Thursday, July 27, 2006

பஜார்ல்ல உஜார் இல்லன்னா...

ஒரு ஆறு ஏழுவருசம் முன்னாடி இருக்கும்ண்ணு நினைக்கிறேன்... செவ்வகம் போய் வட்டம் வந்தது.

"ஆ..அஸ்க்..புஸ்க்..சிடி டிஸ்க் நான் தர மாட்டேன்ப்பா எஙக அண்ணா லண்டன்ல்ல இருந்து அனுப்பி இருக்கான்.. விலை ஜாஸ்தியாம் "அப்படின்னு நம்ம சகா ஒருத்தர் படா பீட்டர் விட்டுகிட்டு திரிஞ்சான்.

பட்டம் பட்டமாப் போட்டு நடிகர், இயக்குநர், தயாரிப்புகாரரு எல்லாம் குனிஞ்சு நிமிந்து சான்பிரான்சிஸ்கோ மல்டி பிளக்ஸ்ல்லருந்து நம்ம டவுண் சவுத் ஆட்டையாம் பட்டி வரைக்கும் படம் ரிலீஸ் பண்ணா.. நம்ம ஆளு தம்மாத்தூண்டு வட்டத்துக்குள் அவிங்க அத்தனைப் பேத்துக் கொட்டத்தையும் அடக்கி சுருக்கி டிஸ்க்ன்னு இறக்கி கிராக்கி பாக்க ஆரம்பிச்சுட்டான்.

அப்போ நம்ம கிட்ட இருந்த நிதி வசதிக்கு வட்டமெல்லாம் கொஞ்சம் சாஸ்திங்கறதாலே ( இப்பவும் பத்தாக் குறை தான்... என்னப் பண்ண இந்தியனாச்சே). அந்த வட்டங்களைப் பத்தி ஒரு கனவோடு வாழ்ந்தக் காலம்..

வருஷம் உருண்டோடக் காலமும் கொசுவர்த்தி சுருள் கணக்காக சுருண்டு ஓடுச்சு.. அதுல்ல பாருங்க வெத்துப் பய்லா விட்டம் பார்த்த நாமளும் வட்டத்துல்ல படம் வாங்கிப் பாக்குற லெவலுக்கு வந்துட்டோம்ய்யா. மொத மொத வட்டத்துல்ல படம் காட்டுற பொட்டியை நம்ம நண்பன் ஒருத்தன் மூலமா துபாய்ல்லருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்துட்டு வந்ததும் நாம எடுத்துக்கிட்ட மொதல் சபதமே திருட்டு வட்டத்துல்ல படம் பாக்குறதில்லைங்கறது தான் ( ஒரு உண்மையான இந்திய குடி மகன் சாமி நான்)

சபதம்ன்னு ஒண்ணு எடுத்தா சோதனைன்னு ஒண்ணு வந்து தானே தீரும்... வந்துச்சு எனக்கும்.. புதுசா வட்டம் வாங்க மியூசிக் வேர்ல்ட்க்கு ஸ்பென் ஸர் பிளாஸா போயிருந்தேன்.அங்கிட்டு இங்கீலீஸ் தமிழ் இந்தின்னு வட்டத்துக்கு வகைவகையா ஜிகுஜிகுன்னு அட்டைப் போட்டு பளபளன்னு வச்சிருந்தான்...
நமக்கு அதை எல்லாம் பாத்ததும் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி ஒரு மெகா சந்தோஷம்

தம்பி தேவ்.. அள்ளிக்கோடான்னு களத்துல்ல இறங்குனேன்...
நமக்கு ரொம்ப பிடிச்ச படமாத் தேடிக்கிட்டே வந்தேன்... ஆகா... ஆல்பட்ல்ல பார்த்து விசிலிடிச்சே தொண்டைக் கட்டிகிட்ட தலைவர் படம் பாட்சா.. என்ன ஸ்டில்.. எம்மாம் ஸ்டைல்.. எடுறா அதை
அது ஒரு டி.வி.டி வட்டம்... வழவழப்பான தாளில் அருமையான சூப்பர் ஸ்டார் படம்,

