நம்ம ஆபிசர் பொட்டி தட்ட ஆரம்பிச்சு பலக் காலம் ஆச்சு...எம்புட்டு வருசமாவோ பொட்டி தட்டுறார்...இந்தப் பொட்டி தட்டுறவங்க எல்லாம் அடிக்கடி ஒரு பிளைட்டை புடிச்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போயிட்டு வரும் போது ஆபிசர் ஆளுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு அடுத்து சொல்லுற டயலாக் தான் மேலே நீங்கப் படிக்குற டயலாக்...
நம்ம ஆபிசரும் பல நாள் மொட்டை மாடியிலே நின்னு பறக்குற பிளைட்டுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் தெரியாம சில சமயம் பருந்தைக் காட்டி பொண்டாட்டி என்னிக்காவது ஒரு நாள் நான் அதுல்ல ஏறி பறக்கத் தான் போறேன் பாரேன்ன்னு சவுடால் விட்டுட்டு தான் இருக்கார்...
ம்ம்க்கும் பருந்துல்ல ஏறி பறந்த முதல் மனுச ஜென்மம்ன்னு கின்னஸ்ல்ல பேரு கட்டாயம் வாங்கிருவிங்கன்னு சொல்லுங்கன்னு ஆபிசரம்மா சொன்ன பொறவு தான்...அடக்கொக்க மக்கா பருந்துக்கு இவ்வளவு பந்தி வச்சு பஞ்ச் விட்டோம்ன்னு ஆபிசர் பீல் ஆன சம்பவம் ஏராளம்..
இந்த மளிகை கணக்கு எல்லாம் சின்ன பொஸ்தகத்துல்ல எழுதுவாங்களே...அப்படி ஒரு பொஸ்தகம் தீந்துப் போன நேரம்...ஆபிசரம்மா கையிலே சிக்குன பொஸ்தகம்...ஆபிசரோட...ம்ம்க்கும் நீங்க நினைச்சதே தான்...பாஸ்போர்ட் புக் தான்... பொங்குன ஆபிசரை அப்படி ஒரு நக்கல் பார்வை பாத்துட்டு ஆபிசரம்மா சொன்னது...பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு....கண்க்கு பொஸ்தகம் வாங்குற காசுல்ல ஒரு இரண்டு ரூவா மிச்சமாகுமில்ல...."
இரண்டு ரூவாயா...எம்புட்டு செலவு பண்ணி விடிகாலமே போய் லைன்ல்ல நின்னு எடுத்த பாஸ்போர்ட் மதிப்பு இரண்டு ரூவாயா...இந்த பாஸ்போர்ட்ல்ல ஸ்டாம்ப் விழல்லன்னா பாரு.... ஆபிசர் முடிக்கல்ல
இப்படியே தபால் ஆபிஸ் பக்கம் போய் நில்லுங்க.....யாராவது ஸ்டாம்ப் வாங்கி கீழே விடுறாங்களான்னு பாருங்க...பாஸ்போர்ட்ல்ல டக்குன்னு பிடிச்சுக்குங்க.....
ஆபிசருக்கு வெறியே வந்தும் பயன் இல்லை...
ஒரு தரம் பாக்கிஸ்தான் பார்டர் போனப்போ...அப்படியே லைட்டாக் காலை உள்ளே வச்சுட்டு பாஸ்போர்ட்டை நீட்டி ஒரு ஸ்டாம்ப் வாங்கிரலமான்னு யோசிச்ச போது...அங்கே நின்ன பாக்கிஸ்தான் அதிக சினேகிதமா துப்பாக்கியை தூக்கி பிடிச்ச ஸ்டைல்ல பாத்து...இங்கிட்டு ஸ்டாம்பிங் வேற இடத்துல்ல தான் கிடைக்கும் போலிருக்குன்னு முடிவை மாத்திகிட்டு மனசைத் தேத்திகிட்டு ஆபிசர் திரும்பிட்டார்...அடுத்தாப்பல்ல ராமேஸ்வரம் போனப்போ அங்கிருந்து இலங்கை பக்கம் தானே படகுல்ல போய் ஒரு ஸ்டாம்பிங்க் போட்டுராலமான்னு ஒரு யோசனை உதிச்சது.... விசாரிச்சதுல்ல போட்டுருவாய்ங்களாம்...ஸ்டாம்பிங் இல்ல...ஆளையேன்னு சொல்லி ஆசைக்கு அழகா ஆப்பு வச்சுட்டாங்க....
இப்படி எல்லாம் இருந்த ஆபிசர் வாழ்க்கையிலே தீடிர் திருப்பம்....பாஸ்போர்ட் ஆபிஸ் வீணாக் கொடுத்த பாஸ்போர்ட் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல்ல நம்ம ஆபிசர் பாஸ்போர்ட்டை சேக்கப் போன அந்த வினாடி விண்ணகத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம்...ஆபிசரோட பிராஜக்ட் மேனஜர் மண்டைக்குள்ளே விழுந்து....யாருமே இல்ல போறதுக்கு இருக்கத்து ஆபிசர் மட்டுமே அப்படின்னு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து.... போறீயான்னு கேக்க.....
அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும் நடந்த அனைத்தும் தனி பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வுகள்....
அப்படியே பிளைட் ஏறுனப்போ...அந்த படிக்கட்டுல்ல ஆபிசர் சொல்ல நினைச்சது....
அலோ ஜென்டில்மேன் ஸ் லேடீஸ் கிட்ஸ்....நல்லாப் பாருங்க...ஒழுங்காப் பாருங்க...நானும் அமெரிக்காப் போறேன்...நானும் அமெரிக்காப் போறேன்....நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்......நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்..
யப்பா டிரைவர் வண்டியை நல்லா உசரமாத் தூக்கி எங்க வீட்டு மாடிப் பக்கமா ஒரு ரவுண்ட் விட்டு அமெரிக்காவுக்கு கிளப்பு....சும்மா டாப் கியர்ல்ல எடுக்கணும் புரியுதா....
நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...
இது தான் ஆபிசர் அமெரிக்கா வந்த கதை....
ஒரு ஒத்துமை பாத்தீங்களா...நான் அமெரிக்கா கிளம்புன அதே சமயம் தான் நம்ம ஆபிசரும் அமெரிக்கா கிளம்பியிருக்கார்....மக்கா இந்த ஆபிசரும் நானும் ஒண்ணுன்னு இன்னும் நினைச்சீங்கன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை சாமியோவ்...
இதர ஆபிசர் பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்
6 comments:
//பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு.//
LOL :)))))))))))))))
//அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும்//
அட செண்டிமெண்டா கம்பெனியோட ஆணி வேறே அத்துக்கிட்டு போவுதுன்னு மெசேஜ் சொல்லியிருக்கு போல அந்த மரம்!
ஆபிசர் தான் குடிச்ச தண்ணியில கொஞ்சம் கொடுத்திருப்பாரு போல மரத்துக்கு நன்னி விசுவாசம் ! :))))
போட்டோல இருக்க ஊரு சிகாகோ மாதிரி தெரியுதே ....
வாழ்த்துக்கள் ஆபிசர் !!
அதான் சேட்ல கேட்டேன் பதிலே இல்ல..;))
வாழ்த்துக்கள் ஆபிசர் ;)
சொரிங் ஆபிஸர்.. சாரி.. சரிங் ஆபிஸர்..
Post a Comment