Tuesday, April 01, 2008

கச்சேரி வித் ஜி.ரா மற்றும் கே.ஆர்.எஸ்

வணக்கம் மக்கா,

பொதுவாக் கச்சேரி வச்சுக் கொஞ்ச் கேப் விழுந்துப் போச்சு அதுன்னால்லா யாருக்கும் எந்த டேமேஜுமில்லன்னு வைங்க... இப்போ கச்சேரி வைக்க வேண்டிய அளவுக்கு ஒரு சரித்திர புகழ் வாயந்த சம்பவம் திங்கள் மாலை அடையார் காபி டேவில் நடந்த படியால இந்த்க் கச்சேரி..

கண்டேன் ஜி.ரா வை.... இப்படித் தான் இந்தப் பதிவுக்கு தலைப்பு வச்சிருப்பேன் அவர் கூட இன்னொரு வி.ஐ.பி வராமல் இருந்திருந்தால்...முதல்ல ஜி.ரா பத்திச் சொல்லணும் நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் நான் படித்து ரசிதத பதிவ்ர்களில் ஒருவர்...கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு நானும் பதிவெல்லாம் எழுத வந்து....அவரது எழுத்துக்களில் எப்போதும் நிறைந்திருக்கும் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்தமான மட்டுமின்றி நான் வியக்கும் விஷயமும் கூட...முடிந்த வரை அதை என் பதிவுகளிலும் பின்பற்ற நான் முயலுகிறேன்...

ஜிராவின் கதைகளுக்கு மட்டுமன்றி அவருடைய பயணக்கட்டுரைகளுக்கும் நான் விசிறி.. என்னக் காரணமோ இப்போதெல்லாம் அவர் அதிகமாய் பயணக் கட்டுரைகள் எழுதுவது இல்லை.. அவர் எழுத வேண்டும் என்பது என் அவா..நல்லதொரு சினிமா ரசிகர்...அவரோடு ஒரிருமுறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன்... ஆனா நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை...மஞ்சச் சொக்காப் போட்டுகிட்டு படு ஸ்மார்ட்டா வந்திருந்தார் ஜிரா..

ஒலக லெவல்ல அவர் கூட என்னத்தைப் பேசறது அப்படின்னு நாலு நாள் வளத்த தாடியை பிச்சிகிட்டு இருக்கும் போது போன் பண்ணார் ஜி.ரா... நான் தனியா வர்றல்ல...அப்படின்னு அவர் விட்டச் சின்னக் கேப்ல்ல மோனிகா சால்சா பாலையும் கூட கூட்டிட்டு வரப் போறாரோன்னு நினைச்சேன்... ஆனா அவரே கேப்பை பில் பண்ணார்..அவர் கூட வர்றதா சொன்ன அந்த வி.ஐ.பி... ஆன்மீகச் சுனாமி... சங்கம் வந்து நகைச்சுவை விருந்து பரிமாறிய சிரிப்புச் சித்தர் அன்பர் கே.ஆர்.எஸ்..

ஆகா ஓலகம் சுற்றும் வாலிபர் ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கம் பக்தி இலக்கிய வித்தகர் வேறவா... வாய்ல்ல கம் தடவாமலே கம்ன்னு இருந்தா தான் நம்ம பொழப்பு ஓடும்ன்னு முடிவு பண்ணிகிட்டேன்...

முதல்ல நாங்க சந்திக்க நினைச்ச இடம் அடையார் ஷேக்ஸ் அன்ட் க்ரீம்ஸ் ஆனாப் பாருங்க... இப்படி ஒரு ஆன்மீகச் சுனாமி வந்தா இடம் தாங்காதுன்னு மராமத்து பணி நடப்பதாய் சொல்லிக் கடையைச் சாத்திட்டாங்க...

அப்புறம் அப்படியே இந்திரா நகர்ல்ல தேடி அலைஞ்சு திரிஞ்சதுல்ல அமைஞ்ச இடம் தான் காபி டே...வரும் போதே முகமெல்லாம் பூரிக்க புன்னகை ஏந்தி இளமைத் துள்ளலோடு வந்தார் நம்ம சிரிப்பு சித்தர்... அதிக அறிமுகம் இல்லன்னாலும் முதல் சந்திப்புல்ல அப்படி ஒரு நட்பு பூத்திருச்சுன்னாப் பாருங்களேன்...

