உப்பிட்டத் தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்..
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்...
கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்...
கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....
உன்னைப் பத்தி யாரு அட...என்னச் சொன்னப் என்ன..
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...
அட மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காகதுன்னு சொல்லு...
மூன்றாம் பிறை மெல்ல மெல்ல
முழு நிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா..... ரீப்பீட்டு
முழு நிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா..... ரீப்பீட்டு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
அதற்கு காலம் கனிஞ்சிருக்கு...
நேரம் நிறைஞ்சிருக்கு...
4 comments:
என்னால முடியல... நானும் பத்தாவது படிக்கறப்போ இருந்து இப்போ வந்துடுவாரு அப்போ வந்துடுவாருன்னு 12 வருஷம் ஆயிடிச்சி. இன்னமும் பாடல் வரிகளை ஆராய்ச்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
//கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....
//
சென்னை வந்த போது இதை ஜாக்கி சான் பாடினா எப்படி இருக்கும்-னு கற்பனை பண்ணிப் பார்த்தேன்! :-)
//மூன்றாம் பிறை மெல்ல மெல்ல
முழு நிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா..... ரீப்பீட்டு//
அந்த முழு நிலவு அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து காணாமல் போய்(அமாவாசை) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் முகத்தை காட்டி பூச்சாண்டி காட்டும். இந்த நிலவுக்கு இதே வேலையா போச்சி.. :P...
தேவ் அண்ணா... இன்னுமா அவர் வருவார்னு நீங்க நம்பிட்டு இருக்கிங்க..?
இப்ப இந்தப் பாட்டு வரிகளையெல்லாம் கொடுத்ததுக்கு என்ன அடிப்படைக் காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?
எல்லாரும் அரசியலுக்காக சினிமால இருந்தா... இவரு சினிமாவுக்காக அரசியல்ல இருக்காரோன்னு சந்தேகம்.
Post a Comment