Friday, July 27, 2007

பொடியன் பதிவு விற்பனை மண்டி

நாட்டுல்ல எவ்வளவோ தொழில் இருக்குங்க. எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு பக்தி வேணும், நேர்மை வேணும், ஒரு நம்பிக்கை வேணும் அப்படின்னு எங்க முத்லாளி சொல்லுவார். நான் பிளாக் எழுதலாம்ன்னு தான் இங்கே வந்தேன், ஆனா வந்த நேரம் எல்லாமே மாறிடும் போலிருக்கு. நம்ம மொபைல் விடாம சிணுங்குது (ஊர்ல்ல இருக்க நம்ம அத்தைப் பொண்ணுகிட்ட ஆசையாப் பேச வாங்குனது. நோக்கியா என் சிரிஸ் மொபைல். விலை அதிகம் தான் ஆனா ஆசையின்னு வந்தா விலை எல்லாம் கண்ணுக்குத் தெரியுதா என்ன?) கிட்டத்தட்ட எல்லா பதிவரும் போனைப் போட்டு பொடியா எங்க பிளாக்கையும் ஒரு நல்ல விலைக்கு வித்துக் கொடுக்க முடியுமா? உனக்கு 10% கமிஷ்ன் தர்றேன்னு எல்லாம் ஆசைக் காட்டுறாங்க. இந்த வியாபாரமும் நல்லா இருக்கும் போலிருக்கே

எல்லாரும் பிளாக் விவரங்களைக் கொடுத்துட்டாங்க. சிலர் விலையை டாலர்ல்ல கேக்குறாங்க. இன்னும் சிலர் யூரோவில்ல கேக்குறாங்க.

எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிகிட்டு நம்ம வியாவாரத்தை ஆரம்பிக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கணும் வியாவாரம் நல்லா போகணும் லாபம் சம்பாதிக்கணும்.

முதல் போணியா இந்தப் பதிவு விலைக்கு வருது. விலைக் கேக்குறவங்கக் கேக்கலாம்.
விலையை யூரோவில்ல கேளுங்க

பூக்களப் பத்தி பல அரும் பெரும் தகவல்கள் நிறைந்த இந்தத் தளம் விற்பனைக்கு வருது

வியாபாரம் குறித்த எல்லா விவரங்களயும் பின்னூட்டங்களின் வழியாவே மெயின்டெயின் பண்ணுமாறு பாசத்தோடுக் கேட்டுக்குறேன்.

சரிங்க, முதல் வியாபாரத்தை நல்லா லாபமா ஆக்கித் தாங்க ப்ளிஸ்

22 comments:

அனுசுயா said...

என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே :(

ஆனாலும் //இந்த பூக்களப் பத்தி பல அரும் பெரும் தகவல்கள் நிறைந்த இந்தத் தளம்//

ரொம்ப நன்றிங்கோ அவ்வ்வ்வ்

செந்தழல் ரவி said...

இந்த பிலாகு வாங்கினா ஏதாவது ப்ரீயா கிடைக்குமா ?

அதை சொல்லுங்க முதல்ல...

ரிலையன்ஸ் பிரஸ் said...

ஆமாம் ஒரு லேப்டாப்பு பிரீ..

அன்புடன்
அம்பானி

செந்தழல் ரவி said...

அம்பானியா

டேய் நீ செத்துட்டியேடா

திருபாய் அம்பானி said...

இல்லையே.

குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம்.

செந்தழல் ரவி said...

வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு புருஷன். தலைநகரம் படத்துல நடிச்சவரு.

Anonymous said...

ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கேவலப்படுத்தலாமா

சின்னப் பொடியன் said...

அட என்னங்க உங்களை வச்சு காமெடி பண்ணுறேனான்னு கேக்குறீங்க..இங்கேப் பாருங்க..காலையிலே இருந்து மண்டிக்கு விலைக் கேட்டு ஒரு பயலும் வர்றல்ல.. முதல் போணியே முக்காடுப் போட வச்சிருச்சுங்களே :(((

CVR said...

என்னப்பா பொடிப்பயலே!!
லிங்க்கு க்ளிக் பண்ணா "Not Found
Error 404" சொல்லுது!!!
இதை நாங்க காசை கொடுத்து வாங்கனுமா??!! :P

அது சரி!! எங்க பதிவுக்கு எல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்!!
இப்போதைக்கு விக்கற ஐடியா இல்லை,இருந்தாலும் சும்மா சந்தை நிலவரம் பத்தி தெரிஞ்சு வெச்சுக்கலாமேன்னுதான்............;)

kspp said...

சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்கிக்கிறதுக்கு ரூ 2000ஐயும், சேவை வரியா ரூ 100ம் தந்திடுங்க.

