Thursday, June 14, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 7

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

இனி....

உமா போய் நீண்ட நேரம் வரை காவேரி தனியாக அமர்ந்திருந்தாள்.. அவள் அறை ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ இளையராஜாவின் குரலில் காதல் ஓவியம் தேனாய் குழைந்து காற்று வழி தவழ்ந்து வந்து அவள் சிந்தை நுழைந்தது..
காதல்.. காதல்..காதல்.. காவேரியின் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் மோதிச் சிதறிய அந்த வார்த்தை அவளுக்கு தலை வலியைக் கொடுத்தது...

"ஒரு பொண்ணு... ஒரு பையன்.. காதல் மட்டும் தான் அந்த உறவுக்குப் பேரா.. என்ன உலகமடா இது ?"

யோசிக்க யோசிக்க அவள் தலைவலி அதிகரித்தது.. ம்ம்கூம்..தலையை பலமா ஆட்டிகிட்டு படுக்கையில் சாய்ந்தாள்..

இப்போ ஜன்னல் வழி பாடல் மாறியிருந்தது...கண்மணியே காதல் என்பது கற்பனையோ....கண் வரைந்த ஓவியமோ... இசை மெல்ல அவளைத் தாலாட்டியது.. பாடல் வரிகளில் கவனம் செலுத்த முயன்றாள்..காதல்..காதல்... என்ற வார்த்தை கொஞ்சம் அதிகப் படியா ஒலிக்க கண்மூடியவள்.. அவளையுமறியாமல் அதிர்ந்து எழுந்தாள்...முகம் துடைத்தாள்.. முத்து முத்தாய் வியர்வைப் பூக்கள் காவேரியின் முகத்தில் விடாது பூத்தன.. எழுந்துப் போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து மீண்டும் படுத்தாள்.. கண் மூடாது உருண்டு புரண்டாள்..

ஜன்னல் வழி பாடல் ராஜாவை விட்டு நகர்ந்து ரஹமானுக்கு மாறி இருந்தது.. நேற்று இல்லாத மாற்றம் என்னது.. என்று காவேரியை ச்சீண்டலாய் கேட்பபது போல் பாடியது..

காவேரி மிகவும் சிரமப்பட்டுக் கண் மூடினாள்..
அங்கு கனவினில் அவன் சிரித்தான்... காவேரியின் முகம் சிவக்க அவன் குறும்புப் பார்வைப் பார்த்தான்.. கண்களால் அவள் மனசுக்கு மொத்த உரிமைப் பேசினான்..

காவேரி வெட்கம் முழுசாய் தன்னை தின்ன அவனுக்கு அவன் கேட்பதை எல்லாம் கொடுக்க ஆயத்தம் ஆன அந்தப் பொழுதினில் அவள் கனவினைக் கலைக்க ஒரு குரல் ஒலித்தது...

கொஞ்சம் கோபமாய் கண்விழித்த காவேரிக்குத் தன் முன் எப்படி ஒரு கரடி வந்து நிற்கிறது என்று ஒரு குழப்பம் மிஞ்சியது...

மனித குரலில் பேசும் கரடி...

கண்ணைக் கசக்கினாள்..

சற்றே அந்த கரடியின் உருவம் பழக்கப்பட்டதாய் தோன்றியது...

இன்னும் கண்ணைத் தேய்த்துப் பார்த்தாள்..

கரடி உருவம் மெல்ல விலகி அங்கு உமாவின் உருவம் வந்தது.. கிராபிக்ஸ் காட்சி அது...

"உமா நீ எப்போ வந்தே? "

"அடி பாவி கரடியாக் கத்திகிட்டு இருக்கேன்.. (இதைக் கேட்டதும் காவேரி சுளுக்கெனச் சிரித்து விட்டாள். உமா எதுவும் புரியாமல் முழித்தாள்) பத்து நிமிசம்.. சரி ஒரு இருபது நிமிசம் நான் ரூம்ல்ல இல்லை அதுக்குள்ளே நான் என்னமோ அயர்லாந்துப் போயிட்டு வந்த மாதிரி அதிர்ச்சியாக் கேக்குற... கன்பர்ம்டீ.. நீ காதல்ல தான் இருக்க.. "

"பாம்பின் கால் பாம்பு அறியும்.. " அப்படின்னு உமா எக்ஸ்ட்ராவா முணுமுணுக்க.. காவேரி கொஞ்சம் தன் நிலை அடைந்தாள்.

