Monday, June 22, 2009

விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல

நேத்து வரைக்கும் டிசம்பர் 12....இப்போல்ல இருந்து ஜூன் 22....

உங்களை எல்லாம் பாத்தா எங்களுக்குப் பாவமா இருக்கு....எதோ ஒரு பழைய துணியை வச்சு ஆட்டோவைத் தொடைச்சிட்டிருந்த ஆட்டோக்கார அண்ணாச்சி புதுசா ஆட்டோ வாங்குன மதுரைக் கார பயலைப் பாத்து சிரிச்சுட்டேச் சொன்னார்...

ஏனுங்கண்ணா....நானும் ஆட்டோ நீங்களும் ஆட்டோ... அப்புறம் என்னங்கண்ணா என்ன பாவம்ங்கறீங்க....மதுரைக்கார தம்பி பேட் பிடிக்கிற சச்சின் மாதிரி சிடுவெனக் கேட்டான்...

புது கொடி....ஆட்டோல்ல பொறந்த நாள் போஸ்ட் ஸ்டிக்கர்...மாலை...பாட்டு..சத்தியமா உங்களை எல்லாம் பாத்தாப் பாவமாத் தான் இருக்கு...

அருணாச்சலம் அண்ணே... இன்னிக்கு பொறந்த நாள் விழா இருக்கு... செம சுதியில்ல இருக்கோம்....வேணும்ன்னா பாருங்க.....இந்த ஆட்டோ எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.....அப்புறம்...கால்டாக்சி....அப்படி இப்படின்னு கலெக்ஷன் அள்ளிருவோம்ல்ல....அடுத்த ஜூன் 22ல்ல கட்சி...அதுக்கு அடுத்த ஜூன் 22ல்ல ஆட்சி...

சேம் டயலாக்.... ஆனா தேதி தான் வேற அந்த தேதி டிசம்பர் 12....இந்த தேதி ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....

அடப் போங்க அண்ணே...உங்க கிட்டப் பேசி நேரம் தான் வீணாவுது....மதுரை தம்பி ஆட்டோவில்ல கொடி பறக்க ( உன்னால் முடியும் அப்படின்னு கொடியில்ல எழுதியிருக்கு..) கில்லியா கிளம்பி....வில்லு கணக்கா சீறி போறான்...

நம்ம அருணாச்சலம் அண்ணன்...வண்டியைத் துடைச்சு துணியை புழிஞ்சு...வண்டி மேலே துணியைக் காயப் போடுறார்.... அந்த துணி பாத்த எதோ கொடி மாதிரி இருக்கு.....நீலம்...சிவப்பு... நடுவுல்ல ஸ்டார்.....நம்ம திருமா கொடியா....திருமா கொடியிலே ஸ்டார்குள்ளே உருவம் இருக்காதே...ஆனா இதுல்ல இருக்கே...உருவம் சிதைஞ்சுப் போய் சரியாத் தெரியல்ல...

அருணாச்சலம் அண்ணன்...ரேடியோவை போடுகிறார்.... எனக்கு ஒரு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்.,.அட டாங்கு டக்கர டக்கர டக்கர டாங்... அப்படின்னு சூப்பர் ஸ்டார் பாட்டு ஓடுது.....அண்ணன் பெருமூச்சு விட்டுகிட்டே...மதுரை தம்பி போன ரூட்டை வெறிக்கிறார்..

அவார்ட் அவதாரம்....

நடிகர் சங்கம் போய் ரிஜிஸ்டர் பண்ணி சரியா மூணு மாசம் சந்தா கட்டுனா...கலைமாமணி அவார்ட் வீட்டுக்கே வந்துருமாமே அப்படியா..... எனக்குத் தெரிஞ்ச ஒரு நடிகர் சங்க புள்ளி கிட்ட கேட்டு அசிங்கமாத் திட்டு வாங்குனேன் ஒரு வாட்டி..அப்புறம் இந்த அவார்ட் பத்தி எல்லாம் அதிகம் டவுட்டு கேக்கறது இல்ல...ஆனாப் பாருங்க...இந்த வாரம் விஜய் அவார்ட் எல்லாம் பாத்து ஒரே டவுட் தான் போங்க...கிட்டத்தட்ட எல்லா விருதையும் கமலுக்கே கொடுத்தாங்க....அது சரி...அவர் ஒரு நல்ல நடிகர்.... நல்ல கலைஞர்... சகல கலா வல்லவர்....ஒத்துக்குறோம்....நல்லாத் தான் செஞ்சுக்காங்க அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைன்னு நினைக்கும் போது தான் டவுட் வந்துச்சு... விருதைக் கமலுக்கு கொடுத்தது நம்ம இளைய தளபதி ....ஒரு வேளை விஜய் டிவி கமலை வச்சு காமெடி கீமெடி பண்ணிட்டாங்களோ....

