புது வருசத்துல்ல நமக்கு ஒரே விளம்பர பதிவா போட வேண்டியதாப் போயிட்டு இருக்கு.... மக்களே உங்களுக்கு சத்திய சோதனை தான் போங்க...
நான் எழுதுன பதிவை முதல்ல ஒரு தடவை படிக்காம நீங்க எஸ்கேப் ஆயிருந்தாலும் இன்னொரு தடவை உங்களைப் பொறி வச்சு பிடிக்குறதுக்குன்னா வாய்ப்பா நம்ம பெனத்தலார் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்துருக்கார்ன்னு சொல்லணும்... பெனத்தாலர் மட்டும் கொடுப்பாரே இந்தாங்க நானும் தர்றேன்னு சொல்லி இங்கே பாச மழைப் பொழிஞ்சிருக்கான் நம்ம தம்பி வெட்டி பயல் அதுன்னால இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப் போகும் எல்லாப் புகழையும் அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.. இப்போ ஆரம்பிக்கிறேன்.
தேவ்க்கு இரண்டு பதிவுகள் உண்டுங்கற மேட்டர் உங்க எல்லாருக்குன் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. பக்கம்78 கதை கவிதைக்குன்னு எழுதுறது...சென்னைக் கச்சேரிங்கறது சும்மா தோணுறதை எல்லாம் சொல்லுறது.. முன்னதுல்ல எழுதுவேன்... பின்னதுல்லே பேசுவேன் அப்படின்னு சொல்லலாம்...
அதுன்னால எழுதுனது பேசுனது இரண்டுல்லயும் பிடிச்சதைச் சொல்லுறேன்...
சென்னைக் கச்சேரியைப் பொறுத்த வரை ஆபிசர்கள் பதிவுகள் எனக்கு மிகவும் நெருக்கமானப் பதிவுகளாகச் சொல்லுவேன்... ஆபிசர் பதிவுகள் தினசரி அலுவலகத்தில் நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்களைக் குறித்தான வாய்ப்பாக அந்தப் பதிவுகளை நான் பார்க்கிறேன்..இதுவரைப் படிக்கல்லன்னாப் படிச்சுப் பாருங்களேன்.
ஆபிசர் ஆன கதை, அம்மா உங்க பையன் இப்போ ஆபிசர், ஆபிசருக்கு இன்னிக்கு அப்புரேசல், அட அநியாய ஆபிசரே, ஆபிசர் விடைபெறுகிறார், எங்க ஆபிஸ் பருத்திவீரன, எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்,
ஆபிசர் கவிஞர் ஆகிறார்
இந்தப் பதிவுகள் தவிர்த்துப் பார்த்தீங்கன்னா.. சமீபக் காலத்தில் போட்ட கச்சேரி பிலிம்ஸ் பாணி பதிவுகளுக்கான முன்னோடி பதிவாய் இந்தப் பதிவைச் சொல்லுவேன்.. ஒரு ரயில் பயணத்தில் உதித்த யோசனை இது... அப்படியே உசுப்பேத்தி ரணகளப்படுத்திட்டோம்ல்ல....நண்பர் கொத்தனாரை வைத்து உருவாக்கிய இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி பதிவு எனக்குப் பிடித்தமான ஒரு பதிவு.
இந்தப் பதிவைத் தொடர்ந்து பின்னால் எழுதி பெரு வெற்றி பெற்ற பதிவுத் தொடர் தான் விவாஜி.
விவாஜியைத் தொடர்ந்து அதே பாணியில் பதிவுலக லொள்ளு சபா ரேஞ்சுக்கு கச்சேரி பிலிம்ஸ் பதிவுகள் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். விரைவில் பாலாகன், மற்றும் கே.டி.எம் பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சினிமாக் குறித்தான விமர்சனப் பதிவுகள் தவிர ஒரளவுக்கு அலசி போட்ட சந்திரமுகி ஒரு ரஜினி படமா? பதிவும் மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் பதிவும் எனக்கு விருப்பமான மற்ற பதிவுகள்.
அரசியலில் ஒரளவுக்கு நாட்டம் இருந்தாலும் அது பற்றி எழுதுவதற்கு போதிய விஷய ஞானம் இருக்காங்கற எண்ணம் அதைப் பத்தி எழுதுறதை அடிக்கடி தடுத்து விடுவது உண்டு..அந்த தடுப்புக்களையும் மீறி நான் போட்ட இந்த இரண்டு அரசியல் சம்பந்தமானப் பதிவுகளும் எனக்குப் பிடிக்கும்
தலைவர் ஆவாரா தளபதி? மற்றும் கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்
மேலே குறிப்பிட்ட எல்லாப் பதிவுகளும் நான் கச்சேரியில் போட்ட பதிவுகள்...
