Saturday, December 29, 2007

ஒரு வெளம்பரம் தான்

தலைவர் ரஜினிக்குப் பொறவு நமக்குப் புடிச்ச நடிகர்ன்னா நம்ம சீயான் தாங்க... இவரைப் பல தடவை நேரில் பார்த்து இருந்தாலும்.. இவர் கூட நின்னு போட்டோ புடிக்கணும்ங்கற ஆசையும் வாய்ப்பும் ஒரு சேர நேத்து தான் நடந்துச்சு...

கடந்த ஒரு மாதக் காலமாக சீயானின் அடுத்தப் படமான கந்தசாமியின் படப்பிடிப்பு எங்க அலுவலக வளாகத்தில் தான் நடந்து வருகிறது... அந்தப் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது சீயானோடு சேர்ந்து செல் போனில் க்ளிக்கிய வெகு சுமாரான படம் இங்கே....படத்தைப் பார்த்துட்டு கரகாட்டக்காரன்ல்ல கவுண்டர் செந்திலைக் கேப்பாரே அதே கேள்வியை நீங்க என்னைப் பாத்துக் கேக்குறது என் காதில் விழுது...

"ஏன்டா தேவ்.. கச்சேரின்னு பதிவு எழுதி நீ வாங்குற இந்த அஞ்சு, பத்துப் பின்னூட்டத்துக்கு இதெல்லாம் தேவை தானா...."

அதுக்கு கரகாட்டக்காரன்ல்ல செந்தில் சொல்லுவார்ல்ல அதே பதிலை தான் பதிவுக்குத் தலைப்பா வச்சிருக்கேன்...

அப்புறம்... படத்து ஹிரோயின் ஸ்ரெயாவும் வந்துருக்கு அதையும் பார்த்துட்டோம்..ஆனாப் பாருங்க அவங்களோடச் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கற ஆசை மட்டும் இன்னும் எனக்கு வர்றல்ல...:))))

54 comments:

குசும்பன் said...

//அப்புறம்... படத்து ஹிரோயின் ஸ்ரெயாவும் வந்துருக்கு அதையும் பார்த்துட்டோம்..ஆனாப் பாருங்க அவங்களோடச் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கற ஆசை மட்டும் இன்னும் எனக்கு வர்றல்ல...:))))//


அப்ப நீங்க எனக்கு அனுப்பி இருக்கும் போட்டோவில் இருப்பது நீங்க இல்லையா? அண்ணி பதிவு எல்லாம் படிப்பாங்க என்று சொன்னதால் நீங்க ஸ்ரேயே மேல் கைப்போட்டு எடுத்ததை இங்கு சொல்லாமல் மறைத்துவிடுகிறேன். ஓக்கேவா?

ஆனா அந்த போட்டோவில்தான் நீங்க அழகா இருக்கீங்க!! பூவோடு சேர்ந்த நூலும் மனப்பது போல் உங்களால் ஸ்ரேயாவும் துக்கினீயோண்டு அழகா தெரியுது!!!

மங்களூர் சிவா said...

//
படத்து ஹிரோயின் ஸ்ரெயாவும் வந்துருக்கு அதையும் பார்த்துட்டோம்..
//
அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

அண்ணி பதிவு எல்லாம் படிப்பாங்க என்று சொன்னதால் நீங்க ஸ்ரேயே மேல் கைப்போட்டு எடுத்ததை இங்கு சொல்லாமல் மறைத்துவிடுகிறேன். ஓக்கேவா?
//
பத்த வெச்சிட்டியே பரட்டை......

குசும்பன் said...

தேவ் நீங்க எங்க போனாலும் ஏன் வெள்ளை டீ சர்டிலேயே போறீங்க,

இருந்தாலும் இந்த படத்தில் நீங்க போட்டு இருக்கும் அந்த வெள்ளை டீ சர்ட் ரொம்ப அழகா இருக்கு!!!

மங்களூர் சிவா said...