"அது என்ன டயலாக் பாம்பு..கால்..அது இதுன்னு..."

"அது ஒண்ணுமில்ல..." உமாவின் முகத்தில் வெட்கம் லிட்டர் கணக்கில் வழிந்தது.. அசடு அதை விடவும் அதிகம் வழிந்து வெட்கத் தடங்களை அழித்தது தனி சோகம்.

"உமா..நீ யாரையாவது லவ் பண்ணுறீயா? "

"ம்" ஒற்றை எழுத்தைச் சொல்ல உமா முக்கி முனகினாள்...

"அதான் என்னை அந்தக் கேள்வி கேட்டியா...? "
காவேரி தோழியின் காதல் கதையினை விசாரிக்கும் ஆவலில் அடுத்து கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயுத்தமானாள்.

ஜன்னல் வழியே.. மீண்டும் இளையராஜாவின் இசை பாய்ந்து வந்தது..
என் மன்னவன் உன் காதலன் என்ற சிட்டுக்குருவி படத்துப் பாடல்...

"நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ உன் காதலைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேங்குற.. நான் மட்டும் சொல்லணுமா?"" என்றாள் உமா.

"அய்யோ உமா.. மறுபடியும் சொல்லுறேன்.. வசந்தும் நானும் நண்பர்கள்.. அவ்வளவு தான்.. நான் காதலிக்கறது வசந்த் இல்ல...." என்று நாக்கை மடித்தாள்.

உமா கொஞ்சம் உஷார் தான் ஆனாலும் காதல் வந்தால் எப்படி பட்ட் உஷார் பேர்வழியும் உலகம் இருட்டு என்று ஒரு திருட்டு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடும் போது பாவம் உமா மட்டும் என்ன செய்வாள்.. காவேரியின் வார்த்தைச் சிதறல் உமாவின் கவனம் பெறவில்லை..

"அப்படின்னா வசந்த்க்கும் உனக்கும் வெறும் ப்ரண்ட்ஷிப் தானா.. ப்ச் "என்று உதட்டைப் பிதுக்கினாள்.

அப்பாடா என பெருமூச்சு விட்ட காவேரி.. "நல்ல வேளை நம்ம கதையை இவ இன்னும் நோண்டாம விட்டாளே.. இவக் கிட்ட நம்ம கொசுவர்த்தியைச் சுத்த வேண்டிப் போயிருக்கும்"

"சரி, நாளைக்கு சனிக்கிழமை... நீ என் கூட சினிமாவுக்கு வர்றீயா...காதலன் அப்படின்னு ஒரு படம்.. நல்லா இருக்குதாம்.." உமா கேட்டாள்

"ம்ம்ம்ம்..விளையாடுறீயா... படிக்கணும் அசைன்மென்ட் இருக்கு முடிக்க.. இப்போ படம் ரொம்ப அவ்சியமா..?? " சீறினாள் காவேரி..

"சரி, நீ வந்தா என் ஆள் யார்ன்னு உனக்குக் காட்டுறேன்... வசந்தும் வர்றேன்னு சொல்லி இருக்கான்..ப்ளீஸ்" என்று உரிமையாய் உருகினாள் உமா.

காவேரி பலமாக யோசித்தாள்.. கடைசியாத் தியேட்டர் போய் என்னப் படம் பார்த்தோம் யோசித்துப் பார்த்தாள்.. ம்ஹூம் ஒன்றும் நினைவுக்கே வரவில்லை.. சரி ஒரு நாள் போலாமே.. உமாவின் உள்ளம் கவர் கள்வன் யாருன்னு பாக்கலாம்.. எல்லா வாரமும் படிக்கிறோம்.. ஒரு வாரம் கொஞ்சம் ஜாலியாத் தான் இருப்போமே.. காவேரி முடிவெடுத்தாள்..

