Wednesday, November 28, 2007

கச்சேரி பிலிம்ஸ்

விவாஜியின் சரித்திர வெற்றிக்குப் பின் கச்சேரி பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் துவக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது....

அது குறித்து பல மட்டங்களிலும் ஆலோசனை நடத்தி சார்பான கருத்துக்களைப் பெற்ற நிலையில் அந்த முயற்சியின் அடுத்தக் கட்டமாக கச்சேரி பிலிம்ஸ் துவக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கச்சேரி பிலிம்ஸின் முதல் படைப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்திய போது.. மிக்க மகிழ்ச்சியுடன் தன் இடையறதா பணிகளுக்கு இடையேயும் நம்ம கச்சேரி பிலிம்ஸ்க்காக தன் கால்ஷீட்டை ஒதுக்கி தந்திருக்கிறார் பாசத்துக்குரிய சகோதரர் கப்பி பயல் அவர்கள்

தம்பி கப்பி கொடுத்துள்ள கால்ஷீட்டைச் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி படத்தை இயக்க நம்ம பாசத்துக்குரிய புலி சிவா ஒப்புக் கொண்டுள்ளார்...

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில்.. படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகள் உலகெங்கும் நிறைந்திருக்கும் கப்பி நிலவரின் ரசிகர்களுக்காக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காஞ்சி தமிழ் மகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது.

இந்தப் படத்தில் கப்பி பயல மற்றும் கப்பி கை என்ற இரு மாறு பட்ட வேடங்களில் அசத்தப் போகிறார் கப்பி. இதில் ஒரு வேடத்தில் ஜாவா பாவலராகவே இவர் வருவது கூடுதல் தகவல்.

கப்பிக்கு ஜோடியாக தீபிகா பதுக்கோன் மற்றும் நமீதா நடிக்கிறார்கள்

காஞ்சி தமிழ் மகன் படத்தில் முக்கிய வேடத்தில் துபாய் கோபி, குசும்பன், அய்யனார், மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்களாம்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்போடு தயாரிக்கும் பொறுப்பையும் கச்சேரி பிலிம்ஸ் ஏற்று கொள்கிறது.

கதையின் நாயகன் அறிமுக காட்சியும் அதை ஒட்டிய பாடலும் தற்சமயம் மிகவும் பிரமாண்டமாய் எடுக்கப் பட்டு வருகிறது...அந்தக் காட்சியில் நடிப்பதற்கு கப்பி அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

கச்சேரி பிலிம்ஸின் துவக்க விழாவை முன்னிட்டு அந்தக் காட்சியும் பாடலின் ஒரு சில வரிகளையும் இங்கு தெரிவிக்கிறோம்.

காட்சி 1:

அமெரிக்கா டல்லாஸ் நகரத்தின் மிக பெரிய அலுவலக வளாகம்..அங்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

அனைத்துக் கம்ப்யூட்டர்களில் கலர் கலராக பக் தெரிகிறது..எல்லாக் கம்ப்யூட்டர்களும் பக் அட்டாக்கில் ஆடி தவிக்கின்றன... பக் ரிப்போர்ட் மெயில் பாக்ஸ் தாண்டி வ்ழிந்து வெளியே விழுகிறது... பக் ரிப்போர்ட் எடுத்துப் படிக்கும் அலுவலக பாஸ் டென்சன் ஆகிறார்...

"பத்தாயிரம் பக்ஸா...என்னப் பண்ணுறது?" பாஸின் கேள்வி ஆபிசையே கட்டிப் போடுகிறது...

"என்ன பண்றது?.."என்ன பண்றது?.." எல்லாரும் தவித்து நிற்க...

அலுவலகக் கண்ணாடி எல்லாம் அப்படியே வெடித்துச் சிதறுகிறது.. காற்று பேயாட்டம் அடிக்க....திரைச் சீலைகள் எல்லாம் கண்டப் படி பறக்க... மானிட்டர்கள் எல்லாம் கண்ட படி ரீபுட் ஆகி.. ஸ்கிரீனில்... தளபதி...ஜாவா தளபதி அப்படின்னு தெரிய.....
ஆபிஸ் சுவர்கள் கிராபிக்ஸில் தளபதி ..தளபதி ஜாவா தளபதி என மாற...

ஒரு நிமிட நிசப்தத்தில் குரல் ஒலிக்கிறது....

"எவ்வளவோ பிக்ஸ் பண்ணிட்டோம்... இதை பண்ண மாட்டோமா...."

அந்த குரல் கேட்டதும் எல்லோர் முகத்திலும் புன்னகை வருகிறது...

அங்கேப் பாட்டு ஸ்டார்ட் ஆகிறது...