பக்கம்78ஐ பொறுத்தவரை எனக்குப் பிடித்தவைகளை மட்டுமே எழுதி வருகிறேன்.. அது உங்களுக்கும் பிடித்தால் சந்தோஷம்...
இப்படி சொந்தச் செலவில் விளம்பர தட்டி வைக்க ஒரு வாய்ப்பு கொடுத்த பெனத்தலாருக்கு ஒரு டாங்க்ஸ் சொல்லிட்டு... இப்படி சொந்த வீட்டுக்கே மேப் போட்டு சுட்டி கொடுக்குற ஐடியா ஊருக்குச் சொன்ன பதிவுலக சுட்டி செம்மல் பாபா அவர்களுக்கும் ஒரு பெரிய டாங்க்ஸ் சொல்லிகிட்டு முடிச்சிக்குறேன்... நன்றி.
நம்ம பங்குக்கு நாம யாரைக் கூப்பிடலாம்ன்னு யோசிச்சா இவங்க நியாபகம் தான் வந்துச்சு.
நாகை சிவா
கீதா சாம்பசிவம்
மு.கார்த்திகேயன்
17 comments:
// இப்படி சொந்த வீட்டுக்கே மேப் போட்டு சுட்டி கொடுக்குற ஐடியா ஊருக்குச் சொன்ன// :-)) எப்படியெல்லாம் உதாரணத்துல வூடு கட்டறாங்கபா!
வாரிசு கருத்துக்கணிப்பைச் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்..சேது சமுத்திர நாயகனும் மறக்கமுடியாதது :-)
உங்கள் எழுத்துக்களில் எனக்கு
"சின்னக்குளமும் விடுமுறைகளும்" மற்றும் "என்கவுண்டர்" ஆகியவை மிகவும் பிடித்தமானவை!!
இந்த வருடமும் மேன்மேலும் உங்கள் சிறப்பான எழுத்துக்களை காண ஆசை!! :-)
எனக்கும் சின்னக்குளமும் விடுமுறைகளும் ரொம்ப பிடிச்சுது.
\\பக்கம்78ஐ பொறுத்தவரை எனக்குப் பிடித்தவைகளை மட்டுமே எழுதி வருகிறேன்.. அது உங்களுக்கும் பிடித்தால் சந்தோஷம்...\\
எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்களின் பக்கம்78 ;))
அண்ணே,
பினாத்தலாருக்கு முன்னாடியே நான் உங்களை இந்த விளையாட்டுக்கு கூப்பிட்டுட்டேன்... இப்பெல்லாம் நீங்க நம்ம ப்ளாக் பக்கம் வரது இல்லையா. அதனால தெரியல :-))
My Choice - One and Only "சின்னகுளமும் சில விடுமுறைகளும்"
(பாட்சா)
தேக்சா ரீமேக்..
பெனாத்தல்: பதிவுல என்ன சொன்னீங்க உடனே ஒத்துக்கிட்டாங்க?
தேவ்: ஒரு உண்மைய சொன்னேன்..
கோரஸ்: தேக்சா, தேக்சா, தேக்சா..
//பினாத்தல் சுரேஷ் said...
// இப்படி சொந்த வீட்டுக்கே மேப் போட்டு சுட்டி கொடுக்குற ஐடியா ஊருக்குச் சொன்ன// :-)) எப்படியெல்லாம் உதாரணத்துல வூடு கட்டறாங்கபா!
வாரிசு கருத்துக்கணிப்பைச் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்..சேது சமுத்திர நாயகனும் மறக்கமுடியாதது :-)//
வாங்கய்யா பெனத்தலாரே.. அந்தக் கருத்துக் கணிப்பை எடுத்த பெரிய இடம் படுற பாட்டைப் பாத்த பொறவுமா அதை எல்லாம் நான் சொல்லுவேன்னு எதிர்பாத்தீங்க.. நாங்க எல்லாம் உஷார்ங்கண்ணா உஷார்.
// CVR said...