காபி கடையிலே காபிக்குச் சொல்லிட்டு.. கூட பிரட் பன் எல்லாம் சொன்னோம்... அதுக்குக் காத்திருந்த நேரத்திலே கும்மியை ஆரம்பிச்சோம்... ஜி.ராவுக்கு இன்னொரு பிரபல பதிவர் கொடுக்கச் சொன்னப் பரிசைக் கொடுத்துட்டு ஒரு சின்ன விளையாட்டு நடத்தினோம்...

பரிசு கொடுத்தப் பதிவர் யார்ன்னு ஜிராவைக் கண்டுபிடிக்கச் சொன்னோம்... ஜி.ராவும் கரெக்ட்டா தப்பா சில பெயர்களைச் சொன்னார்... பரிசுப் பொருளைப் பார்த்து ரொம்ப நேரம் யோசிச்சார்.. யோசிச்சுகிட்டே இருந்தார்... அதுக்குள்ளே காபியைக் கலக்கிக் கொண்டு வந்துட்டாங்க...

நம்ம கே.ஆர்.எஸ்குள்ளே இருந்த அம்புட்டு புகைப்படம் ஆர்வமும் பீறிட அந்தக் காபியை கன்னாபின்னான்னு போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டார்.. ஒரு கட்டத்துல்ல காபியே போதும்ய்யா... என்னைக் குடிக்கப் போறீயா...இல்ல அப்படியே கவுந்துரவான்னு கேக்க ஆரம்பிச்சுருச்சுன்னாப் பாருங்க...

கே.ஆர்.எஸ் கலையார்வம் காபியைத் தாண்டி காபி டே சுவத்துல்ல இருந்த ஒரு புலி மேலே பாஞ்சுது... ஆனாப் பாருங்க.. நம்ம ஜி.ரா இன்னும் யோசிச்சு முடிக்கவே இல்ல... நிலவரம் கலவரமாப் போயிட்டு இருந்துச்சு.. நான் காபியை கடக்குன்னு குடிச்சுட்டு நிமிந்தா... என்னை புலி பக்கமாப் போய் நிக்கச் சொல்லி போட்டோவா எடுத்து தள்ளுனார்...

இன்னும் ஜிரா யோசிச்சுகிட்டே இருக்க.. அப்படியே அசால்ட்டா களத்தில் குதிச்ச கே.ஆர்.எஸ் சரியாப் பதிவர் யாருன்னு சொல்லி அசத்துனார் பாக்கணும்... அதான் கே.ஆர்.எஸ்ன்னு சொல்லத் தோணுச்சு,,

ஒரு வழியா யோசனை எல்லாம் முடிஞ்சு வெளியே வந்த ஜிரா நம்ம கும்மியிலே என்டிரி ஆனாரு...மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை என்னையும் கவனிக்க வச்ச ஜிரா... இந்த ஆன்மீகச் சிங்கம் தமிழ் கலையுலகுக்கு கிடைக்கவேண்டிய ஒரு தவப்புதல்வன் அப்படின்னு டாபிக் மாத்துனார்....

ஆகா.... விவாஜிக்கு அப்புறம் நாமும் சரியானக் கதைச் சிக்காம சைலண்ட்டாவே இருக்கோமேன்னு பீலீங்ல்ல இருந்த என்னையும் உசுப்பி விட்டார்...கே.ஆர்.எஸ்க்கு ஏத்த கதையாக இருந்தால் தானே தயாரிப்பதாகவும் அயல்னாடுகளில் சூட்டீங் நடத்த ஆவனச் செயவதாகவும் வாக்கு கொடுத்தார்...

அப்புறம் என்ன சூடான காபியும் சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய் மூளையை முட்டி எழுப்ப... அழகான கதை ஒண்ணு ரெடி ஆச்சு... படத்துக்குப் பேரும் வச்சோம்....

இந்த லோகத்தில் நானும் அழகப்பன்

கே.ஆர்.எஸ் மூன்று வேடங்களில் நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்... நாலாவதாக நாயகி வேடத்திலும் அவரே நடிக்க ஜி.ரா ஆலோசனை வழங்கினார்.. அதையும் புன்முறுவலோடு கே.ஆர்.எஸ் ஏற்றுகொண்டார்...படத்தில் பல கோலிவுட், பாலிவுட், டொலிவுட் மற்றும் ஹாலிவுட் முக்கிய பிரபலங்களோடு நம் பதிவுலகின் அதி முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது தயாரிப்பாளர் அளித்த உறுதி...

