நம்முடைய நீண்ட நாள் ஆசை எப்படியாவது ஒரு படமெடுக்கணும்ங்கறது தான்ங்க...ஆனாப் பாருங்க அதுக்கு நிறைய காரணிகள் சரியா அமையணும்.. நம்ம அரைவேக்காட்டுத் தனத்துக்கு அதெல்லாம் சரிப்படாதுன்னு நம்ம பினாத்தலார் சொல்ற மாதிரி அடங்குடா மவனேன்னு ஆசையை லகான் போட்டு அடக்கி வச்சுருந்தேன்.. ஆங்கிலேயப் பாணியிலான அந்த அடக்கு முறையையும் மீறி நம்ம கலைத் தாகம் தலை விரித்து தண்ணிக் கேட்டு ஆடுனா நான் என்னப் பண்றது சொல்லுங்க...
ஒரு சூப்பர் கதைச் சிக்கிருச்சு... உடனே அந்தக் கதைக்கு தோதான்னா கலைஞனைத் தேட ஆரம்பிச்சேன்... பட்டுன்னு நினைவுக்கு வந்தது.. நமக்கு ரசிகர் மன்ற தலைவர் பதவி எல்லாம் கவுரவப்படுத்துன தலைவர் பின்னூட்டப் புயலார் கொத்ஸ் தான்...
தன் அயராதப் பின்னூட்டப் பணிகள் மற்றும் அவ்வப்போது செய்யும் அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் நமக்கு நேரம் ஒதுக்கிக் கதைக் கேட்க ஒத்துக் கொண்டார். அந்தப் பெருந்தனமைக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..
"'அதாவது... இது ஒரு சரித்திரக் கதை.... ''
நான் இப்படி ஆரம்பிச்சதும் ஒரு ஆழ்ந்த தியான நிலைக்கு பி.பு போயிட்டார். மோவாக் கட்டயிலே கையை ஊன்றி கிட்டு அப்படியே தீவிரமாக் கதைக் கேட்க ஆரம்பிச்சார்.
"கிபி. 1800, இந்தியாவில்ல ஒவ்வொரு ராசாவும் 10- 15 கலியாணமெல்லாம் பண்ணி கணக்கற்ற இளவரசர்களையும் இளவரசிகளையும் உருவாக்கி நாட்டை ஒரு வீடு போல் ஆக்கி ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தக் காலம். "
கொத்ஸ் மேலும் கவனமாகக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.
"இந்த நேரம் இங்கிலாந்தில் இருந்து ஆன் சைட் புரொஜ்க்ட்க்காக இந்தியா வந்திறங்கிய பல ஹார்ட்வேர் கைஸ் இந்தியாவை ஒரு கிளைன்ட் பிளேஸ் என்றும் பாராமல்.. பல வைரஸ்களை நாசுக்காய் நம் மீது டவுண்லோட் செய்த படி இருந்தனர். நம்முடைய விலை மதிக்க முடியாத சொத்துக்களை அவர்களது சர்வ்ருக்கும் அப்லோட் செயதப் படி அட்டகாசம் புரிந்தனர். பல ஜலபொல டகால்டி மன்னர்களும் அவ்வப்போது வெள்ளையர்கள் காட்டிய கிளு கிளுப் படங்களில் மயங்கி... அந்த நினைப்பிலேயே தவறாக இயங்கி ஆன் சைட் வந்த அந்நிய அனானி கூட்டத்திடம் கோலியாய் உருண்டு கேலியாய் நின்றனர்...
கொத்ஸ் தலையை நிமிர்த்தி நம்மைப் பார்க்கிறார்...
"இங்கேத் தான் தலைவா உங்க இன்ட்ரோ.....
நீங்கப் பின்னூட்டக்கேசி அப்படிங்கற ஒரு பெரும் தேசப் பக்தி மிக்க வலைப்பதியும் அரசர். அப்படியே தஞ்சாவூர் தவில் ஒலிக்க நாதஸ்வர பேக் கிரவுண்ட்ல்ல.... ஒரு கம்ப்யூட்டர்ல்ல ஜூம் பண்றோம்... அங்கே....
ஒரு ஆயிரம் குதிரைகள் புழுதி கிளப்ப வருது... நீங்க முன்னாடி வருவீங்கன்னு உங்க ரசிகர்கள் உங்களைத் தேடுவாங்க பட் நீங்க பின்னாடி வர்றீங்க.. இங்கே நாம கேரக்டரை எஸ்டாப்ளிஷ் பண்றோம்.
பின்னூட்டியக் கறையினைத் துடைப்போம்
பின் ஈட்டியாய் மாறி அழிப்போம்....
அப்படின்னு ஒரு சாங்... ஷங்கர் மகாதேவன் வாய்ஸ்ல்ல வைக்கிறோம்.....
மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...
பட் காலையிலே நீங்க கண் முழிச்சு உங்க அம்மாவை வணங்கிட்டு வந்து கம்யூட்டரைத் திறக்கிறீங்க... பார்த்தா பதிவு இல்ல நீங்கப் போட்ட தலைப்புக்கே ஒரு 500 பின்னூட்டம் வந்து இருக்கு....
அப்படியே அண்ணாமலையிலே சூப்பர்ஸ்டாருக்கு கொடுக்குற பி.ஜி.எம் கொடுக்குறோம்....
ஒரு சாதரண டப்பா கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நீங்க அப்படியே படி படியா பின்னூட்டம் வாங்கி வளர்ந்துலாப் டாப் தூக்கிட்டு டூவின் டவர்ஸ்ல்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறீங்க. ( டுவின் டவர்ஸ் இடிந்துப் போனாலும் அதே மாதிரி நாம் செட் போடுறோம்) அந்த அளவுக்கு ஒரு அபார வளர்ச்சி... நாடெங்கும் உங்க புகழ் பரவுது.
நீ போட்டால் பதிவு அழகு...
நீ விடும் ரீல் அழகு.... அப்படின்னு ஒரு ட்ரீம் சாங்...
கொத்ஸ் புன்னகைப் பூக்க ... நாம் மேலும் தொடர்கிறோம்.
ஆங் இங்கே தான் கதையிலே டர்னிங் பாயிண்ட்...
ஆமா நீங்க திரும்பி நிக்குறீங்க.. அப்போ மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....
செவ்வாய் கிரகத்திலிருக்கும் பின்னூட்டா பல்கலைக் கழகம் உங்களுக்கு மாபெரும் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செயகிறது...
அந்த பட்டம் தான் இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி என்பது... நீங்களும் அந்தப் பட்டம் வாங்க... அரசர் உடையில் இடுப்பில் உடை வாள் ஏந்தி குதிரையில் ஸ்டூல் போட்டு ஏற போகும் நேரத்தில்
"ஸ்டாப் இட் பின்னூட்டக்கேசி...U ARE NOT ELIGIBLE FOR THIS AWARD... "
அப்படின்னு ஒரு வெள்ளைக் காரன் பெரும் படையோடு வந்து நிற்கிறான்.
அப்போவும் மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....
குதிரை ஏறாமல் சும்மா ராயல் வாக் விட்டு நீங்க வர்றீங்க....
"யாராடா நீ...செவ்வாய்க்கு நான் கிளம்பும் போதும் நாறவாயால் நிற்க சொல்கிறாய்"
"ஹே பின்னூட்டக் கேசி.. நான் டைசன்... பிரிட்டீஷ் கவர்மெண்ட் போலீஸ் போர்ஸ்"
"ஓ.. நீ தான் டைசன் துரை என்பவனோ?"
"எஸ்"
"எங்கு வந்தாயடா டைசா?"
"உன் மீது புகார் வந்து இருக்கிறது"
"எனக்கு கார் எல்லாம் வேண்டாம்.. குதிரைச் சவாரி தான் பிடிக்கும்"
"பின்னூட்டக்கேசி.. புகார் என்றால் கம்ப்ளேயண்ட்"
"என்ன... கம்ப்ளெயண்ட்டா யார் கொடுத்தது..எதற்காக?"
"பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணியிருக்கீயாம் நீ?"
"டைசா சின்னப் பய்லே... என்னப் பேச்சு இது ராஸ்கல்"
"ஆம் பிரிட்டீஷ் சர்க்கார் நடத்தும் பதிவுகளில் நீ பின்னூட்டமிட மறுத்தது முதல் குற்றம்.. அடுத்து அங்கு பின்னூட்டமிட வரும் பிறரையும் பின்னூட்ட விளையாட்டு என நீ உன் பதிவுக்கு ஓட்டிக் கொண்டு போவது மாபெரும் குற்றம்"
"ஆ.... "என சவுண்ட் விட்டபடி பின்னூட்டக்கேசி டைசன் கையிலிருக்கும் லாப் டாப் கனெக்ஷன்களைக் கண்டமேனிக்குப் பிடுங்கி விட்டு அவன் லாப் டாப்பை வாங்கி தரையில் போட்டு உடைக்கிறார்.
"பின்னூட்டக்கேசி.. இது மன்னிக்க முடியாத குற்றம்"
"போடா.. வெறும் அட்டையினால் செய்த வெற்று பெட்டியின் மேல் காம்பேக் பிரச்ரியோ என எழுதி வைத்திருப்பாய் அதை நான் எடுத்து உடைத்து விளையாடுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை இன்னும் ஆயிட்ரம் முறை செய்வேன்.. போ போய் மிச்சமுள்ள அட்டைப் பெட்டிகளே எடுத்துவா... அழுக்கு துணிகள் போட்டு ஆற்றுக்கு துவைக்க அனுப்புகிறோம்"
"முடிவாக் கேட்கிறேன்.. பின்னூட்டமிடுவாயா மாட்டாயா"
"பின்னூட்டம்..அதுவும் உன் அதிகாரத்திற்கு பயந்தா... நெவர்... தெரியாமல் தான் கேட்கிறேன்...
பதிவு போட நான் தலைப்புக் கிடைக்காமல் விழித்திருந்தப் போது என்னோடு புல் நைட் விழித்திருந்து என்னோடு லார்ஜ் அடித்து நீயும் யோசித்தாயா...
இல்லை...பதிவுகளை மொத்தமாய் அரசாங்கம் தடைச் செயத் நேரத்தில் என் குலக் கொழுந்துக்களுக்கு பிராக்சி சர்வர் செட் பண்ணிக் கொடுத்து படிக்கத் தான் உதவினாயா நாதாரி பயலே..
அதுப் போகட்டும்.. பிராஜக்ட் மேனஜருக்குத் தெரியாமல் என் பாசமிகு நட்பு கைப்புள்ள பதிவுப் படித்து பி.எமிடம் பிடிப்பட்டு பெஞ்ச் மேல் ஏறி நின்ற போது நீ வாளோடு போய் கைப்புக்குத் தான் தோள் கொடுத்தாயா.. போடா போக்கத்தவனே....
பிளாகர் இருக்கிறது!!! பதிவுகள் பொழிகின்றன!!! உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... மானம் கெட்டவனே... "
"ஏய் பின்னூட்டக் கேசிசிசிசிசிசிசி..."
"போடா வெள்ளைக்கார குண்டூசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசி...."
உணர்ச்சிப் பொங்க நாம் கதைச் சொல்லி முடிக்க கொத்ஸ் நம்மைப் பாரட்டுகிறார்...
அதுக்கு மேல பின்னூட்டக்கேசி போலீஸ் ஆதிக்கத்தை வென்று எப்படி செவ்வாய் பின்னூட்டா பல்கலைக்கழ்கம் சென்று பட்டம் பெறுகிறார் எனப்து தான் மீதிக் கதை.....
DISCLAIMER: இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் பூமி, செவ்வாய் இன்ன பிற கிரகங்கங்களில் வாழும் வாழ்ந்த வாழப் போகும் யாரையும் குறிப்பிடுவதல்ல... இது முழுக்க முழுக்க கற்பனையே.. கறபனை மட்டுமே.
பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள மனம் கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.
152 comments:
//"""கறபனை""" மட்டுமே.//
இதுக்கு பிகு இப்படி இல்ல இருக்கனும்
""பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள ""பணம்"" கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.
:-))
தலைப்புக்கே 500 பின்னூட்டாமா!
ஆஹா!
படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாடியே எல்லா செண்டர்லயும் வசூல் பிச்சிகிட்டு போகப் போகுது!
எல்லா ஏரியா டிஸ்டிரிபியூஷன் ரைட்ஸையும் நானே வாங்கிக்கறேன்!
Good one. :-)
கொத்ஸ கொத்துக்கறி ஆக்கிட்டியே தலைவா.
தேவ்,
அருமை :-))))
//பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள மனம் கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.
//
சங்கத்து பண்ட்ல இருந்து எடுத்துப் போட்டக்க வேண்டியதுதானே???
:-)
இ.கொ. இந்த மாதிரி கதைக்குத்தான் வெய்ட்டிங். அவரே படம் தயாரிப்பார்... நாங்க வழக்கம் போல தியேட்டருக்கு போகாம வீட்டிலேயே டவுன் லோட் செய்து பார்த்துக்கிறோம், சரியா?????????
விட்டேன் பாருங்க ஒரு குத்து..
கொத்ஸ் ஒரு நல்ல தயாரிப்பாள்ர் தெரியுமில்லை?
:))))
//கொத்ஸ் ஒரு நல்ல தயாரிப்பாள்ர் தெரியுமில்லை?//
அதாவது அவரே துட்டு போட்டு படத்தை எடுத்து, நடிச்சு, விநியோகமும் பண்ணிடுவாருன்னு சொல்ல வர்றீங்க அப்படி தானே? ஹாலிவுட்டைக் கலக்க இருக்கும் 'ஆஸ்கார் தமிழன்' , பின்னூட்டப் புயல், புரோட்டா பாவலர், வருங்கால அமெரிக்க சனாதிபதி அண்ணன் கொத்ஸ் வாழ்க வாழ்க.
இவண்
கைப்புள்ள
c/o. அகில உலக கொத்ஸ் ரசிகர் நற்பணி மன்றம்
சித்தூர்கட் எக்ஸ்டென்ஷன் கவுண்ட்டர்.
ஏம்ப்பா தேவு,
படத்துல கொத்ஸுக்கு சோடியான ஹீரோயினீக்கள் யாருன்னு சொல்லவேயில்லியே?
