கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கச்சேரி வைத்து வரும் நான் எந்த நிலையிலும் யாரையும் கண்டித்தோ.. எதிர்த்தோ..எந்த விதப் பதிவும் போட்டதில்லை.. அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்தப் போதும் கோபம் அடக்கி என் நிலைக் காத்தேன்.. ஒரு தவம் போல் அதைச் செய்து வந்தேன்... இன்று அந்த தவம் கலைக்க வேண்டிய கஷ்ட்டத்துக்கு என் இஷ்ட்டம் இன்றி தள்ளப்பட்டுள்ளேன்...அதற்கு காரணம் நான் வலையுலகில் மிகவும் மதிக்கும், ரசிக்கும் பதிவர் அண்ணன் பெனத்தாலார் அவர்கள்...
பெனத்தாலரே... பாசமிகு நண்பரே..அமீரகத்து ஆக்ஸிஜனே.. இப்படி எத்தனையோ பட்டங்கள் உங்களுக்காக என்னால் சூட்டப்படக் காத்திருக்க.. தடம் மாறி நீர் போனது ஏனோ?
நினைவிருக்கிறதா.. முன்னொருமுறை வலையுலகின் ஆளும் கட்சியாம் ப.ம.கவிற்கும் வலையுலகின் புதிய எழுச்சியாம் வ.வா.சங்கமும் அரசியல் போர்முனையில் முட்டி மோதக் காத்திருந்த தருணத்தில் உம் பேனா முனையால் அந்தப் போரைத் தடுத்தீரே.. அப்படி பேனாவை பேணி வளர்த்த நீங்களா.. இன்று கீ போர்ட்டால் கீறுகிறீர்... நம்ப முடியவில்லை... ஆனால் உண்மை என்னும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை..
அவன் விகடன்.. கொடுத்த விசை பலகையா விசம் கக்குகிறது..
தமிழ் மணத்தின் எதிர்காலம் கனவாய் கண்ட நீரா காளையரின் காலை வாரி விடுவது...
கணப் பொழுதில் கவிதைப் பொழியும் கவி மடத்துச் சீடரா..கணவன்மார்களின் கவலைக்குக் காரணமாவது...
சூழ்நிலையின் அவசியம் கருதி நட்பை நடு நெஞ்சில் அடைத்து விட்டு கடும் கவலையோடு இந்த எச்ச்ரிக்கைப் பதிவின் எஞ்சிய வரிகளை எழுதுகிறேன்..
தாங்கள் சமீபக் காலமா பதிவிட்டு வரும் WIFEOLOGY தொடரைப் படித்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.. நீங்களா இப்படி என்று குழம்பிப் போனேன்....
என்னக் கொடுமை சார் இது என்று கணிணி முன் கலங்கிப் போனேன்... பெரும் யோசனைக்குப் பின் இனியும் இது பற்றி அமைதி காப்பது முறையல்ல என்று பொங்குகிறேன்..
கல்யாணம் என்ற கலவரத்தில் சிக்கிய் ஒரு அப்பாவி ஆண்மகன் தன்னைக் காத்துக் காப்பாற்றி கரையேர வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இப்படி எழுத்துக்களால் படம் பிடித்து பொதுவில் வைப்பது என்ன நியாயம் அய்யா?
ஆண்டு ஆண்டு காலமாய் ரங்கமணிகள் காத்து கடைப்பிடித்து வரும் ரகசியங்களை இப்படியா கடை விரிப்பது என்னக் கொடுமை சார் இது?
பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?
உமது இந்தத் தொடர் ஒட்டு மொத்த ரங்கமணிகள் சமுதாயத்தின் மீது வரையற்ற வன்முறையைக் கட்டுவிழ்த்து விடச் செய்யும் ஒரு முயற்சியாகவே நான் இதைப் பார்க்கிறேன்...