அப்புறம்... கே.ஆர்.எஸ் பகிர்ந்த முக்கிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில்....

சும்மா ஒரு சின்ன ட்ரெயிலர்.... மேயர் வீட்டில் இளாவும் ஆப்பிள் மரமும்.... பாபாவுக்கு பிடித்த பாபி....விரைவில் எதிர்பாருங்கள்....

இப்போதைக்கு இம்புட்டு தான்.. வர்றட்டா

25 comments:

கோபிநாத் said...

அண்ணே கடைசிவரைக்கும் அந்த பரிசு கொடுத்த பதிவர் யார்ன்னு சொல்லவேல்லியே!!! ;))

படத்தோட தலைப்பு எல்லாம் சூப்பர் ;))

இப்போதே ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன் ;)

Unknown said...

பெயரைச் சொல்ல அனுமதி கிடைத்தவுடன் சொல்லிடுறேன்... அது வரைக்கும் அது யார்ன்னு கண்டுபிடி பாக்கலாம் :))

படத்தின் வெற்றிக்கு முதல் வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி கோபி

இலவசக்கொத்தனார் said...

நல்லா மொக்கை போடறீங்கப்பா!!

Unknown said...

சரித்திரம் படைக்கும் இந்த சந்திப்பை மொக்கை என்று வர்ணிப்பதா? கொத்ஸ் என்னக் கொடுமை இது? ஆன்மீக தளபதி சிரிப்பு சித்தன் கே.ஆர்.எஸ் டாஸ்க் போர்ஸ் உங்கள் மீது எந்த நேரமும் பாயலாம் பார்த்து இருங்கள்....

தலீவரே அப்புறம் உங்களைப் பத்தி மகிழ்ச்சியானச் செயதி கொடுத்ததும் அவரே தான்....:-))))

மங்களூர் சிவா said...

:))))))

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் டைட்டில்....

ILA (a) இளா said...

கலக்கியிருக்கீங்க. காபிய மட்டும்தான் சொன்னேன்.

Unknown said...

கச்சேரி நல்லா களை கட்டியிருக்கு போலருக்கே?

//சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய்//

எப்பிடி இருந்துச்சு? கேள்விப்பட்டதே இல்லையே? :) சிக்கன உள்ளே வச்சு க்ரொசான்ட் (வி)ராப் மாதிரியா?

Sridhar Narayanan said...

//தலீவரே அப்புறம் உங்களைப் பத்தி மகிழ்ச்சியானச் செயதி //

இ.கொ! வாழ்த்துகளைப் பிடியுங்க. எதுக்கா? அட 'அதுக்கு'தாங்க.

//மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை //

'மேடி' மாதிரியா? இவர வில்லன் ரேஞ்சுக்கு மலேசிய மாரியாத்தா படம் போட்டிருந்தாங்களே பாக்கலயா? :-))

வெயிட் பண்ணிப் பாப்போம் எப்படி பொருந்தி வர்றார்னு...

இலவசக்கொத்தனார் said...

//சரித்திரம் படைக்கும் இந்த சந்திப்பை மொக்கை என்று வர்ணிப்பதா?//

நான் சொன்னது பதிவை, சந்திப்பை இல்லை!!

G.Ragavan said...

சங்கச் சிங்கம் தேவைச் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி என்பதை பேராவலோடும் பேரின்பத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். கரைபுரண்டு ஓடும் அவரது கற்பனை வெள்ளத்திற்கு கரைகட்டிச் சரியான வழியில் திருப்பி விட்டதன் பலனாக என்னுடைய கண்களில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பொழுது என்னுடைய டிஷ்யூ பேப்பரையே எனக்கே எடுத்துத் தந்த வள்ளல் மகாபிரபு ஆன்மீகச் சூறாவளி சண்மதச் செல்வராகிய கே.ஆர்.எஸ் அவர்களையும் சந்தித்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...

நல்லா மொக்கை போடறீங்கப்பா!!

4:33 PM, April 03, 2008
Blogger தேவ் | Dev said...