யார் சொன்னது தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் என்று? இது அருமையான கதை,
//சங்கத்து பண்ட்ல இருந்து எடுத்துப் போட்டக்க வேண்டியதுதானே??? //
சங்கமே அபராத்துல தான் போகுது, யாராவது ஒரு பேங்க் வச்சித்தாங்க படமெடுக்குறேம்,
//போடா.. வெறும் அட்டையினால் செய்த வெற்று பெட்டியின் மேல் காம்பேக் பிரச்ரியோ என எழுதி வைத்திருப்பாய் அதை நான் எடுத்து உடைத்து விளையாடுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை இன்னும் ஆயிட்ரம் முறை செய்வேன்..//
வசனகர்த்தா யாருங்கோ...? கொத்ஸ் மாதிரி பெரிய ஸ்டார்க்கு எல்லாம் சுஜாதாவை த்தான் போடனும் ,
தமிழகத்தில் எடுப்பதை விட இதை நீங்கள் ஹாலிஉட்-டில் டிரைப் பண்ணலாம், வார்ன(ர்)பிரதர்ஸ், இல்லைனா 20த் சென்சூரி,
ஆமா ஹாலிஉட்ல இருந்து ஜோடியெல்லாம் யாருங்கோ...?
ரசிகர்மன்ற நிர்வாகிகள்..? யார் யாருக்கு என்னன்ன பதவி செயற்குழுவில் முடிவு எடுத்தாச்சா..?
அன்புடன்...
சரவணன்.
//" பின்னூட்டியக் கறையினைத் துடைப்போம்
பின் ஈட்டியாய் மாறி அழிப்போம்....
நீ போட்டால் பதிவு அழகு...
நீ விடும் ரீல் அழகு.... " //
தேவு!தூள்மா!எங்க ஊர்க்காரர் இலவசக்கொத்தனார் எப்போ 'ஹீரோ'
ஆகப்போறாரு ????!!!!!.
//பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள ""பணம்"" கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.//
நல்லதொரு ஆலோசனை சொல்லியிருக்கீங்க தாங்க்யூ நன்மனம்:)
ஆமா உங்களுக்கு எதுவும் படமெடுக்கிற ஐடியா இருக்கா? நன்மனத்தாரே...?
//தலைப்புக்கே 500 பின்னூட்டாமா!
ஆஹா!
படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாடியே எல்லா செண்டர்லயும் வசூல் பிச்சிகிட்டு போகப் போகுது! //
நல் வாக்கு சொல்லிய நாமக்கல்லாருக்கு மனமார்ந்த நன்றிகள் சொல்லிக்கிறேன்.
//எல்லா ஏரியா டிஸ்டிரிபியூஷன் ரைட்ஸையும் நானே வாங்கிக்கறேன்! //
விநியோக உரிமைக்கு நீங்கள் அணுகவேண்டிய முகவரி,
ப/எண் 420,
பு/எண் 840
எ/எண் 1680
கச்சேரி சாலை,
சென்னை - ௭420
Thanks Annony
பாசமிகு பெரும் புலவர் பெருசு அவர்கள்.. இதெல்லாம் சும்மா ஸ்மால் ரவுசு.. இதே படத்தை டிவிய்லே ஞாயித்துக் கிழ்மை காலையிலே கால் மேல் கால் போட்டுக்கிணு சும்மா கோட்டேல்லாம் போட்டுக்கினு கலாசுவாங்கப் பாருங்க.. அப்போத் தான் மெய்யாலுமே கொத்துக்கறின்னா என்னன்னு விளங்கும்.
பிகு:கொத்ஸ் பெருசுக்கு நீங்க ஹாலிவுட் ஹீரோவா ஆவறது புடிக்காமத் தான் இப்படி அள்ளி விடுறார். இதுக்கெல்லாம் நாம பயந்துடுவோமா என்ன?
//தேவ்,
அருமை :-))))//
நன்றி வெட்டி பயல் அவர்களே.
//சங்கத்து பண்ட்ல இருந்து எடுத்துப் போட்டக்க வேண்டியதுதானே??? //
வெட்டி பயல் சார்.. சங்க வரலாறு தெரியாமல் கேட்டு விட்டீர்கள்... ஏற்கனவே சங்கத்து நிதியில் ஒரு பெரும் பகுதி தலக் கைப்புள்ள நடிக்கும் நடிக்கப் போகும் படங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது... இதில் நம்ம படத்துக்குப் பண்ட் ஒதுக்குவ்து என்பது நடக்குமா?
//இ.கொ. இந்த மாதிரி கதைக்குத்தான் வெய்ட்டிங். அவரே படம் தயாரிப்பார்...//
உதய் எங்கள் தலைவர் பி.பு எதற்கும் அஞ்சாதச் சிங்கம்.. தேவைப்பட்டால் அவரே தயாரிக்கவும் தயங்கமாட்டார்.. பட் நான் தான் இயக்கம்..:)
// நாங்க வழக்கம் போல தியேட்டருக்கு போகாம வீட்டிலேயே டவுன் லோட் செய்து பார்த்துக்கிறோம், சரியா????????? //
கண்டிப்பா குடும்பத்தோடப் பார்த்து மகிழுங்க.. பட் தியேட்டருக்கு வந்தீங்கண்ணா கால்கரி சிவா சார் ஸ்பான்ன்சர்ஷிப்பில் எல்லோருக்கும் ஜில்லுன்னு ஜிகர்தண்டா கிடைக்கும் அது மிஸ்ஸாயிடும் பரவாயில்லையா?:)
//விட்டேன் பாருங்க ஒரு குத்து.. //
யம்மாடியோவ் அது தான் எங்க தலைவர் கொத்ஸ் இன்னும் இங்கே என்டிரி ஆகலியா?
என்ன பாலா இப்படி பண்ணிட்டீங்க?!!!:)
//கொத்ஸ் ஒரு நல்ல தயாரிப்பாள்ர் தெரியுமில்லை?//
டிராக்டர் எல்லாம் வச்சு அதுல்ல ஏறி வந்துச் சொல்லுறீங்க.. ம்ம்ம் பெரிய விவசாயி தான் நீங்க?
மேலே சிபிக்குச் சொன்ன அட்ரஸ்க்கு வாங்க மத்ததை நேரில் சந்தித்துப் பேசிக்கலாம்ய்யா:)
பிகு: கொத்ஸ் தயாரிப்பில் விவசாய பின்னனியிலே ஒரு கதைச் சொல்ல சொல்லி இருக்கார். கதை ரெடி ஆகிட்டு இருக்குண்ணா
வருகைக்கும் தருகைக்கும் நன்றி வெங்கட் ரமணி:)
//இவண்
கைப்புள்ள
c/o. அகில உலக கொத்ஸ் ரசிகர் நற்பணி மன்றம்
சித்தூர்கட் எக்ஸ்டென்ஷன் கவுண்ட்டர்.//
அப்பூ இங்கிட்டு தலைமை மன்றம்ன்னு போர்ட் மாட்டி ரொம்ப நாளா சவுண்ட் விட்டு நாங்க சலம்பிகிட்டு இருக்கோம் கேப்புல்ல என்ன இது புது பலகை...ம்ம் செல்லாது செல்லாது...
இங்கிட்டுப் போய லைன்ல்ல நின்னும் $333.75 கட்டி மன்ற விண்ணப்ப படிவம் வாங்கிட்டு வந்து என்னைப் பாரு அப்புறம் மீதியைப் பேசிக்குவோம்...
பி.சூ.இ.இ.அ.த.இ.இ. ரசிகர்கள் நற்பணி மன்றம், தலைமையகம்,
ப/எண்: 555
பு/எண்: 999
எ/எண்:???
இலவச டவர்ஸ்
அண்ணா சாலை,
சென்னை - 339
//ஏம்ப்பா தேவு,
படத்துல கொத்ஸுக்கு சோடியான ஹீரோயினீக்கள் யாருன்னு சொல்லவேயில்லியே? //
இந்தா இப்போக் கேட்டியே இது கேள்வி...
இது சரித்திர படம்ங்கறதாலே ஒழுங்கா தமிழ் பேசுற நடிகையாத் தான் தேடிக்கிட்டு இருக்கோம்.
இந்தா தயாரிப்பாளர் கிடைச்சதும்.. நானும் நல்ல தமிழ் பேசுற நடிகையைத் தேடி பாலிவுட், ஹாலிவுட்ன்னு லாங் டிரிப் போகப் போறோம்.. போயிட்டு வந்து உம்ம கேள்விக்கு விடைச் சொல்லுறோம்.
//யார் சொன்னது தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் என்று? இது அருமையான கதை, //
ஆகா சரவணா.. செல்லமே.. என் உள்ளத்தைத் தொட்டு விட்டாயடா.. இந்தப் படத்துல்ல நீ தான் எனக்கு ஆசோசியட் டைரக்டர்..ஓ.கேவா
//சங்கமே அபராத்துல தான் போகுது, யாராவது ஒரு பேங்க் வச்சித்தாங்க படமெடுக்குறேம்,//
டி.பி.ஆர் ஜோசப் சாரை வேணும்ன்னா கேட்டுப் பார்ப்போமா? அவர் தான் எல்லாருக்கும் லோன் கொடுத்து உதவற புண்ணியவான்.
//வசனகர்த்தா யாருங்கோ...? கொத்ஸ் மாதிரி பெரிய ஸ்டார்க்கு எல்லாம் சுஜாதாவை த்தான் போடனும் ,//
ஆலோசனையை அள்ளி விடுறீயே சரவணா.. யப்பா பாண்டி நோட் பண்ணிக்கடா கண்மணி
//தமிழகத்தில் எடுப்பதை விட இதை நீங்கள் ஹாலிஉட்-டில் டிரைப் பண்ணலாம், வார்ன(ர்)பிரதர்ஸ், இல்லைனா 20த் சென்சூரி,//
சரவணா.. சங்கத்தில் பதவி என்ற என் வார்த்தைக்கு இவ்வளவு எபெக்டா.. செல்லமே... போட்டு பின்னுறப்பா...
//ஆமா ஹாலிஉட்ல இருந்து ஜோடியெல்லாம் யாருங்கோ...?//
உன் ஆர்வம் புரியுது சரவணா.. உனக்கும் சேத்தே தயாரிப்பாளரைப் பிளைட் டிக்கெட் எடுக்கச் சொல்லிடுறேன்.. எங்க கூட நீயும் வாப்பா..
//ரசிகர்மன்ற நிர்வாகிகள்..? யார் யாருக்கு என்னன்ன பதவி செயற்குழுவில் முடிவு எடுத்தாச்சா..?//
சரவணா இந்தக் கேள்விக்கு நமது மன்றத்தின் காவல் தெயவம் தலைவர் இ.கொ அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும்... தலைவா வாங்க வந்துச் சொல்லுங்க..
//தேவு!தூள்மா!//
டாங்க்ஸ் ராஜா:)
//எங்க ஊர்க்காரர் இலவசக்கொத்தனார் எப்போ 'ஹீரோ'
ஆகப்போறாரு ????!!!!!. //
இந்தா நல்லதா ஒரு தயாரிப்பாளர் சிக்குன ஓடனே ஷூட்டீங் போயிற வேண்டியது தான்..
தலைப்பே சரியா வைய்யா.
இலவச கொத்தனார் 2300000ம் பின்னூட்டக்கேர்.
23ன்னு கம்மி பண்றே, பிச்சு புடுவேன் பிச்சு.
இப்படிக்கு
இளா
அகில உலக கொத்ஸ் ரசிகர் நற்பணி மன்றம்
டிராக்டர் மன்றம்
(Sub Division of விவசாயிகள் பாசறை)
உங்கள் படம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள். நம்ம படம் தான் எப்போ வெளிவரும்னே தெரியல
//ஆகா சரவணா.. செல்லமே.. என் உள்ளத்தைத் தொட்டு விட்டாயடா.. இந்தப் படத்துல்ல நீ தான் எனக்கு ஆசோசியட் டைரக்டர்..ஓ.கேவா//
ஓ! அப்போ படம் எடுக்கும் போது குறுக்க குறுக்க ஓடிவந்து நீங்க "ரெடி" சொன்னதும் ஒரு கட்டையால அடிக்கனுமே அந்த வேலையா?
படம் போடும் போது எம் பேரும் வருமா, ஆஹா இது போதும் தல
//டி.பி.ஆர் ஜோசப் சாரை வேணும்ன்னா கேட்டுப் பார்ப்போமா? //
ஜோசப் சார்,லோன் கொடுக்கும் போதும் "திரும்பிப் பார்துக்கிட்டே" தான் இருப்பாரா?
அன்புடன்...
சரவணன்.
//ஆலோசனையை அள்ளி விடுறீயே சரவணா.. யப்பா பாண்டி நோட் பண்ணிக்கடா கண்மணி//
தானா வருதுப்பா...சரி ஓகே பாண்டிக்கே காப்பி ரைட்...
//சரவணா.. சங்கத்தில் பதவி என்ற என் வார்த்தைக்கு இவ்வளவு எபெக்டா.. செல்லமே... போட்டு பின்னுறப்பா...//
உங்கள் அன்புக்கு நன்றி,பதவி எல்லாம் வேண்டாம் நண்பரே,நமக்கு அந்த அளவுக்கு தகுதியில்லைப்பா, நான் நமது சங்கத்து புகழ் பரப்பும் சாதாரண "தோரணம் கட்டும்" தொண்டனாகவே இருந்து கொள்கிறேன்,
அன்புடன்...
சரவணன்.
//உன் ஆர்வம் புரியுது சரவணா.. உனக்கும் சேத்தே தயாரிப்பாளரைப் பிளைட் டிக்கெட் எடுக்கச் சொல்லிடுறேன்.. எங்க கூட நீயும் வாப்பா.. //
கேணப்பபயதான் பிளைட்ல டிக்கெட் எடுப்பான், அப்படினு நம்மை "சிலர்" கலாய்ப்பார்களே, அதை கண்டு ஏமந்துவிடாதே,மறந்துடாம எடுத்துடு இல்லைனா நடு வழில எறக்கிவிட்டுருவானுக,ஜாக்கிரதை!!!
அன்புடன்...
சரவணன்.
//சரவணா இந்தக் கேள்விக்கு நமது மன்றத்தின் காவல் தெயவம் தலைவர் இ.கொ அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும்... தலைவா வாங்க வந்துச் சொல்லுங்க.. //
வந்து சொல்லுங்கள் தலைவரே, காத்திருகின்றேம், ஆமா தலைவர் எங்கே?
அன்புடன்...
சரவணன்.
கொத்ஸ் இன்று முதல் நீ ""இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி"
என்று எல்லோராலும் அன்போடு(??) அழைக்கப்படுவாய்!!!
அன்புடன்...
சரவணன்.
தேவ்!
சீக்கிரம் தயாரிப்பாளர் பிடி.
திரைக்கதை டிஸ்கஷனை ஏற்காடுல வச்சுப்போம்.
