Friday, July 20, 2007

தலைவி த்ரிஷாவும் டாக்டர் ஷில்பா ஷெட்டியும்

சினிமா நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைக்கறவன் எல்லாம் முட்டாள்ன்னு ஒரு படிச்ச அரசியல்வாதி பாவம் பிலீங் விடுறார்.. அந்த பிலீங்கின் பிளிடீங் நிக்கறதுக்குள்ளே.. அடுத்தப் பிலீங்க்கு அவரை ரெடி ஆக்கிருவாங்கப் போல இருக்கு நம்ம தங்கத் தமிழ் மகளிர்... ஆமா மகளிரேத் தான்...

இந்த போஸ்ட்டர் அடிக்கறது.. பால் ஊத்துறது... ஊல்ல்லால்லலா அப்படின்னு ஊளையிடுறது.. விசிலைப் போடுறது.. தியேட்டர்ல்ல டிஜிட்டல் பேனர் வைக்கிறது அப்படின்னு ரிலீஸ்க்கு அலம்பல் சலம்பல் சவுண்ட் கிளப்பிகிட்டு இருப்பது வெறும் ஆண் ரசிகர்கள் மட்டும் தான்...ஏன்னா அவங்க அப்படித் தான்.... இது மாதிரி ஏசி ரூம்ல்ல உக்காந்து பொட்டித் தட்டுற அக்காங்க (( கூட வேலைப் பாக்கறவங்களைச் சொல்லுறேன்ப்பா)) நிறைய பேர் அசால்ட்டா கமெண்ட் விடுவது வாடிக்கையான விசயம் தான்.. நாமளும் அதுக்கெல்லாம் எதிர் சவுண்ட் விட முடியாது.. காரணம் அவங்க சொல்லுறதுல்ல ஒரளவுக்கு உண்மை இருந்தது தான்..

இன்னிக்கு எதுக்கு இந்த மேட்டர்ன்னு பாக்குறீங்களா?

காலையிலே ஆபிஸ்க்கு வர்ற வழியிலே அடையார் ஏரியாவில்ல சும்மா பெரிய சைஸ்ல்ல போஸ்ட்டர் எல்லாம் ஜொலிக்குதுப்பா...

எங்கள் தலைவி த்ரிஷா நடித்து வெளிவரும் கிரீடம் படம் பவழ விழா காண வாழ்த்துகிறோம் - த்ரிஷா பவுண்டேஷன்தலைவி(!!!???) அதுல்ல சும்மா குழந்தைகளோடப் போஸ்... பச்சைக் குழந்தையைக் கையிலே வச்சுக்குன்னு போஸ்ன்னு பின்னுறாங்க...

கிரீடம் படத்துல்ல தலைவி கூட நடிக்கிற தல (அஜீத்)க்கு கூட அவ்வளவு போஸ்ட்டர் பந்தா எதையும் காணும்..என் கண்ணுல்ல படல்லயா இல்ல ஆண் ரசிகர்கள் எல்லாம் அய்யா திட்டுனதைக் கேட்டுத் திருந்துட்டீங்களா

எப்படியோ இதுல்லயும் போட்டிக்குப் பெண்கள் வந்திருப்பது எனக்கு ஆறுதலா இருக்கு... எந்தப் பொட்டித் தட்டுற் அக்காவாது நாக்கு மேல பல் படாம லந்தா நக்கல் விட்டா ...

COME THE HERE LOOK THE THERE அப்படின்னு அவங்க கூத்தையும் கொஞ்சம் காட்டி வாயைக் கட்டலாம் இல்ல..

போற போக்கைப் பார்த்த நம்ம நண்பன் ஒருத்தன் சொல்லுற மாதிரி 2020ல்ல தமிழ்நாட்டுல்ல த்ரிஷா அமைஞ்சாலும் அமைஞ்சிருமோ...இல்ல அட்லீஸ்ட் த்ரிஷா அமைப்போம்ன்னு குரலாவது ஒலிக்கும்ன்னு நினைக்கிறேன்...அடுத்த 'அம்மா' இவங்க தானா..

அடுத்து நம்ம பெரிய அண்ணா புகழ் ஷில்பா ஷெட்டி டாக்டர் ஆயிட்டாங்களாம்... எங்கேவா..நம்ம இந்திய டாக்டர்கள் எல்லாம் எங்கே பயந்து பம்மி இருக்காங்களோ அதே வெள்ளைக்காரன் தேசத்தில்... ஆமாங்க இங்கிலாந்து தேசத்துல்ல எதோ ஒரு யுனிவர்சிட்டி லீட்ஸ்ன்னு நினைக்கிறேன்... அம்மணியின் பெரிய (!!!!???) சேவையைப் பாராட்டும் விதமா டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவப் படுத்தி இருக்காங்களாம்...


டாக்டருக்கு கட்டிப்பிடி வைத்தியம் தெரியுமாம்


என் பிரண்ட் ஒருத்தன் டாக்ட்ரேட் பண்ணுறேன்னு ஊர் உறவை எல்லாம் விட்டுட்டு வருசக்கணக்கா லக்னோவுல்ல தாவு தீர நோவெடுக்க உழைச்சும் இன்னும் டா கூட அவனுக்கு கொடுத்தப் பாடில்லை.. ஆனாப் பாருங்க அக்கா அசால்ட்டா டிவியிலே அழுது டாக்டர் பட்டம் வாங்கி தலையிலே தொப்பி எல்லாம் சீனாப் போசும் கொடுத்துட்டாங்க...


சரி டாக்டர் ஷில்பா செட்டிக்கும் தலைவி த்ரிஷாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுட்டு இந்தக் கச்சேரியை முடிச்சுக்குறேன்...

வர்றட்டா மக்கா

4 comments:

ILA(a)இளா said...

ஆமாம், டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சில்பிஜி வாழ்க.

தேவ் | Dev said...

என்னது டாக்டருக்கு மட்டும் தான் வாழ்கவா.. தலைவிக்கு யார் சொல்லுவா?

குசும்பன் said...

திரிஷா, ஷில்பா ஜெட்டி வாழ்க!!! வாழ்க

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10