CHEQUE DE INDIA
தனக்குப் பிடிச்ச விசயத்துக்கு கொட்டிக் கொடுப்பதும் தலையில்ல வச்சுக் கொண்டாடுறதும் தனிப்பட்ட ரசிகனுக்கு ரைட்டு..
கிரிக்கெத்துக்கு அள்ளி விடுறதும் ஹாக்கீ(யை)கீழே தள்ளி விடுறதும் அரசாங்கத்துக்கு அழகில்லை...
ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ஆதரவாக இந்தப் பதிவு.
I SUPPORT INDIAN HOCKEY....DO YOU ?
22 comments:
நிச்சயமாக அரசும், ஊடகங்களும் எல்லா விளையாட்டுகளையும் சம அளவில் ஊக்குவிக்க வேண்டும். அதிலும் ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.
இது வழக்கமா நடக்கற விசயம்தானே வெற்றியடையும் விளம்பரம் அதிகம் இருக்கற விசயங்களுக்குதான் மேலும் மேலும் ஆதரவு கூடும். ஆனா அரசாங்கமே இப்படி நடந்துக்கறது நல்லா இல்லை :(
நிச்சயமாய் அரசின் இந்நிலைபாடு தவறானது
ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்
//லொடுக்கு said...
நிச்சயமாக அரசும், ஊடகங்களும் எல்லா விளையாட்டுகளையும் சம அளவில் ஊக்குவிக்க வேண்டும். அதிலும் ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.//
வாங்க லொடுக்கு.. ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டுங்கறது நம்மில் பலருக்கு மறந்தேப் போய்விட்டது என்ன செய்ய? கருத்துக்களுக்கு நன்றி லொடுக்கு.
//அனுசுயா said...
இது வழக்கமா நடக்கற விசயம்தானே வெற்றியடையும் விளம்பரம் அதிகம் இருக்கற விசயங்களுக்குதான் மேலும் மேலும் ஆதரவு கூடும். ஆனா அரசாங்கமே இப்படி நடந்துக்கறது நல்லா இல்லை :(//
வாங்க அனு சரியாச் சொன்னீங்க.. அது தவிர அதிகார மையங்களில் இருக்கும் மக்கள் பலரும் கிரிக்கெட்டின் வெற்றியால் ஆதாயங்கள் அடைவதும் கூட கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் கூடுதல் கவனிப்புக்குக் காரணம் என நான் நினைக்கிறேன்.. எது எப்படியோ ஹாக்கி வீரர்களுக்கு உரிய மரியாதைத் தரப்பட வில்லை என்பது குற்றமே.
//இராஜராஜன் said...
நிச்சயமாய் அரசின் இந்நிலைபாடு தவறானது
ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜன்.ஆதரவுக்கும் மிக்க நன்றி.
தனிப்பட்ட மனிதன் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்.
ஆனால் இரு அரசு, ஒரு விளையாட்டை அதிக முக்கியதுவம் கொடுத்து, நமது தேசிய விளையாட்டை கண்டுகொள்ளாதது நல்லா இல்லை.
\\எது எப்படியோ ஹாக்கி வீரர்களுக்கு உரிய மரியாதைத் தரப்பட வில்லை என்பது குற்றமே\\
சரியாக சொன்னிங்க...
இவங்க கொட்டிக் குடுக்குறதும் ஆதாயத்துக்குத்தான். அதனால இதுவும் ஒரு விளம்பரச் செலவுதான். அப்படி இருக்கும் பொழுது நல்லா போணியாறவங்களை வெச்சுதானே விளம்பரம் செய்ய முடியும்.
குஷ்புவையும் சிம்ரனையும்தான் விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிடறாங்க, அதே சமயத்தில் தீபா வெங்கட் (அடடா அபி அப்பா உணர்ச்சிவசப் படறாரே!) இல்லைனா வேற சின்னத்திரை நடிகைகளுக்கு அதே அளவு சம்பளம் தரணமுன்னா எப்படி?
அதே கணக்குதான்.
//J K said...
தனிப்பட்ட மனிதன் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்.
ஆனால் இரு அரசு, ஒரு விளையாட்டை அதிக முக்கியதுவம் கொடுத்து, நமது தேசிய விளையாட்டை கண்டுகொள்ளாதது நல்லா இல்லை.//
வாய்யா JK ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//கோபிநாத் said...
\\எது எப்படியோ ஹாக்கி வீரர்களுக்கு உரிய மரியாதைத் தரப்பட வில்லை என்பது குற்றமே\\
சரியாக சொன்னிங்க...//
வா கோபி உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
//இலவசக்கொத்தனார் said...
இவங்க கொட்டிக் குடுக்குறதும் ஆதாயத்துக்குத்தான். அதனால இதுவும் ஒரு விளம்பரச் செலவுதான். அப்படி இருக்கும் பொழுது நல்லா போணியாறவங்களை வெச்சுதானே விளம்பரம் செய்ய முடியும்.