டான்ஸ் மூவ்மெண்ட் டிஸ்கஷனை ஊட்டியில் வச்சுப்போம்.
சண்டை காட்சி டிஸ்கஷனை கொடைக்கானில் வச்சுப்போம்.
காமெடி டிஸ்கஷனை வால்பாறை...
பாடல் வரிகள் - பாண்டிச்சேரி
இசை - லண்டன்
என்ன சொல்லும் இடம் எல்லாம் கரேட்டா.
நாயகிகள் தேர்வு எப்போ பாண்டி?
//"போடா.. வெறும் அட்டையினால் செய்த வெற்று பெட்டியின் மேல் காம்பேக் பிரச்ரியோ என எழுதி வைத்திருப்பாய் அதை நான் எடுத்து உடைத்து விளையாடுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை இன்னும் ஆயிட்ரம் முறை செய்வேன்.. போ போய் மிச்சமுள்ள அட்டைப் பெட்டிகளே எடுத்துவா... அழுக்கு துணிகள் போட்டு ஆற்றுக்கு துவைக்க அனுப்புகிறோம்"
//
தேவ் கலக்கல் தேவ் ! ... மேல உள்ளதைப் படித்து )::::::::::::::::) 32 பல்லையும் காட்டி சிரித்தேன் :)
// " திரைக்கதை டிஸ்கஷனை ஏற்காடுல வச்சுப்போம்.
டான்ஸ் மூவ்மெண்ட் டிஸ்கஷனை ஊட்டியில் வச்சுப்போம்.
சண்டை காட்சி டிஸ்கஷனை கொடைக்கானில் வச்சுப்போம்.
காமெடி டிஸ்கஷனை வால்பாறை...
பாடல் வரிகள் - பாண்டிச்சேரி
இசை - லண்டன்
என்ன சொல்லும் இடம் எல்லாம் கரேட்டா. " //
எல்லாம் கரீக்டுதான் சிவா.ஆனா சூட்டிங் மட்டும் திரைகடலோடி சங்கம் வளர்க்கும் உனக்காக சூடானிலும்,
எனக்காக துபாயிலும்,கதை நாயகன் பி.பு வருங்கால ஐ.நா.சபைத்தலைவர்
நமது அண்ணன் இ.கொ.வுக்காக கொஞ்சம் புதரகத்திலும் வைச்சுப்போம்.
Dev,Am I right ?
தேவு, இ.கொ.வை இப்படி தேவிட்டியே?
எல்லாரும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவரைக் காணோமே? தேவ், நீங்கள் அவர் பின்னூட்டத்தினை அனுமதிக்காமல் இருட்டடிப்பு செய்கிறீர்களோ என அவரது ஒற்றர் படைத்தலைவர் (நான் இல்லீங்கோ!) தெரிவிக்கிறாராமே? உண்மையா?
உக்காந்து யோசிப்பீங்களோ ?? இல்லை கனவில் வந்த கற்ப்பனையா ?
//உங்க அம்மாவை வணங்கிட்டு வந்து கம்யூட்டரைத் திறக்கிறீங்க... பார்த்தா பதிவு இல்ல நீங்கப் போட்ட தலைப்புக்கே ஒரு 500 பின்னூட்டம் வந்து இருக்கு....//
கொத்ஸ் கண்ணுல ஆனந்தக்கண்ணீரே வந்திருக்கும் இதையப் பார்த்து :))
//நீ போட்டால் பதிவு அழகு...
நீ விடும் ரீல் அழகு.... அப்படின்னு ஒரு ட்ரீம் சாங்...//
ஹையோ ஹையோ தேவு உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா ???:)))
//பிளாகர் இருக்கிறது!!! பதிவுகள் பொழிகின்றன!!! உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... மானம் கெட்டவனே... "//
ஆகா தேவு எங்கே இருந்து இதெல்லாம்?? கண்ணுல கண்ணீரே வந்துடுச்சு சிரிச்சி சிரிச்சு :))))))))))))))))
//ஆலோசனையை அள்ளி விடுறீயே சரவணா.. யப்பா பாண்டி நோட் பண்ணிக்கடா கண்மணி//
நோட் பண்ணியாச்சு தேவு !! :)) ஆமா சுஜாதாவுக்கு பதிலா நானே வசன கர்த்தாவா ஆனா எப்படியிருக்கும்? கொஞ்சம் ரோசனை பண்ணுங்கப்பூ :)))
கலக்கல் பதிவு தேவு..
//ஆமா சுஜாதாவுக்கு பதிலா நானே வசன கர்த்தாவா ஆனா எப்படியிருக்கும்?//
சரி பாண்டி நீ நம்ம பய வேற,
நீயே வசனத்தையும் கனிச்சுக்கோ, நான் உனக்காக தேவுகிட்ட ரெக்கமண்ட் பன்னுறேன்,
ஆனா பாடல்கள் புலவர் "பாணபத்திர ஓணாண்டி" தான் எழுதனும்கிறது எனது விருப்பம், டைரக்டர் என்ன எண்ணியிருக்கிறாறோ..?
எல்லாம் சரி தேவு, நமது பல பழைய பின்னூடங்களுக்கும் மறந்திடாம அப்படியே பதில் எழுதிடுங்க, நாலைக்கு காலைல மீட் பண்ணூவோம், வர்ர்ட்ட்ட்டா,
அன்புடன்...
சரவணன்.
//கொத்ஸ் கண்ணுல ஆனந்தக்கண்ணீரே வந்திருக்கும் இதையப் பார்த்து //
உண்மைதான் பாண்டித்தம்பி! தலைப்புக்கு குறைந்த பட்சம் 1000மாவது எதிர்பார்த்த நேரத்தில் 500தான் என்றால் யாருக்குத்தான் கண்ணீர் வராது?. :(
//நோட் பண்ணியாச்சு தேவு !! :)) ஆமா சுஜாதாவுக்கு பதிலா நானே வசன கர்த்தாவா ஆனா எப்படியிருக்கும்? கொஞ்சம் ரோசனை பண்ணுங்கப்பூ //
வசனம் பாண்டித்தம்பி!
வசனத்தில் லாவணிகளும், தாவணிகளும் துள்ளி விளையாடும்!
அப்புறமென்ன பாடல்களுக்கா பஞ்சம்! அதான் நாமக்கல்லார் இருக்கிறாரே!
(ஹி.ஹி..)
சூப்பர் கதை...கொத்ஸ் டோட்டல் டேமேஜ்... :-)
//தலைப்பே சரியா வைய்யா.
இலவச கொத்தனார் 2300000ம் பின்னூட்டக்கேர்.
23ன்னு கம்மி பண்றே, பிச்சு புடுவேன் பிச்சு.//
வேளாண் ண்ணா, நியூமராலஜி படி கோடம்பாக்கம் சோசியர் ஒருத்தர் குறிச்சுக் கொடுத்த நம்பர்ண்ணா இது... நீங்க் பிச்சு எல்லாம் அவர் கிட்டச் சொல்லுங்கண்ணா.. வடபழ்னி பஸ் ஸ்டாண்ட் கிட்ட கிளி வசசு நியுமராலஜி பாக்குறார்ண்ணா அவர்.. கிளி கூட பாக்க நம்ம கைப்புக்கு கிளி வேசம் கட்டுன மாதிரியே இருக்கும்ண்ணா.. ரைட்டாண்ணா
//இளா
அகில உலக கொத்ஸ் ரசிகர் நற்பணி மன்றம்
டிராக்டர் மன்றம்
(Sub Division of விவசாயிகள் பாசறை) //
அப்பூ இங்கிட்டு தலைமை மன்றம்ன்னு போர்ட் மாட்டி ரொம்ப நாளா சவுண்ட் விட்டு நாங்க சலம்பிகிட்டு இருக்கோம் கேப்புல்ல என்ன இது புது பலகை...ம்ம் செல்லாது செல்லாது...
இங்கிட்டுப் போய லைன்ல்ல நின்னும் $333.75 கட்டி மன்ற விண்ணப்ப படிவம் வாங்கிட்டு வந்து என்னைப் பாரு அப்புறம் மீதியைப் பேசிக்குவோம்...
பி.சூ.இ.இ.அ.த.இ.இ. ரசிகர்கள் நற்பணி மன்றம், தலைமையகம்,
ப/எண்: 555
பு/எண்: 999
எ/எண்:???
இலவச டவர்ஸ்
அண்ணா சாலை,
சென்னை - 339
யோவ் வேளாண் ண்ணா நம்ம பொழைப்பைக் கெடுக்குணும்ன்னு அப்படி என்ன உமக்கு ஒரு வேண்டாத ஆசை ??!!!:))
//உங்கள் படம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.//
மருதுண்ணா.. குருத ஏறி வந்து வாழ்த்துனதுக்கு ரொம்ப சந்தோசம்ங்கண்ணா.
//நம்ம படம் தான் எப்போ வெளிவரும்னே தெரியல//
ஓ.கேன்னு சொல்லுங்கண்ணா.. கைவ்சம் இன்னொரு கதை இருக்கு லோ பட்ஜெட்ல்ல டைம்லி டெலிவரி பண்ணறாப்ல்ல டைட்டில் மாத்தாம ஒரு சூப்பர் ஹிட் படம் எடுத்துருவோம்.
//ஓ! அப்போ படம் எடுக்கும் போது குறுக்க குறுக்க ஓடிவந்து நீங்க "ரெடி" சொன்னதும் ஒரு கட்டையால அடிக்கனுமே அந்த வேலையா?//
அந்த வேலைக்கு எல்லாம் யாராவது வெள்ளைக்காரப் பசங்களைப் போட்டுக்கலாம்..(அதான் ஹாலிவுட்ன்னு முடிவு ஆகிடுச்சு இல்ல) உன் வேலை அதையெல்லாம் விட அதி முக்கியமானது.. விவரங்கள் உன் ஜாப் புரொபைலில் விளக்கமாக இடம் பெறும்.. SO DONT WORRY
//படம் போடும் போது எம் பேரும் வருமா, ஆஹா இது போதும் தல//
உம் பேரு கூட வேணும்ண்ணா உம் போட்டோ..உங்க ஊரு போட்டோ எல்லாம் போட்டுராலம்ய்யா...
//ஜோசப் சார்,லோன் கொடுக்கும் போதும் "திரும்பிப் பார்துக்கிட்டே" தான் இருப்பாரா?//
ஜோசப் சார் நம்ம பதிவைப் பார்த்தாரா என்னன்னு தெரியல்ல.. இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொன்னாத் தான் சரியா இருக்கும்.. இல்ல அவர் கிட்ட லோன் வாங்குன யாராவது பதில் சொன்னாலும் ஓ.கே.
//இசை - லண்டன்
என்ன சொல்லும் இடம் எல்லாம் கரேட்டா//
புலி!
எந்த லண்டன்னு சரியாச் சொல்லனும்.
:)
//உங்கள் அன்புக்கு நன்றி,பதவி எல்லாம் வேண்டாம் நண்பரே,நமக்கு அந்த அளவுக்கு தகுதியில்லைப்பா//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்லை
//நான் நமது சங்கத்து புகழ் பரப்பும் சாதாரண "தோரணம் கட்டும்" தொண்டனாகவே இருந்து கொள்கிறேன்,//
தோ"ரணம்" புரியுது சரவணா வாழை மட்டையிலே ஆணி அடிச்சா மாதிரி புரியுது.. ம்ம் நீ பொழைச்சுக்குவ நண்பா
//கேணப்பபயதான் பிளைட்ல டிக்கெட் எடுப்பான், அப்படினு நம்மை "சிலர்" கலாய்ப்பார்களே, அதை கண்டு ஏமந்துவிடாதே,மறந்துடாம எடுத்துடு இல்லைனா நடு வழில எறக்கிவிட்டுருவானுக,ஜாக்கிரதை!!!//
ஆகா அவனே தான் நீ...சரவணா.. சக்கரைடா நீயு.. சும்மா கில்லி மாதிரி எடுத்து எடுத்து கொடுக்கிறே...
//ஆமா தலைவர் எங்கே?//
தலைவரே படம் தயாரிக்கறதுன்னு முடிவு ஆகிடுச்சு இப்போத் தலைவர் ஆல்ப்ஸ் மலைக்குப் போய் மூலிகை மசாஜ் செய்யப் போயிருக்கார்... புதுப் பொலிவோட போட்டோ செஷ்னுக்கு வந்துருவார்..
கேமரா மேனா நம்ம இளவஞ்சி வாத்தியார் இருக்கணும்ன்னு ரசிகர்கள் விருப்பம். கைப்பு வேற கையிலே கேமராவும் தலையிலே தொப்பியும் போட்டுகிட்டு நம்ம ஆபிஸ் பக்கம் வந்து நின்னு வெறிச்சு வெறிச்சுப் பாக்குறார்.. ஒரே கன்ப்பூயூஷன்
//சீக்கிரம் தயாரிப்பாளர் பிடி.
திரைக்கதை டிஸ்கஷனை ஏற்காடுல வச்சுப்போம்.
டான்ஸ் மூவ்மெண்ட் டிஸ்கஷனை ஊட்டியில் வச்சுப்போம்.
சண்டை காட்சி டிஸ்கஷனை கொடைக்கானில் வச்சுப்போம்.
காமெடி டிஸ்கஷனை வால்பாறை...
பாடல் வரிகள் - பாண்டிச்சேரி
இசை - லண்டன்
என்ன சொல்லும் இடம் எல்லாம் கரேட்டா. //
தலைவர் பி.பு தான் தயாரிப்பாளர். படம் பிக் பட்ஜெட்ப்பா. நீ தலைவர் லெவலையேக் கேவலப் படுத்திட்டீயே..அந்த லாஸ்ட் பிளேஸ் லண்டன் நாட் பேட்.. பட் மத்தது எல்லாம் ரிஜக்ட்ட. சீக்கிரம் புது லிஸ்ட் ரெடி பண்ணிட்டு ஆபிஸ்ல்ல கொடு.. தலைவர் திங்க் பண்ணி அப்ரூவ் பண்ணுவார்.
//கைப்பு வேற கையிலே கேமராவும் தலையிலே தொப்பியும் போட்டுகிட்டு நம்ம ஆபிஸ் பக்கம் வந்து நின்னு வெறிச்சு வெறிச்சுப் பாக்குறார்.. //
வெறிச்சு பார்க்கிறது தப்பில்லை மக்கா,
ஆனா அவரு புதுசா இப்போ
"சீதேவி மூதேவி" னு கதையெல்லாம் வேற ரெடி பண்ணி இருக்காரு,
கேமராமேன் டைரக்டர் ஆகிற காலமிது பாத்துப்பூ...