// குசும்பன் said...

ஆனா அந்த போட்டோவில்தான் நீங்க அழகா இருக்கீங்க!! பூவோடு சேர்ந்த நூலும் மனப்பது போல் உங்களால் ஸ்ரேயாவும் துக்கினீயோண்டு அழகா தெரியுது!!!
//
இதுக்கு பேரு தான் அந்த 'வஞ்ச புகழ்சி அணி' அப்பிடிங்கிறதா!?!?!?

குசும்பன் said...

//இருந்தாலும் இந்த படத்தில் நீங்க போட்டு இருக்கும் அந்த வெள்ளை டீ சர்ட் ரொம்ப அழகா இருக்கு!!!///

சாரி அந்த வெள்ளை ரவுண்ட் நெக் டீ- சர்டில் ரொம்ப அழகா இருக்கீங்க!!!

மங்களூர் சிவா said...

டிசம்பர் 29ம் தேதீ போட்ட போஸ்ட் எதுக்கு இன்னைக்கு தமிழ்மணத்துல வருது !?!?!?

இது யார் செய்த சதி!?!?

ஷ்ரேயா வந்து விளக்குவாரா?

தேவ் | Dev said...

அய்யா சிவா... குசும்பா.... செய்ங்கய்யா நல்லா செய்ங்க... கீ போர்ட்டின் கடைசி கீ கண்ணீர் விடுற வரைக்கும் கலாய்க்கணும்.... ஒரு மனுசன் வெளம்பரம் பண்ணிரக் கூடாதே.. குர்ருப்பா கிளம்பி வந்துடுறீங்களே கும்மி அடிக்க... சரி அஞ்சு.. பத்து .. பின்னூட்டம்ன்னு சொல்லியிருக்கென்... இதோடச் சேர்த்து எட்டு ஆச்சு... பாக்கி... ப்ளீஸ் ஹெல்பிங்...

குசும்பன் said...

தேவ் | Dev said...
அய்யா சிவா... குசும்பா.... செய்ங்கய்யா நல்லா செய்ங்க... கீ போர்ட்டின் கடைசி கீ கண்ணீர் விடுற வரைக்கும் கலாய்க்கணும்....///

தேவ் என்னா இப்படி சொல்லீட்டீங்க நான் எங்கன உங்கள கலாய்ச்சு இருக்கேன்!!! ஏதாவது ஒன்னை சொல்லமுடியுமா?

உண்மையை சொன்னா கலாய்பது ஆகுமா?

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
///ஷ்ரேயா வந்து விளக்குவாரா?///

ஆமாம் ஷ்ரேயா என்னா உங்க வீட்டு வேலை காரியா? என்னமோ பாத்திரம் விளக்க சொல்வது போல் சொல்றீங்க சிவா இது எல்லாம் ரொம்ப ஓவர்.

ஷ்ரேயா தேவ் கூட நின்னு போட்டோ எடுத்த பெருமை உடையவர் அவரை இப்படியா நீங்க சிறுமை படுத்துவது!!!

கோலிவுட் கோடாங்கி said...

தேவ் கூட நின்னு போட்டோ எடுத்த பிறகு ஷ்ரேயாவும், விக்ரமும் 10 இலக்கத்தில் சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள்!!!

சென்னை ஏரியா வினியோகஸ்தர் said...

இந்த படத்தை போட்டு நாங்க கந்தசாமிக்கு விளம்பரம் செய்துக்கலாமா?

அனுமதி கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம் வராது! அப்படியே நீங்க பாராட்டி ஒரு 10 வரியும் எழுதிக்கொடுக்கனும்!!!

கோலிவுட் கிசி கிசு said...

முதல் எழுத்து தே என்றும் கடைசி எழுத்து வ் என்றும் முடியும் இரண்டு எழுத்து பேர் உடையவருக்கும். ரயிலை தாவணி காட்டி நிறுத்திய நடிகைக்கும் ஒரே பார்வையில் காதல் பத்திக்கிச்சாம். நடிகை அவர் மேல் கண்ணா பின்னான்னு காதலில் இருக்கிறாராம்.

