Monday, September 25, 2006

வசூல்ராஜா பார்ட் - 2

வணக்கம் மக்கா..

'லகே ரஹோ முன்னாபாய்' படம் பார்த்து ஒரு வாரம் ஆச்சுங்க...
சில வருஷங்களுக்கு முன்னாடி திரையில் மும்பையின் தாதாவா டாக்டருக்குப் படிக்க அவர் அடித்த லூட்டிகளால் இந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தைத் தன் வசமாக்கினார் இந்த முன்னா பாய். படம் முன்னாபாய் MBBS, இந்தியாவின் பல வட்டார மொழிகளிலும் அந்தப் படம் ரீ-மேக் செய்யப்பட்டு கல்லாக்கள் களைக் கட்டியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர்.

2006 இல் அதே மும்பை தாதா மீண்டும் தன் சகா சர்க்யூட்டோடு திரையுலகைக் கலக்கக் கிளம்பியிருக்கிறார் எனத் த்கவல் கிடைத்ததும் போனத் தடவை செம தமாஷ் பண்ணாங்களே இந்தத் தடவை என்னப் பண்ணுவாங்களோன்னு ஒரு ஆர்வம் நம்க்குள்ளே கிளம்பிருச்சு. சென்னையிலே மொத்தம் மூணு தியேட்டர்ல்ல ரிலீஸ். எங்கேயும் டிக்கெட் இல்ல.. பிளாக்குக்கு நமக்கு வசதி பத்தாது சாமி. அதான் காத்திருந்து பார்ப்போம்ன்னு முடிவு பண்ணதுல்ல படத்தை மூணாவது வாரம் அதுவும் வட இந்தியாவுக்கு பயணம் போகும் போது குர்கான்ல்ல தான் பாக்க முடிஞ்சது.. ( இங்கிட்டே பிளாக் கொடுத்துப் பார்த்திருக்கலாம். )

படம் பாக்கறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி விசாரிச்ச வரையிலே படம் காந்தியப் பத்திய மேட்டர்ன்னு காதுக்குக் கிடைச்சத் தகவல் சொல்லிச்சு. "ஹே ராம்", "மேன்னே காந்தி கோ நஹி மாரா" டைப்ல்ல நம்ம இந்தியாவின் டேடியப் பத்தி பக்கா சீரியசா இல்ல படம் எடுப்பாயங்க.. நம்ம தாதாவுக்கும் தாத்தாவுக்கும் கொஞ்சம் கூட டேலி ஆவாதேன்னு யோசனையாத் தான் படம் பார்க்கப் போனேன்.

சஞ்சய் தத் (முன்னாபாய்), அர்ஷத் வார்சி (சர்க்யூட்) அதே கதாபாத்திரங்களில். வித்யா பாலன் தான் கதாநாயகி ( யார்ன்னு தெரியல்லன்னு சொல்லக் கூடாது படம் போட்டுருக்கோம் பாருங்க). முந்தையப் படத்துல்ல மெடிக்கல் காலேஜ் டீனா வந்த பொம்மன் இரானி இதுல்ல லக்கி சிங் அப்படிங்கற கேரக்டர்ல்ல வர்றாரு. அந்தப் படம் மாதிரியே இதுல்லயும் முன்னாவுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

அப்புறம் இன்னோரு முக்கிய கேரக்டரா... நாம எல்லாம் போட்டோ அப்புறம் நம்ம மெரீனாப் பீச் ஐ.ஜி ஆபிஸ்க்கு எதிரே சிலையா நிக்குறாரே அவர் நடிச்சுருக்கார். ( சிவாஜி சிலை இல்லீங்க... இது கொஞ்சம் பழைய சிலை)