அப்புறம் உனக்கே ஆப்பு ஆடிச்சிரப் போராரு...
சூது வாது தெரியாத வெள்ளந்தியான ஆளு நீயி,(யாருங்க அது சிரிக்கிறது,ஒழுங்கா இருக்கீகளா இல்லை, உங்களையும் ஹீரேவாப் போட்டு படம் எடுக்கவா...)
கொங்சம் சூதனமா இருந்துக்கப்பு அம்புட்டுதேன் சொல்லுவேன் ஆமா...
அன்புடன்...
சரவணன்.
//நாயகிகள் தேர்வு எப்போ பாண்டி? //
விவசாயி அதுக்குத் தான் சொல்லிட்டேனே தலைவர் கொத்ஸ், பாண்டி, நான்., அப்புறம் என் அசோசியட் சரவணன் எல்லாரும் கிளம்பி லாஸ் வேகாஸ்ல்லருத்து ராயல் சீமா வரைக்கும் தேடப் போறோம்ன்னு.. அது டிக்கெட் கன்பர்ம் ஆன ஒடனே பறக்கிறோம்..
தலைவருக்கு படத்துல்ல மூணு சோடி அது மட்டும் தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.
//தேவ் கலக்கல் தேவ் ! ... மேல உள்ளதைப் படித்து )::::::::::::::::) 32 பல்லையும் காட்டி சிரித்தேன் :)//+
வாழ்த்துக்களுக்கு நன்றி கோவி சார். படம் ரீலிஸ் ஆந்தும் வந்து கண்டிப்பாப் பாருங்க
//சிவா.ஆனா சூட்டிங் மட்டும் திரைகடலோடி சங்கம் வளர்க்கும் உனக்காக சூடானிலும்,
எனக்காக துபாயிலும்,கதை நாயகன் பி.பு வருங்கால ஐ.நா.சபைத்தலைவர்
நமது அண்ணன் இ.கொ.வுக்காக கொஞ்சம் புதரகத்திலும் வைச்சுப்போம்.
Dev,Am I right ? //
சிவா சூடான சே சூடான் அழகிகள் ஒரு 100 பேர் சுத்தி ஆட தலைவருக்கு ஒரு சாங் இருக்கு அதுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ராஜா - துபாய்ல்ல அந்த கடலுக்குள்ள கட்டியிருக்க ஓடடலில் ஒரு டான் ஸ் பாட்டு இருக்கு. நீங்க்ளும் அந்த டான் ஸ்ல்ல் தலைவர் கூட ஒரு சின்ன மூவ்மெண்ட் போடுற மாதிரி பண்ணிரலாம்.
மத்தப் படி தலைவர் சூடான் துபாய் வரும் போது வரவேற்பு எளிமையா இருக்கணும் எளிமை பற்றிய விளக்கம் உங்களுக்கு தேவை இல்லை..
//உக்காந்து யோசிப்பீங்களோ ?? இல்லை கனவில் வந்த கற்ப்பனையா ?//
ரெண்டும் இல்லை ரவி ரயில் பயண்த்தில் வந்த சிந்தனை... அது இருக்கட்டும் பதிவுப் பத்திக் கருத்து ஒண்ணும் சொல்லாமல் போனா எப்படி?
//தேவு, இ.கொ.வை இப்படி தேவிட்டியே?//
இது விஷமத்த்னமான குற்றச்சாட்டு என் தலைவர் பி.பு.இ.கொவுக்கு என்னைப் பற்றித் தெரியும்
//எல்லாரும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவரைக் காணோமே? தேவ், நீங்கள் அவர் பின்னூட்டத்தினை அனுமதிக்காமல் இருட்டடிப்பு செய்கிறீர்களோ என அவரது ஒற்றர் படைத்தலைவர் (நான் இல்லீங்கோ!) தெரிவிக்கிறாராமே? உண்மையா? //
கோடி கமெண்ட் மாடுரேஷ்ன்கள் போட்டுத் த்டுத்தாலும் தலைவரின் பின்னூட்டங்களை யாரால் மட்டுறுத்தவே முடியாது ஏன்னா அவர் ஒரு பின்னூட்டப் புயல்.. இதைத் தெரிந்தும் நீங்கள் இப்படி ஒரு நக்கலான கேள்விக் கேட்டதை நான் தலைவரின் பரம ரசிகன் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆமா
//நோட் பண்ணியாச்சு தேவு !! :)) ஆமா சுஜாதாவுக்கு பதிலா நானே வசன கர்த்தாவா ஆனா எப்படியிருக்கும்? கொஞ்சம் ரோசனை பண்ணுங்கப்பூ :)))//
தலைவருக்கு கிட்டே உனக்கு கண்டிப்பா ரெகமண்ட் பண்றேன்.. பட் அதுக்கு முன்னாடி நாயகி தேடும் பணியில் உன் களத் திறமையைக் காட்டி தலைவரின் கண்களை மேலும் தளும்ப வைக்க வேண்டுமடா கண்மணியே,,, செய்வாயா?
//அதுக்கு முன்னாடி நாயகி தேடும் பணியில் உன் களத் திறமையைக் காட்டி தலைவரின் கண்களை மேலும் தளும்ப வைக்க வேண்டுமடா கண்மணியே,,, செய்வாயா? //
ஆஹா தேவண்ணா இதுக்குத்தானே நான் காத்துகிட்டு இருக்கேன்!! கரும்பு தின்னக் கசக்குமா?? நாயகி தேர்வுக்காக எப்போ கெளம்பலாம் ?? எங்கே டிக்கெட் எங்கே டிக்கெட்??...:)))))))))
//வசனம் பாண்டித்தம்பி!
வசனத்தில் லாவணிகளும், தாவணிகளும் துள்ளி விளையாடும்!
அப்புறமென்ன பாடல்களுக்கா பஞ்சம்! அதான் நாமக்கல்லார் இருக்கிறாரே! //
தாவணி.. லாவணி.. ஆகா கவிதை !கவிதை! கவித தாண்டவமாடுதே சிபியண்ணே !!கவிஞராக நீங்களே இருங்கன்ணே ! ரெண்டு குத்துபாட்டும் உண்டு போட்டுத்தாக்குங்க !! :)))
//உண்மைதான் பாண்டித்தம்பி! தலைப்புக்கு குறைந்த பட்சம் 1000மாவது எதிர்பார்த்த நேரத்தில் 500தான் என்றால் யாருக்குத்தான் கண்ணீர் வராது?. :(//
ஐயா, நாமக்கல் நாயகா.. விநியோக உரிமைக் கேட்டீர் விலாசம் கொடுத்து வந்து விவரமறியச் சொன்னால் இப்படி வீண் வதந்திக் கிளப்பிவிட்டு கொண்டிருக்கிறீரே..என்றைக்கு நீர் ரசிகர்களின் சினத்தில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறீரோ தெரியவில்லை:)
//வசனம் பாண்டித்தம்பி!//
தலைவரே ஓ.கேவா?
//வசனத்தில் லாவணிகளும், தாவணிகளும் துள்ளி விளையாடும்! //
அது கண்மணிப் பாண்டிக்கு கை வந்தக் கலையாயிற்றே
ஒரு முக்கிய தாவணியா நயந்தாரா புக்கிங் ஆகி இருக்காக தளபதியாரே:)
//அப்புறமென்ன பாடல்களுக்கா பஞ்சம்! அதான் நாமக்கல்லார் இருக்கிறாரே!//
தலைவருக்கு என்டிரியா டைட்டில் சாங் ஒண்ணு சீக்கிரம் ரெடி பண்ணிக் காட்டுங்க சிபியாரே.. சீக்கிரம்
(ஹி.ஹி..)
தேவ் அண்ணே.. கதைக்கு நடுவுல வர பாட்டுக்கு, பாட என்னைய புக் பண்ணிக்கோங்க..என்னோட பிஸி Schedule க்கு நம்ம தேவ் அண்ணணாச்சேன்னு உங்களூக்கு டேட்ஸ் குடுக்கறேன்..மத்த விஷயத்துல எல்லாம் கவிதாக்கிட்ட பேசிக்கோங்க..
//சூப்பர் கதை...//
நன்றி சியாம்.
//கொத்ஸ் டோட்டல் டேமேஜ்...//
இது மிகவும் தவறான கருத்து தலைவர் இமேஜ் நெவர் டேமேஜ்... ஆல்வேஸ் ஆன் ராம்பேஜ்...
//புலி!
எந்த லண்டன்னு சரியாச் சொல்லனும்.
:) //
OBJECTION, புலி இல்ல.. புலிக்குட்டி.. எங்க புலிக்குட்டி ஜெய்ஹிந்த் சொன்னக் கதை உனக்குத் தெரியுமா?
அந்த லண்டனா.. ச்சீ கைப்பு IS A DIRTY BOY
//வெறிச்சு பார்க்கிறது தப்பில்லை மக்கா,
ஆனா அவரு புதுசா இப்போ
"சீதேவி மூதேவி" னு கதையெல்லாம் வேற ரெடி பண்ணி இருக்காரு,//
நண்பா சரவணா நல்லா விசாரிப்பா
அந்த சீதேவி-மூதேவி எல்லாம் அவர் ஆபிஸ் ரிஷ்ப்ஸ் நிக் நேம்ஸ்ப்பா அப்படித் தானே கைப்ஸ்
//கேமராமேன் டைரக்டர் ஆகிற காலமிது பாத்துப்பூ...//
அப்படிங்கற?
//அப்புறம் உனக்கே ஆப்பு ஆடிச்சிரப் போராரு...//
ஆப்பு எல்லாம் அவர் அடிச்சுப் பழகுவே இல்லப்பா.. வாங்கியே பழகுன பச்சப்புள்ளய்யா நம்ம கைப்ஸ்
//சூது வாது தெரியாத வெள்ளந்தியான ஆளு நீயி,(யாருங்க அது சிரிக்கிறது,ஒழுங்கா இருக்கீகளா இல்லை, உங்களையும் ஹீரேவாப் போட்டு படம் எடுக்கவா...)
கொங்சம் சூதனமா இருந்துக்கப்பு அம்புட்டுதேன் சொல்லுவேன் ஆமா...//
ஆகா ஊரே கைப்ஸ் பார்த்த டயலாக் இல்ல இது.. அப்பூ சர்ர்ர்ர்வணா.. வேணாம் இப்படி பேசுண்ணா நாம் ஷூட்டீங் எல்லாம் போக முடியாது ஆமா.. ஓரமா உக்காந்து ஓன்னு அழ வேண்டியதாப் போயிரும் ஆமா
//ஆஹா தேவண்ணா இதுக்குத்தானே நான் காத்துகிட்டு இருக்கேன்!! கரும்பு தின்னக் கசக்குமா?? நாயகி தேர்வுக்காக எப்போ கெளம்பலாம் ?? எங்கே டிக்கெட் எங்கே டிக்கெட்??...:))))))))) //
ஏர்ல்ல உன் திறமையை எல்லாம் ஹோஸ்ட் பண்ணிடக் கூடாது.. லேண்ட் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணணும் ஒகேவா தலைவர் ஆல்ப்ஸ் மலையிலிருந்துக் கிளம்பிட்டாராம்.. கொஞ்சம் வெயிடீஸ் சரியா?
//ஓரமா உக்காந்து ஓன்னு அழ வேண்டியதாப் போயிரும் ஆமா//
இதுக்கெல்லாம் சங்கட்டபட முடியுமா...
பிளைட்ல போகும் போது, உம்முடைய இந்த அசோசியேட்டை மறந்துடாம கூட்டிடு போய்டுங்க..
அது போதும், (அங்க போய் வச்சிக்கிராலாம் கச்சோரிய)...
அன்புடன்...
சரவணன்.
நடக்கட்டும் நடக்கட்டும்..
தேவு...
எனக்கு ஒரு புது ஐடியா
(ஆஹா இது வேறயா...)
நாமா ரெண்டு பேரும் போட்டுகிட்ட பின்னூட்டங்கள் கட், பேஸ்ட் பண்ணி அப்படியே தேன்கூடு போட்டி"உணர்வுகள்"க்கு
அனுப்பிடுவோமா
(நம்ம பின்னூட்டதுல தான் உணர்ச்சிமிகுந்த உணர்வுகள் இருக்கே)
(ஹி,ஹி,ஹி அதுவாத் தோனுது ஒன்னும்பண்ண முடியலை)
(பி.கு முதல்பரிசு கிடைத்ததும் அதை தயவு செய்து யாரும் விமர்சனம் பண்ண வேண்டாம் என்று இப்போழுதே கேட்டுக் கொள்கிறேம்)
நான் போடுற ஆட்டத்தை பாத்துட்டு என்னைய விட்டுட்டு போய்டத மக்கா..
அன்புடன்...
சரவணன்.
//
நடக்கட்டும் நடக்கட்டும்..
//
என்னா நடக்குது இங்க ???
தலைவர் பேர் போட்டு பதிவு வந்திருக்குதே. ஒரு 100 அடிச்ச பின்னாடி எண்ட்ரீ குடுக்கலாமின்னு பாக்காராரோ என்னமோ? சீக்கிரம் அடிங்கப்பூ....
//தேவ் அண்ணே.. கதைக்கு நடுவுல வர பாட்டுக்கு, பாட என்னைய புக் பண்ணிக்கோங்க..என்னோட பிஸி Schedule க்கு நம்ம தேவ் அண்ணணாச்சேன்னு உங்களூக்கு டேட்ஸ் குடுக்கறேன்//
அணில் குட்டி நோ சொல்ல முடியுமா,... படத்துல்ல உனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டரே கொடுத்துடுவோம்.. யப்பா சரவணா.. அணில்குட்டிக்குன்னு ஒரு சின்ன கேரக்டர் ரெடி பண்ணிட்டு சொல்லுப்பா...
..//மத்த விஷயத்துல எல்லாம் கவிதாக்கிட்ட பேசிக்கோங்க..//
ஆமா கவிதா அக்காகிட்ட பணம் கொடுத்தா உனக்கு கரிக்கிட்டாக் கொTஉத்துறுவாங்க இல்ல.
இன்னும் ஒரு சிக்கல் உன்னியப் படத்துல்ல போட்ட மேனகா காந்தின்னு ஒருத்தங்க சவுண்ட் விடுவாங்க. அங்கிட்டு வாங்கு இங்கிட்டு வாங்குன்னு டார்ச்சர் கொடுப்பாங்கேளே.. ஏற்கன்வே குருத மேட்டர்ல்ல கழ்ண்டுப் போயிட்டோம் தெரியும் இல்ல.