குசும்பன் said...

தேவ் பதில் சொல்லுங்க. வாங்க யாராவது இங்க கும்மி அடிச்சா சொல்லுங்க அவுங்களை நாம தனியா கவனிச்சிடலாம்.

சங்கர் அசிஸ்டண்ட் said...

அடுத்த படம் ரோபோவுக்கு ஸ்ரேயாவை புக் செய்ய போனால் தேவ் என்பவரிடம் கதை சொல்லி அனுமதி வாங்குங்க என்று சொன்னார்!
அதனால் சங்கர் உங்க வீட்டுக்கு வந்த பிறகுதான் விவாஜி பற்றி அவருக்கு தெரியவந்தது, எங்கு ரோபோ கதை உங்களிடம் சொன்னால் பொம்மை என்று உல்டா அடித்துவிடுவீங்க என்று பயந்து திரும்பி வந்துவிட்டார்!!!!

குசும்பன் said...

தல இத்தனை கமெண்ட்ஸ் போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

குசும்பன் said...

இந்த பதிவுக்கு இலவசகொத்தனார் பின்னூட்டம் போட்டால் எப்படி போடுவார்.


ஸ்ரேயாவுடன் எடுத்த போட்டோவை பதிவாக போட்டால் முதல் வரி நம்ம தங்கமணிக்கு பொறவு பிடிச்ச பெண் என்றால் ஷ்ரேயாதான் என்று சொல்ல நேரிடும் என்பதால் அதை தவிர்த்த நுண்ணரசியலை கண்டு வியக்கிறேன் என்று கரீட்டா போட்டு கொடுப்பார்:))))

கைப்புள்ள said...

போர்வாளுக்குப் பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே யாருப்பா அவரு?

கைப்புள்ள said...

//ஆனாப் பாருங்க அவங்களோடச் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கற ஆசை மட்டும் இன்னும் எனக்கு வர்றல்ல...:))))//

ஏன் சென்னைப் பல்கலைக்கழகத்துல நடந்த சிவாஜ ப்ட பாராட்டு விழா ஞாபகத்துக்கு வந்துருச்சா ராசா?
:)

ILA(a)இளா said...

அடுத்த படத்துக்கு என்ன பேரு வெச்சு இருக்கீங்க?
ஹீரோயின் யாரு?

கப்பி பய said...

அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!!

தேவ் | Dev said...

குசும்பா நண்பா... இந்தப் பதிவுக்கு பின்னூட்டப் பொங்கல் வச்சு நீ பொங்கி வழிய விட்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்குறேன்ப்பா... அப்புறம் இன்னிக்கு துபாய்ல்ல எங்கே ஜல்லிக்கட்டு நடந்தாலும் மிஸ் பண்ணாமக் கிளம்பிரணும் ரைட்டா..

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...

டிசம்பர் 29ம் தேதீ போட்ட போஸ்ட் எதுக்கு இன்னைக்கு தமிழ்மணத்துல வருது !?!?!?

இது யார் செய்த சதி!?!?

ஷ்ரேயா வந்து விளக்குவாரா?//

சிவா.ஸ்ரேயா சிவாஜி விழாவுக்கு வந்த ஸ்ரேயாவிடம் இந்தக் கேள்வி பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது..பதில் வருமா வெயிட் பண்ணி பாருங்க

தேவ் | Dev said...

//கைப்புள்ள said...

போர்வாளுக்குப் பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே யாருப்பா அவரு?//

கைப்பு அவர் தான் கைப்பு நேத்து சாமி.. நாளைக்கு கந்தசாமி...

தேவ் | Dev said...

கைப்புள்ள said...