குஷ்புவையும் சிம்ரனையும்தான் விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிடறாங்க, அதே சமயத்தில் தீபா வெங்கட் (அடடா அபி அப்பா உணர்ச்சிவசப் படறாரே!) இல்லைனா வேற சின்னத்திரை நடிகைகளுக்கு அதே அளவு சம்பளம் தரணமுன்னா எப்படி?
அதே கணக்குதான்.//
கொத்ஸ் உங்க கருத்தோடு நான் உடன்படவில்லை... இங்கு நான் வியாபாரிகளையோ ரசிகர்களையோ பற்றி பேசவில்லை... அரசாங்கத்தைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கேன்,, ஒரு தேசிய விளையாட்டில் வென்று வந்திருக்கும் அணியினர்க்கு உரிய மரியாதை ஏன் தரப்படவில்லை என்பதே கேள்வி...
கிரிக்கெட் வீரர்கள் நாட்டு பிரதினிகளாய் போய் வென்று வந்தமைக்கு அள்ளி கொடுக்கும் அரசாங்கம் ஹாக்கி வீரர்கள் வென்று வந்தமையை (அதுவும் ஹாக்கி தேசிய விளையாட்டு) கவனிக்காதது எனோ என்ற வருத்தத்தைப் அப்திவு செய்யவே இப்பதிவு.
லாபம் பார்த்து மரியாதைக் கொடுக்க அரசாங்கங்கள் ஒன்றும் வியாபார மையங்கள் அல்லவே... வியாபாரிகள் கையில் இருந்தாலும் அரசாங்கம் அரசாங்கமாக பராபட்சமின்றி நடக்க வேண்டும் எனப்து என் அவா
தனிப்பட்ட மனிதன் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்.
ஆனால் இரு அரசு, ஒரு விளையாட்டை அதிக முக்கியதுவம் கொடுத்து, நமது தேசிய விளையாட்டை கண்டுகொள்ளாதது நல்லா இல்லை
லாபம் பார்த்து மரியாதைக் கொடுக்க அரசாங்கங்கள் ஒன்றும் வியாபார மையங்கள் அல்லவே
nice points
என் ஆதரவும் தேவ்...
இதை விட ஒரு பெரிய கொடுமை, முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு பட்டியலில் இருந்து ஹாக்கியை தூக்கி விட்டார்கள் சில மாதங்களுக்கு முன்பு... ஏன் என்றால் வெற்றியே பெறாத விளையாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பதில் வந்தது. என்ன தான் நடக்குதுதோ அமைச்சரகத்தில் :(
வெளிநாட்டில் நடக்கும் ஒரு உலக அளவிலான போட்டியில் வென்று வந்தால் கட்டாயம் ஹாக்கி அணியும் இந்த அளவு சன்மானம் எதிர்பார்க்கலாம்.
ஒலிம்பிக் வென்ற வீரர்களுக்கு கொடுக்கவில்லையா.
அதற்காக நான் ஹாக்கியை மட்டமாக நினைப்பதாக கருத வேண்டாம். இங்கே கேள்வி "உலக அள்விலான போட்டியில்" வெல்வது. இந்திய கிரிக்கெட் அணி ஒரு ஆசிய கொப்பை வென்றால் இதைப் போல சன்மானம் கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?
தேவ், எந்த ஹாக்கி வீரருக்கும் 1 கோடி ரூபாய் தரப்படவில்லை. யுவராஜ் சிங்கிற்கு 6 சிக்ஸர் அடித்ததற்காக கொடுக்கப்ப்பட்டது. தினேஸ் கார்த்திக்காக மாநில அரசு 5 லட்சம் கொடுத்தது. தமிழ்நாட்டுல ஹாக்கி வீரர்கள் யார் இருக்காங்கனே தெரியல. எல்லாம் வியாபாரமும், விளம்பரமும் வேணும். அதான் தலைப்பிலேயே சொல்லிட்டீங்களே Cheque De" ன்னு . யாரு செக் அதிகமா தராங்களோ அவுங்கதான் முன்னாடி வருவாங்க. Its All in the Game.
இதுல என்ன கொடுமைன்னா ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டாம்.
//முரளி கண்ணன் said...
தனிப்பட்ட மனிதன் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்.
ஆனால் இரு அரசு, ஒரு விளையாட்டை அதிக முக்கியதுவம் கொடுத்து, நமது தேசிய விளையாட்டை கண்டுகொள்ளாதது நல்லா இல்லை
லாபம் பார்த்து மரியாதைக் கொடுக்க அரசாங்கங்கள் ஒன்றும் வியாபார மையங்கள் அல்லவே
nice points//
வாங்க முரளி கண்ணன் உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி முரளி.
//என் ஆதரவும் தேவ்...
இதை விட ஒரு பெரிய கொடுமை, முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு பட்டியலில் இருந்து ஹாக்கியை தூக்கி விட்டார்கள் சில மாதங்களுக்கு முன்பு... ஏன் என்றால் வெற்றியே பெறாத விளையாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பதில் வந்தது. என்ன தான் நடக்குதுதோ அமைச்சரகத்தில் :(//
வா சிவா, இந்தக் கொடுமை வேற நடக்குதா... இது தெரியாத தகவல்ப்பா.. இது நிச்சயமாய் கண்டிக்கப்பட வேண்டிய விஷ்யம்.. என் கண்டனங்களை இந்தப் பதிவின் மூலமாய் பதிவு செய்கிறேன்.
