Thursday, November 29, 2007

பாலாகன்

சமீபத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ரீமேக் மயமாக உள்ளது.. நம்ம கச்சேரி பிலிம்ஸ் "விவாஜி" "காஞ்சித் தமிழ் மகன்" போன்ற 100 சதவீத அசல் படங்களைக் கொடுத்தாலும்... ரசிகர்களின் ரீ மேக் ரசனைக்கும் தீனி போடும் விதமாக படங்கள் கொடுக்கத் தீர்மானித்து களத்தில் இறங்கி விட்டோம்...

கச்சேரி பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் அடுத்த படைப்பு

உலகப் பதிவர் பாஸ்டன் பாலா (பாபா) கலக்கப் போகும் பாலாகன்

பாபா சிறுவன்..வாலிபன்..நடுத்தர வயது நாயகன், வயதான மனிதராக பலக் கெட்டப்புக்களில் கலக்க இருக்கிறார்.

இளையராஜாவின் இசையை ரீ மிக்ஸ் செய்து பாடல்கள் கலக்கப் போகிறதாம்.

பாபாவுடன் விஎஸ்கே, கொத்தனார், பெனத்தலார், மருத்துவர் ராமநாதன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க இருக்கிறார்கள்.

வலையுலகத் திரை வரலாற்றில் முதல் முறையாக லக்கி லுக் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்பார் எனத் தெரிகிறது..அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டு வருகின்றன.


பாலாகன் ட்ரெயிலர் உங்களுக்காக.........

1987.....மைலாப்பூர்...பள்ளிக்கூடம்

சிறுவன் பாலா...: பிட் எடுத்துட்டுப் போறது தப்பில்லையா

பெரியவர்: தப்பு இல்லைப்பா..எடுத்துட்டுப் போற பிட் இன்னும் நாலு பேர் காப்பி அடிக்க யூஸ் ஆகும்ன்னா எதுவுமே தப்புல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்....

சிறுவன் பாலா...: தப்புன்னு சொல்லுறாங்களே...

பெரியவர்: ஆமா..தப்புத் தான்..உன் பரீட்சைப் பேப்பர்ல்ல நீ பதில் எழுதாம.. இந்தக் கேள்விக்குப் பதிலை அவன் பேப்பர்ல்ல பார்.. அந்தக் கேளவிக்குப் பதிலை இவன் பேப்பர்ல்ல பாருன்னு சுட்டிக் கொடுத்தாத் தப்புன்னு தான் சொல்லுவாங்க... டொன்டொன்டொன்டொய்ங்....

பேக் கிரவுண்டில்...இளையராஜா வாய்ஸ் ஒலிக்கிறது...ஆஆஆஆ......

டென்த் ஸ்டாண்டட் பரீட்சையிலே...
சுட்டிக் கொடுத்து எழுதியவனை...
யார் அடிச்சாரோ..யார் அடிச்சாரோ....
வளரும் பிளாகா நீ சாயாதே...
சுட்டிக் கொடுக்க நீயும் தயங்காதே...


அடுத்தக் காட்சி....

பாலாகர் அய்யா....போயிருங்க....போயிருங்க.... ஒரு வயதான அம்மா குரல் கொடுக்கிறார்..

ஈ தமிழ் இணையத்தில் இருந்து பாலா எட்டிப் பார்க்கிறார்....

பாலாகர் அய்யா... போயிடுங்க... உங்களை எப்படியும் தமிழ்மண நட்சத்திரம் ஆக்கி ஒரு வாரம் நோகடிக்கணுங்கற முடிவோட வர்றாங்க... நாங்க எல்லாம் இருக்க வரைக்கும் உங்களை அந்த நிலைம்மைக்கு விட மாட்டோம்....

பாலாகர் அய்யா ஆண்டவா...அப்படின்னு வானம் பார்க்கிறார்....ஓஓஓஓஓஓ பேக் கிரவுண்ட் மீசிக் வருகிறது.

