Monday, November 10, 2008

சினிமா சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதல்ல பார்த்த படம் சத்யம் தியேட்டர்ல்ல..மை டியர் குட்டிச்சாத்தான்...பொதுவாக எங்க வீட்டுல்ல இப்போ வரைக்கும் என்னைத் தவிர யாருக்கும் பெரிதாக சினிமா ஆர்வம் கிடையாது.. அதனால் சிறு வயதில் அதிகம் தியேட்டருக்குப் போனது இல்லை....கிட்டத்தட்ட மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்த அதே நேரம் தான் நாகேஷ் தியேட்டர்ல்ல எங்களையும் வாழ விடுங்கள்ன்னு ஒரு விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் பார்த்ததாக ஞாபகம்...

சிறு வயதில் அதிகம் கவர்ந்த படங்கள்ன்னா..அது ரஜினி படங்கள்...அதுக்கு ஒரு காரணமிருக்கு அப்போ எல்லாம் கோடை விடுமுறைக்கு ஈரோடு பக்கம் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு... அவர்கள் அனைவருக்கும் தொழில் மளிகை கடை.. அங்கு உள்ள என் வயது சிறூவர்களோடு சேர்ந்து ரஜினிக்கு கைத்தட்ட ஆரம்பித்து அப்படியே என் ஆரம்ப கால சினிமா ரசிக அனுபவங்கள் எல்லாம் ரஜினி படங்கள் சார்ந்தே அமைந்து போயின...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
போன சனிக்கிழமை இரவு பிராத்தனா திரையரங்கில் ஜேம்ஸ் பாண்ட் படம் குவாண்டம் ஆப் சோலஸ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சேரன் நடித்த ராமன் தேடிய சீதை.... ஒரு நல்ல பொழுது போக்கு படம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
பட்டியல் ரொம்ப பெருசுங்க... மணிரத்னம் இயக்கி கமல் நடித்த நாயகன்... சிறு வயதில் பெரிதாய் கமல் படங்கள் பார்க்காமல் தவிர்த்த் என்னை கமல் பக்கம் திருப்பிய படம்...மணிரத்னம் படங்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்படுத்திய படம்...
பின்னாளில் பிதா மகன்... காசி திரையரங்கமே எழுந்து நின்று மரியாதை கொடுத்த படைப்பு அது...
சத்யம் தியேட்டரில் இரவு காட்சி பார்த்து விட்டு தூக்கம் தொலைக்க செய்த அன்பே சிவம்
எதுக்கு இப்படி ஒரு க்ளைமேக்ஸ் என கோபம் கொள்ள வைத்த பருத்தி வீரன்...
அசத்திட்டான்ப்பா செல்வராகவன்... இந்த பையனுக்குள்ளேயும் என்ன திறமை இருக்குடா என கவனம் ஈர்த்த காதல் கொண்டேன்...
பழையப் படங்களில் வறுமையின் நிறம் சிவப்பு.... நாகேஷின் எதிர் நீச்சல், இப்படி நம்ம லிஸ்ட் ரொம்ப நீளம்..
சமீபத்தில் சென்னை 28...சுப்ரண்யமணியபுரம்...

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1992 அண்ணாமலையில் துவங்கி அதன் பின்னால் வந்த அனைத்து ரஜினி படங்களின் ரீலிசும் அரசியலின் உச்சம்....
குறிப்பாச் சொல்லணும்ன்னா முத்து வெளியான சமயம் ஆளுங்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான ரஜினிக்கும் அவர் ரசிக கண்மணிகளுக்கும் பாடம் புகட்ட முத்து வெளியான திரையரங்குகள் தாக்கப்படலாம் என வெளியான செய்தி ( உண்மையா பொய்யா) அதையும் மீறி முதல் நாள் முதல் காட்சிக்கு வீட்டுக்குத் தெரியாமல் சென்று சேதாரமின்றி ( அதாவது வீட்டுல்ல அடிபடாமல் தப்பியது) திரும்பியது 12 வது படிக்கும் போது கிடைத்த அரசியல் வெற்றி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஜீன்ஸ் வந்தக் காலத்தில் இரட்டையர்களாக பிரசாந்த் நாசர் ஐஸ்வர்யா ராய் என அன்றைய தேதிக்கு ஊரையே பேச வைத்த பிரமாண்டத்துக்கு ஷங்கர்...ஒவ்வொரு காட்சியிலும் தொழில் நுட்ப நேர்த்தி காட்டும் இயக்குனர்.. ரோஜாவுக்குப் பிறகு இசையில் தொழில் நுட்பத்துக்கு ரஹமான்...
இன்னும் தமிழில் தொழில் நுட்பம் மேலும் வளரணும்ங்கறது என் ஆதங்கம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கையில் புரட்ட கிடைக்கும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தமிழ் சினிமா செய்திகளை தவற விடுவதில்லை

7. தமிழ்ச்சினிமா இசை?
ராஜா ராஜா என்றும் ராஜா... அவ்வப்போது வரும் புது பாடல்களையும் தவற விடுவதில்லை... இப்போதைக்கு அடிக்கடி ஓடுவது வாரணமாயிரம்...

