Monday, June 25, 2007

ஆபிஸர் கவிஞர் ஆகிறார்

வணக்கம் மக்கா...

கொஞ்ச நாளா நம்ம ஆபிசரைப் பத்தி நான் எதுவும் பேசல்லயேன்னு ஊருக்குள்ளே ஆபிசர் ரசிகர்கள் கிட்ட இருந்து மெயிலாக் குவிஞ்சுப் போச்சு...

இப்போ எல்லாம் நம்ம ஆபிசர் ரொம்ப அமைதியாயிட்டார்.. அடிக்கடி மோவாயைத் தடவிகிட்டு விட்டத்தைப் பார்க்கிறார்..போன வாரம் உக்காரருற சீட்டுக்கு மேலே தெர்மாக்கோல்ல செஞ்ச நிலா ஒண்ணைக் கட்டி தொங்கவிட்டிருக்கார்...அந்த நிலாவைச் சாய்ஞ்சிட்டேப் பாக்குரதும..சைட்ல்ல பாக்குரது...மல்லாக்கப் படுத்துட்டேப் பாக்குறதுன்னு ஒரே ரவுசு..அப்புறம் தமிழ்ல்ல கவிதைப் போடறவங்களை எல்லாம் தேடி தேடிப் படிக்க ஆரம்பிச்சதல்ல.. அவர் மானிட்டர்ல்ல தமிழ் மணம் வீச ஆரம்பிச்சுருச்சு...ஆமாய்யா ஆபிசர் நெட்ல்ல கவிதைப் பதிவாப் படிக்க ஆரம்பிச்சாட்டாரு

ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிப் பெருக்கி வகுத்து ஆபிசர் கவிதைப் படிக்குறதை அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மட்டும் பாத்துருந்தார்ன்னா அவருக்கு கண்ணுல்ல வெந்நீயே வந்துறும்..ஆபிசரின் இந்த 'திடீர்' கவிதைத் தாகத்துக்குக் காரணம் ஆபிஸ்ல்ல ஒருத்தருக்கும் புரியாமப் பெரும் கலவரமாப் போயிருச்சு

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாங்க எல்லாரும் பருத்திவீரனை என்ன ஏதுன்னு விசாரிக்க அனுப்புனோம்..

"சித்தப்பூ , நல்லாத் தானே இருந்த.. ஆன் சைட்க்கு ஆடப் போலாம் வாய்யான்னு சொன்னா..ஆலிவுட் ஹிரோ ரேஞ்சுக்கு ஆட்டயக் கிளப்புவன்னு பார்த்தா.. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுன்னு தாடி வளத்துருவே போலிருக்கு..."

"தம்பி.. நீ சின்னப் பைய அப்படி தள்ளி நில்லு. நான் சிந்திக்கும் போது சீண்டிப் பாக்காதே.. சொல்லிட்டேன்..ஆமா"

"யோய் சித்தப்பு சும்மா சீனைப் போடாதய்யா.. எங்கே இப்போ நான் சொன்ன அகர முதல் எழுத்து.. வரிக்கு விளக்கம் சொல்லு பாப்போம்..."

"டேய் சின்னப் பையலே.. நான் கவிதையைப் பத்திச் சிந்திச்சிட்டு இருக்கேன். நீ கவனம் சிதறுர மாதிரி சில்மிசம் பண்ணாதே மறுபடியும் சொல்லிட்டேன்.."

"யோவ் சித்தப்பு, நாங்களும் திருவள்ளுவர் சொன்னதைத் தானேச் சொன்னோம்.. நீ எந்த அளவுக்குக் கவிஞர்ன்னு தெரிஞ்சுக்குவோம்ல்ல...சொல்லுய்யா" பருத்தி வீரனும் விடவில்லை.

"இங்கேப் பார்றா.. கேக்குறான் கேனப்பைய... திருவள்ளுவர் எங்கேடா கவிதை எழுதுனார்.. அவர் காலத்துல்ல கவிதையே கிடையாதுரா தம்பி.. போ போய் கோட்ல்ல கொட்டிக் கிடக்குற பூச்சியை மருந்தடிச்சுக் கொல்லு..." சும்மாத் தெனவெட்டாச் சொல்லிவிட்டு காலைத் தூக்கி டேபிள் மேல வச்சுகிட்டு சிந்திக்க ஆரம்பித்தார் ஆபிசர்.

"சித்தப்பு.. நெசமாலுமே கொலையாகிப் போயிரும்... திருவள்ளுவர் அப்புறம் என்ன எழுதுனார்.. அதையாவது சொல்லு..." பருத்தி வீரனும் கொடாகொண்டான் ஆச்சே.. நடக்கிறதை எல்லாம் நகராம நாங்களும் பாத்துகிட்டு இருந்தோம்.