//PPattian : புபட்டியன் said...
வெளிநாட்டில் நடக்கும் ஒரு உலக அளவிலான போட்டியில் வென்று வந்தால் கட்டாயம் ஹாக்கி அணியும் இந்த அளவு சன்மானம் எதிர்பார்க்கலாம்.
ஒலிம்பிக் வென்ற வீரர்களுக்கு கொடுக்கவில்லையா.
அதற்காக நான் ஹாக்கியை மட்டமாக நினைப்பதாக கருத வேண்டாம். இங்கே கேள்வி "உலக அள்விலான போட்டியில்" வெல்வது. இந்திய கிரிக்கெட் அணி ஒரு ஆசிய கொப்பை வென்றால் இதைப் போல சன்மானம் கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?//
வாங்க புபட்டியன் சார்... சார் பெற்ற வெற்றிக்கு ஒரு சின்ன சபாஷ் சொன்னாத் தான் சார் அவங்களும் ஊந்தப் பட்டு அடுத்த வெற்றிக்கு தயார் ஆவாங்க... அது மட்டுமின்றி ஹாக்கியில் ஆசியக் கோப்பை என்பது சாதரண விசயம் அல்ல... அதிலும் பல நாடுகள் பங்கு பெற்று போட்டியிட்டதில் தான் நம் வீரர்கள் வென்றுள்ளனர்.
மீடியா.. மக்கள்... ரசிகர்கள்.. விளம்பரதாரர்கள்..பற்றி நான் பேசவில்லை.. என் வருத்தமெல்லாம் அரசாங்கத்தின் பாரபட்சமான செயல்பாடுகள் மீது மட்டும் தான்... தேசிய விளையாட்டு புறக்கணிக்கப் படுகிறேதே என்ற வருத்தமும் தான்...
//கிரிக்கெட் வீரர்கள் நாட்டு பிரதினிகளாய் போய் வென்று வந்தமைக்கு அள்ளி கொடுக்கும் அரசாங்கம் //
Dev,
அது இந்தியாவை represent செய்யும் அணி இல்லை. BCCIயின் அணி. எனவேதான் இந்திய அரசின் கொடி, அசோக சக்கரம் ஆகியவைகளை உபயோகப் படுத்துவதில் பிரச்சனை வந்தது.
//ILA(a)இளா said...
தேவ், எந்த ஹாக்கி வீரருக்கும் 1 கோடி ரூபாய் தரப்படவில்லை. யுவராஜ் சிங்கிற்கு 6 சிக்ஸர் அடித்ததற்காக கொடுக்கப்ப்பட்டது. தினேஸ் கார்த்திக்காக மாநில அரசு 5 லட்சம் கொடுத்தது. தமிழ்நாட்டுல ஹாக்கி வீரர்கள் யார் இருக்காங்கனே தெரியல. எல்லாம் வியாபாரமும், விளம்பரமும் வேணும். அதான் தலைப்பிலேயே சொல்லிட்டீங்களே Cheque De" ன்னு . யாரு செக் அதிகமா தராங்களோ அவுங்கதான் முன்னாடி வருவாங்க. Its All in the Game.
இதுல என்ன கொடுமைன்னா ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டாம்.//
வாங்க இளா...இப்போ ஆங்காங்கே இப்படி எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் துவங்கிய பிறகு தான் அரசாங்கங்கள் ஹாக்கி வெற்றியை கவனிக்கத் துவங்கியுள்ளன.. கிரிக்கெட்டுக்குக் கொடுக்கட்டும் அதை நிறுத்தச் சொல்லி யாரும் சொல்லவில்லை.. ஆனால் அதே மரியாதை மற்ற விளையாட்டுக்களுக்கும் கொடுக்கச் சொல்லித் தான் அரசைக் கேட்கிறோம்.. அவ்வளவே..
////கிரிக்கெட் வீரர்கள் நாட்டு பிரதினிகளாய் போய் வென்று வந்தமைக்கு அள்ளி கொடுக்கும் அரசாங்கம் //
Dev,
அது இந்தியாவை represent செய்யும் அணி இல்லை. BCCIயின் அணி. எனவேதான் இந்திய அரசின் கொடி, அசோக சக்கரம் ஆகியவைகளை உபயோகப் படுத்துவதில் பிரச்சனை வந்தது.//
வாங்க அருண்மொழி, நீங்க சொல்லும் விசயங்களையும் மீறி அவங்களை நாம் எல்லாரும் இந்திய கிரிக்கெட் அணியாத தானே பாக்குறோம்... அரசாங்கமும் அதே நிலையில் பார்த்து தானே அவங்களுக்கு பரிசுப் பணம் கொடுத்திருக்கு.. அதையே ஹாக்கிக்கு செய்தால் என்ன என்று தான் இந்தப் பதிவின் மூலம் கேட்கிறேன்.
Post a Comment