Tuesday, October 02, 2007

விவாஜி - ரீ ரிலீஸ் - 1

சின்னத் தல ராயலாரின் நல்லாசியோடு சங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்கும்

விவாஜி - த பார்மர்

"கதையைச் சீக்கிரம் சொல்லுங்கண்ணே.. எங்க டேமேஜர் எந்நேரம் வேணும்ன்னாலும் வந்து என் டவுசரைக் கிழிப்பான்.. " சின்னத் தல கான் கால் போட்டுவிட, கதையோட ஓப்பனிங் சீனைச் சொல்ல ஆரம்பிச்சேன்..

எடுத்த உடனே.. அந்த ஆறாயிரம் பேர் வேலைப் பாக்குற சங்கம் டெக்னாலஜீஸ் ஆபிஸ் கேம்ப்ஸை டாப் ஆங்கிள்ல்ல காட்டுறோம்... பின்னாடி ஓன்னு மியூசிக்...

கேமராவை ஜூம் பண்றோம்..
அப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..
மானிட்டர் ஆப் ஆகுது..
கனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..
நம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...

கையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..

"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"

"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே"

"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.

"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." டாப் மேனேஜ்மென்T சொட்டை ஒண்ணு பார்மர் மீது எரிச்சல் கொள்கிறது.

"எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..WE SHOULD NOT LEAVE HIM" இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்.

அப்படியே சீன் பெஞ்ச்கு மூவ் ஆகுது...

அட்மின் கேபின் அங்கே நம்ம ஹீரோ நிக்குறார்...

அட்மின் எக்ஸ்கிட்டிவ் நம்ம பார்மரைப் பார்த்துக் கேக்குறார்...

பெயரு.... விவாஜி
தொழில்.. கடலைப் போடுறது...சாரி கோடு எழுதுறது...

அப்புறம் பெஞ்ச்ல்ல போய் உக்காராரு நம்ம பார்மர்.. அங்கே பக்கத்து பெஞ்ச்ல்ல நம்ம அபி அப்பா (கெஸ்ட் ரோல்)

"ஆமா நீ எதுக்குப் பெஞ்ச்க்கு வந்த.. பிராஜக்ட் முடிஞ்சு போச்சா?"

குனிந்தப் படி பார்மர் இல்லை என தலையை ஆட்டுகிறார்...

"அப்புறம் பெர்மான்ஸ் சரி இல்லையா?"

மறுபடியும் பார்மர் குனிந்த தலை நிமிராமல் இல்லை எனத் தலை ஆட்டுகிறார்.

"எதாச்சும் ட்ரெயினிங்கா...?"

அதற்கும் இல்லையெனத் தலையாட்டா அபி அப்பா கடுப்பாகி அப்புறம் என்ன இழவுக்குய்யா இங்கே வந்து குந்திகிட்டு இருக்கன்னு சவுண்டா கேக்க

பயங்கர மீசிக் இங்கேப் போடுறோம்....அப்படியே கேமராவை கன்னாபின்னான்னு ஆங்கிள் வச்சு தரையிலே இருந்து பார்மர் தலையைத் தூக்குறதை எமோஷனலாக் காட்டுறோம்...
பார்மர் சிரிச்சிகிட்டே சவுண்டா சொல்லுறார்....

வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா... அபி அப்பா எமோஷனலாக
மறுபடியும் பார்மர் சிரித்துக் கொண்டே சொல்லுறார்..

பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....

அப்படின்னு சொல்லிட்டு ஹா...ஹா...ஹா...ன்னு அவர் பாணியிலே சிரிக்குறார்

"இது தான் சின்னத் தல நம்ம படத்தோட ஓப்பனிங்.. ஓகேவான்னு" நான் பயந்துக் கேக்க...

சின்னத் தல கான் கால் லைன்ல்ல தமிழ் மணத்தின் உச்ச நட்சத்திரமே லைன்ல்ல வந்தார் அவர் குரலைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்...

"ம்ம்ம் உன் ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் ஆனா பினிசிங் சரியா இருக்குமான்னு" அவர் கேக்க ....

"அண்ணே மீதி கதையையும் சொல்லுறேன் கேக்குறீயளா" அப்படின்னு கேட்டேன்...