Gopalan Ramasubbu said...

10 $ ok va?

dunno the euro conversion..u can do that i suppose :)

சின்னப் பொடியன் said...

வாங்க ரவி அண்ணே... உங்களை கடிச்ச நாயை நீங்க கொரியாவுல்ல எதோ ஓட்டலுக்கு ப்ரீயா பிடிச்சுக் கொடுத்து தோல் உரிக்கச் சொல்லிட்டாங்களாமே.. உண்மையாண்ணே..

அப்புறம் நாய் கடிச்சப் பொறவு உங்க எழுத்துல்ல நக்கலும் நையாண்டியும் கலந்து கட்டுதுண்ணேன். சின்னப்பொடியன் மண்டிக்கு வந்து கல்லா கட்ட உதவியிருக்கீங்க. ரொம்ப சந்தோசம்ண்ணே

சின்னப் பொடியன் said...

சே சாரி ரவிண்ணே நீங்க கேட்ட கேள்வி எல்லாம் விட்டுட்டு எதுக்கோப் பதில் பேசிகிட்டு இருக்கேன் பாருங்க..

இது மலர் பத்துன பிளாக்ங்கறதால அனு அக்கா கூடப் ப்ரீயா மலர் வளையம் தான் தருவாங்களாம்.. (கோயம்புத்தூர் குசும்பு என்னப் பண்றது?)

சின்னப் பொடியன் said...

இங்கேயுமாடா ரியலைன்ஸ் பிரஸ் அய்யா தோட்டத்து அய்யா வாங்களேன் ஓடியாங்களேன் சின்னப் பொடியன் மண்டிக்கு ஆபத்து வந்துருச்சு.. வந்து காப்பாத்துங்க..

சின்னப் பொடியன் said...

//அம்பானியா

டேய் நீ செத்துட்டியேடா //

ரவிண்ணே அம்பாணி அவுட்.. இது அணில் முகேஷ்ன்னு ரீப்பிட்

சின்னப் பொடியன் said...

//இல்லையே.

குரு படத்துல நடிச்சேனே, மணிவண்ணன் படம். //

அது எல்லாம் வெறும் நடிப்பா :)))

சின்னப் பொடியன் said...

//வெண்ண, குரு மனிரத்தினம் படம். மணிவண்ணன் குஷ்பு புருஷன். தலைநகரம் படத்துல நடிச்சவரு.//


அண்ணே இது ராங்க் கனெக்ஷ்ன் அண்ணே. குடும்பத்துல்ல எல்லாம் இப்படி குண்டக்க மண்டக்க குண்டு போடுறீங்களே ஏன்ண்ணே

சின்னப் பொடியன் said...

//ரொம்ப சரி. கோடிக்கனக்கான சொத்துக்காரனை இப்படி கேவலப்படுத்தலாமா //

அமுக மெம்பர் கேக்குறாப்பல்ல ரவி அண்ணே கட்டாயம் பதில் சொல்லுவார்.. வெயிட்டீஸ்

சின்னப் பொடியன் said...

//என்னப்பா பொடிப்பயலே!!
லிங்க்கு க்ளிக் பண்ணா "Not Found
Error 404" சொல்லுது!!!
இதை நாங்க காசை கொடுத்து வாங்கனுமா??!! :P//

அண்ணே சின்ன பொடியன் வியாவாரத்தைக் கெடுக்க அயல் நாட்டுல்ல நடக்குற சதிண்ணே இது..இப்போ சரி பண்ணிட்டேன்ணே கிளிக்கங்க

//அது சரி!! எங்க பதிவுக்கு எல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்!!
இப்போதைக்கு விக்கற ஐடியா இல்லை,இருந்தாலும் சும்மா சந்தை நிலவரம் பத்தி தெரிஞ்சு வெச்சுக்கலாமேன்னுதான்............;) //

அண்ணே உங்க பிளாக்கு எல்லாம் விலை வைக்க முடியுமாண்ணே.. அதெல்லாம் விலை மதிக்க முடியாத விசயமாச்சேண்ணே.. :))

சின்னப் பொடியன் said...

//சரிப்பா தம்பி. பிளாகை நான் வாங்கிக்கிறேன். வாங்கிக்கிறதுக்கு ரூ 2000ஐயும், சேவை வரியா ரூ 100ம் தந்திடுங்க.//


அண்ணே ரூவா எல்லாம் வேலைக்கு ஆகாதுண்ணே.. யூரோ இருந்தா வாங்க உக்காந்து பேசுவோம்

சின்னப் பொடியன் said...

//10 $ ok va?

dunno the euro conversion..u can do that i suppose :) //

கோபாலன் அண்ணே பதிவு எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணியிருக்கோம் பாத்து விலையைக் கேளுங்க்ண்ணே..

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10