// //ஆனாப் பாருங்க அவங்களோடச் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கற ஆசை மட்டும் இன்னும் எனக்கு வர்றல்ல...:))))//

ஏன் சென்னைப் பல்கலைக்கழகத்துல நடந்த சிவாஜ ப்ட பாராட்டு விழா ஞாபகத்துக்கு வந்துருச்சா ராசா?
:)//

கைப்பு நானும் அந்த வீடியோவை தேடிகிட்டு இருக்கேன்ப்பா.... அன்னிக்கு நம்ம வீட்டு டிவி மலேசியாவுக்குப் போனதால உள்ளூர்ல்ல நடந்த வெவரம் ஒழுங்கா நம்ம பார்வைக்கு வராமப் போயிருச்சுப்பா

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...

அடுத்த படத்துக்கு என்ன பேரு வெச்சு இருக்கீங்க?
ஹீரோயின் யாரு?//

ஹிரோ கப்பி..ஹிரோயின் ஸ்ரேயாத் தான் வேணும்ன்னு அடம் பிடிக்குறார்.. கதை முடிவானதும் நல்ல தமிழ் பெயரா வைக்கணும்ங்க

தேவ் | Dev said...

//கப்பி பய said...

அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!!//

ரை ரை ரைட்டு

தஞ்சாவூரான் said...

என்னங்க, குசும்பன் பத்த வச்சதுக்கு அப்புறம் இன்னும் பத்தலயா?? முடிவுக்குக் காத்திருக்கும் ஒரு அப்பாவி ... :) முதுகுல எத்தன விழுந்துச்சுன்னு சீக்கிறம் சொல்லுங்க. அடுத்த பதிவுக்குப் போகனும். நெறய வேல இருக்கு :))

cheena (சீனா) said...

குசும்பன் இன்னும் படம் அனுப்பலியாம் - அப்புறம் தானே தெரியும் - தஞ்சாவூரான் கொஞ்சம் வெயிட் பண்ணலாமுல்ல

குசும்பன் said...

தஞ்சாவூரான் said...
என்னங்க, குசும்பன் பத்த வச்சதுக்கு அப்புறம் இன்னும் பத்தலயா?? முடிவுக்குக் காத்திருக்கும் ஒரு அப்பாவி ... :) முதுகுல எத்தன விழுந்துச்சுன்னு சீக்கிறம் சொல்லுங்க. அடுத்த பதிவுக்குப் போகனும். நெறய வேல இருக்கு :))///


எங்க தேவ்வை என்னான்னு நினைச்சிங்க அவரு என்னா கைப்புள்ளயா அடிவாங்கினத எல்லாம் பெருமையா வெளிய செல்ல, ராணுவ இரகசியத்தை கண்டு பிடிச்சாலும் பிடிக்கலாம் ஆனால் தேவ் அடிவாங்கினத கண்டு பிடிக்க முடியாது, அடிவாங்கும் பொழுது நீங்க அவரு வீட்டில் இருந்தா கூட அடிவாங்கும் சவுண்ட் வெளியே வராது, அது பற்றி தொழில்நுட்ப பதிவு ஒன்னு எழுத வேண்டும் என்று ஏல்லோரும் மனு போட்டால் எழுதுவார்!!!!

குசும்பன் said...

//cheena (சீனா) said...
குசும்பன் இன்னும் படம் அனுப்பலியாம் - அப்புறம் தானே தெரியும் - தஞ்சாவூரான் கொஞ்சம் வெயிட் பண்ணலாமுல்ல//

சீனா தாத்தா அனுப்பி வாங்க வேண்டியது எல்லாம் வாங்கி கட்டிக்கிட்டாச்சு அதான் பதில் எழுத முடியவில்லை அவரால்:))

cheena (சீனா) said...

