Wednesday, November 05, 2008

ஆபிசரின் அரசியல் கச்சேரி

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் ஒபாமா ரேஞ்ச்டா...."
"யார்... நம்ம ஆபிஸ் வாசல்ல பரோட்டாப் போடுற கடையிலே தட்டு கழுவுறங்களே அந்த ஒ பாமா அவங்க ரேஞ்சா...?"

"என்ன நக்கலா... நான் சொன்னது...இன்னிக்கு அமெரிக்காவில்ல முதல் கருப்பர் இன அதிபர் ஆகி இருக்காரே அவரைச் சொன்னேன்..."

"அப்படின்னா நீங்க அரசியல்ல இருந்தீங்களாஆஆஆஆஆஆ"

"எதுக்கு இம்புட்டு ஆ?""எல்லாம் ஒரு எபெக்ட் தான் ஆபிசர்... சின்னப் பயல்வ விரலை அசைச்சாலே என்னமா சவுண்ட் கொடுக்கான்வ சினிமாவுல்ல... நீங்க் ஆஆஆபிசர் ஆச்சே.. விடுவோமா.. நீங்க மேல போங்க..."

ஆபிசர் பருத்தி வீரனை படு கடுப்பாய் முறைத்துவிட்டு தன் அரசியல் அனுபவத்தைச் சொல்ல ரெடியாகுகிறார்.

அப்போ நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டிருந்தேன்...

இது தான் ஆபிசர் உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயம்...
எது எது....
இந்த உண்மை பேசற விசயம்...பள்ளிக்கூடத்துல்ல படிச்சிட்டு இருந்தேன்னு பொய் சொல்லாமல் போயிட்டு இருந்தேன்னு சொல்லுறீங்க பாருங்க.. அந்த உண்மை பேசுற மனசை நான் பாராட்டுறென் ஆபிசர் ..ப்ளீஸ் கன்டினியூ

மீண்டும் கடுப்பு பார்வை பார்க்கும் ஆபிசர் தொடர்கிறார்..."அப்போ எல்லாம் நான் வந்து ஒரு பெரிய நடிகருக்கு ரசிகர்.....""ஆபிசர் குண்டு கல்யாணமா.. இல்லை உசிலை மணியா ஆபிசர்.... எனக்குத் தெரிஞ்ச பெரிய நடிகர்ஸ் அவங்க தான்... ரொம்ப பெரிய நடிகர்ஸ்"

தமிழ் நாட்டுல்லே பெரிய நடிகர்ன்னா யாருன்னு சின்னப் புள்ளக்கு கூடத் தெரியுமே...
சாரி ஆபிசர் நான் பெரிய புள்ளையாகி பல வருசம் ஆச்சு... சைல்ட்வுட் மெமரி எல்லாம் லாஸ் ஆயிருச்சு... பட் நீங்க கன்டினியூ ஆபிசர்...

அவர் அப்போ அரசியலுக்கு வரப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு....
ஆபிசர் இப்போ உங்க பையனே பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சுட்டான்... இன்னும் அந்தப் பேச்சு நிக்கல்ல... மே பி உங்க பேரனும் பள்ளிக்கூடம் போற வரைக்கும் அது நிக்காது.. அது கன்னித் தீவு பார்ட் டூ... என்னக் கன்னித் தீவு... தந்தில்ல மட்டும் வரும்...இந்த மேட்டர் ஆல் பேப்பர்ஸ்ல்லயும் வரும... பட் நீங்க மேட்டருக்கு வாங்க... வாட் ஹேப்பண்ட் டூ யூ இன் பொலிடிக்ஸ்?

எங்க குடும்பம் ஒரு பராம்பரியமான அரசியல் குடும்பம்...
அதாவது வேற பொழப்பே இல்லாம மொத்தக் குடும்பமும் கும்பலாக் கிளம்பி ஊரை அடிச்சு உலையைப் போட்ட அது பராம்பரிய அரசியல் குடும்பம்
ரைட்டா....ப்ளீஸ் ப்ரொசிட் ஆபிசர்..