அடுத்த கட்...வெனீஸ் நகரத்து போட் காட்டுகிறோம்..அந்தப் போட்டில் நம்ம வெட்டிப் பயலும் பாலாவும் இருக்காங்க....பாபாவின் விருப்பபடி சானியா மிர்சா அந்த போட்டில் டென்னிஸ் பற்றி பதிவெழுதக் குறிப்புக் கொடுக்க வருகிறார்....

ஒய்யா ஓ...அது என்ன வோ....
கோலா அது அட்ல்ல பாரு....
பாலா என் கூட போட்ல்ல ஏறு...
ஒய்யா ஓ அது என்ன ஓ...

பொழுதானாப் போச்சு..
பதிவெல்லாம் படிச்சி
பொழப்பே கெட்டுப் போச்சு...

கொடுக்குற சுட்டியிலே
ஒரு சுட்டி நம்ம சுட்டித் தான்
அதைப் படிக்கிற குட்டியிலே
ஒரு குட்டி சிக்குற குட்டித் தான்..

அட பதிவுல்ல
தினம் தினம்
அடிதடி தான்
அது படிக்கிற
கூட்டம்
அடிக்குது
கும்மி கும்மி தான்
அடி ஆத்தாடி
பிளாக் வெறும் கூத்தாடி
பிளாக் உலகில் நான் தாத்தாடி...


அடுத்து கட்..

பாலாகர் அய்யா, கொத்தனார், பெனத்தலார் எல்லாரும் நிற்க...

பாலாகர் அய்யா... இப்படி ஒரு பிளாக் முழுக்க சுட்டியாக் கொடுக்கறது தப்பு இல்லையா

கரகரப்பானக் குரலில் பாலாகர் அய்யா சொல்லுகிறார்...

நாலு பேர் படிக்கறதுக்காக நாப்பது பக்கத்துக்குச் சுட்டிக் கொடுத்து ஒரு பிளாக் போட்டாத் தப்பே இல்ல....

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி...

சிறுவன்: பாலாகர் அய்யா சொல்லுங்க... நீங்க பிளாகரா..பிளாக் வாசிப்பவரா...

பாலாகர்: தெரியல்லயேப்பா...தெரியல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி

"யோவ் கொத்தனாரே... ஏன் அவங்க எல்லாம் நம்ம தமிழ் பிளாக்க்கு பின்னூட்டம் போட மாட்டாங்களாமா....நாம நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்... அதுல்ல நம்ம தமிழ் பிளாக்குக்கு மட்டும் தான் பின்னூட்டம் போடுறோம்...வெள்ளைக்காரன் பிளாக்கெல்லாம் போட மாட்டோம்...

ஒரு ஐடி ஓப்பன் பண்ண என்னச் செலவு ஆகும்ன்னு சொல்லு...

"பாலகர் அய்யா..ஒரு ஐடிக்கு.....ம்ம்மது..."

"ஆவட்டும்ய்யா..எவ்வளவு வேணும்ன்னாலும் ஆவட்டும்..ஓப்பன் பண்றோம்.. நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்..."

டொன்டொன்டொன்டொய்ங்

COMING SOON

THE BIGGEST ATTRACTION OF EARLY 2008

CUTCHERY FILMS

'ULAGA BLOGGER' BOSTON BALA in and as

BALAGAN

DUNT MISS IT IN A BLOG NEAR YOU !!!!

18 comments:

Anonymous said...

அவரையும் விட்டு வைக்கலையா :)))
நடத்துங்க.தங்கை உம் பக்கம்தான் அண்ணா.கும்மி அடிக்க ஓடோடி வருவேன்(வரமுடியமால் போனலும்,கண்டிப்பாக படிப்பேன்)

பினாத்தல் சுரேஷ் said...

பாபா காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வருகிறார். நெறய மெயில் பாக்ஸ் புல்லா!ஏழெட்டு சாட் பாக்ஸ் ஓப்பன் ஆகியிருக்கு

"பாபா மனசத் தளர விடாதீங்க"
"என்ன சொல்றீங்க நீங்க?"