"எல்லா பக்கும் ஒருவன் ஒருவனுக்கே....
நீ பிக்ஸ் போட ஓடிக் கொண்டே இரு...

எந்தப் பக்குக்கும் பிக்ஸ் உண்டு
பிக்ஸ்க்கும் ஒர்க் உண்டு...
நீ டைம் ஷீட்டைப் பில் அப் பண்ணு...

ஆன் சைட் மக்கா
புராஜக்ட் நமக்கே

ஜவஜவ ஜாவா தளபதி தளபதி
காஞ்சி புரத்துத் தமிழ் மகன் நீ தானே...

கப்பி நிலவன் மனது வைத்தாஆஆஆஆல்.....

இந்தப் பாட்டை ரஹமான் குரலில் கற்பனைப் பண்ணிப் பாருங்க....

இந்தத் தகவல்களே கப்பி நிலவரின் ரசிகர்களின் மத்தியில் ஒரு மாபெரும் கிறக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிச்சயம்...

காஞ்சி தமிழ் மகன்.... கே.டி.எம் என்று சுருக்கமாக அவரது ரசிகர்கள் வட்டத்தில் இப்போதே பரபரப்பாகப் பேசப்படுகிறது எனவும் சொல்லத் தான் வேண்டுமா...

KTMல் பங்களிக்க விரும்புவோர் கச்சேரி பிலிம்ஸ் நிறுவனத்தை உடனே அணுகலாம்.

காஞ்சி தமிழ் மகன் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனவும்.. சங்கம் பிலிம்ஸ் மூலம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் திரையிடப்படும் எனவும் தெரிகிறது..

MOST AWAITED MOVIE OF THIS SEASON

கப்பி பயல் VS KAPPI GUY காஞ்சி தமிழ் மகன் (KTM)

DUNT MISS IT IN A BLOG NEAR YOU

41 comments:

CVR said...

:-D
ஜூப்பரு!!!!

படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தளபதி கப்பியின் ரசிகர்களில் நானும் ஒருவன்!!!

எப்போ படம் ரிலீஸ்??? :-)))

Anonymous said...

KTMக்கு எனது முழு ஆதரவுகள்.கப்பிக்கு ரெண்டு ஹீரோயிந்தானா?என்ன கொடுமை இது?அவர் ரேஞ்சுக்கு ஒரு 15-20 தேவைப்படும்.. :))))

இராம்/Raam said...

எவ்வளவோ மொக்கை படத்தெய்யல்லாம் பார்த்துட்டோம், நம்ம கப்பி நிலவர் நடிக்கிற படத்தை பார்க்க மாட்டோமா?? :))

இலவசக்கொத்தனார் said...

என்ன ஆச்சு படம் மாறிப் போச்சு? இருந்தாலும் ஆவலுடன் எதிர்பாக்கிறேன். மானிடர் ரீபூட் ஆவது போன்ற சங்கதிகள் நிறைந்த படம் போல!!

நமீதா said...

இது ரொம்ப குட் மூவி.இதுல நம்ப கப்பிக்கூட நடிக்கிது.கப்பி நல்ல ஜாவா பண்ணுது.அதை எனக்கு ரொம்ப புடிக்கிது.கப்பி ரொம்ப சுவிட்.அவர் கூட வொர்க் பண்ணுறதுல நமக்கு ரொம்ப ஹாப்பி

கப்பி பக்தன் கந்தசாமி said...

தமிழகப் பதிவுலக எதிர்காலம் அண்ணன் கப்பியார் நடிக்க இன்று துவங்கும் காஞ்சி தமிழ் மகன் திரைக்காவியம் மாபெரும் சாதனைப் படைக்க மனமார வாழ்த்துகிறேன்.

கப்பி பக்தன் கந்தசாமி
ஜாவா தளபதி இளைய நிலவர் கப்பி தலைமை மன்றம்

கப்பி வெறியன் said...

அழகிய தமிழ்மகன் இந்த காஞ்சி திருமகன்

கச்சேரி பிலிம்ஸ் மேனேஜர் said...

கப்பி சார் கூட வொர்க் பண்ணுறது ரொம்ப சந்தோஷமான விஷயம்.. தமிழ் பதிவுலகத்தின் ரைசிங் ஸ்டார் கப்பி சார். அவர் கூட இந்தக் காஞ்சி தமிழ் மகன் படம் பண்ணுறது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

DEEPIKA PADUKONE said...

என்கு டமீல் தெர்யாது..பட் I HAVE SEEN SO MANY OF KAPPI SIR"S FILMS..HE's AWESOME..I HEARD THEY CALL HIM SHAHRUKH OF THE SOUTH..I LOOK FORWARD TO WORK WITH HIM..I AM SO EXCITED

கப்பி நேசன் said...