அப்புறம் வட்டதுல்ல அந்த மெனு ஆப்ஷ்ன், இந்த மெனு ஆப்ஷன்னு அள்ளி தெளிச்சு நம்ம மனசை அப்படியே பிளைட் ஏத்தி பறக்கவிட்டுடாங்க....
வட்டத்துப் பொட்டியைத் திருப்பி பாக்குறேன் பிளைட் கிராஷ் ஆன சவுண்ட் நமக்கு மட்டும் கேக்குது... விலையைப் பார்த்த 600 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கம்மி... ஆகா தம்மாத்தூண்டு வட்டத்துக்கு ஆறு நூறு ரூபா தாளை இழப்பதா? நமக்கும் மூளை எல்லாம் இருக்குல்ல.. அது கொடுத்த அடவைசை அக்கறையாக் கேட்டுக்கிட்டு வட்டத்தை எடுத்த அதே இடத்துல்ல அலுங்காம குலுங்காமல் வச்சுட்டு அடுத்த படத்தைத் தேட ஆரம்பிச்சேன்.

எம்.சீ.யார், சிவாசி படம் சித்த விலைக் கம்மியா இருந்துச்சு ஒரு நூறு ரூபா தாள் கம்மியாச் சொன்னாங்க. தலை கிர்ன்னு சுத்தி நின்னுச்சு. வட்டக் கன்வு திட்டம் கொட்டமடிப்பது மெல்லக் குறைய ஆரம்பித்தது.

என்னடா இது? இப்போ என்ன பண்றது?

நமக்கு தான் இங்கிலீஸ் நல்லா புரியுமே.. அதுவும் சாக்கி சான் பேசி நடிச்ச படம்ண்ணா நச்ன்னு புரியுமேன்னு அங்கிட்டு நம்ம மேதாவிப் பாரவையை மேயவிட்டேன். ஆகா.. தமிழ் வாழ்கன்னு கொடி பிடிக்கிற அளவுக்கு வெள்ளைக்கார பயமக்க எடுத்தப் படத்து விலையெல்லாம் தாறுமாறா இருந்துச்சு... ஒன்பது நூறு ரூபா தாள்..

ஆத்தாடி.. தாங்காதுப்பூன்னு பம்மிட்டேன்.

அந்த நேரம் அங்கிட்டு பூப்போட்ட சட்டைப் போட்டுகிட்டு வேலைக்கு இருந்த பையன் ஒருத்தன் அரை குரை இங்கிலீஷ்ல்ல "HOW CAN I HELP U? "
என்று வேறு கேட்டு மானத்தை மேல் மாடிக்கு காத்து வாங்க அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டான்.

சரிடா தேவ்.. இவ்வளவு தூரம் வந்துட்ட.. என்ன ஆனாலும் சரி வட்டம் வாங்காமல் போகக்கூடாது நம்ம இதயத்தின் இரும்பு ஆணை மீற முடியுமா?( இதன் மூலமா எனக்கெல்லாம் இரும்பு இதயம்ன்னு சொல்லிக்கிறேன்)

இனி இப்படித் தேடக் கூடாதுடா... திருப்பு வட்டப் பொட்டியை..
ஆமா ஒவ்வொரு பொட்டியாத் திருப்பி விலையை மட்டும் பாத்துகிட்டு வந்தேன்...

இதுக்குள்ளே அங்கண வந்த ரெண்டு குட்டைப் பாவாடைப் பொண்ணுங்க ஆளுக்கு நாலு இங்கீலிஷ் படத்தை அள்ளிகிட்டு பில் போடப்போயிட்டாங்க...
இப்போ நம்ம பக்கமா ஒரு பெர்மூடா போட்ட வெள்ளைக் காரனும் அவன் கேர்ள்பிரண்டும் எதோ வட்டத்தைப் பிராண்டாத குறையாப் பார்த்துகிட்டு நின்னாங்க.

ஒண்ணே முக்கால் மணி நேரமா தேடித் திரிஞ்சு தவிச்சுப் பாக்குறேன்.. ஒரு வட்டப் பொட்டியிலே விலைக்குப் பக்கத்துல்ல 200ன்னு போட்டிருக்கு... கண்ணைக் கசக்கிட்டு மறூபடியும் பாக்குறேன் அட ஆமா 200 தான்...

தேவ் முடிவெடுத்துடு.. இது தான் வட்டத்துல்ல நீ பாக்கப் போற முதல் திரைக்காவியம்....வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டு படம் என்னன்னு திரும்பிப் பார்த்தா...