சரித்திரம் படைக்கும் இந்த சந்திப்பை மொக்கை என்று வர்ணிப்பதா? கொத்ஸ் என்னக் கொடுமை இது? ஆன்மீக தளபதி சிரிப்பு சித்தன் கே.ஆர்.எஸ் டாஸ்க் போர்ஸ் உங்கள் மீது எந்த நேரமும் பாயலாம் பார்த்து இருங்கள்....

தலீவரே அப்புறம் உங்களைப் பத்தி மகிழ்ச்சியானச் செயதி கொடுத்ததும் அவரே தான்....:-))))//

ஆமா ஆமா ஆமா :)

G.Ragavan said...

// Sridhar Narayanan said...
//மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை //

'மேடி' மாதிரியா? இவர வில்லன் ரேஞ்சுக்கு மலேசிய மாரியாத்தா படம் போட்டிருந்தாங்களே பாக்கலயா? :-))

வெயிட் பண்ணிப் பாப்போம் எப்படி பொருந்தி வர்றார்னு...//

ஸ்ரீதர்... சந்தேகமே வேண்டாம். நல்லாவே பொருந்துவார். அவரோட திறமை உங்களுக்குத் தெரியலை. கதாநாயகியா யாருமே வேண்டாம்னு சொல்லி அவரே கதாநாயகியகவும் நடிச்சி உலகசாதனை செய்யப் போறத நெனச்சுப் பாரு!!!!!!!!!!!! அவரு திறமை உலகப் பிரசித்தம்.

Unknown said...

// கப்பி பய said...

:))//

கப்பி இந்த புன்னகைக்கு என்ன விலை? :0)

Unknown said...

//மங்களூர் சிவா said...

:))))))//

சிவா யு டூ ஸ்மைலிங் லைக் கப்பி :-)

Unknown said...

//மதுரையம்பதி said...

சூப்பர் டைட்டில்...//

நன்றிங்க மதுரையம்பதி.. கே.ஆர்.எஸ் ஹீரோ ஆச்சே அவருக்குப் பொருத்தமான டைட்டில் வேணும்ன்னு தேடி இல்ல புடிச்சோம்

Unknown said...

// ILA(a)இளா said...

கலக்கியிருக்கீங்க. காபிய மட்டும்தான் சொன்னேன்.//

ஆப்பிள் மரம் மேயர் வீடு விவரங்களை வெளியிட்டு மிச்சத்தையும் கலக்குவோம் எனத் தெரிவித்து கொள்கிறோம் :))))

Unknown said...

//தஞ்சாவூரான் said...

கச்சேரி நல்லா களை கட்டியிருக்கு போலருக்கே?

//சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய்//

எப்பிடி இருந்துச்சு? கேள்விப்பட்டதே இல்லையே? :) சிக்கன உள்ளே வச்சு க்ரொசான்ட் (வி)ராப் மாதிரியா?//

வாங்க தஞ்சாவூரான் சாப்பிட வரைக்கும் வச்சு பார்த்தா.. ஒரு நீள பன்னுக்குள்ளே கொஞ்சம் சிக்கனை ஒளிச்சு வச்சு கொடுக்குற ஐட்டம் தான் க்ராசய்ன்ட் அப்படிங்கறது என் சிற்றறிவுக்கு எட்டிய பதில் :-)

இந்த க்ராய்சன்ட் பற்றி மேல் விபரங்களை நம்ம வலையுலக சமையல் திலகம் ஜி.ரா வழங்குவார் .. வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்...

Unknown said...

//Sridhar Narayanan said...

//மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை //

'மேடி' மாதிரியா? இவர வில்லன் ரேஞ்சுக்கு மலேசிய மாரியாத்தா படம் போட்டிருந்தாங்களே பாக்கலயா? :-))

வெயிட் பண்ணிப் பாப்போம் எப்படி பொருந்தி வர்றார்னு...//

வில்லன் என்பதும் நடிப்பின் ஒரு பரிமாணம் தானே ஸ்ரீதர்

வில்லனா ஸ்டார்ட் பண்ணாத் தான் ஹிரோவா பின்ன முடியும் அப்படிங்கறது தானே கோடம்பாக்கம் லாஜிக்.. அது தெரியாதா என்ன நம்ம கே.ஆர்.எஸ்க்கு :)))

Unknown said...

//இலவசக்கொத்தனார் said...

