Sunday, June 07, 2009

வீக் என்ட் கச்சேரி

போடா போடீ

முன்னாடி திருடா திருடின்னு ஒரு படம் வந்துச்சு... மன்மத ராசான்னு தனுசூம் சாயா சிங்கும் மதயானை ஆட்டம் போட்டு தமிழ்நாடே அதிரி புதிரி ஆச்சு...அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்....இப்போ அதே மாதிரி ஒரு பாட்டு எப்.எம்ல்ல எல்லாம் அதிருது....எக்ஸ்.க்யூஸ்.மீ மிஸ்டர்.கந்தசாமி....பாட்டு...சுசி கணேசன்...டி.எஸ்.பி (தேவி சிரி பிரசாத்)...சீயான் விக்ரம்..கூட்டணியில் கந்தசாமி பாட்டு எல்லாம் ஹாட் யூத் பீட்... அதுல்லயும் சுச்சி வாய்ஸ் செம குறும்ம்ம்ம்ம்புங்கோ... கொஞ்சம் நாளுக்கு செல்லுக்கு எல்லாம் புது ரிங்டோன்...போடா போடீ தான்


அடுத்த தளபதி

ஒருத்தர் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் குறி வச்சிட்டு இருந்தார்...சூப்பர் அடுத்த புரட்சித் தலைவர்ன்னு அவர் மன்ற கண்மணிகள் கணக்கு பண்ணிட்டு இருந்தாங்க...அந்தக் கணக்கு ஆகாயம் பார்த்து விரல் போடும் கணக்காப் போனதுல்ல..கோடம்பாக்கத்து தளபதி சூ.ஸ்.பதவியை பை பாஸ் பண்ணிட்டு நேரா புன்னா தான்னா பதவிக்கு சமீபக் காலப் படங்களில் ரூட் போட்டது நாட்டுக்கே நல்லாத் தெரியும்..இந்தக் கேப்புல்ல புதுசா கிளம்புன மணவாடு தளபதி..பழைய ( ஆனா இளசு தான்) தளபதி சீட்டைத் துண்டு போட்டு பிடிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சாட்டார் எல்லா விஷயத்துல்லயும் (!!!!????) எதுல்ல எட்டிப் பிடிச்சாரோ இல்லையோ அவரை மாதிரி தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்

டிவிடி ரெய்டு...

இந்த வாரம் டென்சல் வாஷிங்டன் நடிச்ச மேன் ஆன் பயர் படம் பாத்தேன்...ஒரு பழைய கொலைகாரன்.. தற்காலக் குடிகாரன்..ஒரு சிறுமியைக் காக்கும் மெய்காப்பாளனாய் வேலைக்குச் சேர்கிறான்..எதிலும் ஒட்டு இன்றி உறவுமின்றி இருக்கும் அவன் அந்த சிறுமியின் அன்பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வதற்கான ஒரு காரணம் கண்டுகொள்கிறான்..அந்த நிலையில் சிறுமி கடத்தப் படுகிறாள்...கொல்லப்பட்டதாய் தகவல் வருகிறது...அதற்கு பின் பழிவாங்கும் படலத்தில் டென்சல் ருத்ர தாண்டவம் ஆடுவது தான் மிச்சக் கதை.... சும்மா சொல்லக் கூடாது மனுசன் பிச்சி உதறி இருககார்..அந்த சிறுமியின் நடிப்பும் அசத்தல்...

ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லுறவங்க இதே படத்தோட அசத்தல் !!!??? இந்தி மற்றும் தமிழ் ரீமேக்களைப் பார்த்து நொந்துக் கொள்ளலாம்....(இந்தியில் அமிதாப் நடித்த அஜ்னபி.....தமிழில் அர்ஜூன் நடித்த ஆணை...)

படிச்சது....

பொறுமையா பைபிளைப் புரட்டுனப்போ கண்ணுல்ல பட்ட கருத்து...
நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள்

14 comments:

ஆயில்யன் said...

/நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள் ///


குட் ஒன் :)

ஆயில்யன் said...

/அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்.///

அதுக்கு பேரும் டூயட்டா பாஸ்?????????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

ஆயில்யன் said...

//தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்//

எப்படியோ அப்பாவி ரசிகர்களை காலி செஞ்சா சரி பாஸ் :))))

சென்ஷி said...