உங்கள் எழுத்துக்களில் எனக்கு
"சின்னக்குளமும் விடுமுறைகளும்" மற்றும் "என்கவுண்டர்" ஆகியவை மிகவும் பிடித்தமானவை!!
இந்த வருடமும் மேன்மேலும் உங்கள் சிறப்பான எழுத்துக்களை காண ஆசை!! :-)//
நன்றி சிவிஆர்.. நீ சொன்ன மாதிரி இந்த வருசமாவது சிறப்பா எழுத முயற்சிக்குறேன் :))))
//இலவசக்கொத்தனார் said...
எனக்கும் சின்னக்குளமும் விடுமுறைகளும் ரொம்ப பிடிச்சுது.//
நன்றி கொத்ஸ் அந்தக் கதை எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.... அதுல்ல நிறைய உண்மை இருக்கு அப்படிங்கற காரணமும் இருக்குமோ...
கோபிநாத் said...
\\பக்கம்78ஐ பொறுத்தவரை எனக்குப் பிடித்தவைகளை மட்டுமே எழுதி வருகிறேன்.. அது உங்களுக்கும் பிடித்தால் சந்தோஷம்...\\
எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்களின் பக்கம்78 ;))
நன்றி கோபி.
//
தம்பி வெட்டி... அண்ணன் அலுவலகத்தின் ஆளுயர ஆப்புக்கள் மத்தியில் சிக்கி திசை தெரியாமல் சொந்த பதிவுக்கே போகாமல் இருந்த வரலாறு அறியாதவனா நீ... உன் பதிவுக்கு வரவில்லை என வருத்தப்படலாமா....பெனத்தலாரைப் போல் ஒரு மெயில் தட்டியிருந்தால் போதுமே பாய்ந்து வந்திருப்பேனே என் கண்மணி... வெட்டிப்பயல் said...
அண்ணே,
பினாத்தலாருக்கு முன்னாடியே நான் உங்களை இந்த விளையாட்டுக்கு கூப்பிட்டுட்டேன்... இப்பெல்லாம் நீங்க நம்ம ப்ளாக் பக்கம் வரது இல்லையா. அதனால தெரியல :-))//
//வெட்டிப்பயல் said...
My Choice - One and Only "சின்னகுளமும் சில விடுமுறைகளும்"//
நன்றி வெட்டி
//ILA(a)இளா said...
(பாட்சா)
தேக்சா ரீமேக்..
பெனாத்தல்: பதிவுல என்ன சொன்னீங்க உடனே ஒத்துக்கிட்டாங்க?
தேவ்: ஒரு உண்மைய சொன்னேன்..
கோரஸ்: தேக்சா, தேக்சா, தேக்சா..//
படிச்சதுல்ல பிடிச்சது பத்தி கேட்டா இப்படி படிக்காதது பத்தி எல்லாம் கருத்துச் சொல்லக் கூடாது ஆமா சொல்லிட்டேன்.
அழைப்பே இன்னிக்குத் தான் பார்க்கிறேன், எனக்கும் உடம்பு சரியில்லை, கணினிக்கும் உடம்பு சரியில்லை, அப்புறம் 2 பேரும் ஊர் சுத்தப் போயிட்டோம். இன்னிக்குத் தான் 2 பேரும் வந்தோம், அது சரி, இத்தனை நாட்கள் கழிச்சு எப்படி என் நினைப்பு வந்து ரொம்ப அன்பாக் கூப்பிட்டிருக்கீங்க? :P
அட என்னங்க சங்கத்தின் முதல் தலைவிங்க நீங்க.. உங்களை எல்லாம் எங்களால் மறக்க முடியுமா? உங்க பதிவுகள் வருவதும் உண்டு படிப்பதும் உண்டு... சோம்பேறி தனம் காரணமாக பின்னூட்டம் இடுவது மட்டும் இல்லை.. அதான் இப்போ வந்து அழைப்பு வச்சுட்டோம் இல்ல.. வந்து கலக்குங்க...
அட என்னங்க சங்கத்தின் முதல் தலைவிங்க நீங்க.. உங்களை எல்லாம் எங்களால் மறக்க முடியுமா? உங்க பதிவுகள் வருவதும் உண்டு படிப்பதும் உண்டு... சோம்பேறி தனம் காரணமாக பின்னூட்டம் இடுவது மட்டும் இல்லை.. அதான் இப்போ வந்து அழைப்பு வச்சுட்டோம் இல்ல.. வந்து கலக்குங்க...
Post a Comment