Thursday, November 30, 2006

தூம் - 2 | DHOOM - 2


வணக்கம் மக்கா,

நேத்து நம்ம ஆபிஸ் மக்களோட உழைச்ச உழைப்பின் பலனைக் கொண்டாட படம் போக முடிவாச்சு.. என்னப் படம் போகலாம்ன்னு ஆளுக்கு ஆள் அபிப்பிராயம் செப்பிக்கொண்டிருக்க.. கடைசியா நம்ம கிளைன்ட் ஆசைக்கு மருவாதைக் கொடுத்து கும்பலாக் சத்யம் காம்ப்ளக்ஸ்க்குக் கிளம்புனோம்ய்யா

படம் போன வாரம் தான் ரிலீஸ்.. ஓரளவு நல்ல கூட்டம்ங்க...

போஸ்ட்டர்ல்ல பார்த்துக் கதையைக் கண்டுபிடிக்க முடியுமான்னு ஒரு சின்ன யோசனையிலே போஸ்ட்டரைப் பார்த்தேன்ங்க.

விறைப்பா அபிஷேக் பச்சன் பக்கத்துல்ல நம்ம ஐஸ் (ஐசா அது.. சின்ன வயசு டிரஸ் போட்டுகிட்டு நிக்குது... யம்மாடி) அதுக்குப் பக்கத்துல்ல ஒரு கள்ளத் தனமான புன்னகையோட நம்ம இந்தியன் சூப்பர்மேன் கிரிஷ் புகழ் ஹிரித்திக் ரோஷன், அதுக்கும் பக்கத்துல்ல பிபாஷா ( இவங்க டிரஸ் போடுறதே பெரிய விஷயம் தான்.. ஆ....த்தாடி ஒரு பெரும்மூச்சு) அதுக்கும் பக்கத்துல்ல யாஷ் சோப்ரா (படத்தின் தயாரிப்பாளர்) குடுமபத்து வாரிசு உதய் சோப்ரா ஒரு காமெடி கலந்தச் சிரிப்போடு போஸ் கொடுக்கிறார்.

இந்தப் போஸ்ட்ரை வச்சு கதை என்னவா இருக்கும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்..கதைன்னு ஒண்ணு தேடினாலும் இந்தப் படத்தில் இல்லைங்கறது படம் பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல்லயே தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு.

படத்தை இப்படி தான்..... உக்காந்து.... யோசிச்சி எடுத்துருப்பாங்களோன்னு யோசிக்க வைச்சுட்டாங்கப்பா

அதாவது முதல்ல ஹிரித்திக்கின் அறிமுக காட்சி... அந்த ரயில் காட்சி பயங்கரப் பூச்சுற்றல் என்றாலும் ரசிக்கும் படி இருக்கிறது.. ஸ்டண்ட் மாஸ்டர் வாழ்த்துக்களை அள்ளிக் கொள்கிறார்.

அதுக்கு அடுத்து உதய் மற்றும் அபிஷேக் அறிமுகமாகும் காட்சி..உதய் பைக்ல்ல பறந்து வருவதும், தண்ணிக்குள் இருந்து வாட்டர் ஸ்கூட்டரில் அபிஷேக் வெளியே பறந்து அடியாட்கள் கூட்டத்தை போட்டுத் தள்ளும் அந்த லாஜிக் செம் காமிக்..(தமிழ்ல்ல இதைக் கண்டிப்பா அடுத்த பேரரசுவின் படத்தில் பார்க்கலாம்.. மகிழலாம்..)

ஆச்சு ரெண்டு நட்சத்திரங்களும் வந்தாச்சு படமும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் ஓடிருது இதுக்குள்ளே... இந்தக் கேப்பிலே தூம் மச்சாலே பாட்டுக்கு ஹிரித்திக் அட்டகாசமா ஆட்டம் போடுறார்.. நடனம் பாராட்டும் படி இருக்கிறது..

சரி.. அடுத்து இருக்கே மேட்டர் பி..பா..ஷா... அவங்க அறிமுகம் வளைவு நெளிவுகளின் விளக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.. ம்ஹும் இப்படி எல்லாம் ஒரு போலீஸ் இருந்தா எல்லா கிரிமினலும் அவங்க கஸ்டடிக்கு வர்றதுக்கு க்யூ கட்டி இல்ல நிப்பாங்க.. ஆனா பாவம் படத்துல்ல அவங்க கிரிமினல் பின்னாடி அலையறாங்க... கேமரா அவங்க பின்னாடியே அலையுது...கேமரா மேன் கொடுத்து வச்சவர் தானுங்க..