"தம்பி.. தவம் மாதிரி இருக்கேன்..தகராறு ஆயி போயிரும் சொல்லிட்டேன்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நான் நாலு கொயர் நோட்டு நிறைய கவிதை எழுதியாகணும்... சரி.. திருவள்ளுவர் கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டா சிந்தாமச் சிதறாம சீட்டுக்குப் போய் சின்சியரா வேலைப் பாப்பீயா சொல்லு பதிலைச் சொல்லுரேன்.." ஆபிசர் லைட்டா இறங்கி சமரசத்துக்குத் தயார்ங்கற மாதிரி சொன்னார்.

'ம்ம்ம்' என்றான் பருத்திவீரன்.. எல்லாரும் ஆபிசரின் அந்தப் பதிலுக்காகக் காதைத் தீட்டிக் கவனமானோம்..

"நல்லாக் கேளு.. திருவள்ளுவர் காலத்துல்ல கவிஜை எல்லாம் கிடையாது... அவர் எழுதுனதுக்கு பேர் செய்யுள்.. பாடப் பொஸ்தகத்துல்ல படிச்சிருப்ப.. இப்போ ரொம்பக் கேப் விழுந்ததாலே மறந்துப் போயிருக்கும்.. பரவாயில்ல.. கவிதைக்கும் செய்யுளுக்கும் வித்தியாசம் தெரியாம வளந்துருக்கடா நீ.. ரொம்ப அப்பாவி புள்ளயா இருக்கடா நீயு.. என்னத்தச் சொல்ல இந்தக் காலத்துல்ல வீட்டுல்ல பிள்ளைகளுக்கு யார் தமிழ் சொல்லிக் கொடுத்து வளக்குறாங்க"

கொலவெறியில் மானிட்டர் எடுத்து மண்டையில் அடிக்கப் போன பருத்திவீரன நாங்கப் பத்து பேர் பாஞ்சுப் பிடித்து அவன் சீட்டுல்ல உக்கார வைக்க பயங்கரப் பாடுபட்டுட்டோம்..
ஆனா இது எதையுமே கண்டுக்காம.. ஆபிசர் திரும்பவும் விட்டத்தையும் நிலாவையும் பாத்துட்டு இருந்தார்..பருத்திவீரனுக்கு வெறி அடங்கவே இல்லை...ஒரு வழியா தன்னைத் தானே அடக்கிட்ட பருத்திவீரன்...

"என்னை விடுங்கப்பா.. அந்த ஆளை எதுவும் செய்ய மாட்டேன்.. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு வந்து என் வேலையைப் பாக்குறேன்"னு எழுந்துப் போனான்...

அது என்னக் கேள்வியோன்னு எதுக்கும் உஷாரா இருப்போம்ன்னு நாங்களும் நாலுப் பக்கமும் தயார நின்னுக்கிட்டோம்.பருத்தி வீரன் ஆபிசர் பக்கமாய் போய் கிட்டத்தட்ட கண்ணுல்ல கண்ணீர் பொங்க...உள்ளுக்குள்ளே நாங்க எல்லாரும் ஒரு வாரமாக் கேக்க நினைச்சு அடக்கி வச்சிருந்தக் கேள்வியை உணர்ச்சிப் பொங்கக் கேட்டான்..

அந்தக் கேள்வி "என்னக் கொடுமை இது ஆபிசர்?" சும்மா மொத்த ஆபிசும் அந்தக் கேள்வியக் கேட்டு அதிர்ந்துச்சு இல்ல..

அன்னிக்கு சாய்ங்காலம் சுமார் ஓன்பது மணிக்கு நம்ம ஆபிசரின் கவிதை அறிவினை வளர்க்க அ வில் ஆரம்பித்து கோவில் முடியும் ஒரு பிரபல இணையக் கவிஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான் பருத்திவீரன்...

"கவிஞரே பெருசா எல்லாம் வேணாம் ஒரு மூணு நாலு வரி கவிதை எழுதற அளவுக்குத் தேத்தி விட்டுருங்கப் போதும்" அப்படின்னு பருத்தி வீரன் பலமாய் சிபாரிசு பண்ணான்.

தொண்டையைச் செருமிய கவிஞர்..