"சரி வர்றேன்.. டிக்கெட் காசு எவ்வளவு ஆகும்?" என்று தயக்கமாய் கேட்டாள் காவேரி..

"லூசு.. டிக்கெட் எல்லாம் நான் பாத்துக்குறேன் நீ வர்றேன்னு சொன்னதே போதும்" சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் உமா...

ஜன்னல் பாடல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்று வெட்கம் சொல்லி குழைந்தது..

உமா வெளியில் போனாள். காவேரி கட்டிலில் சாய்ந்து கண் மூடினாள். மீண்டும் அவள் கனவினில் அவன் வந்து அவள் ஆசைகளூக்கு ஊஞ்சல் கட்டி அவளோடு விளையாடினான்.. விளையாட்டு கனவினை களிப்பாக்கியது.. காவேரி தூங்கிப்போனாள்.. முகம் முழுக்க சின்னதாய் ஒரு பூரிப்பு படர்ந்து கிடந்தது..

ஜன்னல் வழி மவுனம் எட்டிப்பார்த்தது.. மவுனம் கூட நல்ல இசை தான்.. ரசிக்கத் தான் தனி திறமை தேவைப்படுகிறது.

"ஏய் இந்த பச்சை சுடிதார் நல்லாயிருக்கா... ? "உமா அத்தோடு ஆறு தடவை உடை மாற்றி விட்டாள்.. அறுபது தடவை தலை வாரி விட்டாள்.. இன்னும் சில நூறு முறை அலங்காரம் சரிப்படுத்திக் கொண்டாள்..

"உமா.... நீ நேத்தே கிளம்ப ஆரம்பிச்சு இருக்கணும்.. அப்போக் கரேக்ட்டா இருந்து இருக்கும்..இன்னிக்கு கிளம்பி நாளைக்குத் தான் போவோம் போல இருக்கு..."

உமா அதற்கும் வழிந்தாள்...

"இல்லப்பா என் ஆளை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்கப் போறேன்.. அதான் கொஞ்சம் அழகாப் போய் அசத்தலாமேன்னு" அப்படின்னு இழுத்தாள்.

காவேரிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கடகடவெனச் சிரித்துவிட்டாள். உமா கொஞ்சம் நொந்துத் தான் போனாள்...

ஒரு வழியாக உமா சகல் அலங்காரங்களையும் முடித்து கிளம்ப இன்னுமொரு அரை மணி நேரம் ஆகியது. காவேரி வெள்ளையில் சிவப்பு பூப் போட்ட சுடிதாரும், சிவப்பு துப்பட்டா அது இருக்க வேண்டிய இடத்திலும் போட்டு, தூக்கி வாரியக் கூந்தலில் ஒரு சின்ன பட்டாம்பூச்சி கிளிப் அணிந்து அழகாய் இருந்தாள். உமாவின் அழகு விவரனை இங்கும் நமக்கு வேண்டாம்.. அவ அழகோ அழகுன்னு இருந்தான்னு சொல்லிக்குறேன்.

தியேட்டருக்குப் போகும் வழியில் வசந்த அவர்களைச் சந்தித்தான்.. பஜாஜ் கேலிபர் வண்டி ஒன்றை வைத்திருந்தான்..அதில் ஓ மை காட் என்று எழுதப் பட்ட வாசகம் வேறு...

மூவரும் சேர்ந்து உமாவின் காதலனுக்காகக் காத்திருக்க துவங்கினார்கள். வசந்து வழ்க்கம் போல் கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தான். உமா பேச்சில் சுவாரஸ்யமின்றி பாதையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது கையைக் குலுக்கி கடிகாரம் ஓடுதா என்றும் பார்த்துக் கொண்டாள்...

"ம்ம் லேட்டா வந்ததே இல்ல.. எதாவது பிரச்சனையோ!!!??" அப்படின்னு உமா கொஞ்சமாய் பதட்டம் வேறு அடைந்தாள்.

அந்த இடைப்பட்ட நேரத்தில்...

