Sunday, June 07, 2009
ARCHIE+VERONICA-BETTY
ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...
அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...
ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்
கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...
இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...
முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...
ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..
அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...
எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..
சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...
இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...
ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..
ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...
ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...
சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல
HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA... BETTY MAY U GET THE RIGHT GUY...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆர்ச்சி காமிக்ஸ்க்கு தமிழ் கூறும் பதிவுலகில் அதிகம் பரிச்சயம் இல்லையோ... ஒரு பின்னூட்டமும் காணும் :))) !!!!
//ஆர்ச்சி காமிக்ஸ்க்கு தமிழ் கூறும் பதிவுலகில் அதிகம் பரிச்சயம் இல்லையோ... ஒரு பின்னூட்டமும் காணும் :))) !!!!//
Times now-la இதை அதி முக்கிய செய்தியா ரிபீட்டினப்பதான் இப்படி ஒன்னு இருக்குனே எனக்கு தெரியும் :)
///ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...///
தலைவர் பாஷைல சொன்னதால ஒருவழியா புரிஞ்சுது :)))
Same Kind so concept la Chutti TV la Cedric nnu Oru Character varuthu....Thats almost like these things....Too good...Not Good for Chutties.:)
வாங்க பாசகி எல்லாத்துக்கும் நம்ம தலைவர் உதவி தேவைப்படுது... டைம்ஸ் காரன் விவரமா இப்படி நம்ம தலைவர் மொழியிலே சொல்லியிருக்கலாம்.....:)
வாங்க அருணா... செட்ரிக் அப்போ நான் கண்டிப்பா பாக்கணும்.. எங்க வீட்டு சுட்டி கிட்ட இருந்து தள்ளி வைக்கணும் :-)
Post a Comment