Tuesday, October 07, 2008

தேசிய முற்போக்கு திராவிட வ.வா.சங்கம் உதயம்

அக்டோபரில் என்டிரி
2011ல் நமக்கே தமிழ் கன்டிரி

இது திருவான்மியூர் பகுதியில் சமீபக்காலத்தில் மிகவும் அதீத பரபரப்பு ஏற்படுத்திய பிட் நோட்டீஸ்..
பிட் நோட்டீஸ் கீழே பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தவர்கள் படித்துச் சொன்னத் தகவல்...

அகில உலக தமிழ் பதிவுலக சூப்பர் ஸ்டார் அண்ணன் பின்னூட்ட சுனாமி கொத்தனார் தலைமை மன்றம்

என்னப் படிச்ச உடனே சும்மா கம்ப்யூட்டர் மானிட்டரே உதறுதுல்ல....( பின்னே சீட்டை விட்டு வேகமா மானிட்டரை ஆட்டிகிட்டே எந்திரிச்சா உதறாம என்னச் செய்யும்ன்னு எதிர்பாக்குறீங்க.. உக்காந்து மேலே படிங்க...)

தம்மடிக்க தடை....
தட்டிக் கேட்க கிளம்புது தலைவர் படை...

மும்பையில் ஷாருக்கான் வீட்டுப் பக்கம் இப்படி ஒரு போஸ்ட்டர்.. பதறுதுல்ல... ஷாருக்கான் ரசிகர்கள் தான் ஒட்டியிருப்பாங்கன்னு ஐபிஎன், என்டிடிவி, ஆஜ் தக், இப்படி ஆளுக்காளு ஐடியா பண்ண.. அந்தப் போஸ்ட்டருக்கு கீழே உத்துப் பாத்தவங்கப் படிச்சது...

தலால் வீதி தளபதி பதிவு புயல் கொத்தனார் போர்படை

அமெரிக்காவில் ஒபாமா...
அப்கானிஸ்தானில் ஓசாமா..
தமிழகத்துக்கு 2011ல்ல நீங்கதாம்மா....

படிக்கும் போதே சீறுதுல்ல....பின்னே... கேரளாவில்ல இருந்து வர்ற கப்பக் கிழங்கு லாரி பேக் சைட்ல்ல எல்லாம் இப்படி போஸ்ட்டர் ஓட்டி இருக்குதாம்...கப்பக் கிழங்கை இறக்கும் போது போஸ்ட்டரை நல்லாப் பாத்தவங்க கீழே இருந்த மேட்டரைப் படிச்சாங்க....

அடுத்த உலக ஜனாதிபதி அண்ணன் கிராஸ்வேர்ட் கிளாடியேட்டர் கொத்தனார் பேரவை

இப்போ இலவசம்... 2011ல் எல்லாம் இவர் வசம்...

இன்னிக்கு பிளாக்.....எதிரிக்கெல்லாம் ஷாக்....

பொதுவாக அண்ணன் போடுறது பின்னூட்டம்... ஒரு போட்டீன்னு வந்தா அண்ணன் போடுவார் வேற ஆட்டம்....

போட்டியின்னு வந்தா குறுக்கெழுத்து... 2011ல்ல தலைவர் தான் தமிழகத்தின் தலை எழுத்து....

என்னப் பாக்குறீங்க... இதெல்லாம் தலைவர் அண்ணன் கொத்தனாருக்காக நான் ரெடி பண்ணி வச்சிருக்க பேனர் மேட்டர்... நான் முடிவு பண்ணிட்டேன்.... 2011ல் தலைவர் தான் தமிழ்நாட்டை ஆளணும்ன்னு.... அதான் களத்துல்ல இறங்கிட்டேன்....

யார் தடுத்தாலும் தலைவரை கோட்டைக்கு அனுப்பிட்டு தான் எனக்கு அடுத்த வேலை..

புதுக் கட்ட்சி ஆரம்பிச்சாச்சிப்பா... கொடி எங்க வீட்டு மொட்டை மாடியிலே ஏத்திட்டேன்....சோ தலைவர் அரசியலுக்கு இட்டாந்தாச்சுப்பா...
ஒழுங்கா ஓட்டுப் போடுறவங்க...அப்புறம் கள்ள ஓட்டுப் போடுறவங்க எல்லாம் கரெக்ட்டாத் தலைவருக்கே போடுருங்கப்பா...

அப்புறம் இந்தப் புதுக்கட்ட்சியிலே சேர தலீவருக்கு 14..அக்டோபர் 14 வரைக்கும் நான் டைம் கொடுக்குறேன்... அதுக்குள்ளே நல்ல முடிவாச் சொல்லு தலீவா....
அப்புறம்...இந்தப் பதிவின் மூலம் செயல் படாத தலைவர் என என்னை தலீவர் கிட்டே சைலண்ட்டாப் போட்டுக் கொடுத்த அனைவருக்கும் விரைவில் ஆப்படிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்...

கட்சியில் உறுப்பினராக தே.மு.தி.வா.வ.ச தலைமையகத்தை அணுகவும் நன்றி நன்றி... மீண்டும் வந்துட்டோம்ல்ல

11 comments:

தமிழ் பிரியன் said...