ம்ஹும்.. சோ அபிஷேக் வந்தாச்சு ஹ்ரித்திக் வந்தாச்சு, பிபாஷாவும் வந்தாச்சு.. அடுத்து என்ன?

யோசிக்க விடாமா ஆடுறாங்கப்பா பாடுறாங்கப்பா.. ஹிரித்திக் எல்லா லாஜிக்கையும் மீறி நம்ம கமல்ஹாசன் டைப்ல்ல மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு கன்னாபின்னான்னு கண்ட இடத்துல்ல திருடுறார்.. அவரை யாராலும் கண்டே பிடிக்க முடியல்ல... அபிஷேக்கும் பிபாஷாவும் ஜகஜால கில்லாடியான ஹிரித்திக்கைப் பிடிக்க என்னவெல்லாமோ திட்டம் போடுறாங்க...அப்படியும் அவரை பிடிக்க முடியாமல் கோட்டை விடுறாங்க...

அப்படிங்கும் போது நமக்கும் புரியுது.. அதாவது திருடன் போலீஸ் விளையாட்டுத் தான் இந்த தூம் 2 படமா எடுத்துருக்காங்கன்னு...அபிஷேக் புத்திசாலி போலீஸ் அப்படின்னா கூட வர்ற உதய் கொஞ்சம் நம்ம மன்மதன் சத்யன் டைப் தமாஸ் போலீஸ்...உதய் சோப்ரா நம்ம சத்யன் ரேஞ்சுக்கு நல்லாக் காமெடி பண்ணியிருக்கார்... அவர் அடிக்கிற நகைச்சுவை வசனங்களுக்கு சனங்க ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு..

கிட்டத் தட்ட இடைவேளை வரைக்கும் இப்படியே ஓட்டிட்டு போய் பிரேக் அடிக்கிறாங்க... இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னாடி ஐஸ் அம்மணி முக்காடு போட்டுகிட்டு திருடனுக்கு திருடியா அறிமுகமாகி ( ஆமாங்க ஐஸ் இதுல்ல அபிஷேக்கு ஆள் இல்ல) அரையும் கொரையும் நின்னு ஹ்ரித்திக்கைப் பார்த்து ஸ்டைலா U WANNA CHECK ME OUT ன்னு பீட்டராக் கேக்குது. சாரி ஐஸ் உங்க லெவலுக்கு கதை உள்ள படத்தை நம்புங்க...இப்படி சதை உள்ள படமெல்லாம் உங்களுக்கு நல்லா இல்லங்க.

இடைவேளைக்குப் பிறகு ஹிரித்திக்கும் ஐசும் ஒருத்தரை ஒருத்தர் நெருங்க... அபிஷேக் ஹிரித்திக்கை நெருங்க பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகிறார்...பலன் பூஜ்ஜியம்...

என்னங்க இந்த இடத்துல்ல விமர்சனம் படிக்கிற உங்களுக்கே கொஞ்சம் அலுப்புத் தட்டுதா? அப்படின்னா படம் பார்த்த எங்களுக்கு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.

சரி அப்படியே படம் பிரேசிலுக்கு நகர்கிறது யம்மாடியோவ் ரியோடி ஜெனிரோ என்ன அழகுப்பா.. பிரேசில் பீச் காட்சிகள் கிளுகிளுப்பு... பைக் சேஸிங் காட்சிகள் பரபரப்பு... கிளைமாக்ஸ் மலைச்சரிவு நீர்வீழ்ச்சி காட்சிகள் கண்களுக்கு ஜிலிஜிலிப்பு.

பிரேசலில் இன்னொரு பிபாஷா பாசு வருகிறார்... கேமரா அவரைக் கண்டபடியெல்லாம் அளவு எடுக்கிறது. அவரும் பிகினி எல்லாம் போட்டு கேமராவுக்கு நல்லாவே வேலைக் கொடுத்திருக்கிறார். கொடுத்த சம்பளத்திற்கு பிபாஷாவிடம் உள்ளதை உள்ளபடியே வாங்கியிருக்கிறார்கள்.பிரேசில் பிபாஷாவோடு உதய் ஆடுகிறார் பாடுகிறார்.