"நண்பரே...கவிதை எளிது...சொல்கிறேன் கேளுங்கள்
கடல் தொடு...வான் தேடு..மழையில் நனை..புல்லில் படு..பூவை பாடு...
ஆம் இயற்கையை ரசி..இதயத்தில் கவிதை இறக்கை கட்டும்"

'ம்க்கும்.. நீங்கச் சொல்லுற எதுவும் நம்ம சித்தப்புவுக்கு செட் ஆகாது.. முந்தாநாள் மழையிலே மெரீனால்ல கடலையே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டே ரொம்ப நேராமா நின்னுருககார்.. கவிதை வர்றல்ல.. போலீஸ் தான் வந்துச்சு வந்து சித்தப்புவைச் சந்தேகக் கேசுல்ல அள்ளிகிட்டு ஈ - 1 ஸ்டேஷனுக்குக் கொண்டுப் போயியிருச்சு.. விடியற வரைக்கும் வெளியே விடல்லயே..."

கேப் விட்டு பருத்தி வீரன் தொடர்ந்தான்.

"வானம் பாக்குறேன்னு.. வாயைப் பொளந்து வானம் பார்த்ததுல்ல.. குருவியிலந்து... பருந்து வரைக்கும்...
வேணாம் அப்படின்னு பருத்தி வீரன் வாயைப் பொத்தினார் ஆபிசர்... சித்தப்புவின் மானம் நாணம் கோணம் கருதி அத்தோடு நிறுத்திக் கொண்டான் வீரன்.

கவிஞருக்கே கொஞ்சம் சவாலாகிப் போனது...வேற மாதிரி ஆரம்பிப்போம்ன்னு யோசிச்சவர் ஆபிசரைப் பார்த்தார்.. ஆபிசர் பவ்யமா கை எல்லாம் கட்டிகிட்டு அஞ்சாப்பு படிக்கிற பைய மாதிரி சின்சியாராப் பாடம் கேட்க தயாரானார்.

"நண்பரே.. நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?"

"எனக்கும் காதலிக்கணும்ன்னு ஆசை தாங்க.. பொண்டாட்டி புள்ளன்னு ஆனப் பொறவு.. அதுக்கெல்லாம் நேரமில்லங்க.. அதுல்லயும் என் பொண்டாட்டியை வச்சுட்டு நான் யாரையும் சைட் அடிச்சாலே அவளுக்கு ஆவுறதுல்ல.. இதுல்ல காதல் எல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம் தான்" படு சீரியசாய் பதில் சொன்னார் ஆபிசர்..

கவிஞர் குடித்தக் கோக் குப்பென்று அவருக்குப் பொறை ஏறியது.. பருத்திவீரனை பரிதாபமாய் பார்க்க.. பருத்தி KINDLY ADJUST என்பதாய் பதிலுக்குப் பார்த்தான்..

ஸ்ப்பப்ப்பா என்ற கவிஞர்.. நிதானமாய் நம்ம ஆபிசர் தோளில் கைப்போட்டு... உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு வர போற மனைவி பத்தி ஒருவித எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்.. அந்த எதிர்பார்ப்பு அந்த உணர்வு தான் காதல்.. காதல் கவிதை... கவிதை காதல் எனச் சொல்ல..வேலியில் விழுந்த வெள்ளாட்டுக் குட்டியாய் ஆபிசர் முழிக்க.. கவிஞர் கொஞ்சம் இறங்கி வந்தார்..

"நண்பரே.. திருமணத்திற்கு முன் வரப் போகும் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பாத்தீங்க?" அப்படின்னு தோள் தொட்டுக் கேக்க.. ஆபிசர் முகம் குஷியானது.. வாயெல்லாம் சிரிப்புப் பொங்கச் சொன்னார்...

"அதுங்க கவிஞரே.. அதிகமா எல்லாம் எதிர்பார்க்கல்ல ஒரு 25 பவுன்... அப்புறம் 50 ஆயிரம் ரொக்கம்.. இது வீட்டுல்ல. நான் எதிர்பாத்தது ஒரே ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்.. அதைத் தரமா என் மாமனார் ஏமாத்திட்டாருங்க... பழையப் பீலிங்க்ஸ் எல்லாம் கிளப்பிட்டீங்கன்னு சிரிப்பு மறைந்து லேசா விசனப் பட ஆரம்பித்தார் ஆபிசர்.

கவிஞர் கன்னாப்பின்னாவெனக் கலங்கிப் போனார் என்பதைச் சொல்லத் தான் வேணுமா என்ன?

பருத்திவீரன் கவிஞரின் மனவலிமையை அதிகப்படுத்த பார்வையாலே முயன்றான்.. கவிஞரும் கஷ்ட்டப்பட்டு மனவலிமையைச் சேர்த்துக் கொண்டு ஆபிசரைப் பாரத்துக் கேட்டார்..