"நக்கலை கன்ட்ரோல் பண்ணிட்டு கேளு...எங்க ஊர் பக்கம் அப்போ எங்க கட்சி சார்பா ஒரு மாநாடு... தேர்தல் வேற பக்கமா வந்துச்சு

பக்கமா வந்துருச்சு...சரி... நீங்க என்னப் பண்ணீங்க....

இதேக் கேள்வியை தான் அக்கம் பக்கம் எல்லாத்துல்லயும் என்னைப் பாத்துக் கேட்டாங்க. நான் கொதிச்சுக் கொந்தளிச்சிப் போயிட்டேன், ஒரு பரம்பரை அரசியல் குடும்பத்துல்ல வந்த நான் தேர்தல் வர்ற நேரம்... அதுவும் நான் ரசிக்கிற பெரிய நடிகர் வேற எங்க கட்சிக்கு ஆத்ரவு கொடுத்துட்டார்...இந்த டைம்ல்ல நம்ம வெயிட் காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

"நாம யாரு... ஆபிசர்....ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் நம்ம பேச்சை நாமளேக் கேக்க மாட்டோமே... ம்ம்ம் சொல்லுங்க"

"ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு உக்காந்து யோசிச்சோம்ப்பா...."

"அதிசயம்...ஆபிசர்.. நீங்க கூடவா யோசிச்சீங்க... சரி அந்த யோசிக்கற பழக்கம் எல்லாம் உங்களுக்கும் இருந்து இருக்கு எப்போ அதை எல்லாம் விட்டீங்க...ஆப்டர் மேரேஜா"

"ஜஸ்ட் பிபோர் மேரேஜ்...யோசிச்சிருந்தா கல்யாணம் நடந்திருக்குமா..."

"ஆமா அண்ணி யோசிச்சுருக்கலாம்... மேரேஜ் நடந்திருக்காது... சரி அது எதுக்கு இப்போ... அரசியலுக்கு வாங்க..."

ஆபிசர் அலட்டல் போஸ் கொடுக்க...

"ஆபிசர்ண்ணா... அரசியல் கதைக்கு வாங்கன்னு சொன்னேன்.. கதை மிஸ் ஆயிடுச்சு.. சீன் வேணாம் கன்டினீயு.."

மெகாவா ஒரு திட்டம் போட்டோம்.. அது படி பேனர் வைக்க முடிவு பண்ணுனோம்...அப்போ பிளக்ஸ் எல்லாம் வர்றல்ல்யா... சோ... ஆயில் பெயிண்ட் பேனர் தான்...

அட்ரா சக்க..அட்ரா சக்க,.... அப்புறம்

பயங்கரமா யோசிச்சு எங்க கட்சி தலைவர் படம் ப்ளஸ் எங்க ஸ்டார் படமும் போட்டு பேனரை ரெடி பண்ணிட்டோம்.... பேனர்ல்ல எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு லாஸ்ட் மினிட் செக் பண்ணும் போது தான் டக்குன்னு தோணுச்சு

தலைவருக்குப் பட்டம் எதுவும் போடல்லயேன்னு.. தமிழினத் தலைவர்ன்னு எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணுனோம்

அது உங்க தலைவருக்குப் பலக் காலமா இருக்க பட்டம் தானே.. இதுல்ல என்ன புதுமை...

ஆனா அங்கே தான் ஒரு சிக்கல் வந்துருச்சு...

நான் தெளிவாத் தான் இருந்தேன்... பசங்க தான் குழம்பி என்னையும் குழப்பிட்டாங்க

ஓ அப்படியா.. அப்புறம்
என்னச் சிக்கல்..
தமிழின தலைவருக்கு சின்ன ழி யா இல்லை பெரிய ழீ யா அப்படின்னு

ஒஹோ நீங்க தான் தமிழ் புலவர் ஆச்சே ஆபிசர்... டெய்லி ஆபிஸ்ல்ல எல்லாருக்கு குட் மார்னிங் வித குறள் மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணுற தமிழ் பத்தர் ஆச்சே.. சாரி தமிழ் பித்தர் ஆச்சே...