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயம் உண்டு... தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு படங்களும் பார்பது உண்டு... சப் டைட்டில் இருந்தா எம்மொழியும் எம் மொழியே...
உலக சினிமாவில் ரசித்த படங்கள் காட் பாதர், சினிமா பாரடிசோ,சேவிங் பிரைவேட் ரேயான், பியூட்டிபுல் மைன்ட்...
இந்திய சினிமாவில்... ஷோலே...தில் சாத்தா ஹேய்...ஏ வெட்னஸ்டே...ரங்க் தே ப்சந்தி...
தெலுங்கில் கம்யம்...கோதாவரி...
மலையாளத்தில் தீலிப் நடித்த நகைச்சுவை படங்கள் பிடிக்கும்...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
பிரபலங்கள் சிலரின் உறவுகள் எனக்கு நெருக்கமான நண்பர்கள்... நல்லதொரு தமிழ் சினிமா விமர்சன வலைத்தளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட கீத்துகொட்டா பதிவை தொடர வேண்டும்...

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கதை நாயகர்களாக நடிகர்கள் மாறும் வரை.. தமிழ் சினிமா ஸ்டார்களின் முதுகு சொறியும் அலங்கரிக்கப்பட்ட துடைப்பமாகவே இருக்கும் என்ற வருத்தம் இருந்தாலும்... அமீர்.. வெங்கட் பிரபு..மிஷ்கின், பாலா... போன்ற இயக்குனர்களை நம்பலாம்....

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஹாலிவுட், பாலிவுட் இருக்கும்ல்ல.. அந்தப் பக்கம் ஒதுங்கிருவோம்....
கவுண்டர் பாபால்ல சொல்லுவார் இல்ல... சிங்கிள் லாங்க்வேஜ் வச்சிகிட்டு நான் சென்னைக்கு அந்த பக்கம் போக முடியாம அல்லாடுறேன்னு.. அந்த கவலை நமக்கு இல்ல...

பதிவிட அழைப்பு வைத்த பாசக்கார சிங்கங்கள் கைப்புள்ள மற்றும் கப்பிக்கு மனமார்ந்த நன்றிகள்

5 comments:

கைப்புள்ள said...

//அதையும் மீறி முதல் நாள் முதல் காட்சிக்கு வீட்டுக்குத் தெரியாமல் சென்று சேதாரமின்றி ( அதாவது வீட்டுல்ல அடிபடாமல் தப்பியது) திரும்பியது 12 வது படிக்கும் போது கிடைத்த அரசியல் வெற்றி
//

தில்லு தான் மாப்பி உனக்கு. நான் எல்லாம் காலேஜ் படிக்க ஆரம்பிச்சப்புறம் தான் தனியா சினிமா பாக்க ஆரம்பிச்சேன், அதுவும் நண்பர்களோட தனியா
:)

கைப்புள்ள said...

//ஹாலிவுட், பாலிவுட் இருக்கும்ல்ல.. அந்தப் பக்கம் ஒதுங்கிருவோம்....
கவுண்டர் பாபால்ல சொல்லுவார் இல்ல... சிங்கிள் லாங்க்வேஜ் வச்சிகிட்டு நான் சென்னைக்கு அந்த பக்கம் போக முடியாம அல்லாடுறேன்னு.. அந்த கவலை நமக்கு இல்ல...
//

அது... நல்லாச் சொன்னே
:)

ILA said...

//அந்த கவலை நமக்கு இல்ல///
அதானே.. இதெக்கெல்லாமா கவலைப்படறது?

kappi said...

//தமிழ் சினிமா ஸ்டார்களின் முதுகு சொறியும் அலங்கரிக்கப்பட்ட துடைப்பமாகவே இருக்கும் //

athe athe!!


//கவுண்டர் பாபால்ல சொல்லுவார் இல்ல... சிங்கிள் லாங்க்வேஜ் வச்சிகிட்டு நான் சென்னைக்கு அந்த பக்கம் போக முடியாம அல்லாடுறேன்னு.. /

hehehe

கோபிநாத் said...

கலக்கல் ;))

tamil10