"இப்போ நான் ரொம்ப பிசி பேஸ்கட் பால் பிராக்டீஸ்ல்ல இருக்கேன்.. டூமாரோ கால் பண்ணி கன்டினியூ பண்ணு" அப்படின்னு போனை வச்சிட்டார்...

அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...

14 comments:

மங்களூர் சிவா said...

//
வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா
//
டாப்

அபி அப்பா அங்க எதுக்கு?

இரும்பு அடிக்கிற எடத்தில 'ஈ'க்கு என்ன வேலை??

CVR said...

சூப்பரு!!
நான் மிகவும் ரசித்து படித்த தொடர்!!

சீக்கிரம் கண்டின்யூ பண்ணுங்க!! :-)))

Unknown said...

////
வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா
//
டாப்

அபி அப்பா அங்க எதுக்கு?

வாங்க சிவா, வேலை செஞ்சாத் தானே ரெஸ்ட் தேவைப் படும்... ரெஸ்ட் எடுக்கணும்ன்னா பெஞ்ச்க்கு தானே போகணும்.. இப்போ லாஜிக் ஓ,கே.வா

அபி அப்பா ஒரு சீன்ல்ல தலைக் காட்ட ஒத்துகிட்டதுக்கே மாயவரம் துபாய் ஏரியாவுல்ல எல்லாம் படம் ரிக்கார்ட் விலைக்குப் போயிருக்கு.. நீங்க இப்படி எல்லாம் பேசினா அப்புறம் அவர் பேன்ஸ் டென்சன் ஆகி உங்களை எக்கு தப்பா எகிற போறாங்கய்யா

இரும்பு அடிக்கிற எடத்தில 'ஈ'க்கு என்ன வேலை??//

Unknown said...

//CVR said...
சூப்பரு!!
நான் மிகவும் ரசித்து படித்த தொடர்!!

சீக்கிரம் கண்டின்யூ பண்ணுங்க!! :-)))//

கேமிரா கவிஞரின் ரசனைக்கு தலைவணங்கி விவாஜி மீண்டும் விசுவரூபம் எடுக்கிறார் பாருங்க...

ILA (a) இளா said...

//சங்கம் திரும்பி வருவோம்ல்ல//

ஏன், நேரா வர மாட்டீங்களா?

மங்களூர் சிவா said...

//
அபி அப்பா ஒரு சீன்ல்ல தலைக் காட்ட ஒத்துகிட்டதுக்கே மாயவரம் துபாய் ஏரியாவுல்ல எல்லாம் படம் ரிக்கார்ட் விலைக்குப் போயிருக்கு
//
இது வேறயா

//
நீங்க இப்படி எல்லாம் பேசினா அப்புறம் அவர் பேன்ஸ் டென்சன் ஆகி உங்களை எக்கு தப்பா எகிற போறாங்கய்யா
//
அபி அப்பா ரசிகர் மன்றம் மங்களூர் தலைவனே நாந்தான்

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா இண்ட்ரோ சீனில் என்ன கெட்டப்? அதெல்லாம் சொல்ல வேண்டாமா? அடுத்த பகுதியைப் படிக்கப் போறேன். அதுவும் இப்படி அரைகுறையா இருந்தது நான் பொல்லாதவனாயிடுவேன்.

Unknown said...

////சங்கம் திரும்பி வருவோம்ல்ல//

ஏன், நேரா வர மாட்டீங்களா?//

வாங்க விவாஜி... பதிவுலகிலே முதல் முறையா ஒரு படம் ரி ரீலிஸ்ல்ல சக்கப் போடு போடுதுன்னா அது நம்ம விவாஜி தான்... திரும்பி திரும்பி ஓடுதுப் பாருங்க... எதுக்கு நேராவெல்லாம் வந்துகிட்டு திரும்பியே வர்றலாம்ங்கோ

Unknown said...

