Monday, January 28, 2008

சொன்னா மானக்கேடு...சொல்லாட்டி வெக்கக்கேடு...


"டேய் நீ எல்லாம் ஒரு மனுசனா.... உன்னச் சுத்தி என்னவெல்லாமோ தப்பு நடக்குது..அதுவும் தப்பு தப்பா நடக்குது... கருத்துச் சுதந்திரம்ங்கற பேர்ல்ல கருவாடு மீனாகுது.. மீன் வெறும் கூடாகுது...

அவங்கப் பேசலாம்...பேசிகிட்டேப் போலாம்...நீ கேளு..கேக்காம போ...ஆனா கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது....கேட்டா... பிஞ்சுரும் பேட்டா...மேடை மைக் எல்லாம் உனக்கு இல்ல.. இல்லவே இல்ல... புரியுதா? கையை மட்டும் தட்டு.. தட்டிகிட்டே இரு....

காலம் காலமா இதைத் தானே செய்யுற... இப்போ மட்டும் என்ன வந்துச்சு? அதையேச் செஞ்சுட்டு போ... என்னாது கோவம் வருதா....அதெல்லாம் எதுக்கு? என்னப் பண்ண போற கோவப்பட்டு....

போடா போவீயா... போய் பொழப்பைப் பாரு... உருப்படற வழியை பாரு....யாருக்கு என்ன நடந்தாலும் ஏன் உனக்கே என்ன நடந்தாலும் "மூடிகிட்டு" இருக்கறதோ இல்ல போறதோ தான் பொழைக்கற புள்ளக்கு புத்திசாலித்தனம் ... ரைட்டா...

அய்யோ இதெல்லாம் உங்களைச் சொல்லல்ல... எனக்கு நானே சொல்லிகிட்டது... சொல்லிக்குறது... சொல்லிக்கப் போறது..

இதை எல்லாம் வெளியே சொன்னா மானக்கேடு... சொல்லாட்டி வெக்கக்கேடுங்கண்ணா"

இதை எல்லாம் படிச்சுட்டு கைத் தட்டுனும்ன்னா என் பின்னூட்டப் பொட்டி தொறந்தே தான் இருக்கு... கோவத்துல்ல முதுகைத் தட்டுணும்ன்னா... ஓவர் டூ ஜி.ரா அன்ட் காதல் முரசு அருட்பெருங்கோ... ஏன்னா அவங்க இரண்டு பேரும் தான் என்னை மொக்கப் போடச் சொல்லிக் கூப்பிட்டாங்க....

போட்டாச்சுப்பா மொக்க...

நம்ம பங்குக்கு நான் கூப்பிடுறது....

அனுசுயா
சந்தனமுல்லை

27 comments:

அனுசுயா said...

என்ன கொடுமையிது தேவ்.
மீ த பர்ஸ்ட்டு :)

MyFriend said...

ஹாஹாஹா... நல்லா மொக்கை போடுறீங்கண்ணா.. :-P

CVR said...

உங்களுக்கு இது தேவையா?? :-P

பினாத்தல் சுரேஷ் said...

கருத்தாழம் மிக அதிகமாக இருப்பதால் இதை மொக்கை என்று ஏற்கமுடியாது. விஜயகுமார் பாணியில் சொல்லப்போனால்


செல்லாது செல்லாது!

இன்னொண்ணு போடுங்க (ஒன்ஸ்மோர் மாதிரி)

இலவசக்கொத்தனார் said...

//நாம் புற உலகின் அங்கமாக இருக்கலாம். சூழல்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கூட்டத்தில் வசிக்கலாம். உதாரணமாக நாம் அனைவரும் வலைச்சரம் ஆட்கள் என்பது கூட்டத்தில் வசிப்பதற்கு சமம். அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்தால் நாம் இன்னும் இருத்தலுக்கான தகுதியை படைத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். இந்த வலைச்சரம் என்ற சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதிலிருந்து எதை நாம் கைகூடிவர செய்திருக்கிறோம் என்பது முக்கியம். அப்போதுதான் இருத்தலுக்குரிய அசலான மனிதர்களாக வாழ்வோம். அதாவது, நமக்கான பிளாக்கில் நாம் என்ன எழுதுகிறோம் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் என்ன எழுதவில்லை என்பது! நாம் அசலானவர்களாக இருக்கவேண்டுமானால், தேர்வு செய்யும் செயலை உள்ளடக்கிய சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டும்...
//

கப்பி | Kappi said...

அண்ணனுக்கு ஒரு ஜோடா பார்சல் :)))

கைப்புள்ள said...

அண்ணே அண்ணே!! சிப்பாய் அண்ணே!
நம்ம ஊரு நல்ல ஊரு...இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே!!
:))

கைப்புள்ள said...

அண்ணே அண்ணே!! சிப்பாய் அண்ணே!
நம்ம ஊரு நல்ல ஊரு...இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே!!
:))

ஜே கே | J K said...

எப்டிணே ஒரே தபால இம்புட்டும் பேசி முடிச்சீங்க.

Unknown said...

பினாத்தல் சுரேஷை வழி மொழிகிறேன்.

ஏன் தல இப்படி ஒரு சீரியஸ் பதிவு??? :-)

துளசி கோபால் said...

good மொக்கை.

கோபிநாத் said...

அஞ்சா நெஞ்சன் அண்ணன் தேவ் வாழ்க..;)

Anonymous said...

