Saturday, February 23, 2008

டி.ஜி.எஸ். தினகரன் சில ஞாபகங்கள்

இந்த வாரத்தைப் பொறுத்த வரை என்னைப் பாதிச்ச ஒரு விசயம்... டி.ஜி.எஸ்.தினகரனின் மறைவு..தமிழகத்தின் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த யாராக இருந்தாலும் இவரைப் பற்றிய ஒரு அறிதல் இல்லாமல் வளர்ந்திருக்க முடியாது..

எதோ ஒரு விதத்தில் இவரைப் பற்றி விசயங்களும் செய்திகளும் நிகழ்வுகளும் என்னை என் சிறு வயது துவங்கி வந்தடைந்து கொண்டே இருந்து வந்துள்ளன..சுயமாக சிந்திக்கும் காலம் வரை பெற்றவர்களும் உற்றவர்களும் உறவினர்களும் சொல்லிக் கொடுத்து வளர்த்த அறிவே ஆன்மீகம் என்பதாய் இருந்தது.. சுருங்கச் சொல்லுவதனால் ஆன்மீகம் என்பது மனம் சார்ந்ததாக இல்லாமல் மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது...

தமிழகத்தைச் சார்ந்த கிறித்தவக் குடும்பங்களுக்கு டிஜிஎஸ் அவர்கள் ஒரு ஐகானிக் பிகர்.. அவரைப் போல இறை பணி செய்ய தம் குடும்பத்தில் இருந்து ஒருவராவது வரவேண்டும் என்பது பரவலான எண்ணம். இறை பணிக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்து அதன் பொருட்டாகவே வாழ்ந்தவர் டிஜிஎஸ் தினகரன்.. மனிதராய் பிறந்த எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல... அந்த முறையில் கிறித்தவச் சமுதாயத்திலே அவரை விமர்சிப்பவர்களும் உண்டு.. ..

அவரைப் பற்றி இது வரை பொதுவாக சொல்லிய கருத்துக்களை விட அவரைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு என்னைத் தூண்டிய விசயங்கள் இரண்டு...

முதல் விசயம்.. டிஜிஎஸ் அங்கிளின் பாடல்கள்.. கிறித்துவச் சமய வழிபாடுகளில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது ஒரளவு உலகறிந்த விசயம்... டிஜி.எஸ் முறைபடி சங்கீதம் கற்றவரா என்ற விவரம் எனக்கு தெரியாது.. ஆனால் அவர் பாடும் பாடல்கள் பொதுவாக கர்னாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன்..

வாத்தியங்களின் இரைச்சலும் இதர பிற தற்கால இசை முன்னேற்றங்களும் வந்த போதும் அந்த பழமையான சாஸ்தீரிய முறையில் கணீரென ஒலிக்கும் அவர் குரலுக்கு நான் பரம ரசிகன்...

பழங்காலங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்... இறையடியார்கள் உள்ளம் உருகி இறைவனைத் துதித்து பாடும் போது அதைக் கேட்போரின் மனமும் உருகி போகும் என்பதாய்... அதை நான் இவர் பாடல்களைக் கேட்கும் போது உணர்ந்திருக்கிறேன்... அதிகமாய் பக்தி பாடல்கள் கேட்கும் பழக்கம் இல்லாத எனக்கு இவரது பாடல்கள் மட்டும் அலாதி விருப்பம்... மனம் சோர்ந்த நேரங்களிலும் பின்னிரவு நேரங்களிலும் இப்படி பாடல்கள் கேட்பது உண்டு...

என்னுடைய ஆல் டைம் பேவரிட் பாடல்கள் என நான் குறிப்பிட விரும்பும் பாடல்கள்

இயேசு அழைக்கிறார்.. மற்றும் சோர்ந்து போகாதே மனமே ... என்னும் இந்த இரண்டு பாடல்களும் தான்

அடுத்தக் காரணம் சில பல நேரங்களில் மனம் மதத்தை எதிர்ப்பதாய் கிளம்பி இறை நம்பிக்கை விட்டு தூரம் போகும்.. அப்படிப் பட்ட நேரங்களில் நான் கோயில்களுக்குச் செல்லாமல் இருந்தது உண்டு.. கோயிலுக்குப் போனால் இறைவனைப் பற்றி பேசுவதை விட மதம் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும்...அப்படி ஒரு எண்ணம்... அந்த நேரங்களில் இவரது ஜெப கோபுரம் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தியான மண்டபத்தில் சென்று அமர்வது உண்டு... அங்கு அமைதி மட்டுமே நிறைந்து இருக்கும்... நம்மை நாமே பரிசோதித்து அறிய அந்த இடம் வசதி படைத்ததாய் என் மனத்திற்கு படும்... நகரத்தின் மையத்தில் நான் அலுவலகம் செல்லும் வழியில் இப்படி ஒரு இடம் இந்த மனிதரால் தான் எனக்கு கிடைத்தது என்பது இன்னொரு விசயம்...

மதம் மீது நம்பிக்கை தொலைத்த என் மனத்தை இறைவனை நோக்கி செலுத்த டிஜிஎஸ் அவர்களின் பாடல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன....

விவிலியத்தின் வாக்கு படி நல்லதொரு ஓட்டத்தை ஓடி முடித்து விட்டார்....

Blessed be the name of the lord...

15 comments:

Anonymous said...