வன்முறைகளும் போர்களும் தாக்குதல்களும் நம்மைப் போன்ற வீரர்களுக்கு வேண்டுமானால் ஜகஜமாய் இருக்கலாம் ஆனாலும் நாட்டில் உள்ள மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்... பல இடங்களில் பஞ்சாயத்துக்கு உம் தொடர் காரணம் ஆகலாமா......
ரங்கமணிகளை ரன்வேயில் நிறுத்தி தங்கமணிகளின் தாக்குதலுக்கு டார்கெட்டாக செட் அப் செய்யும் இந்தத் தொடரை நான் கண்டபடி கண்டிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டீரே...
LAST BUT NOT LEAST....நீரும் ரங்கமணி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டாம் என உம்மை எச்சரிக்கிறேன்....
தக்க விளக்கம் கொடுக்காவிட்டால் கடும் எதிர்ப்புப் போராட்டங்களை நீர் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் .
32 comments:
/கல்யாணம் என்ற கலவரத்தில் சிக்கிய் ஒரு அப்பாவி ஆண்மகன் தன்னைக் காத்துக் காப்பாற்றி கரையேர வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இப்படி எழுத்துக்களால் படம் பிடித்து பொதுவில் வைப்பது என்ன நியாயம் அய்யா?///
ஆஹா நம்மளை மாதிரி பித்தளைக மேலே என்னவொரு கரிசனம்!!! :)
//
பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?
//
அதுவும் அனானி பின்னூட்டங்கள் பயங்கர திகில்ங்க அண்ணாச்சி
//
வன்முறைகளும் போர்களும் தாக்குதல்களும் நம்மைப் போன்ற வீரர்களுக்கு வேண்டுமானால் ஜகஜமாய் இருக்கலாம் ஆனாலும் நாட்டில் உள்ள மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்... பல இடங்களில் பஞ்சாயத்துக்கு உம் தொடர் காரணம் ஆகலாமா......
//
என்னாது இதெல்லாம் ஜகஜமா???
அவ்வ்வ்வ்வ்
அங்கன ரிஸிஸ்டர் செஞ்சுட்டு இங்கன எதிர்ப்பு பதிவு போட்டா, உங்க வீட்டுல சும்மாவிடுவாங்களா, அய் அய்
விடமாட்டேம் நீங்க அவரு பதிவுக்கு ஆதரவாக மனைவிகளை எதிர்த்து என்ன என்ன பேர்ல எப்படி எப்படி எல்லாம் பின்னூட்டம் போட்டீங்க என்று அண்ணிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவோம்!!!
இப்படிக்கு
குடும்பத்தில் குண்டுவைப்போர் சங்க
பகுதி நேர ஊழியன்
இந்த எச்சரிக்கை தேவையற்றது..தவறான எண்ணங்களின்மீது அவதூற்றையும் புரளியையும் வைத்துக் கட்டப்பட்ட கோட்டை இந்தப் பதிவு.
ஏன் இந்த அவசரம்?
பொறுமை காக்கவும்!
காலம் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும். இல்லாவிட்டாலும் பிட்டாவது எடுத்துக் கொடுக்கும்.
அண்ணா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இராம்/Raam said...
/கல்யாணம் என்ற கலவரத்தில் சிக்கிய் ஒரு அப்பாவி ஆண்மகன் தன்னைக் காத்துக் காப்பாற்றி கரையேர வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இப்படி எழுத்துக்களால் படம் பிடித்து பொதுவில் வைப்பது என்ன நியாயம் அய்யா?///
உரிமைப் போராட்டத்தில் முதல் ஆதரவு குரல் கொடுத்த தம்பி இராம்க்கு மனமார்ந்த நன்றிகள்
ஆஹா நம்மளை மாதிரி பித்தளைக மேலே என்னவொரு கரிசனம்!!! :)//
//மங்களூர் சிவா said...
//
பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?
