தலைவர் ரஜினிக்குப் பொறவு நமக்குப் புடிச்ச நடிகர்ன்னா நம்ம சீயான் தாங்க... இவரைப் பல தடவை நேரில் பார்த்து இருந்தாலும்.. இவர் கூட நின்னு போட்டோ புடிக்கணும்ங்கற ஆசையும் வாய்ப்பும் ஒரு சேர நேத்து தான் நடந்துச்சு...
கடந்த ஒரு மாதக் காலமாக சீயானின் அடுத்தப் படமான கந்தசாமியின் படப்பிடிப்பு எங்க அலுவலக வளாகத்தில் தான் நடந்து வருகிறது... அந்தப் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது சீயானோடு சேர்ந்து செல் போனில் க்ளிக்கிய வெகு சுமாரான படம் இங்கே....
படத்தைப் பார்த்துட்டு கரகாட்டக்காரன்ல்ல கவுண்டர் செந்திலைக் கேப்பாரே அதே கேள்வியை நீங்க என்னைப் பாத்துக் கேக்குறது என் காதில் விழுது...
"ஏன்டா தேவ்.. கச்சேரின்னு பதிவு எழுதி நீ வாங்குற இந்த அஞ்சு, பத்துப் பின்னூட்டத்துக்கு இதெல்லாம் தேவை தானா...."
அதுக்கு கரகாட்டக்காரன்ல்ல செந்தில் சொல்லுவார்ல்ல அதே பதிலை தான் பதிவுக்குத் தலைப்பா வச்சிருக்கேன்...
அப்புறம்... படத்து ஹிரோயின் ஸ்ரெயாவும் வந்துருக்கு அதையும் பார்த்துட்டோம்..ஆனாப் பாருங்க அவங்களோடச் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கற ஆசை மட்டும் இன்னும் எனக்கு வர்றல்ல...:))))
Saturday, December 29, 2007
Friday, December 21, 2007
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 8
ஆம்பலில் இதுவரை..
சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து ஆர்க்குட்டைத் திறந்தான். ஆர்க்குட் தேடுகட்டத்தில் ஆம்பல் பெயரையிட்டு தேடினான்.
பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து அவன் மனைவி கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
ஆம்பல் ஆம்பல் என முனகியவாறு... முடுக்கி விட்ட இயந்திரமாய் ஆம்பலின் ப்ரொபைல் பக்கம் திறக்கும் வரை தன் விரல்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்தான்.
பக்கம் திறந்தது...ஆயிரத்துக்கும் அதிகமான முறை தான் பார்த்த அதே வரிகள்... ஆம்பல் பற்றிய வருணனைகள்.. இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதைப் படித்தான் சுரேஷ் ராகவன்.
படித்து ஓயந்த இடைவெளியில் மீண்டும் கயல்விழியின் போட்டோவைப் பார்த்தான்...கயல்விழி புகைபடத்தில் இருந்து அவனைப் பார்த்து அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் ஆர்க்குட்டிற்குள் நுழைந்த சுரேஷ் தன் ஸ்கிராப் பக்கம் போனான். புதிதாக தனக்கு யாராவது எதாவது செய்தி அனுப்பி இருக்கிறார்களா என பார்க்க பக்கம் திரையில் தெரியும் வரை காத்திருந்தான்.
இரவுகளின் நீளம்
சூரிய ஒளியின் தொடுதலில்
விலகுவது போல்
என் காத்திருப்பின் நீளம்
உன் ஒரு பார்வையில்
விலகிச் செல்லாதோ....
ஆம்பல்
அது வரை ஏறிய மொத்தப் போதையும் தலைத் தாண்டி தவ்வியது போலிருந்தது அவனுக்கு. மறுபடியும் மறுபடியும் அந்தக் கவிதையைப் படித்தான்... ஆம்பல் அனுப்பியக் கவித... காணாமல் போய் தன்னைத் தவிக்க விட்ட ஆம்பல் அனுப்பியக் கவிதை...
வெல்கம் பேக் ஆம்பல் ... தனக்குத் தானே சொல்லிக் கொண்ட சுரேஷ் ராகவன் இப்போ சந்தோசமாய் அடுத்த ரவுண்ட் அடிக்க கிளம்பினான். அப்போது அவன் செல்பேசி சிவாஜி பாடலை ஒலித்து அவனை அழைத்தது...