அண்ணன் தான் போக்கிரி... அண்ணனை எதிர்த்தா ஆயிடுவே நாலு கிலோ ஜாங்கிரி....
காஞ்சித் தமிழ் மகன் வெற்றி அண்ணன் கப்பியார் புகழ் போற்றி....

கப்பி நேசன்
தலைவர்
காஞ்சித் தலைவன் கப்பி பேரவை காஞ்சிபுரம் மாவட்டம். கிழக்கு வட்டம்.

இம்சை அரசி said...

eagerly waiting for KTM... :)))

கொலைவெறி ரசிகன said...

கப்பி நிலவர் வாழ்க வாழ்க...

காஞ்சி தலை மகன் கப்பி நிலவரின் KTM படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் தளபதியின் கொலைவெறி ரசிகன், அடையாறு கிளை, சென்னை

த்ரிஷா said...

கப்பி ஏன் இப்படி என்னை ஏமாத்தினீங்க? உங்களோட ஹீரோயினா நடிக்கணும் என்பது தான் என் வாழ்க்கை லட்சியமே. என்னை விட்டுட்டு வேற பொண்ணோட நடிக்கறீங்களே :(

நாகை சிவா said...

இந்த படத்தில் இயக்குனர் என்கிற முறையில்.

இது வரை காணாத கப்பியை இந்த படத்தில் நீங்கள் காணுவீர்கள். எத்தனையோ இரட்டை வேடம் படங்கள் வந்து உள்ளது. இது போன்ற ஒரு படம் கண்டிப்பாக வந்து இருக்காது. கப்பிக்கும் இது இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம். பெயர் சொல்லும் படமாகவும் அமையும்.

கதாநாயகிகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கப்பிக்கு ஒரு நமீதாவுக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கு சார். அது நல்லாவே இந்த படத்துக்கு ஒத்துழைப்பு தருது. என்ன ஒரு அன்னியோனம் அவர்கள் இவர்கள் இடையவும். இந்த காரணத்தால் பாடல் காட்சிகள் எல்லாம் அதிரும், பாருங்க.

இன்னொரு கதாநாயகி தீபிகா, கப்பி பெயரை கேட்டதில் இருந்து அவர் கூட வொர்க் பண்ண ரொம்ப ஆர்வமா இருக்காங்க. தோணி பங்கேற்கும் டெஸ்ட் மேட்ச் மிஸ் பண்ணிட்டு வர அளவுக்கு.

இசை இந்த படத்துக்கு ஒரு மிக பெரிய + பாயிண்ட் டா இருக்கும். கூடவே இந்த படத்தில் ஒரு முடிச்சு வச்சு இருக்கோம் அந்த முடிச்சு இரண்டு கப்பிகளும் சந்திக்கும் போது அவிழும். அந்த முடிச்சு அவிந்த பிறகு படம் சும்மா கட்டி இருந்தவன் வேட்டியை எவனாச்சும் உருவிட்டா எப்படி ஒடுவானோ அதை விட வேகமாக ஒடும்.

இதுக்கு மேல் நான் சொன்னால் முழு கதையும் சொன்ன மாதிரி ஆயிடும்.

இந்த வருடத்தில் விவாஜி க்கு அடுத்து பேசக் கூடிய படமா இது இருக்கும் சார்.

Asin said...

actually i dont want to act with vijay, ajith, blah, blah. i want to act with u only kappi guy. caz u r my favourite hero. but u didnt decide me as ur heroine :( feel like a hell :'(

சூப்பர் ஸ்டார் ரஜினி சார் said...

எனக்கு ஒரு தங்கமகன். கப்பிஜிக்கு காஞ்சி தமிழ் மகன்.. இயக்குனர் சிவா ஜி இருக்காங்க. மேலே ஆண்டவஞி இருக்காங்க.பாக்குறதுக்கு பேன்ஸ் ஜி எல்லாம் இருக்காங்க சோ படம் டெபனட்டா ஹிட்டாவுது. இது நான் சொல்லுறேன். அந்த பாபாஜி கிட்டே கேட்டு சொல்லுறேன். ஜெய் ஹிந்த்.

ஸ்ரேயா said...

அழகிய தமிழ்மகன் கமிட் பண்ணினதே கப்பி கூட ஹீரோயினா நடிக்கும் சான்ஸு கிடைக்கணும்னு நம்பிதான். ஆனா கடைசில அந்த தீபிகாவ செலக்ட் பண்ணிட்டீங்களே கப்பி. இது ரொம்ப ஓவர்.

நயன் தாரா said...

கப்பி நிலவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் திரையுலகை விட்டே விலகுகிறேன் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு உங்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் அதை விட கப்பியின் இந்த முடிவால் அதிகம் காயப்பட்டு விட்டேன். அதனால் தான் :'(

- நயன்

பினாத்தல் சுரேஷ் said...