'இது வரைக்கும் நீங்க எதாவது கவிதை எழுதியிருக்கீங்களா?'

'ஓ' என்று தலையை ஆட்டிய நம் ஆபிசர், தன்னுடைய லேப் டாப்பைத் திறந்தார்...
கவிஞரோடு பருத்திவீரனும் ஆர்வம் ஆனான்...அந்தப் பக்கத்தைத் திறந்தார்...அதுல்ல்த் தெரிஞ்சது ஒரே வார்த்தை....

கொட்டை எழுத்துல்ல கவிதை அப்படின்னு ஒரே வார்த்தை

'இப்போத் தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.. முதல் வார்த்தை வந்த வேகத்துல்ல அடுத்த வார்த்தை வரல்ல..காத்துக் கிடந்தேன்..ஒரு கட்டத்துல்ல ஒரு வேளை நமக்கு கவிதையே வராதோன்னு எனக்கே எம் மேல சந்தேகம் வந்த சிச்சுவேஷ்ன்ல்ல நம்ம கவிப்பேரரசு வைரமுத்து பாட்டு ஒண்ணு கேட்டேன்.. அப்போத் தான் நான் ஒரு கவிஞர்ன்னு எனக்கே கன்பர்ம் ஆச்சு..'

ஆபிசர் பேச பேச, நம் கவிஞர் கரண்ட் கம்பியைக் கடவாய் பல்லுக்குள்ள எடுத்து வச்ச மாதிரி அதிர்ச்சியில் உறைந்துப் போனார்..

'சித்தப்பு.. நீ கவிஞர்ன்னு எப்படி சித்தப்பு உனக்கே கன்பர்ம் ஆச்சுன்னு' பருத்திவீரன் பரம பவ்யமாக் கேக்க...

"இந்தா இந்தப் பாட்டை நீயும் கேளு.. நீங்களும் கேளுங்க...' கவிஞர் பக்கமும் ஐ பாட்டை நீட்டினார் ஆபிசர்... பாட்டில் ஓடிய வரிகள்....
" வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா... "அந்த வரி அப்படியே ரிப்பீட்டில் ஓட... கவிஞர் எகிறி அப்பீட்டானார்....

பி.கு: வர்ற ஜுலை 10 ஆபிசருக்குப் பத்தாவது கல்யாண நாளாம் அதுக்கு அவர் வீட்டம்மாவுக்கு கவிதை ஒண்ணு எழுதித் தருவதாய் ஒரு மப்பானப் பொழுதில் வாக்குக் கொடுத்துருக்கார் ஆபிசர்... அந்த அம்மாவும் அதை நம்பி நாலுப் பேத்துக்கு எங்க வூட்டுகாரரு வெறும் பொட்டி மட்டும் இல்ல கவிதை எல்லாம் சும்மா அப்படித் தட்டுவாரு தெரியும்ல்லன்னு சொல்லி இவரை உசுப்பிவிட்டிருக்காய்ங்க... வர்ற ஜூலை 10 வீட்டம்மா தோழிகள் எல்லாரும் கவிதைக் கேக்க வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்களாம்...

இந்தா ஆபிசர் ஆகாயம் பாக்க ஆரம்பிச்சுட்டார்ப்பா..... ஒரு ஆபிசர் கவிஞர் ஆகிறார்.... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

18 comments:

வெங்கட்ராமன் said...

ஆபிசரைப் பத்தின பதிவு கண்ணா பின்னான்னு சிரிக்க வைக்குது. . . . . .

இலவசக்கொத்தனார் said...

வேணுமுன்னா சங்கத்தில் நாம எழுதிக் குடுத்த கவுஜ ஒண்ண எடுத்து ஐயாம் தி ரிப்பீட் பண்ணிக்கச் சொல்லுங்க. :)

நாமக்கல் சிபி said...

அட்வான்ஸ் வெட்டிங்க் டே வாழ்த்துக்கள் தேவ்!

நாகை சிவா said...

//நல்லாக் கேளு.. திருவள்ளுவர் காலத்துல்ல கவிஜை எல்லாம் கிடையாது... அவர் எழுதுனதுக்கு பேர் செய்யுள்.. //

அதானே.... என்ன தெளிவா சந்திக்குறான்ய்யா நம்ம ஆபிசரு.....

கவுஜுக்கு செய்யுளுக்கு எம்புட்டு வித்தியாசம் இருக்கு... இது தெரியாம வந்துட்டாங்க....

நாகை சிவா said...