//இதுக்கெல்லாம் சங்கட்டபட முடியுமா...//
:))
//பிளைட்ல போகும் போது, உம்முடைய இந்த அசோசியேட்டை மறந்துடாம கூட்டிடு போய்டுங்க..
அது போதும், (அங்க போய் வச்சிக்கிராலாம் கச்சோரிய)...//
பொட்டி சட்டி எல்லாம் எடுத்துட்டு ரெடியா நில்லுப்பா தலைவர் வந்ததும் கிளம்ப வேண்டியது தான்.
//நடக்கட்டும் நடக்கட்டும்.. //
அட சாமி பறக்கறதைப் பத்திப் பேசிகிட்டு இருக்கோம்யயா இப்படி நடக்கட்டும் நடக்கட்டும்ன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்
//தேவு...
எனக்கு ஒரு புது ஐடியா
(ஆஹா இது வேறயா...)
நாமா ரெண்டு பேரும் போட்டுகிட்ட பின்னூட்டங்கள் கட், பேஸ்ட் பண்ணி அப்படியே தேன்கூடு போட்டி"உணர்வுகள்"க்கு
அனுப்பிடுவோமா
(நம்ம பின்னூட்டதுல தான் உணர்ச்சிமிகுந்த உணர்வுகள் இருக்கே)
(ஹி,ஹி,ஹி அதுவாத் தோனுது ஒன்னும்பண்ண முடியலை)
(பி.கு முதல்பரிசு கிடைத்ததும் அதை தயவு செய்து யாரும் விமர்சனம் பண்ண வேண்டாம் என்று இப்போழுதே கேட்டுக் கொள்கிறேம்)//
எப்படி சரவணா நீ சின்னப் புள்ளயா இருக்கும் போது இருந்தே இப்படி பிரியல்ண்ட் தானா.. இல்ல தீடிரென்னு எங்கிட்டாவது வழுக்கி விழுந்து என்னைய மாதிரி பிரிலியண்ட் ஆயிட்டியா?
முடியல்லை... நீ யார் கிட்ட யானைப் பால் சீ.. ஞானப் பால் குடிச்சியோ சாமி நல்லாருப்பூ
//என்னா நடக்குது இங்க ??? //
வாம்மா மின்னுலு எங்கே இன்னோரு வாட்டி கேளு..
//தலைவர் பேர் போட்டு பதிவு வந்திருக்குதே. ஒரு 100 அடிச்ச பின்னாடி எண்ட்ரீ குடுக்கலாமின்னு பாக்காராரோ என்னமோ? சீக்கிரம் அடிங்கப்பூ....
//
தலைவாக் கேக்குதா.. சீக்கிரம் வாய்யா..சீக்கிரம் வாய்யா..
//சீதேவி மூதேவி" னு கதையெல்லாம் வேற//
என்ன வெச்சு யாரும் காமெட் கீமெடி பண்ணலையே..
//சங்கமே அபராத்துல தான் போகுது, யாராவது ஒரு பேங்க் வச்சித்தாங்க படமெடுக்குறேம்//
நமக்கு ஸ்விஸ் பாங்குல கணக்கு இருக்கிறது இவுங்களுக்கு எப்படி தெரிஞ்சது?
கைப்பு இன்னிக்கு அவரை அவரே கயவன்;னு சொல்லியிருக்காரே அதுக்கு இதுதான் அர்த்தமா?
//
தீடிரென்னு எங்கிட்டாவது வழுக்கி விழுந்து என்னைய மாதிரி பிரிலியண்ட் ஆயிட்டியா?
//
வாம்மா மின்னுலு எங்கே இன்னோரு வாட்டி கேளு..
//
பாத்து நடக்க சொன்னனே இப்டி வழுக்கி விழுந்து என்ன நினைப்பாங்க
இப்படிக்கு
குவாட்டர் கோவிந்தன்
//சரவணா.. அணில்குட்டிக்குன்னு ஒரு சின்ன கேரக்டர் ரெடி பண்ணிட்டு சொல்லுப்பா...//
அண்ணே ரெடியா இருக்குன்னே...
சொல்லுரேன் கேட்டுக்கங்க...
தலைவரு வேகமா நடந்து வரும் போது அவரு கழுத்துல மாடியிருக்கிர மொபைல் போன் கீழ விழுந்துடுது
அதை எடுக்கப் போரதுக்குள்ள இந்த அணில் வந்து எடுத்திடுது, அணிலைப் புடிக்க தலைவரு மலையோட உச்சிக்கு ஏறுராரு(இந்த எடத்துல கிராஃபிக்ஸ் வச்சி கலக்கிடுறேம்)
அந்த மலையோட அடுத்த பக்கத்துல பார்த்தா ஒரு குரூப் நம்ம தலைவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டுராங்க ,அதைப் பார்த்ததும் தலைவரோட கண்ணு அப்படியே சிவக்குது(கிரஃபிக்ல கண்ணுக்குள்ள என்னனமோ தெரியுது)
இவண் கண்ணுகுள்ள கண்டதும் உண்டு உண்மைதானடானு ஒரு பிட்டு சாங்கு போடுறோம்,
கோவத்துல இருக்கும் போதே அணிலைப் பார்த்ததும் உடனே கொழந்தை தனமா சிரிக்கிறாரு,சதித் திட்டதை தெரிங்சுக்க உதவுன நம்ம அணிலை அப்படியே தலைவர் ஒரு நன்றி லுக் வுடுராரு,
"கோவம் வந்தா மத்தவங்களுக்கு நான் நெருப்பு,
உதவுனங்களுக்கு நான் பருப்பு" அப்படினூ ஒரு பஞ்ச் வைக்கிறேம்,
தேவு அண்ணே நீங்க எதிர்பார்த்த மாதிரி வந்திருக்கா...?
இல்லை இன்னும் ஏங்கிட்ட நெரையா எதிர்பார்கிறீங்களா...?
அன்புடன்...
சரவணன்.
//எப்படி சரவணா நீ சின்னப் புள்ளயா இருக்கும் போது இருந்தே இப்படி பிரியல்ண்ட் தானா.. இல்ல தீடிரென்னு எங்கிட்டாவது வழுக்கி விழுந்து என்னைய மாதிரி பிரிலியண்ட் ஆயிட்டியா?//
மொதல்ல கொஞ்சம் கம்மியாதேன் இருந்துச்சு,
இந்த "வலை" ல வந்து விழுந்ததும் தான் ஒரு பார்டர் இல்லாம பீரீகிட்டு கொளம்புது...
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க....
//முடியல்லை... நீ யார் கிட்ட யானைப் பால் சீ.. ஞானப் பால் குடிச்சியோ சாமி நல்லாருப்பூ //
இருக்கடும் இருக்கடும் ... இதுக்கெல்லம் போயி கண்ணுல தண்ணிவரலாமா...
(யாருங்க அது கண்ணூல தண்ணீயா.? காதுல ரத்தம் தான் வருதுனு சொல்லுரது)
அன்புடன்...
சரவணன்.
திரைக்கதை டிஸ்கஷனை பாரீஸ்ல வச்சுப்போம்.
டான்ஸ் மூவ்மெண்ட் டிஸ்கஷனை ஆஸ்திரேலியாவில் வச்சுப்போம்.
சண்டை காட்சி டிஸ்கஷனை கனடாவில் வச்சுப்போம்.
காமெடி டிஸ்கஷனை ரஷ்யாவில்...
பாடல் வரிகள் - ஸ்விஸ்
தேவ் இது ஒகேவா.....
//சிவா சூடான சே சூடான் அழகிகள் ஒரு 100 பேர் சுத்தி ஆட தலைவருக்கு ஒரு சாங் இருக்கு அதுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்//
சொல்லிட்டல கலக்கிட்வோம்.
இதுல நடுவில் வந்து போற மாதிரி என்னகும் ஒரு வாய்ப்பு வேணும்.
ஆமா சொல்லிட்டேன்.
//விவசாயி அதுக்குத் தான் சொல்லிட்டேனே தலைவர் கொத்ஸ், பாண்டி, நான்., அப்புறம் என் அசோசியட் சரவணன் எல்லாரும் கிளம்பி லாஸ் வேகாஸ்ல்லருத்து ராயல் சீமா வரைக்கும் தேடப் போறோம்ன்னு.. //
அடப்பாவி சந்தடி சாக்குல நாயகி தேர்வுக்கு என்ன கழட்டி விட்டுட்ட பாத்தியா.?
பேட் பாய்
வந்துட்டேன். தம்பி தேவு. நிறையா விஷயம் பேச வேண்டியது இருக்கு.
//அந்தப் பெருந்தனமைக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..//
அட என்ன தம்பி நீங்க. நம்ம ஆபீஸ் கதவு எப்பவுமே உங்களுக்கு திறந்தே இருக்கும்.
(அது யாருடா அது சாக்கு பைய கதவா போட்டா அடிக்கிற காத்துக்கு எல்லாருக்குமே திறந்துதான் இருக்கும் அப்படின்னு சவுண்ட் விடறது?)
//பட்டுன்னு நினைவுக்கு வந்தது.. நமக்கு ரசிகர் மன்ற தலைவர் பதவி எல்லாம் கவுரவப்படுத்துன தலைவர் பின்னூட்டப் புயலார் கொத்ஸ் தான்...//
இப்படி எப்பவுமே என் ஞாபகமா இருக்கையே உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்.
சரி. ஒண்ணு பண்ணலாம். ஷூட்டிங் போது நான் குடிக்கிற ஆப்பிள் ஜூஸுல பாதி உனக்குத்தான். என்ன?
//நான் இப்படி ஆரம்பிச்சதும் ஒரு ஆழ்ந்த தியான நிலைக்கு பி.பு போயிட்டார். //
யப்பா, இப்படி சின்னது பண்ணாதே தப்பர்த்தம் வரப் போகுதுன்னு சொல்லி இருக்கேனில்ல.
ரொம்ப பெருசா சொல்ல கஷ்டப்பட்டா நம்ம ஆளு ஒருத்தன் சொன்னா மாதிரி புயலார் அப்படின்னு வேணா சொல்லிக்க. என்ன.
//ஒரு ஆயிரம் குதிரைகள் புழுதி கிளப்ப வருது...//
இது சரிப்படாது. போன படத்துக்கு பட்ட கஷ்ட்டத்தைப் பத்தி உங்க தல கிட்ட கேளு.
வேணும்ன்னா ஒரு ஆயிரம் ஆளுங்க கோஷம் போட்டுக்கிட்டு வர மாதிரி வெச்சுக்கலாம். போராட்டம் எல்லாம் மிருகத்துக்குத்தான் பண்ணுவாங்க. மனுசனுக்கா பண்ணுவாங்க?
//பார்த்தா பதிவு இல்ல நீங்கப் போட்ட தலைப்புக்கே ஒரு 500 பின்னூட்டம் வந்து இருக்கு....//
பதிவுக்கு 600 வந்தாச்சு. இப்போ இப்படி சொல்லிக்கலாம். இளா கிட்ட சொன்னா அதை 1000 காண்பிக்கலாம். அப்புறம் தேச துரோக சட்டத்தில் அவரை கும்பினியார் கைது பண்ணி சித்திரவதை பண்ணறத....
//மிசிசொமெ..மிசிச்சொமெ.. //
அடிக்கடி சொல்லறயே. இதுல உகு எதுவும் இல்லையே?
என்னாது? பயமா? நானா? அட சும்மா இருந்தா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன். அம்புட்டுத்தான்.
//"பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணியிருக்கீயாம் நீ?"
"டைசா சின்னப் பய்லே... என்னப் பேச்சு இது ராஸ்கல்"//
படத்துல வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சுடே. ஆனா கொஞ்ச நாள் ஆளைக்காணுமாமே. நம்ம பசங்கள அனுப்பித் தேட சொல்லுங்க.
//அதுக்கு மேல பின்னூட்டக்கேசி போலீஸ் ஆதிக்கத்தை வென்று எப்படி செவ்வாய் பின்னூட்டா பல்கலைக்கழ்கம் சென்று பட்டம் பெறுகிறார் எனப்து தான் மீதிக் கதை.....//
யப்பா. சண்டைக் காட்சி வேண்டாம். என்ன ரீஸன் புரியுது. அதுக்காக டூயட் எல்லாம் இல்லைன்னா எப்படி? அதெல்லாமும் டிஸ்கஸ் பண்ணனும்.
சரி. இப்போ ஒரு ஹீரோவா லட்சணமா கதையை மாத்தற வேலைக்கு இறங்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.
பசங்க சொல்லறாங்கன்னு நம்மளை துட்டு எல்லாம் போட சொல்லாதே. சல்லிசா ரெண்டு கல்யாண மண்டபம் வருதாம். அதுக்கு வேணும்.
ஒண்ணு பண்ணலாம். நம்ம கால்கரியாரை ப்ரொடியூசராப் போடலாம். அவருதான் இந்த பைனான்ஸ் எல்லாம் நல்ல அரேஞ்ஜ் பண்ணறாரு.
சரி. இப்போ கதைக்கு வருவோம். ஒரு அடிப்படை மாற்றம் இருக்கு.
அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். நல்லா எழுதறப்பா நீயி. இதெல்லாம் பாரு.
//"கிபி. 1800, இந்தியாவில்ல ஒவ்வொரு ராசாவும் 10- 15 கலியாணமெல்லாம் பண்ணி கணக்கற்ற இளவரசர்களையும் இளவரசிகளையும் உருவாக்கி நாட்டை ஒரு வீடு போல் ஆக்கி ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தக் காலம். "// - இதுல ஒரு பொலிட்டிகல் உகு.வெரி குட்.
//அந்நிய அனானி கூட்டத்திடம் கோலியாய் உருண்டு கேலியாய் நின்றனர்...// - இதுல ரமணிக்கு ஒரு ஆப்பு. சூப்பர்.
//ஒரு கம்ப்யூட்டர்ல்ல ஜூம் பண்றோம்... அங்கே....// - பாத்துப்பா எஸ்.கே. கோவப்படப் போறாரு.
//மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...// - எனக்கே ஆப்பூ? இருக்கட்டும் இருக்கட்டும்.
//மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...// - ரஜினி ராம்கி கமிங் வித் கன். நான் எஸ்.
(தொடரும்...)
//பின்னூட்ட விளையாட்டு என நீ உன் பதிவுக்கு ஓட்டிக் கொண்டு போவது மாபெரும் குற்றம்"// - மீண்டும் நான்?! இருக்கட்டும்.
//அரசாங்கம் தடைச் செயத் நேரத்தில் என் குலக் கொழுந்துக்களுக்கு பிராக்சி சர்வர் செட் பண்ணிக் கொடுத்து படிக்கத் தான் உதவினாயா நாதாரி பயலே..// - இது எங்க போகுதுன்னு தெரியுது!
