சினிமா எடுக்குறதும் கூட பாக்குற மாதிரியே ரொம்பவே சுளுவா ஆகிருச்சு...முன்ன எல்லாம் 10 வருசம் உதவி உதவிக்கு உதவின்னு உபத்திரவப் பட்டு உழைச்சு உயர் பதவியான இயக்குனர் ஆவாங்க..இப்போ எல்லாம் சோ சிம்பிள் “அப்பாடக்கர்” “ஜக்குபாய்” அப்படின்னு சின்னதா படம் ( குறும் படம்) எடுத்து யு ட்யுப்ல்ல போட்டு ஹிட் காட்டி அப்படியே கோடம்பாக்கம் பஸ் ஐ சட்டுன்னு பிடிச்சுராங்க...
2012ல்ல நான் பாக்க கிடைச்சதுல்ல எனக்கு பிடிச்ச படங்களைப் பத்திய என்னோடப் பதிவு இது
என்னாச்சு...ப்ப்ப்ப்ப்பாஆஆஆ....இந்த 2 வார்த்தையை வச்சு எவ்வளவு காமெடிப்பா..தியேட்டரே சிரிச்சி சிரிச்சி கண்ணீரை சிதற விட்ட படம்ன்னா அது நடுவுல்ல கொஞ்சம் பக்கத்தைக் காணும் தான்...பாலாஜி தரணிதரன் கலக்கிட்டாப்புல்ல
அட்டக்கத்தி..அட்டகாசம்..ஒவ்வொரு விடலப் பசங்க கூட்டத்துல்லயும் இப்படி ஒரு கேரக்டர் கண்டிப்பா இருந்தே ஆகணும்ங்கறது தமிழ் கலாச்சார விதி..அதை அப்படியே கண்ணு முன்னாடி போட்டு காட்டுன
இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆகணும்
பாக்கலாமா!!! வேணாமா!!! அப்படின்னு பட்டி மன்றமே வச்சு பாத்துரலாம்ன்னு பாத்த படம் வழக்கு எண் 18/9...பாலாஜி சக்திவேல்...வசந்த பாலன் இவங்க படம் எல்லாம் என்னமோ சோகத்தை வலிஞ்சு தெளிக்குற உணர்வு எப்போதுமே எனக்குண்டு...அப்படி ஒரு மனநிலையில் பாத்தும் படம் பிடிச்சு இருந்துச்சு...யதார்த்தம் எளிமை சுவாரஸ்யம்...படம் லைக் போடலாம்
பேய் படம்ன்னா பீதியக் கிளப்பியே தீரணும்ங்கறது விதி...அப்படி விவரம் தெரிஞ்சும் போய் பாத்து படத்தோட ஒன்றி போய் ஆங்காங்கே பயந்து பாக்க வச்ச படம் பீட்சா..கார்த்திக் சுப்புராஜ் முதல் படம் பாஸ்
சுந்தரபாண்டியன்...மாஸ்...கொடுத்த காசுக்கு செம ரவுசு...சசி-சூரி ரகளை காமெடியிலே லட்சுமி மேனன் ரொமான்ஸ்...பக்கா பேமிலி செண்டிமெண்ட்..
நட்பு...சண்டை...அப்படின்னு மசாலாவை பக்காவக் கலந்து போட்ட மதுரை மீல்ஸ் முழு திருப்தி
நண்பன் இந்தியிலே முழுசா 3 வாட்டி பாத்தும் எனோ தமிழ்ல்ல பாக்கணும்ன்னு ஓர் ஆர்வம்..சத்தியமா ஆர்வத்துக்கு விஜய் காரணமில்ல..
படம் தமிழ்ல்லயும் நல்லா இருந்துச்சு... மொத்த யுனிட்க்கும் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்...படம் பாத்து ரசிக்கும் படி இருந்ததுக்கு எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது ஒத்துக்க வேண்டிய உண்மை
கும்கி ...படத்துல்ல புதுசா எதுவுமில்ல...கிட்டத் தட்ட மைனா பாணி காதல் கதை தான்..படம் தலைவலி கொடுக்காமல் விட்டதுக்கு முக்கிய காரணம் கண்ணுக்கு குளிர்ச்சியான காடுகளின் காட்சிகள் அப்புறம் பாட்டு...அதுல்லயும் சொய்ங் சொய்ங்...அதகளம்...பிரபு சாலமன் கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறேன்...
விஜய் யோட பெரிய ரசிகன் இல்லன்னாலும் முருகதாஸின் 7ஆம் அறிவு பெரிய அளவில் கவரவில்லைன்னாலும் துப்பாக்கியின் ஆரம்ப விமர்சனங்களால் கவரப்பட்டு பாக்கறதுன்னு முடிவு பண்ணி பாத்தேன்..ஏமாத்தம் இல்ல...நல்லதொரு பொழுதுபோக்கு படம்...வெல்டன் விஜய் அண்ட் முருகதாஸ்..
மொத்தத்துல்ல 2012ல்ல அதிக அளவில்ல மொக்கப் படங்கள் பாத்து மொக்க வாங்காமல் தப்பியது பெரிய ஆறுதல்....
2013 எப்படி இருக்குன்னு பாப்போம்....