//
வாங்க சிவா இது உங்கள் எதிர்கால பிரச்சனை அதற்கு ஒரு தீர்வு காண்போம்
அதுவும் அனானி பின்னூட்டங்கள் பயங்கர திகில்ங்க அண்ணாச்சி//
//மங்களூர் சிவா said...
//
வன்முறைகளும் போர்களும் தாக்குதல்களும் நம்மைப் போன்ற வீரர்களுக்கு வேண்டுமானால் ஜகஜமாய் இருக்கலாம் ஆனாலும் நாட்டில் உள்ள மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்... பல இடங்களில் பஞ்சாயத்துக்கு உம் தொடர் காரணம் ஆகலாமா......
//
என்னாது இதெல்லாம் ஜகஜமா???
அவ்வ்வ்வ்வ்//
சிவா ஆண்மகனுக்கு வீரம் அழகுன்னு நீங்கக் கேள்விபட்டது இல்லையா.. :-)
//குசும்பன் said...
அங்கன ரிஸிஸ்டர் செஞ்சுட்டு இங்கன எதிர்ப்பு பதிவு போட்டா, உங்க வீட்டுல சும்மாவிடுவாங்களா, அய் அய்
விடமாட்டேம் நீங்க அவரு பதிவுக்கு ஆதரவாக மனைவிகளை எதிர்த்து என்ன என்ன பேர்ல எப்படி எப்படி எல்லாம் பின்னூட்டம் போட்டீங்க என்று அண்ணிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவோம்!!!
இப்படிக்கு
குடும்பத்தில் குண்டுவைப்போர் சங்க
பகுதி நேர ஊழியன்//
ரிஜிஸ்டர் செய்தேன் எதற்கு? இல்லறத்தை இனிய அறமாக்கும் பாடம் என்ற நம்பிக்கையில்... இப்படியே பாடத்திட்டம் போனால் நாளைக்கு ரங்கமணி என்றொரு இனமே இல்லாமல் போய்விடும் போல உள்ளதே... தொடர் கூடாது என்பது என் நோக்கம் அல்ல.. தொடர் ரங்கமணிகளுக்கு இடர் ஆகிவிடக் கூடாது என்பதே நம் விருப்பம்
அய்யா குசும்பா.. மனைவிகளா?????? என்ன இது பன்மை...இது குண்டு இல்லை...அதையும் தாண்டி பயங்கரமான ஆயுதமா இல்ல இருக்கு.. வேணாம்..இதெல்லாம் தாங்க முடியல்ல...
//பினாத்தல் சுரேஷ் said...
இந்த எச்சரிக்கை தேவையற்றது..தவறான எண்ணங்களின்மீது அவதூற்றையும் புரளியையும் வைத்துக் கட்டப்பட்ட கோட்டை இந்தப் பதிவு.
ஏன் இந்த அவசரம்?
பொறுமை காக்கவும்!
காலம் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும். இல்லாவிட்டாலும் பிட்டாவது எடுத்துக் கொடுக்கும்.//
வாங்க பினாத்தலாரே
எதிலும் முன் ஜாக்கிரதை பழக்கம்ங்க நமக்கு..அதான் இப்பவே சவுண்ட் விட்டாச்சு... நீங்க பொறுமையா இருக்கச் சொல்லுறீங்க... ஆனா ஆல்ரெடி அட்டோம் பாம் கொளுத்திட்டீங்களே அதுக்கு என்னப் பண்ணுரது?
sirippu waruthu ...sirippu waruthu....sirikka sirikka sirippu waruthu...Dev sir! enna aanalum classes thadaipadathunnu suresh sir sollittaru........
//J K said...