இதற்கிடையில் ஐஸ் அபிஷேக் செட் பண்ணி அனுப்பும் போலீஸ் இன்பார்மர் என ஒரு டூமில் வேறு.. ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையாகவே ஐஸ் ஹிரித்திக்கின் காதல் வலையில் விழ ஹிரித்திக் ஐஸின் உதட்டினை கவ்வி இழுக்கும் காட்சியில் (நம்ம சிம்பு அளவுக்கு இல்லங்க).. தியேட்டரில் எழுந்த அபிஷேக்பச்சா நீ கோயிந்தா கோயிந்தாடா குரல்கள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.

பிறகென்ன சேஸிங்... எதிர்பார்க்கும் திருப்பங்கள்.. போலீஸ் வெல்கிறது... ஆனால் திருடனும் தோற்கவில்லை.. ஐஸ் ஹிரித்திக் காதலும் கேப்பில் வெற்றி பெறுகிறது எனப் படம் முடிகிறது...

நமக்கும் வெற்றி அடைந்த ஒரு உணர்வு.. பின்னே இப்படி ஒரு படத்தை முழுசாப் பார்த்து நம்ம சகிப்புத் தன்மையை உலகத்துக்கே பதிவா வேற போட்டுக் காட்றோம் இல்ல.

முதல் பாகத்தின் இசை வெற்றி இதில் நிச்சயமாக இல்லை. அபிஷேக் நடிப்பில் அவ்வளவாய் துடிப்பு இல்லை. ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு ரோல் தேவையா தெரியவில்லை. திரைக்கதை என்ற விஷ்யம் மொத்ததில் இயக்குனரின் எண்ணத்தில் சுத்தமாக இல்லை.

சரி இவ்வளவு தடைக் கற்களையும் மீறி தூம் வெற்றி படமாக அமையுமானால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்

SLEEK AND STYLISH FILM MAKING என்ற நவீன திரைப்பட பார்மூலா மீது மக்கள் காட்டும் தற்காலிக மோகம், அற்புதமான வெளிநாட்டு படப்பிடிப்புக் காட்சிகள், ஓரளவுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் சாகசக் காட்சிகள்,ஹிரித்திக்கின் ஆர்பாட்டமில்லாத அசத்தலான பங்களிப்பு... வேற என்ன சதைப் பற்றுள்ள படங்கள் மீது இருக்கும் ஒரு வித ஆர்வம் அவ்வளவு தான்..

நான் என்ன நினைச்சேனா..ம்ம்ம் இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போய் ஒரு புதன் கிழமை சாயங்காலத்தைச் சாவடிச்சதுக்கு ஆபிஸ்ல்ல ஓரமா ஒரு பெஞ்சைப் போட்டு ஏத்தி நிக்க விட்டுருக்கலாம்ய்யா...

நெக்ஸ்ட் சினிமாத் தவிர்த்து வேற கச்சேரிக்கு முயற்சி பண்ணுறேண்ங்கன்னு சொல்லி இப்போ ஜூட் விட்டுக்குறேங்க...

22 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னடா ஹிந்தி படத்துக்கு விமர்சனம் எழுதினா என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்போ மாட்டிச்சய்யா இந்த வரி.

//அபிஷேக்பச்சா நீ கோயிந்தா//

சில சந்தேகங்கள்.

1) அபிஷேக்தானே ஐஸ் பின்னாடி சுத்துறாரு. அவருக்கு பையன் பொறந்து அதுக்கு கோவிந்தான்னு பேரு வெச்சாச்சா? அதை ஏன் சம்பந்தம் இல்லாமா இங்க சொல்லணும்? ஒரு வேளை அதுக்கு கஜினி மாதிரி எதாவது வியாதியா? அதான் இப்படி நீ கோவிந்தாடா அப்படின்னு சொல்லி ஞாபகப் படுத்தறாங்களா?

2) இல்லை அபிஷேக்கைத்தான் சொன்னாங்கன்னா, அவரை அமிதாப் பச்சான்னுதானே சொல்லணும்?

3) இல்லை அபிஷேக்கையே பச்சா அப்படின்னு சொன்னாங்கன்னா, அது போயி இந்த ஐஸ் பின்னாடி சுத்தலாமா? வயசு வித்தியாசம் ரொம்ப இருக்காதா?