//பிராஜக்ட் மேனஜருக்குத் தெரியாமல் என் பாசமிகு நட்பு கைப்புள்ள பதிவுப் படித்து பி.எமிடம் பிடிப்பட்டு பெஞ்ச் மேல் ஏறி நின்ற போது நீ வாளோடு போய் கைப்புக்குத் தான் தோள் கொடுத்தாயா.. // - கடசியா உங்க தல. இது ஒண்ணு சரியா இருக்கு.
//DISCLAIMER: இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் பூமி, செவ்வாய் இன்ன பிற கிரகங்கங்களில் வாழும் வாழ்ந்த வாழப் போகும் யாரையும் குறிப்பிடுவதல்ல... இது முழுக்க முழுக்க கற்பனையே.. கறபனை மட்டுமே.// - கடைசில கவுந்துட்ட பாரு. சும்மா இருந்தாக்கூட கற்பனைன்னு சொல்லி இருக்கலாம். டிஸ்கி போட்டதுல தெரியலை, நான் சொன்னது எல்லாம் நிஜம் அப்படின்னு.
இப்போ கதை மாற்றத்துக்கு வரலாம்.
முதலாவது இந்த கதை சரி இல்லை. எம்ஜியாரு எப்பவுமே நல்லவனா நடிக்கற மாதிரி நமக்கும்ம் ஒரு இமேஜ் இருக்குல்ல. (இருக்கு?!) அதுக்கு இந்த கதை ஒத்து வரலை.
அதனால இந்த கதையை மாத்தணும். எப்படின்னு கேட்கறீங்களா? அதை அடுத்த பின்னூட்டத்தில பார்ப்போம்.
(எப்படி ஜோசப் சார், ஜிரா மாதிரி சீரியல் தொடர் எழுதக் கிளம்பட்டுமா?)
//நீ பின்னூட்டமிட மறுத்தது முதல் குற்றம்.. //
//உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... //
தம்பி தேவு, நீ என்னைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா? நினக்கும் போது நெஞ்சு கலங்குதே, கண்ணுல தண்ணி கொட்டுதே..
நாம யாரு? நம்ம பரம்பரை என்ன பரம்பரை? வந்தாரை வாழ வைக்கும் தமிழன் இல்லையா? கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம் இல்லையா நம் கரங்கள்?
என்னைப் போயி.... இப்படி....
(ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு அடுத்த பின்னூட்டத்தில வரேன்.)
என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆங்.
அப்பா தேவு, யாரு வந்து கேட்டாலும் நமக்கு இல்லைன்னாலும் அவங்களுக்கு குடுக்கறதுதானே நம் பண்பு. நம்ம பதிவக் கூட பார்க்காம அவங்க பதிவுக்குப் போயி பின்னூட்டம் போடறதுதானே நம்ம அன்பு. அது நண்பனா இருந்தாலும் எதிரியா இருந்தாலும் அங்களுக்கு பின்னூட்டம் போடறது நம்ம கடமை இல்லையா?
அப்படி இருக்கும் போது நான் பின்னூட்டம் போட மாட்டேன்னு சொல்லற ஒரு கேரக்டர் பண்ண முடியுமா? அப்படியே நான் செஞ்சாலும் ஆடியன்ஸ் ஒத்துப்பாங்களா? கொஞ்சம் யோசிச்சிப் பாரு.
////மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...// - ரஜினி ராம்கி கமிங் வித் கன். நான் எஸ்.//
கட் பேஸ்ட் தப்பு நடந்து போச்சு. இது இப்படி இருக்கணும்.
//ஒரு சாதரண டப்பா கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நீங்க அப்படியே படி படியா பின்னூட்டம் வாங்கி வளர்ந்துலாப் டாப் தூக்கிட்டு டூவின் டவர்ஸ்ல்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறீங்க. ( டுவின் டவர்ஸ் இடிந்துப் போனாலும் அதே மாதிரி நாம் செட் போடுறோம்) அந்த அளவுக்கு ஒரு அபார வளர்ச்சி... நாடெங்கும் உங்க புகழ் பரவுது.//
- ரஜினி ராம்கி கமிங் வித் கன். நான் எஸ்.
//புயல்தாசன் said...
தலைவர் பேர் போட்டு பதிவு வந்திருக்குதே. ஒரு 100 அடிச்ச பின்னாடி எண்ட்ரீ குடுக்கலாமின்னு பாக்காராரோ என்னமோ? சீக்கிரம் அடிங்கப்பூ.... //
இது யாருப்பா? நம்ம பதிவுக்கு எல்லாம் வராம இங்க மட்டும் வராரு?
ஓ! நான் இப்படி சொன்ன உடனே ஓட்டிக்கிட்டு போறேன்னு வசனம் எழுதுவீரு. என்னத்துக்குப் பொல்லாப்பு! (அட பொல்லாப்பிலும் ஆப்பா? நான் எஸ்.)
//ஷூட்டிங் போது நான் குடிக்கிற ஆப்பிள் ஜூஸுல பாதி உனக்குத்தான். என்ன? //
ஹி..ஹி..ஹீரோ சார், ஹீரோ சார்..
நாந்தானுங்கோ அசோசியோட்டுங்க சார்...
நம்மளையும் கவணிச்சிக்கோங்கோ...
அன்புடன்...
சரவணன்.
தேவு...
கீழ இருக்கிரதெல்லம் நல்லாப் படிச்சிப் பாரூ...
//யப்பா. சண்டைக் காட்சி வேண்டாம்.//
//பசங்க சொல்லறாங்கன்னு நம்மளை துட்டு எல்லாம் போட சொல்லாதே. //
//சரி. இப்போ ஒரு ஹீரோவா லட்சணமா கதையை மாத்தற வேலைக்கு இறங்கலாம்.//
//இப்போ கதை மாற்றத்துக்கு வரலாம்.
முதலாவது இந்த கதை சரி இல்லை.//
//அப்படியே நான் செஞ்சாலும் ஆடியன்ஸ் ஒத்துப்பாங்களா? கொஞ்சம் யோசிச்சிப் பாரு//
எனக்கென்னமோ இது சரியாப் படுமுனு தோணலை, நீ என்ன வேணாலும் சமாதானம் சொல்லு மனசு வலிக்குதுப்பா...(யாருங்க அது நைட்டு ஓசிக் குவாட்டருக்கு அடி போடுரான்னு போட்டு விடுரது.)
ராத்திரி பகல்னு பார்க்கமா எவ்வளவு கஸ்டப்பட்டு(??!) இல்லாத மூளைய கசக்கி கசக்கி எழுதுனோம், தலைவரப் பாத்தியா வந்த ஒடனே கதைய மாத்து,காஸ்டுயூம மாத்துன ரப்சர்ப் பண்ணூரத..
ஏதோ நீ சொல்லுரைனு இருக்கேன்,இல்லைனா நைட்டு மீன்பாடி வண்டில போயி அப்படியே மீனம்பாக்கம் வழியா ஹாலிவுட்ல சியாமளன்,ஸ்பீல் பெர்க், இவனுக கிட்ட போயிடலாமானு இருக்கு...
யோசிச்சி பதில் சொல்லு, யோசிக்கிறேன் போர்வழினு பழையபடி தண்ணியப் போட்டுட்டு கவுந்திடாத...
எல்லம் சரி நம்ம அணிலுக்கு ஒரு சூப்பர் சீன் சொன்னேனே அதை பத்தி கொஞ்சம் சொல்லுரது...
அன்புடன்...
சரவணன்.
//ஹி..ஹி..ஹீரோ சார், ஹீரோ சார்..
நாந்தானுங்கோ அசோசியோட்டுங்க சார்...
நம்மளையும் கவணிச்சிக்கோங்கோ...//
யப்பா அசோசியேட்டு. டைரக்டர் குடுச்ச உடனே கிளாஸை வாங்கி கழுவி வையி அப்புறம் அடுத்த தடவை ஜூஸ் வாங்கிட்டு வரும் போது சக்கரை போடாமா வாங்கிட்டு வா. எத்தனை தடவை சொன்னாலும் புரியாம இருக்கு. நீ எல்லாம் என்னாத்த டைரக்ட் பண்ணி கிழிக்கப்போறயோ.
//நைட்டு மீன்பாடி வண்டில போயி அப்படியே மீனம்பாக்கம் வழியா ஹாலிவுட்ல சியாமளன்,ஸ்பீல் பெர்க், இவனுக கிட்ட போயிடலாமானு இருக்கு...//
அசோசி, அவங்க எல்லாம் நம்ம வீட்டு வாசல்லதான் இருக்காங்க... இந்த படம் பத்தி வந்த செய்திக்கு நம்ம ஆடியன்ஸ் ரீயேக்ஷன் பாத்து ஆடிப்போயி இருக்காங்க. அங்க வந்து பாரு.
அவங்க வாசல்ல இருந்தாலும் தேவு வீட்டுக்குள்ள. நீ அவங்க கூடவா நம்மாளு கூடவா? கொஞ்சம் யோசிச்சிப் பாரு.
என்னாது இது? இவ்வள்வு எழுதி இருக்கென், ஒருத்தர் கூடவா பாத்து பதில் சொல்லலை?
யூ டூ தேவ்?
சொன்னா மாதிரி வந்துட்டாரய்யா தலீவரு. கேட்டாரு பாரு கேள்வி. இப்போ என்ன சொல்லறீங்க. இப்போ என்ன சொல்லறீங்க.
//கேணப்பபயதான் பிளைட்ல டிக்கெட் எடுப்பான், அப்படினு நம்மை "சிலர்" கலாய்ப்பார்களே, அதை கண்டு ஏமந்துவிடாதே,மறந்துடாம எடுத்துடு இல்லைனா நடு வழில எறக்கிவிட்டுருவானுக,ஜாக்கிரதை!!!
//
:))
//சிபியண்ணே !!கவிஞராக நீங்களே இருங்கன்ணே ! ரெண்டு குத்துபாட்டும் உண்டு போட்டுத்தாக்குங்க !! :))) //
பாண்டித் தம்பி!
தங்கள் சித்தம் என் பாக்கியம்!
கலக்கிபுடுவம்ல!
சொல்லவேணாமா, சொல்லலாமான்னு குளப்பத்துல இருந்தேன்!
சொல்ல வெச்சுட்டிங்க!
இவ்வளவு நல்ல கதையை எழுதியிருக்கீங்க!
உலகத்துலியே பெரிய நடிகரை புக் பண்ணி இருக்கீங்க!
அவருக்கு மரியாதை கொடுக்கற மாதிரி பேரு வைக்க மறந்துட்டீங்களே!
இப்பத்தான் இரண்டு நாளைக்கி நயாகரா எல்லாம் போயி, லொகேசன் பாத்துட்டு வேற வந்துருக்காரு, பி.பு.!
இவ்ளாம் பெரிய பேரை படத்துக்கு வெச்சிருக்கீங்களே!
நியாயமா இது!
இதுமாதிரி பெரிய்ய்ய்ய நீளமான பேரெல்லாம் விட்டு எவ்வளவு நாளு ஆவுது!
சின்னதா ஒரு பேரை எடுத்துக்கிட்டு வந்து அவரைப் பாக்கச் சொல்லி எனக்கு ஒரு அவசர கால் போட்டரு இப்போ!
அதுவரைக்கும், "ஆப்ஸ்" மலைக்கு போறாராம்!
சீக்கிரம்பா!
ரொம்ப தூரம் 'ஆப்ஸுக்குள்ள' போயிட்டா அவரை புடிக்க முடியாது!
//சொன்னா மாதிரி வந்துட்டாரய்யா தலீவரு. கேட்டாரு பாரு கேள்வி. இப்போ என்ன சொல்லறீங்க. இப்போ என்ன சொல்லறீங்க.//
வாய்யா புயல் தாசா... ஏன் இப்படி ஏற்கனவே அம்மாவுக்கு ஹைகோர்ட்ல்ல கொடுத்த 2500 பக்க சார்ஜ் ஷீட் மாதிரி தலைவரு எனக்கு அம்புட்டு நீளத்துக்குப் பின்னூட்டக் கேள்வித் தாள் கொடுத்து முழியை பிதுங்க வச்சுட்டார்...
இதுல்ல கூடவே அண்ணே அண்ணேன்னு சுத்திகிட்டு இருந்த அஸோசியட் சரா.. வேற எஸ் ஆயிட்டான்.. லீவ் லெட்டர் வேற கொடுக்கல்ல... தனி ஆளா எப்படி இம்புட்டுக் கேள்விக்குப் பதில் தேடுவேன்.. கோனார் நோட்ஸ் மாதிரி கொத்தனார் நோட்ஸ் ஏதுமிருக்கான்னு சென்னைய ரவுண்ட் போட்டுகிட்டு இருக்கேன்..
நீ வேற வந்து தலைவர் கிட்ட என்னியப் போட்டுக் கொடுக்குற... வேணாம்
//சொல்லவேணாமா, சொல்லலாமான்னு குளப்பத்துல இருந்தேன்!
சொல்ல வெச்சுட்டிங்க!//
கேக்கவே எவ்வள்வு சந்தோஷமா இருக்குத் தெரியுமா? என்னையே மாதிரி நீங்களும் குழம்பித் தான் இருக்கீங்களா?
//இவ்வளவு நல்ல கதையை எழுதியிருக்கீங்க!//
டாங்க்ஸ் எஸ்.கே
//உலகத்துலியே பெரிய நடிகரை புக் பண்ணி இருக்கீங்க!
அவருக்கு மரியாதை கொடுக்கற மாதிரி பேரு வைக்க மறந்துட்டீங்களே!//
ஆமா ஆமா..
மரியாதையானப் பேரா .. என்னச் சொல்லுறீங்க?
//இப்பத்தான் இரண்டு நாளைக்கி நயாகரா எல்லாம் போயி, லொகேசன் பாத்துட்டு வேற வந்துருக்காரு, பி.பு.!//
பி.பு வா? அய்யோ தலைவருக்கு இப்படி அரையும் குறையுமா இருக்கது எல்லாம் புடிக்காதுங்க... முழுசாத் தான் பிடிக்கும்
//இவ்ளாம் பெரிய பேரை படத்துக்கு வெச்சிருக்கீங்களே!
நியாயமா இது!
இதுமாதிரி பெரிய்ய்ய்ய நீளமான பேரெல்லாம் விட்டு எவ்வளவு நாளு ஆவுது!