//அ வில் ஆரம்பித்து கோவில் முடியும் ஒரு பிரபல இணையக் கவிஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான் பருத்திவீரன்...//

அட பாவிகளா.... உங்க அக்கப்போருக்கு அருட்பெருங்கோ பழி வாங்கிட்டிங்களே...

என்ன கொடுமை இது....

நாமக்கல் சிபி said...

//எலேய் சிப்பிகிட்டா தன்னியா பேச்சு//

சிவா! அது அருட்பெருங்கோ இல்லை!

அல்டிமேட் கவுஜர்ஸ் & கோ.

கம்பெனி பேரு!

Ravishankar (a) பருத்திவீரன ;) whats up dev said...

Hope you will make a good translation in English, for this blog entry. I am coming to office tommorrow..

Who's officer by the way!! :)

நாகை சிவா said...

////எலேய் சிப்பிகிட்டா தன்னியா பேச்சு//

சிவா! அது அருட்பெருங்கோ இல்லை!

அல்டிமேட் கவுஜர்ஸ் & கோ.

கம்பெனி பேரு! //

இதுக்குனு தனியா கம்பெனி எல்லாம் வேற வச்சு நடத்துறீங்களா.. விளங்குமடா சாமி...

தேவ் | Dev said...

//ஆபிசரைப் பத்தின பதிவு கண்ணா பின்னான்னு சிரிக்க வைக்குது. . . . . .//

வாங்க வெங்கட்ராமன் ஆபிசருக்கு வேலையே சிரிக்க வைக்குறது தான்.. இன்னும் மிச்சம் மீதி இருக்க ஆபிசர் கதைகளையும் பாருங்க உங்களுக்குத் தெரியும்

தேவ் | Dev said...

//வேணுமுன்னா சங்கத்தில் நாம எழுதிக் குடுத்த கவுஜ ஒண்ண எடுத்து ஐயாம் தி ரிப்பீட் பண்ணிக்கச் சொல்லுங்க. :) //

ஆல் ரெடி ஐடியாக் கொடுத்துப் பார்த்தாச்சி கொத்ஸ் கேக்க மாட்டேன்ங்கறார்.. ஒன்லி சொந்தக் கவிதைன்னு ஒத்த கையால கீ போர்ர்ட் த்ட்டி சபதம் போடுறார். WHAT TO DO

தேவ் | Dev said...

//அட்வான்ஸ் வெட்டிங்க் டே வாழ்த்துக்கள் தேவ்! //


ஆபிசருக்குத் தானே.. நீங்க சொன்னதாச் சொல்லி கண்டிப்பாச் சொல்லிடுறேன்... உங்க கிட்டக் கூட கவிதை ட்ரெயினிங் எடுக்க வந்தாலும் வருவார் ரெடியா இருங்க...

தேவ் | Dev said...

//அதானே.... என்ன தெளிவா சந்திக்குறான்ய்யா நம்ம ஆபிசரு.....

கவுஜுக்கு செய்யுளுக்கு எம்புட்டு வித்தியாசம் இருக்கு... இது தெரியாம //

அவர் ஆபிசர் அய்யா ஆபிசர்.. அவரோட பலமே அவரோட சிந்தனைத் தான்ய்யா

தேவ் | Dev said...

//அட பாவிகளா.... உங்க அக்கப்போருக்கு அருட்பெருங்கோ பழி வாங்கிட்டிங்களே...

என்ன கொடுமை இது.... //

அடப் பாவி சிவா உன் அக்கப்போருக்கு ஏன்ப்பா அருட்பெருங்கோவை ஆபிசரோடக் கோர்த்து விடுற அவர் என்னய்யா பாவம் பண்ணாரு?

தேவ் | Dev said...

//சிவா! அது அருட்பெருங்கோ இல்லை!

அல்டிமேட் கவுஜர்ஸ் & கோ.

கம்பெனி பேரு! //

தள இன்னும் நல்லா தலையிலேத் தட்டிச்சொல்லுங்க தள

தேவ் | Dev said...

//Hope you will make a good translation in English, for this blog entry. I am coming to office tommorrow..

Who's officer by the way!! :) //

Officer is 'our' officer ravi shankar (a) paruthi veeraa

தேவ் | Dev said...

//இதுக்குனு தனியா கம்பெனி எல்லாம் வேற வச்சு நடத்துறீங்களா.. விளங்குமடா சாமி... //

கவிதைக்கு தனி கழகமே ஆரம்பிக்கணும் எதோ போதாதக் காலம் கம்பெனியோட நிறுத்திக்குறோம்.

அருட்பெருங்கோ said...

தல,

என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே? :)))

முன்னாடியே சொல்லிக்கிறேன்...திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10