முன்னாவுக்கு ரேடியோ ஜாக்கி ஜான்வி மேல லவ்ஸ்ன்னா அப்படி ஒரு லவ்ஸ்.. இந்த நேரத்துல்ல ரேடியோவில்ல நம்ம நேஷன் டேடி பத்தி பேஷ்னாப் போட்டி நடத்துறாங்க.. அதுல்ல கெலிச்சா அம்மணியை ரேடியோ ஸ்டேஷன்ல்ல மீட் பண்ணி ரேடியோவிலே பேச வாய்ப்புன்னு சொல்லிடுறாங்க. நம்ம தாதாவும் சர்க்யூட்டும் பழைய டெக்னிக் பாலோ பண்ணி.. காந்தி பத்தி விவரம் தெரிஞ்சவங்களைப் பக்கத்துல்ல உக்கார வச்சுகிட்டு போனைப் போட்டு காந்தி க்வீஜ்ல்ல கெலிக்கறது செம கூத்துங்கோ. ரேடியோ ஸ்டேஷன் போய் அங்கே ஜான்வியை மீட் பண்ணி முன்னா விடுற பீட்டர் ஹாஸ்யத்தின் அடுத்த் லெவல். வித்யா பாலனின் குட் மார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் மும்பாய் என்ற உச்சரிப்பு ஜில் ஜில் ரகம். ( சலாம் நமஸ்தே ப்ரீத்தியின் சலாஆம் நமஸ்தே அளவுக்கு இல்லை.. இருந்தாலும் இதுவு ஓ.கே தான்.)

காந்தி பத்தி ஒரு பிரசங்கம் பண்ண முன்னாவை ஜான்வி அழைக்க.. முன்னா முரளி பிரசாத் சர்மா என்னும் பேராசிரியராய் அவதாரம் எடுக்க நகைச்சுவை வண்டி டாப் கியரில் கிளம்புகிறது. காந்திப் பற்றி படித்து அறிய முயலும் முன்னாவின் கண்களுக்கு மட்டும் காந்தி தெரிய ஆரம்பிக்கிறார். காந்தியை ஒரு மசாலாப் படத்திற்குள் இயக்குநர் கண்ணியமாக நுழைத்து இருக்கிறார். காந்தியோடு நட்பு கொள்ளும் முன்னா பிர்சங்கம் செய்கிறான். ஜான்வியின் மனம் கவ்ர்கிறான். அவளோடு அவள் வீட்டில் இருப்பவர்களின் இதயம் கொள்ளைக் கொள்கிறான். இதுக்குப் பிறகு முன்னா தான் ஒரு பேராசிரியர் என்ற பொய் போர்வை போர்த்தி ஜான்வியை டாவு கட்ட, திரைக்கதை இதமாய் நகர்கிறது.

காந்தியிடம் தன் காதல் நிறைவேற ஐடியாக் கேட்கிறான் முன்னா, காந்தியின் சத்யப் போதனைகள் நயமாக அந்த இடத்தில் நுழைக்கப் படுகின்றன. முன்னா மெல்ல மாறுகிறான். அந்த மாற்றங்கள் மெல்லிய நகைச்சுவை இழையச் சொல்லப்பட்டு இருக்கினறன. கதையின் போக்கில், வில்லனும் அவன் செயல்களும் வழக்கமானப் பாணியில் இருந்தாலும் கச்சிதமாகப் பொருந்தும் படி நுழைக்கப்பட்டுள்ளன.

வில்லனாக பொம்மன் இரானி, நகைச்சுவை வில்லன். நம்ம ஊர் மணிவண்ணன் மாதிரி. ரசிக்க வைக்கிறார். வித்யா பாலன் வீட்டைச் சூழ்ச்சியால் வில்லன் கைப்பற்ற, அதை எதிர்த்து நம்ம முன்னா காந்திய முறையில் போராடுகிறார். போராட்டம் போரடிக்கவில்லை. கலகலப்பாய் நகைச்சுவைத் தோரணங்களால் அந்தக் காட்சிகளை அலங்கரித்து வைத்துள்ளார் இயக்குனர். போராட்டம் ரேடியோவிலும் தொடர்கிறது. முன்னா மும்பையின் ரேடியோவில் காந்திய வழியில் பலப் பிரச்சனைகளுக்கு வழி சொல்லும் ரேடியோ ஜாக்கியாகப் புகழ் பெறுகிறார்.