அது ஒரு இந்திப் படம்...கஹோன்னா பியார் ஹேய்... நம்ம ஆறு விரல் புகழ் ஹிரித்திக் ரோஷனின் முதல் படம்... எடுத்துகிட்டு போய் பில் போட்டு பணத்தைக் கட்டிட்டு கிளம்பினேன்...

இப்படித் தாங்க என்னுடைய நீண்ட நாள் வட்டக் கனவு நிறைவேறிச்சு..

பி.கு: பதிவின் தலைப்புக்கும் பதிவிற்கும் உள்ள சமப்ந்தம் உங்களில் யாருக்காவது தெரிந்தால் தனி மடலில் எனக்கும் தெரியப் படுத்தவும்.

41 comments:

நாகை சிவா said...

//பதிவின் தலைப்புக்கும் பதிவிற்கும் உள்ள சமப்ந்தம்//
என்ன சம்பந்தம் என்பது எல்லாம் தெரியல. தலைப்ப பாத்தவுடன் தோன்றியது சொல்லுறேன் கேட்டுக்கோ

பஜார்ல உஜார் இல்லன்னா நிஜார் தங்காது.

மணியன் said...

புதிய இந்திப் படங்களே VCD 150/- ரூபாய்க்கு கிடைக்கையில் தமிழ் படங்கள் நாளான பிறகும் 400- 500 என்று விற்க என்ன காரணம் ? இதுவே திருட்டு VCDக்கு வழி வகுக்கிறது.

கவிதா|Kavitha said...

//பஜார்ல உஜார் இல்லன்னா நிஜார் தங்காது.//

சிவா உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் விளக்க முடியும்னு நினைக்கறேன்.. தாங்கல.. பாவம் தேவ்.. எண்டா இந்த கேள்விய கேட்டோம்னு ஆக போறாரு..

கவிதா|Kavitha said...

//நீண்ட நாள் வட்டக் கனவு நிறைவேறிச்சு..//

வட்ட கனவு நிறைவேறினிது நல்லா தான் இருக்கு தேவ்.. ஆனா நிறைய புரியல... நடுநடுவுல என்னவோ புது புது வார்த்தை எல்லாம் போட்டு இருக்கீங்க (தமிழ் ல தான்)

கைப்புள்ள said...

அதே கஹோ நா பியார் ஹையை மெலடி தியேட்டர்ல பாத்திருந்தின்னா 25ரூபால முடிஞ்சிருக்கும்...அத்தோட நம்ம பய பாண்டி பாக்குற சமாச்சாரங்களையும் பாத்துருக்கலாம். 200ரூ இந்தி படத்துக்கெல்லாம் கொஞ்சம் ஓவரு தான். ஆனா அந்த சின்ன வயசுல 200ரூ குடுத்து வட்டு வாங்கற அளவுக்கு வளமான வாழ்வு வாழ்ந்துருக்கேன்னு மட்டும் புரியுது.

இலவசக்கொத்தனார் said...

மீண்டும் கொசுவர்த்தி? என்னய்யா ஆச்சு உமக்கு?

தேவ் | Dev said...

//பஜார்ல உஜார் இல்லன்னா நிஜார் தங்காது. //

புலி முக நாயகனே நாகை தந்த நாளைய நட்சத்திரமே...

உனக்கும் புரியவில்லையா? இப்படி திப்பு சுல்தான் காலத்துத் தத்துவத்தினைச் சொல்லி உன் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டாயே....
:(

தேவ் | Dev said...

வாங்க மணியன் நான் சொன்ன இந்தக் கதை ஒரு ரெண்டு வருஷம் முன்னாடிய நிலை.. இப்போ திருட்டு டி.வி.டியே வெறும் 30 ரூபாய் தான். அதுவும் மூணு படமாக் கிடைக்குது.

திருட்டு வி.சி.டியின் வளர்ச்சி இப்போ எப்படி இருக்குண்ணா சிவாஜி படம் கூட எடுத்த வரைக்கும் கிடைக்கும் போலிருக்கு:)

தேவ் | Dev said...

//எண்டா இந்த கேள்விய கேட்டோம்னு ஆக போறாரு..//

கவிதா அக்கா இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம். இதை மாதிரி இன்னும் எத்தனைத் தத்துவம் கேட்டிருப்போம் தெரியுமில்ல:)

தேவ் | Dev said...