"ஹே ஒரு அஞ்சு நிமிசம் வந்துடுறேன்" என்று வசந்த் எங்கோக் கிளம்பினான்..

காவேரி ஒன்றும் செய்ய முடியாமல் கைக்கட்டி கண் மூடி யோசனையில் ஆழ்ந்தாள்.. கண்மூடினாலே இப்போவெல்லாம் காவேரிக்கு அவன் முகம் தானாய் திரை கட்டி தன் கண்ணுக்குள் ஓடுவதைத் தடைச் செய்ய முடிவதில்லை.. மீண்டும் அவன்...

எவ்வளவு நேரம் அவன் நினைவாய் நின்றாளோ அவளுக்கேத் தெரியாது..

கீங்ங்ங்ங் கீங்ங்ங்ங் பைக் ஹாரன் சத்தம் கேட்டு அதிர்ந்து கண் விழித்தவள்.. ஏறக்குறைய மூர்சையாகிப் போனாள் என்றே சொல்லலாம்.. இது கனவா..!!!?? இல்ல நனவா.....!!!???

தன்னையேக் கிள்ளிக் கொண்டாள்...

வசந்த் கையில் ஒற்றை ரோஜாவோடு நின்றான்.. பக்கத்தில் உமா கலகலவென சிரிப்போடு...

ஒரு கணம் திகைத்துப் போனாள் காவேரி... அவள் மொத்த உணர்வுகளும் ஸ்தம்பித்துப் போனது.. கண்களின் ஓரமாய் சிறு துளி கண்ணீர் அரும்பியது..

இருவருக்கும் இடையில் இருந்து இவள் விழிகளை நேருக்கு நேராய் சந்தித்தப் படி புத்தம் புது யமஹா வண்டியில் இருந்து இறங்கி நடந்து வந்தான் அவன்.....

வினோத்.... காவேரி தன் வாய் திறக்கும் முன் உமா குரலில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டது...

காவேரி. .இது வினோத்.. என் ஆளு.... காவேரி கண்களை வேகமாய் மூடி திறந்தாள்...

அந்த இடைவெளியில் அவள் பார்த்த வினோத்கள் மொத்தம் ரெண்டு..

அவள் கண்ணுக்குள் இருந்த வினோத்துக்கும் அவள் கண் முன்னால் நிற்கும் வினோத்துக்கும் எத்தனை வித்தியாசம்..

அவள் தடுமாறி நின்றாள்...வினோத்தைக் கண்டு அவள் தடுமாறி நின்ற அதே வினாடியில்

"காவேரி.. என் மொத்த வாழ்க்கையையும் உன்னோடு வாழ ஆசைப்படுறேன்... நான் உன்னைக் காதலிக்கிறேன் காவேரி" ஒற்றை ரோஜாவை காவேரியிடம் நீட்டினான் வசந்த்...


___________________________________________________________________

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்து வரும் (வந்த) ஞாபகங்களை நம்மோடு பகிரந்துக் கொள்ள நட்பில் சிறந்த அருமை நண்பர் ஜி,ரா.வை அன்போடு அழைக்கிறேன்;-)

14 comments:

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

முதல் ஆளா நான் கைதட்டுறேன்!

மீ ஃபர்ஸ்ட்!

CVR said...

அப்போ
காவேரி வினோத்தை காதலிக்கறாங்க, வினோத் உமாவை காதலிக்கறாரு(அவரு முன்ன்மே காவேரியை காதலிச்சவரு),வசந்த் காவேரியை காதலிக்கிறாரு
சரியா??

ஒரே பகுதியில இதை பலமுனை காதல் கதை ஆக்கிட்டீங்களே தலைவா!!
வசந்த் நட்பை பற்றி இவ்வளவு பேசிட்டு இப்படி உடனே "ஐ லவ் யூ" சொல்லுறது ஒத்துக்கறதுக்கு கஷ்டமா இருக்கு தலைவா!! :-)

CVR said...

அடுத்தது ஜிராவா???
சூப்பர்!!! :-D

G.Ragavan said...