தானைத் தலைவர் வருங்கால இந்திய பிரதமர் கொத்தனார் வாழ்க! வாழ்க!

ஸ்ரீதர்கண்ணன் said...

என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு .. நன்றி

தேவ் | Dev said...

//தமிழ் பிரியன் said...
தானைத் தலைவர் வருங்கால இந்திய பிரதமர் கொத்தனார் வாழ்க! வாழ்க!
//

வாங்க தமிழ் பிரியன்...முதல்ல வந்து ஆதரவா ஆரவாரமா சவுண்ட் விட்டதை பாராட்டு உங்களுக்கு ஒரு எம்பி சீட் இலவசமாக் கொடுக்க தலைவர் கிட்டே பரிந்துரை செய்யுறேன் ஓ.கேவா

தேவ் | Dev said...

// ஸ்ரீதர்கண்ணன் said...
என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு .. நன்றி
//

வாங்க கண்ணன்... நாட்டு மக்களைச் சந்தோசப் படுத்துவதே நம் நோக்கம் லட்சியம்...சரி தே.மு.தி.வ.வா.சவில்ல சேந்துட்டீங்களா?

ஜே கே | J K said...

//இந்தப் புதுக்கட்ட்சியிலே சேர தலீவருக்கு 14..அக்டோபர் 14 வரைக்கும் நான் டைம் கொடுக்குறேன்//

தேர்தல் முடுஞ்சு நேர கோட்டைக்கு மட்டும் தான் தலீவர்.

கட்சியில எல்லாம் சேர வர மாட்டார்.

இலவசக்கொத்தனார் said...

தம்பி

அப்படியே எந்த காமெடியன் வீட்டில் கல் எறியப் போறீங்க அப்படிங்கிறதையுன் சொல்லிட்டீங்கன்னா முன் ஜாமீன் எடுக்க வசதியா இருக்கும்!!

நல்லா இருங்கடே!!

Sridhar Narayanan said...

//சோ தலைவர் அரசியலுக்கு இட்டாந்தாச்சுப்பா...//

'சோ' ரஜினியை அரசியலுக்கு இட்டார முடியலைன்னு, இகொ-வை அரசியலுக்கு இட்டாந்துட்டாரா? :-))

சந்தோஷ் = Santhosh said...

மாப்பி யூடு.. பாவம்டா தலிவரு.. போதுமடா.. ஆமா பா.மா.கான்னு ஒன்னு இருந்துச்சே அதை கலைச்சிடாங்களா? அதுல இல்ல இருந்தாரு கொத்ஸ்..

தேவ் | Dev said...

//ஜே கே | J K said...
//இந்தப் புதுக்கட்ட்சியிலே சேர தலீவருக்கு 14..அக்டோபர் 14 வரைக்கும் நான் டைம் கொடுக்குறேன்//

தேர்தல் முடுஞ்சு நேர கோட்டைக்கு மட்டும் தான் தலீவர்.

கட்சியில எல்லாம் சேர வர மாட்டார்.//

ஜே.கே. நீ தான் நம்ம கழகத்தின் கொ.ப.செ... இன்று முதல் நம் இயக்கம் தே.மு.தி.வ.வா.கழகம் என அழைக்கப்படும்...

தேவ் | Dev said...

// இலவசக்கொத்தனார் said...
தம்பி

அப்படியே எந்த காமெடியன் வீட்டில் கல் எறியப் போறீங்க அப்படிங்கிறதையுன் சொல்லிட்டீங்கன்னா முன் ஜாமீன் எடுக்க வசதியா இருக்கும்!!

நல்லா இருங்கடே!!/

தலீவா.... அட்ரஸ் கொடுங்க.. ஒரு லோடு கல்லுக்கு ஆர்டர் கொடுத்துட்டு அப்படியே கிளம்பிடுறோம்... முன் ஜாமீன் மட்டும் உஷாரா எடுத்து வச்சுக்கோ தலீவா.... ஆளுங்கட்சி உங்க மேலே செம கடுப்புல்ல இருக்காங்க...

தேவ் | Dev said...

//Sridhar Narayanan said...
//சோ தலைவர் அரசியலுக்கு இட்டாந்தாச்சுப்பா...//

'சோ' ரஜினியை அரசியலுக்கு இட்டார முடியலைன்னு, இகொ-வை அரசியலுக்கு இட்டாந்துட்டாரா? :-))//

ரஜினி தான் தெளிவா எனக்கு ஒரு கட்சியும் கொடியும் வேணாம்ன்னு என்னிக்கோ கும்பிடி போட்டுட்டாரேப்பா... அவர் ஏன்ப்பா வம்புக்கு இழுக்குறீங்க... நம்ம தலைவர் அப்படியா.... கண்ணைக் கட்டிகிட்டாக் கூட தமிழ் மக்கள் எதிர்காலம் பத்திய போராட்ட சிந்தனையிலேத் தான் இருப்பார்... அவர் அரசியலுக்கு வரக் கூடாதா...

tamil10