.. அதைப் பத்தியும் சமயம் கிடைச்சா எழுதுங்க.. நானும் எழுதுறேன்...

தேவ் | Dev said...

//ஆமாங்க தேவ் அண்ணா

ரேடியோ பொட்டி சூப்பர்ங்க....

92.7 ல இப்போ தான் தீனா பேசி முடிச்சு பட்டாசெல்லாம் வெடிச்சு கொண்டாடினாங்க. அவர் பேசினதுபோலவே ரொம்ப நேரம் பட்டாசு வெடிச்சுட்டே இருந்தது... //

நன்றி ஜே.கே. தீனாவின் சாதனையின் உண்மையான அனுபவம் எனக்கு இந்த வார இறுதியில் தான் புரிஞ்சுது...

நண்பன் ஒருத்தன் திருமணத்திற்காக திருச்சி வரை சென்று வர வேண்டியிருந்தது.. இரண்டு நாட்கள் பயணமும் தூக்கமின்றி மற்ற நண்பர்களோடு பேச்சாகவே கழிந்தது.. இரண்டு இரவுகள் தூக்க்ம் தொலைத்ததன் அருமை இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.. அப்போ மூணு நாள் தூங்காமப் பேசுன தீனா என்னப் பாடு பட்டாரோ?

தேவ் | Dev said...

//en comment enge? //

அக்கட சூடு கப்பி.. கமெண்ட் தெரியுதா :))) சாரி பார் த டிலே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தேவ்!
உங்களுக்குச் சொற்ப வயது எனக் கருதுகிறேன். அன்றைய வானொலி ,இன்றைய வானொலியுடன் ஒப்பிடும் போது; தரம் மிக்கதாகத் தெரிகிறது. இன்று வெறும் அலட்டல் ;சிலசமயம் அவர்கள் பேசுவதே என்ன? என்று புரிவதில்லை.
அன்றைய இலங்கை வானொலியுடன்; திருச்சிராப்பள்ளி; சென்னை; பாண்டிச்சேரியையும் ஈழத்தில் இருந்து ரசித்துள்ளேன்.
இப்போ இணையத்தால் இலங்கை வானொலி, சூரியன் எவ் எம்;சிங்கப்பூர் ஒலி எவ் எம் மற்றும் சில கேட்டபோது; இன்னும் கேட்கும் தரத்தில் அறிவுபூர்வமாக அலட்டலின்றி இருப்பது இலங்கை;சிங்கப்பூர் வானொலியே...தாய்த் தமிழக வானொலி "தமிழ்க் கொலை" வானொலியாகத் தவழ்வது வேதனையே.
திருச்சிராப்பள்ளி, சென்னை வானொலி இணையத்தில் ஒலித்தால் ;மீண்டும் இன்பத் தமிழ் கேட்கலாம்
என நம்புகிறேன்.
மீண்டும் சொல்கிறேன் இது என் "முதிய" கருத்து...

லக்கிலுக் said...

//அப்புறம் அந்த பிரிண்ட் மீடியா பத்திய உங்கக் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.. அந்தப் புது புத்தகத்தோடு வாசமிருக்கு பாருங்க அது மேல எனக்கெல்லாம் ஒரு கிறக்கமே உண்டுங்க..//

புது புத்தகத்துக்கு மட்டுமல்ல தேவ். பழைய புத்தகத்துக்கும் கிறங்கடிக்கும் வாசனை உண்டு. சேலை கட்டும் பெண்ணின் வாசத்தை விட நம்பள மாதிரி ஆட்களுக்கு புத்தகத்தோட வாசனை தான் புடிக்குது :-)))

வேஸ்ட் பேப்பர் கடையில பழைய காமிக்ஸ் வாங்குறப்போ ஒரு வாசம் அடிக்கும் பாருங்க... யப்பா... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது!

தேவ் | Dev said...

//தேவ்!
உங்களுக்குச் சொற்ப வயது எனக் கருதுகிறேன். அன்றைய வானொலி ,இன்றைய வானொலியுடன் ஒப்பிடும் போது; தரம் மிக்கதாகத் தெரிகிறது. இன்று வெறும் அலட்டல் ;சிலசமயம் அவர்கள் பேசுவதே என்ன? என்று புரிவதில்லை.
அன்றைய இலங்கை வானொலியுடன்; திருச்சிராப்பள்ளி; சென்னை; பாண்டிச்சேரியையும் ஈழத்தில் இருந்து ரசித்துள்ளேன்.
இப்போ இணையத்தால் இலங்கை வானொலி, சூரியன் எவ் எம்;சிங்கப்பூர் ஒலி எவ் எம் மற்றும் சில கேட்டபோது; இன்னும் கேட்கும் தரத்தில் அறிவுபூர்வமாக அலட்டலின்றி இருப்பது இலங்கை;சிங்கப்பூர் வானொலியே...தாய்த் தமிழக வானொலி "தமிழ்க் கொலை" வானொலியாகத் தவழ்வது வேதனையே.
திருச்சிராப்பள்ளி, சென்னை வானொலி இணையத்தில் ஒலித்தால் ;மீண்டும் இன்பத் தமிழ் கேட்கலாம்
என நம்புகிறேன்.
மீண்டும் சொல்கிறேன் இது என் "முதிய" கருத்து...//