நானா...நானா...நானா...அடுத்து நானா எழுதனும். சரி. எழுதுறேன்.

இதுவரைக்கும் எழுதனதெல்லாம் படிச்சுப் பாத்தேன். எத்தனை பேரு. சிந்தாநதி, வெட்டிப்பயல், சி.வி.ஆர், ஜி, இம்சை அரசி, ராம்...அடுத்து நீங்க..இப்பிடிப் பெரியவங்களா எழுதீருக்கீங்க. இவங்களையெல்லாம் கோர்த்து எப்படி எழுதப் போறேன்னு தெரியலை. குரங்கு கைப் பூமாலையா கரடி கைத் தேனடையான்னு பதிவு போட்டப்புறந்தான் தெரியும்.

G.Ragavan said...

// CVR said...
அடுத்தது ஜிராவா???
சூப்பர்!!! :-D //

என்னது இது! No expectations please.

Boston Bala said...

ஜிரா பதிவு வந்துடுச்சா?

(இது வரைக்கும் வந்த கதையை முன்கதை சுருக் செஞ்சு போடுங்களேன் :D)

G.Ragavan said...

// Boston Bala said...
ஜிரா பதிவு வந்துடுச்சா?

(இது வரைக்கும் வந்த கதையை முன்கதை சுருக் செஞ்சு போடுங்களேன் :D) //

வந்திருச்சு பாபா...
http://gragavan.blogspot.com/2007/06/8.html

நீங்க கேட்ட மாதிரி...முன்கதைச் சுருக்கத்தை உண்மையாவே சுருக்கமா குடுத்திருக்கேன்.

தேவ் | Dev said...

சிபி முதல் கைத்தட்டலுக்கு மிக்க நன்றி... முதல் விசிலும் அடிச்சிருந்தீங்கன்னா நல்லா இருந்துருக்கும்.. பட் இட்ஸ் ஓ.கே

தேவ் | Dev said...

சிவிஆர்.. கதையில் இது ஒரு திருப்பம் மட்டுமே...

இப்போ வந்த ஒரு திரைப்பட பாடல் தான் நினைவுக்கு வருது...

நட்பாச்சே லவ் இல்லையே.. லவ்வாச்சே நட்பு இல்லையே.....

காதலும் நட்பும் அருகருகே இருக்க முடியாதா? இருக்கக் கூடாதா? ஜி.ரா தொடருவார்

தேவ் | Dev said...

பாலாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய நண்பர் ஜிராவிற்கு என் நன்றிகள்

தேவ் | Dev said...

இந்த சங்கிலித் தொடர் ஒரு நல்ல முயற்சி... இந்த முயற்சியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த தம்பி ராமுக்கு என் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

நான் கதையைக் கொண்டு சென்ற விதம் குறித்து ராமுக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது.. நண்பர் சிவிஆரும் அதே பாணியில் தன் கருத்தைக் கூறியுள்ளார்..

நான் என்னச் சொல்லுறேன்னா.. கதையில் ஒரு திருப்பம் அவசியம் கொஞ்சமாவது ஒரு ஜெர்க் கொடுத்தால் தான் படிக்கவும் சுவாரஸ்யம்.. அடுத்து எழுத வரும் பதிவருக்கும் சவால்... ஜிராவுக்கு இது எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி மேட்டர் தான்.. இருந்தாலும் என்னால் முடிந்த ஜெர்க்... அவ்வளவு தான்..

தனசேகர் said...

கதையில் திடீர்னு இருமுனை திருப்பங்கள் ....

வாழ்த்துக்கள் தேவ் ;)

உய்ய்ய்ய்ய்ய்ய்... ;)

உங்களுக்கு நான் விசில் அடிக்கிறேன் ;)

தேவ் | Dev said...

நன்றி தனசேகர், விசில் எல்லாம் போட்டு அய்யோ ரொம்ப பீல் பண்ணுறீங்களே... :))

kolakka@technorati.com said...

எல்லாப் பகுதிகளையும் ஒன்றாக இன்றுதான் படித்தேன். கூட்டு முயற்சி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

கோலக்கா

tamil10