//ஆனா நிறைய புரியல... நடுநடுவுல என்னவோ புது புது வார்த்தை எல்லாம் போட்டு இருக்கீங்க (தமிழ் ல தான்) //

என்னடா இது தமிழுக்கு வந்தச் சோதனை தமிழ் பதிவருக்கு தமிழ் புரியவில்லையா.... யப்பா வலையிலே 30 நாட்களில் தமிழ்ன்னு எதாவது கோர்ஸ் இருந்தா கவிதா அக்காவுக்குச் சொல்லிவிடுங்கப்பா

தேவ் | Dev said...

//கஹோ நா பியார் ஹையை மெலடி தியேட்டர்ல பாத்திருந்தின்னா 25ரூபால முடிஞ்சிருக்கும்...அத்தோட நம்ம பய பாண்டி பாக்குற சமாச்சாரங்களையும் பாத்துருக்கலாம். //

பார்த்தோம்ல்ல.. பாக்காம இருப்போமா...தல உனக்கு ஸ்பெஷல் ரேட்டா 25க்கு எல்லாம் வெறும் போஸ்டர் தான் காட்டுவாங்க.. படம் பார்க்க அதை விட செலவு ஜாஸ்தி...

ஆமா அது என்ன பாண்டி பாக்குற சமாச்சாரம்... ஏன் நீ அதை எல்லாம் பாக்க மாட்டீயா? கண்ணைப் பொத்திக்குவீயா?:))ஓவரா உக்கிர புத்தன் இமேஜ் மெயின்டேன் பண்றீங்கடா சாமீ

தேவ் | Dev said...

//ஆனா அந்த சின்ன வயசுல 200ரூ குடுத்து வட்டு வாங்கற அளவுக்கு வளமான வாழ்வு வாழ்ந்துருக்கேன்னு மட்டும் புரியுது.//

இந்த விசயம் நடந்தது 2004ல்ல... ஓவர் நக்கல் வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா

தேவ் | Dev said...

//மீண்டும் கொசுவர்த்தி? என்னய்யா ஆச்சு உமக்கு? //

இந்த வாழும் வரலாற்றின் வாழ்க்கைப் பக்கங்களை வெளியிட நீருமா எதிர்ப்பு தெரிவிப்பது.... என்ன செய்ய பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சாதாரணம்ப்பான்னு அடுத்த கொசுவர்த்தி கொளுத்திட வேண்டியது தான்..

கைப்புள்ள said...

கோச்சிக்கிடாதய்யா! கஹோ நா பியார் ஹை படத்தை நான் டெல்லியிலிருந்து வந்துருந்த ஃபிரெண்டோட மெலடி தியேட்டர்ல 2000ல 20ரூவாக்கு தான் பார்த்தேன். அப்பல்லாம் நான் ஸ்டூடண்ட் தான்...நம்ம நெலமைக்கு 200ரூவால்லாம் அப்ப கொஞ்சம் ஜாஸ்தி தான். அதே எண்ணத்துல சொல்லிட்டேன்பா...தப்பா எடுத்துக்காதே.
:)

ILA(a)இளா said...

ஸ்பென்சர் போனா நாங்கெல்லாம் ஜன்னல் வாடிக்கையாளர் தான், இன்னும்

//உக்கிர புத்தன் இமேஜ் மெயின்டேன் பண்றீங்கடா சாமீ //
எவ்வளவு நாளைக்குதான் கைப்பு வேஷம் போடுறது, update பண்ணிக்க வேணாமா?

//இப்படி திப்பு சுல்தான் காலத்துத் தத்துவத்தினைச் சொல்லி உன் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டாயே....//

உக்கிர புத்திரன் கி பி 1771ல வாழ்ந்தவரு, அவருக்கு அப்பால வந்தவருதான் சுல்தானே, யாரை பார்த்து காப்பிங்கிறே?

//இந்த விசயம் நடந்தது 2004ல்ல... ஓவர் நக்கல் வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா//
அட அப்படியா?

ILA(a)இளா said...

ஸ்பென்சர் போனா நாங்கெல்லாம் ஜன்னல் வாடிக்கையாளர் தான், இன்னும்

ஜன்னல் வாடிக்கையாளர்- Windows shopping க்கு தமிழ் மொழி பெயர்ப்பு. கவிதா இதையும் சேர்த்துக்குங்க.