வரப்போகும் விமர்சனங்கள்:

காஞ்சிப் போன தமிழ்மகன் - மூணு மணிநேரம் புல் வேஸ்ட்

எவ்வளவோ பண்ணிட்டோம் - அதுக்காக தற்கொலையுமா பண்ணிக்க முடியும்?

KTM - killing time movie!

இவிங்க இப்பிடித்தான் எதாச்சும் விமர்சிச்சிகிட்டே இருப்பாய்ங்க - நீங்க கலக்குங்க நாகை சிவா & தேவ்

கைப்புள்ள said...

ஜாவா பாவலர் கப்பி நிலவரை வச்சி ரீமேக் பண்ணறதுக்காகவே அப்பவே புரட்சித் தலைவர் "காஞ்சித் தலைவன்"னு ஒரு படம் எடுத்து வச்சிட்டுப் போயிருக்காரு.

KTM டிரெயிலரே கலக்குதப்பு. கப்பியார் உருகுவேல ஒருத்தனுக்கு உட்டுக் குடுத்து அவன் இப்ப நல்ல நெலமைல இருக்கானே அதப் பத்தி எல்லாம் சொல்லுவே இல்ல?
:)

ILA(a)இளா said...

hhahhahah, Superuuu

ஜி said...

:))))

KTM thirai postergalai viraivil veliyidumaaru cutchery filmsai kettu kolgiren

கோபிநாத் said...

பின்னிறிங்க....;)))

கப்பி பய said...

ஜக்குபாய் அன்னிக்கு சொன்னதை நான் இப்ப சொல்றேன்

"இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்"


டோட்டல் டேமேஜ்டா கப்பி :((

.:: மை ஃபிரண்ட் ::. said...

வரும்போதே குவாட்டர் செஞ்சுரியுடன் உள்ளே வர்றேன். :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

மே ஐ கம் இன்சைட்???

.:: மை ஃபிரண்ட் ::. said...

அஸ் யூச்சுவல், பதிவை படிக்காமல்தான் உள்ளே வந்ட்திருக்கேன் நான். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

/துர்கா|thurgah said...
KTMக்கு எனது முழு ஆதரவுகள்.கப்பிக்கு ரெண்டு ஹீரோயிந்தானா?என்ன கொடுமை இது?அவர் ரேஞ்சுக்கு ஒரு 15-20 தேவைப்படும்.. :))))
//

துர்கா, நீ என்ன ரயில் வ்வண்டி பேரெல்லாம் சொல்லுற?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆப்போ மலேசிய ரயில் வண்டிதான் கப்பி நிலவரா?? ஓஹோ..

KTM ரயில் வண்டி said...

கூ கூ....

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. யாருப்பா அந்த அனானி???

ஒரு கை குறையுதூன்னு நெனச்சேன்.. ஆதரவுக்கு வந்துட்டீங்க. வாங்க விளையாடலாம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. யாருப்பா அந்த அனானி???

ஒரு கை குறையுதூன்னு நெனச்சேன்.. ஆதரவுக்கு வந்துட்டீங்க. வாங்க விளையாடலாம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கப்பிக்கு ரெண்டு ஹீரோயிந்தானா?//

அதான் காலையில கவலையில இருந்தாரா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

சாரி அறிவுஜீவி சார்.. நீங்க இந்த பக்கம்ம் வரவே கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டிருந்தாலும் கடமை என்னை அழைத்துவிட்டட்து. ;-)

நமிதா said...

கப்பிதான் ஹீரோன்னா நாந்தான் ஹீரோயின்...

லொள்ளு சத்யராஜ் said...

கப்பி மாதிரி வயசானவன் கூட நடிக்காத கண்ணு.. கப்பீ என்னை விட சீனியரு.

போலி கப்பி said...

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே, என்ன இது? எல்லா நடிகைகளும்கப்பி கூட நடிக்கிறதுக்காக ஆவலா இருக்காங்க?

அப்படிஎன்னத்தான் பதிவுல எழுதியுக்கீங்க?

.:: மை ஃபிரண்ட் ::. said...

புரீயுது... பதிவை படிக்காமலேயே இங்கே என்ன பண்றன்னுதானே க்ட்குறீங்க??

பதிவை படிச்சுட்டு வந்து அடுத்த கும்மியை வச்சிக்குவோம். ;-)

இம்சை அரசி said...

என்ன பண்றது அனு? கப்பிக்கு நடிகைகள் மத்தில கூட பெரிய ஃபேன்ஸ் வட்டம் இருக்கும் போல... :P

தல பெரிய ஆளுதான் ;)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10