ஹலோ... ம்ம்ம்... சுரேஷ் தான் பேசுறேன்... ஆமா சுரேஷ் ராகவனே தான்... ஓ.கே..... எங்கே அமெரிக்கால்லருந்தா... சரி சரி.....எப்போ... ஓ.கே.... அவர் பெயரும் சுரேஷா.... பைன்... நம்பரா.. ஒரு நிமிசம் நோட் பண்ணிக்குறேன்.... "
தேடி துழாவி அலமாரியில் இருந்த பழைய டைரி ஒன்றின் கடைசிப் பக்கத்தில் நம்பரைக் குறித்தான்.
"சரி... கவலையை விடுங்க.. உங்க ஆளு அமெரிக்கா சுரேஷ் இந்தியா வரும் போது... நம்ம தென்காசி டூ குற்றாலம் எல்லா ஏரியாவும் சுத்திக் காட்டி ராஜ உபச்சாரம் பண்ணி நான் அசத்திடுறேன் ஓ.கேவா?" என்று போனைத் துண்டித்தான். ஒரு கையில் நிறைக்கப்பட்ட மதுக் கிண்ணமும் இன்னொறு கையில் பழைய டைரியையும் வைத்திருந்த சுரேஷ் ராகவன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தான்.
----------------------------------------------------------
"ஓ மை காட்.... ஊர் போய் சேருவதற்குள் ஒரு வழியாகிரும் போலிருக்கு.. பனி அது இதுன்னு இங்கே கொண்டாந்து விட்டாங்க.. ம்ம்ம் அர்த்த ராத்திரில்ல எல்லா ஊரும் ஒரே மாதிரி தான் இருக்கு... இந்த ஜர்னி பிரேக் கில்ஸ் மீ..." தனக்குத் தானேப் பேசிய படி பிராங்பர்ட் ஏர்போர்ட் வெயிட்டீங் லவுஞ்சில் இருந்தான் சுரேஷ்...
அப்போது அவனுக்கு இருந்த ஒரே துணை அவன் லேப்டாப்... ம்ம்ம் கரெக்ட் நீங்க எதிர்பார்த்த அதே விசயம் தான்.. இவனும் ஆர்குட்டுக்குள்ளே தான் போறான்.. மீண்டும் தன் மனைவி எப்படி இந்த வலைக்குள் வந்தாள் என தன் மென்பொருள் மூளையை என்னவெல்லாமோ செய்து யோசிக்க வைத்தான்... சி அன்ட் பி டெக்னாலஜி வந்ததில் இருந்து அவன் மூளை யோசிப்பதில் வேகம் குறைத்திருப்பதை அவனால் அப்போது உண்ர முடிந்தது.
"டேமிட்... என்ன நடக்குது... ஒண்ணும் புரியல்ல... வேர் த ஹெல் டிட் திஸ் ஆம்பல் கோ...." தனக்குத் தானே பேசிக் கொண்டே சுரேஷ் தன் ஸ்கிராப் பக்கம் போனான்... அங்கு...
இரவுகளின் நீளம்
சூரிய ஒளியின் தொடுதலில்
விலகுவது போல்
என் காத்திருப்பின் நீளம்
உன் ஒரு பார்வையில்
விலகிச் செல்லாதோ....
ஆம்பல்
இந்தக் கவிதையைப் படித்ததும்... சுரேஷ்க்கு அவ்வளவு குளிரிலும் வியர்த்தது.... முகம் அப்படியே வெளிறி போனது....
மீண்டும் மீண்டும் அந்தக் கவிதை வரிகள் அவன் படிக்காமலே அவன் காதுகளில் ஒலித்தன... ஒரு இனிமையான பெண் குரலில்... அவனை மயக்கி...வசிகரீத்து... உயிரோடும் உணர்வோடும் இணைத்து காதலிக்கச் செய்தக் குரல்.... அவன் கல்லூரி நாட்களில் அவன் காதலித்த பெண் தேவதையின் குரல்...
"எப்படி இருக்கு சுரேஷ் இந்தக் கவிதை உனக்காகவே நான் ஸ்பெஷலா எழுதுனக் கவிதை...."
"ம்ம்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு.... சரி சொன்னா மாதிரியே உன்னைப் பாக்கவா.. எதெல்லாம் விலகுதுன்னு தெரிஞ்சிக்க ரொம்பவே ஆர்வமா இருக்குடா..."
"ச்சீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
கல்லுரி காலத்தில் நடந்த அந்த உரையாடல் அவன் நரம்பு மண்டலங்களின் ஊடே மறு ஒளிபரப்பு ஆகியது... சுரேஷ் லாப்டாப்பை மூடி வைத்து விட்டு தன் தலையில் கை வைத்தான்....அவனைச் சுற்றி குளிர் இன்னும் கூடியது.