குசும்பன், என்னது இது - தாத்தா தாத்தா ன்னு - எனக்கு ஏற்கெனவே 2 பேத்தி ஒரு பேரன் இருக்காங்க - நீ என்ன இரண்டாவது பேரனா ? மொதப் பேரன் மூத்த பேரன் நாலு வருசம் நாலு மாசம் முன்னாடித் தான் பொறந்தான். நானே சின்ன வயசுலே தாத்தாவாயிட்டேன்னூ கவலையா இருக்கேன் - நீ வேற

தேவ் | Dev said...

ஆகா கேப் விட்ட ரெண்டு நாள்ல்ல கிடாவாக்கி மாலை மரியாதை எல்லாம் பண்ணத் தயார் ஆகிட்டிங்களா....

தேவ் | Dev said...

தஞ்சாவூராரே... ஏன் இந்த மர்டர் வெறி... சீயான் கூட போட்டோ எடுத்தது ஒரு கொலைக் குத்தமாய்யா.... நடக்காத மேட்டருக்கு எல்லாம் மேக்கப் போட்டு கட் அவுட் வச்சு ஆரோக்யா நாலரை பால் ஊத்துறீங்களே இதெல்லாம் நியாயமா... தர்மமா....

Boston Bala said...

பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பர்; படம் சூப்பரோ சூப்பர்.

அடுத்து உங்கள் வளாகத்தில் சிம்பு கெட்டவன் வர பிராப்திரஸ்து ;)

தேவ் | Dev said...

அய்யா சீனா....தஞ்சாவூரார் பசும் பால் தான் ஊத்துனார்.. நீரு கள்ளி பால் ஊத்தி என்னைக் கொல்ல பாக்குறீரு.... இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.

தேவ் | Dev said...

யப்பா குசும்பா... ஸ்ரேயா கோஷல் கூட நீ பேக் ஸ்டேஜ்ல்ல டிஸ்கஷனுக்கு ட்ரை பண்ணி செக்யூரிட்டி கிட்டச் செருப்படி பட்ட மேட்டரை நீ அழுதுகிட்டே என்கிட்டச் சொன்ன மேட்டரை நான் எப்பவாது யார் கிட்டவாது சொன்னேனா... எவ்வளவு நாகரீகம் காத்தேன்... அந்த நாகரீகம் உன்னிடம் இல்லாமல் போனது ஏனப்பா.. அய்யோ நெஞ்சு பொறுக்குதில்லையே....

தேவ் | Dev said...

//cheena (சீனா) said...

குசும்பன், என்னது இது - தாத்தா தாத்தா ன்னு - எனக்கு ஏற்கெனவே 2 பேத்தி ஒரு பேரன் இருக்காங்க - நீ என்ன இரண்டாவது பேரனா ? மொதப் பேரன் மூத்த பேரன் நாலு வருசம் நாலு மாசம் முன்னாடித் தான் பொறந்தான். நானே சின்ன வயசுலே தாத்தாவாயிட்டேன்னூ கவலையா இருக்கேன் - நீ வேற//

ஆகா கத்தியாக் கேள்வி கத்திக் கேட்டு இருக்கார் நம்ம சீனா... வாப்பா குசும்பா வந்து பதில் சொல்லிட்டு போ...

தஞ்சாவூரான் said...

தேவ்,

சீயானுக்கே இந்த கொலவெறின்னா, சிரேயாவுக்கு??? எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுப் படத்தப் போடுங்க (இருந்தா) :)

குசும்பா,

சீனாவைத் தாத்தா தாத்தா எனக் கூப்பிடுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்! 60 வயசுல ரஜினி சிரேயாகூட ஆட்டம் போடலாம் அவரத் தாத்தான்னு கூப்பிடமாட்டீங்க, அவர விட பத்தே பத்து வயசு அதிகமான சீனாவைப் போய் எப்பிடி??

இலவசக்கொத்தனார் said...

அதாருப்பா வெள்ளை பனியனோட நம்ம தலைவர் கிட்ட நிக்கறது?

இலவசக்கொத்தனார் said...

//போர்வாளுக்குப் பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே யாருப்பா அவரு?//

கைப்ஸ், இதையேதான் நானும் கேட்டேன். யாருப்பா அது?