அண்ணா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஜே.கே. தம்பி இப்படி உணர்ச்சி வசப் படக் கூடாது.. இது உரிமைப் போராட்டம் இங்கே உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.. சில்லி பாய்
//jaseela said...
sirippu waruthu ...sirippu waruthu....sirikka sirikka sirippu waruthu...Dev sir! enna aanalum classes thadaipadathunnu suresh sir sollittaru........//
வாங்க ஜெசிலா சிஸ்டர்... பிரதர்ஸோட நிலைமையப் பார்த்தா உங்களுக்குச் சிரிப்பா வருது...:((((
தொடரை நிறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.. தொடரின் பாடத்திட்டத்தை மாற்றுவதே எங்கள் போராட்டத்தின் நோக்கம்...:-)))
ennathaan syllabus mathinalum onnum aagaporathu illaingirathu ennoda opinion.....mmmmm.....nadakkattum.. nadakkattum.....
என்னது விமானம் மறிப்புப் போராட்டமா?ஸுரேஸாபாத்திலா?
இதோ ஒரு லாரி ஆட்கள் வர்ரோம்...
பிரியானியும் குவார்ட்டரும் ரெடி பண்ணுங்க......
\பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?\\
தெய்வமே...நீங்க நல்லா இருக்கானும்:))
//jaseela said...
ennathaan syllabus mathinalum onnum aagaporathu illaingirathu ennoda opinion.....mmmmm.....nadakkattum.. nadakkattum.....//
அதுவும் ரைட் தான்.... இருந்தாலும் ஒரு குறைந்தப் பட்சப் போராட்டாமாவது நடத்தி எங்கள் எதிர்ப்பைக் காட்டுவெதென திடமான முடிவில் உறுதி குறையாமல் இருக்கிறோம். :-)
//சின்ன தம்பி said...
என்னது விமானம் மறிப்புப் போராட்டமா?ஸுரேஸாபாத்திலா?
இதோ ஒரு லாரி ஆட்கள் வர்ரோம்...
பிரியானியும் குவார்ட்டரும் ரெடி பண்ணுங்க......//
இது கொஞ்சம் ஓவரா இருக்க மாதிரி..கொஞ்சம் குறைச்சுகிட்டாப் பெட்டரா இருக்கும் :-)
//கோபிநாத் said...
\பின்னூட்டங்களைப் பாருங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது என பச்சிளம் பாலகர்களாம் நாளைய ரங்கமணிகள் இன்றே தூக்கம் தொலைத்து கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?\\
தெய்வமே...நீங்க நல்லா இருக்கானும்:))//
கோபி செல்லம்.. இந்தப் பதிவின் உணர்வுகளை அப்படியே உள்ளே வாங்கியிருக்கன்னு நல்லாத் தெரியுது... தேங்க்யூ கோபி ;-)
என்ன தேவ்,
வார்த்தையில விளையாடி இருக்க? அப்படி என்ன சொல்லிட்டாரு பெனாத்தலார்?
தேவ் அண்ணே, நீ சொல்றது ரொம்ப கரெக்ட்டுன்னே...
கல்யாணம்னாலே பயந்து போய் கழுத்துல, கையில, இடுப்புல மந்திருச்ச தாயத்தோட சேத்து கயித்தையும் கட்டிக்கற (கருப்பு கலர்) என்னை மாதிரி நல்ல புள்ளங்களுக்கு இந்த பாடம் அநியாயத்துக்கு தலைதெறிக்க ஓட வைக்குது. இந்த தொடர படிச்சப்புறம் என் பிரண்டு கல்யாண சுந்தரத்தை பார்க்கக்கூட போகலன்னா விளைவ யோசிச்சு பாருங்களேன்.
ஆனா எனக்கு தெரிஞ்சு பெனாத்தலார் இந்த மாதிரி ரங்கமணிக்கு எதிரான நிறைய விஷயங்களை செய்யறதால நீங்க பதிவா போடறீங்க நான் போன் செஞ்சி கொஞ்சம் அதிகமா கோவப்பட்டு கேட்டேப்புட்டேன். "தொடர் நல்லாருக்கு, அடுத்த பாகம் எப்ப போடுவீங்கன்னு...!" :)))
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி
ஆகா...அருமையான பதிவு... பினாத்தலாரின் கோனார் நோட்ஸ் பயனுள்ளதுன்னாலும் தங்கமணிகளின் கைகளுக்குச் சென்று விட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே திகிலாக இருப்பதாக ரங்கமணிகள் புலம்புவதன் எதிரொலியே இந்தப் பதிவு என்பதை ஒத்துக்கொள்வதில் யாருக்கும் எப்பொழுதும் எந்த வகையிலும் எந்த வித"மான" ஐயப்பாடும் இருக்கப் போவதில்லை என்று ஆணித்தரமாக நீங்கள் சொல்வதை நானும் பாராட்டுகிறேன். வாழ்க.