தினகரன் அண்டு கோ சும்மா சிவாஜி கணேசனை தூக்கி அடிக்கும் அளவிற்க்கு இதோ வருகிறார் இறங்கி இறங்கி இறங்கி வருகிறார் என்று கண்ணை மூடி கொண்டு பல பேரை முட்டாளாக செய்த வின்மைகள் இன்னமும் மறக்க வில்லை
ஒரு ப்ராடு போய் சேந்தான்.. இந்த மத வெறியனின் காருண்யாவில் படித்த அடுத்த மத மாணவர்கள் பட்ட கொடுமை எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம். இந்த பொட்டை பையன் ஏசு அழைக்கிறான்,கன்னி கழியாமல் குழைந்த பெத்த மேரி எல்லாம் என்னிக்குதான் நேருக்கு நேர் வருவாங்களோ..யோவ் புனித ஆவியை வைச்சு இட்லி சட முடியுமா?

Sridhar Narayanan said...

நல்லதொரு பதிவு தேவ். அவருடைய ஆளுமை மிகவும் பிரபலம். பல சமயங்களில் அவருடைய நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் காணும்பொழுது வேறு பக்கம் போக இயலாமல் கட்டுண்டு போன மாதிரியான ஒரு நிலையில் இருந்திருக்கிறேன்.

அன்னாருடைய ஆன்மா சாந்தியடைவதாக...

Anonymous said...

மனிதர்களை மந்தையாக்கிய ஒரு மனிதன். இதோ வாருங்கள் நோயில் இருந்து காப்பாற்றுகின்றேன் என பிரசங்கம் செய்த ஒரு மனிதன் இறந்த இடம் ஒரு மருத்துவ மனை.
வெட்கப்பட வேண்டும். நோய் வந்தால மருத்துவ மனைக்குச் செல்லாமல் பலருடைய இறப்புக்கு காரணமான மனிதன்.

GOD FATHER

ILA (a) இளா said...

May his soul rest in peace

சின்னப் பையன் said...

May his soul rest in peace.

மெளலி (மதுரையம்பதி) said...

சகோ.தினகரன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

துளசி கோபால் said...

முதல் முறையா இந்தப் பாட்டுக்களைக் கேட்டேன். எளிமையான இசையில் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் சொல்லப்போனா..........இப்போ வரும் இரைச்சலான சினிமாப் பாடல்களைவிடவும்.........

ஜெபகோபுரம்னு சொன்னீங்களே அது எங்கே இருக்கு?


எல்லா மதத்துலேயும் இசை என்பது ஒரு முக்கியமான அங்கம்தான். மனுச மனசுகலைக் கட்டி நிறுத்துவதில் இசைக்கு ஒரு பெரிய பங்கு இருக்குன்றதை மறுக்க முடியுமா?

எல்.ஆர். ஈஸ்வரி பாடும் 'எல்லாம் ஏசுவே 'எங்களுக்குப் பிடிச்ச ஒண்ணு.

துளசி கோபால் said...

oops.......

மனசுகலை = மனசுகளைன்னு திருத்திக்கணும்.

Unknown said...

துளசி டீச்சர்... ஜெபகோபுரம் கிரீன்வேஸ் சாலையில் இருக்கு... நான் இப்போ அங்கே போய் கொஞ்ச நாள் ஆயிருச்சு... அந்த தியான மண்டபம் இன்னும் அதே அமைதியோட இருக்கான்னு விசாரிச்சு உங்களுக்கு விவரம் சொல்லுறேன்...

Anonymous said...

எத்தனை அப்பாவிகளை காசைக் காட்டி ஏமாற்றி மதம் மாற்றியிருப்பார்?? அதையும் கொஞ்சம் சாதனையாக சொல்லியிருக்கலாம்!!

Anonymous said...

ஏசு அழைக்கிறார்!! நோயைத் தீர்க்கிறார் !! அற்புதப் பெருவிழான்னு காமெடிதான் பண்ணினானுங்க .. கருமம். காறித்துப்பினாலும் நீங்கள்லாம் திருந்த மாட்டீர்கள் !!

Anonymous said...

நான் கிறிஸ்தவன்.. எனக்கு எல்லோரையும் மதம் மாற்றி என் மதத்தில் சேர்ப்பது ரொம்ப பிடிக்கும்.. அதுனால எனக்கு தினகரனைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாமே!!

Divya said...

எனக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இரு பாடல்களுக் டிஜிஸ் அங்கிளின் குரடில் கேட்க ரொம்ப பிடிக்க்கும்,

May his soul rest in peace!!

Anonymous said...

Apart from criticisms, it deserves mention that his minsitry for Jesus comforts millions of people from all over the world and even from other religions. May his soul rest in peace!

Christopher
Singapore

Anonymous said...

இயேசு காப்பாற்றுவார் காப்பாற்றுவார் அப்பிடின்னு எல்லாரையும் ஜெபக்கூட்டதுக்கு வரச்சொல்லி குணம் ???!! ஆக்கினவர் இப்படி மருத்துவ மனையில் இறந்துவிட்டாரே???
பரிதாபம்.. மக்களுடைய மன அழுக்குகளை எல்லாம் சலவை செய்தவர் (மக்களின் மூளை உள்பட) இறந்துவிட்டாரே?? மதம் மாற்றுவதில் சாதனை வித்தகர்.. மனிதம் துறந்தார்..
மதம் என்பது மனிதம் வளர்ப்பதர்காக.. மாற்றுவதற்காக அல்ல இதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும் ...

அவர் சொர்கத்துக்கு சென்று வாழ சிவனையும் திருமாலையும் அல்லாவையும் வேண்டுகிறேன்...

tamil10