"ஏன் எல்லாரும் காலையில வந்திருக்கீங்க?"

வெட்டி வருகிறார்.. சோகத்தில் தமிழ் பேச வரவில்லை..

"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆ..

ஆயில்யன் said...

//பிளாக் உலகில் நான் தாத்தாடி...//

சூப்பரப்பு!

ஒரே கலக்கல்ஸ்தான் போங்க....!!!

கைப்புள்ள said...

நாலு பேரு சிரிக்கிறாங்கன்னா நாலு பக்கம் புகழ் வாய்ந்த ப்ளாக்கரைக் கூட கலாய்க்கிறது தப்பே இல்ல. நீ நடத்துடி.
:)

//"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..//
:)))) கலக்கல்ஸ்.

குனிஞ்சு நெளிஞ்சு கும்மியடிக்க ஏத்த பதிவு தான்யா.
:)

CVR said...

LOL!!!!
செம காமெடியா இருக்கு!!!!

ஹஹ ஹா!! :-D

கோபிநாத் said...

அண்ணே ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கிங்க போல...சூப்பர் பதிவு ;)))

\\பிளாக் உலகில் நான் தாத்தாடி...\\

சூப்பர் பஞ் ;))

கோபிநாத் said...

\\\பினாத்தல் சுரேஷ் said...
பாபா காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வருகிறார். நெறய மெயில் பாக்ஸ் புல்லா!ஏழெட்டு சாட் பாக்ஸ் ஓப்பன் ஆகியிருக்கு

"பாபா மனசத் தளர விடாதீங்க"
"என்ன சொல்றீங்க நீங்க?"

"ஏன் எல்லாரும் காலையில வந்திருக்கீங்க?"

வெட்டி வருகிறார்.. சோகத்தில் தமிழ் பேச வரவில்லை..

"பாபா.. மன ப்ளாக்கு நுவ்வு ப்ளாக்கு"

"வெட்டி ஏமி செப்பித்தாரு"

இ-தமிழ்.. இதமிழுக்கு என்னாச்சு..

ஹாக் பண்ணிட்டாங்களாம் பாபா..

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆ..\\

தெய்வமே எங்கையோ போயிட்டிங்க...;)))

நாகை சிவா said...

நைனா(பாலாகர்) நீங்க நிறுத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்....

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்

யாரை

பார்வர்ட் மெயிலில் வரும் மொக்கையை எல்லாம் பதிவா போட்டு அதை என்னையும் படிக்க வைக்குறான் பாரு அவனை நிறுத்து சொல்லு நான் நிறுத்துறேன்

ஒரு 100 பேர்க்கு லிங்க் கொடுக்கும் எனக்கு நன்றி சொல்லி தன் பின்னூட்ட கணக்கை ஏத்திக்குறாங்க பாரு அங்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்னூட்டத்தில் பதில் சொல்லாம உடனே ஒரு எதிர்வினை பதிவு போட்டு என் பதிவை இருட்டிப்பு செய்யுறான் பாரு அந்த *(&((&%#$$@#$#% #*^^#*. அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

அவ்வளவு ஏன் ஏது நடந்தாலும் நான் ஏதோ கருத்து கந்தசாமி போல் இதுக்கு பாபா வின் பதில் என்ன என்று என் வேட்டிய உருவ பாக்குறாங்களே அங்களை நிறுத்த சொல்லு அப்புறம் நான் நிறுத்துறேன்.

சரி அது எல்லாம் இருக்கட்டும்.. நான் என்ன சொன்னேனு இம்புட்டு உணர்ச்சிவசப்படுறீங்க.. நான் சொன்னது உங்களுக்காக செய்த எல்லாம் கட்வுட்டையும் நிறுத்தனும்.. தூக்கி நிறுத்தனும் என்று...

இலவசக்கொத்தனார் said...