கமல் மட்டும் காமெடியில்ல கம்மியா என்ன.... எனக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புடிக்கும்ன்னா என் கம்பெனியில்ல நடிக்க வைக்கற அளவுக்கு பிடிக்கும்ன்னு காமெடியில்ல பின்னிட்டார்...ஆமா ராஜ் கமல் பிலிம்ஸ்ல்ல தளபதி நடிச்சா ஹீரோ வேசம் தானே கொடுப்பாங்க... இல்ல அதுல்லயும் எதாவது கோக்கு மாக்கு இருக்குமா... ஒரே டவுட்டாப் போச்சு..

ராஜபக்சே டீமை சர்தாரி டீம் ஜெயிச்சுருச்சு..மன்மோகன் டீம் அடியோடு திரும்புச்சு...

இந்த வாட்டி உலக கோப்பையை பாத்த பாவத்துக்கு இந்தக் கோப்பையை நிரப்ப வேண்டியதாப் போச்சுன்னு ரெசசன்ல்லயும் கடன் வாங்கி கவலையைத் தொலைத்த நண்பனின் புலம்பல் இது...

வழக்கமா நம்ம ஆளுங்க வெளியூர் போய் விளையாடி கேவலப்பட்டு அடிவாங்கிட்டு ஊருக்கு வருவாங்க... இந்த வாட்டி போகும் போதே அவன் அவனுக்கு செம அடியாம்ல்ல..சேவாக் பட்ட அடியை தன்னோடு வச்சிக்கலாம்ன்னு நினைச்சிருக்கார்... படுபாவி கேரி கேர்ஸ்டன் கண்டுபிடிச்சு நாட்டுக்கே சொல்லிட்டார்... ஜாகிர்..தோணி....இன்னும் இரண்டு பேர்... போர்ட் கிட்டச் சொல்லியும்..போர்ட் போய் அடிவாங்கிட்டு வந்தா என்ன... அடிவாங்கிட்டே போனா என்ன...அதாவது நம்ம வினுசக்கரவர்த்தி சொல்லுறாப்புல்ல போத்திகிட்டு படுத்தா என்ன...படுத்துகிட்டுப் போத்துன்னா என்னன்னு நினைச்சு அனுப்பிட்டாங்க போல....

ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக.... சர்தாரி டீம் சக்கப் போடு போட்டு சவுண்டா கப் அடிச்சுட்டுப் போயிட்டாங்க...

யப்பா சர்தாரி மக்கா... கப் குண்டு அடி படாம பாத்துக்கங்கப்பு...அடுத்த வருசமும் அதே கப் தான் வச்சு விளையாடணும்

படிச்சதுல்ல பிடிச்சது
கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கட்டுமே...

என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது

தபூசங்கர்...

7 comments:

ஆயில்யன் said...

/ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....

:))))))))))

ஆயில்யன் said...

//என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது///


செம ஹாட் சிச்சுவேஷன் மூடை கிளப்பிட்டு இப்படி ஒரு ரெமாண்டிக் பினிஷிங்கா :)))

ILA said...

குட் பினிஷ்

கோபிநாத் said...

;-))

அண்ணே நீங்க தலைப்பில் முதலில் விஜய் பெயரை போட்டு ஏதாச்சும் காமெடி கீமெடி பண்னுறிங்களா!! ;)))

செந்தழல் ரவி said...

உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....

KI KI KI

நாகை சிவா said...

:))))))))

தஞ்சாவூரான் said...

//ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக....//

தமிழ் டீமுக்கு எதிரா ராஜபக்சே டீம் ஆடியிருந்தா சீனாக்காரனோ, இந்தியாக் காரனோ உதவியிருப்பான் ..

//ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....//

உங்களுக்குமா? :))

tamil10