வாங்க யோகன்,

நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க..சிறு வயதில் கோடை விடுமுறைக்கு நான் தூத்துக்குடி மாவட்டம் செல்லும் போது அங்கே கிராமத்து திண்ணைகளில் இலங்கை வானொலி கேட்ட அனுபவம் எனக்கும் உண்டு.. சென்னையின் அது அந்த அளவில் தெளிவாகக் கேட்டது இல்லை.. ரசனைக்குரிய மொழி பிரயோகம் கொண்டது இலங்கை வானொலி என்பதில் நான் முழுதாய் உடன்படுகிறேன்.. வானொலியில் ரசித்த அளவுக்கு சின்னத் திரையில் நம் பிரியத்துக்குரிய அறிவிப்பாளர் அப்துல் அமீது அவர்களை ரசிக்க முடியாமல் போனது எதனால் என்பது எனக்கு இது வரையிலும் புரியாத புதிர் தானுங்க...

அப்புறம் யோகன் அய்யா,உங்க கருத்து 'முதிய' கருத்து என்று வகைப் படுத்த மாட்டாது என்பதையும்.. இது என்னளவில் எந்த தலைமுறைக்கும் 'பதிய' வேண்டிய கருத்து தான் என்பதையும் கூறி கொள்கிறேன்..

தேவ் | Dev said...

//புது புத்தகத்துக்கு மட்டுமல்ல தேவ். பழைய புத்தகத்துக்கும் கிறங்கடிக்கும் வாசனை உண்டு. சேலை கட்டும் பெண்ணின் வாசத்தை விட நம்பள மாதிரி ஆட்களுக்கு புத்தகத்தோட வாசனை தான் புடிக்குது :-)))

வேஸ்ட் பேப்பர் கடையில பழைய காமிக்ஸ் வாங்குறப்போ ஒரு வாசம் அடிக்கும் பாருங்க... யப்பா... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது! //

லக்கி இந்த வாசனைக்கு வசியப்பட்டே அடிக்கடி மூர் மார்கெட் பக்கம் வண்டி திரும்புவது வாடிக்கையாகிப் போயிருச்சு...

நம் விருப்பங்களில் இருக்கும் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது லக்கி.

வல்லிசிம்ஹன் said...

Dev,
radio is a wonderful partner in our life.

from the time I wake up till the I go to to bed, the radio will be on,much to my mother's irritation.
that was a reesa radio, sitting on the dressing room godhrej bureau.
if it is not VOA, it will be radio ceylon. we had such good times together.
after the advent of transisitor during my later years the radio will travel from the drawing room to kitchen and in the night to the bedstand,.
thank you for wonderful memories.
They were sincere people conducting the sessions.

Radio jockies nowadays are more commercial and the non stop nonsense interferes with the delivery of good music.
neengaLum Mylapore aa????
:)))

தேவ் | Dev said...

//Dev,
radio is a wonderful partner in our life.

from the time I wake up till the I go to to bed, the radio will be on,much to my mother's irritation.
that was a reesa radio, sitting on the dressing room godhrej bureau.
if it is not VOA, it will be radio ceylon. we had such good times together.
after the advent of transisitor during my later years the radio will travel from the drawing room to kitchen and in the night to the bedstand,.
thank you for wonderful memories.
They were sincere people conducting the sessions.

Radio jockies nowadays are more commercial and the non stop nonsense interferes with the delivery of good music.
neengaLum Mylapore aa????
:))) //

வாங்க வல்லியம்மா என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... நான் அஞ்சாம் கிளாஸ் முதல் பன்னிரண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சது மயிலை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி.. பத்தாம் கிளாஸ் வரைக்கும் குடியிருப்பு ஆபிரகாம் தெரு தான்.. அப்பு தெரு பக்கம்... தனியா மயிலைக் கச்சேரின்னு ஒரு பதிவே போடலாம் அந்த அளவுக்கு மயிலை வாழ்க்கையை ரசிச்ச அனுபவங்கள் உண்டு...

சரியாச் சொல்லியிருக்கீங்க.. ரேடியோ ஒரு இனிய நண்பன்னு.. அந்தப் பள்ளிக்காலத்துல்ல ரேடியோவை கையிலே போற இடமெல்லாம் தூக்கிட்டு போனது.. படுக்கும் போது தலைக்குப் பக்கமா வச்சு சன்னமாப் பாட்டு கேட்டது,, அதுக்கு திட்டு வாங்குனது எல்லாம் ஞாபகம் வந்துருச்சுங்க..

இப்போ ரேடியோ கொஞ்சம் சுமார் தான் ஆனாலும் அந்த பழைய பாசம் அப்படியே இருக்குங்க..

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10