விளக்கம் ப்ளீஸ்.

Sridhar V said...

அப்பப் படமும் கோயிந்தாவா? Rediff-ல இரண்டு வகையாகவும் விமர்சனம் செய்திருந்தார்கள். உங்களுடைய விமர்சனம் முதல் வகையை ஒத்து இருக்கிறது.

படம் எப்படி இருக்கிறதோ இல்லையோ உங்கள் விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது. நன்றி!

ஒத்தை வரியை வச்சிகிட்டு ஒன்பது கேள்விகள் கேட்கின்றார் கொத்தனார். பேசாமல் இந்த கேள்விகளை விக்கி(ப்) பசங்க பதிவுக்கு redirect செய்து விடுங்கள். :-)))

இராம்/Raam said...

போர்வாள்,

இந்த week-end போகலாமின்னு டிக்கெட் புக் பண்ணினோம்... அப்போ அது கோயிந்தாவா???

:-((((

Anonymous said...

nalla vela nan thappichen. this week i planned to go that movie. thanx for ur comments and u saved our money too :D rasigai

Divya said...

தேவ் படம் ரசிக்கும் படியா இல்லீன்னு உங்க விமர்சனம் பார்த்தா நல்லா புரியுது,
'\ம்ம்ம் இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போய் ஒரு புதன் கிழமை சாயங்காலத்தைச் சாவடிச்சதுக்கு ஆபிஸ்ல்ல ஓரமா ஒரு பெஞ்சைப் போட்டு ஏத்தி நிக்க விட்டுருக்கலாம்ய்யா...\"

இந்த வரிகளை ரசித்து ரசித்து சிரித்தேன்.

அரை பிளேடு said...

ஹி... ஹி... ஹிந்தி ஹிருத்திக் படம்னா இப்பிடித்தான் இருக்கும்

Unknown said...

தலைவா ஏன் இப்படி? ஒரு மனுஷன் படம் பார்த்து நொந்துப் போய அதை யார் கிட்டயாவது மனம் விட்டு சொல்லி அழலாம்ன்னு பதிவுப் போட வந்தா இப்படியா இழுத்து வச்சு கேள்வி கேட்டு லந்து பண்றது...

இந்தக் கேள்விக்குப் பதிலுக்கு நான் எங்கேப் போவேன்...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் @ கொத்ஸ்

Unknown said...

//ஒத்தை வரியை வச்சிகிட்டு ஒன்பது கேள்விகள் கேட்கின்றார் கொத்தனார். பேசாமல் இந்த கேள்விகளை விக்கி(ப்) பசங்க பதிவுக்கு redirect செய்து விடுங்கள். :-))) //


வெங்கட் நண்பரே அருமையான யோசனை.. தாங்க்யூ தாங்க்யூ...

தலைவா கொத்ஸ் உங்க கொஸ்ட்டீன் ரிட்டன் டு யு...!!

1) அபிஷேக்தானே ஐஸ் பின்னாடி சுத்துறாரு. அவருக்கு பையன் பொறந்து அதுக்கு கோவிந்தான்னு பேரு வெச்சாச்சா? அதை ஏன் சம்பந்தம் இல்லாமா இங்க சொல்லணும்? ஒரு வேளை அதுக்கு கஜினி மாதிரி எதாவது வியாதியா? அதான் இப்படி நீ கோவிந்தாடா அப்படின்னு சொல்லி ஞாபகப் படுத்தறாங்களா?

2) இல்லை அபிஷேக்கைத்தான் சொன்னாங்கன்னா, அவரை அமிதாப் பச்சான்னுதானே சொல்லணும்?

3) இல்லை அபிஷேக்கையே பச்சா அப்படின்னு சொன்னாங்கன்னா, அது போயி இந்த ஐஸ் பின்னாடி சுத்தலாமா? வயசு வித்தியாசம் ரொம்ப இருக்காதா?

விளக்கம் ப்ளீஸ்.

:))))

Unknown said...

//இந்த week-end போகலாமின்னு டிக்கெட் புக் பண்ணினோம்... அப்போ அது கோயிந்தாவா???//

ராம் தாராளமாப் போங்க... படத்துல்ல கதைய எதிர்பார்க்காமல் சும்மா ஜாலியா டைம் பாஸ் பண்ணிட்டு நடுவில்ல ஒரு குட்டித் தூக்கமும் போட்டுட்டு திருப்தியா வாங்க..