கவிதா|Kavitha said...

//புலி முக நாயகனே நாகை தந்த நாளைய நட்சத்திரமே...//

இது வேறயா? நாம் சும்மா இருந்தாலே நம்ம ப்ளாக்ல வந்து சேர் போட்டு உட்கார்ந்து கமெண்டு போடுவாரு.. இப்படி எல்லாம் சொன்னீங்க.. அவ்வளவுதான்.. விபரீதத்த பாக்கதானே போறீங்க..

Anitha Pavankumar said...

hhhaaaaaa haaaaaa heeeeee heeeeeee
I really enjoyed reading this Dev

செந்தழல் ரவி said...

//பஜார்ல உஜார் இல்லன்னா நிஜார் தங்காது.//

எனக்கும் இதே மேட்டர் தான் தோனுச்சு

ஆமாம் - எனக்கு தெரியாமத்தான் கேக்குறேன்...அது என்னாங்க திருட்டு வி.சிடி

எவ்வளோ டெக்னாலஜி இருந்தாலும் நம்ம ஆளு அதை கேவலப்படுத்திடுவான்...

ஜொள்ளுப்பாண்டி said...

//இதுக்குள்ளே அங்கண வந்த ரெண்டு குட்டைப் பாவாடைப் பொண்ணுங்க ஆளுக்கு நாலு இங்கீலிஷ் படத்தை அள்ளிகிட்டு பில் போடப்போயிட்டாங்க...
இப்போ நம்ம பக்கமா ஒரு பெர்மூடா போட்ட வெள்ளைக் காரனும் அவன் கேர்ள்பிரண்டும் எதோ வட்டத்தைப் பிராண்டாத குறையாப் பார்த்துகிட்டு நின்னாங்க.//

கலக்குங்க தேவண்ணா ! 'கேப்'புல கெடா வெட்டரதுன்னா இதுதானா? வட்டம் வாங்கப் போன இடத்திலே சுத்துவட்டத்தையும் பத்தி ரெண்டு வரியாச்சும் போடுறீங்களே நீவிர் வாழ்க :))))

ஜொள்ளுப்பாண்டி said...

//பஜார்ல உஜார் இல்லன்னா.. //

அப்படீண்ணா என்னண்ணா ?? :((

பர்மா பஜாரை சொல்லுறீயளோ?? :)) பர்மா பஜாரிலே உசாரா இல்லையினா ஏமாத்திபுடுவாங்கோ!!!:))

நாகை சிவா said...

//நடுநடுவுல என்னவோ புது புது வார்த்தை எல்லாம் போட்டு இருக்கீங்க (தமிழ் ல தான்) //
ஹிஹி இதுக்கேவா....

////புலி முக நாயகனே நாகை தந்த நாளைய நட்சத்திரமே...//
இது வேறயா? அவ்வளவுதான்.. விபரீதத்த பாக்கதானே போறீங்க.. //
கவிதா இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு பொறமையா ஆவாதுங்க. உங்களுக்கு வேணும் என்றால் சும்மா வெட்கப்படாமல் கேளுங்க. பட்டங்களுக்கா பஞ்சம். அதவிட்டுட்டு இப்படி பழித்துப் பேசுவது நல்லா இல்ல

நாகை சிவா said...

//புலி முக நாயகனே நாகை தந்த நாளைய நட்சத்திரமே...

உனக்கும் புரியவில்லையா? //
சங்கத்தின் கூர்மை நிறைந்த போர்வாளே,
புரியலயே புரியலயே...
தனியா விளக்கமா சொன்னா புரிஞ்சிகிட்டு போறேன்.

மனதின் ஓசை said...

நமக்கும் இதே மாதிரி அனுபவம் எல்லாம் உண்டு தேவ்...அதனால சும்மா பராக்கு பாக்குறது மட்டும்தான்...இப்படி போன வாரம் லண்ட்மார்க்ல பாத்தப்ப "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" VCD மட்டும் 65 ரூவாய்க்கு கிடச்சுதா..தூக்கினு வந்துட்டேன்...
நாங்கெல்லம் ஒரிஜினல் VCDல தான் பாப்போம் தெரியுமா?.. (ஒரு தடவ தாஜ் போய்ட்டு அந்த பில்ல ரூம்ல எல்லரும் பாக்கர இடத்துல ஒரு வருஷம் வச்சி இருந்த மாதிரி)
வர வழியில வேற ஒரு கடையில :-) இங்கிலிபீசு DVD(3 படம்) 100ரூவான்னு 2 வாங்கிட்டு வந்துட்டேன்..