இலவசக்கொத்தனார் said...

//இந்த பதிவுக்கு இலவசகொத்தனார் பின்னூட்டம் போட்டால் எப்படி போடுவார்.//

அந்த மாதிரி பதிவுக்கு எல்லாம் போனாலும் நம்ம பேர்ல கமெண்ட் போட்டா அங்க என்ன வேலை உங்களுக்கு என கேள்வி வரும் என்பதால் வேறு யாருக்காவது எழுதிக் கொடுப்பதோடு நம் வேலை முடிந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

cheena (சீனா) said...

aamaa, தஞ்சாவூரு, எப்ப்டி இருக்கீங்க மாமா, நான் தஞ்சையிலே தான் பொறந்தேன், அங்கே அப்ப, எங்க வூட்டுக்குப் பக்கத்துலே இருந்து டெயிலி என்ன வந்து பாத்துட்டுப் போன மாமா நீங்க தானே - வூட்லே கொள்ளுப் பேரனுங்க எல்லாம் ஒழுங்கா இருக்கானுங்களா -

தேவ் | Dev said...

//தஞ்சாவூரான் said...
தேவ்,

சீயானுக்கே இந்த கொலவெறின்னா, சிரேயாவுக்கு??? எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுப் படத்தப் போடுங்க (இருந்தா) :) //

ஆகா ஆறு மணி ஷோவுக்கு டிக்கெட் எடுத்து வந்துட்டு ஆப்புரேட்டரைப் பாத்து படத்தைப் போடு படத்தைப் போடுன்னு லந்து பண்ற மாதிரி நான் எடுக்காதப் படத்தை பார்த்து போடுய்யான்னு மெரட்டுறாங்களே...இந்தக் கும்மியை கம்மி பண்ணவே மாட்டாங்களா......

தஞ்சாவூர்காரரு மேளம் இல்லமாலே என்னை இந்த போடு போடுறாரே.. மேளமும் கையிலே இருந்தா என்ன ஆகுமோ?

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
அதாருப்பா வெள்ளை பனியனோட நம்ம தலைவர் கிட்ட நிக்கறது?//

கருப்பு சட்டையிலே கருப்பா நிக்குற அந்த மனுசனை உங்க யார் கண்ணுக்குமே தெரியாதா..... அது யாருப்பா தலைவர் நிக்குறது போட்டோவுல்ல... அதையும் சொன்னீங்கன்னா இன்னொரு வெளம்பர பதிவு போட்டுரலாம்ய்யா

தேவ் | Dev said...

//Boston Bala said...
பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பர்; படம் சூப்பரோ சூப்பர்.

அடுத்து உங்கள் வளாகத்தில் சிம்பு கெட்டவன் வர பிராப்திரஸ்து ;)//

சீனியர்... என்ன இப்படி முடிஞ்சுப் போன மேட்டருக்கு ஆசி இப்போ சொல்லுறீங்க... நீங்க இன்னும் வல்லவன் பாக்கலீயா.... நம்ம கேம்பஸ்க்கு... நோட் த பாயிண்ட் நம்ம கேம்பஸ்க்கு கெட்டவர் வந்து கெட்ட ஆட்டம் ஆல் ரெடி போட்டாச்சு... போட்டோ எடுத்தப்போ டிஜி கேம் தீ குளிச்சது தனிப் பதிவுக்கான மேட்டர். :)))))

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
//போர்வாளுக்குப் பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே யாருப்பா அவரு?//

கைப்ஸ், இதையேதான் நானும் கேட்டேன். யாருப்பா அது?//

அட அநியாய ஆபிசர்களா... எனக்கு வெளம்பரம் போடலாம்ன்னு பார்த்தா பக்கத்துல்ல நிக்கறவரைப் பத்தி பேசியே என் துக்கத்தைக் கூட்டுறீங்களே ஏன்ய்யாஆஆஆவ்வ்வ்வ்வ்