--------------------------------------------------------------------------
இங்கே தென்காசியில் டைரியின் முதல் பக்கம் புரட்டிய சுரேஷ் ராகவன் கையிலிருந்த மது கிண்ணம் தரையில் விழுந்து நொறுங்கியது....
"ம்ம்ம் கவிதை எல்லாம் எழுதுவேன்னு மாமா சொன்னாரு... எங்கிட்டக் காட்டவே இல்ல.."
"ம்ம்ம்ம் எழுதுனேன்... இப்போ விட்டுட்டேன்.."
"ஏன்...?"
"நாம வேற எதாவது பேசலாமே...."
"எனக்கு கவிதைன்னா ரொம்ப பிடிக்கும் கயல்..."
"ம்ம்ம்"
"ம்ம்ம்ம்ன்னா என்ன அர்த்தம்.. எனக்காக ஒரு கவிதை எழுதுவீயா கயல்"
"ம்ம்ம்ம்"
"ம்ம்ம்ம்ன்ன்னா"
முதல் இரவில் தன் அன்பு மனைவி கயல்விழியைக் கொஞ்சிய படி பேசிய பேச்சு சுரேஷ் ராகவன் மனத்தில் மீண்ண்டும் மீண்டும் கேட்டது...
கயல் இருக்கும் வரை தன் கவிதைகளை வாசிக்கத் தனக்கு தரவே இல்லை என்பதை அவன் அப்போது தான் உணர்ந்தான். கயல் போய் இரண்டு வருடத்திற்கு பின் அவள் எழுதிய கவிதைகள் அடங்கிய டைரி இப்போது அவன் கையில்...
டைரியின் முதல் பக்கத்தில் இருந்த கவிதை.... மேலே இருக்கே அட்சரம் பிசகாம அதே கவிதை...
கவிதையின் கீழே எழுதப்பட்ட தேதியைப் பார்த்தான் சுரேஷ்... 24/02/2000
போலீஸ்காரன் ஆச்சே... அப்படியே கவிதைகளைப் புரட்டிக்கொண்டேப் போனான்... கடைசியாய் ஒரு கவிதை...
விருட்சங்களின் கிளைகளில்
இருக்கும் பூக்கள்
அதன் புன்னகையென
உலகம் சொல்லலாம்
வேர்களின் அழுகைச் சத்தம்
யார் அறிவாரோ....
அந்தக் கவிதையின் கீழ் இருந்த தேதியையும் பார்த்தான் சுரேஷ்... அது...03/01/2006...
முந்திய நாள் சுரேஷ் பார்த்த அந்த சிறுமியின் புகைப்படம்.
அதில் எழுதியிருந்த....
ஆம்பல்
மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006
சுரேஷ் ராகவனின் மூளையில் மின்னலாய் வெட்டிப் போனச் சிந்தனைகள் இறுதியில் ஒரு பெருங்குழப்பத்தை மட்டுமெ அவனுக்கு மிச்சம் வைத்தது...
ஆம்பலின் அடுத்த பாகம் எழுத நவரசப் பதிவர் புது மாப்பிள்ளை தம்பி வெட்டிப் பயலை அழைக்கிறேன்.

Saturday, December 15, 2007
PIT போட்டி டிசம்பர் மாதம்
போட்டிக்கு இன்னிக்கு தானே லாஸ்ட் அலுவலக ஆப்புகளையும் மீறி களத்தில் குதிச்சு ஒரு உள்ளேன் அய்யா வைக்க வந்துட்டோம்ல்லா...
திண்டிவனம் ஓட்டிய பகுதியில் சாலைப் பயணத்தின் போது எடுத்தப் படம்.
ஆகாயச் சூரியனின் அப்சரஸ் காதலி இந்த மலர் தானோ...
ஒரு காதலி காத்திருக்காப் பாருங்க மேலே... இங்கே மொத்தக் காதலிகளும் பூத்திருக்க... சூரியனுக்கே வியர்த்திருக்கும் நிச்சயம் அப்படி எல்லாம் பீல் பண்ணி எடுத்தப் படம் இது..

தென்னம்பிள்ளைப் பூத்திருக்கு... நம்ம கேமராவுக்கு அதுவும் புடிச்சிருக்கு
தரையில் தவழும் ரோசாப்பூக்கள்
Subscribe to:
Posts (Atom)