சபாஷ்!
அஞ்ஞா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டு வீரன் நானே.
ச............பாஷ்!

G.Ragavan said...

பயங்கர மொக்கையும் நீயே
ஒயின் பாட்டில் அடைக்கும் தக்கையும் நீயே
அழைத்த அழைப்புக்குப் பிசகாமல் மொக்கித்த உம்மை மொக்கத்தான் வேண்டும். :( (இது பின்னூட்ட மொக்கை)

Unknown said...

//அனுசுயா said...

என்ன கொடுமையிது தேவ்.
மீ த பர்ஸ்ட்டு :)//

அதே தான் நானும் சொல்லுறேங்க என்னக் கொடுமை இது சாமி!!!!

Unknown said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா... நல்லா மொக்கை போடுறீங்கண்ணா.. :-P//

தேங்க்யூ சிஸ்டர்

Unknown said...

//CVR said...

உங்களுக்கு இது தேவையா?? :-P//

ஆகா இந்தக் கேள்வி மிஸ் ஆயிருச்சே... சரி இப்போ கேட்டுருவோம்... தேங்க்யூ சிவிஆர்

Unknown said...

//பினாத்தல் சுரேஷ் said...

கருத்தாழம் மிக அதிகமாக இருப்பதால் இதை மொக்கை என்று ஏற்கமுடியாது. விஜயகுமார் பாணியில் சொல்லப்போனால்


செல்லாது செல்லாது!

இன்னொண்ணு போடுங்க (ஒன்ஸ்மோர் மாதிரி)//

இது மொக்க தான் மொக்கையே தான்..ஜூரில்ல மெஜாரிட்டி மொக்கைன்னு தீர்ப்பைச் சொல்லியிருக்காங்க...so அதே படத்து டயலாக்ல்ல சொல்லணும்ன்னா நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க...

Unknown said...

இலவசக்கொத்தனார் said...

//நாம் புற உலகின் அங்கமாக இருக்கலாம். சூழல்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கூட்டத்தில் வசிக்கலாம். உதாரணமாக நாம் அனைவரும் வலைச்சரம் ஆட்கள் என்பது கூட்டத்தில் வசிப்பதற்கு சமம். அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்தால் நாம் இன்னும் இருத்தலுக்கான தகுதியை படைத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். இந்த வலைச்சரம் என்ற சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதிலிருந்து எதை நாம் கைகூடிவர செய்திருக்கிறோம் என்பது முக்கியம். அப்போதுதான் இருத்தலுக்குரிய அசலான மனிதர்களாக வாழ்வோம். அதாவது, நமக்கான பிளாக்கில் நாம் என்ன எழுதுகிறோம் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் என்ன எழுதவில்லை என்பது! நாம் அசலானவர்களாக இருக்கவேண்டுமானால், தேர்வு செய்யும் செயலை உள்ளடக்கிய சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டும்...
//

கப்பி தலீவருக்கும் சேர்த்து இன்னொரு ஜோடாச் சொல்லு

Unknown said...

//கப்பி பய said...

அண்ணனுக்கு ஒரு ஜோடா பார்சல் :)))//

லேசா உப்பும் கொஞ்சம் எலும்பிச்சம்பழத்தையும் புழிஞ்சு ஊத்தி ஜோடா சில்லுன்னு கொடுப்பா

Unknown said...

//கைப்புள்ள said...

அண்ணே அண்ணே!! சிப்பாய் அண்ணே!
நம்ம ஊரு நல்ல ஊரு...இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே!!
:))//

ஆகா சேவக் ''கோழி கூவுது" டோய்

Unknown said...

// J K said...

எப்டிணே ஒரே தபால இம்புட்டும் பேசி முடிச்சீங்க.//

ஒருத்தருக்கு ரெண்டு பேரா கட்டளை போட்டா இம்புட்டு என்ன இதுக்கு மேலவும் பேச்சு வரும்ய்யா...எல்லாப் புகழும் ஜிரா அருட்பெருங்கோவுக்கே :)))

Unknown said...

//அருட்பெருங்கோ said...

பினாத்தல் சுரேஷை வழி மொழிகிறேன்.

ஏன் தல இப்படி ஒரு சீரியஸ் பதிவு??? :-)//

இந்தப் பின்னூட்டம் செல்லாது செல்லாது :-)))

Unknown said...

//துளசி கோபால் said...

good மொக்கை.//

தேங்க்யூ டீச்சர்

Unknown said...

//கோபிநாத் said...

அஞ்சா நெஞ்சன் அண்ணன் தேவ் வாழ்க..;)//

ஆகா இந்தப் பின்னூட்டத்துல்ல இருக்க அம்புட்டு எழுத்தும் ஆப்பு ஆப்பா இல்ல என் கண்ணுக்கு தெரியுது

Unknown said...

//Anonymous said...

சபாஷ்!
அஞ்ஞா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டு வீரன் நானே.
ச............பாஷ்!//

எக்ஸ்ட்ரா ஆப்பா....நன்றி நன்றி

Unknown said...

//Ragavan said...

பயங்கர மொக்கையும் நீயே
ஒயின் பாட்டில் அடைக்கும் தக்கையும் நீயே
அழைத்த அழைப்புக்குப் பிசகாமல் மொக்கித்த உம்மை மொக்கத்தான் வேண்டும். :( (இது பின்னூட்ட மொக்கை)//

பிளாகர் பிறவி பயன் அடைந்தேன் ஆசானே :-)

tamil10