//மனதின் ஓசை said...
என்ன தேவ்,
வார்த்தையில விளையாடி இருக்க? அப்படி என்ன சொல்லிட்டாரு பெனாத்தலார்?//
வா நண்பா.. எங்கே உன் ஓசை இன்னும் கேட்கவில்லையே என உள்ளம் குறுகுறுத்தது.. இதோ வந்து விட்டாய்.. ரங்கமணிகளின் உரிமைப் போராட்டத்தில் குரல் கொடுக்க ஓடி வா... ஓடோடி.. விரைந்து வா..
//சென்ஷி said...
தேவ் அண்ணே, நீ சொல்றது ரொம்ப கரெக்ட்டுன்னே...
கல்யாணம்னாலே பயந்து போய் கழுத்துல, கையில, இடுப்புல மந்திருச்ச தாயத்தோட சேத்து கயித்தையும் கட்டிக்கற (கருப்பு கலர்) என்னை மாதிரி நல்ல புள்ளங்களுக்கு இந்த பாடம் அநியாயத்துக்கு தலைதெறிக்க ஓட வைக்குது. இந்த தொடர படிச்சப்புறம் என் பிரண்டு கல்யாண சுந்தரத்தை பார்க்கக்கூட போகலன்னா விளைவ யோசிச்சு பாருங்களேன்.
ஆனா எனக்கு தெரிஞ்சு பெனாத்தலார் இந்த மாதிரி ரங்கமணிக்கு எதிரான நிறைய விஷயங்களை செய்யறதால நீங்க பதிவா போடறீங்க நான் போன் செஞ்சி கொஞ்சம் அதிகமா கோவப்பட்டு கேட்டேப்புட்டேன். "தொடர் நல்லாருக்கு, அடுத்த பாகம் எப்ப போடுவீங்கன்னு...!" :)))
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி//
ஆகா தங்கமே சென்ஷி.. நீ என்னை விட போராட்டத்தில் ஒரு அங்குலம் முன்னால் சென்று விட்டாயடா... உன்னை நினைத்து பெருமிதம் அடைகிறேன்... ம்ம்ம் அடுத்தக் கட்டமாக பெனத்தாலரின் தொடரைக் கடத்தவும் யோசித்துக் கொண்டிருக்கிறோம்... தயாராக இரு.. ரங்கமணிகள் மட்டுமே படித்துக் கொண்டாட வேண்டிய தொடரை பொதுவில் வெளியிடுவது முறையா எனக் கிடேசன் பார்கில் பேரணி புறப்படட்டும் கிளம்பு...
//G.Ragavan said...
ஆகா...அருமையான பதிவு... பினாத்தலாரின் கோனார் நோட்ஸ் பயனுள்ளதுன்னாலும் தங்கமணிகளின் கைகளுக்குச் சென்று விட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே திகிலாக இருப்பதாக ரங்கமணிகள் புலம்புவதன் எதிரொலியே இந்தப் பதிவு என்பதை ஒத்துக்கொள்வதில் யாருக்கும் எப்பொழுதும் எந்த வகையிலும் எந்த வித"மான" ஐயப்பாடும் இருக்கப் போவதில்லை என்று ஆணித்தரமாக நீங்கள் சொல்வதை நானும் பாராட்டுகிறேன். வாழ்க.//
வாங்க ஜி.ரா. நியாயத்தை ஆதரிச்ச உங்களுக்கு நன்றி..அதோடு தொடரப் போகும் எங்கப் போராட்டத்துக்கு உங்க ஆசியும் ஆதரவும் வேணும்... :-)
ஆஹா.... அண்ணனே... இதில் இப்படி ஒரு உள்நோக்கம், சூழ்ச்சி இருப்பது தெரியாமல் அவருக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து விட்டேனே...
