Thursday, November 27, 2008

ஒரு தீவிரவாத புதன் கிழமை

சமீபத்தில் நான் பார்த்து சிலாகித்த இந்தி படமொன்று... A WEDNESDAY..மும்பை ரயில் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு சாமன்ய மனிதனுக்கு தீவிரவாதத்தின் மீது எழும் அழுத்தமான கோபத்தை பதிவு செய்த திரைப்படம் அது...
அந்தப் படம் பார்த்து அதன் தாக்கம் அடங்குவதற்குள்.. இதோ இன்னொரு புதன் கிழமை.. மீண்டும் மும்பையின் நிலமெல்லாம் ரத்தம்...அப்பாவி பொதுமக்களின் ரத்தம்..

எதற்காக இந்த வெறி ஆட்டம்... ஏனிந்த வெறி.... இந்த கேள்விகள் எல்லாம் இப்போது என் மனத்தில் இல்லை.. அதை எல்லாம் தாண்டி ஒரு தீராத கோபம்... விரக்தி.. எரிச்சல்... எல்லாம் என்னுள் கலந்து ஒலிக்கிறது... என்னால் என்ன இயலும்...

நான் ஒரு சாதரண இந்திய குடிமகன்... வேலை..பொருளாதாரம்..குடும்பம்.. என எனக்கு பல விதத்தில் சுமைகள் உண்டு.. அதன் காரணமாக என் நாட்டைப் பார்த்து கொள்ள எனக்கு நேரம் இல்லை.. என்னைப் போல எத்தனையோ சக இந்தியர்கள் எண்ணிக்கையில் உண்டு... எங்களுக்கு அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே நேரம் போவதால் தான்... நாட்டைப் பார்த்து கொள்ள ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு வாங்கும் மாதச் சம்பளம் என் வீடு சேரும் முன் அரசாங்கக் கஜானாவுக்கு அதன் வரி பங்கைத் தவறாது கொடுக்கும் பல லட்சக் கணக்கான மாதச் சம்பளதாரர்களின் வர்க்கத்தில் நானும் ஒருவன்...

எது நடந்தப் போதும் பொறுத்துப் போய் பழகிவிட்டது எனக்கு.... பொறுத்ததும் போய் அதையும் தாண்டி நடப்பதை எல்லாம் நகைத்தும் ரசிக்கும் படியான கேவலமான பழக்கமும் சேர்ந்து கொண்டது.. சுத்தி எது நடந்தாலும் அது காமெடி தான்... கரண்ட் இல்லையா... அதுவும் காமெடி தான்...மழையிலே ரோடு இல்லையா அதுவும் காமெடி தான்... அரசியல்வாதிகளின் ஊழலா.. அதுவும் மெகா காமெடி தான்... எதையும் தட்டி கேக்க திராணி இன்றி ஒவ்வொரு தேசியப் பிரச்சினையிலும் தள்ளி போய் அப்படியே இன்று தனித் தீவாக ஆன எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்...

ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு என்டர்டெயின்மெண்டாகவே போய் விட்டது... தேங்க்ஸ் டூ மீடியா....

இன்று காலை என் வரவேற்பரையில் மும்பையின் அலறல் சத்தம் கேட்டப் போது...நெடு நாளைய என் தூக்கம் திடுமெனக் கலைந்தது...இல்லை கலைந்துப் போனதாய் நான் உணர்கிறேன்...

எதாவது ஒரு வழியில் என் கோபம் பதிவு செய்ய பட வேண்டும் என விரும்புகிறேன்... அது தான் இந்தப் பதிவின் நோக்கம்...

மிஸ்டர் மன்மோகன் சிங்... இந்தப் பதிவு மூலமா நான் கூட தான் அறிக்கை விடுறேன்... வருத்த,,,...கோபம்... எல்லாத்தையும் சொல்லுறேன்....எதுக்குன்னா என்னால அவ்வளவு தான் முடியும்.. என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யுறேன்....

உங்க லெவலுக்கு வெறும் அறிக்கை எல்லாம் விடுறது வேலைக்கு ஆவாது சார்.... அடிச்சு ஆடுங்க...

கொடுமை காணும் இடத்தில் பொங்கி எழச் சொல்லி எல்லாப் பெரியவங்களும் சொல்லியிருக்காங்க...உங்க கிட்ட பதவி இருக்கு.. அதிகாரம் இருக்கு... நாடே உங்க பின்னாடி இருக்கு... அப்புறம் எதுக்கு கையைக் கட்டிகிட்டு கண்ணைக் கசக்கிட்டு.....


போடுங்க... ஆர்டர்.. ஆர்மியை விடுங்க... அடிக்கட்டும்... இந்தியாவை சீண்டிப் பாக்கும் தீவிரவாத வேர்கள் எங்கே இருந்தாலும் பிடுங்கி எறியணும்....அதுக்கு நீர் ஊத்துரது யார் விரலா இருந்தாலும் உரல்ல வச்சு இடிக்கணும்...

ரோட்டுல்ல போற அப்பாவி மக்களைச் சுடுற தீவிரவாதியை எல்லாம் கைது எதுக்கு பண்ணி அவனுக்கு எங்க வரி பணத்துல்ல சோறு தண்ணி எதுக்கு கொடுக்கணும்.. அங்கேயே அப்படியே எங்க வரி பணத்துல்ல தோட்டாவால சோறு போடுங்க...இல்ல கத்தியால கூறு போடுங்க....

அடிக்கு அடி உதைக்கு உதைன்னு போட்டுத் தாக்கணும்... தீவிரவாதம் இன்னொரு தாண்டவம் ஆட நம்ம இந்தியா மேடையா இருக்கக் கூடாது,...

இதை தீவிரவாதத்துக்கும் எதிரான ஒரு சாமன்ய இந்தியனின் கோபமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

4 comments:

நாகை சிவா said...

//ரோட்டுல்ல போற அப்பாவி மக்களைச் சுடுற தீவிரவாதியை எல்லாம் கைது எதுக்கு பண்ணி அவனுக்கு எங்க வரி பணத்துல்ல சோறு தண்ணி எதுக்கு கொடுக்கணும்.. அங்கேயே அப்படியே எங்க வரி பணத்துல்ல தோட்டாவால சோறு போடுங்க...இல்ல கத்தியால கூறு போடுங்க....//

நல்லா தான் தின்னு கொழுத்து போய், சட்டத்தில் இருக்கும் ஒட்டைகளை வைத்து வெளியில் வந்து மறுபடியும் குண்டு போட்டு கிட்டு இருக்கானுங்க..

இதை எல்லாம் பார்த்து கோவப்படுவதை தவிர்த்து வேற என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் நாம் :((

Unknown said...

இந்த கோபம் தான் மட்டும் இப்போ நம்ம கிட்ட மிச்சம் இருக்கு.. போற போக்கிலே அந்த கோபமும் போய் வெறும் ஜடமாகி போயிடுவோமோ என்னவோ?

நாகை சிவா said...

இதுவும் கடந்து போகும்...

நான் கோபத்தை சொன்னேன் :)

Anonymous said...

sir

i read ur post, me too have same emotions on this.. but i dont have platform, pls help me to start a blog from scratch... where to start, what to do?.. what is the benefit u got from this????, etc., pls mail me to my id: nithyarajgp@rediffmail.com, nithyarajgp@yahoo.co.in.

And WISH U HAPPY NEW YEAR 2009.

Thanks & regards,
G.P.Nithyaraj

tamil10