Unknown said...

//nalla vela nan thappichen. this week i planned to go that movie. thanx for ur comments and u saved our money too :D rasigai //

ம்ம்ம் தப்பிச்சிட்டிங்களா!!!!! :)))

Unknown said...

//இந்த வரிகளை ரசித்து ரசித்து சிரித்தேன். //

ஆகா,... நான் பெஞ்சுல்ல ஏறி நிக்கறதை நினைச்சு ரசிச்சு சிரிச்சீங்களாக்கும்.. குசும்புக்கு பேர் போன ஊர்காரங்களாச்சே சொல்லவா வேணும்

Unknown said...

//ஹி... ஹி... ஹிந்தி ஹிருத்திக் படம்னா இப்பிடித்தான் இருக்கும் //

தோ பாருங்கப்பா படத்துக்கு கஷ்ட்டப்பட்டு யோசிச்சு அரை பக்கத்துல்ல விமர்சன்ம் எழுதுன ஒருத்தர் அசால்ட்டா பெயர்ல்லயே விமர்சனம் பண்ணுறார். வாங்க அரை பிளேடு வருகைக்கு நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//தலைவா கொத்ஸ் உங்க கொஸ்ட்டீன் ரிட்டன் டு யு...!!//

நாங்க எங்களுக்குத் தெரியாத கேள்வி வந்த அது சம்பந்தப்பட்ட துறையில் சிறந்து விளங்குபவர்களிடம் கேட்டுச் சொல்வோம். அதன்படி, இந்த படத்தையும், அப்படி கூச்சல் போட்டதையும் நேரில் பார்த்தது நீங்கள்தான் எனவே, நீங்களே பதில் சொல்லவும். அதை விக்கி பசங்க சொல்வதாய் நாங்கள் போட்டுக் கொள்வோம்.

அதனால் - தம்பி தேவ் உங்க கொஸ்ட்டீன் ரிட்டன் டு யு...!! :-D

Anonymous said...

dev, enakku oru doubt. pidikaatha padathaye ipdi comment panni irukengale. so nalla padamna atha epdi comment pannuvenga? ithukagave seekrama oru nalla film varanum. :) rasigai

நிலா said...

//இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போய் ஒரு புதன் கிழமை சாயங்காலத்தைச் சாவடிச்சதுக்கு ஆபிஸ்ல்ல ஓரமா ஒரு பெஞ்சைப் போட்டு ஏத்தி நிக்க விட்டுருக்கலாம்ய்யா...//

:-))

ரவி said...

படம்(புகை) நல்லாருக்கு..இன்னும் ரெண்டு படம் போட்டா ( குறிப்பா ஐஸ் படம் மற்றும் பிபாசா பாசு) நல்லா இருந்து இருக்கும் என்று ஜொள்ளோடு தெரிவித்துக்கொள்கிறேன்..

Unknown said...

மறுபடியும் எனக்கேவா??? கொத்ஸ் இந்த மூணு கொஸ்ட்டீனையும் சாய்ஸ்ல்ல விட முடியாதா? எதாவது வழி இருக்காச் சொல்லுங்க? ஒரு இந்தி ப்டம் பார்த்து விமர்சனம் போட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்னடா சோதனை இது...யாராவது என்னிய காப்பாத்துங்கப்பா

Unknown said...

வாங்கம்மா ரசிகை சிகாமணி.. இதுக்கு முன்னாடி நான் எழுதுன விமர்சனம் எதுவுமே நீங்க படிச்சது இல்லையா.... இன்னிக்கு ஆளுக்காளு என்னிய ஓட்டுறாங்கப்பா...

Unknown said...

ஆகா நிலா நீங்களூமா? ம்ம் நான் பெஞ்சுல்ல நிக்குறது எல்லாருக்கும் தமாசா இருக்குப்போ

பிச்சைப்பாத்திரம் said...

Very humorous. Nice.

Unknown said...

வாங்க சுரேஷ் கண்ணன் நன்றி!!!

sugan said...

Sorry!..I couldnt relate to ur review..Bcos..I didnt see anything or anyone other than Hrithik..He..He..!
Namma Dhoom 2 post paarungha..pa
http://suganthis.blogspot.com/2006/12/dhoom-2.html

tamil10