இருந்த போதிலும் நாங்கள் வழி தவறும் போது எல்லாம் எங்களை நல்வழி பாதைக்கு மாற்றுவதையே வாழ்க்கை லட்சியமாக வைத்து சங்கத்தில் அயராது உழைத்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு இந்த பதிவு உங்கள் போர்வாளின் கூர்மையை இந்த உலகறிக்கும் முக்கியமாக பமக விற்கும் எடுத்து காட்டுகிறாது.
இதை வரை தடம் புரண்டு ஒடிக் கொண்டு இருந்த நான் இன்று தாயுடன் இணைந்த சேய் போல் உங்கள் விரல்கள் பற்றி நடக்க காத்து இருக்கிறேன்.
வழி நடத்துங்க.. ஆணை இடுங்கள்...
பாஸ்வேர்டை கடத்த வேண்டுமா அல்லது பதிவையே கிட்நாப் செய்ய வேண்டும்.
இவற்றை களவு கொண்டாலும் தொடர்ந்து எழுதுவார் என்றால் ப்ளாக்கரை அமீரகத்தில் தடை செய்ய வேண்டும் என நம் கட்சியின் அமீரகத்து பொறுப்பாளர் அஞ்சாநெஞ்சன் உயர்ந்த மனிதன் தம்பி கதிரை விட்டு உடனே பேச்சுவார்த்தைய ஆரம்பித்து விடலாம்.
தம்பியுடையான் படைக்கஞ்சான்... இது நாள் வரை பெனத்தலார் இந்தப் பதிவினை எழுதமால் இப்போது ஏன் எழுதியிருக்கிறார் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்... ரகசியங்களை வெளியிடுவதன் மூலம் வருத்தப் படாத வாலிபர் சங்கத்தை வருத்தப்பட வைக்கலாம் என பமக படைத் தளபதி பெனத்தலார் செய்கிறார்ரோ என ஐயம் கிளம்புகிறது.. உன் பின்னூட்டம் படித்தப் பின்..
தம்பி தடம் புரண்டது நீ மட்டும் அல்ல.. நானும் தான் ... இனி விழித்துக் கொள்வோம்...பமக சதியை முறியடிப்போம்.... சங்கத்துச் சிங்கங்களே.. ம்ம்ம் இனியும் ரெஸ்ட் வேண்டாம் கிளம்புங்கள் கச்சேரிக்கு
தம்பி தேவ்.
நலம். நலம் அறிய அவா. நீ சகல விதங்களிலும் சந்தோஷமாக இருப்பாய் என நம்புகிறேன். நிற்க.
உன்னிடத்தில் பேச வேண்டியது அனேகம். குறிப்பாக ஒரு விதயம். இது நான் முன்பே உனக்குச் சொன்னதுதான். நீ இளங்கன்று. பயமறியாத பாலகன். அதனால் சில இடங்களில் வெளிப்படையாகத் தெரியும் விஷயங்களினால் நீ கொதிப்படைக்கிறாய். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் நீ அதன் பின்புலங்களை அறிந்து கொண்டால் நீ அவசரப்பட்டது நன்றாகத் தெரியும்.
இப்பொழுதும் நான் சொல்ல வந்த அனேக விஷயங்களைப் பெனாத்தலார் தனிப் பதிவாக போட்டு இருக்கிறார். அங்கும் நான் உனக்கு சில அறிவுரைகளை பின்னூட்டங்களாகத் தந்துள்ளேன்.