முதலில் பேரை மாத்துங்கப்பா
பாலாகன் என்னமோ பாலகனுக்குக் கால் முளைச்சா மாதிரி இருக்கு,

பாபாகன் அப்படின்னு வையுங்க. பாபாவின் பெயரை வரலாற்றில் பதிச்சா மாதிரி இருக்கும். அந்த பாபா அருளும் கிடைக்கும். கன் எல்லாம் இருப்பதால் பாபா வலை கேங்க்ஸ்டர் என்ற பொருளும் வரும்.

பாலாகன் என்ற பெயரை பாபாகன் என மாற்றினால்தான் ஆச்சு!!

(பெயர் மாற்றினால் படம் பிச்சிக்கிட்டு ஓடுமாம்லே. அதான் செண்டிமெண்ட்)

இலவசக்கொத்தனார் said...

முதலில் பேரை மாத்துங்கப்பா
பாலாகன் என்னமோ பாலகனுக்குக் கால் முளைச்சா மாதிரி இருக்கு,

பாபாகன் அப்படின்னு வையுங்க. பாபாவின் பெயரை வரலாற்றில் பதிச்சா மாதிரி இருக்கும். அந்த பாபா அருளும் கிடைக்கும். கன் எல்லாம் இருப்பதால் பாபா வலை கேங்க்ஸ்டர் என்ற பொருளும் வரும்.

பாலாகன் என்ற பெயரை பாபாகன் என மாற்றினால்தான் ஆச்சு!!

(பெயர் மாற்றினால் படம் பிச்சிக்கிட்டு ஓடுமாம்லே. அதான் செண்டிமெண்ட்)

கப்பி பய said...

:)))

அவரும் சிக்கிட்டாரா? :)))


//பாபா சிறுவன்..வாலிபன்..நடுத்தர வயது நாயகன், வயதான மனிதராக பலக் கெட்டப்புக்களில் கலக்க இருக்கிறார்.//

இதுல எந்த ரோல்ல மேக்கப் இல்லாம நடிக்கறாரு?? :))

துளசி கோபால் said...

ஆமாம். 'பாபகன்'ன்னு வைக்கணும்.

தெரிஞ்சுதான் 'கால்' போடலை:-))))

G.Ragavan said...

அடா அடா அடா

ஆரம்பமே களை கட்டுதே.... போகப் போக எப்படி இருக்குமோ...

வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம் கெட்டி வெச்சிருக்கு. அவங்களையும் இப்பிடி ஏதாச்சும் செய்யனும்யா...

Boston Bala said...

இருங்க ;)

ப்ளாகிச்சுட்டு வாரேன் :)

செல்வேந்திரன் said...

லொள்ளு சபாவுக்கு கவுண்டர் கொடுக்கிற மாதிரி அடி பின்றீங்களே பாஸூ http://selventhiran.blogspot.com/2007/12/blog-post_15.html

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தல..
கைப்புவும் புலியும் தானே ஒதவி டைரக்டர்கள்? பாபாகன் பேரே நல்லா இருக்குப்பா!
டீச்சர் சொல்லுறா மாதிரி பாபகன்-ன்னு எல்லாம் வச்சா கட்ச்சீலே பாப்கார்ன்-னு வந்து முடியும்! அதுனால தடா! :-)

//அடி ஆத்தாடி
பிளாக் வெறும் கூத்தாடி
பிளாக் உலகில் நான் தாத்தாடி//

பாஸ்டன் ஸ்கூப் செய்திகள்:
வலைப்பூ விருதுளின் கவுஜை கேட்டகரியில் தேவ் அண்ணன் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதை சிரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம் கெட்டி வெச்சிருக்கு. அவங்களையும் இப்பிடி ஏதாச்சும் செய்யனும்யா...//

ஆறு மனமே ஆறு!
அண்ணாத்த கட்டளை ஆறு! :-))

cheena (சீனா) said...

என்னாச்சு பாலாகன் - பாபாகன் - பாபகன் - ரிலீஸ் ஆச்சா இல்லியா

tamil10