Sunday, February 21, 2010

கொலை முயற்சி வழக்கு

நகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...

காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...

மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....

இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..

சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...

பாஸ் எம்ப்பேர் சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்

அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...

அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...

அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....

சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)

4 comments:

பினாத்தல் சுரேஷ் said...

மண்ட நடிகரைப் பற்றி மத்தவங்க என்ன பேசிக்கறாங்கன்னு கவர் பண்ணாத நிருபரும் ஒரு நிருபரா?

”கொலை பண்ணச் சொன்னா கொல்ல வேண்டியதுதானே? அந்தாளு நடிச்ச ஃப்ளாப்பெல்லாம் நாங்க எவ்வளவு தாங்கி இருக்கோம்? நாங்க சொன்னா போய் செய்யாட்டி மிரட்டுவோம், உருட்டுவோம், ஊடு பூந்து அடிப்போம், இதுக்கு எங்களுக்கு எல்லா இடத்துலேயும் ஆசி இருக்குது” என்று ஏசி ஜகஜ்ஜாலன் தெரிவித்தார்.

“என் ஜாதியிலே மொத்தம் 15 கோடி மக்கள் இருக்காங்கன்னா எல்லாரும் என் பின்னாடி இருக்காங்க. என் வீட்டுக்கு வந்து யார் அடிச்சாலும் மண்ட உள்ளவங்கதான், மண்ட அனுப்பினவங்கதான்” என்று சிறுத்தை பங்கம் தெரிவித்தார்.

“மன்னிப்பு, எனக்குத் தமிழ்லே பிடிச்ச ஒரே வார்த்தை. அதுவும் நாலு பேர் முன்னாடி மன்னிப்பு கேட்டா எதுவுமே தப்பில்லை” என்று தமிழினத்தை மொத்தமாக அடகு வாங்கி வைத்திருக்கும் தலைவர் தெரிவித்தார்.

“கையிலே அந்த நேரத்துல ரெண்டு கொசு வந்ததாலேதான் தட்டினேன். அது கொசுவைத்தவிர வேற யாரையாவது பாதிச்சிருந்தா மன்னிச்சுக்கங்க” என்று இமயமலை வாய்ஸ் கேட்டது.

ஆயில்யன் said...

மண்ட நடிகர் மட்டுமா எம்புட்டு பேரு கொள்ளபயலுவோல நடிக்கிறேன்னுபேர்ல கொன்னுப்போட்டுக்கிட்டிருக்கானுங்க அவுனுங்க மேல ஏன் கேசு போடமாட்டிக்கிது இந்த கவர்ன்னுமெண்ட்டு அப்படிங்கறதுதான் சினிமாபட்டிக்காரனுவ அங்கலாய்ப்பா இருக்குதா? :)

B கேர்புல் நான் என்னைய சொல்லிக்கிட்டு எஸ்ஸாகுறேன் !

ஆயில்யன் said...

பினாத்தலாரும் தாளிச்சுப்புட்டாருய்யா தாளிச்சுப்புட்டாரு! :))))

கோபிநாத் said...

இந்த மாசம் மண்ட மாசம் போல..கலக்குங்க ;)

tamil10