தற்காலப் பிரச்சனைகளுக்கும் காந்திய வழியில் தீர்வுகள் உண்டு என இயக்குனர் எளிமையாகச் சொல்ல வந்திருக்கிறார். இறுதியில் முன்னா தன் காதல், மற்றும் வில்லனை எதிர்க்கும் தன்னுடையப் போராட்டம் இரண்டிலும் காந்தீயக் கொள்கைகள் கொண்டு எப்படி வெல்கிறான் எனபதே கிளைமாக்ஸ்
வித்தியாசமானச் சிந்தனையில் விளைந்திருக்கும் ஒரு நல்ல அம்சமானப் பொழுதுப் போக்கு படம்.

சஞ்சய் தத் அர்ஷத் வார்சியிடம் அக்டோபர் 2 குறித்து ஆரம்ப காட்சிகள் கலகல சிரிப்பு ரகம் என்றால், காந்தி தன் கண்களுக்கும் தெரிவதாய் அர்ஷ்த் வார்சி காட்டிக் கொள்ளூம் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பொதுவாகவே அர்ஷத் வார்சியும் சஞ்சய் இணைந்து வரும் காட்சிகளில் சிரிப்புக்குக் குறைச்சல் இல்லை. போட்டுத் தாக்குறாங்கப்பா.

சஞ்சய் தத் அதிகம் மெனக்கெடாமல் முன்னாவாகக் கலக்குகிறார். என் ஓட்டு சர்க்குயூட்டாக வரும் அர்ஷத் வார்சிக்கே. மனுஷன் செம டைமிங்ப்பா.

வித்யா பாலன் நல்லாச் சிரிக்கிறார். வருகிறார். போகிறார். அவர் பங்கு நிறைவு. வித்யா பாலன் வீட்டில் இருக்கும் முதியோர் கோஷ்ட்டியின் சேட்டைகளும் ஆசைகளும் லக்கலக்க ரகம்.

பாடல்கள் படத்தோடு ஓட்டி வருகின்றன. இயக்குனர் ராஜ்குமார் ஹிரேனிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி சோக்காக் கீதுப்பா. டைம் கிடைச்சா மக்கா டோன்ட் மிஸ் திஸ்

ஆமா தமிழ்ல்ல வசூல்ராஜா பார்ட் - 2 வருமா?? வந்தால் வசூல் நிச்சயம்... செய்ங்க்ப்பா

கடைசியாக் காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்லுவார் அதைச் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்குறேன்.

"என்னைப் பல வருஷத்துக்கு முன்னாடியேப் போட்டுத் தள்ளிட்டாங்க.. என் உயிர் வேணும்ன்னா குண்டு பட்டு போயிருக்கும் என்னுடைய சிந்தனைகள் சாகாது. அது இன்னும் இப்படி யார் மன்சுல்ல புகுந்து வாழ்ந்துகிட்டு தான் இருக்கும்.."

கரிக்டாஅ சொல்லிகிரார்ப்பா காந்தி தாத்தா

7 comments:

ஸ்ருசல் said...

படம் நன்றாக இருந்தது. முக்கியமாக வித்யா பாலனும், சஞ்சய் தத்தும் கல்லூரியில் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் சிரித்து முடியவில்லை.

"எந்நேரமும் கேண்டீனிலேயே இருக்க...எப்ப கிளாசிற்கு வரப் போற?" என்று சஞ்சய் தத்தின் ஆள் ஒரு மாணவனை அடிக்கும் டைமிங்கும், அதைப் பார்த்து மற்றொரு மாணவி, "must be his father", என்று தோழியிடம் கூறுவதும் அசத்தல்.

ஆனால் முன்னாபாய்-I பகுதியில் இடம் பெற்ற இசை இதில் மிஸ்ஸிங். 'சன் சன்', பாடலும் அந்த இசையும் முதல் பாகத்தில் நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

Unknown said...