சின்னதா ஒரு பேரை எடுத்துக்கிட்டு வந்து அவரைப் பாக்கச் சொல்லி எனக்கு ஒரு அவசர கால் போட்டரு இப்போ!//
ஆமா வேற பேரு கிடைச்சிருச்சா? தமிழ் பெயர் தானே....
//அதுவரைக்கும், "ஆப்ஸ்" மலைக்கு போறாராம்!
சீக்கிரம்பா!
ரொம்ப தூரம் 'ஆப்ஸுக்குள்ள' போயிட்டா அவரை புடிக்க முடியாது! //
இந்தா நம்ம குதிரை எல்லாம் கொந்தளிச்சுக் கிளம்பியிருச்சு... கிளம்பிட்டோம்ய்யா கிளம்பிட்டோம்ய்யா
எஸ்.கே தலைவர் கொத்ஸ் கேட்டக் கேள்விக்கெல்லாம் பதில் தேடித் திரிஞ்சிக்கிட்டுருக்கேன்...கண்டுபிடிக்க முடியுமான்னு சரியாத் தெரியல்ல...
அவர் வேற ஆப்ஸ் மலைக்குப் போயிட்டாக் கண்டுபிடிக்கறது கஷ்ட்டம்ன்னு சொல்லுறீங்க இதை எல்லாம் யோசிச்சிப் பார்க்குறேன்.. கதை வேற நல்லா இருக்குன்னு நீங்கச் சொல்லுறீஙக... இந்தப் படத்துல்ல நடிக்கறதுக்கு நீங்களே ஐடியா பண்ணுற மாதிரி தெரியுது...:)
//இதுல்ல கூடவே அண்ணே அண்ணேன்னு சுத்திகிட்டு இருந்த அஸோசியட் சரா.. வேற எஸ் ஆயிட்டான்.. லீவ் லெட்டர் வேற கொடுக்கல்ல... தனி ஆளா எப்படி இம்புட்டுக் கேள்விக்குப் பதில் தேடுவேன்.. //
வந்துட்டோம்ல... வந்துட்டோம்ல...
அண்ணே.. ஒன்னியும் கவலப் படாத, அடிச்சி தூள் கெளப்பிடலாம், எல்லாம் நல்லதுக்குத்தேன்,
அன்புடன்...
சரவணன்.
வாய்யா என் தங்கமே.. அண்ணணை அலற விட்டுட்டு எங்கிட்டு ராசாப் போயிட்ட.. இந்தாப் பாரு தலைவர் வீக் என்ட்ல்ல நாம உற்சாக ஊரைச் சுத்தி கிட்டு இருந்த ஒரு கேப்பல்ல வந்து கொஸ்டீன் பேப்பரை நீட்டிட்டு ஆப்ஸ் மலைக்குப் போயிட்டார்.. ஒரு கேள்விக்கும் எனக்கு பதில் தெரியல்லடா ராசா
அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கம்...,
எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் NDTV,BBC,அது யாருப்ப ஓ!US ல இருந்தா பரவாயில்ல அப்படி ஓரமா ஒக்காரு..
(ஜொள்ளு அந்தப் பொண்ணுகிட்ட இருந்து தள்ளி ஒக்காருயா.. ஒன்னோட ரப்சர் தாங்க முடியலையே)
சரி விசயத்துக்கு வருவோம் எதற்க்காக இந்த செய்தி ஊடகங்களை இங்கு அழைத்தோம் என்றால்
புயலாருக்கும்,அண்ணன் டைரக்டர் தேவுக்கும் பிரச்சனை என்பது போல ஒரு மாயை உருவாக்கப் பட்டு அதைப் பற்றி இந்த வார,மாத, இதழ்களில் கட்டுரை வந்துள்ளது,
NDTV-ல கடந்த ஒரு வாரமா இதை LIVE வேற பண்ணூறானுக,அதிபர் புஸ் வெற ஃபோன் போட்டு பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டியுள்ளார்.
புயலார் கொத்ஸ் அவர்கள், படத்தை பற்றி கேள்வி எதுவும் கேட்க வில்லை, படத்தை பற்றிய தனது கருத்தைத் தான் தெரிவித்தார்,
இதில் எந்தவிதமான உ.கு இல்லை,
நாங்கள் இது விசயாம தலைவருடன் பேச அடுத்த வாரம் ஆல்ப்ஸ் போகலாம் என்றிருக்கின்றோம்,(இப்படி கேப்புல ஊரச் சுத்திப் பார்த்தாதான் உண்டு) எனவே இதை இனி யாரும் பெருசு படுத்த வேண்டாம்,
படத்திற்க்கான உங்களின் ஆதரவுப் பின்னூட்டங்களை தொடர்ந்து அளிக்கவும்(தேவு இதுக்கெல்லாம் போய் கண்ணுல தண்ணி...ச்ச்ச். தொடச்சிக்கோ, ஒரு அசோசியெட்டா இது கூட பண்ணலைனா எப்படி),
தேவைப் பட்டால் அண்ணன் தேவு அவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்.
அண்பர் திரு.SK படத்தின் தலைப்பு பற்றி கூறி உள்ளார் அது பற்றி டைரக்டர் முடிவெடுப்பார்,
இந்தக் பத்திரிக்கையாளர் விளக்க கூட்டம் தலைவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல மட்டுமே,எனவே படத்தை பற்றிய மற்றையோரின் கருத்துக்கள் தொடந்து வரவேற்க்கப் படுகின்றன.
அன்புடன்...
சரவணன்.
//சிபியண்ணே !!கவிஞராக நீங்களே இருங்கன்ணே ! ரெண்டு குத்துபாட்டும் உண்டு போட்டுத்தாக்குங்க !! :))) //
பாண்டித்தம்பி!
இதோ குத்துப்பாட்டோட பல்லவி மட்டும். டிரைலர்.
-----------------------------------
பெ : புயலே! புயலே! பின்னூட்டப் புயலே!
நாந்தானே உன்னோட மயிலே!
ஆ :குயிலே! குயிலே! நான் கொஞ்சும் குயிலே!
நீ வந்தாலே தெரியாது வெயிலே!
பெ :குத்தாட்டம் நானாடி வந்தேன்
ஆ :அட பின்னூட்டம் நான்தேடி வந்தேன்!
..புயலே! புயலே! பின்னூட்டப் புயலே!.....
//பெ :குத்தாட்டம் நானாடி வந்தேன்
ஆ :அட பின்னூட்டம் நான்தேடி வந்தேன்!
..புயலே! புயலே! பின்னூட்டப் புயலே!.....//
பாடல்கள் : கவிஞர். நக்கல் சிபி. ஆஹா...சூப்பருங்கறேன் :)
ஏலே தேவு! அது தான் எல்லாஞ் செட் ஆகிப் போச்சுதுல்ல? மேற்கொண்டு ஆக வேண்டியதப் பாருலே!
// பாண்டித்தம்பி!
இதோ குத்துப்பாட்டோட பல்லவி மட்டும். டிரைலர்.
பெ : புயலே! புயலே! பின்னூட்டப் புயலே!
நாந்தானே உன்னோட மயிலே!
ஆ :குயிலே! குயிலே! நான் கொஞ்சும் குயிலே!
நீ வந்தாலே தெரியாது வெயிலே!
பெ :குத்தாட்டம் நானாடி வந்தேன்
ஆ :அட பின்னூட்டம் நான்தேடி வந்தேன்!
..புயலே! புயலே! பின்னூட்டப் புயலே!..... //
ஆஹா!ஆஹா!தளபதி!உடம்பெல்லாம்
'ஃபுல்லா' அரிக்குதுப்பா.ஒட்டகம் மேஞ்சிராம இருக்க முக்காடு போட்டு எழுதுறேன்.
பாட்டோட பல்லவியே பட்டையக்
கிளப்புதுன்னா,படம் வந்து இன்னும்
என்ன,என்னத்தெல்லாம் (!!!!!)கிளப்பப்போகுதோ ??!!. :-)
ஏம்ப்பா, அந்த கதை மாத்துரது பத்தி யாருமே வாய திறக்க மாட்டேங்கறீங்களே.....
தேவ்,
இன்னொரு சீன் சேர்த்துக்குங்க... அதாவது ஒருநாள் ஒருபுலவர் இவரப் பாக்க ஜிகர்தண்டாவொடவர்றாரு...
அவரு அரேபியாவுல வாழ்ந்தவர் அரேபியர்களப் புகழ்ந்து தள்றாரு (கற்பனைதானே)..
:)
நல்ல கலாய்த்தல்..
நீங்கல்லாம் என்ன படம் எடுக்கறீங்க!
இப்படி இருந்தா சரியா வராதுங்கோய்!
நீங்க போயி ஆல்ப்ஸ் மலை முளுக்க தேடினாலும் பி.பு. "ஆப்புட" மாட்டாரு!
அவரு போயிருக்கறது "ஆப்ஸ்" மலை; "ஆல்ப்ஸ்" இல்ல!
கொஞ்சம் முளிச்சுக்கோங்கப்பா!
சீக்கிரமா ஷார்ட்டா ஒரு பேரை ரெடி பண்ணுங்க!
"புயக்கேசி", இப்படி எதனாச்சும்...!
//தேவ்,
இன்னொரு சீன் சேர்த்துக்குங்க... அதாவது ஒருநாள் ஒருபுலவர் இவரப் பாக்க ஜிகர்தண்டாவொடவர்றாரு...
அவரு அரேபியாவுல வாழ்ந்தவர் அரேபியர்களப் புகழ்ந்து தள்றாரு (கற்பனைதானே)..//
பார்ட்னர் அருமையான யோசனைச் சொலியிருக்கீங்க.
தலைவர் வேற கால்கரியாரைத் தயாரிப்பாளர் ஆக்கிட்டாரு. அவருக்கு சின்ன கேரக்டர் கொடுக்காமல் எப்படி?
தலைவா இந்த ஐடியா ஓ.கேவா?
//நீங்க போயி ஆல்ப்ஸ் மலை முளுக்க தேடினாலும் பி.பு. "ஆப்புட" மாட்டாரு!
அவரு போயிருக்கறது "ஆப்ஸ்" மலை; "ஆல்ப்ஸ்" இல்ல!//
ஆகா 'ல்' வந்து 'ப்' ஆகிப்போச்சா.. தலைவரைக் கண்டுபிடிக்கிற கேப்புல்ல உங்களுக்கு ஒரு க்தை இருக்கு கேட்டு ஓ.கே பண்றீங்களா? அதுக்கு டைட்டில் நீங்க சொல்லமாதிரியே வச்சுரலாம்... ஓ.கே சொல்லுங்க எஸ்.கே..
சரா.. அந்த ஸ்கிரீப்ட் ரெடியா?
மெகா பட்ஜட் படமெடுக்கலாமுன்னு பார்த்தா மெகா சீரியல் எடுக்கப் போயிட்ட. இதுக்கு நடுவில எஸ்.கேவை வச்சி வேற ஒரு படம். ஒண்ணும் சரியில்லையே.
பேசாம கால்கரியாரைக் கூப்பிட்டு டைரக்ட்ரை மாத்தச் சொல்ல வேண்டியதுதான்.அவரு கூட அவரு அக்கா பையன் ஒருத்தன் இருக்கான். நம்ம கிட்ட கதை சொல்ல வெயிட் பண்ணறான்னு சொன்னாரு.
அவரு சொன்ன ஒன் லைன் கூட நல்லா இருந்தது. அது என்னன்னா...
அதிகம் பின்னூட்டம் வாங்கற நண்பன், பதிவே போடாத ஏழை நண்பன். அவன் சொத்து எல்லாம் அவன் அப்பா வெச்சுட்டு போன ஒரு பிளாக். அந்த ஏழை நண்பனின் பிளாக் மேல அந்த பரம்பரை பின்னூட்ட பணக்காரனின் அப்பாவுக்கு ஒரு கண். பணக்காரனின் அப்பா செய்யற சூழ்ச்சியினால நண்பர்கள் இரண்டு பேரும் பிரியறாங்க. அப்புறம் அந்த ஏழை நண்பன், பிளாக்கில் பதிவு போட ஆரம்பிச்சு, ஒரே பாட்டுல பதிவுக்கு 1000 பின்னூட்டம் வாங்கற லெவலுக்கு போகறான். அவனை எல்லா இடத்திலும் கெஸ்ட் பிளாக்கரா கூப்பிடறாங்க. போற இடத்திலெல்லாம் வெற்றி. இதனால அந்த பணக்கார நண்பனுக்கு ஒரு பின்னூட்டம் கூட வராம நொடிஞ்சு போறான். ரெண்டு பேரும் எப்படி ஒண்ணு சேர்ந்து சந்தோஷமா இருக்காங்க, ரெண்டு நண்பர்களின் காதல் அப்படின்னு கொண்டு போயி படத்தை முடிக்கலாம்.
- இது கதை. படம் பேரு கூட ஹாலிவுட் படம் மாதிரி ப்ரதர் மவுண்டன் அப்படின்னு சொன்னான். அதுக்கு வரிச்சலுகை கிடைக்காதே மாத்துன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.
அத விட்டுட்டு இன்னும் அரத பழசா "பிளாகர் இருக்கிறது!!! பதிவுகள் பொழிகின்றன!!! உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... " அப்படின்னு ராஜா வேஷம் போட்டு கத்திக்கிட்டு இருந்தா எவன்யா படம் பார்ப்பான்?
இந்த மாதிரி 'மாடர்னா" ஒரு கதை சொல்லு பார்க்கலாம்.
பாத்தியா தேவு இதுக்குத் தான் நான் ரெடி பண்ணுன ஸ்கிரிப்டை(??!)கூட வெளியிடலை,
SK-க்கு கூட ஒரு அருணகிரிநாதர் டைப்ல கதை ரெடிபண்ணியாச்சு, ஆனா அவரு நமக்கு சம்பளமா "அப்பன் முருகன்" கோயில்ல கொடுக்குற உண்டக்கட்டியவும்,ரெண்டு முருகன் பாட்டையும் தான் தருவாரு,
அதே நம்ம தல கொத்ஸ்னு வச்சிக்கோ மாலு நெறையா கிடைக்கும்.