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
//இந்த பதிவுக்கு இலவசகொத்தனார் பின்னூட்டம் போட்டால் எப்படி போடுவார்.//

அந்த மாதிரி பதிவுக்கு எல்லாம் போனாலும் நம்ம பேர்ல கமெண்ட் போட்டா அங்க என்ன வேலை உங்களுக்கு என கேள்வி வரும் என்பதால் வேறு யாருக்காவது எழுதிக் கொடுப்பதோடு நம் வேலை முடிந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

ஒத்துக்குறேன் தலைவரே நீங்க தான் ஒய்பாலஜி கிளாஸ்ல்ல பர்ஸ்ட் மார்க்க்குன்னு நான் ஒத்துக்குறேன்...:))))

தேவ் | Dev said...

//cheena (சீனா) said...
aamaa, தஞ்சாவூரு, எப்ப்டி இருக்கீங்க மாமா, நான் தஞ்சையிலே தான் பொறந்தேன், அங்கே அப்ப, எங்க வூட்டுக்குப் பக்கத்துலே இருந்து டெயிலி என்ன வந்து பாத்துட்டுப் போன மாமா நீங்க தானே - வூட்லே கொள்ளுப் பேரனுங்க எல்லாம் ஒழுங்கா இருக்கானுங்களா -//

ஆகா வெளம்பர பதிவு வரலாற்று பதிவா இல்ல போயிட்டு இருக்கு.... நடத்துங்க சாமிகளா.. இது கூட நல்லாத் தான் இருக்கு பல உண்மை வெளியே வரும் போலிருக்கே...

இலவசக்கொத்தனார் said...

மீ த 50?

குசும்பன் said...

//இலவசக்கொத்தனார் said...
அதாருப்பா வெள்ளை பனியனோட நம்ம தலைவர் கிட்ட நிக்கறது?//

அவரு பேரு என்னமோ சொன்னாங்களே ஆங் அவரு பேரு சீயான் விக்ரமாம், ஏதோ படத்தில் தலை காட்டி இருக்காராம் சொல்லிக்கொள்ளும் படி ரொம்ப முக்கியமானவர் எல்லாம் இல்லை, ஏன் தான் நம்ம தேவ் இப்படி மத்தவங்க கூட போட்டோ எடுத்து அவனுங்க மார்கெட்டை ஏத்திவிடுகிறாரோ!!!

குசும்பன் said...

இலவசக்கொத்தனார் said...
மீ த 50?////

இதுக்கு பேருதான் அநியாயம் என்கிறது மாஞ்சு மாஞ்சு கும்மி அடிச்சு 50 அடிக்க போனா நடுவில் வந்து ஒரு ஒத்ததை கமெண்டை போட்டு 50 அடிச்சிட்டீங்களே கொத்ஸ் இது நியாயமா?

குசும்பன் said...

///நான் எடுக்காதப் படத்தை பார்த்து போடுய்யான்னு மெரட்டுறாங்களே...இந்தக் கும்மியை கம்மி பண்ணவே மாட்டாங்களா......///

என்னது எடுக்கவே இல்லீயா அப்ப நீங்க அனுப்பியதை நான் ரிலீஸ் செய்யட்டுமா? யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க!!!

குசும்பன் said...

///தேவ் | Dev said...
அட அநியாய ஆபிசர்களா... எனக்கு வெளம்பரம் போடலாம்ன்னு பார்த்தா பக்கத்துல்ல நிக்கறவரைப் பத்தி பேசியே என் துக்கத்தைக் கூட்டுறீங்களே ஏன்ய்யாஆஆஆவ்வ்வ்வ்வ்////

என்ன இது சிறு பிள்ளை தனம் சூரியனுக்கு யாராவது டார்ச் லைட் அடிப்பாங்களா? இல்லை எவெரெஸ்டுக்கு ஏணி கட்டுவாங்களா?

tamil10