வாங்க ஸ்ருசல்,

அந்தக் காட்சி செமக் காமெடி தான்.
சர்கியூட் பிரின்சிபால் உடன் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் செம தமாஷ்.

பாடல்கள் வகையில் பார்த்தால் எனக்குப் பிடித்திருந்தது என்றே சொல்லுவேன். கதையின் போக்கிற்கு பாடல்களும் நன்றாகவே ஒத்து வந்திருக்கினறன.

சில பாடல்கள் உரையாடல் போலவே அமைந்திருப்பது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சூப்பர் படம் நம்ம வலைப் பதிவுகளில் இதைப் பத்தி யாரும் எழுத மாட்டேங்கறாங்களேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். எழுதீட்டீங்க. இங்க பெங்களூரில் ஒரு 2 வாரத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்ல ஓடீட்டு இருக்கு. ரெண்டாம் முறை பார்க்க சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது.

படம் சூப்பர் ஹிட் ஆனா வலைப் பதிவுகளில் யாரும் இதைப் பத்தி பேச மாட்டேங்கறாங்க எனக்கு சின்ன வருத்தம்.

Unknown said...

வாங்க குமரன், இதைப் பற்றி தாங்களும் ஒரு பதிவுப் போட்டதாய் ஒரு ஞாபகம். தவறாக இருப்பின் திருத்துங்கள். நீங்கள் கூறியதுப் போலவே இது ஒரு அருமையானத் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. வலையுலகில் இதற்குப் போதிய கவனிப்பு கிடைக்காததில் எனக்கும் சற்று வருத்தமே அந்த வருத்தம் போக்கவே இப்பதிவு. ஆதரவிற்கு நன்றி.

தில்லியில் கிட்டத்தட்ட எல்லா மல்டி பிளக்ஸிலும் இந்தப் படம் தான் திரையிடப்பட்டுள்ளது.
அங்கு இந்தப் படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப் பட்டுள்ளதாம்:)

இலவசக்கொத்தனார் said...

//அங்கு இந்தப் படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப் பட்டுள்ளதாம்:)//

அதான் ஹிந்தியிலையே பேர் வெச்சு இருக்காங்களே. அதனாலதான் இருக்கும்.

(ஒரு ஹிந்திப் படத்தைப் பத்தி நம்மளால இவ்வளவுதான் பேச முடியும். ஐயாம் தி எஸ்கேப்.)

Unknown said...

தலைவா.. பேர் மட்டும் இல்லை பூரா மேட்டரும் இந்தி தான். வேட்டையாடு விளையாடுன்னு சுத்தத் தமிழ்ல்ல பெயர் வச்சுட்டு உள்ளுக்குள்ளே தஸ் புஸ் இங்கீலிஸ்... சப் டைட்டில்ல்ல தமிழ்ங்கற விவகாரமே லேது:)

கைப்புள்ள said...

//தற்காலப் பிரச்சனைகளுக்கும் காந்திய வழியில் தீர்வுகள் உண்டு என இயக்குனர் எளிமையாகச் சொல்ல வந்திருக்கிறார். இறுதியில் முன்னா தன் காதல், மற்றும் வில்லனை எதிர்க்கும் தன்னுடையப் போராட்டம் இரண்டிலும் காந்தீயக் கொள்கைகள் கொண்டு எப்படி வெல்கிறான் எனபதே கிளைமாக்ஸ்
வித்தியாசமானச் சிந்தனையில் விளைந்திருக்கும் ஒரு நல்ல அம்சமானப் பொழுதுப் போக்கு படம்.//

தேவ்!
விமர்சனம் நல்லா எழுதியிருக்கேப்பா. இந்த படத்தை எப்படியாச்சும் கொட்டா இருக்குற ஒரு எடத்துக்கு அடுத்தது போகும் போது பாத்துடனும்.

tamil10