Thursday, July 26, 2007

கச்சேரி TAKE OVER

உலக பதிவு வரலாற்றிலே இது தான் முதல் டேக் ஓவர்ன்னு நினைக்கிறேன்.

எம் பேர் சின்னப் பொடியன் நான் ஒரு மளிகை கடையிலே சம்பளத்துக்கு வேலைப் பாத்தேன். எங்க மொதலாளி கடையிலே பில் போட வச்சிருந்த கம்ப்யூட்டருக்கு கள்ளத்தனமா இன்டர் நெட் கனெக்ஷன் கொடுத்து பிளாக் எல்லாம் படிச்சு பித்தாகி பிளாக் எழுத ஆர்வம் அதிகமாயிருச்சுங்க.

பல நாளா யோசிச்சு சொந்தமா ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணேங்க. அப்போத் தான் எங்க மொதலாளி சொன்னார்.

லேய் சின்னப் பொடியா, புதுசா ஆரம்பிச்சா இன்னிக்கு ஓலகத்துல்ல பொழைக்கது கஷ்ட்டம், ஏற்கனவே பிளாக் ஆரம்பிச்சு நடத்த முடியாமத் திணறிகிட்டு இருக்க பிளாக்காப் பார்த்து வாங்கிப் போட்டின்னு வை., சோலி சுளுவா முடியும்ன்னு. என் மொதலாளி வியாபார காந்தம் ஆச்சே. அவர் சொல் படி நானும் முயற்சி பண்ணேன்.

பல் பேத்துக்கிட்டேப் பேசிப் பாத்தேன். பிளாக்கை நல்ல விலைக்கு விக்க நிறைய பேர் தயாரா இருந்தாலும் நமக்கு விலைக் கட்டுப்படி ஆகல்ல. ( நெசமாத் தான் சொல்லுறேன் பிளாக் கூட விலைக்கு தர்றாங்கய்யா.. வாங்க தான் கூட்டம் கம்மியா இருக்கு). பொறவு அப்படி இப்படி விசாரிச்சு நம்ம சங்கம் போர்வாளா இருக்க தேவ் அண்ணன் கிட்டப் பேசி ஒரு வழியா அவர் நடத்திகிட்டு இருந்தக் கச்சேரியை நாங்க வாங்கிட்டோம்ப்பா.

எவ்வளவு பணம் கைமாறிச்சு? யார் எல்லாம் இதுக்கு உதவுனாங்க அப்படிங்கறதை எல்லாம் விவரமா எக்னாமிக் டைம்ஸ்ல்ல இல்ல சி.என்.என் ஐபின்ல்ல் பார்த்துப் படிச்சி அறிந்துக் கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்குறேன்..

தேவ் அண்ணன் கேட்டுகிட்டப் படி இப்போதைக்கு பிளாக் பேரை மட்டும் மாத்தாம சென்னைக் கச்சேரின்னு வச்சே நம்ம பதிவுலக பிரவேசத்தை ஆரம்பிக்கிறேன்.

பெரியவங்க எல்லாம் ஆசிர்வதிக்கணும், என்னையும் உங்கள்ல்ல ஒருத்தனா ஏத்துக்கணும்

இப்படிக்கு,

சின்னப் பொடியன்

14 comments:

இராம் said...

வா பொடிசு....

வந்து கலக்கு... :)

சின்னப் பொடியன் said...

ராம் அண்ணே நீங்கத் தான் முதல்ல என்னை வரவேத்து இருக்கீங்க. உங்க வாய் முகூர்த்தம் என் பிளாக் நல்லா இருக்கும்ண்ணே. நான் உங்களுக்கு பெரிய ரசிகன் அண்ணே.

இலவசக்கொத்தனார் said...

தம்பி தேவ் அவர்களை அதட்டி மிரட்டி இந்த பதிவை கையகப் படுத்திய சின்னப் பொடியனுக்கு என் கண்டனங்கள்!!

CVR said...

:-D
பொடிப்பயல்!! நீங்க என்ன எங்கள் அண்ணன்,பாஸ்டன் புயல்,வெட்டிப்பயல்லுக்கு போட்டியா??? :-)))

சின்னப் பொடியன் said...

//தம்பி தேவ் அவர்களை அதட்டி மிரட்டி இந்த பதிவை கையகப் படுத்திய சின்னப் பொடியனுக்கு என் கண்டனங்கள்!! //

கொத்ஸ் தலைவா இந்தப் பொடியன் உங்கள் அடியன்... என்னைப் போய் மிரட்டல் உருட்டல் எல்லாம் சொல்லாதீங்க. நான் ரொம்ப பயந்த சுபாவம்ங்க..