//திருட்டு வட்டத்துல்ல படம் பாக்குறதில்லைங்கறது தான் //
இந்த சபததோட வாழ்னாள் எத்தன தேவ்?

தேவ் | Dev said...

//கோச்சிக்கிடாதய்யா!//

என்னத் தல எம்புட்டுப் பெரிய வார்த்தை எல்லாம் பேசுத?

//கஹோ நா பியார் ஹை படத்தை நான் டெல்லியிலிருந்து வந்துருந்த ஃபிரெண்டோட மெலடி தியேட்டர்ல 2000ல 20ரூவாக்கு தான் பார்த்தேன்.//
டெல்லியிலே பிரண்டைக் கூட்டிட்டு வந்துச் சென்னையிலே படம் காட்டுனீயாத் தல...
ஆமா அந்தப் பிரண்ட் இப்போ நல்லா இருக்காங்களாத் தல?!!:)

//அப்பல்லாம் நான் ஸ்டூடண்ட் தான்...//
என்னத் தல இப்போ நீ கூட ஸ்டூண்ட் கணக்காத் தான் உன் பி.எம்க்கு பயந்துப் பம்மி பிளாக் படிக்கிறதாக் கேள்விப்பட்டேன்.. நீ எப்பவுமே மாணவன் தான் தல...:)

//நம்ம நெலமைக்கு 200ரூவால்லாம் அப்ப கொஞ்சம் ஜாஸ்தி தான். அதே எண்ணத்துல சொல்லிட்டேன்பா...தப்பா எடுத்துக்காதே.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. வேணாம் தல இப்படி எல்லாம் நீ என்கிட்ட பேசுனா எனக்கு பிரியாணியும் குருமாவும் உள்ளே இறங்காது சொல்லிட்டேன் ( எத்தனை நாளைக்குத் தான் சோறு தண்ணின்னு சொல்லுறது)

தேவ் | Dev said...

//ஸ்பென்சர் போனா நாங்கெல்லாம் ஜன்னல் வாடிக்கையாளர் தான், இன்னும்//

விவசாயியாரின் இந்தச் சில்மிஷமானப் பின்னூட்டம் குறித்து நாம் மேலும் விசாரணைச் செய்ய முடிவெடுத்து விட்டோம். பாண்டி கண்மணியே உன் உதவி தேவையடா... சீக்கிரம் வாய்யா.. விவசாயி சிக்குவார்ப் போலத் தெரியுது.

தேவ் | Dev said...

//உக்கிர புத்திரன் கி பி 1771ல வாழ்ந்தவரு, அவருக்கு அப்பால வந்தவருதான் சுல்தானே, யாரை பார்த்து காப்பிங்கிறே?//

ம்ம்ம் நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும்ன்னு ஒரு பொய்யான நம்பிக்கை இன்னும் ஊருக்குள்ளே இருக்குய்யா:)

தேவ் | Dev said...

//இது வேறயா? நாம் சும்மா இருந்தாலே நம்ம ப்ளாக்ல வந்து சேர் போட்டு உட்கார்ந்து கமெண்டு போடுவாரு.. இப்படி எல்லாம் சொன்னீங்க.. அவ்வளவுதான்.. விபரீதத்த பாக்கதானே போறீங்க..//

ஆக கவிதா அக்கா நாகை சிவா மேல இப்படி ஒரு பெரிய பழி சுமத்துறாங்க... இதுக்கு நான் பதில் சொல்ல நினைக்கும் முன்னாடியே சிவா கையிலே சேரோட வந்துட்டார்...

சோ ஓவர் டூ சிவா:)

தேவ் | Dev said...

//ஆமாம் - எனக்கு தெரியாமத்தான் கேக்குறேன்...அது என்னாங்க திருட்டு வி.சிடி//

இதையேத் தான்ங்க நானும் யாராச்சும் கேப்பாங்கன்னு தவ்மாத் தவமிருந்தேன்ங்க... ஆமா அது என்ன திருட்டு வி.சி.டி... விசிடிக்கு ஏன் இப்படி ஒரு அபாண்டமான பட்டம்... கேட்க யாருமில்லைன்னு இப்படி பட்டம் கொடுத்துட்டாங்கப்பா...