//சரித்திரம் படைக்கும் இந்த சந்திப்பை மொக்கை என்று வர்ணிப்பதா?//

நான் சொன்னது பதிவை, சந்திப்பை இல்லை!!//

அது சரி... சந்திப்பு சரித்திரம் என்பதை ஒத்துகிட்டதுக்கு நன்றி....
இப்போதைக்கு சந்திப்பு தான் முக்கியமான மேட்டர்....

ஆனாலும் இப்படி பப்ளிக்கா மொக்க பதிவுன்னு ஆப்பு கொடுக்குறது நல்லா இல்ல... அதைப் பத்தி டீடெயிலா இன்னொரு பதிவுல்ல நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் ஓ.கே.

Unknown said...

வாங்க ஜிரா உங்க கருத்துக்கள் அம்புட்டையும் வழி மொழியுறேன்... ஆமா நம்ம ஆன்மீகச் சூறாவளியாரே பதிவு பக்கம் இன்னும் காணுமே.... அவரைத் தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்... வருவாரா.. வரமாட்டாரா... வர்றல்லன்னா அவர் பேச்சு கா...கா...கா...ன்னு பாட்டு வேற பாடிகிட்டு இருக்கோம்ல்ல :)))

G.Ragavan said...

// தேவ் | Dev said...

//தஞ்சாவூரான் said...

//சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய்//

எப்பிடி இருந்துச்சு? கேள்விப்பட்டதே இல்லையே? :) சிக்கன உள்ளே வச்சு க்ரொசான்ட் (வி)ராப் மாதிரியா?//

வாங்க தஞ்சாவூரான் சாப்பிட வரைக்கும் வச்சு பார்த்தா.. ஒரு நீள பன்னுக்குள்ளே கொஞ்சம் சிக்கனை ஒளிச்சு வச்சு கொடுக்குற ஐட்டம் தான் க்ராசய்ன்ட் அப்படிங்கறது என் சிற்றறிவுக்கு எட்டிய பதில் :-)

இந்த க்ராய்சன்ட் பற்றி மேல் விபரங்களை நம்ம வலையுலக சமையல் திலகம் ஜி.ரா வழங்குவார் .. வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்... //

வழங்கீருவோம். க்ராய்சான் அப்படீங்குறது பிரஞ்சு வகை பிரட்டு. ஒரு மாதிரி முக்கோணம் போல இருக்கும். வழக்கமா பிரஞ்சு க்ராய்சான்கள்ல உள்ள ஒன்னுமே இருக்காது. அந்த ஒன்னுமே இல்லாததுல கொஞ்சோல எதையாச்சும் திணிச்சி (அல்லது ஒளிச்சி வெச்சி)க் குடுக்குறதுதான் சிக்கன் க்ராய்சான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பி.கு:
இந்தப் பதிவுக்கு மட்டூம் நான் பின்னூட்டமே போடக் கூடாது என் கைகளைக் கட்டி அனுப்பினார்கள் தேவ் அண்ணாவும் ஜிராவும்! :-))

தருமி said...

//மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை என்னையும் கவனிக்க வச்ச ஜிரா... //

என்னங்க கூத்து இது?!
நான் ஜிராவைப் பார்த்ததும் அசப்பில அவர் மேடி மாதிரி இருக்காருன்னு மக்கள்ஸ்கிட்ட சொன்னேன்; எழுதினேன் என்று கூட நினைக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி...மீண்டும் இந்தப் பதிவைத் தமிழ்மணம் அனுப்புவோம்!
எதுக்குத் தெரியுமா?
இளா வீட்டுத் தோட்டத்தில் ஆப்பிள் பூத்துக் குலுங்குது அதான்! :-)

//சும்மா ஒரு சின்ன ட்ரெயிலர்.... மேயர் வீட்டில் இளாவும் ஆப்பிள் மரமும்.... பாபாவுக்கு பிடித்த பாபி....விரைவில் எதிர்பாருங்கள்....
//

தேவ் அண்ணா...
எங்கே இந்த ட்ரெயிலரை ஓட்டாம, அந்த க்ரீன் பேபி (அட பச்சப் புள்ள-ங்க) கேஆரெஸ்சை மட்டும் ஓட்டத் திட்டம் தீட்டி, அதை ஜிடாக்கில் எல்லார் கிட்டயும் முரசு வேற கொட்டி இருக்கீக! எதுவானாலும் எங்க ஜிரா என்னைய காப்பாத்துவாரு! :-)

tamil10