சின்னப் பொடியன் said...

//:-D
பொடிப்பயல்!! நீங்க என்ன எங்கள் அண்ணன்,பாஸ்டன் புயல்,வெட்டிப்பயல்லுக்கு போட்டியா??? :-))) //

CVR அண்ணே. குண்டூர், நெல்லூர், விஜயவாடா, ஹதராபாத், ஓங்கோல், விசாகப்பட்டினம்.. இப்படி எல்லா ஊர்ல்லயும் இளையதளபதி வெட்டிகாரு ரசிகரு மன்றத்துல்ல நேனு மெம்பர் கார்ட் ஹோல்டரு.. அவ்ரு எல்லாம் சூப்பர் ஸ்டாரு... நான் வெறும் விரல் சூப்புற ஸ்மால் ஸ்டாரு... அவனு

கோபிநாத் said...

\\சின்னப் பொடியன் said...
//:-D
பொடிப்பயல்!! நீங்க என்ன எங்கள் அண்ணன்,பாஸ்டன் புயல்,வெட்டிப்பயல்லுக்கு போட்டியா??? :-))) //

CVR அண்ணே. குண்டூர், நெல்லூர், விஜயவாடா, ஹதராபாத், ஓங்கோல், விசாகப்பட்டினம்.. இப்படி எல்லா ஊர்ல்லயும் இளையதளபதி வெட்டிகாரு ரசிகரு மன்றத்துல்ல நேனு மெம்பர் கார்ட் ஹோல்டரு.. அவ்ரு எல்லாம் சூப்பர் ஸ்டாரு... நான் வெறும் விரல் சூப்புற ஸ்மால் ஸ்டாரு... அவனு\\

;-)))

ஆரம்பாமே அமர்க்களமா இருக்கு
கலக்குங்க பொடியன் ;-)

சின்னப் பொடியன் said...

வாங்க கோபி கிடேசன் பார்க் ஏரியாவில்ல இருந்து மொதல் ஆதரவு குரல் கொடுத்துருக்கீங்க. சந்தோசமா இருக்கு. நான் கூட கிடேசன் பார்க் வாசல்ல பொட்டிக் க்டை ஒண்ணு போட்டு பொழப்பு நடத்தலாம்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி யோசிச்சு சம்பந்தப் பட்ட நிர்வாகிகள்ட்ட பேசுனேன். அமவுண்ட் அதிகமாக் கேக்குறாங்கண்ணே. கிடேசன் பார்க்கிலும் ஊழலான்னு உள்ளம் கொதிச்சிப் போயிருச்சுண்ணேன்.. அபி அப்பா, குசும்பர் இவங்களுக்கு எல்லாம் மனு கொடுத்தும் பதில் ஒண்ணும் கிடைக்கல்ல..:(

கீதா சாம்பசிவம் said...

என்ன அநியாயம்? இப்படியும் ஒரு ஊழலா? இதோ இப்போவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஏற்பாடு செய்யறேன். :P வேணாம், வேணாம், இந்த மாதிரி ஊழலுக்கெல்லாம் இன்டர்போல் தான் சரிப்பட்டு வரும்! :P

ILA(a)இளா said...

//பெரியவங்க எல்லாம் ஆசிர்வதிக்கணும், என்னையும் உங்கள்ல்ல ஒருத்தனா ஏத்துக்கணும்//
ஆசிர்வதிச்சாச்சு.

அடி உதை குடுத்து, மிரட்டி இந்த acqusition நடந்ததான் இன்னிக்கு நரி தொலைக்காட்சியில சொன்னாங்களே. அதுதான் உண்மையா?

ILA(a)இளா said...

பொடிசு, நடத்தும்யா கச்சேரிய. நாங்க கல்லா ரொப்பறோம்

அய்யனார் ரசிகர் மன்றம் said...

"அபி அப்பா, குசும்பர் இவங்களுக்கு எல்லாம் மனு கொடுத்தும் பதில் ஒண்ணும் கிடைக்கல்ல..:("

யார் அண்ணே குசும்பர்கிட்ட கொடுக்க சொன்னது, அவன் பொடி பயன்னே.:)
தம்பி கதிர்தான் ஆள் இன் ஆல் அழுகு ராஜா, மற்றும் அபி அப்பாவின் தூண், பில்லர், பாடி பில்டர். அவர பாருக்க:)

வெட்டிப்பயல் said...

வாங்க தல... வந்து கலக்குங்க :-)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10