கால்காரிக்கும் கணக்கு அவ்வளவா வராது அங்கேயும் அப்படியே ஆட்டையப் போட்டுரலாம்,
நீ சொன்னதை கேட்டு தல கோவமா இருக்காரு போல, பரவாயில்லை வழக்கம் போல சாமாதானப் படுத்திக்கலாம்,(ஸ்ஸ்ஸ்... தலைவர சமாதனப் படுத்தவே நேரம் சரியா இருக்கு,பொசுக்கு பெசுக்குனு கோவம் வருது,)
//இதுக்கு நடுவில எஸ்.கேவை வச்சி வேற ஒரு படம். ஒண்ணும் சரியில்லையே. //
தலைவரே நீங்க உள்ளூர்ல இல்லைனு நெனைச்சி தான், நாங்க விவ்-க்கு சீரியல் கதை சொன்னோம்,SKக்கும் ரெடி பண்ணீனோம், ஆனா நீங்களே இவ்வளவு ஆர்வமா இருக்கும் போது ஆரம்புச்சுடவேண்டியது தான்,கெளப்புங்கள்,
தேவு கொஞ்ச நேரம் அமைதியா இரு...
தலை சொல்லப் போர அந்த ஒன் லைன் கதையக் கேட்டுக்கலாம்,பின் அதை அப்படியே டெவலப் பண்ணி தெலுங்குல வித்துடுவோம்,(நம்ம பொழப்பு இப்படியே ஓடுது),
அன்புடன்...
சரவணன்.
பி.பு. சொன்னதை உங்ககிட்ட சொல்ல வந்தா, இப்ப எனக்கே கதையா?
நமக்குல்லாம் கதை சொல்ல உங்களால முடியாதுங்க!
ம்ம்ஹூம்! நீங்க போற ரூட்டே சரியில்லை.
இது ஒண்ணும் படம் எடுத்து போணி ஆவுற கதையாக் தெரியல்லை!
பி.பு., நீங்க பேசாம கானடாவுக்கே போய் கதை கேளுங்க!
//அட என்ன தம்பி நீங்க. நம்ம ஆபீஸ் கதவு எப்பவுமே உங்களுக்கு திறந்தே இருக்கும். //
//இப்படி எப்பவுமே என் ஞாபகமா இருக்கையே உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன். //
அண்ணே உங்க பாசம் புல் பூண்டு எல்லாத்தையும் அரிக்க வைக்குதுண்ணே. நீங்க எம் மேலே வச்சு இருக்க நம்பிக்கைக்கு நிச்சயமா ஒரு மாபெரும் வெற்றி படம் கொடுத்தே தீருவேண்ணே
//பசங்க சொல்லறாங்கன்னு நம்மளை துட்டு எல்லாம் போட சொல்லாதே. சல்லிசா ரெண்டு கல்யாண மண்டபம் வருதாம். அதுக்கு வேணும்.//
அம்மாவா அய்யாவான்னா மண்டபத்தைத் தொறக்க யார்ண்ணா வர்றாங்க?
//ஒண்ணு பண்ணலாம். நம்ம கால்கரியாரை ப்ரொடியூசராப் போடலாம். அவருதான் இந்த பைனான்ஸ் எல்லாம் நல்ல அரேஞ்ஜ் பண்ணறாரு//
சரிங்கண்ணா.. நீங்க சொன்னா சரிங்கண்ணா.. அட அவர் ஒத்துக்கல்லன்னாலும் பரவாயில்லண்ணா அவர் பணத்துல்ல தான் நம்ம படம் வருதுங்கண்ணா நீங்க DONT WORRYண்ணா
//ரொம்ப பெருசா சொல்ல கஷ்டப்பட்டா நம்ம ஆளு ஒருத்தன் சொன்னா மாதிரி புயலார் அப்படின்னு வேணா சொல்லிக்க. என்ன. //
அட அண்ணன் இந்தப் பட்டத்தைத் தான் உங்களுக்குக் கொடுக்கறதா இருந்தேன் ஆனாப் பாருங்க ஓரிசா கப்சாபாத் பகுதி இலவஸ் கொத்ஸ்ஜி ரசிகர் மன்றம் செயலாளர் இலவஸ் இளிச்சாவாய் சர்மா போனைப் போட்டு என்னச் சொன்னார்ன்னா அந்தப் பெயர்ல்ல அவங்க ஊர் பக்கம் ஒரு ஜாதி இருக்காம். உங்களுக்கு அந்தப் பெயர் கொடுத்தா உங்களுக்கு சாதி அடையாளம் பூசப்படும்ன்ணு சொல்லுறார்ண்ணே அதான் இப்படி பி.புன்னு மாத்திட்டேன்...
விடுங்கண்ணே இப்போ நீங்களே சொல்லிட்டீங்க மாத்திருவோம்.. என்ன விளக்குமாத்தால்ல சாத்துவாங்களாம்..அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?
//இது சரிப்படாது. போன படத்துக்கு பட்ட கஷ்ட்டத்தைப் பத்தி உங்க தல கிட்ட கேளு.
வேணும்ன்னா ஒரு ஆயிரம் ஆளுங்க கோஷம் போட்டுக்கிட்டு வர மாதிரி வெச்சுக்கலாம்.//
அண்ணே தல ஒன்லி டமீல் நாட் நீங்க அப்படியா? டோட்டல் குளோபல் ஸ்டார். உங்க லெவலுக்கு குருத இல்ல டைனோசரையேக் கொந்தளிக்க விடலாம்.. படம் ரிலீஸ் பத்தி நீங்க பதறி கதறவே வேண்டாம் நம்ம தயாரிப்பு திலகம் கால்கரியார் பார்த்துக்குவார்...
//போராட்டம் எல்லாம் மிருகத்துக்குத்தான் பண்ணுவாங்க. மனுசனுக்கா பண்ணுவாங்க//
தம்பி சரா நோட் பண்ணுப்பா தலைவர் பேசும் போது பஞ்ச் டயலாக்கா சிதறுது பாரு... கூட்டிப் பெருக்கி எடுத்து வை அப்படியே அள்ளி படத்துல்ல வச்சுருவோம்
////மிசிசொமெ..மிசிச்சொமெ.. //
அப்படின்னா ஜப்பான் மொழியிலே இலவசம் இலவசம்ன்னு அர்த்தமாம்.. விவசாயி விசாரிச்சு சொன்னார்.அப்புறம் இப்போ ஜப்பான்ல்ல உங்களுக்கு பின்னோட்டோ ஸ்ட்ராம்மோட்டான்னு பேர் எல்லாம் வச்சு அங்கிட்டும் ரசிகர்கள் அம்பை.. பொழியறாங்களாம்...
//அடிக்கடி சொல்லறயே. இதுல உகு எதுவும் இல்லையே? //
இதுல்ல உகு வெகு கா.கீ எதுவும் இல்லண்ணா.
//படத்துல வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சுடே. ஆனா கொஞ்ச நாள் ஆளைக்காணுமாமே. நம்ம பசங்கள அனுப்பித் தேட சொல்லுங்க. //
தேடிட்டாங்கண்ணா.. அவர் எதோ ஆப்ஸ் மலைப் பக்கமாத் திரியறாராம். இப்போதைக்கு ஆப்பட மாட்டாராம்.. சோ நீங்க கவ்லைப் படாதீங்கண்ணா
//தம்பி சரா நோட் பண்ணுப்பா தலைவர் பேசும் போது பஞ்ச் டயலாக்கா சிதறுது பாரு... கூட்டிப் பெருக்கி எடுத்து வை அப்படியே அள்ளி படத்துல்ல வச்சுருவோம் //
நோட் பண்ணியாச்சுங்க தேவு.
அன்புடன்...
சரவணன்.
//அந்நிய அனானி கூட்டத்திடம் கோலியாய் உருண்டு கேலியாய் நின்றனர்...// - இதுல ரமணிக்கு ஒரு ஆப்பு. சூப்பர்.
//ஒரு கம்ப்யூட்டர்ல்ல ஜூம் பண்றோம்... அங்கே....// - பாத்துப்பா எஸ்.கே. கோவப்படப் போறாரு.
//மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...// - எனக்கே ஆப்பூ? இருக்கட்டும் இருக்கட்டும்.
//மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...// - ரஜினி ராம்கி கமிங் வித் கன். நான் எஸ்.//
////பின்னூட்ட விளையாட்டு என நீ உன் பதிவுக்கு ஓட்டிக் கொண்டு போவது மாபெரும் குற்றம்"// - மீண்டும் நான்?! இருக்கட்டும்.
//அரசாங்கம் தடைச் செயத் நேரத்தில் என் குலக் கொழுந்துக்களுக்கு பிராக்சி சர்வர் செட் பண்ணிக் கொடுத்து படிக்கத் தான் உதவினாயா நாதாரி பயலே..// - இது எங்க போகுதுன்னு தெரியுது!
//பிராஜக்ட் மேனஜருக்குத் தெரியாமல் என் பாசமிகு நட்பு கைப்புள்ள பதிவுப் படித்து பி.எமிடம் பிடிப்பட்டு பெஞ்ச் மேல் ஏறி நின்ற போது நீ வாளோடு போய் கைப்புக்குத் தான் தோள் கொடுத்தாயா.. // - கடசியா உங்க தல. இது ஒண்ணு சரியா இருக்கு.
நீங்க நினைச்ச மாதிரி யாருமே எதிர்க்கல்ல தலைவரே... தலைவர் பவர் என்னன்னு தமி பதிவாளர்களுக்குத் தெரியாதா என்ன? உங்க வழிக்கு யாராவது வருவாங்களா? நீங்க டென்ஷன் ஆவாதீங்கத் தல.. நம்ம தயாரிப்புத் திலகம் ஒரு ஒன் மேன் ஆர்மி மாதிரி.. டாலர் பவுண்ட்ன்னு துப்பாகில்ல போட்டு யார் வந்தாலும் சுட்டுத் தள்ளிருவார்ல்ல
//இப்போ கதை மாற்றத்துக்கு வரலாம்.
முதலாவது இந்த கதை சரி இல்லை. எம்ஜியாரு எப்பவுமே நல்லவனா நடிக்கற மாதிரி நமக்கும்ம் ஒரு இமேஜ் இருக்குல்ல. (இருக்கு?!) அதுக்கு இந்த கதை ஒத்து வரலை.
அதனால இந்த கதையை மாத்தணும். எப்படின்னு கேட்கறீங்களா? அதை அடுத்த பின்னூட்டத்தில பார்ப்போம்.
(எப்படி ஜோசப் சார், ஜிரா மாதிரி சீரியல் தொடர் எழுதக் கிளம்பட்டுமா?) //
இந்த இமேஜ் வட்டத்துல்ல எல்லாம் நீங்க சிக்கிறக் கூடாதுன்னு எனக்கு நேத்து வரைக்கும் 111111122288888885634637735 லட்டர், 156378282662342672752377 இ.மெயில், 246373783992202883638 தொ.பே அழைப்புன்னு நான் ஒரே பிசி.. வேணாம் தல உங்களை யாரோ குழப்புறாங்க... நீங்க எம்.சீ.யாரா தலைவா? சொல்லுங்க நீங்க எம்.சீ.யாரா? ( ஒன் மினிட் வெயிட்டீஸ் தலைவா)
நீங்க எம்.சீ.யாரா தலைவா? சொல்லுங்க நீங்க எம்.சீ.யாரா?
இல்லத் தலைவா நீங்க செவாலியே மாதிரி கலை ஞானி மாதிரி ஒரு பிறவிக் கலைஞன் தலைவா.. உங்களுக்கே உங்க ரேஞ்ச் புரியல்லியே.. அய்யோ .. தம்பி சரா.. தலிவரை நாம் எந்த ரேஞ்சுக்கு பீல் பண்ணியிருக்கோம்ன்னு சொல்லு...
நீங்க பதிவுலகின் அன்டரிக்கார்டோ ரோனால்டோ ஜிடேன் தலைவா.. அவர் யார்ன்னு எல்லாம் கேக்காதீங்க இன்னும் பிலீங் ஆயிடுவேன்.
//அப்பா தேவு, யாரு வந்து கேட்டாலும் நமக்கு இல்லைன்னாலும் அவங்களுக்கு குடுக்கறதுதானே நம் பண்பு. நம்ம பதிவக் கூட பார்க்காம அவங்க பதிவுக்குப் போயி பின்னூட்டம் போடறதுதானே நம்ம அன்பு. அது நண்பனா இருந்தாலும் எதிரியா இருந்தாலும் அங்களுக்கு பின்னூட்டம் போடறது நம்ம கடமை இல்லையா?
அப்படி இருக்கும் போது நான் பின்னூட்டம் போட மாட்டேன்னு சொல்லற ஒரு கேரக்டர் பண்ண முடியுமா? அப்படியே நான் செஞ்சாலும் ஆடியன்ஸ் ஒத்துப்பாங்களா? கொஞ்சம் யோசிச்சிப் பாரு. //
தலைவா ஒரு உண்மையைச் சொல்லிடுறேன் நானு.. உங்களை வச்சு படம் எடுக்குறோம்ன்னு முடிவு பண்ண ஒடனே நான் செஞ்ச மொத வேலையே யோசிக்கறதை நிப்பாட்டுனது தான்.. அதை விடுங்க...
என்னத் தல நீங்க நின்னா 25 நாள் ..நிமிந்தா 50 நாள்... நடந்தா 75 நாள்.. ஓடுனா 100 நாள்... நீங்க என்னப் பண்ணாலும் மக்கள் பாப்பாயங்கத் தலைவா... சும்மாவா சொல்லுதேன்.. உங்கப் பின்னாடி 600,700ன்னு சாதனைப் பட்டியல் இருக்குத் தலைவா.. உங்கப் படம் பாக்கவே மக்கள் பாக்யம் செஞ்சு லேகியம் சாப்டுருக்கணும் தலைவா...
//இது யாருப்பா? நம்ம பதிவுக்கு எல்லாம் வராம இங்க மட்டும் வராரு? //
தலைவா புயல் தாசனை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறதுல்ல நான் பெரும் பாக்யம் செஞ்சுருக்கணும் தலைவா.. அவர் தான் தலைவா உங்க மனச்சாட்சி....:)
////இது யாருப்பா? நம்ம பதிவுக்கு எல்லாம் வராம இங்க மட்டும் வராரு? //
தலைவா புயல் தாசனை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறதுல்ல நான் பெரும் பாக்யம் செஞ்சுருக்கணும் தலைவா.. அவர் தான் தலைவா உங்க மனச்சாட்சி....:)//
ஓ! அதானா? அப்போ நம்ம பதிவு பக்கம் வந்து இம்சை குடுக்காம இங்கயே இருக்கட்டும்.
நாந்தானே 150?
தேவு இந்தா தண்ணிகுடி,பேசிப் பேசி தாவு தீர்ந்துடப் போகுது,
தலைவரு போராரு பாரு விடாதே...
எல்லா கேள்விக்கும் இப்படியே பதில் சொல்லி வாய்ப்பை மிஸ் பண்ணாம வாங்கிட்டு வந்துடு,
அன்புடன்...
சரவணன்.
Post a Comment