நீங்களாவது தட்டிக் கேட்டீங்களே...!!!!

//எவ்வளோ டெக்னாலஜி இருந்தாலும் நம்ம ஆளு அதை கேவலப்படுத்திடுவான்... //

புரட்சித் தலைவர் திரைப் பாடல் தான் தோணுது..
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்
அதைச் சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே தான் இருக்கும்
திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது:)

தேவ் | Dev said...

//கலக்குங்க தேவண்ணா ! 'கேப்'புல கெடா வெட்டரதுன்னா இதுதானா? வட்டம் வாங்கப் போன இடத்திலே சுத்துவட்டத்தையும் பத்தி ரெண்டு வரியாச்சும் போடுறீங்களே நீவிர் வாழ்க :)))) //

கண்மணியே பாண்டி.. நான் கூறிய கருத்துக்களைக் கனக்கச்சிதமாகக் கவ்விக் கொண்டாயடா.. நீயும் வாழ்க... நின் பணி வாழ்க.. நம் நட்பும் வாழ்க...ஆகா

தேவ் | Dev said...

//பர்மா பஜாரை சொல்லுறீயளோ?? :)) பர்மா பஜாரிலே உசாரா இல்லையினா ஏமாத்திபுடுவாங்கோ!!!:))//

கண்மணியே பாண்டி..மீண்டுமொருமுறை நான் கூறிய கருத்துக்களைக் கனக்கச்சிதமாகக் கவ்விக் கொண்டாயடா..

ஆடி மாதத்தில் உன் அறிவுப் பெருக்கைக் கண்டு நான் கதி கலங்கி நிற்கிறேனடா.. ஆம் உள்ளம் கலங்கி நிற்கிறேன்.. என் அருமை கண்மணியே.. பஜாரில் கயவர் கூட்டம் கலர் கலராய் கதைச் சொல்லி வெற்று வட்டங்களைக் கொடுத்து நம விழிகளை விரிய விடும் கொடுமை இன்னும் தொடருதடா... அதற்கு தானடா இந்தப் பதிவு.. அதற்கு தான் இந்தப் பதிவு...

கவிதா|Kavitha said...

//கவிதா இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு பொறமையா ஆவாதுங்க. உங்களுக்கு வேணும் என்றால் சும்மா வெட்கப்படாமல் கேளுங்க. பட்டங்களுக்கா பஞ்சம். அதவிட்டுட்டு இப்படி பழித்துப் பேசுவது நல்லா இல்ல//

ஆமா சிவா எனக்கு உங்கள பாத்தா பொறாமையாத்தான் இருக்கு.. ஆனா நீங்க நினைக்கற மாதிரி பட்டத்துக்கு * இல்ல.. அது எப்படி எப்பவுமே எல்லா ப்ளாக் லியும் இப்படி சேர் போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிடறீங்க.. எனக்கு கொஞ்சம் சொல்லிதாங்களேன்..

*இங்க நானே பட்டம் வாங்கி நானே நல்லா பறக்க விடுவேன், அதுவும் நம்ம தலைவர் படத்துல வருதே "கொக்கு பற பற கோழி பற பற" பாட்டுல விதவிதமா பட்டம், அப்படி விதவிதமா பட்டம் வாங்குவேன். அதுல ஒண்ணு உங்க புலி மாதிரி கூட இருக்கும்..

தேவ் | Dev said...

//கவிதா இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு பொறமையா ஆவாதுங்க. உங்களுக்கு வேணும் என்றால் சும்மா வெட்கப்படாமல் கேளுங்க. பட்டங்களுக்கா பஞ்சம். அதவிட்டுட்டு இப்படி பழித்துப் பேசுவது நல்லா இல்ல //

ஆகா பட்டம் பறக்குது டோய்... சிவா என்ன ஒரு பெருந்தன்மை.. ஆமா என்னப் பட்டம் கைவசம் இருக்குச் சொல்லுங்க...சும்மாத் தெரிஞ்சிக்கலாம் இல்ல

தேவ் | Dev said...

//hhhaaaaaa haaaaaa heeeeee heeeeeee
I really enjoyed reading this Dev //

Thanks and Join the club Anitha.