//மங்களூர் சிவா said...
//
அபி அப்பா ஒரு சீன்ல்ல தலைக் காட்ட ஒத்துகிட்டதுக்கே மாயவரம் துபாய் ஏரியாவுல்ல எல்லாம் படம் ரிக்கார்ட் விலைக்குப் போயிருக்கு
//
இது வேறயா//



//
நீங்க இப்படி எல்லாம் பேசினா அப்புறம் அவர் பேன்ஸ் டென்சன் ஆகி உங்களை எக்கு தப்பா எகிற போறாங்கய்யா
//
அபி அப்பா ரசிகர் மன்றம் மங்களூர் தலைவனே நாந்தான்//

ஆகா சிவா...அடுத்து அபி அப்பா கால்ஷிட் தான் கேட்டு இருக்கோம்...சந்திரமுகி ரீ மேக் பத்தி அவர் கிட்டப் பேசிகிட்டு இருக்கோம்... அண்ணன் ஓ.கே சொல்லட்டும் உங்களுக்கும் ஒரு ரோல் கொடுத்துருவோம். தீபா வெங்கிட் தான் அனேகமாச் சந்திரமுகியா நடிக்கணும்ன்னு அபி அப்பா அடம் பிடிக்கிறார்...

Unknown said...

//இலவசக்கொத்தனார் said...
ஏம்பா இண்ட்ரோ சீனில் என்ன கெட்டப்? அதெல்லாம் சொல்ல வேண்டாமா? அடுத்த பகுதியைப் படிக்கப் போறேன். அதுவும் இப்படி அரைகுறையா இருந்தது நான் பொல்லாதவனாயிடுவேன்.//

தலைவரே வாங்க வாங்க... வழக்கமா எனக்கு கால்ஷிட் கொடுத்து வாழ வைக்கும் வள்ளலே.. நீங்கப் பாட்டுக்கு கலை உலக வாழ்க்கையை விட்டுட்டுப் போயிட்டீங்க...

அந்தக் கேப்பிலே எதோ சங்கத்து மக்கள் புண்ணியத்துல்ல இந்த விவாஜி புராஜக்ட் செட் ஆச்சு.. ப்ர்ஸ்ட் ஸ்டோரி அப்புறம் டீடெயில்ஸ்ன்னு விவாஜி சொல்லிட்டார்...

அடுத்து எப்போ ப்ரீன்னு சொல்லுங்க... தசாவதாரம் ரீ மேக் ஸ்கிரீப்ட் ரெடி பண்ணிருவோம்.

MyFriend said...

ஏற்கனவே சங்அக்த்துல படிச்சு மறந்துபோன கதை. இங்கே மீள் பதிவு பண்ணி 7 எபிசோட் வரைக்கும் போட்டுட்டீங்க.. இப்போ ஒன்னொன்னா படிச்சுட்டு வாரேன். ;-)

cheena (சீனா) said...

விவாஜியின் துவக்கமே அருமையாக இருக்கிறது. வேலை செய்தால் பெஞ்சு - என்ன அனியாயம் - கடலை சாகுபடி செய்தால் பெஞ்சா ?? அது தானே அவர் தொழில் - போர்க்கொடி உயர்த்த வேண்டியது தான்

Unknown said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஏற்கனவே சங்அக்த்துல படிச்சு மறந்துபோன கதை. இங்கே மீள் பதிவு பண்ணி 7 எபிசோட் வரைக்கும் போட்டுட்டீங்க.. இப்போ ஒன்னொன்னா படிச்சுட்டு வாரேன். ;-)//


வாம்மா மை ஃபிரண்ட், விவாஜியை அவ்வளவு சீக்கிரம் மறக்கலாமா.. அதான் இந்த வாட்டி ஸ்டில்சும் சேத்து ரீலிஸ் பண்ணிட்டோம்ல்ல மறக்கக் கூடாது :))

Unknown said...

//cheena (சீனா) said...
விவாஜியின் துவக்கமே அருமையாக இருக்கிறது. வேலை செய்தால் பெஞ்சு - என்ன அனியாயம் - கடலை சாகுபடி செய்தால் பெஞ்சா ?? அது தானே அவர் தொழில் - போர்க்கொடி உயர்த்த வேண்டியது தான்//

சீனா மீதியும் படிங்க நம்ம விவாஜி போருக்கு போற அம்புட்டு கதையும் வருது பாருங்க :))

tamil10