அந்தப் பதிவினையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தால் ஒரு பெரும் யுத்தத்தில் நீ பகடைக்காயாக பலி கொடுக்கப்படும் சூழ்ச்சி தெரியும். அதனைப் படித்த பின் நீ விழிப்புடன் நடந்து கொள்வாய் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.
நலமாக இரு.
அன்பு அண்ணன்
கொத்ஸ்
நாங்க பாட்டுக்கு சிவனேனு இண்டர்காலாக்டிக் பாலிடிக்ஸ் பண்ணிகிட்டிருக்கோம். எங்கள ஏன் தேவையில்லாம சீண்டி பாக்குற தேவு?
நிலாத்தேர்தல்ல வாங்கினது பத்தாதா?
சிங்கங்கள் என்று அறியப்படும் உங்கள் சிறு'மட'ற்குழு எங்கள் பேரியக்கத்தை மேலும் சீண்ட முற்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
புண்குறிப்பு: புலியும் கூடச் சேர்ந்து பம்முவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
சிங்கம் புலிகளுக்கான குருபெயர்ச்சி பலன்:
பெரிய இடத்து பகைமையைத் தவிர்க்க சூட்டை குறைத்துக்கொண்டு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும்.
நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்: இருபது ஆடுகளுடன் உடனடியாக கும்பகோணம் போகவும்.
இப்படிக்கு,
இரம்நாதன்
கொபசெ
உருசிய மாவட்டம்
பமக
பாசமிகு தலைவர் கொதஸ் அண்ணா.. தங்கள் கடிதம் கண்டு அதிலே நிறைந்திருக்கும் பாசம் நெஞ்சினிலே தேனாறாகவும் பாலாறாகவும் ஓட எத்தனித்த அத்தருணத்திலே ஆற்றின் குறுக்கே எழுப்பட்ட அணைப் போல மருத்துவரின் எச்சரிக்கை நம் பாசத்திற்கு இடையில் மறித்து நிற்கிறது..
சங்கத்தின் அனைத்து தம்பிகளும் உங்கள் பாசப்பிள்ளைகளே என்பது நீங்கள் அறியாதச் சேதி அல்ல... இன்று நெருப்பாற்றிலே நீந்தும் நிலையில் உங்கள் தம்பிகள்...
பமக வில் உங்கள் கருத்துக்கே எதிர் கருத்தாய் ஓங்கி ஒலிக்கும் ருஷ்ய மாவட்டக் குரல்.. எங்கேயோக் கேட்டக் குரல்... உரிமைக் குரல்...என்ன நாங்கள் செய்வோம்... கனத்த மனத்துடன் களத்தில் குதிக்கிறோம்...
மருத்துவரே கச்சேரிக்கே வந்து சவுண்ட் விடும் உம் தைரியத்தை நான் பாராட்டுறேன்.. ஒத்துக்குறேன்... உமக்கு வீரமிருக்குன்னு... இப்போ அண்ணன் கொத்ஸ்க்கு கட்டுப்பட்டு சவுண்டை லைட்டாக் கன்ட்ரோல் பண்ணிக்குறேன்.. அண்ணன் கொத்ஸ் பீல் பண்ணுவாரேன்னு தான்...
இதே ரீதியிலே கன்டினியூ அப்புறம் சிங்கங்களைக் கன்ட்ரோல் பண்ண முடியாது... கண்டப் படி கர்ச்சிக்க ஆரம்பிச்சுருவாங்க...
பமகவில்ல இருக்க ஒரு சின்னப் புள்ள எதோ அறியாம தெரியாம சவுண்ட் விட்ருச்சுன்னு மன்னிச்சு விட்டுடுறுறோம்...பொழச்சுக்கங்க... மன்னிப்புங்கறதை நாங்களே மொத்த மண்டியாப் போட்டுக் கொடுத்துகிட்டு இருக்கோம்.. எங்களைப் போய் மன்னிப்பு எல்லாம் கேக்கச் சொல்லிகிட்டு... போங்கய்யா... ஹா..ஹா..
Post a Comment