தேவ் | Dev said...

//புரியலயே புரியலயே...
தனியா விளக்கமா சொன்னா புரிஞ்சிகிட்டு போறேன். //

சபையின் நாகரீகம் கருதி சபையிலே அதற்கான விளக்கம் வந்தாயிற்று சிவா.. கண்மணி பாண்டியின் பின்னூட்டத்தைப் படித்துப் பார் உனக்குப் புரியும்.

தேவ் | Dev said...

//நமக்கும் இதே மாதிரி அனுபவம் எல்லாம் உண்டு தேவ்...அதனால சும்மா பராக்கு பாக்குறது மட்டும்தான்...இப்படி போன வாரம் லண்ட்மார்க்ல பாத்தப்ப "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" VCD மட்டும் 65 ரூவாய்க்கு கிடச்சுதா..தூக்கினு வந்துட்டேன்...
நாங்கெல்லம் ஒரிஜினல் VCDல தான் பாப்போம் தெரியுமா?.. (ஒரு தடவ தாஜ் போய்ட்டு அந்த பில்ல ரூம்ல எல்லரும் பாக்கர இடத்துல ஒரு வருஷம் வச்சி இருந்த மாதிரி)
வர வழியில வேற ஒரு கடையில :-) இங்கிலிபீசு DVD(3 படம்) 100ரூவான்னு 2 வாங்கிட்டு வந்துட்டேன்.. //

பின்னூட்டம்ங்கறப் பேர்ல்ல் நீங்களும் ஒரு சின்னப் பதிவுப் போட்டு அசத்தீட்டீங்க ஹமீத்.. தொடரட்டும் உங்கள் பணி...ஆமா 100 ரூபாய் கொஞ்சம் அதிக விலைன்னு தோணுது.. இப்போவெல்லாம் பஜார்ல்ல 30 ரூபாயக்கு மூணு படம் இருக்க வட்டம் கிடைக்குதாம்ல்ல

//திருட்டு வட்டத்துல்ல படம் பாக்குறதில்லைங்கறது தான் //
இந்த சபததோட வாழ்னாள் எத்தன தேவ்?

சபதங்கள் சத்தமின்றி சமாதி ஆவது எல்லாம் பொது வாழ்க்கையில் ரொம்பச் சாதரணமாகிப் போச்சு ஹமீத்:(

ILA(a)இளா said...

//விவசாயி சிக்குவார்ப் போலத் தெரியுது//
நாங்க சிக்குவாரு, சிலுக்குவாரு, விளக்குமாரு எல்லாத்தையும் பார்த்தாச்சு, இதெல்லாம் ஜூஜூப்பி

மனதின் ஓசை said...

//ஆமா 100 ரூபாய் கொஞ்சம் அதிக விலைன்னு தோணுது.. இப்போவெல்லாம் பஜார்ல்ல 30 ரூபாயக்கு மூணு படம் இருக்க வட்டம் கிடைக்குதாம்ல்ல//

ஏமாளிதனத்த இப்படி சபையில விவரம் புரியாம சொல்லிட்டேனே...இதுதான் சொ.செ.சூ.வ வா?
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மனதின் ஓசை said...

//பின்னூட்டம்ங்கறப் பேர்ல்ல் நீங்களும் ஒரு சின்னப் பதிவுப் போட்டு அசத்தீட்டீங்க ஹமீத்//

தேவு...(தீவு - theevu ன்னு அடிச்சாத்தான் தேவுன்னு வருது????)பிச்சி பிச்சி நரைய பிண்ணுட்டம் போட சொல்றீகளா? சரியா சொல்லுங்க அப்பு... போட்டு தாக்கிடுவோம்...indirecta சொன்ன எல்லாம் புரியாது..சொல்லிப்புட்டேன்...
:-)

மனதின் ஓசை said...
This comment has been removed by a blog administrator.
ஸ்ரீதர் said...

இது தேவையா தேவு.. ஒழுங்க spencers போனோமா 15 ருபாய்க்கு Ice cream வாங்கிக்கிட்டு, வந்து போற குட்டை பாவடை பொண்ணுங்களை பாத்தோமானு இருக்கிறத விட்டுட்டு இப்படி நம்ம போக கூடாத இடத்துக்கெல்லாம் போகலாமா.

tamil10