மென் ஆன் ஃபயர் - அசத்தலான படம். கோபி இந்த படத்தின் ரசிகனாக இல்லாமல் வெறியனாக இருந்தான். :))

டென்சல் அந்த படத்துல கொலைகாரனா இல்லை முன்னாள் அதிகாரியா!

அதை ஹிந்தியிலும் தமிழிலும் செய்திருப்பது கொலை அல்ல.. கொடூர கற்பழிப்பு :(((

ஹிந்தியாவது பரவாயில்ல. தமிழில் நமிதாவை கொண்டு வந்து கதையை படாத பாடு படுத்திட்டானுங்க.

sindhusubash said...

ரொம்ப நாளா காணாம போயிருந்தீங்க..உங்க பதிவை எல்லாம் படிச்சிருக்கேன். மறுபடியும் இப்ப தான் நா பார்த்தேன்.புது பக்கம் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

தேவ் | Dev said...

ஏம்ப்பா ஆயில்ஸ் ஹிரோவும் ஹிரோயினும் ஒரு பாட்டுல்ல ஒருத்தரைப் பாத்து ஒருத்தர் பாடுனா அது டூயட் தானே..அப்படி தானே நான் நம்பிகிட்டு இருக்கேன்...அது உண்மையில்லையா :-((((

தேவ் | Dev said...

நெக்ஸ்ட் "ஹண்டரா" அவதாரம் எடுக்கிறராம் ஆயில்ஸ் உசாரய்யா உசாரு...

தேவ் | Dev said...

வாங்க சென்ஷி.... முன்னாள் அதிகாரின்னாலும் ASSASSIN அப்படின்னு தானே சொல்லுவாங்க...அதான் கொலைகாரன்னு போட்டேன்...ASSASSIN க்கு சரியான தமிழ் வார்த்தை தெரிஞ்சா சொல்லுங்கய்யா அதையே போட்டுருவோம்

இந்தி பதிப்பைப் பாத்தேன்.. தமிழ் மீ த எஸ்கேப்... அர்ஜூன் படம்ன்னாலே நமக்கு கொஞ்சம் அலர்ஜி...வாத்தியார்..துரை...இப்படி ஏகத்தும் சேதாரம் ஆன அனுபவம்

தேவ் | Dev said...

வாங்க சிந்து சுபாஷ்...எப்படியோ ரிட்டன் வந்தாச்சி..நீங்களும் கண்டுபிடிச்சிட்டீங்க...தொடர்ந்து கச்சேரிக்கு வாங்க..அப்படியே பக்கம் 78ஐயும் கொஞ்சம் பாருங்க...நன்றிங்கோ

சந்தோஷ் = Santhosh said...

Mapi.. Mr.Kandasami la meow meow ketiya super ah iruku.. nammaloda fav epo athu than...

தேவ் | Dev said...

மியாவ்..மியாவ்..ஸ்ரேயாவுக்கு மாமனார் - மருமகன் தவிர மத்த ஹிரோஸ் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது...கந்தசாமியாவது தேறுதா பாக்கலாம் மாப்பி

கோபிநாத் said...

ஆகா தல படத்தை பார்த்துட்டிங்களா!! சூப்பரு ;)

படத்ததை பத்தி எழுதானும்..எங்க!!!

அந்த குட்டி பெண்ணு இரவுல தல கூட பேசிட்டு அப்படியே போயி மெத்தையில விழுவா பாருங்கள் அட அட சூப்பர் சீன் அது.

அந்த குட்டி தலயை கூப்பிடும் போது மிஸ்டர் போட்டு ரொம்ப அழகாக கூப்பிடுவ! ;)


அதே மாதிரி தல கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் வருவாரு. அவரோட சின்ன சிரிப்பை கூட கவனிச்சி அவரை கலாய்ச்சி எடுக்கும் அந்த குட்டி. ஒவ்வொரு காட்சியும் இன்னும் மனசுல அப்படியே இருக்கு.

படிச்சது - கலக்கல் ;)

ILA said...

கந்தசாமி பாட்டெல்லாம் எனக்கும் புடிச்சது.

Tamil Dictionary said...

Assassin - அரசியல் கொலையாளி
Assassination - அரசியல் கொலை

tamil10