அண்ணே உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் வேணும்ன்னா பெரிய ழீ யே போட்ருவோம்ன்னே.. சென்டிமென்ட்டா ஓர்க் அவுட் ஆகும்ண்ணே... ழீயும் பெருசு... உங்க கனவும் பெருசுன்னு ஏத்தி விட்டுட்டாங்க.... நானும் அந்த ஜெர்க்ல்ல ஒத்துகிட்டேன்...

பருத்தி வீரன் விழுந்து விழுந்து சிரிக்க.....
"ஆபிசர் அங்கிள்.... உங்க தலைவர் அதைப் படிச்சிட்டாரா....?"
"ஊரே படிச்சிருச்சு,,,, எங்க அப்பாரு அன்னிக்கே என்னை ரயில் ஏத்தி ஊரை விட்டு அனுபிட்டார்... இனி அரசியல் அது இதுன்னு வந்த ... வெட்டிருவேன்னு விளக்கமா வெவரமா கடுதாசியே போட்டுட்டு போயிட்டார்..

அப்புறம் தான் நானும் அரசியல் விட்டு விலகி வந்து இப்படி ஐ.டியிலே சேந்துட்டேன்

இதோ பாரு.... தன் மெயிலில் இருந்த ஒரு பழைய படத்தைக் காட்டினார்..அதில் தமிழீனத் தலைவர்.......... அப்படிங்கற பேனர் பக்கத்தில் மாசு மருவறியாத இளம் காளையாய் நம்ம ஆபிசர்...அரசியல் கெட்டப்பில் அட்டகாசமாய் போஸ் கொடுத்திருந்தார்

ஒரு பெரிய ழீ அநியாயமாய் தமிழகத்தின் அரசியலோடும் ஐடியோடும் விளையாடிய வினையை என்னவென்று சொல்ல....:))))

15 comments:

நாமக்கல் சிபி said...

:)) சூப்பர் பதிவு!

ரொம்ப நாளா ஆபீசரை காணோமே! ஆணி அதிகமோ!

நாமக்கல் சிபி said...

:)) சூப்பர் பதிவு!

ரொம்ப நாளா ஆபீசரை காணோமே! ஆணி அதிகமோ!

கோபிநாத் said...

சூப்பர் கச்சேரி அண்ணே;))))))

இராம்/Raam said...

kalakkal.... :)

இலவசக்கொத்தனார் said...

ஹைய்யா, ஐ நோ திஸ் ஆபீஸர்.....

கப்பி | Kappi said...

:)))

தேவ் | Dev said...

//நாமக்கல் சிபி said...
:)) சூப்பர் பதிவு!

ரொம்ப நாளா ஆபீசரை காணோமே! ஆணி அதிகமோ!
//

ஆணி எல்லாம் கோணி கோணியாக் காத்து கிடக்கு தளபதி.. அப்போ அப்போ எஸ்கேப் ஆகி வந்து எட்டிப் பாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம்ல்ல

தேவ் | Dev said...

// கோபிநாத் said...
சூப்பர் கச்சேரி அண்ணே;))))))//

வாப்பா கோபி சவுக்யமா.. சந்திச்சு எம்புட்டு நாளாச்சு..

தேவ் | Dev said...

//இராம்/Raam said...
kalakkal.... :)//

ராம் தம்பி சிங்கை எல்லாம் செட் ஆயிருச்சா... வேலை எல்லாம் நல்லாப் போவுதாப்பா

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
ஹைய்யா, ஐ நோ திஸ் ஆபீஸர்.....

//
ஆபிசர் ஆல்சோ நோ யூ :)))))

யூ லீடர் ... ஆபிசர் ஆல்வேஸ் பாலோயர் :))) ஓ.கே

தேவ் | Dev said...

//கப்பி | Kappi said...
:)))//

Thanks Kappi

ஆயில்யன் said...

கலக்கல்:)))


”ழி” ஆபிசரோட அரசியல் எதிர்காலத்தை குழி தோண்டிப்புதைச்சுட்டு :(


இருந்தாலும் இப்ப டிரும்ப டிரைப்பண்ணலாமே ஆபிசர்:)))))))

நாகை சிவா said...

:))

நாகை சிவா said...

மீண்டும் வந்தேன்.. இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படிக்காவது பதிவுலகில் இருக்கு வேண்டும் போல் இருக்கு :))

Thooya said...

அருமை!!!

tamil10